இகேபனா என்பது ஜப்பானியரின் மலர் அலங்காரத்திற்கான சொல்!
ஆனால் இது ஏதோ மலர்களை அலங்கரிப்பதைக் குறிக்கும் சொல் மட்டும் அல்ல!. இது அழகிய பண்பாட்டைக் குறிக்கும் சொல்.
ஜென் பிரிவைச் சார்ந்த பல உயரிய குணங்களைக் குறிக்கும் சொல் இது.
மனத்தெளிவு, சமச்சீர் தன்மை, நடைமுறை வாழ்க்கையில் எளிமை ஆகியவற்றைக் குறிக்கும் சொல் இகேபனா!
ஒரு முகப்பட்ட சிந்தனையுடன் நிகழ்காலத்தில் வாழ்ந்து ஒவ்வொரு மலரையும் அதன் வர்ணத்தையும் அனுபவித்து அதை உரிய இடத்தில் உரிய முறைப்படி வைப்பது தான் இகேபனா!
இது வெறும் அழகைக் குறிக்கும் சொல் மட்டுமல்ல; வாழ்க்கையில் உள்ள அழகைச் சுட்டிக்காட்டி எங்கும் ஒரு இனிய லயத்தை ஏற்படுத்தும் அனுபவம் இது.
அதிகமாகச் சிந்தித்து சிந்தித்து ஓய்ந்து போவோர்களுக்கு ஆறுதல் தரும் கலை இது. படைப்பாற்றலை மேம்படுத்தும் பண்பு இது.
பலவித மனோநோய்களையும் தீர்த்து வைக்கும் மலர் சிகிச்சை இது.
முற்காலத்தில் ஆலயங்களில் செய்யப்பட்டு வந்த இகேபனா இன்று ஒவ்வொரு ஜப்பானியரின் வீட்டிலும் இடம் பெற்று அவர்களுக்கு வளமான வாழ்க்கையைத் தருகிறது.
இகேபனா என்ற ஜப்பானிய வார்த்தைக்கு ‘உயிருள்ள மலர்கள்’ என்று பொருள்.
ஏழாம் நூற்றாண்டில் சைனாவிலிருந்து புத்தமதம் ஜப்பானுக்கு வந்தது.
புத்தரின் உருவச்சிலைக்கு முன்பு மலர்களை வைக்கும் பழக்கமும் கூடவே வந்தது. ஹையான் வமிசத்தினர் (HEIAN) எட்டாம் நூற்றாண்டு முதல் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை ஜப்பானை ஆண்ட போது மலர்களுடன் ஒரு கவிதையையும் இணைத்து அனுப்பும் ஒரு பழக்கம் ஏற்பட்டது.
வண்ண வண்ண மலர்களை அலங்காரமாக வைப்பதிலும் பல வகை உண்டு.
ரிக்கா என்ற முறை சொர்க்கத்தின் அழகைச் சித்தரிப்பதாகும். வானுலகைப் பூவுலகில் காட்டும் ரிக்காவில் ஒன்பது நிலைகள் காண்பிக்கப்படும்.
ஷின் – ஆன்மீக மலை
உகே : பெறுதல்
ஹைகே : காத்திருத்தல்
ஷோ ஷின் – நீர்வீழ்ச்சி
சோ – துணையாக இருக்கும் கிளை
நகாஷி – நீரோடை
மிகோஷி – மேலிருந்து பார்த்தல்
டோ – உடல்
மே ஒகி – உடலின் முன் பாகம்
இந்த அனைத்தையும் மனதில் கொண்டு மலரை அலங்காரமாக வைப்பது ரிக்கா.
செய்க்கா என்பது இஷ்டப்படி அழகுற வண்ண மலர்களை அலங்கரிப்பதாகும்.
மோரிபனா என்பது எல்லாத் திசைகளிலிருந்தும் மலர் அலங்காரத்தைப் பார்க்க வைப்பதாகும்.
இன்றோ இன்னும் அதிகமதிகம் ஸ்டைல்கள் இதில் ஏற்பட்டு விட்டன!
எப்படி செடிகளை வளைத்து வைப்பது, எப்படி கத்தரிக்கோலை வைத்து உரிய இடத்தில் இரண்டாக கிளையை வெட்டிக் காண்பிப்பது – இவையெல்லாம் இகேபனாவில் இன்றைய முன்னேற்றங்களாகும்.
ஒவ்வொரு மலரின் தனித்தன்மையைப் புரிந்து கொண்டு அந்த மலரின் ஆற்றலைச் சரியாக உள்வாங்கிக் கொண்டு அதன் உயிரோட்டமான யின் மற்றும் யாங் ஆற்றலை அதனதன் முறைப்படி வைக்க வேண்டும்.
இப்படிச் செய்தால் வீட்டில் அமைதி நிலவும்; மனதில் ஒரு நிம்மதி ஏற்படும்; இல்லங்களில் வருவோர்க்கு உரிய மரியாதை தரப்பட்டதாக ஆகும்.
அது சரி, இந்த இகேபனா புத்தமதத்திற்கு மட்டும் சொந்தமானதா, என்ன?
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே இந்துப் பண்பாட்டில் மலர்கள் உயிரோட்டமான ஒரு பங்கைப் பெற்றன; அந்தஸ்தை அடைந்தது.
சிவனுக்கு வில்வம், விஷ்ணுவுக்கு துளசி என்று ஆரம்பித்தால் ஒரு கலைக்களஞ்சியமே, சாரி, ஒரு மலர்க் களஞ்சியமே உருவாகும்.
சிவபிரானுக்கு மிகவும் பிடித்தமான மலர்கள் : செங்கழுநீர், சரக்கொன்றை,கரு ஊமத்தை, வெள்ளெருக்கு.
செங்கழுநீர் சிவனின் சிரசிலும் அம்பிகை கையிலும் எப்போதும் உண்டு.
இந்த மலர்கள் பூஜைக்கு மட்டும் உதவுவது அல்ல; ஒவ்வொரு மலரும் வாழ்க்கை வளத்தைத் தருவதோடு ஒரு சிறப்பான அம்சத்தையும் நல்கும். இந்த அம்சத்தைப் புராணங்களும் இதிஹாஸங்களும் விளக்குகின்றன!
இத்தோடு புதுவை அரவிந்த அன்னை அவர்கள் ஒவ்வொரு மலருக்கும் உள்ள குணாதிசயங்களையும அது தரும் நலனையும் பெரிதாகப் பட்டியலிட்டுத் தந்துள்ளார்.
அன்னையை வழிபடுவோர் இந்த மலர்களை சமர்ப்பித்து வேண்டியதைப் பெறுகின்றனர் என்பது நடைமுறையில் உள்ள ஒரு ஆன்மீக அனுபவமாகும்.
வண்ண மலர் அலங்காரம் வாழ்க்கையை வண்ண மயமாக்கும் என்பதில் ஐயமில்லை!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அஷ்ட திக் பாலகர்கள்
எட்டு திசைகளில் எட்டு தேவர்கள் உள்ளனர் . யாக குண்டம் அமைக்கும்போது இந்த எட்டு திசா நாயகர்களையும் வணங்குகிறோம்.
கிழக்கு – இந்திரன்
தென் கிழக்கு – அக்கினி
தெற்கு- யமன்
தென் மேற்கு – நிருதி
மேற்கு – வருணன்
வடமேற்கு – வாயு
வடக்கு – குபேரன்
வடகிழக்கு – ஈசானன்
Ashta dhik paalaka
The deities who are in charge of the eight directions. They are invoked every time a yaga kunda is set up. They are the guards of the eight directions and they protect it. The are
Indra – east
Agni – south east
Yama – south
Niruthi – south west
Varuna – west
Vaayu- north west
Kubera – north
Eeshaanan – north west. Eight flowers used to worship god
***
அஷ்ட புஷ்பங்கள்
புன்னைcalophyllum inophyllum)
வெள்ளெருக்கு
செண்பகம் அல்லது அசோகம்
நந்தியாவட்டை
பாதிரி
கருங்குவளை /நீலோற்பலம்
அரளி
தாமரை
ASHTA PUSHPAS- EIGHT FLOWERS USED IN PUJAS
Arali – Nerium oleander
Lotus
Erukku /calotropis gigantea
Shenbaka
Patali
Punnai – calophyllum inophyllum)
Nandhiyaavattai -Tabernaemontana divaricata, Crepe jasmine, East Indian Rosebay, Nandivrksah
சிவபெருமானை அஷ்ட மூர்த்திஎன்று தேவாரம், திருவாசகம் முதலிய பாடல்களில் அடியார்கள் போற்றுவர் ; அவை -ஐம்பூதங்கள் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்), சூரியன், சந்திரன், எஜமானன்
EIGHT FOLD FORM OF LORD SHIVA
Lord Shiva is called One in Eight fold forms: Pancha Bhutas/Five Elements (Earth, Water, Fire, Air and Vacuum), Sun, Moon, Master or One who conducts Yaga
***
அறுகோணம்
முருகனுக்குரியது அதில் ச ர வ ண ப வ என்ற மந்திரம் பொருந்தும். மேலும் நரசிம்மர், சுதர்சன சக்ரம், அம்பாள் , அனுமன் ஆகியோருடனும் அறுகோணங்கள் உள்ளன.
SHADKONA/ HEXAGON
Lord Skanda’s Symbol with the Mantra SA RA VA NA BHA VA . also used with other idols such as Sudrsana Chakra, Hanuman, Devi.
Six Adhvaas- Six Paths
***
ஆறு அத்வாக்கள் /வழிகள்
வர்ண ,பத, மந்த்ர, கலா, தத்வ, புவன
Six Adhvaas- Six Paths
Adhvas are the steps by which an aspiring individual being has to climb the ladder of perfection in the Saiva Siddhanta tradition. These are six in number known as mantiram, padam, varnam, bhuvanam, tattvam and kala.
***
ஆழ்வார்கள்
பன்னிரெண்டு விஷ்ணு பகதர்கள் ; ஐந்தாம் நூற்றாண்டு முதல் வாழ்ந்த பெரியார்கள்; அவர்கள் பாடிய பாசுரங்கள்/ பாடல்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தம் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ;இவர்களில் காலத்தால் மூத்தவர்கள் முதல் மூவர் – பொய்கை, பூதம், பேய் ஆழ்வார்கள்; இந்த மூன்று பெயர்களும் சங்க இலக்கியப் புலவர்கள் பெயர்களிலும் உள்ளன. ஏனையோர் பெரியாழ்வார், ஆண்டாள் (ஒரே பெண்மணி), நம்மாழ்வார், குலசேகர , தொண்ரடிப்பொடி , திருமங்கை, மதுர கவி, திருமழிசை, திருப்பாணாழ்வார்.
நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்ற நூலில் ஆழ்வார் பாசுரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன.
ALVAARS
Twelve great Vishnu saints who lived in Tamil Nadu between fifth and ninth centuries CE are known s Aalvaars. One of them is a woman by name Andal (aandaal); other 11 aalvaars are Peyaalvaar, Bhutataalvaar, Poykaiyaalvaar,
Naalaayira Divya Prabandham (4000 Divine Verses) is the book that contains all the verses sung by Alvars in different shrines.
***
ஆண்டாள்
இவர் பெரியாழ்வாரால் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார் . இவர் பாடிய திருப்பாவை முப்பது பாடல்களும் நாச்சியார் திருமொழியும் மிகவும் புகழ்பெற்றவை ஆகும். மார்கழி மாதத்தில் திருப்பாவையைப் பாடி பெண்கள் நோன்பு இருப்பார்கள்; நாச்சியார் திருமொழியை வைணவர்கள் திருமணங்களில் பாடுகிறார்கள் . ஆண்டாளின் பிறப்பிடமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவருடைய கோவில் இருக்கிறது.
ANDAL (AANDAAL)
Andal is one of the twelve Alvars. Her Tiruppaavai verses and Naachiyaar Tirumozi are very popular. Thirty Tiruppaavai verses are sung y women who follow Paavai Nonbu in the month of Maarkazi (Maargaseersha) . Naachchiyaar Tirumozi verses are sung during Vaishnava weddings in Tamil Nadu.
To be continued………………………….
Tags- ஆண்டாள் , ஆழ்வார்கள் HINDU DICTIONARY, ENGLISH AND TAMIL, இந்துமத கலைச்சொல் அகராதி, Part 6, அஷ்ட திக் பாலகர்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்.
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் மாதம் 19-ம் தேதி 2025-ம் ஆண்டு
****
எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் .
திங்கட்கிழமை கொண்டாடப்படும் தீபாவளித் திருநாள் அன்று தொடங்கி,
ஆண்டு முழுதும், எல்லோருக்கும் சகல செளபாக்கியங்களையும் இறைவன் அருளவேண்டும் என்று ஞானமயம் குழு பிரார்த்திக்கிறது .
****
முதலில் தீபாவளிச் செய்திகள்.
அயோத்தியில் தீபாவளி தீப உற்சவம்
அயோத்தியில் தீபாவளிக்கு 29 லட்சம் விளக்குகளை ஏற்ற திட்டம்..!!
உத்தரப் பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் அயோத்தியில் லட்சக்கணக்கான விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. இது உலக சாதனையாக மாறி வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையையொட்டி 9-வது தீப உற்சவம் 19-ம் தேதி அயோத்தியில் உள்ள ராம் மனோகர் லோஹியா அவத் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், 29 லட்சம் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் சாதனையை முறியடிக்கும். சரயு நதியின் 56 கரைகள், ராம் கீ பேடி, பிற கோயில்கள் மற்றும் நகரின் குடியிருப்புப் பகுதிகளில் இந்த விளக்குகள் ஏற்றப்படும்.
தமிழ்நாட்டில் தீபாவளிக்கு நரகாசுரனே காரணம் என்பது போல, உ.பி.யில், போருக்குப் பிறகு அயோத்தியை ராமர் வென்றதை நினைவுகூரும் வகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. மேலும், தீபாவளிக்கு 1,100 ட்ரோன்கள் வானில் ஏவப்படும். இதில் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட ராமாயணக் காட்சிகளும் அடங்கும்.
அயோத்தியில் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு தன்னார்வலர்களிடமிருந்து உதவி பெற உ.பி. அரசு முடிவு செய்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் தன்னார்வலர்களாக பணியாற்ற விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர்.
இந்துக்கள் தவிர பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
*********
தீபாவளிக்கு மறு நாளும் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
தீபாவளிக்கு மறு நாளும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தாண்டு அக்.,20 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு அக்.,21 அன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் அக்.,25 அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது
****
அயோத்தியில் ராமாயண மெழுகு அருங்காட்சியகம்
அயோத்தி ராமர் கோவில் அருகே, ராமாயண இதிகாசத்தை மையமாக வைத்து, முதல் மெழுகு சிலை அருங்காட்சியகம் இன்று திறக்கப்பட உள்ளது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
அயோத்தியின் சவுதா கோசி பரிக்ரமா பாதையில் கட்டப்பட்டுள்ள இந்த மெழுகு சிலை அருங்காட்சியகம், தென் மாநில கட்டட கலையை பிரதிபலிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது.
6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ளார். இந்த அருங்காட்சியகத்தில் ராமர், சீதை, லட்சுமணன், பரதன், ஹனுமன், ராவணன், விபீஷணன் உள்ளிட்ட ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்களின், 50 மெழுகு சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தை வடிவமைத்த கேரள கலைஞர் சுனில் கூறுகையில், “அருங்காட்சியகத்தை பார்வையிடுவோர் திரேதா யுகத்தில் அடியெடுத்து வைப்பதை உணர்வர். புராணம், தொழில்நுட்பம், கலைத்திறனை ஒருங்கிணைக்கும் தனித்துவ இடமாக இது விளங்கும்,” என்றார்.
பார்வையாளர்களுக்கு நுழைவுக்கட்டணமாக ஒரு நபருக்கு, 100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு, ஒரே நேரத்தில் 100 பேர் வரை கண்டு ரசிக்க அனுமதி அளிக்கப்படும்.
அண்மையில் தமிழ்க் கவிஞர் அருணாசல கவிராயர், சங்கீத மும்மூர்த்தியலில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜர், கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் ஸ்ரீ புரந்தரதாசர் ஆகியயோரின் சிலைகளையும் உத்தரப்பிரதேசமுதல்வர் திறந்து வைத்தது சங்கீதப்பிரியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
***
சபரிமலையை தொடர்ந்து வைக்கம் மகாதேவர் கோவிலிலும் 31 பவுன் தங்கம் மாயம்!
கேரளாவில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டயம் மாவட்டம் வைக்கம் ஸ்ரீ மகாதேவர் கோவிலில் சபரிமலையை போலவே காணிக்கையாக வரும் தங்கம், வெள்ளி உள்பட ஆபரணங்கள் இரும்பு பிரோக்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதாவது தங்க ஆபரணங்கள் தனியாகவும், வெள்ளி ஆபரணங்கள் தனியாகவும் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பதிவேட்டில் 3,247.900 கிராம் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், 2020-2021 தணிக்கை அறிக்கை கடந்த ஆண்டு கேரள ஐகோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், 2,992.070 கிராம் தங்கம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது 255 கிராம் தங்கம் (31½ பவுன்)மாயமாகி இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக தேவஸ்தானம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் தணிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதான முகப்பில் தங்க முலாம் பூசப்பட்ட துவார பாலகர் சிலை கவசங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்த கவசங்களை புதுப்பிக்கும் பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியே கொண்டு சென்ற போது சுமார் 100 பவுன் தங்கம் அபகரிக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள், இடைத்தரகராக செயல்பட்ட உன்னி கிருஷ்ணன் போற்றி ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
***
சபரிமலையில் தங்கம் திருட்டு – தொழிலதிபர் உன்னி கிருஷ்ணன் கைது
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் தொழிலதிபர் உன்னி கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு உள்ளார்
பெங்களூரில் இருந்த அவரை சிறப்பு புலனாய்வு குழு படை கைது செய்து திருவனந்தபுரம் அழைத்து சென்றுள்ளது.
இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரம் கேரள அரசியலிலும் எதிரொலித்து வருகிறது. தங்கக் திருட்டு முலாம் பூசுவதற்காக எடுத்துச்சென்ற உன்னிகிருஷ்ணன் போற்றி என்ற தொழிலதிபர் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் சிறப்பு விசாரணை குழுவால் அதிகாலை 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது
***
தஞ்சசைப் பெரிய கோவில் பற்றி தமிழ் நாடு அரசு தவறான தகவல்
தஞ்சை பெரிய கோவில் கோபுர நிழல் கீழே விழாது; பள்ளிக்கல்வி விளம்பரத்தில் தவறு’
பள்ளிக்கல்வி துறை சார்பில், கலை திருவிழாவுக்காக வெளியிடப்பட்ட, ‘வேர்களைத் தேடி’ என்ற விளம்பரத்தில், தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது’ என்ற, தவறான தகவல் இடம் பெற்றிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
தஞ்சாவூரில் மன்னர் ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவில் உலகப் புகழ் பெற்றது. ‘பெரிய கோவிலின் விமானம், 80 டன் எடையுள்ள, ஒரே கல்லால் ஆனது. அதன் நிழல் கோவிலுக்குள்ளேயே விழும்; அதுவே அதிசயம்.
தற்போது, பள்ளிக்கல்வி துறை சார்பில், ‘கலைத்திருவிழா’ நடத்துவதற்காக, விளம்பரம் தயாரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.
அதில், ஒரு தாத்தாவும், பேத்தியும் பேசுவது போல உள்ள உரையாடலில், ‘நிழலே விழாத தஞ்சை பெரிய கோவில்’ என்ற வாசகம் வருகிறது. இது, பள்ளி மாணவர்களிடம் தவறான தகவலை பரப்புவதாக உள்ளது.உண்மையில், காலையில் மேற்கிலும், மாலையில் கிழக்கிலும் நிழல் விழுவதை, வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தன், ‘ராஜராஜேச்சரம்’ நுாலில் புகைப்படமாக ஆவணப்படுத்தி உள்ளார். இதையே, பலர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
எனவே, பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ள, தவறான விளம்பரத்தை, சமூக வளைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஆய்வாளர்கள் கூறுகையில், ‘மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நிழல் விழாது என்றும், பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் நிழல் விழும் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முரணான தகவல்களையும் பள்ளிக்கல்வி துறை சரி செய்ய வேண்டும்,” என் றனர்.
****
பட்டாசு வெடிப்பதில் டில்லிக்கு ஒரு நீதி ! தமிழனுக்கு வேறு ஒரு நீதியா?தினமலர் கேள்வி
டில்லியில் பட்டாசு வெடிக்க 5 நாள் சுப்ரீம் கோர்ட் அனுமதி: தமிழகத்தில் மட்டும் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரமா?
சென்னை: தீபாவளி முன்னிட்டு டில்லியில் 5 நாட்கள் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்குவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
குழந்தைகளின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டு, மூன்று நாட்கள் காலை 3 மணி நேரம் மாலை 3 மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.
தீபாவளி அன்று பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து கொண்டாடுவது வழக்கம். தீபாவளி நாளில் காலை, 6:00 முதல் 7:00 மணி வரை, இரவு, 7:00 முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்’ என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளது.
தேவையற்ற கட்டுப்பாடுகளை திணிப்பது சரியல்ல. குழந்தைகளின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டு, கூடுதல் நாட்களுக்கு தினமும் 3 மணி நேரமாவது பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என பெற்றோர் விரும்புகின்றனர்.
இதனால், பட்டாசு வெடிக்க தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
*****
பஜனைப் பாடகர் தேர்தலில் போட்டி; இந்துக்கள் மகிழ்ச்சி!
இந்து சமயப் பாடகியான மைதிலி தாகூரை பாரதீய ஜனதா கட்சி, பீஹார் மாநில தேர்தலில் வேட்பாளராக அறிவித்தது இந்து சமய சங்கீதப் பிரியர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
தென்னாட்டில் சூர்யா காயத்ரி, பக்தி இசையைப் பரப்பியது போல வட நாட்டில் பக்தி இசையைப் பரப்பி வருபவர் 25 வயதே நிரம்பிய மைதிலி தாகூர் ஆவார் . அவர் அலிநகர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார் ; இது இந்துக்களை மட்டுமின்றி இளம் வாக்காளர்களை இழுக்கும் தந்திரம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு அக்டோபர் மாதம் 26 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags – World Hindu News, 19-10-2025, Gnanamayam, Broadcast, Vaishnavi Anand
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது உத்தராகண்ட் மாநிலத்தில் டெக்ரி கார்வால் மாவட்டத்தில் அமைந்துள்ள தேவப்ரயாகை என்னும் திருத்தலமாகும் ரிஷிகேசத்திலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் இமயமலையில் 2723 அடி உயரத்தில் இது அமைந்துள்ளது.
108 வைணவ திவ்யதேச தலங்களில் ஒன்றாக அமையும் இது பல புராணச் சிறப்புகளைக் கொண்டதாகும்.
இமயமலையில் உற்பத்தியாகும் அலக்நந்தா நதியும் , பாகீரதி நதியும் இந்த தலத்தில் ஒன்றாகக் கூடி கங்கா நதி என்ற பெயரை அடைகிறது.
இந்தத் தலம் பஞ்ச பிரயாகைகளில் ஒன்றாகும்.
இங்குள்ள ரகுநாதர் கோவில் ஆதி சங்கரரால் அமைக்கப்பட்ட ஒன்று என்றும் கார்வால் அரசினரால் பின்னர் விரிவாக்கப்பட்டது என்றும் வரலாறு கூறுகிறது.
மூலவர் : நீலமேகப் பெருமாள். (புருஷோத்தமன்) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
தாயார் : புண்டரீகவல்லி
தீர்த்தம் : மங்கள தீர்த்தம், கங்கை நதி ப்ரயாகை
விமானம் : மங்கள விமானம்
காட்சி கண்டவர்கள் : பாரத்வாஜ முனிவர், பிரம்மா உள்ளிட்ட பலர்
கங்கையும் யமுனா நதியும் கூடுகின்ற இடமே ப்ரயாகை ஆகும். மிக ரகசியமான தீர்த்தம் இது. விதிப்படி இங்கு வந்து கர்மாக்களைச் செய்தால் முற்பிறவியில் எப்படி எங்கு இருந்தோம் என்ற ஞானத்தை இந்தத் தலம் நமக்குத் தரும் என்று கூர்ம புராணம் கூறுகிறது.
இந்த இடத்தில் விதிப்படி தூய்மையான மனதுடன் யாகம் செய்பவர்கள் மோக்ஷம் அடைவர் என்றும் இங்கு மரணம் அடைபவர்கள் மோக்ஷத்தை அடைகின்றனர் என்றும் ரிக் வேதம் கூறுகிறது.
தேவேந்திரன் ப்ரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம் பிரளய காலத்திலும் அழியாது இருக்கும். இதன் இலையில் தான் பெருமாள் குழந்தையாக பள்ளி கொள்வார் என்று மாத்ஸ்ய புராணம் விவரிக்கிறது.
பெரியாழ்வார் திருமொழியில் வழங்கியுள்ள மங்களாசாஸனப் பாடலின் அர்த்தம் அற்புதமானது.
விஷ்ணு என்ற மூன்று எழுத்தினை, லக்ஷ்மி என்ற மூன்று எழுத்து அவர்கள் நித்ய வாசம் செய்யும் பரம் என்ற மூன்று எழுத்தைக் குறிக்கும்.
அதை அடைவதே தமக்கு உபாயம் என்ற மூன்று எழுத்தினால் அதுவே ஜீவாத்மாவின் கடன் என்று எண்ணி, முக்தி என்னும் மூன்று எழுத்தை ஏற்றுக் கொண்டிருப்பவர்களிடம் இரக்கம் கொண்டுள்ள புருஷோத்தமன்,
வாமன அவதாரம் கொண்டு ஓரடியால் இவ்வுலகை அளத்து, பின்னர் இன்னும் ஒரு அடியால் விண்ணை அளந்து,, ஓரடியால் பாதாளம் நிமிர மூன்று அடியாக நிமிர்த்தி, இந்த மூன்று உலகிலும் தோன்றி, பரம வியூக, விபவம் ஆகிய மூன்றினில் நின்று, அமர்ந்து, கிடந்து என்று மூன்று உருவாக ஆகியுள்ளான்.
அவன் அழகான பொழில் சூழ்ந்த கங்கைக் கரை மேல் அமைந்துள்ள கண்டமென்னும் கடிநகரில் எழுந்தருளியுள்ளான்.
இதுவே இந்தப் பாடலின் அர்த்தம்.
திருக்கண்டம் கடிநகர் என்ற இந்த நகரில் பிரம்மா சிறந்த யாகத்தைத் துவங்கியதால் இது தேவப்ரயாகை என்ற பெயரைப் பெற்றது.
இங்கு கிழக்கே உள்ள பிரதிஷ்டானம் என்ற இடத்தில் தீர்த்தக் கிணறு அமைந்துள்ளது. வடக்கே வாசுகி இருக்க, ,மேற்கே காம்ப்ளாஸ் என்னும் இடத்தில் சர்ப்பங்கள் உள்ளன. தெற்கு திசையில் பஹூ மூலம் என்ற பகுதி உள்ளது.
ராவணனை வதம் செய்த தோஷம் நீங்க இங்கு ராமர் தவம் செய்ததாக கூறப்படுகிறது.
பாண்டவர்கள் தங்களது சகோதரர்களான கௌரவர்களை யுத்தத்தில் கொன்றதனால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க இங்கு நீராடுமாறு மார்க்கண்டேயர் கூற அவர்களும் அவ்விதமே இங்கு வந்து நீராடி பாவத்தைப் போக்கிக் கொண்டனர்.
இங்கு யாகம் செய்ததால் பிரம்மாவின் படைக்கும் சக்தி அதிகமானது.
பரத்வாஜ மஹரிஷி இங்கு யாகம் செய்ததால் தான் சப்த ரிஷிகளுள் ஒருவராக ஆனார்.
சுவேதகேது என்னும் மன்னன் தானத்தில் சிறந்தவனாக இருந்தாலும் கூட அன்னதானம் மட்டும் செய்யவில்லை. அவன் இறந்த பின் மேலுலகம் சென்ற போது அவனை பசி வாட்ட அவனிடம் அகத்தியர், “ப்ரயாகையில் அன்ன தானம் செய்தால் உன் பசி நீங்கும்” என்று கூறினார். சுவேதகேது தன் புண்ணீய பலன்களைத் திரட்டி கணையாழியாக அகத்தியரிடம் தந்தான். அவர் தனது சீடர்களிடம் அதை விற்று அன்னதானம் செய்யப் பணித்தார். அவர்களும் அப்படியே செய்தனர். உடனே சுவேதகேதுவின் பசி நீங்கியது. அவன் மோக்ஷம் பெற்றான்.
இந்தத் தலத்தில் ஆஞ்சநேயர், கால பைரவர். மகாதேவர், பத்ரிநாதர் ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன.
பிரம்மா, பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் ஶ்ரீ ராமர் இங்கு தவம் இயற்றியுள்ளார்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நீலமேகப் பெருமாளும் புண்டரீகவல்லித் தாயாரும்
அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1-8-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை!
உலகின் அதிசய இடங்கள்!
மடகாஸ்கர் தீவு: அபூர்வ மிருகங்களைக் கொண்ட உயிருள்ள மியூஸியம்!
ச. நாகராஜன்
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,104
Date uploaded in London – – 20 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இந்தியப் பெருங்கடலின் தென்மேற்கு மூலையில், மொஸாம்பிக் கடற்கரையிலிருந்து 800 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மடகாஸ்கர் தீவு.
உலகில், கிரீன்லாந்து, போமியா, நியூ கினியா ஆகிய தீவுகளுக்குப் பிறகு நான்காவது பெரிய தீவாக அமைந்துள்ளது இது.
976 மைல் நீளமும் 355 மைல் அகலமும் கொண்ட இந்தத் தீவை போர்த்துக்கீசிய கடற்பகுதி ஆய்வாளரான டியோகோ டயஸ் பார்த்தார்; வியந்தார்! இதை உயிருள்ள மியூஸியம் என்று வர்ணித்தார்.
10000 அடி உயரமுள்ள மலைகளும் அழகிய மழைக்காடுகளும் இங்கு உள்ளன. இதன் தெற்குப் பக்கமோ இதற்கு நேர் எதிர்மாறாக அழகிய நிலப்பரப்புடன் காட்சி அளிக்கிறது.
அரை பாலைவனமாக உள்ள இந்தப் பகுதியை லேண்ட் ஆஃப் தர்ஸ்ட் (LAND OF THIRST) என்று பெயரிட்டுள்ளனர்.
இங்கு ஜெரோபைட்ஸ் (XEROPHYTES) என்ற ஒரு அதிசய தாவர வகை இருக்கிறது. இதில் உள்ள பஞ்சு போன்ற கனமான பகுதிகள் தண்ணீரை நன்றாக உறிஞ்சி உள்ளே வைத்துக் கொள்கிறது. கடுமையான நீர்ப் பஞ்சம் ஏற்படும் போது இந்தத் தாவரம் நீரைக் கொடுத்து உதவுகிறது.
இந்த ஜெரோபைட்ஸ் காடுகள் டிடியீரியா (DIDIEREA)என்று அழைக்கப்படுகிறது. 33 அடி உயரமுள்ள தண்டு போன்ற ஒரு தாவர வகையில் சுற்றிலும் கூர்மையான முள்கள் உள்ளன. முள்களுக்கு இடையே உள்ள இலைகள் ஈரப்பதத்தை ஈர்த்து வைத்துக் கொள்கின்றன.
மடகாஸ்கரில் உள்ள 90 சதவிகித விலங்குகளும் தாவர வகைகளும் தனித்தன்மை வாய்ந்தவை. ஆறு கோடி வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து உடைபட்டுத் தனித் தீவாக மடகாஸ்கர் ஆனது. ஆகவே இங்குள்ள விலங்குகளையும் சரி, தாவர வகைகளையும் சரி யாரும் கண்டுகொள்ளவில்லை; தொந்தரவும் செய்யவில்லை.
2000 வருடங்களுக்கு முன்பாக எப்போது மனிதன் இங்கு காலடி எடுத்து வைத்தானோ அப்போது தான் நிலைமை தலைகீழாக மாறியது.
பார்க்கவே அழகாக இருக்கும் குரங்குகளும் இங்கு மட்டுமே இருக்கும் சில தனித்தன்மை கொண்ட மிருகங்களும் சற்று பிரச்சினைக்குள்ளாயின.
46 வகையான மலகாசி பறவைகளும் பச்சோந்தி வகைகளும் 148 வகையான தவளை இனங்களும் இங்கு உள்ளன.
மனித நடமாட்டம் இவைகளுக்குப் பயத்தைத் தந்தது. உலகின் மிகப் பெரிய பறவையான எலிபண்ட் பேர்ட் (ELEPHANT BIRD) 10 அடி உயரமுள்ளது. அதன் எடை மட்டும் 45 கிலோ. இதன் முட்டையின் எடை 9 கிலோ. இதனால் வேகமாக ஓட முடியாது. சைவ உணவுப் பறவை இது. எவ்வளவு எண்ணிக்கையில் இது இங்கு இருந்ததோ யாருக்கும் தெரியாது. இப்போது ஒன்று கூட இல்லை.
இந்தோனேஷியாவிலிருந்தும் மலாசியாவிலிருந்தும் வந்து இங்கு குடியேறிய மக்கள் மரங்களை வெட்டித் தீர்த்தனர். விவசாயம் செய்ய ஆரம்பித்தனர்.
லெமுர் (LEMUR) வகையில் மிகச் சிறியதான ஐ-ஐ (Aye-Aye) பதினேழரை அங்குல நீளம் கொண்டது. அதன் வாலோ 24 அங்குலம் இருக்கும். மரத்தில் ஒளிந்து கொண்டு வாழும் இதுவும் எண்ணிக்கையில் குறைந்து கொண்டே வருகிறது.இன்னும் சற்றுகாலத்தில் அருகி இருக்கவே இருக்காது!
1985 வாக்கில் மூன்றுலட்சத்து எழுபத்தைந்தாயிரம் ஏக்கர் நிலம் அழிக்கப்பட்டது. இதே போக்கு நீடித்தால் இன்னும் சிறிது காலத்தில் மடகாஸ்கரில் மழைக்காடுகளே இருக்காது என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
இயற்கை தந்துள்ள ஒரே உயிருள்ள மியூஸியம் நிலைத்து நிற்குமா? காலம் தான் பதில் சொல்லும்!
Maa Annapurna idol adorned in gold at Kashi Vishwanath Temple complex
Story by HT Correspondent, VARANASI
• 6h •
The Silver coated idol of Goddess Maa Annapurna, housed in a temple located in Ishana Kona (the north-east corner ) of the Shri Kashi Vishwanath Temple premises, has been coated with gold, the temple administration said in a statement on Saturday.
A new chapter in the splendour and grandeur of the ancient idol began in 2025, when silver plated stone idol and the temple it resides in were adorned with gold from top to base, according to the Shri Kashi Vishwanath Temple administration.
The distribution of a symbolic “treasure trove” (Kazana) to devotees from the treasury of the Maa Annapurna Temple began on Dhanteras (October 18) and will continue until October 22, the day of Annakut. The prasad, given as part of this tradition, consists of a coin and puffed rice, and holds special significance for devotees who visit the temple and seek the blessings of the Goddess.
The original idol of Goddess Maa Annanpurna was reinstalled in the Ishan Kon of the Kashi Vishwanath Temple in 2021, following traditional rituals. The chief minister of Uttar Pradesh, Yogi Adityanath, presided over the reinstallation ceremony. Alongside the original golden idol of Maa Annapurna, a silver-plated stone idol was also installed in the temple. This Silver plated idol of Maa Annapurna has now been coated with gold.
The original idol was stolen during the colonial period by idol smugglers and remained preserved in a museum in Canada for approximately 108 years. Its identity was confirmed through the joint efforts of Indian and Canadian universities. Following diplomatic and cultural efforts spearheaded by Prime Minister Narendra Modi, the idol was repatriated to India in November 2021 and reinstated in the temple.
–subham—
Tags- Kasi, Varanasi, Golden , Annapurani, Diwali Darshan,Annakut, Kazana
O Partha, there is certainly no ruin for him here or hereafter. For no one engaged in good meets with a deplorable end, my friend!
Another translation
The Supreme Lord said: O Partha, one who engages on the spiritual path does not meet with destruction either in this world or the world to come. My dear friend, for never does anyone who does good tread the path of woe. 6-40
***
149
Egyptian Barque
No Sangam Tamil poet except MM described Sun as a boat in the Sky. This is an Egyptian description. The supreme God in Egypt was Ra, the Sun God. He travels on a boat in the sky!
SUN BOAT IN THE SKY
வானத்தில் படகில் சூரியன்
அகநானூறு பாடல்: 101
அம்ம வாழி, தோழி! ‘இம்மை
நன்றுசெய்மருங்கில்தீதுஇல்’ என்னும்
தொன்றுபடுபழமொழி இன்றுபொய்த் தன்றுகொல்?-
தகர்மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த
சுவல்மாய் பித்தைச்செங்கண்மழவர்
வாய்ப்பகைகடியும்மண்ணொடுகடுந்திறல்
தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி,
நுரைதெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து,
அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக்,
கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,
இனம்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு,
அகல்இருவிசும்பிற்குஓடம்போலப்,
பகலிடைநின்றபல்கதிர்ஞாயிற்று
உருப்பு அவிர்பு ஊரிய சுழன்றுவரு கோடைப்
புன்கான் முருங்கை ஊழ்கழி பன்மலர்,
தண்கார் ஆலியின், தாவன உதிரும்,
பனிபடு பன்மலை இறந்தோர்க்கு,
முனிதகு பண்புயாம் செய்தன்றோ இலமே!
****
அகல்இருவிசும்பிற்குஓடம்போல
பகலிடைநின்றபல்கதிர்ஞாயிற்று
Sun that us travelling in the sky like a boat iscorching ,says MM
150
The Tamil roobers in the desrt are called Mazavars. MM says that their hair locj is like the horn of a sheep. And they stuff their mouth with sail from the ant hill. In places like Sankarankoil in Tamil Nadu the soil from the anthill is sued as medicine. Anthills are called Snakehills in Tamil.
MM in most of his verses sing about Mazavars staling cows from enemies and sharing them with their companions. Recovering cows is found in many hymns of the Rig Veda as well. It is used a s a symbol to convey many messages.
Rig Veda calls Sun as a boat or ship in the sky.
Moreover Egyptian name Ra is like Sanskrit rayi. English (sun) RAY is also derived from Sanskrit
xxxx
RV.1-46-7:- Hymns are sea; Come and lead and take us like a ship. This addressed to Asvini Devas.
Here is description of Sun God Ra in the Book of Death in Egypt; Hindus say that Raku/Ketu devour sun like snakes (Eclipses)
Ra’s Daily Journey Across the Sky: Battles and Blessings
As Ra rises, he shines brightly across the sky, accompanied by the Ennead (group of nine gods). When he emerges from the sacred place, the eastern horizon trembles at the sound of Nut’s voice, sanctifying Ra’s paths. He moves in his sacred boat, enjoying the north wind while continuing his daily cycle. The great deities tremble at his voice as he commands the cosmos.
***
Nilgris TAHR
Thakar in the above verse is sheep. In Nilgris the mountain goats are called Tahr. During Sangam days all sheep and goats must have been called Tahr.
-to b continued…………………….
Tags- Tahr, Ra, Sun God, Egypt, Bhagavad Gita Quote , Egyptian God Ra, in Akananuru, Ancient Tamil Encyclopaedia- Part 25; One Thousand Interesting Facts! -Part 25
‘நான் முதலில் பாரத நாட்டின் பிரஜை, அதற்கு பிறகு தான் துறவி’: தேசபக்தியை முன்னிறுத்திய அபிநவ வித்யாதீர்த்தர்
நமது சிறப்பு நிருபர் DINAMALAR
: அக் 19, 2025 01:08 AM
நம் தாய் திருநாட்டில், எண்ணற்ற துறவியரும் மனதால் உயர்ந்த மகான்களும் வாழ்ந்து, வழிவழியாக நாம் தர்மத்தை கடைப்பிடிக்க காரணமாக இருந்தனர். அப்படிப்பட்ட துறவியரில் மிகவும் முக்கியமானவர் ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர். என்றென்றும் மக்களுக்கு வழிகாட்டுவதற்காக அவர் நான்கு பீடங்களை உருவாக்கினார். அவற்றில், தென் பாரத மக்களுக்காக, சிருங்கேரி சாரதா பீடத்தை தோற்றுவித்தார். சாரதா பீடத்தின் 35வது பீடாதிபதியாக, 1954 முதல் 1989 வரை அருள்பாலித்தவர், ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள். தீபாவளி திருநாளன்று பிறந்த அவருடைய 108வது ஜெயந்தி விழா, நாளை சிருங்கேரியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பொன்னான தருணத்தில், தேசபக்தியின் உன்னதமான உதாரணமான அவரைப்பற்றி தெரிந்து கொள்வோம்.
ஜீவன் முக்தி கடந்த 1917ல் பெங்களூரில், வெங்கடலக்ஷ்மி அம்மாள் – -ராமா ஷாஸ்திரி தம்பதிக்கு பிறந்தவர் ஸ்ரீநிவாசன். அவருக்கு, சிருங்கேரியில் உப நயனம் செய்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து, அங்கேயே தங்கி படிக்க விருப்பம் தெரிவித்த ஸ்ரீநிவாசனின் கோரிக்கையை, அப்போது பீடாதிபதியாக அருள்பாலித்த ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாசுவாமிகள் ஏற்றுக்கொண்டார்.
பாடங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற ஸ்ரீநிவாசன், தன் 13 வயதிலேயே, சிருங்கேரி புண்ய தலத்தில், துறவறம் ஏற்றார்.
துறவறம் பெற்ற உடனேயே, யோகம் பயில ஆரம்பித்த அவர், அஷ்டாங்க யோகத்தின்படி நிலைகளை வேகமாக கடந்து, அதன் உச்ச நிலையான நிர்விகல்ப ஸமாதியில் நிலைத்து, தமது 18 வயதுக்கு முன்னரே ஜீவன் முக்தரானார்.
பின்னர், தமது குருவின் வழிக்காட்டுதல்படி மீமாம்சம், தர்க்கம், வேதாந்தம் உள்ளிட்ட சாஸ்திரங்களை கற்று பாண்டித்தியம் அடைந்தார்.
தர்ம பிரசாரம் சுதந்திர போராட்டம் வலுப்பெற்றுக் கொண்டிருந்த அதே வேளையில், ஆங்கிலேயரின் கொடுங்கோல் ஆட்சியில் நம் நாட்டின் கலாசாரத்தை அடியோடு அழிப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பொருட்டு, கல்வித் துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி, மக்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தினர். குறிப்பாக, ஸமஸ்கிருதத்தின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவும், அம்மொழியை மக்கள் கைவிடுவதற்காகவும் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதன் விளைவாக, தர்ம ரீதியாகவும் பெறும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆங்கிலேயரால் சுரண்டி துாக்கியெறிந்த வெற்று பாத்திரமாக நம் தாய் நாடு மாறியிருந்தது. சுதந்திரத்திற்கு பின், 1954ல் சிருங்கேரி சாரதா பீடத்தின் 35வது பீடாதிபதியாக ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் பொறுப்பேற்றார்.
அப்போது, கலாசார ரீதியாகவும் தர்ம ரீதியாகவும் சுரண்டப்பட்டு இருந்த தாய் நாட்டில் மீண்டும் தர்மத்தை நிலைநிறுத்த ஸங்கல்பம் செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
ஆதிசங்கரர் போலவே பாரதம் முழுதும் மூன்று முறை யாத்திரை மேற்கொண்டு, மக்களிடையே தர்ம பிரசாரம் செய்தார். தமது முதல் விஜய யாத்திரையை, தென் மாநிலங்களில், தொடர்ந்து ஆறு ஆண்டுகள் மேற்கொண்டார்.
அயராது, தன் நலம் கருதாது கிராமம் கிராமமாக சென்று தர்ம பிரசாரம் செய்த தோடு, நலிந்த வேத பாடசாலைகளை மீட்டெடுத்து, புதிய பாடசாலைகளையும் உருவாக்கினார்.
அவரது காலத்தில், சரியான போக்குவரத்து வசதி இல்லாததால், சிருங்கேரியை அணுகுவது மிகவும் கடினமாக இருந்தது. பாரதம் முழுதும் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவில் சில கிளை மடங்கள் மட்டுமே இருந்தன. அதனால், பாரதமெங்கும் மக்கள் பயன்பெறும் வகையில், பல புதிய கிளை மடங்களை உருவாக்கினார்.
குறிப்பாக, சென்னையில் மட்டுமே நான்கு கிளை மடங்களும்; கோயம்புத்துார், மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஆலயத் தோடு கூடிய கிளை மடங்களும் ஏற்படுத்தினார். இவை, தர்மம் மற்றும் பாரதத்தின் பண்பாட்டை நிலைநிறுத்த இன்றும் பணியாற்றி வருகின்றன.
தமது முதல் விஜய யாத்திரை முடிந்த இரண்டு ஆண்டுகளிலேயே, இரண்டாவது விஜய யாத்திரையை மேற்கொண்டார். வட மாநிலம், தென் மாநிலம் என, முழு பாரதத்திலும் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து தர்ம பிரசாரம் செய்தார்.
அந்த யாத்திரையின் போது, 1967ல், அண்டை நாடான நேபாள மன்னரின் அழைப்பின் பேரில் அந்நாட்டில் தங்கி தர்ம பிரசாரம் செய்தார்.
ஜகத்குரு ஆதிசங்கரருக்கு பின், நேபாளத்தில் தர்ம பிரசாரம் செய்த முதல் ஆம்னாய பீடாதிபதி ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸமஸ்கிருத மொழியை மீண்டும் செழிக்கச் செய்ய, ‘சுரசரஸ்வதி சபா’ என்ற அமைப்பை நிறுவினார். அதில், அனைவரும் படிக்க ஏதுவாக, அஞ்சல் வழியில் சமஸ்கிருத கல்வி திட்டம் அறிமுகமானது. இன்றைய அஞ்சல்வழி கல்விக்கு அது முன்னோடி!
தர்ம கல்விக்காக, ‘சங்கர கிருபா’ என்ற மாத இதழை ஆரம்பித்தார். இந்த இதழ், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவருகிறது. பின்னர், ‘தத்வாலோகா’ என்ற ஆங்கில இதழையும் துவக்கினார்.
தர்ம பிரசாரத்திற்கு இவ்வாறு பாடுபட்ட ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள், ஆதிசங்கரர் நிறுவிய பீடங்களை வலுப்படுத்தவும் பணியாற்றினார்.
ஆதிசங்கரருக்கு பின், அவர் உருவாக்கிய நான்கு பீடங்களின் பீடாதிபதிகள், முதல் முறையாக சந்திக்கும், ‘சதுராம்னாய சம்மேளனம்’ என்ற நிகழ்வை ஏற்பாடு செய்தார்.
தேசிய ஒருமைப்பாடு, பண்பாடு மற்றும் நம் கலாசாரத்தை தக்கவைக்கும் நோக்கத்தில் நடைபெற்ற இந்த வைபவம் சிங்கேரியில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி புண்ணிய தினத்தில், 1979 மே மாதம், முதல் நாளில் நடைபெற்றது.
இந்த மாநாட்டை காண பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும், முக்கிய பிரமுகர்களும் கூடியிருந்தனர்.
தேசபக்தர் தேசப்பணியே தெய்வீக பணி என கருதி, வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள். ‘யாராவது உன்னிடம், நீ யார் என்று கேட்டால், முதலில் நான் ஒரு இந்தியன் என்ற நினைவுதான் வர வேண்டும், பின்னரே மற்ற விஷயங்கள் நினைவிற்கு வர வேண்டும்’ என்று எப்போதும் அறிவுறுத்துவார்.
அப்படியே நடந்தும் கொள்வார் என்பதற்கு, ஜாகீர் ஒழிப்பு சட்டம் ஓர் நல்ல எடுத்துக்காட்டு.
சிருங்கேரி அமைந்துள்ள கர் நாடகா மாநிலத்தில், இங்கிருந்த ஜமீன்தார் முறையை போல் ஜாகீர் முறை இருந்து வந்தது. அதை ஒழிப்பதற்காக, கர்நாடகா நில சீர்திருத்த சட்டம் 1961ல் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, மடங்கள் மற்றும் கோவில்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜாகீர் நிலங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதற்கு, மாநிலம் எங்கும் எதிர்ப்பு நிலவியது. பலர், நிலங்களை அரசிடம் ஒப்படைக்க மறுத்தனர்.
ஜகத்குருவிடம் இது சம்பந்தமாக பேசி, மடத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வைக்க வேண்டும் என்பதற்காக, அப்போதைய வருவாய் துறை அமைச்சர் கடிலால் மஞ்சப்பா, சிருங்கேரிக்கு வந்தார்.
ஜகத்குருவிடம் தயங்கி தயங்கி பேச்சை ஆரம்பித்தார். அப்போது, ஜகத்குரு, ‘நாம் அனைவரும் அரசிற்கு கட்டுப்பட்டவர்கள். நான் முதலில் பாரத நாட்டின் பிரஜை, அதற்கு பிறகுதான் துறவி மற்றும் பீடாதிபதி என்று எடுத்துரைத்து, நிலத்தை வைத்துக்கொண்டு நான் நாலு பேருக்கு நல்லது செய்வேன். அரசும் அதையேதான் செய்யப் போகிறது.
‘நல்லதை யார் செய்தால் என்ன? அதனால் நிலத்தை தர நான் தயாராக இருக்கிறேன். எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்தார்.
கடும் எதிர்ப்பை எதிர்பார்த்த அமைச்சர் மஞ்சப்பாவிற்கு, ஜகத்குருவின் பதில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பின்னாளில், கர்நாடக முதல்வராக மஞ்சப்பா சிலகாலம் பொறுப்பில் இருந்தார்.
ஒருமுறை ஜகத்குருவை தரிசித்த அனுபவத்தால் ஈர்க்கப்பட்ட மஞ்சப்பா, பதவியில் இருக்கும் போதும், அதற்கு பிறகும் ஜகத்குருவை நாடி வருவார்.
இதைப்போல பல ஜனாதிபதிகள், பிரதமர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் ஜகத்குருவின் வழிகாட்டுதலை பெற்று பயனடைந்தனர்.
மைசூரு ராஜ்யத்தின் மன்னராக இருந்த ஜெய சாமராஜ உடையார், பின்னாளில் தமிழகத்தின் கவர்னராகவும் இருந்தார். அவர், ஜகத்குருவிற்கு கடிதங்கள் வாயிலாக தமிழகத்தின் அரசியல் சூழல் பற்றி தெரிவித்து, வழிகாட்டுதல் கோரினார்.
இன்றும் அந்த கடிதங்கள், சிருங்கேரியில் ஆவணப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதேப்போல் பல தேச தலைவர்களும், ஜகத்குருவின் வழிகாட்டுதலைப் பெற்று வந்தனர்.
இப்படி தன் தவத்தாலும், ஞானத்தாலும், பாண்டித்தியத்தாலும் சிறந்து அருள்பாலித்த ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளை, நாளை அவருடைய ஜெயந்தி நாளன்று நினைவுகூர்ந்து, அவர் வாழ்வில் இருந்து பயன்பெற, அவரைப் பற்றி மேலும் படித்து அறிந்து கொள்வோம்.
ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளை பற்றிய புத்தகங்களை, சென்னை ஸ்ரீ வித்யாதீர்த்தா பவுண்டேஷன் வெளியிட்டுள்ளது.
– இரா.கிருஷ்ணன் –
—subham—
Tags- Dinamalar, Sringeri Acharya, Sri Abinava Teertha Bharati Swamigal