WRITTEN BY S NAGARAJAN Post No. 10,601 Date uploaded in London – – 27 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com மெழுகுவர்த்தியில் பிறந்த அக்னி -|| ஏவுகணை! ச.நாகராஜன் அக்னி – || இந்தியாவையே பெருமிதம் கொள்ளச் செய்த ஏவுகணை! 20 மீட்டர் நீளமுள்ள இந்த சாலிட் ப்ரொபல்ட் பாலிஸ்டிக் மிஸைல் (Solid-propelled ballistic missile) 16 டன் எடை கொண்டது. இதன் பே-லோட் (Pay-load) 1000 கிலோ ஆகும். இதன் முதல் சோதனை வெற்றிகரமாக 1999ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி நடத்தப்பட்டது. இது 2004ஆம் ஆண்டு நமது ராணுவத்தில் உரிய முறையில் சேர்க்கப்பட்டது. இது பிறந்த கதை சுவாரசியமான ஒன்று! டி ஆர் டி ஓ எனப்படும் (DRDO – Defence and Research Development Organisation) டிஃபென்ஸ் அண்ட் ரிஸர்ச் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஸன் டாக்டர் ஏ.பி.ஆர். அப்துல்கலாம் அவர்களைத் தலைவராகக் கொண்டு இயங்கி வந்தது. இது 1999இல் ஏப்ரல் 11ஆம் தேதிக்கு முன்னரேயே கூட ஏவப்பட்டிருக்கக் கூடும். ஆனால் நமது இந்திய விஞ்ஞானிகளின் இயற்கைக்கு ஊறு விளைவிக்கக் கூடாது என்ற நல்லெண்ணமே இதைச் சற்றுத் தள்ளிப் போட்டு சோதனை செய்ய வைத்தது. வீலர் (Wheeler) தீவு ஒரிஸாவின் தெற்குக் கடற்கரையில் பிதர்கணிகா காடுகளுக்கு அருகில் உள்ளது. இதுவே அக்னி – || ஏவுகணையைச் சோதனை செய்ய வேண்டிய இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் இது அபூர்வமான ஒரு தீவுப் பிரதேசம் என்பது சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களால் சுட்டிக் காட்டப்பட்டது. இந்தக் கடற்கரை பிரதேசத்திற்கு அருகில் உள்ள கடலில் மிகவும் அரிதாகக் காணப்படும் ஒருவகை ஆமைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை ஆலிவ் ரிட்லி டர்டில் (Olive Ridely turtles) என்பர். நம்ப முடியாத தூரத்திலிருந்து பயணப்பட்டு அவை இங்கு வருவது வழக்கம். ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் குஞ்சு பொறிக்கும் ஒரு வகை விசேஷமான ஆமைகள் இவை. நவம்பரில் வரும் இவை மார்ச் முடிய இங்கே தங்கும். குஞ்சுகள் பொறிக்கப்பட்டவுடன் திரும்பித் தமது இடம் நோக்கிச் செல்லும். ஆகவே சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் அப்துல்கலாம் அவர்களிடம் மார்ச்சுக்கு பிறகு அக்னி ஏவுகணை சோதனையை வைத்துக் கொள்ளலாம் என்று யோசனை கூறினர். சுற்றுப்புறச் சூழலில் பெரிதும் ஆர்வம் கொண்ட அப்துல்கலாம் உடனே இந்த யோசனையை ஏற்றுக் கொண்டார். உடனடியாக ஒரு ஆணையைப் பிறப்பித்தார். அதன் படி இந்தத் தளத்தில் இருந்த அனைத்து விஞ்ஞானிகளும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்துக் கொண்டு தங்கள் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தனர். ஒருவிதமான மின் விளக்கும் எரியவிடப்படவில்லை. ஏனெனில் அவை ஆமைகளுக்கு தொந்தரவாக இருக்கும் என்று. ஒரு நாளல்ல இரு நாளல்ல, சுமார் ஐந்து மாதங்கள் இப்படி மெழுகுவர்த்திப் பணி தொடர்ந்தது. விசேஷ விருந்தாளிகளான இந்த ஆமைகள் தமது சந்ததி விருத்திப் பணி முடித்து மீண்டும் சொந்த இடம் நோக்கிப் பயணப்பட்டபின் ஆய்வு வேலைகள் முழு வீச்சில் நடைபெற ஆரம்பித்தன. ஏப்ரல் 11 – நிர்ணயிக்கப்பட்ட தேதியில் சோதனை நடந்தது; வெற்றி பெற்றது. இந்தியா தனது பாரம்பரியமான அன்பு வழியை ஒரு போதும் ஒதுக்கியதில்லை – அது கடல் வாழ் உயிரினமாக இருந்த போதிலும் அவற்றுக்கும் கூட ஒரு ஊறும் விளைவிக்க நமது விஞ்ஞானிகள் தயாராக இல்லை. ஆக மெழுகுவர்த்தியில் பிறந்த அக்னி ஏவுகணை பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டு உலகையே இன்று பிரமிக்க வைக்கிறத்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
“Hence even at this day, one who does not give (in charity) ,or has no faith, or does not sacrifice, is said to be an Asura. They adorn the bodies of the dead with gifts, with raiment and jewels, and imagine that by this means they shall attain the world to come”- Chandogya Upanishad VIII-8-5
WHO ARE ASURAS?
FOUNDER OF PARSI RELIGION ZOROASTER PRAISED ASURAS AND NAMED THEIR SUPREME GOD AS ‘ASURA MAZDA’. ARE PARSIS ASURA WORSHIPPERS?
Interesting definition of ASURAS is in Chadogya Upanishad (C U ) attached to Sama Veda. Along with Brihad Aranyaka Upanishad, this C. U. is dated around 8th century BCE. Adi Shankara quoted this C. U. over 800 times in his Brahma Sutra commentary. That means it is the most informative Upanishad. It is in Sanskrit poetry format. Chandas means Poetry, Prosody and Song (Eg. Chandak Kavi Arunagiri nathar in Tamil)
One must be careful in interpreting words such as ‘Mlecha, Yavana and Asura’. They generally meant foreigners who lived outside India. But the wonder of wonders is all of them are called Sons of Prajapati (God or Creator; later days Brahma).
Asuras figure in the oldest book in the world – the Rig Veda. Yavanas, Pahlavas, Sakas and Dravidas figure in Ramayana and Mahabharata. Because they are in the very first chapter of both epics, some consider them later additions.
Moreover , if you look at literal meaning it does not point to any race or clan. Even Sangam Tamil literature use both Yavana and Mlecha for Italians/Romans and not the Greeks!
Oldest book in the world Rig Veda praises all Hindu Gods as Asuras in some places. Later it was applied only to Baddies/ demons.
Kings of Assyrian Dynasty called themselves as Asurs.
Mayans of South and Central America called themselves Mayans, because they were the descendants of Maya, the greatest builder and architect of Hindus, friend of Arjuna and Krishna. Maya was an Asura/Ditya/Danava
Asura is synonymous with Dhanava, Daitya. All mean the same. They were described as sons of Hindu gods. Like we have good and bad people living together they were part and parcel of Hindu community. Lord Krishna in Bhagavad Gita makes it crystal clear the qualities of Asuras and Devas.
In short, violent bad people with mighty power were known as Asuras. Similar to modern day gangsters, goons or gundas
xxx
Greek Connection
Greeks called others (non-Greeks) barbarians. Today we use the word for real barbarians. In the same way Asura also changed its meaning.
But the amazing information in Chandogya Upanishad takes us to Mycenean period of Greek History!!!
“Hence even at this day, one who does not give (in charity) ,or has no faith, or does not sacrifice, is said to be an Asura. They adorn the bodies of the dead with gifts, with raiment and jewels, and imagine that by this means they shall attain the world to come”- Chandogya Upanishad VIII-8-5
Shatapata Brahmanam XIII-8-1-5 says the Asuras constructed ‘round graves’.
The general meaning is those who don’t follow the rules of charity, those who don’t worship God through fire sacrifices, and atheists are Asuras.
But look at the specific meaning – ‘burying dead bodies with jewels and clothes’.
When we read it, we are immediately reminded of the Egyptian Mummies
We know they are buried with cotton bandages and enormous jewellery in big buildings called Pyramids. Most of them were plundered in the past 3000 years. The discovery of Tutankhamun (1300 BCE) with all his gem studded golden jewellery stunned the world; but his tomb was not round shaped. It is in Egypt.
Zoroastrians don’t do it. They throw the dead bodies to vultures.
But in Greece we had three periods- Minoan, Mycenaeans and Greek Classical period.
Only Mycenaeans had round graveyard and jewellery with buried dead bodies. One must remember that only kings, lords, and rich people only had this type of burials whether it is Egypt or Greece. Hindus had no such custom. Neither literary nor archaeological evidence is available.
Let us look at a Mycenaean burial.
German archaeologist Heinrich Schliemann excavated several areas in Turkey and Greece. When he found a golden mask with other artefacts he thought he discovered king Agamemnon’s mask. But later research found it was from 1600 BCE. Atreus , father of Agamemnon built ‘tholos’ type of tombs. Like the earlier circular graves later graves also had a stone circle around it. The tomb where the German archaeologist found the golden mask was surrounded by a double stone circle. It suggests it was particularly revered by the Mycenaeans. Agamemnon was murdered by his wife Clytemnestra and her lover Aegisthus. But his son Orestes took revenge by killing them both.
From this historical account we find their violent Asuric behaviour and the above-mentioned circular graveyard and dead bodies buried with jewellery. After thousands of years of plundering and robberies we have one or two treasures intact. So the poets and writers of Satapatha Brahmana and Chandogya Upanishad knew the 1600 BCE Mycenaeans or earlier Minoans.
IN THE SECOND PART I WILL TELL YOU MORE ABOUT ASURAS IN THE MAHABHARATA
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
எல்லோருக்கும் தெரிந்த கதை விசுவாமித்திரர்– வசிஷ்டர் மோதல் கதை. இது ராமாயணத்தில் பால காண்டத்திலும் , மஹா பாரதத்தில் முதல் பர்வமான ஆதி பருவத்திலும் உளது
விசுவாமித்திரர் ஒரு அரசன்; அதாவது க்ஷத்திரியன். வசிஷ்டர் ஒரு முனிவன்; அதாவது பிராமணன்.
ஒரு நாள் காட்டில் வேட்டையாடிக் களைப்படைந்த விசுவாமித்திரர் பெரிய பரிவாரங்கள் , படைவீரர்கள் புடைசூழ, வசிஷ்டரின் ஆஸ்ரமத்துக்கு வருகிறார். அவரும் அரசனுக்குரிய மரியாதைகளுடன் வரவேற்று ராஜ உபசாரம் செய்கிறார். இறுதியில் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை– ஜொலிக்கும் ரத்ன மணிகளுடன் கூடிய நகைகளையும் அளிக்கிறார். விசுவாமித்திரருக்கு ஒரே வியப்பு. காட்டில் வாழும் இந்த ஐயருக்கு எப்படி இவ்வளவு வசதிகள் ? என் பரிவாரம் முழுதும் சாப்பிட இவர் எப்படி சமையல் செய்தார்? என்று எண்ணி அவரிடமே கேள்வியும் கேட்டார்.
வசிஷ்டரும் பதில் சொன்னார்: “என்னிடம் நந்தினி என்று ஒரு பசு உள்ளது. அது கேட்டதை எல்லாம் தரும் காமதேனு” என்றார் .உடனே அதை எனக்குக் கொடு என்று விசுவாமித்திரர் கேட்டார். வசிஷ்டர் மறுத்தார். நான் அரசன்! என்ன செய்கிறேன் பார், என்று பலப் பிரயோகம் செய்தார். நந்தினி என்னும் பசு மாட்டை இழுத்தார், அடித்தார், உதைத்தார் அது நகரவில்லை.
அப்போது வசிஷ்டரின் உத்தரவின் பேரில் அந்த பசுமாட்டின் உடலின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வெவ்வேறு இன மக்கள் வந்தனர். அவர்கள் திராவிடர்கள், பல்லவர்கள், சகரர்கள் , ஹூணர்கள், புலிந்தர்கள், யவனர்கள் ஆவர். அவர்கள் எல்லோரும் வசிட்டனுடன் சேர்ந்து விசுவாமித்திரர் படையை துவம்சம் செய்தனர். விசுவாமித்திரர் படு தோல்வி அடைந்தார். அப்போது அவர் என்ன சொன்னார் என்று வியாசர் நமக்கு எழுதி வைத்துள்ளார். ((இதிலுள்ள திராவிட யவன, பல்லவ என்பதெல்லாம் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் உண்டு; அவற்றைத் தனியாகக் காண்போம்; மனு ஸ்ம்ருதியிலும் இந்த இனங்கள் பட்டியல் வருகிறது.))
திக் பலம் க்ஷத்ரிய பலம் பிரம்ம தேஜோ பலம் பலம்
பலாபலம் வினிஸ்ரித்ய தப ஏவ பலம் பலம்
பொருள்
வெட்கம், வெட்கம். க்ஷத்ரிய பலம் ஒரு பலமா ? பிரா ணனின் பலம் அன்றோ உண்மையான பலம்.பலத்தையும் அபலத்தையும் /வலுவின்மை ஒப்பிட்டால் தவமே பெரிய பலம்..
அதாவது தவ வலிமையுடைய ஐயர் பலம்தான் உண்மையான பலம். இதை புறநானூற்றுப் புலவரும் வள்ளுவரும் பாடியுள்ளனர். அதைக் காணும் முன்னர் விசுவாமித்திரர் என்ன செய்தார் என்பதையும் காண்போம். அய்யர் போல நமக்கும் சக்தி கிடைக்க நாமும் தவம் செய்வோம் என்று போகிறார். இரண்டு முறை அஹங்காரம் என்னும் வலையிலும், காதல் வலையிலும் சிக்கித் தொ ற்றுப் போகிறார். திரிசங்கு , மேனகா கதைகளில் இவற்றைக் காணலாம். இறுதியில் வெற்றி பெறுகிறார். வசிஷ்டர் அவரை ‘ஐயரே வருக வருக’ என்று அழைக்கிறார். விசுவாமித்திரருக்கு பரம சந்தோஷம் . அதை இன்றுவரை நாமும் ‘வசிஷ்ட்டர் வாயால பிரம்மரிஷி’ என்று மரபுச் சொற்றொடராக IDIOMS AND PHRASES பயன்படுத்துகிறோம். இந்த மூன்று TEMPTATIONDS டெம்ப்ட்டேஷன்களை புத்தரும் ஏசுவும் ‘காப்பி’ அடித்தனர். மாறன் வந்தான் ;புத்தர் ஜெயித்தார் என்று.
உலகிலுள்ள எல்லா குற்றங்களும் காமம், க்ரோதம்,லோபம் என்ற மூன்று விஷயங்களளால்தான் நடைபெறுகினறன. பகவத் கீதையில் இதை நரகத்தின் மூன்று வாசல்கள் என்று கிருஷ்ண பரமாத்மா வருணிக்கிறார்.
புறநானூறு பதில்
பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தியற்றே!
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி அனைத்தும் ஆற்றாது; ஆகலின்
கைவிட்டனரே காதலர்; அதனால்
விட்டோரை விடா அள், திருவே;
விடாஅதோர் இவள் விடப்பட்டாரே
–வான்மீகியார், புறம் 358
கதிரவன் சுற்றும் இந்த வளம் செறிந்த பூமிக்கு ஒரே நாளில் 7 பேர் அரசனானதும் உண்டு. இல்லறத்தையும், துறவறத்தையும் ஒப்பிட்டால் துறவறமே சிறந்தது. தவம் மலை என்றால், இல்லறம் சிறு வெண்கடுகு (ஐயவி) போன்றதாகும். தவம் செய்ய முடியாததால்தான், காதலர்கள் இல்லறத்துக்கு வந்தனர். வீடு பேற்றை விரும்பியோர் இல்லறத்தைக் கைவிட்டனர். யார் வருந்தி வருந்தி அழைக்கவில்லையோ அவளிடம் லெட்சுமி போய் ஒட்டிக்கொள்வாள். இல்வாழ்வில் அழுந்தியோரிடம் தங்க மாட்டாள்.
xxx
இந்தக் கருத்து 2000 ஆண்டுப் பழமையான புற நானூற்றிலும் பின்னர் வந்த திருக்குறளிலும் உளது .
பாடலின் சொற்களை மட்டும் பாருங்கள் – உலகத்தையும் தவத்தையும் தரசுத் தட்டில் வைத்து நிறுத்தால் , தவம் மிகப்பெரியது ; உலகம் சிறு கடுகு போன்றது (ஐயவி ) பாடலை எழுதிய புலவரின் பெயர் வான்மீகி என்பதால் இது ராமபிரான் பற்றிய க தை என்றும் உரைகாரர்கள் கருதுகின்றனர். இங்கு வையம் என்பதை கிருஹஸ்தாச்ரமம் கொண்ட இல்லறவாசிகள் என்று உரை கூறுகிறது. அதாவது தவமே வலியது. சிலர்தான் அதைச் செய்ய முடியும்; அதனால்தான் உலகில் தவ சீலர்கள் குறைவு. மற்ற எல்லோரும் காதல் வலையில்- காம வலையில் சிக்கி இல்லறம் நடத்துகின்றனர். இதுவும் ‘பிரம்ம தேஜோ பலம் பலம்’ என்ற விச்வாமித்திரர் வாக்கினை மெய்ப்பிக்கிறது.
திருவள்ளுவர் ஒரு குறளில் முனிவர்கள் கோபித்தால் அ ரசாங்கம் பொடித்து விழும் என்கிறார். நஹுஷன் என்ற இந்திரனை அகஸ்தியர் என்ற பிராமணர் வீழ்த்திய கதை நமது நூல்களில் உளது. நந்தன் என்னும் நாலாம் வர்ண மன்னன், பிராமண சாணக்கியனை அவமானப்படுத்தியதால் அவன் அந்த வம்சத்தையே வேரோடு அழித்து, மயில் வளர்க்கும் ஜாதியைச் சேர்ந்த, மௌர்ய சந்திர குப்தனை பணியில் அமர்த்தி அலெக்ஸ்சாண்டர் படைகளையும் பயமுறுத்தி திரும்பி ஓடச் செய்ததையும் நாம் அறிவோம்.
இதோ இந்திரன் பற்றிய திருக்குறள்
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து
வேந்தனும் வேந்து கெடும் (899)
உயர்ந்த கொளகைகளை உடைய பெரியார்கள் கோபம் அடைந்தால், இந்திரன் போல (பெரிய வேந்தர்களும்) ஆட்சியை இழந்து கெட்டுப்போவர்.
இங்கு ‘வேந்தன்’ என்ற சொல் இரு பொருளுடைத்து ; பரிமேல் அழகர் தொல்காப்பியரைப் போல வேந்தன் என்றால் இந்திரன் என்றே பொருள் சொல்கிறார்.
அடுத்த குறள்
இறந்தமைந்த சார்புடையராயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின் – 900
பொருள்
பெரியவர்கள் கோபம் கொண்டால் , எவ்வளவு ஆதரவு உடைவராக இருந்தாலும், தப்பித்து உயிர் வாழ்தல் முடியாது
ஆக ‘தபோ பலம்’ – தவம் என்னும் வலிமை – மிகவும் சக்தி வாய்ந்தது; அரசர்களையும் விழுத்தாட்டும் வல்லமை உடையது என்று மஹா பாரதம், புற நானூறு , திருக்குறள் ஆகியன இயம்புவதைக் கண்டோம்
வாழ்க முனிவர்கள் (அந்தணர்கள்); வாழ்க தவ வலிமை.
முனிவர்கள் = அந்தணர்கள் என்ற கருத்தும் தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் இழையோடி செல்வதைக் காணலாம். முனிவர்கள் பலம் இந்திரனையும் வீழ்த்தும் என்பதற்கு பிராமண சிரேஷ்டர்களான அகஸ்தியரையும், வஷிஷ்டாரையும்தான் எடுத்துக்கட்டுகளாகத் தந்துள்ளனர்.
உண்மைப் பொருளும் அஃதே !
அந்தத்தை அணவுவார் அந்தணர் (உள் முகப் பார்வை உடையோர் )
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,598 Date uploaded in London – – 26 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
தனிப்பாடல் செல்வம் மான் பிடித்தீர், முயலை மிதித்தீர், ஆடெடுத்தீர், உம்மைக் காண கழுக்கள் அல்லவோ வரும், காளத்தி நாதனே! ச.நாகராஜன்
நமச்சிவாயப் புலவர் இறைவன் மீது நிந்தாஸ்துதியாகப் பாடுவதில் வல்லவர். இறைவனின் அருள் விளையாடல்களை வைத்தே அவரை நிந்தை செய்வது அவரது ஒரு உத்தி.
காளத்திநாதனைத் தரிசிக்கச் சென்றவர், “காளத்தி நாதா உன்னைக் கழுக்கள் அல்லவா வந்து தரிசிக்கும்!” என்று பாடுகிறார். நமக்குத் தூக்கி வாரிப் போடும், அட இறைவனை கழுகுகளா வந்து தரிசிக்கும், என்ன இந்தப் புலவர் இப்படிச் சொல்கிறாரே, என்று! ஆனால் அவர் பாடலைப் பாடி அதன் அர்த்தத்தை விரிவாகப் பார்த்தால் நமக்கு அவர் பாடல் ஒரு நிந்தாஸ்துதியாக அமைந்திருப்பது தெரியவரும். காளத்தி நாதன் பாடலைப் பார்ப்போம்:
மான் பிடித்தீர் முயன்மிதித்தீ ரெவருங் காண மன்றுதனி லாடெடுத்தீர் மகத்து வந்து ஊன்பெருத்த யானையைக் கொன் றுரித்தீ ரையா உரப்பான தலைக்கறிக்கு முவந்தீ ரையா மீன்பொதிந்த விழிமடவா கொரு பங் கீந்தீர் மேலான வேடனெச்சின் மிகவே கொண்டீர் கான்பொதிந்த காளத்தி நாதா வும்மைக் கழுக்கள்வந்து சுற்றுவதுங் காணத் தானே
பாடலின் பொருள் இது : மான் பிடித்தீர் – மானைப் பிடித்தீர்கள் முயல் மிதித்தீர் – முயலை மிதித்தீர்கள் எவருங் காண – எல்லோரும் பார்க்கும் படி மன்று தனில் – பொதுவில் ஆடு எடுத்தீர் – ஆட்டை எடுத்தீர் மகத்துவந்த – யாகத்தில் தோன்றிய ஊன் பெருத்த யானையை – உடல் பெருத்த யானையை கொன்று உரித்தீர் – கொன்று தோலை உரித்தீர் இப்பால் – இதற்கு மேலும் உரப்பு ஆன – உறுதியாகிய தலைக் கறிக்கும் – தலைக் கறிக்காவும் உவந்தீர் – விரும்பினீர்கள் ஐயா – ஐயனே மீன் பொதிந்த – மீனின் தன்மையை உடைய விழி மடவாட்கு – கண்களை உடைய உமா தேவிக்கு ஒரு பங்கு தந்தீர் – உடலில் ஒரு பாகம் தந்தீர்கள் மேலான வேடன் எச்சில் – மேன்மையாகிய வேடனது எச்சிலை மிகவே கொண்டீர் – அதிகமாகவே கொண்டீர்கள் கான் பொதிந்த – காடு மூடிய காளத்தி – திருக்காளத்திக்கு நாதா – இறைவனே உம்மைக் காணத்தானே – உம்மைத் தரிசிப்பதற்காக கழுக்கள் வந்து சுற்றுவதும் – கழுகுகள் வந்து சுற்றுகின்றன!
இதில் ஒவ்வொரு லீலையாக எடுத்துப் பார்த்தால் பொருள் புரியும். முயல் என்பது இங்கு முயலகனைக் குறிக்கும். முயலகனை வதம் செய்த விளையாடல் இங்கு குறிப்பிடப்படுகிறது. ஆடெடுத்தல் என்பது நடித்தல் என்ற பொருளில் வருகிறது. மகத்து வந்த யானை என்பது கஜாசுரனைக் குறிப்பிடுகிறது. கஜாசுரன் வதம் செய்த விளையாடல் இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது. தலைக்கறிக்கு வந்தது என்பது சிறுத்தொண்ட நாயனாரின் வரலாற்றைக் குறிக்கிறது. உமாதேவிக்கு உடலில் ஒரு பாகம் தந்தது அர்த்தநாரீஸ்வரராக அவர் இருப்பதைக் குறிக்கிறது.
வேடன் எச்சில் என்பது கண்ணப்ப நாயனார் அதிக பக்தி மேலீட்டால் தன் வாயில் கொணர்ந்த நீரால் அபிஷேகம் செய்ததைக் குறிப்பிடுகிறது.
ஆனால் கழுகுகள் ஏன் வர வேண்டும்? மான், முயல், யானை, தலைக்கறி, வேடனது எச்சில் ஆகிய இவற்றிற்காகக் கழுகுகள் தானே வரும்!
ஐயாமீன் என்பதை ஐயனே, மீன் என்று பொருள் கொண்டிருக்கிறோம். ஆனால் ஐ ஆம் மீன் என்று பிரித்து அழகாகிய மீன் என்ற அர்த்தத்தையும் பெற்று மகிழலாம்.
புலவரின் நிந்தாஸ்துதியில் தான் எத்தனை புகழ் வரலாறுகள் ஒளிந்துள்ளன! அவை அழகுறச் சுட்டிக் காட்டப்படுகின்றன!
tags– மான் பிடித்தீர், முயலை மிதித்தீர் ,நமச்சிவாயப் புலவர் ,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Parsi Miracle in the Court of Akbar
Parsis are proud of Dastur Meherji Rana (1536-1591) who expounded the Zoroastrian religion at the court of Akbar, and invested the emperor with the two great symbols of the faith, the Sudra and the Kushti. Dastur Meherji Rana participated in the religious debates held at Fatehpur Sikri. He also installed the sacred fire with due Zoroastrian rites. The fire was placed in charge of Shaikh Abul Fazal, the court historian, who was commanded never to let it go out.
Akbar held Dastur Meherji Rana in great respect and awarded him 200 bighas of land as a subsistence allowance, which, after his death, increased by one half in favour of his son Kaikobad.
According to Parsi tradition Dastur Meherji Rana performed a miracle at Akbar’s court which impressed all present. The story goes that a Hindu priest who claimed magical powers and who called himself Jagatguru, spiritual instructor of people, sent up into the sky a large metal disc which shone like a second sun. He challenged those present at the court to bring the platter down. The Maulvis and Ulemas were not successful, but they heard that a Zoroastrian priest at Navsari in Gujarat, who was ready to take up the challenge. He was sent for. On arrival, Dastur Meherji Rana lit the sacred fire in the midst of the assembly , and started to recite certain prayer from the Avesta. The platter fell clattering to the ground.
Tansen, the famous singer who came to the Mughal court around 1562, commemorated the event by composing a beautiful Khyal, Hindustani ballad. In it the Dastur is described as the long bearded Parsi, Mehriar, whose prayers were recited in front of the sacred fire fed with sandal wood and incense, and were found acceptable to god . Tansen concludes his Khyal by telling Akbar that Dastur Meherji Rana is ‘Flower of Paradise’ . The poem is still extant.
There is also a beautiful Mogul miniature depicting Dastur Meherji Rana , seated wearing the flowing white robes of a Parsi priest and with a red Fenton (round hat) on his head.
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,595 Date uploaded in London – – 25 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் 96
வீட்டின் முகப்பில் பனையேடும் எழுத்தாணியும் மாட்டிய பண்பாளன்! ச.நாகராஜன்
வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்பது நமது முதுமொழிகளுள் ஒன்று. அப்படிப்பட்ட கொடையாளர்கள் வாழ்ந்த பூமி பாரத பூமி.
கொங்கு மண்டலத்தில் ஒரு வள்ளல். பெயர் வாணராயன். தங்களுக்கு வேண்டியதைக் கேட்கப் புலவர்கள் கூச்சப்படுவார்களே என்று தன் வீட்டின் முகப்பில் ஒரு பனையேடும் எழுத்தாணியும் மாட்டி வைத்தான் வாணராயன். தேவைப்படுவோர் தேவைப்பட்டதை அதில் எழுதினால் போதும்; அது வழங்கப்படும்.
இப்படிப்பட்ட அதிசய வள்ளலைப் பற்றி கொங்குமண்டல சதகம் தனது 96ஆம் பாடலில் விவரிக்கிறது. பாடல் இதோ:
பாடலின் பொருள் : – வீட்டின் வாயில் முகப்பில் பனையேடும் ஒரு எழுத்தாணியும் தொங்க விட்டு வேண்டியவற்றை வாயால் சொல்லாமல் எழுதி விட, அதில் குறித்த அனைத்தையும் வந்த புலவருக்கு உதவி, மறுபடியும் வர வேண்டும் என்று உபசரிக்கும் பவள குலத்தவனான வாணராயன் வாழ்ந்திருப்பதும் கொங்கு மண்டலமே.
கொங்கு வேளாளரில் பவள கூட்டத்தில் வாணராயன் என்னும் ஒரு தமிழ்ப் புலவரை ஆதரிக்கும் வள்ளல் இருந்தான். அவன் நல்லோரைப் போற்றி வந்தான். அவர்கள் வாய் திறந்து கேட்கக் கூச்சப்படுவார்களே என எண்ணி ஒரு பனையேட்டையும் எழுத்தாணியையும் மாட்டி வைத்தான் வீட்டு முகப்பில்.
அவர்கள் எழுதியதைக் கொடுத்த பின்னரேயே அவர்களுடன் பேசுவது என்ற பழக்கத்தை வாணராயன் கொண்டிருந்தான்.
மண்ணவராகப் பிறந்தவர் கல்வி, அறிவு கை வரப் பெற்றிருந்தால் அவர் விண்ணவரே போல்வர் என்பது அக்காலக் கொள்கை.
வாணராயர் என்பது ஆராயப்பட வேண்டிய ஒரு தொடர். இந்தப் பட்டப் பெயரைக் கொண்டவர்களது மரபினர் இன்றும் சமத்தூர் (பனையபட்டு) ஜமீன் மரபாக வாழ்கின்றனர். அவர்கள் பவள குலத்தவர்கள்.
சமத்தூர் சோழீசர் கோவிலிலும் அங்கிருந்து 3 மைல் தொலைவில் உள்ள பாலாற்றங்கரை சித்தாண்டீசுரர் ஆலயத்திலும் சில கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தக் கல்வெட்டுக்களில் வாணராயன், வாணாதிராயன், வாணவராயன் என்ற பெயர்கள் உள்ளன.
இவற்றைப் பிரித்து அடுக்கும் போது அவை அற்றுப் போனதால் முழுவதுமாகப் பெற முடியவில்லை. இந்தத் தொடரைப் பற்றி ஆராய பல தாமிர சாசனங்களும் கல்வெட்டுக்களும் உள்ளன.
முறையாக ஆய்வை நடத்தினால் பல உண்மைகள் தெரியவரும். தமிழை ஆதரித்த வள்ளல்களில் ஒரு புதுமை வழியைக் கண்டவன் வாணராயன் என்பதை இந்த கொங்குமண்டல சதகப் பாடலால் அறிகிறோம். *
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
FESTIVALS – FEB.8 RATHA SAPTAMI; 16/17- MASI MAGAM (16 AND 17 FLOAT FESTIVAL IN MANY TEMPLES)
NEW MOON DAY- NO NEWMOON DAY IN FEBRUARY
FULL MOON DAY- 16
EKADASI HINDU FASTING DAYS- 12, 26
AUSPICIOUS DAYS – FEB.6, 11, 14
Kalidasa’s quotations are given topic wise.
February 1 Tuesday
Absorption
By your own self, you come to know your self and by your own self,you create yourself. When you have completed your work, you get absorbed in yourself- Kumarasambhava 2-10
Xxxx
February 2 Wednesday
Acumen
Every old poem is not good just because it is old nor is every new poem to be blamed because it is new. Sound critics after a proper scrutiny , chose one or the other. The blockhead is guided by others —
Malavikagnimitra, Nandi
Xxx
February 3 Thursday
Administration
The anxiety of acquiring dominion gives extreme pain and when it is fairly established the cases of supporting the nation incessantly harass the sovereign just as a large umbrella, the staff of which a man carries in his hand, tires him while it also shades him- Shakuntala, act 5
Xxx
February 4 Friday
Administration usually follows shapes of surpassing beauty.
Malavikagnimitra, Nandi
Xxx
February 5 Saturday
Age
In regard to people spiritually old,age is not a criterion for respect.
Kumarasambhava, 5-16
Xxx
February 6 Sunday
The proverb that a lovely person can never be sinful is never untrue.
Kumarasambhava, 5-36
Xxx
February 7 Monday
Aid
Even a person, who can use his eyes, cannot see without a light an object in the darkness–Malavikagnimitra, act 2
Xxx
February 8 Tuesday
Alliance
Matrimonial alliances effected by the good hardly go wrong or end badly.
Kumarasambhava, 6, 29
Xxx
February 9 Wednesday
Allies
One with allies is able to accomplish an undertaking surrounded with obstacles–Malavikagnimitra, act 1
Xxx
February 10 Thursday
Ambition
The great men of this world with extreme difficulty rise to the summit of ambition but from it they also easily and swiftly descend-
Shakuntala, act 4
Xxx
February 11 Friday
Amiss
Who does not feel, in the absence of contentment, that something is wrong , a heartache or a twinge of grief-Rtusamhara, canto 2,17
Xxx
February 12 Saturday
Appreciation
Regard shown by the great often creates a confidence in one’s own merits- Kumarasambhava, 6, 29
Xxx
February 13 Sunday
Arrogance
The good are never rendered arrogant by wealth-Shakuntala, act 5
Xxxx
February 14 Monday
Ashoka tree
This Ashoka tree is delaying to burst into blossom because it waits to be touched by a lovely woman s foot- Malavikagnimitra, act 2
Xxx
February 15 Tuesday
Aspiration
If you aspire to gain heaven , then your attempts are fruitless.
Kumarasambhava., 5,45
Xxx
February 16 Wednesday
Assistance
While fire becomes extremely brilliant from the Sun s aid, the moon also acquires splendour when favoured by the night.
Malavikagnimitra, act 1
Xxxx
February 17 Thursday
Attainment
All are happy in achieving a desired object but with kings, such a state results only in trouble. Attainment of the desired object destroys all keenness because the very aim of protecting what has been secured cause worry- Shakuntala,,a ct 5
Xxx
February 18 Friday
Beauty
It is rarely false that a lovely person can never be sinful
Kumarasambhava, 5
Xxx
February 19 Saturday
She was created by god as if with a desire to see all loveliness in one place with the collection of all objects of comparison set in their proper places- Kumarasambhava, 1,49
Xxx
February 20 Sunday
Though dark moths may settle on the head of a water lily, it is still beautiful. The moon, with its dewy beams, rendered yet brighter by its dark spots- Shakuntala, act 1
Xxxx
February 21 Monday
A beautiful figure is charming in whatever state it may be.
Shakuntala, act 6
Xxx
February 22 Tuesday
Benefactor
With ripening fruits, trees bend; on account of fresh water, , the clouds hang low; with prosperity the good becomes humble. Such is , in truth , the real nature of benefactors -Shakuntala, act 4-12
Xxxx
February 23 Wednesday
Butcher
A butcher, who sells meat and whose actions are cruel, may have a tender heart- Shakuntala act 6
Xxxx
February 24 Thursday
Calm
A good man never allows grief to triumph . Even in a tempest the mountains are calm- Kalidasa, act 6:Shakuntala
Xxx
February 25 Friday
Carbuncle s
Carbuncles are naturally soft to touch but, if they are penetrated by the sun , s rays, they burn the hand -Shakuntala, act 2
Xxxx
February 26 Saturday
Choice
Your longing to own this rustic maiden when you have already bright jewels in your palace is like the fancy of one who has lost his appetite for dates and yearns for the tamarind– Shakuntala, act 11
Xxxx
February 27 Sunday
Conceit
All men are likely to think favourably of themselves-
Shakuntala, act 11
Xxx
February 28 Monday
Control
A good man never permits grief to control him. The mountains even in a storm are not perturbed.
Shakuntala, act 6
Xxxx
BONUS QUOTATIONS
Dancing
Dancing is the principal amusement of mortals though their tastes vary.
Malavikagnimitra, act 1
Xxx
The art of dancing is a matter of practice.
Malavikagnimitra, act 1
XXXX SUBHAM XXXXX
tags- Kalidasa, quotations, February 2022, calendar
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மந்திர சப்தத்தால் வெற்றி!!
அதர்வண வேதத்தில் நவீன விஞ்ஞானத்தை மிஞ் சும் ஒரு செய்தி உள்ளது. அ தாவது ஒலியைப் பயன்படுத்தி எதிரிகளை வெல்வது. இரண்டாவது உலக மகா யுத்தத்தில் ஹிட்லரின் பிரச்சார மந்திரி கோயபெல்ஸ் தினமும் பொய்ச் செய்திகளைப் பரப்பி ஹிட்லருக்கு நிறைய வெற்றி தேடித் தந்தார். ஒரு பொய்யைப் பத்து முறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பது அவரது சித்தத்தாந்தம் ; இன்று பல அரசியல் கட்சிகள் இதைக் கடைப்பிடித்து மக்களை ஏமாற்றுவதைக் காண்கிறோம்.
இது ஒருபுறமிருக்க விஞ்ஞான வசதிகளை பயன்படுத்தி சண்டை போடும் செய்திகளும் வருகின்றன. அதாவது ஒரு நாடு ஒளிபரப்பும் விஷயங்களை மற்றவர்கள் கேட்காமல் இருக்க அந்த ஒளி அல்லது ஒலி பரப்பை ஜாம் JAMMING செய்துவிடுவது . அதாவது அந்த அலைகளை, அறிவியலைப் பயன்படுத்தி அழித்துவிடுவது . இது போல ஒரு செய்தி அதர்வண வேதத்தில் உள்ளது.
இதில் விஞ்ஞானம் எதுவும் இல்லை என்று எண்ணினாலும் இந்த உத்தியை தேவர்கள் கடைப் பிடித்ததிலிருந்து வேத காலத்தில் எவ்வளவு முன்னேற்றம் இருந்தது என்பதை அறியமுடிகிறது . விஷயம் என்னவென்றால் தேவர்கள் சொல்லிய சொற்களில் அசுரர்கள் குழம்பிப் போனார்கள் ; அதனால் அவர்கள் தோற்று ஓடிப்போனார்களாம் !
இதோ அதர்வண வேத சூக்தம் 721ன் அடிக் குறிப்பு —
இங்கு ஆறு பாடல் உள்ளன. இவை பிராவாஹ்கலிகம் என்று அழைக்கப்படும் மொழிபெயர்க்கத் தகுதியுடைவனாக இல்லை. புதிராக உள்ளன; இவற்றைக் கூறி தேவர்கள் அசுரர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தினர். வேள்வியைச் செய்பவர்களும் இவற்றைக் கூறி எதிரிகளைத் தோற்கடிக்கலாம் என்று RALPH TH GRIFFITH கிரிப்பித் எழுதியுள்ளார்.
ஆனால் ஜம்புநாத ஐயர் தன்னுடைய நாலு வேத மொழிபெயர்ப்பில் இதை மொழி பெயர்த்துள்ளார். சிலேடைப் பொருளில் பார்த்தால் கொஞ்சம் விரசமான – செக்ஸ் SEXY – பொருளும் தொனிக்கும்
“இரண்டு கிரணங்கள் விசாலமாயுள்ளன. புருஷன் அவற்றை அரைக்கிறான் குமாரியே ! நீ நினைப்பது போல் அது இல்லை”
கடைசி வரி ‘குமாரியே ! நீ நினைப்பது போல் அது இல்லை’ என்று ஆறு மந்திரங்களிலும் அது வரும். உடலுறவுப் பாடல்களைப் போல வரிகள் இருக்கும்.
XXX
எனது கருத்து
இது போல, பல துதிகளை வரிசையாக வைத்து, அவற்றை யாகத்தில் பயன்படுத்தியதாகவும் பிற்கால பிராமண நூல்களில் எழுதி வைத்துள்ளனர். இவற்றின் மறைபொருள் என்ன என்று நமக்கு இன்று தெரியவில்லை. தமிழ்த் திரைப்படப்பாடல்களில் கூட சில பாடல்கள் இப்படி விரசமான விளக்கத்துக்கு வழிசெய்கின்றன. நான் எடுத்துக்கட்டுகளைத் தரத் தேவையே இல்லை. வாசகர்களுக்கே தெரியும்
முதல் பகுதியில் “கரக் முறக், தஸ் புஸ்” — மந்திர ஒலிகள் பற்றி எழுதி இருந்தேன் இந்த பொருளற்ற அல்லது பொருள் புரியாத முதல் மூன்று மந்திரங்கள் பிரதிராதா என்று அழைக்கப்படுவதாக அடிக்குறிப்பு சொல்கிறது. இதைச் சொல்லி, அசுரர்களை தேவர்கள் முறியடித்தார்கள் .அதில் 11 முதல் 13 வரையுள்ள மந்திரங்களை ‘பூதேச்சத்’ என்று அழைத்தனர். ‘கண்ணைப் பறிக்கும் ஒளி’ என்பது அதன் பொருளாம்.
முதல் பகுதியில் ‘பிலு ’PIILU என்னும் தாவரம் பற்றியும் உள்ளது. இது சோழ நாட்டில் மலைப்பகுதியில் வளரும் மரம் என்றும் என்றும் கரேயா ஆர்போரியா CAREYA ARBOREA அல்லது சால்வடோரா பெர்சிகா SALVADORA PERSICA என்ற மரமாக இருக்கலாம் என்றும் அடிக்குறிப்பு கூறுகிறது. 12 ஆவது மந்திரத்தில் நடுங்கும் புறா பற்றிய வரியுடன் இதன் பழத்தை இந்திரன் புறாவுக்கு கொடுத்ததாக வருகிறது. அந்தக் கதை இப்போது இல்லை; வேறு இரண்டு புறாக்கதைதான் உள்ளன என்றும் முதல் பகுதியில் கண்டோம். மொத்தத்தில் பாடல் முழுதும் புரியாத ஒலிகள், புரியாத விஷயங்கள், புரியாத கதைகள் உள்ளன . இவை அனைத்தும் யாகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஒலிகள் அசுரர்களைக் குழம்பச் செய்து தோல்வியைத் தழுவச் செய்தன.
ரிக் வேத (RV), அதர்வண வேத (AV) மந்திரங்களை இலவசமாக படிக்கலாம். அனைத்தும் கூகிள் GOOGLE செய்தால் கிடைக்கும். ஆங்கிலம் மற்றும் சம்ஸ்க்ருதத்தில் அவை உள்ளன.
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,592 Date uploaded in London – – 24 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
யோக வாசிஷ்டம் மோக்ஷம் அடைவது எப்படி? வஸிஷ்டர் கூறிய விதஹவ்யன் கதை!
ச.நாகராஜன் மோக்ஷம் அடைவது எப்படி? அது எங்கே இருக்கிறது? வஸிஷ்டர் தெளிவாக பதிலைத் தருகிறார்.
மோக்ஷம் என்பது சுவர்க்கத்திலும் இல்லை, பாதாளத்திலும் இல்லை அல்லது பூமியிலும் இல்லை. அது பிரக்ஞையைப் பொறுத்து அமைந்துள்ள ஒன்று. அது தான் ஆத்ம ஞானம்! மோக்ஷத்தை விரும்பும் ஒருவன் ஆசைகள் வசப்படுகிறான், எண்ணங்கள் வசப்படுகிறான், ஆகவே அவனுக்கு பந்தம் என்னும் தளை ஏற்படுகிறது.
ஆகவே வஸிஷ்டர் மிகத் தெளிவாகக் கூறுகிறார் -“ மோக்ஷம் அடைய வேண்டும் என்ற ஆசையைக் கூட விட்டு விடு” என்று!
வஸிஷ்டர் ராமருக்கு இது சம்பந்தமாக ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார். விதஹவ்யன் என்ற ஒருவர் ஆத்ம ஞானம் பெற விரும்பினார். அதற்காக மலைகளுக்குச் சென்றார். மனம் மற்றும் உடல் சம்பந்தமான உபாதைகளிலிருந்து விடுபட இதுவே சரியான வழி என்று அவர் நினைத்தார். சாஸ்திரங்கள் கூறிய படி என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அந்தக் கர்மங்களை எல்லாம் ஒன்று விடாமல் செய்தார். ஆனால் அவருக்கு சாந்தி கிடைக்கவில்லை. அலைபாயும் மனம் அப்படியே தான் இருந்தது.
புலன்களை அடக்கினார். மனத்தை அடக்கினார். ஒருவாறாக கடைசியில் சமாதி நிலையில் இருக்க அவரால் முடிந்தது. சமாதி நிலையில் நெடுங்காலம் இருந்தார். இதனால் அவர் தனது உடல் இறுகிப் போய்விட்ட நிலையை அடைந்திருப்பதை உணர்ந்தார். அவரால் நகரக் கூட முடியவில்லை. தான் முயற்சி செய்து எப்படியாவது நகர வேண்டுமா அல்லது இப்படியே இதே நிலையில் தொடர்ந்திருக்க வேண்டுமா – அவருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். விதஹவ்யனைப் பார்த்த சூரிய பகவான் அவரது பிரச்சினை என்னவென்பதைப் புரிந்து கொண்டார்.
அவர் மீது பிரகாசமான தன் ஒளியைப் பாய்ச்சினார். அவரை அவரது பிரச்சினையிலிருந்து விடுவித்து அவரது உடலை அவர் நகர்த்துமாறு செய்தார். விதஹவ்யரால் இப்போது நகர முடிந்தது. நேராக மலையிலிருந்து இறங்கி மக்கள் அனைவரும் இருக்கும் இடத்திற்குச் சென்றார். இப்போது மைத்ரி என்னும் அனைவருடனுமான சம பாவ நட்புக் கொண்டு எல்லோருடனும் பழக முடிந்தது. அத்துடன் கருணை என்னும் அளப்பரிய இரக்கத்துடன் அனைவருடன் பழக முடிந்தது. அவர் விருப்பம், ஆசை, வெறுப்பு, சந்தோஷம், துக்கம் ஆகிய அனைத்து நிலைகளையும் கடந்தார்.
வஸிஷ்டர் இந்தக் கதையைக் கூறியதோடு இது சொல்லும் நீதியை விளக்கலானார். சிலர் கஞ்சா, அபினி போன்ற போதை மருந்துகளை உட்கொண்டு மனதை அடக்க முயல்வதை வஸிஷ்டர் வெகுவாகக் கண்டித்தார். இதன் மூலம் மனதை சாந்தி அடையச் செய்யவோ அல்லது அடக்கவோ முடியாது என்று தெள்ளத் தெளிவாக அவர் கூறினார். அத்துடன் சில சித்திகளை அடைந்தவுடன் அதை அனைவருக்கும் காட்டும் விருப்பத்தையும் அவர் கண்டித்தார். அந்த அதீத சக்திகளைக் காண்பிக்கக் கூடாது என்று அவர் அறிவுரை கூறினார். ஹத யோகம் மூலம் உடலைக் கட்டுக்குள் கொண்டு வரலாமே தவிர மனதை அடக்கவே முடியாது என்றும் அவர் கூறினார்.
உலகியல் என்பது உடலிலும் மனம் என்னும் கருவியிலும் இருக்கிறது என்று அவர் விளக்கினார். ஆகவே மோக்ஷம் பற்றி எண்ணும் ஒருவன் முதலில் எல்லா வாஸனைகளையும் – ஆசைகளையும் – வெல்ல வேண்டும் என்றார் அவர். இது வாஸனா க்ஷயம் எனப்படும். வாஸனா க்ஷயம் அடைந்தவுடன் மனோ நாசம் ஏற்படும். அலைபாயும் மனம் இருக்காது. ஆத்ம விசாரம் செய்யும் ஒருவனின் பாதையே சரியான பாதை என்பது வஸிஷ்டரின் முடிவு. இந்த விசாரத்தினால், வைராக்யத்துடன் தொடர்ந்து செய்யும் இந்தச் செய்கையால், ஒருவன் படிப்படியாக முன்னேறி மோக்ஷத்தை அடைய முடியும். எவன் ஒருவன் அமைதியான மனதுடன் இருக்கிறானோ, எவன் ஒருவன் எல்லா ஆசைகளையும் துறந்து விடுகிறானோ, அவன் ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரனாக இருந்தாலும் சரி, அவன் உயரிய அந்தஸ்தில் இருந்தாலும் சரி, தாழ்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் சரி, அவன் சந்தோஷத்தை அடைவான்.
ஆக இந்தக் கதை மூலம் ஆத்ம விசாரம் வலியுறுத்தப்படுகிறது.
இதையே பகவான் ரமண மஹரிஷி திருப்பித் திருப்பித் தன்னை அடைந்தவர்களுக்கெல்லாம் சொல்லி வந்தார். இதுவே மோக்ஷத்திற்கான ரகசியம். யோக வாசிஷ்டத்தில் வரும் 55 கதைகளில் 25வது கதையாக இது அமைகிறது. இது உபசாம பிரகரணத்தில் வரும் கடைசி கதையாக அமைகிறது.
tags — யோக வாசிஷ்டம், மோக்ஷம், வஸிஷ்டர், விதஹவ்யன், கதை,