பிறரிடமும் தன்னைப் போன்ற குணங்கள் இருப்பதைக் கண்டு மகிழ்பவன் அரிது (9824)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9824

Date uploaded in London – 7 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டாக்டர் டி.எஸ்.கௌரிபதி திரிபாதி அவர்கள் தேர்வு செய்து வழங்கிய ஐந்து சுபாஷிதங்கள் கட்டுரை எண் 9774 (வெளியான தேதி: 25-6-2021) தரப்பட்டது. அடுத்த ஐந்து சுபாஷிதங்கள் இந்தக் கட்டுரையில் காணலாம்.

பிறரிடமும் தன்னைப் போன்ற குணங்கள் இருப்பதைக் கண்டு மகிழ்பவன் அரிதே தான்!

ச.நாகராஜன்

சம்ஸ்கிருத அறிஞரான டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி (Dr.T.S. Gouripathi Sastri)   அவர்களிடம் ஆந்திரா பல்கலைக்கழகம் நல்ல சில சுபாஷிதங்களைத் தேர்ந்தெடுக்குமாறு (1978இல்) பணிக்க, அவர் 36 சுபாஷிதங்களைத் தொகுத்துத் தந்தார். அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் அவரே செய்துள்ளார். அவற்றில் முதல் பத்து சுபாஷிதங்களை சென்ற கட்டுரைகளில் கண்டோம். அடுத்த ஐந்து சுபாஷிதங்கள் இதோ:-

ப்ரக்ஞா விவேகம் லபதே பின்னைராகமதர்ஷனை: |

கியத்தா ஷக்யமுன்னேதும் ஸ்வதர்கமனுதாவத: ||

அறிவு வெவ்வேறு விதமான தர்சனங்களைக் கற்று விவேகத்தை அடைகிறது. தனது சொந்த தர்க்கத்தைப் பற்றி கொண்டே இருந்து ஒருவன் எவ்வளவு தூரம் தான் முன்னேற முடியும்?

Knowledge attains discrimination with the study of diverse disciplines. How far can one proceed on in thinking by clinging to one’s own logic?

*

யத்னேனானுமிதோப்யர்த: குஷலைரநுமாத்ருபி: |

அபியுக்ததரைரன்யைரன்யதைவோபபாத்யதே ||

மிகப்பெரிய தர்க்கவாதிகளின் கூரிய முயற்சியால் அடையப்பட்ட முடிவுகள் கூட மற்ற தர்க்கங்களைக் கொண்டுள்ள இன்னும் சிறந்த அறிஞர்களால் ஒதுக்கி வைக்கப்படுகிறது.

Even the conclusion drawn by great (intellectual) effort by shrewd logicians is set aside by better thinkers of other disciplines.

*

நாகுணீ  குணினம் வேத்தி குணீ  குணிஷு மத்ஸரி |

குணீ  ச குணராகீ ச விரல: ஸரளோ ஜன: ||

நல்ல குணங்களைக் கொண்ட ஒருவனை குணமே அற்ற ஒருவனால் புரிந்து கொள்ள முடியாது. குணங்களைக் கொண்டுள்ள ஒருவன் இன்னொரு அதே போன்ற குணங்களைக் கொண்டுள்ளவனைப் பார்த்து பொறாமைப் படுகிறான்.  எவன் ஒருவன் அரும் குணங்களைத் தான் கொண்டுள்ள போதும் மற்றவர்களிடம் அதே குணங்கள் இருப்பதைப் பார்த்து (மகிழ்கிறானோ) விரும்புகிறானோ அப்படிப்பட்டவனைப் பார்ப்பது அரிது தான்!

The man destitute of merits cannot (even) understand a person endowed with them. The man endowed with merits is jealous of the persons endowed with merits. That person endowed with merits and straight (frank) and likes them (in others) is indeed rare!

*

உபகாரிஷு ய சாது: சாதுத்வே தஸ்ய கோ குண: |

உபகாரிஷு ய சாது: ஸ சாது சாத்பிருச்யதே ||

தனக்கு உதவி செய்யும் ஒருவனிடம் பண்புடன் நடந்து கொள்ளும் ஒருவனிடம் என்ன பெருமை இருக்கிறது? ஒருவன் தன்னிடம் மோசமாக நடந்து கொண்ட போதும் எவன் ஒருவன் அவனிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறானோ அவனே உண்மையில் சாது (பெருமைப்படத்தக்க பிரபு) என்று பெரியோர் கூறுகின்றனர்.

What is great about the decency of a man who is decent towards those who help him? The noble people call such a man as (really) noble who is well disposed towards those who have wronged him.

*

தோஷானபி குணீ கர்தும்  தோஷீகர்தும் குணானபி |

ஷக்தோ வாதீ ந தத்தத்யம் தோஷா தோஷா குணா குணா: ||

 திறன் வாய்ந்த, எப்போதும் குதர்க்கம் செய்யும் ஒருவன் நல்லனவற்றை தோஷம் (குறைகள்)  உள்ளவை என்றும் குறை உள்ளவற்றை நல்லவை என்றும் கூறும் திறன் கொண்டவன். ஆனால் அது சரியில்லை;

எனெனில் நல்லது நல்லது தான்! குறை, குறை தான்.

An  (clever or crafty) argumentator is capable of showing demerits as merits and merits as demerits. But that is not right, ‘because’ demerits are demerits and merits are merits.

***

INDEX

ஸ்லோக ஆரம்பம் : ப்ரக்ஞா விவேகம், யத்னேனானுமிதோப்யர்த, நாகுணீ, உபகாரிஷு, தோஷானபி

அறிவு, சொந்த லாஜிக்

குணம் கொண்டவனைப் பாராட்டல்

உண்மை பிரபு யார்?

தோஷம் தோஷமே, குணம் குணமே

tags-  சுபாஷிதங்கள்

ரிக் வேதத்தில் தமிழ்வேதம் திருக்குறள் – 2 (Post No.9823)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9823

Date uploaded in London –6 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கட்டுரையின்  இரண்டாவது பகுதி இது. முதல் பகுதி ஜூலை 2-ம் தேதி இங்கு வெளியானது

ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் முதல் 25 கவிதைகளில் காணப்பட்ட திருக்குறள் கருத்துக்களைக் கண்டோம். திருவள்ளுவ மாலை பாடிய பல கவிஞர்கள் திருக்குறளை தமிழ் வேதம், தமிழ் மறை என்று போற்றியதையும் நாம் அறிவோம்.

இதோ மேலும் சில ரிக் வேதத் துதிகளில் திருக்குறள் கருத்துக்கள் :-

 (மூன்று எண்களில் முதல் எண் ரிக் வேத மண்டலத்தையும், இரண்டாவது எண் துதியையும், மூன்றாவது எண் துதியிலுள்ள மந்திரத்தின் எண்ணையும் குறிக்கும்)

XXX

தந்தை, தாய், மகவு இவர்களிளிடையே உள்ள அன்பையும் பாசத்தையும் பல குறள்களில்  காண்கிறோம்.

மழலைச் சொல் என்பது குழல், யாழ் இனிமையை வீட மிகவும் இனிமையானது; குழந்தைகள் அளாவிய உணவு அமிர்தத்துக்கு இணையானது.; ஈன்ற பொழுது தாய் பெரிதும் உவப்பாள் ; அதைவிட அவன் சான்றோன் என்று கேட்கும்போது இன்னும் மகிழ்வாள்.; ஒரு மகனை சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை. அவன் நல்ல புலமை பெற்று பிரபல ம் ஆகும்போது இத்தைகைய மகனைப் பெற அவனது பெற்றோர்கள் என்ன நோன்பு அனுஷ்டித்தார்களோ ; ஆள் சக்கைப்போடு போடுகிறானே என்று பல குறள்களில் வள்ளுவர் பாடுவதைக் காண்கிறோம். இதே போல ரிக் வேதம் முழுதும் எங்களுக்கு நல்ல குழந்தைகள் பிறக்க வேண்டும், வீரர்கள் பிறக்க வேண்டும் என்று ரிஷி முனிவர்கள் பாடுகின்றனர்.

ஒரு எடுத்துக்காட்டு இதோ :-

RV 1-26-3

அக்கினியே! போற்றத் தகுந்த நீ எனக்குத் தந்தை போன்றவன்; நான் உனக்கு மகன் .நீ எனக்கு பந்து/ உறவினன்; நீ எனக்கு நண்பனுக்கு நண்பன் போன்றவன்.

ஒரே இரண்டு வரி மந்திரத்தில் கடவுளை தந்தை போன்றவன்; சொந்தக்காரன், நண்பன் என்றெல்லாம் அழைப்பது உறவு நெருக்கத்தையும் அவர்கள் மீதான ன்பையும் காட்டுகிறது.

RV 1-91-20

சபைக்குரியனும், தந்தைக்குப் புகழைத் தருபவனுமான புதல்வனை

சோமன்/சந்திரன் தருகிறான் – ரிக் வேதம்

ஒப்பிடுக :- இவன் தந்தை என்நோற்றான் கொல் – குறள்

குறள் 70

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்

[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]

பரிமேலழகர் உரை

தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி – கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது; இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் – தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ வென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல்

XXX

1-26 பாடியது ரிஷி சுனச்சேபன்

கருமிகள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதை  வள்ளுவர் ஆதரிக்கிறார். கையை முறுக்கி தாடையை நொறுக்கு; கரும்பு போல கசக்கினால்தான், கருமியிடமிருந்து காசு வரும் என்கிறார் வள்ளுவர்.

கன்னத்தில் அடி, கையை முறுக்கு, கரும்பு போல நசுக்கு

அதிகாரம் 108, கயவர்கள் பற்றியது. அதில் கஞ்சர்களையும் சேர்த்துத் திட்டுகிறார். கயவர்களின் கன்னத்தில் அடித்து ஆளை நொறுக்கு என்றும் சொல்வான் வள்ளுவன்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்

கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)

பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.

இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ் (1078)

பொருள்: சான்றோர்கள் சொன்ன மாத்திரத்திலேயே பிறர்க்கு உதவி செய்வர். கயவர்கள் மட்டும் கரும்பு போல் கொன்று பிழிந்தால்தான் பயன்படுவார்கள்.

இதோ ரிக் வேதக்கருத்து

RV 1-36-16

அக்கினியே உன்னுடைய எரிக்கும் சுவாலைகளால் தானம் அளிக்காத எல்லா பகைவர்களையும்  மண் பாண்டங்களைத் தடியால் அடிப்பது போல அடித்து நொறுக்கு என்கிறார்  கோரனின் புதல்வன் ரிஷி கண்வன் பாடுறார்.

RV 1-84–8

அவியளிக்காதவனை – கருமியை –  தன் காலால் காளானை மிதிப்பது போல எப்போது மிதிப்பான் ? எங்கள் துதிகளை இந்திரன் எப்போது கேட்பான்?

XXX

RV 1-90-9

அடி அளந்தான் என்று விஷ்ணுவின்  வாமன- த்ரிவிக்ரமாவதாரத்தை வள்ளுவர் போற்றுகிறார்.

‘ஓங்கி உகளந்த உத்தமன்’ என்று ஆண்டாளும் பிற ஆழ்வார்களும் விஷ்ணுவைப் பாடுகிறார்கள்.

விஷ்ணு மூன்றடியால் உலகை அளந்த விஷயம் ரிக் வேதத்தில் பல இடங்களில் வருகிறது.

கம்பீரமான கால டியுள்ள விஷ்ணு எங்களைக் காப்பாற்றுவானாகுக.- ரிக் வேதம் -RV 1-90-9

மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு (610)

“தன் அடியினால் உலகத்தை அளந்த இறைவன் தாவிய

நிலப்பரப்பு முழுவதையும், சோம்பல் இல்லாத மன்னன் ஒரு சேர அடைதல் கூடும்.”

xxxx

1-48-12

உஷா தேவியே, வானிலிருந்து எல்லா தேவர்களையும் சோமத்தைப்பருக அழைத்து வா..

முதல் பகுதியிலேயே கண்டடோம் – வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் – குறள் 50

XXX

முதல் நூறு  பாடல்களைக் கண்டோம் .

தொடரும் ……………………………….

tags – தமிழ்வேதம்-2, ரிக் வேதம் , தமிழ்மறை

பெண்கள் மீது காதல் கொண்ட பெண் கவிஞர் Lesbian சாஃப்போ (Post No.9822)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9822

Date uploaded in London –6 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லெஸ்பியன் Lesbian என்ற சொல்லைத் தந்த கிரேக்க பெண் சாஃப்போ Sappho.

2600 ஆண்டுகளுக்கு முன்னர் கிரீஸ் என்னும் கிரேக்க நாட்டில் ஒரு பெண் கவிஞர் இருந்தார். அவர் பெயர் சாஃப்போ Sappho. அவரைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. அவர் எழுதியதாகச் சொல்லப்படும் ஒன்பது கவிதை புஸ்தகங்களில் இன்று நமக்குக் கிடைத்திருப்பது சில துண்டுக் கவிதைகள்தான் . பெண்களே பெண்களுடன் உறவு கொண்டு வாழும் அணியை ஆங்கிலத்தில் லெஸ்பியன் LESBIAN என்பர். இதற்குக்  காரணம் லெஸ்போஸ் என்னும் தீவு ஆகும்; கிரேக்க நாட்டிலுள்ள அந்தத் தீவில்தான் சாஃப்போ Sappho பிறந்தார்.

ஐரோப்பிய இலக்கியத்தில் மிகவும் புகழ்பெற்ற பெண்மணி சாஃப்போ.

இவருக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வாழ்ந்த 30 ரிக் வேத பெண்மணிகள் புனிதவதிகள் ; அவர்கள் இயற்றிய அல்லது ‘கேட்ட’ (Sruti) கவிதைகள் நமக்கு இன்றும் கிடைக்கின்றன. சாப்போவுக்கு 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ‘வடவேங்கடம் முதல் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகில்’ சுமார் 20 தமிழ்ப் பெண்களும் பாடல்களை இயற்றி இலக்கியத்தில் அழியா இடம்பெற்றனர்.

சாஃப்போ, இவர்களிடமிருந்து வேறுபட்டவர்.

இவர் பற்றிய கட்டுக் கதைகள்தான் அதிகம். உண்மைச் செய்திகள் மிகக்குறைவு. இவர் லெஸ்போஸ் தீவில் பிறந்தவர்;திருமணம் ஆனவர், அவருடைய மகளின் பெயர் கிளையஸ் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

பிற்கால கிரேக்க எழுத்தாளர்கள் இவரது கவிதைகளை படித்து ரசித்து நமக்கு விட்டுச் சென்ற  செய்திகள் மூலம் மேல்விவரம் கிடைக்கிறது. அதே தீவில் வசித்த அல்கேயாஸ் ALCAEUS  என்பவரை இவர் மணந்து ஒரு மகளைப் பெற்றார் என்றும் சொல்லப்படுகிறது

பேயோன் PHAON என்ற படகோட்டி மீது இவர் காதல் கொண்டதாகவும் அதன் விளைவாக ஒரு மலை உச்சியிருந்து விழுந்து சாஃப்போ தற்கொலை செய்து கொண்டதாகவும் பிற்கால ரோமானியாக் கவிஞர் ஆவிட் OVID  எழுதிவைத்தகத்துள்ளார். ஆயினும் இவைகளை உறுதி செய்யும் வேறு தடயங்கள் கிடைக்கவில்லை.

சாஃப்போ எழுதிய கவிதைகள் எதுவும் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. துண்டு துண்டாகக் கிடைத்திருக்கின்றன. அவை அனைத்தும் குடும்பம் மற்றும் நண்பர்களைப் பற்றியது. தனக்குத் தோன்றும் உணர்ச்சிகளைக் கவிதையாகக் கொட்டித் தீர்த்த பெண் இவர். ஆகையால் அத்தகைய கவிதைகளை எழுதிய பெண்களின் வரிசையில் இவர் முதலிடம் பெறுகிறார். எளிமையான அழகிய நடை; உணர்ச்சிகளும் புலன் இன்ப உணர்ச்சி கொண்டவை.

பெண்களை நோக்கி சாஃப்போ  பாடியதாக பாடல்கள் தென்படுகின்றன. அவரைச் சுற்றி ஒரு தோழிகள் கூட்டம் இருந்ததும் அவர்கள் இவர் கவிதைகளைப் போற்றிப் புகழ்ந்தும் தெரிகிறது . அந்தத் தோழிமார் கூட்டத்துடன் சேர்ந்து கிரேக்க நாட்டு ரதியை, அதாவது அப்ரதித் APHRODITE தேவதையை வழிபடும் சடங்குகளைச் செய்ததாகவும் சொல்லப்படுகிறது..

இதையெல்லாம் ஆதாரமாகக் கொண்டு சாஃப்போ பெண்களுடன் ஓரினச் சேர்க்கை வாழ்வை அனுபவித்தவர் என்று பிற்காலத்து விமர்சகர்கள் செப்பியதுடன் இவ்வாறு வாழ்க்கை நடத்துவோர் லெஸ்பியன் தீவுப் பெண்களைப் போன்றார் என்றும் சொல்லத்  துவங்கினர். அதிலிருந்து பெண்களே பெண்களை காம நோக்கில் கண்டால்  அவர்களை லெஸ்பியன் என்ற சொல்லால் அழைக்கத்  தொடங்கினர்.

சாஃப்போ

பிறந்த ஆண்டு- கி.மு 610

இறந்த ஆண்டு – கி.மு.580

வாழ்ந்த ஆண்டுகள்- 30

கவிதை நூல்கள் —

ஒன்பது தொகுப்புகளாக அவை இருந்தன என்று கருதப்படுகிறது.

ஆனால் இப்போது நமக்குக் கிடைத்தவை முழுக் கவிதை அல்ல.

இடையிடையே வரும் வரிகள்தான். அவைகளும் எப்போது எழுதப் பட்டன என்ற குறிப்பு இல்லை.

2014-ம் ஆண்டில்கூட அவர் எழுதியதாகக் கருதப்படும் ஒரு கவிதையின் 5 பத்திகள் stanza கண்டு பிடிக்கப்பட்டன. இன்னும் சில தற்கால ஆசிரியர்கள் அவரது கவிதைகளுக்கு கண், காது, மூக்கு வைத்து அவரது துண்டுக் கவிதைகளை முழுக் கவிதை ஆக்கிவிட்டதாகச் சொல்லி முழுக் கவிதை நூல்களையும் வெளியிட்டுவருகின்றனர் .

–SUBHAM–

tags- பெண் கவிஞர், Lesbian, சாஃப்போ,லெஸ்பியன், ஓரினச் சேர்க்கை , Sappho

LONDON CALLING (HINDUS) 5-7-2021(Post N0.9821)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9821

Date uploaded in London –6 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

LONDON CALLING (HINDUS) 5-7-2021

5-7- 2021 MONDAY PROGRAMME AS BROADCAST

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -8 MTS

PRAYER – MRS ANNAPURANI PANCHANATHAN

TALK BY B KANNAN, DELHI, ON MAYURA SATAKAM- 15 MTS

ASHTAPATHI -21 BY LONDON SRI BALA SUBRAHMANYAN -6 mts

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT CHAITANYA- 15 MTS

ABHANGAM BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

SONG ON LORD MURUGAN BY DR A NARAYANAN, LONDON – 3 MTS

DR NARAYANAN KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -8

TOTAL TIME- APPR. 60 MINUTES

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

Tags-  broadcast572021

LONDON CALLING TAMILS 4-7-2021 (Post No.9820)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9820

Date uploaded in London –6 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your

LONDON CALLING TAMILS 4-7-2021

4-7-2021 SUNDAY PROGRAMME AS BROADCAST

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer –- by Mrs Ranjani Dasarathi, CHENNAI

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON Thirukkarugavur Garbha Rakshakaambikaa Temple– 8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND Mr Natarajan and Mrs Nirmala Natarajan of Amersham , Smt Sumathi Suresh, Sri Suresh, Smt Srilatha Sainath —  10 mts

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN,London

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL  by RANI SRINIVASAN

–25 MINUTES

***

TALK BY  SRI THIRUKOODAL MUKUNTHA RAJAN ON “ALVARKAL  SARITHTHIRAM” -15 MTS

DURATION-  Appr. 70 minutes 

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tag-  Broadcast472021

சைதன்ய மஹா ப்ரபு (Post No.9819-B)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9819-B

Date uploaded in London – 6 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 5-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!

ஸ்ரீ சைதன்ய மஹா ப்ரபு!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

முகலாய ஆட்சியாளரால் பாரத தேசம் குறிப்பாக வங்காளம் இருளில் மூழ்கி இறைபக்தி ஒடுக்கப்பட்டிருந்த சமயம் ஸ்ரீ கிருஷ்ணரது நாமத்தைப் பரப்ப அவதரித்தார் ஸ்ரீ சைதன்ய மஹா ப்ரபு! 1486ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி, பல்குனி பௌர்ணமியில் அவர் வங்காளத்தில் நவத்வீபத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தையார் ஜகந்நாதர் ஒரு ஏழை பிராமணர். தாயார் சசி தேவி ஹிந்துப் பெண்மணிக்கு ஒரு இலக்கணமாகத் திகழ்ந்தவர். அவரது தாயாரின் தந்தை ஒரு சிறந்த ஜோதிடர்.

குழந்தையாக இருந்த போதே அவர் ஒரு பெரிய மகான் என்பதற்கான நிகழ்ச்சி நடைபெற ஆரம்பித்தது. எப்போதும் அந்தக் குழந்தை அழுது கொண்டே இருக்கும். எத்தனை பேர் வந்து என்ன சமாதானம் செய்தாலும் குழந்தை சைதன்யா அழுவதை நிறுத்தாது. ஆனால் ‘ஹரி போல் என்று சொன்னாலோ உடனே அழுகையை நிறுத்தி விடும். இதைப் பார்ப்பதற்காகவே அண்டை அயலார் அங்கு வந்து குழந்தையை அழவிட்டு ஹரி போல் சொல்வது வழக்கம். ஆகவே யார் யாரைப் பார்த்தாலும் ‘ஹரி போல் சொல்வது வழக்கமானது. நிமாயி என்ற பெயரால் அவர் எல்லோருக்கும் அறிமுகமானார்.

சிறு பையனாக அவர் இருந்த போது ஒரு அதிதி அவர் வீட்டிற்கு வந்தார்.தனது உணவைத் தானே சமைத்து முடித்து அதை கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்வது அவர் பழக்கம். அப்படிச் செய்ய முயன்ற போது சைதன்யர் அதை எடுத்து உண்டு விட்டார். திகைத்துப் போன சைதன்யரின் தந்தை ஜகந்நாதர் இன்னொரு முறை அந்த அதிதியைச் சமைக்குமாறு வேண்ட அவரும் அப்படியே சமைத்தார். இந்த முறையும் சிறுவன் சைதன்யன் அதை உண்டு விட்டான். மூன்றாம் முறை அந்த அந்தணர் சமைத்தார். அப்போது இரவு நேரம் என்பதால் அனைவரும் உறங்கச் சென்றனர். அப்போது சைதன்யர் அந்த அதிதி பிராமணருக்கு கிருஷ்ணராகக் காட்சி அளித்தார். பெரிதும் வியப்படைந்த அவர் தனது நிவேதனத்தை கிருஷ்ணரே அங்கீகரித்து ஏற்றுக் கொண்டதாக மகிழ்ந்தார்.

அவருக்கு எட்டு வயதானவுடன் அவரை அருகில் கங்கா நகர் கிராமத்தில்  இருந்த பண்டிதர் கங்காதாஸிடம் அனுப்பினர். இரண்டே வருடங்களில் சம்ஸ்கிருத இலக்கணம், நியாய சாஸ்திரம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேறினார் சைதன்யர். உரிய வயதில் நாடியாவைச் சேர்ந்த வல்லப ஆசாரியர் என்பவரது மகளான லக்ஷ்மி தேவியை அவர் மணந்தார். சிறந்த மேதை என்று இப்போது அவரது புகழ் வங்காளம் முழுவதும் பரவி விட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக லக்ஷ்மி தேவி 1504ஆம் ஆண்டில் சைதன்ய பிரபுவின் 18ஆம் வயதிலேயே மறைந்தார்.

தனது 24ஆம் வயதில் அவர் துறவறம் மேற்கொண்டார். கயா க்ஷேத்திரத்திற்குச் சென்ற சைதன்யர் மாதவேந்திர புரி கோஸ்வாமியின் சீடரான ஈஸ்வர் புரி என்ற வைணவ மகானிடமிருந்து தீக்ஷை பெற்றுக் கொண்டார். பின்னர் நாடெங்கும் யாத்திரையை மேற்கொண்டார். வங்காளத்திலிருந்து கன்யாகுமரி வரை அவர் பாதம் படாத இடம் இல்லை. அவருக்கு பிரதானமாக ஆறு சிஷ்யர்கள் அவர் கொள்கையைப் பரப்ப உருவாயினர். அவர்களில் இருவர் அவருக்கு வயதில் இளையோர். மற்ற நால்வரும் அவரை விட வயதில் மூத்தவர்கள்.

ஆசார்ய அத்வைதர் (1435-1550), பக்த ஹரிதாஸ் (1450-1530), நித்யானந்தா (1478-1545), ராய் ராமானந்தா (1450-1563), ரூப கோஸ்வாமி (1490-1563), சனாதன் கோஸ்வாமி (1488-1558) ஆகியோரே அந்த ஆறு சிஷ்யர்கள்.

வைஷ்ணவ தர்மத்தைப் பரப்பும் சிறந்த மஹானாக அவர் விளங்கினார். பெயரைச் சுட்டிக் காட்டும் விதமாக அவர் தேசத்திற்கு சேதனாவை – பிரக்ஞையை – உணர்வை ஊட்டினார். கிருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம் என்ற கிருஷ்ண பிரக்ஞையை உலகெங்கும் ஊட்ட ஆரம்பித்தார். கிருஷ்ண நாமமே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான ஒரே தீர்வு என்பது அவரது முடிந்த முடிபு.

அவரது தத்துவம் அசிந்த்யபேதாபேத்வாத்  என்று அழைக்கப்பட்டது. கடவுளும் மனிதனும் வேறாக இருந்த போதிலும், எப்பொழுதும் இருப்பது உணர்தற்கு அப்பாற்பட்ட ஒன்றே தான் என்பது இதன் சுருக்கமான அர்த்தமாகும். தெய்வீக லீலையாக இன்றளவும் நாடே கொண்டாடும் ராதா-கிருஷ்ண லீலையை பிரதானமாகக் கொண்டது அவரது கொள்கை. ராதை ப்ரக்ருதியின் உச்ச வடிவமான பெண். கிருஷ்ணர் ஒரே புருஷர். அதாவது அந்தமிலா ஆனந்தம் கொண்டவர் என்பது இதன் பொருள். பரமாத்மா என்னும் புருஷனை விட்டுப் பிரிந்த பெண் சக்தியான ராதை பரமாத்மாவைச் சேர விழைவதே வைணவ தத்துவமாகும். இதற்கு சுலபமான எளிதான வழி ஹரி நாமம் தான்!

புரியில் அவர் இருந்த போது சார்வபௌம பட்டாசார்யா என்ற பேரறிஞர் அவருடன் வாதுக்கு வந்தார். ஆனால் ஒவ்வொரு கருத்தாக அவர் சொல்லச் சொல்ல சைதன்யர் தனது பக்கக் கருத்தை விளக்கினார். இப்படி ஆச்சரியகரமாக சைதன்யர் விளக்கும் விதத்தைக் கண்ட பட்டாசார்யார், “இவர் கிருஷ்ணரே தான். எனது கல்வியில் பெருமையும் அகந்தையும் நான் கொண்டிருந்ததால் இவர் யார் என்று புரிந்து கொள்ளத் தவறி விட்டேன். அடடா, தவறு செய்து விட்டேனே என்று எண்ணி வருந்தினார். இப்படி அவர் வருத்தப்பட்ட போது இறைவன் கருணை மிகக் கொண்டார். நான்கு கரங்களுடனான தனது விஷ்ணு ரூபத்தை பட்டாசாரியாருக்குக் காட்டினார். பின்னர் தனது இரு கரங்களுடனான கிருஷ்ணாவதார காட்சியைத் தந்தார்.

இது போல பல முறைகள் சைதன்யர் கிருஷ்ணராகப் பலருக்கும் காட்சி அளித்ததாக வரலாறு கூறுகிறது.

சைதன்யர் ஜார்கண்ட் காடுகளின் வழியே செல்லும் போது அவர் நாம சங்கீர்த்தனை செய்தவாறே சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு புலி அவர் செல்லும் பாதையில் படுத்திருந்தது. அதை தனது பாதத்தால் சைதன்யர் தொடவே அது எழுந்து நின்று ஹரே கிருஷ்ணா என்று நாமத்தை ஒலித்தது. சைதன்யர் தன் கையை அசைக்கவே அனைத்து மிருகங்களும் நாம சங்கீர்த்தனத்தை ஏற்று மகிழ்ச்சியுடன் ஆடின. கொடிய வன மிருகங்கள் மற்ற சாதுவான மிருகங்களைத் தழுவிக் கொண்டு ஆடியதைக் கண்ட அவர் நாம சங்கீர்த்தனத்தின் சக்தி இது என்று மகிழ்ந்தார்.

புரி ரத யாத்திரை விமரிசையாக நடைபெறும் பெரிய விழாவாகும். ஒரு முறை ஏதோ காரணத்தால் நகரவில்லை. உடனே மன்னன் வீரர்களை அழைத்து ரதத்தை இழுக்கச் சொன்னான். ரதம் நகரவில்லை. வலிமை வாய்ந்த யானைகள் வரவழைக்கப்பட்டன. அவற்றாலும் ரதத்தை இழுக்க முடியவில்லை. அப்போது சைதன்ய மஹா பிரபு ரதம் அருகே வந்தார். ரதத்தின் பின்னால் சென்று தன் தலையால் ரதத்தைத் தொட்டார். அவ்வளவு தான், ரதம் நகரத் தொடங்கியது. கையில் கயிறுகளுடன் ரதத்தை இழுத்துக் கொண்டிருந்தோர் தங்கள் கையில் கயிறுகள் இழுக்கப்படாமல் அப்படியே இருப்பதையும் ஆனால் ரதம் நகர்ந்து செல்வதையும் பார்த்து வியந்தனர்.

சைதன்யரின் வாழ்க்கையை விரிவாக ஏராளமானோர் எழுதியுள்ளனர். அந்த நூல்களில் எல்லாம் இது போன்ற ஏராளமான வியத்தகும் சம்பவங்கள் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

சைதன்ய சரிதாம்ருதா என்ற நூலை ஸ்ரீ கிருஷ்ணதாஸ் கவிராஜர் என்பவர் படைத்துள்ளார். அதில் அவர் ஒரு மரம் பற்றிய வர்ணனையைக் குறிப்பிடுகிறார். ஒரு மிகப் பெரிய மரமானது சிறிய விதை ஒன்றினாலேயே உருவாகிறது. அது பெரிதாகி மனித குலத்திற்குப் பெரும் பயனைத் தருகிறது.

 தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை
தெண்ணீர் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணியதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவிஆள் பெரும் படையோடு
மன்னர்க்கு இருக்க நிழலாகுமே  என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு பாடல். அதிவீரராம பாண்டியன் இயற்றிய வெற்றிவேற்கை நமக்குத் தரும் செய்தி இது.

இந்தக் கருத்தை மனதில் வைத்துக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணதாஸ் கவிராஜர் ஒரு வைஷ்ணவ மரத்தின் தோற்றத்தை விளக்குகிறார். மாதவேந்திர       புரி கோஸ்வாமி என்பவர் வைஷ்ணவத்தின் விதையை விதைத்தார். அந்த மரத்திற்கு நீர் ஊற்றி வளர்த்தார் அவரது சிஷ்யரான ஈஸ்வர்புரி ப்ரபுவானவர். அவரது சிஷ்யரான சைதன்ய மஹா ப்ரபு அதை முழுப் பரிணாமம் உள்ள மிகப் பெரும் மரமாக ஆக்கி உலகமே பயனடையச் செய்தார். ஆக அன்பே பிரதானமான வைஷ்ணவத்தை ஒரு அழகிய வழியில் வடிவமைப்புச் செய்தவர் ஸ்ரீ சைதன்ய மஹா ப்ரபுவே என்பது தெளிவாகிறது. கௌடியா வைணவம் என்ற அவரது கொள்கை பரவலாக இன்று அறியப்படுகிறது.

ஸ்ரீ கிருஷ்ணதாஸ் கவிராஜர் ஏராளமான வியத்தகும் சம்பவங்களையும் செய்திகளையும் தருகிறார். பெரும் கொள்ளைக்காரர்கள் சைதன்யரைச் சந்தித்த மாத்திரத்தில் மாறியதையும், சைதன்யரின் நாம சங்கீர்த்தனத்தால் அரசர்கள் வைணவத்தைத் தழுவியதையும் அவர் வரலாறு தெரிவிக்கிறது. இன்னொரு முக்கிய சம்பவத்தைப் பார்ப்போம். ஒருமுறை சைதன்யரின் பாதுகாப்பிற்காக அவருடன் இரு படைவீரர்களும் இரு வங்காளத்தைச் சேர்ந்த பிராமணர்களும் கூட வந்தனர். வழியில் ஒரு மரத்தடியில் சைதன்யர் இளைப்பாற் அமர்ந்தார். அப்போது அருகில் ஒரு இடையன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து எழுந்த புல்லாங்குழல் இசையைக் கேட்ட சைதன்யர் ஆனந்தம் மேலிட பக்திப் பரவசமானார், அப்படியே மயங்கி விட்டார்; அவர் வாயிலிருந்து நுரை கக்கியது.

அப்போது அந்தப் பக்கம் வந்த பதான் இளவரசனான பிஜ்லிகான் என்பவன் இந்தக் காட்சியைக் கண்டு திகைத்தான். சைதன்யருடன் கூட இருந்த நால்வரே அவருக்கு விஷம் வைத்துக் கொன்று விட்டதாக நினைத்தான். அவர்களைக் கைதும் செய்தான். ஆனால் அவர்கள், “நாங்கள் சைதன்யரின் சீடர்கள் என்றும், அவரே விழித்தெழுந்து இதைச் சொல்வார் என்றும் பயத்துடன் கூறினர். சிறிது நேரத்தில் உணர்வு பெற்ற சைதன்யர் பிஜ்லிகானிடம் அவர்கள் தனது சீடர்களே என்றும் பக்திப் பரவசத்தால் தான் கீழே விழுந்து மயக்கமுற்றதாகவும் வலிப்பினால் நுரை கக்கியதாகவும் கூற பிஜ்லிகான் அந்த நால்வரையும் விடுவித்தான். பிஜ்லிகானின் கூட வந்த ஒரு பதான், சூபி கொள்கையில் திளைத்தவன். அவன் சைதன்யரிடம் பேச ஆரம்பிக்க அவர் கிருஷ்ணரைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார். இதனால் கவரப் பெற்ற அந்த சூஃபி வைஷ்ணவ கொள்கையை ஏற்றுக் கொண்டு கிருஷ்ண நாமத்தைக் கூற ஆரம்பித்தான். இதனால் சைதன்யர் பெரிதும் மகிழ்ச்சியுற்றார். தனது வேலைக்காரனே இப்படி மாறியதைக் கண்ட பிஜ்லிகான் தானும் மனம் மாறி அவரது காலில் விழுந்தான். இவர்கள் நாடெங்கும் சைதன்யரின் பெருமையையும் கிருஷ்ண நாம மஹிமையையும் பரப்ப ஆரம்பித்தனர். இவர்கள் பதான் வைஷ்ணவர்கள் என்று அழைக்கப்படலாயினர்.

வங்காளத்தை ஆட்சி புரிந்த அலாவுதீன் ஹுஸைன் ஷாவின்- Alauddin Hussein Shah (ruled 1493–1519 -)பொக்கிஷதாரராக விளங்கியவ்ர் சனாதன கோஸ்வாமி. அவரது தந்தை இறக்கவே, அவர் பார்த்து வந்த இந்தப் பதவியை சனாதன் கோஸ்வாமி ஏற்க வேண்டியதாயிற்று. அவர் சைதன்யரை ஒரு முறை தரிசித்தார். அவர் பால் அளவில்லா ஈடுபாடு கொண்டார். அவரை ஹுஸைன் ஷா தர்பாரிலிருந்து விலகி பதவியையும் விடுமாறு சைதன்யர் அறிவுறுத்தவே அவர் உடனடியாக அப்படியே செய்தார். அவருக்கு ரூப சனாதன் கோஸ்வாமி என்ற பெயரை வழங்கினார் சைதன்யர். ரூப கோஸ்வாமி கௌடியா வைஷ்ணவத்தைப் பரப்பியதில் பெரும் பங்கு வகித்தார்.

தனது 31வது வயதிலிருந்து மறையும் வரை பெரும்பாலும் அவர் புரியிலேயே வசித்து வந்தார். இறுதியில் 1533ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி அவர் மறைந்தார். அப்போது அவருக்கு வயது 47 வருடம் 3 மாதம்.  தோதா புரி கோவிலில் நாம சங்கீர்த்தனம் பாடிக் கொண்டிருந்த போதே அவர் திடீரென மறைந்தார்.

 தனது அனைத்து போதனைகளையும் சுருக்கமாக சிக்ஷாஷ்டகம் என்ற எட்டே எட்டு செய்யுள்களால் அவர் உலகிற்கு தந்து அருளினார்.

ந-த⁴நம் ந-ஜநம் ந-ஸுந்த³ரீம்
கவிதாம் வா ஜக³தீ³ஶ காமயே ।
மம ஜந்மநி ஜந்மநி ஈஸ்வரே
ப⁴வதாத்³ ப⁴க்தி: அஹைதுகீ த்வயி ॥ 4 ॥

எனக்குச் செல்வம் வேண்டாம், ஜனம் வேண்டாம், அழகிய பெண்கள் வேண்டாம். உனது மீதான பக்தியே ஜன்ம ஜன்மத்திற்கும் வேண்டும். இதை ஸ்ரீ பக்திவேதாந்த ஸ்வாமி ப்ரபுபாதா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார் இப்படி:

O almighty Lord, I have no desire to accumulate wealth, nor do I desire beautiful women, nor do I want any number of followers. I only want Your causeless devotional service birth after birth.

“இறுதியில் கிருஷ்ணரைத் தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாது. அவன் என்ன செய்தாலும் சரி, அவன் என்னை எது வேண்டுமானாலும் செய்யட்டும். ஏனெனில் அவனே நான் வணங்கும் தெய்வம்” என்று சிக்ஷாஷ்டகம் முடிகிறது.

I know no one but Krishna as my Lord, and He shall remain so even if He handles me roughly by His embrace or makes me brokenhearted by not being present before me. He is completely free to do anything and everything, for He is always my worshipful Lord unconditionally.

சிக்ஷாஷ்டகத்தின் மொத்த சாரம் ஒரே வரியில் “கிருஷ்ணனே எல்லாம் என்பதாகும்.

ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவை வணங்கி சர்வம் ஸ்ரீ கிருஷ்ண மயம் என்று கூறி எனது இந்த உரையை முடிக்கிறேன்.

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே                                      ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

நன்றி வணக்கம்!

***

tags- சைதன்ய, மஹா ப்ரபு,

சூரிய சதகம் (Post No.9819)

WRITTEN BY B.KANNAN, NEW DELHI

Post No. 9819

Date uploaded in London –5 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 5-7-2021 அன்று ஒளிபரப்பான உரை! 

 பா.கண்ணன், புது தில்லி

ஞானமயம், தமிழ் முழக்கம் அன்பு நெஞ்சங்களுக்குத் தில்லியிலிருந்துப் பேசும் கண்ணனின் மனம் நிறைந்த வணக்கம் பல. நம்மை மீறியச்  சக்தியின் எதிர்பாராத விளைவால் சில மாத இடைவெளிக்குப் பின் தமிழ் ஆர்வலர்களுடன் அளவளாவு வதில் பெரு.மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைக்கு நாம் கேட்கப் போவது, சூரியனைப் போற்றும் 100 செய்யுட் களைக்  கொண்டு கவி மயூரபட்டரால் சம்ஸ்க்ருதத்தில் இயற்றப் பட்டச்  சதக நூலான சூரியச்  சதகம் பற்றியது. இதன் தமிழாக்கத்தை ஒட்டியே இப்பேச்சு அமைந்துள்ளது. இது ஒரு தஞ்சை சரஸ்வதி மகால் நூலக வெளியீடாகும்.

ஆதவனைத் தொன்றுதொட்டு உலகின் அனைத்து நாகரிகங்களும் போற்றிப் புகழ்ந்துள்ளன.. வேதகாலம் சூரியனுக்குத் தனியொரு இடம் கொடுத்துச் சிறப்பித்துள்ளதை  அறியமுடிகிறது. நமது அனைத்து மொழி  இலக்கியங்களும் சூரியனைப் போற்றியுள்ளன.  பிரபலமாக விளங்கும் தனிக் கோவில்களும் பல இருக்கின்றன. 

சூரியசதகம் நூலை இயற்றிய ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மயூரகவி என்ற மயூரபட்டர் ஹர்ஷ சக்கரவர்த்தியின் அவைப் புலவராக இருந்தார். உரைநடைக் காவியம் காதம்பரியை இயற்றியப் பாணபட்டரின் உறவினரும் ஆவார். அச்சமயம் அவர் குஷ்டரோக நோயினால் அவதிப்பட்டார் அதனால் ராஜசபையிலிருந்து வெளியேற்றப் பட்டார் அதிலிருந்து மீள சூரிய சதகத்தை இயற்றிப் பாஸ்கரனை உபாசித்து நோய் நீங்கப் பெற்றார் எனும் செவிச் செய்தி ஒன்றுண்டு ஆனால் இதில் குறிப்பிட வேண்டியது, தனக்கு வந்திருந்த நோயைத் தீர்த்துத் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று இந்நூலில் ஒருவரியில் கூட அவர் சூரியனை வேண்டவில்லை மாறாக உலகோருக்காகவே உபாசித்தார் என்பதே! நோயிலிருந்து நிவாரணம் பெற சூரியனைக் குறித்து நூறு செய்யுட்களாலானத் தோத்திர இலக்கியமாகவும் ,காவியமாகவும் இந்நூலை இயற்றியதாகக் கருதப்படுகிறது. நவக்ரஹங்களில் பிரதானமான ஆதவன் கண்நோய் முதலான உடல் உபாதைகளைக் களைபவர். ஆகையால் நோய்த் தீர்க்கும் கருத்துப் பொக்கிஷமாக வடமொழி சிற்றிலக்கியத்தின் ஓர் அங்கமாகச் சூரியச் சதகம் விளங்குகிறது.

மயூரகவி வேதங்கள் உபநிடதங்கள் சாஸ்திரங்கள் மகாபாரதம் ஆகியவற்றிலிருந்துப் பல கருத்துக்களை இந்நூலில் கையாண்டிருக்கிறார். ஆனாலும் மகாபாரதத்தில் காணப்படும் செய்திகளை இதில் வெகு பரவலாகக் காணமுடிகிறது. அதில் வனபர்வத்தில் யுதிஷ்டிரருக்கு அவர்களது குரு தௌம்யர்  அருளிய சூரிய ஸ்தோத்திரமே இந்நூல் எழுத உந்துகோலாக இருந்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. ஏனெனில், அதில் இடம் பெறும் ஆதவனின் வேறு பல நாமங்கள், பிற செய்திகளையும் சூரிய சதகத்தில் காணமுடிகிறது.

அன்றாடம் காலையில் உதித்து மாலையில் மறைகின்ற ஒளிக்கோளத்துக்கு அளவற்றச் சக்தியை அருளுவது அதற்கும் அப்பாற்பட்டப் பரம்பொருள் தான் சூரியன். அரூபமானப் பரம்பொருளைஉருவமானச் சூரியக்கோளில் தெய்வமாகப் பாவித்து வழிபடுகிறோம். இக்கருத்தை ஆதாரச் சுருதியாக வைத்து இயற்றப்பட்டதே இந்தச் சூரியச் சதகம்.  சூரியச் சதகம். ஆதவனின் ஆற்றலைப் பல கோணங்களில் எடுத்துக்காட்டி நம் மனதில் பதிய வைக்கிறது. காட்டாற்று வெள்ளம் போல் அழகியக் கற்பனைகள் தங்குத்தடையின்றிச் சுழன்று ஓடுகின்றன.

தமிழகத்தில் பண்டையக் காலம் தொட்டுச் சூரிய வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. காஞ்சி மகாசுவாமிகளின் வழிகாட்டுதலில் காஞ்சி கச்சபேஸ்வரர் ஆலய பானுதீர்த்தப் படிக்கட்டுகளில் பொரிக்கப்பட்டிருந்தச் சுலோகங்களை ஆராய்ந்த வல்லுநர்களிடம் அவை சூரிய சதகச் செய்யுட் களே என்பதை அவர் உறுதிப் படுத்தினார். இதன் மூலம் தமிழக மன்னர்களின் ஆதரவுடன் சூரியசதகம் எனும் நூல் பண்டிதர் முதல் பாமரர் வரைப் பாராயணம் செய்யப்பட்டு வந்துள்ளது என்று அறிய முடிகிறது

அப்படி மயூரகவி கையாளும் சில விஞ்ஞானக் கருத்துக்களைக் காண்போம்.சுலோகம் 63-.சூரியனைச் சுற்றியுள்ள வாயு மண்டங்களான ஆவஹ, ப்ரவஹ, விவஹ, பராவஹ, ஸம்வஹ, உத்வஹ, பரிவஹ ஆகியவை ஒன்றன்பின்  ஒன்றாகச் சூரிய ரதத்தைத் தங்கள் தோள்களில் சுமந்துச் செல்கின்றனவாம்.  

சு.29, 98-ல் சூரியக் கிரணத்தின் தன்மைகளைப் பற்றி விளக்குகிறார். சு.18, 97-ல் பூமியின் சுழ்ற்சியால் சூரியன் உதிப்பது, மறைவது போல் தோன்றுகிறது  என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்துள்ளார். சு.96-ல் சூரிய மண்டல விளக்கம். சு.2, 3-ல் காலை, மாலை வேளைகளில் காணப்படும் சூரியனின் நிறம் மற்றும் உருவம் விளக்கப் படுகிறது.

சூரிய நிறமாலையில் நிரவியிருக்கும் ஃபரான் ஹோஃபர் (JOSEPH VON FRAUN HOFER- 1787-1826) வரிகள் மூலம் ஒளிக்கதிர்கள் ஊடுருவி வெளிப்படும் போது அந்நிறங்கள் வெவ்வேறு வகையான வெப்பங்களைத் தருகின்றன. அதிலும் ஊதாசிவப்பு நிறமே அதிக வெப்பம் தரவல்லதாகும் என்ற விஞ்ஞானிகளின் கூற்றை அன்றே சொல்லிவிட்டார்! எந்த ஒளியின் வீச்சும் அகன்று, அகன்றுச் செல்கையில் ஒளி குறையும், ஆனால் சூரியக் கிரணங்கள் மட்டும் ஒளி குன்றுவதே கிடையாது.அவற்றின் தன்மைகளைப் பற்றியும் சு.29,98-ல் கவி ஒப்பீடு செய்கிறார். ஆதவனின் ஒற்றைச் சக்கரத் தேரின் 7 குதிரைகளும் 7 வண்ணங்களாக உருவகப் படுத்தப் பட்டுள்ளன. அருக்க தேவனின் வெண்மை ஒளி இவற்றின் ஒட்டுமொத்தக் கலவையே என்கிறார். சிவப்பு, பச்சை,நீலம் ஆகியவையே பிரதானம் என்ற விக்ஞானிகளின் கூற்றின்படி. இங்கு கவி அக்குதிரைகள் பச்சை நிறமுடையவை என சு.46, 60-ல் குறிக்கிறார்.

சூரியன் அளிக்கும் பயன்கள்(சு 85),யுக முடிவில் சூரியன்-அழிக்கும் ஆற்றல் பெற்ற வனாக உருவெடுப்பான், கடும் வெப்பத்தால் நீர்நிலைகளை வற்றச் செய்து, மலைகளை வெடிக்கச் செய்து எள்ளுப்பொடி போல் தூளாக்கி விடுவான்(சு 78)எனக் கூறி நம்மைச் சிந்திக்க வைத்து விடுக்கிறார்! நவீன விஞ்ஞானக் கருத்துக்களுடன் இக்கவியின் எண்ணோட்டங்களையும் ஒப்பாய்வு செய்துப் பார்க்கும்போது நம் முன்னோர்கள் அவர்களது யோக மகிமையினால் வானவி யல் விளக்கச் சாஸ்திரத்தில் எவ்வளவுப் புலமைப் பெற்றிருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.

இதோ சுலோகம் 59-ல் கவியின் வர்ணனை வார்த்தை ஜாலம்…உதயகிரி எனும் நாடக மேடையில்இருள் எனும் திரைச் சீலை நகர ஆரம்பிக்கிறது. ஒளியிழக்கும் விண்மீன்கள் புஷ்பாஞ்சலி செய்விக்கின்றன.சூரியன் உதிப்பது,வான வீதியில் பரவுவது, மேற்கே சாய்வது,அஸ்தமிப்பது,என்ற காட்சிகள் நடந்தேறப் போகின்றன. ஆதவனை வழிபடத் தேவர்கள் காத்திருக்கின்றனர். அவர்களைத் தேர் சாரதி அருணன் விசாரிக்கிறான். ‘ஓ,இந்திரனா!உமது ஆயிரம் தாமரைக் கண்களும் மலர்ந்து விட்டதே. ஹே அக்நி தேவரே! பளீரென்றுக் கண்களில் படமாட்டீரோ? பகவானின் ஒளிக்கதிர் முன்னே உமது ஒளி மங்கிவிட்டதோ? அட,எமதர்மராஜனா, உம் தந்தையார் பவனி வருவது தெரியுமல் லவா, பின் ஏன் இப்படி உமது வாகனம் எருமையுடன் பாதையின் குறுக்கே  நிற்கிறீர்? மகிஷனைத் தள்ளி இருக்கச் சொல்லுங்கள்! என்ன,தென்மேற்கு மூலையில் ஒதுக்குப் புறமாக நிற்கிறீர்கள்,ராட்சதர்கள் தானே? பகவான் உங்களைப் பார்த்து விட்டாரே! வருணனா ,வாருமய்யா,இக் குதிரைகள் ஓடும்போதே சற்று குளிப்பாட்டுமய்யா, புண்ணியமாய்ப் போகட்டும்! ஓஹோ,வாயுதேவனா! எங்கே என் குதிரை வேகத்துக்கு ஈடாக ஓடி வாரும்,பார்க்கலாம்! இது யார்,குபேரனா? உங்கள் கஜானாவுக்குக் கட்டுக் காவல் சரியாக உள்ளதா? தகவல் தெரிவித்து விடுகிறேன். அட அடா!,ஈசான தேவனா,தாங்களுமா காத்திருக்க வேண்டும். அடியேனின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்”என்று எண்திசை அதிபர்களையும் குசலம் விசாரிக்கிறானாம் அருணன் மகிஷம், யமன் சனீஸ்வரர் சிரிக்கிறார்களோ, இல்லையோ நம்மைப் புன்முறுவல் பூக்க வைத்து விடுகிறார் கவி..

மற்றொரு காட்சி…அடிவானத்தில் எழும் சூரிய ஒளிக் கதிர்களைக் கண்டு ஶ்ரீகிருஷ்ணனுக்குப் பயமாம்,”ஏன்? இருளின் கருமையைப் போக்குபவனான கதிரவன் எங்கே தனது சியாமள மேனி யின் கருமையையும் வெளியேற்றி விடுவானோ என்ற ஐயமாம்! கண்ணனுக்குத் தன் கருமை நிறத்தில் அவ்வளவுப் பெருமை! பாஸ்கரா,கோபிகையர்கள் என்னைப் பரிகசிக்க வைத்துவிடாதே,,என் கருமையை அவமானப் படுத்திவிடாதே என்று வேண்டுகிறான்,போலும்! தேவகி மைந்தனின் எண்ணவோட்டம் இதுவென்றால், மகேசனின் கவலை வேறு விதம். தன் ஐடாமுடியில் அணிந்திருக்கும் சந்திரக் கலை சூரியனின் இளங் கதிர்கள் பட்டு முக்கியத்துவத்தை இழந்து விடுமோ எனச் சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறாராம்! (சு 16)

ஆதவனைப் பற்றிய மதுரகவியின் கற்பனை வளம், அன்றாடம் நடந்தேறும் இயற்கை நிகழ் வுகள் அனைத்தையும் தன் தேன்மதுரக் கவிதைத் துளிகளால் நம்மை ரசிக்க வைக்கும் போது, ‘எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா!’ என்ற பாரதியாரின் பாடல்வரிகள் தான் நினை வுக்கு வருகின்றன. எண்ணை ஆட்டும் செக்கைச் சுற்றி வரும் எருதுகளைப் போல்,நிலைகொள் ளாது அலைபாயும் நம் உள்ளங்களைச் சூரியதேவன் என்ற முளையில் கட்டி அதன் சிந்தனை ஓட்டங்களைச் சூரியனையேச் சுற்றி வருமாறுப் பல காட்சிகளைப் புகுத்தி நம் மனதை ஆதவ னுடன் பிணைத்து விடுகிறார் கவி.

மயூரபட்டர் வாழ்ந்த காலத்தில் சூரிய வழிபாடு நாட்டில் பரவலாக இருந்துள்ளது அதனால் ஆதவனைப் போற்றுபவர்களுக்குச் சூரியனின் அருள் பூரணமாகக்  கிடைக்கட்டும் என்று வேண்டுகிறார் கவி. அதிலும், நோய் நொடிகள் நீங்கச் சில பாடல்களை மனனம் செய்ய மறை முகமாகச் சொல்கிறார். சில சுலோகங்களின் ஓசையை வெளிப்படுத்த ஒரே எழுத்தைப் பல முறை உபயோகித்துள்ளார். இதனால் அதன் சுவை கூடி ரசிக்க வைப்பதுமின்றி அப்படி பயன்படுத்துவதன் மூலம் அதன் மந்திரச் சக்தியை வலுவாக்கிப் பாராயணம் செய்வோருக்கு நற்பயன்கள் பெருக வழி காட்டுகிறார் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றனர் உதாரணமாக சு 36 ல் ‘த்ய’ ( ध्य ) எழுத்தும், சு 70ல் ‘ந்த’ ( न्द  ), ‘ச’ ( श  ) என்ற எழுத்துக்களும் பெரிதும்  பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. நாம் அதையும் தொடர்ந்துப் படித்து உடல் நலம் பேணுவோம். அவற்றில் இரு சுலோகங்கள் இதோ……..

கந்தர்வை:கத்ய பத்ய வ்யதிகரிதவசோ ஹ்ருத்யமாதோத்யவாத்யை:

ஆத்யைர்யோ நாரதாத்யை: முநிபிரபிநுதோ வேதவேத்யைர் விபித்ய|

ஆஸாத்யாபத்யதே யம் புநரபி ச ஜகத்யௌவநம் ஸத்ய உத்யந்

உத்யோதோ த்யோதித்த்யௌ: த்யது திவஸக்ருதோ()ஸாவத்யாநி வோத்ய||  (36)

சூரியனின் ஒளியைக்கண்ட கந்தர்வர்கள். மகிழ்ச்சி மேலோங்கத் துதித்து, மனதைக் கவரும் பல்வேறு இன்னிசைக் கருவிகளுடன் அதாவது, வீணை, தம்பூர், ஜாலர், சதங்கை, முரசு, மத்தளம், புல்லாங்குழல், நாதஸ்வரம் ஆகியவற்றுடன் புகழ்ந்துப் பாடுகின்றனர். வேதங்களில் வல்லவர்களான நாரதர் தும்புரு முனிவர்களால் துதிக்கப்படுபவனும், வான்வெளியில் பிரகாசிக்கும் சூரியனின் புத்தம் புதிய ஒளி, உலகை யௌவனப் பூரிப்புடன் விளங்கச் செய்கிறது. அது உங்களது பாபங்களை அழிக்கட்டும்.

நிஸ்பந்தாநாம்  விமாநாவலி விவத்திவாம் தேவ்வ்ருந்தாரகாணாம்

வ்ருந்தை: ஆநந்த ஸாந்த்ரோத்யமமபி வஹதாம் விந்த்தாம் வந்திதும் நோ|

மந்தாகித்யாம் அமந்த: புலிநப்ருதி ம்ருதுர்மந்தரே மந்திராபே

மந்தாரை: மண்டிதாரம் தததரி தநக்ருத்ஸ்யந்தந: ஸ்தாந்முதே  :|| (70)

சூரிய ரதத்தின் வேகத்தைக் குறிப்பிடும் ஸ்லோகம் இது. பெரிய மாடங்களில் வாழும்தேவர்கள் அருக்கனை நேரில் கண்டு வணங்க வான ஊர்திகளில் பயணிக்கின்றனர். ஆதவனின் ரதம் போகும் வேகத்தால் அவர்களால் வணங்க முடியாதத் தொலைவில் அவன் காணப்படுகிறான். அதனால் அவர்களின் ஊர்திகள் மேலே செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்று விடுகின்றன. ஆனால் சூரிய ரதம் ஆகாச கங்கையான மந்தாகினி மணற்பரப்பில் வேகம் குறையாமல் ஒரே சீராகச் செல்கிறது. அதேசமயம் சந்தடி மிகுந்த நகரம் போல் தோற்றமளிக்கும் மந்தரமலைக் குன்றின் முகடுகள், குகைகளில் மெதுவாகச் செல்கிறது. இத்தனைச் சிறப்பு வாய்ந்ததும்மந்தார மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சூரிய ரதம் உங்களுக்கு எல்லாவிதத்திலும் மகிழ்ச்சியை அளிக்கட்டும்…என்கிறார். 

சு.71 இவரது இலக்கணப் புலமையைக் காட்டுகிறது. இதன் பதங்கள் யமகவணி சொல் அலங்காரத்தில் அமைக்கப் பட்டுள்ளன. இதில் கூறப்பட்டுள்ளத்

தேவதைகளின் பெயர்களுக்கும், ரதத்தின் பாகங்களுக்கும் உள்ளச் சொற்பொருத்தத்தை எடுத்துக் காட்டி, அவர்கள் அவற்றை வழிபடுவதாக அமைத்துள்ளார் கவி. (உ.ம்.) ஹரி என்பது இந்திரனையும், குதிரையையும் குறிக்கும். சக்ரீ என்ற சொல் திருமாலையும், தேர் சக்கரத்தையும் குறிக்கும்.

இப்படியே இச்செய்யுள் முழுவதையும் படித்து ரசிக்கலாம்!

சூரியனின் செயல்பாடுகள் தனித்தன்மை வாய்ந்தவை. இருளை நீக்கி வெளிச்சம் மட்டும் அளிக்கவில்லை. பக்தர்களின் பாபங்களையும் களைகிறான். தாமரையை மட்டும் மலரச் செய்யவில்லை. அதிகாலையில் தன் திருவடி தொழுது காத்து நின்றவர்களின் உள்ளங் களையும் மலர்விக்கிறான். நாள் என்பதை மட்டும் தினமும் தோற்றுவிப்பதில்லை. அடியார் களுக்கு ஒப்பில்லா மேன்மைகளையும் அருள்கிறான். உதயமாவது என்பது ஒன்றே அவன் எடுக்கும் ஒரே முயற்சி. அதன் விளைவுகள் அனைத்தும் உலகோர்க்கு நன்மைப் பயக்கின்றன.

மகாகவி பாரதியார் பாடுவது போல், ”நின்றன் ஜோதி நிறைந்ததுவாகி, நன்று வாழ்ந்திடச் செய்குவை ஐயா ஞாயிற்றின் கண் ஒளி தரும் தேவா” எனும்

அத்தகையச் சூரியதேவன் நம்மைக் காத்தருளட்டும். படித்துப் பலனடையுங்கள் என்று வேண்டுகிறேன்.

இப்படிப்பட்ட அரியப் பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது இந்தப் புண்ணியப் பாரதபூமி, என்று நினைக்கையில் மனம் உவகையில்

ஆழ்ந்துப் போகிறது, பெருமைக் கொள்ள வைக்கிறது!

நன்றி, வணக்கம்

வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த்!

tags – சூரிய சதகம், மயூரபட்டர்

                           ————————————————————————————————————

July 2019 London Swaminathan Articles; Index 80 (post No.9818-B)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9818-B

Date uploaded in London –5 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9700 PLUS POSTS.

JULY 2019 INDEX 80

Holiday until 13th July,2019

Swami s crossword 14719,6630, 14 July 2019

Albert Einstein on cluttered Desk,6632;15/7

Five Ways of getting Supernatural Powers,6631,15/7

Swami s crossword 16719;6636;

Sleeping and Snoring in Church Services,6638;16/7

Five Things to be done Slowly- Garuda Purana,6642;17/7

Bharata Muni statue unveiled in Delhi,6643;17/7

Swami s crossword 18719;6648

Manu on Women’s Protection,6645;18/7

Bhartruhari, Tulsidas and Tiruvalluvar 6651;19/7

Swami s crossword 19719;6652

Fire in the Hell !  Preacher surprised the Audience,6655:20/7

Swami s crossword 20719;6660

Interesting Church Collections Anecdotes,6659;21/7

Swami s crossword 22719;6665

Botanical Information under No.5;6666

5 Characteristics of a Fool,6669;23/7

Swami s crossword 23719;6671

O, Lord, Hit him again,please! Church Anecdotes, 6674;24/7

My visit to Government Museum in Chennai,6678;25/7

Swami s crossword 26719;6684;

My visit to government museum Part 2;6679;26/7

Wedding Feast Pictures,6681;26/7

You don’t even know the way to Post Office,6686;27/7

Don’t tell me your name- 5 names should not be revealed,6687;27/7

Tamil Wonder! Coin Counting Tray,6691;28/7

My visit- Part 3;6689,27/7

My visit Part 4;6694;28/7

Swami s crossword 29719;6698

My visit Part 5;6699

My visit Part 6;6702

August 2019 Good Thoughts Calendar,6701;30/7

My visit Part 7;6708;31/7

Man does not live by bread alone Bible 31 July 2019

xxxx

TAMIL ARTICLES IN JULY 2019

ஜூலை 13 வரை விடுமுறை

விதியின் போக்கு- புறா தப்பியது, களுக்கு இறந்தது, 6627, 14/7

நத்தை மஹிமை , 6628, 14/7

தமிழ் குறுக்கெழுத்து போட்டி, த .கு.போ.14719, 6629

த .கு.போ.15719, 6634,

த .கு.போ.16719, 6637,

அபூர்வ சக்திகள் பெற ஐந்து வழிகள், 6633, 15/7

800 கல்வெட்டுக் கவிஞர்கள், 6635, 16/7

சர்ச்சில் தூங்கிய மன்னன் யார் ,6640,17/7

மேலும் கொஞ்சம்  ரம் வேண்டுமா, த .கு.போ.17719, 6641

பஞ்சாப்பில் திராவிட பிராமணர்-  800 கல்வெட்டுக்

கவிஞர்கள்- 2, 6646, 18/7

பிரதமரை சிக்கலில் மாட்டிய ‘ரம்’, 6647, 18/7

பெண்களுக்கு சுதந்திரம் உண்டா? மநு சொன்னது பற்றி

சர்ச்சை, மநு நீதி நூல்-42, 6650, 19/7

சுனாமி வந்தாலும் பெரியோர்கள் பிறழ மாட்டார்கள், –

வள்ளுவர், பர்த்ருஹரி கூற்று , 6654, 20/7

த.கு.போ . 20719, 6656,

த.கு.போ . 21719, 6661

சாக்கடையில் விழுந்த கடவுள் காசு , 6658,21/7

பலராமனும் கிருஷ்ணனும் கற்ற கலைகளும் , கற்ற நாட்களும், 6663

த.கு.போ.22719, 6664

த.கு.போ.23719, 6670

பேசுவது தேவாரமேயல்லாமல் பேய்க் கிரந்தங்கள் பேசோம் , 6668, 23/7

த.கு.போ.24719, 6675

புதுவை அறிஞருடன் சந்திப்பு- லண்டனில் நூல் வெளியீட்டு விழா , 6672,24/7

ஒரு திராவிட ஜோக், 6677, 25/7

செல்வத்தைப் பிரிக்க ஐந்து வலிகள், 6682, 26/7

6 பேர் வாழ்நாள் வீணானவை,6690, 28/7

த.கு.போ.26719, 6684

த.கு.போ.27719, 6688

தமிழர் கண்டுபிடித்த அதிசய கனக்குப் பலகை, 6692, 28/7

திரைப்பட ரைடக்டர் அம்ஷன்  குமாருடன் சந்திப்பு, 6693, 28/7

ஐந்து அரச லக்ஷணங்கள் , 6696, 29/7

த.கு.போ.29719, 6697

த.கு.போ.30719, 6704

ஆகஸ்ட் 2019 காலண்டர், 30/7, 6703

பத்திரியாரை மடக்கிய சின்னப் பையன் – திருக்குறள்

கதை, 6706, 31 ஜூலை, 2019

–subham–

tags – index,Index 80, July 2019 index

tags- index,Index 80, July 2019 index

ரமண மகரிஷி பற்றி நாவல் எழுதிய சாமர்செட் மாம் (Post No.9818)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9818

Date uploaded in London –5 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரிட்டனில் பிறந்த புகழ்பெற்ற ஆங்கில நாவல் ஆசிரியர்களில் ஒருவர் சாமர்செட் மாம் (WILLIAM SOMERSET MAUGHAM). அவர் எழுதிய சிறந்த நாவல்களில் ஒன்றில் ரமண மகரிஷியை குருவாக வரும் ஒரு கதாபாத்திரமாக படைத்தார். அந்தப் புத்தகத்துக்கு கத்தி முனை  (THE RAZOR’S EDGE )என்று பெயர் வைத்தார். அது கடோபநிஷத்தில் வரும் வாசகம் ஆகும்

சாமர்செட் மாம் ஒரு சிறுகதை எழுத்தாளர்; புதினங்கள் படைத்தவர். நாடகங்களை இயற்றியவர்.

பிறந்த தேதி – ஜனவரி 25, 1874

இறந்த தேதி – டிசம்பர் 16, 1965

வாழ்ந்த ஆண்டுகள் – 91

வில்லியம் சாமர்செட் மாம் நகைச்சுவை, நக்கல், கிண்டல், கேலியுடன் எழுதும் பாணி உடையவர். சில கதைகளில் உண்மைக் கதைகளையே நாவலாகப் படைத்திருக்கிறார்.எளிமையான நடை; ஆயினும் கதை சொல்லுவதில் குறை இல்லாத போக்கு.

பத்து வயதில் தாய் தந்தையை இழந்ததால் உறவினர்கள் அவரை எடுத்து வளர்த்தனர். டாக்டர் படிப்பு படித்து பட்டம்பெற்ற போதும் அதைத் தொழி லாக ஏற்காமல் முழுவேக எழுத்தாளர் ஆனார். 23 வயதில் அவருடைய நாவல் அச்சிடப்பட்டது. அதில் குழந்தை பெறும் பெண்மணியின் பிரசவ அறையில் இருந்த அனுபவம் வருகிறது .

கதைகளை விட நாடகங்கள்தான்  இவருக்கு அதிகம் புகழ் ஈட்டித் தந்தன.அவருக்கு 34 வயதானபோதே  சாமர்செட் மாமின் 4 நாடகங்கள் லண்டன் தியேட்டர்களில் வெற்றி நடைபோட்டன.

முதல் உலகப் போர் நடந்த ஆண்டுகளில் அரசின் உளவாளியாகப் பணிபுரிந்தார்.. பின்னர் ஒரு நண்பருடன் சேர்ந்து கிழக்கு ஆசியா, பசிபிக் பெருங்கடல் தீவுகள், மெக்சிகோ ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்த்தார். இறுதிக் காலத்தை பிரான்ஸின் தென் பகுதியில் கழித்தார்.

சுயவாழ்வில் ஒருவர் பின் ஒருவராகப் பலரைக் கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்தார் .

சாமர்செட் மாம் எழுதிய ‘ரேஸர் எட்ஜ்’ THE RAZOR’S EDGE என்ற நாவலில் கணேசா என்ற பெயரில் ரமண மகரிஷியை அறிமுகம் செய்கிறார். இந்த நாவல் வெளியாவதற்கு பல ஆண்டுகளுக்கு  முன்னரே அவர் திருவண்ணாமலைக்குச் சென்று ஸ்ரீ ரமண மகரிஷியைச் சந்தித்தார். கத்தி முனை அல்லது வாள் முனை என்பது முக்கிய உபநிஷத் நூலாகக் கருதப்படும் கடோபநிஷத்தில் வரும் வாசகம் ஆகும். அந்த வாசகத்தையே புத்தகத்தின் பொன்மொழியாக அவர் கொடுத்துள்ளார் . ஒரு வாள் முனை கடப்பதற்கு அரிதாக எவ்வளவு கூரானதாக இருக்கிறதோ அவ்வளவுக்குக் கடினமானது முக்தி பெரும் வழியும் என்ற வாசகம் கடோபநிஷதத்தில் வருகிறது. இந்தக் கதை இகலோக வாழ்வை வெறுத்த  ஒரு அமெரிக்க போர் விமானியின் கதை ஆகும். அவர் வாழ்க்கையின் மெய்ப் பொருளை அறிவதற்காக இந்தியாவுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டதே கதையின் கருப்பொருள் ஆகும்.

கதையின் போக்கில் முனிவர்கள் சந்திப்பு ,அத்வைத சித்தாந்தம், சமாதி ஆகியனவும் இடம்பெறுகின்றன .

இவர் எழுதிய ஏனைய நூல்களின் கருப்பொருள்களைக் காண்போம்.

அமெரிக்காவில் வாழ்ந்த ஐரோப்பியர்கள் பற்றி OUR BETTERS ‘அவர் பெட்டர்ஸ்’ நாவலில் வருகிறது .

வேறு ஒரு பெண்ணுடன் தொடர்புவைத்துக்கொண்ட கணவனைப் பழிவாங்கும் மனைவியை ‘CONSTANT WIFE’ கான்ஸ்டன்ட் வைஃ ப் கதையில் காணலாம்.

OF HUMAN BONDAGE ‘ஆப் ஹ்யூமன் பாண்டேஜ்’ என்ற கதை மிகச் சிறந்த கதை. அதில் மாம் தன்னுடைய சுய சரிதத்தைக் கதையாக சித்தரித்துள்ளார்.

பிரபல ஓவியர் பால் கோகெய்ன் PAUL GAUGUIN  வாழ்க்கையை அடிப்படையாக வைத்து  மாம் எழுதிய கதை மூன் அன்ட் சிக்ஸ் பென்ஸ் MOON AND SIX PENCE என்பதாகும்.

தாமஸ் ஹார்டி என்ற பிரபல நாவல் ஆசிரியரின் சொந்த வாழ்வை அடிப்படையாக அமைத்து மாம் எழுதிய கதை CAKES AND ALE கேக்ஸ் அண்ட் ஏல் என்னும் கதை ஆகும். இதில் ஒரு பிரபல நாவல் ஆசிரியரின் மனைவி எப்படி இருப்பாள் என்பதை மாம் படம்பிடித்துக் காட்டுகிறார்.

Publications

1897 – LIZA OF LAMBETH

1915- OF HUMAN BONDAGE

1917 – OUR BETTERS

1919 – THE MOON AND SIX PENCE

1921 – THE CIRCLE

1921 – THE TREMBLING OF A LEAF (INCLUDING RAIN)

1926 – THE CONSTANT WIFE

1930- CAKES AND ALE

1944 – THE RAZOR’S EDGE.

தி ரேஸர்ஸ் எட்ஜ் முதலிய பல கதைகள் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன.

-SUBHAM-

TAGS- ரமண மகரிஷி , நாவல் , சாமர்செட் மாம்,

PLEASE JOIN US TODAY MONDAY 5-7-2021

5-7- 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -8 MTS

PRAYER – MRS ANNAPURANI PANCHANATHAN

TALK in Tamil BY B KANNAN, DELHI, ON MAYURA/Surya SATAKAM- 15 MTS

ASHTAPATHI -21 BY LONDON SRI BALA SUBRAHMANYAN -8 mts

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT CHAITANYA- 15 MTS

ABHANGAM BY MRS DAYA NARAYANAN, LONDON- 6 MTS

DR NARAYANAN KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -8

TOTAL TIME- APPR. 60 MINUTES

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

 tags- publicity5721