Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .
London Time 1 PM (British Summer Time)
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
*****
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.
****
Prayer -MRS JAYANTHI SUNDAR TEAM – Akash Ramesh
***
NEWS BULLETIN
VAISHNAVI ANAND from London presents World Hindu News in Tamil
****
MRS Brhannayaki Sathyanarayanan from Bengaluru speaks on
ANBIL SATHYAVAGEESWARAR TEMPLE
****
SPECIAL EVENT-
INTERVIEW WITH ARTIST
KALAIMAMANI V JEEVA ANANTHAN, COIMBATURE.
Interviewed by London Swaminathan
V Jeeva nantha, the elder son of N.Velayutham, a famous artist and the proprietor of Cine Arts established in 1954.
Education:
Government Arts College, Coimbatore -Degree in Political Science
Presidency College, Chennai – Postgraduation in Political Science
President – CHITHRAKALA ACADEMY, An association of Artists, Coimbatore.
Been exhibiting his paintings since 1979 in all Chithrakala Academy Annual Art Exhibitions at Coimbatore, Chennai and Bangalore.
Collections all over the world and at Valluvar Kottam, Chennai.
Selected as one of the 133 painters all over India to paint KuraLoviyams exhibited since 2000, with the unweiling of Valluvar Statue at Kanyakumari.
Been a Cinema Banner Artist and painted thousands of giant banners, now an extinct art.
During 1980s wrote cinema reviews in the famous magazine ‘Kalki’ as a student writer.
A student Artist in ‘Dhisaigal’ a youth magazine edited by ‘Maalan’ during 80s.
Illustrator in literary magazines and Cover designer for novels .
Nominated as one of theWorld’s best 100 caricaturists by Romanian Cartoonists Association- 2007 and again in 2011 . In 2016 awarded as the second best caricaturist in the world by them too.
Author of ‘Thiraiseelai’, a collection of Essays on world cinema, ‘Oru Beediyundo Sakhave’ another collection of cinema essays , ‘Neengal eppadi oviyar aaneergal’ a collection of interviews with 17 eminent artists and ‘Maayamaan ulavum Vanam’ a collection of essays on Cinema.
His Book ‘Thiraicheelai’ has won the Special mention award in the ‘Best Book on Cinema’ category in the National film Awards 2011, and after 29 years a Book in Thamizh has won this award.
Received the Award from the hands of the President at New Delhi on 9-9-2011.
‘Oru Beediyundo Sakhave’ bagged the best ‘katturai thoguppu’ award from Vasagasalai, Chennai.
Kalaimamani Award now announced by the govt of TamilNadu for the year 2021
******
ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 5 October 2025
நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .
***
இறைவணக்கம் — திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர் –Akash Ramesh
உலக இந்துமத செய்தி மடல்-
லண்டன் மாநகரிலிருந்துவைஷ்ணவி ஆனந்த்
வழங்கும் செய்திசெய்தி மடல்.
***
ஆலயம் அறிவோம் —திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன்
சொற்பொழிவு– தலைப்பு–அன்பில் சத்ய வாகீஸ்வரர் கோவில்
****
இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:
ஓவியர் கலைமாமணி V.ஜீவானந்தம் அவர்களுடன் பேட்டி
Interviewed by London Swaminathan
கோவை சித்ர கலா அகாடமியின் தலைவர் , புகழ்மிகு ஓவியர் என் .வேலாயுதம் அவர்களின் புதல்வர், பல நகரங்களில் ஓவியக் கண் காட்சி நடத்தி வருபவர் , வள்ளுவர் கோட்டம் முதலிய இடங்களில் அவரது குறள் ஓவியங்களைக் காணலாம் ; நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசின் கலை மாமணி விருது பெற்றவர் ; திரைச் சீலை என்ற நூலின் ஆசிரியர்; எண்ணற்ற பத்திரிகைகளு ஓவியம், கார்ட்டூன், படங்களை வரைந்து கொடுத்து உதவி வருகிறார் ; அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். உலகின் தலை சிறந்த நூறு ஓவியர்களின் பட்டியலில் இடம்பெற்றவர்.
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் மாதம் 5 -ம் தேதி 2025-ம் ஆண்டு
****
ராமர் உருவ பொம்மை எரிப்பு: 4 பேர் கைது; சிறையில் அடைப்பு
ராமர் உருவ பொம்மையை எரித்து, அதனை இணையத்தில் வீடியோவாக வெளியிட்ட விவகாரத்தில் திருச்சி போலீஸார் 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவெறும்பூர் அருகே குண்டூர் அயன்புத்தூர் கிராமத்தில் ஐந்தாம் தமிழ்சங்கம் சார்பில் நடந்த விழாவில் ராமர் உருவப்படத்தை எரித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, இந்து மக்களின் உணர்வை புண்படுத்தும் விதமாகவும், ராமபிரானை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட நபர்கள்மீது நடவடிக்கை எடுக்ககோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் குண்டூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ராமரின் படத்தை எரித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மதஉணர்வை தூண்டும் திமுக அரசையும், இந்து விரோத அமைப்புகளை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் பாலாஜி அளித்த பேட்டியில்,
தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற விழா ஒன்றில் வைரமுத்து ராமரை அவமரியாதையாக பேசினார். அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரசித்து கேட்கின்றார். அதேபோல் வி.சி.க வின் நிர்வாகி வன்னி அரசு ராமபிரானை ஆணவ படுகொலைகாரர் என விமர்சித்துள்ளார். இவர்களுக்கெல்லாம் ராமரைபற்றி பேச தகுதி இல்லை. இவர்கள் மீது விஸ்வந்த் பரிஷத் புகார் அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராமன் படத்தை எரித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை இல்லாவிட்டால் தமிழக மட்டுமல்லாது தேசிய அளவில் இந்த சம்பவத்தை எடுத்துச் சென்று உச்ச நீதிமன்றத்தை நாடி அதன் வழியாக நடவடிக்கை எடுக்க எடுக்கப் போவதாக பாலாஜி தெரிவித்தார்.
கடவுள் ஸ்ரீ ராமரை அவமதித்த 5ம் தமிழ் சங்க அமைப்பைத் தடை செய்ய வேண்டும் எனவும், அந்த அமைப்பு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்
***
முதல்வர் ஸ்டாலினின் பகுத்தறிவு சர்ச் செல்வதை தடுக்கவில்லையா? ஹிந்து முன்னணி கேள்வி
”முதல்வர் ஸ்டாலின், மதச்சார்பற்றவராக இல்லை” என்று ஹிந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
சிவகங்கை, அடைக் காட்டூர் இருதய ஆண்டவர் சர்ச்சில், அரசு நிதியில் நடக்கும் புனரமைப்பு பணிகளை, முதல்வர் ஸ்டாலின், நேரில் ஆய்வு செய்துள்ளார்.
இது அப்பட்டமான மதவாத அரசியல். தேர்தலில், தி.மு.க., பெற்ற வெற்றியை, கிறிஸ்துவர்கள் போட்ட பிச்சை என்று பாதிரியார் ஒருவர் பகிரங்கமாக கூறினார்.
தற்போது, மக்கள் வரிப்பணத்தை நிதியாக வழங்கி, சர்ச்சுகளில் புனரமைப்பு பணிகள், அரசு சார்பில் நடத்தப்படுகிறது. அதில் ஒரு பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்
அந்த பணியை கூட, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்ததில்லை. அன்னிய மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதோடு, நேரடியாக அந்த பண்டிகைகளில் பங்கேற்று மகிழும் ஸ்டாலினை, சர்ச்சுக்கு செல்வதும் மத நம்பிக்கை தான் என அவரது பகுத்தறிவு தடுக்கவில்லை.
ஹிந்து பண்டிகை, ஹிந்து கோவில்கள் என்றால் மட்டும், அவருக்கு பகுத்தறிவு குறுக்கே வந்து தடுக்கிறது. இஸ்லாமிய மாணவர்கள், பத்து பேர் வெளிநாடு சென்று பயில, 3.60 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை ஸ்டாலின் வழங்கினார்.
இது போன்ற அவரது நடவடிக்கைகள், அவர் மதச் சார்பற்றவராக இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. முதல்வர் ஸ்டாலின் நடுநிலையோடு நடப்பார் என எதிர்பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
ஹிந்துக்கள் 85 சதவீதத்துக்கு மேல் இருந்தும் மரியாதை இல்லை. ஆனால், 15 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள சிறுபான்மையினரின் ஓட்டுக்காக, அவர்களின் ஏவலாளாக தி.மு.க., செயல்படுகிறது.
ஹிந்துக்கள் ஒன்றிணைந்து, ஹிந்துக்களை மதிப்பவருக்கு மட்டுமே ஓட்டளிக்க வேண்டும். அது தான் வருங்காலத்தில் நமக்கு பாதுகாப்பு. இவ்வாறு, காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.
****
மைசூரில் கண்கவர் யானைகள் அணிவகுப்பு
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவில் கடைசி நாளான தசரா நாளில் கண் கவர் யானைகள் அணிவகுப்பு நடைபெற்றது. கஜப் படைகள் அணிவகுத்து சென்றன. 750 கிலோ தங்க அம்பாரியில் அமர்ந்து ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் அருள் பாலித்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குவிந்து இந்த கண்கொள்ளா காட்சியை கண்டனர். பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
கஜப் படைகளுக்கு தலைமை தாங்கி வழிநடத்தி செல்லும் அபிமன்யு மீது தங்க அம்பாரியில் அமர்ந்து அம்மன் அருள் பாலித்தார்.
மைசூர் அரண்மனையில் இருந்து தொடங்கிய ஊர்வலம், மைசூரின் முக்கிய சாலைகள் வழியாக அணிவகுத்துச் சென்று மாலையில் வன்னி மண்டபத்தில் முடிந்தது.
பாலக்காடு, கொடுந்திரபுள்ளி அக்ரஹாரம் ஆதிகே சவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், மகாநவமி நவராத்திரி உற்சவம் விமர்சையாக நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காட்டில் கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஆதிகேசவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் மகாநதி நவராத்திரி உற்சவம் நடக்கிறது.
அயிலூர் அனந்தநாராயணன் மாராரின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற பஞ்சவாத்தியம் முழங்க, ஆடை ஆபரணங்கள் அணிந்து, முத்துமணி குடை சூடிய யானைகள் அணிவகுப்பில் ‘காழ்ச்ச சீவேலி’ நடந்தது.
அதன்பின், 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற ‘பஞ்சாரிமேளம்’ என்ற செண்டைமேளம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை, 4:30 மணிக்கு பஞ்சவாத்தியம், சிங்காரி மேளம், பூக்காவடி, நாதஸ்வரம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்த, 15 யானைகளின் அணிவகுப்பில் முத்து மணி வண்ண குடை மாற்றம் நிகழ்ச்சி நடந்தது.
****
ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடிபுகழாரம்
100 ஆண்டுகளுக்கு முன் ஆர். எஸ். எஸ் அமைப்பு உருவானது தற்செயல் நிகழ்வு அல்ல என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு பாரம்பரியத்தின் மறுமலர்ச்சி எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் என்றால் தீமையை வென்றது என்ற பொருளைக் கொண்டது எனக் கூறினார். நாட்டிற்காக ஆர்எஸ்எஸ் பல சேவைகளைச் செய்துள்ளதாகக் கூறிய அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாதனைகளைப் பட்டியலிட்டு பேசினார். இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியை குறிக்கும் பண்டிகை விஜயதசமி எனக்கூறிய அவர், 100 ஆண்டுகளுக்கு முன்பு விஜயதசமி நாளில்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு நிறுவப்பட்டது எனத் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் எனத் தெரிவித்த பிரதமர் மோடி, தேசிய நலனே முதன்மையானது என்ற கொள்கையுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்பட்டு வருவதாகக் கூறினார். மேலும், உயர்ந்த குறிக்கோளைப் பின்பற்றி வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தேசத்தை கட்டியெழுப்பும் எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக இந்திய மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றம் நாட்டுக்கு பெரும் சவாலாக உள்ளது,” எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக இந்திய மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றம் நாட்டுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த சவாலை எதிர்கொள்ள, நாடு துடிப்புடன் இருக்க வேண்டும். என்று பிரதமர் மோடி கூறினார்.
சிறப்பு தபால்தலையையும் நூறு ரூபாய் நாணயத்தையும் பிரதமர் நரேந்திர மோடி, வெளியிட்டார் ; அதில் ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் படங்கள் உள்ளன.
*******
வாழும் தெய்வமாக 2 வயது சிறுமி தேர்வு
நேபாளத்தில் வாழும் தெய்வமாக ஆர்யதாரா ஷக்யா என்ற 2 வயது சிறுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், சிறுமியரை அம்மனின் அவதாரமாகக் கருதி வழிபடும் பாரம்பரிய வழக்கம் நடைமுறையில் உள்ளது. நேபாளத்தின் குமாரி என்று அழைக்கப்படும் சிறுமியை, பல கட்ட சோதனைகளுக்குப் பின் தேர்ந்தெடுக்கின்றனர்.
சிறுமியின் உடல், மன வலிமையை சோதித்து அவர் கன்னி தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஹிந்துக்கள், புத்த மதத்தினரால் வழிபடப்படுகிறார். பருவம் எய்தும் வரை அச்சிறுமியை கன்னி தெய்வமாக கருதி பூஜிக்கின்றனர்.
அந்த வகையில், 2017ல் தேர்வான குமாரி த்ரிஷ்ணா ஷக்யாவுக்கு தற்போது 11 வயதானதால் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், நேபாளத்தின் புதிய வாழும் தெய்வமாக ஆர்யதாரா ஷக்யா என்ற சிறுமி தேர்வு செய்யப்பட்டார். அவர் பல்லக்கில் சுமந்து செல்லப்பட்டு, அங்குள்ள மன்னர் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டார். குமாரியாக தேர்ந்தெடுக்கப்படும் சிறுமியர், தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்கின்றனர். பண்டிகைகளுக்காக ஆண்டில் சில முறை மட்டுமே வெளியே அனுப்பப்படுவர்.
அந்நாட்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, குமாரிகள் இப்போது அரண்மனைக்குள் கல்வி கற்கவும், டிவி பார்க்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ஓய்வு பெற்ற குமாரிகளுக்கு அரசு ஒரு சிறிய மாதாந்திர ஓய்வூதியத்தையும் வழங்குகிறது.
***
திருப்பதியில் தங்க ரத தேரோட்டம்
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் தங்க ரதம் 28 டன் எடையில், 32 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது . ஆண்டுக்கு 3 முறை மட்டுமே பக்தர்கள் இதனைக் காண இயலும்.
திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சார்பாக ஆண்டாண்டு காலமாக தேர்த் திருவிழாவை வெகு சிறப்பாக நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு பிரம்மோற்சவத்திலும் தேர்த்திருவிழா 8-ம் நாள் காலை பிரம்மாண்டமான முறையில் மாட வீதிகளில் உலா வரும்.அதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் பக்தர்களுக்கு அருள் புரிவது வழக்கம்., இத்துடன் ஒரு வெள்ளி தேரையும் திருப்பதி தேவஸ்தானத்தின் உருவாக்கினர். அந்தத் தேரில் பிரம்மோற்சவ நாட்களில் உற்சவ மூர்த்திகள் 6-ம் நாள் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஆனால், அந்த வெள்ளித் தேரில் அடிக்கடி மராமத்து பணிகள் நடைபெற்றதால், அதனை மாற்ற வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தீர்மானித்தனர். வெள்ளித் தேருக்கு பதிலாக தங்கத் தேரை ஏற்பாடு செய்யவும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தங்க ரதத்தை செய்ய தமிழக கைவினை தயாரிப்பு சங்கத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் 18 கைவினை கலைஞர்கள் திருமலைக்கு வந்து, அங்கேயே தங்கி இருந்து தங்கத்தேரை தயாரித்தனர். 28 டன் எடை கொண்ட இந்த தங்கத் தேர் 32 அடி உயரம் உள்ளதாகும். இதில் 2,900 கிலோ செப்பு தகடுக்கு 74 கிலோ எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்டது. இதில் 25,000 கிலோ மரம், 18 அங்குலம் செப்பு தகடுகள் 9 அடுக்குகளாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை தயாரிக்க அப்போது ரூ.24.34கோடி செலவானது என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
12 ஆண்டுகள் நிறைவு
2013-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30-ம் தேதி இந்த தங்க ரதத்தின் முதல் தேரோட்டம் நடந்தது.
செப்டம்பர் மாதம் 30-ம் தேதி யன்று , இந்த தங்க ரதம் உருவாக்கப்பட்டு சரியாக 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆண்டுதோறும் இந்த தங்க ரதம் பிரம்மோற்சவம், ரத சப்தமி, ஆனிவார ஆஸ்தானம் ஆகிய 3 நாட்களில் மட்டுமே கோயிலில் வலம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு அக்டோபர் மாதம் 12 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags – World Hindu News, 5-10-2025, Gnanamayam, Broadcast, Vaishnavi
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5-10-25 அன்று ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பப்பட்ட உரை!
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும்
உறவு எலாம் சிந்தித்து உன்னி உகவாதே
அறவன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
மறவாதே தொழுதி ஏத்தி வணங்குமே
திருநாவுக்கரசர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் லால்குடி வட்டத்தில் அமைந்துள்ள திரு அன்பிலாலந்துறை என்னும் திருத்தலம் ஆகும்.
இத்தலம் அன்பிலாலந்துறை, கீழன்பில், ஆலந்துறை போன்ற புராணப்பெயர்களை உடையது. தேவாரத் தலங்களில். காவிரியின் வடகரையில் உள்ள தலங்களில் 57வது தலமாக இது அமைகிறது.
இறைவன் திருநாமம் : பிரம்மபுரீஸ்வரர்,
சத்தியவாகீஸ்வரர், ஆலந்துறையார் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
இறைவி : சௌந்தர நாயகி
தல விருக்ஷம் : ஆலமரம்.
தீர்த்தம் : காயத்ரி தீர்த்தம் சந்திர தீர்த்தம்
இறைவன் இங்கு ஸ்வயம்புவாகவே உருவானவர். கிழக்கு நோக்கி இருந்து அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் பிரம்மா தன் சாபம் நீங்குவதற்காகச் சிவனை வழிபட்டதால் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார்.
சத்திய லோகத்து பிரமனும் வாகீசரும் இங்கு பூஜித்த காரணத்தால் இறைவன் சத்தியவாகீஸ்வரார் என்ற பெயரைப் பெற்றார்.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆகவே அவரால் கோவிலுக்குச் செல்ல முடியாமல் போனது. அப்போது அவர் தூரத்திலிருந்தே பாடலைப் பாட,, விநாயகர் அவருக்குச் செவி சாய்த்துக் கேட்டார். ஆகவே விநாயகர், செவிசாய்த்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அவர் அமர்ந்து ரசிக்கும் ஒரு காட்சியை சிற்பி ஒரு சிற்பமாக வடித்தார். அந்தச் சிற்பத்தை இங்கு காணலாம்.
காதில் குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அவர்களின் குறை தீரும் என்பது ஐதீகம்.
முன் மண்டபத் தூணில் ஒரு பாம்பின் வால் ஒரு புறமும் அதன் தலை மறுபுறமுமாகக் கல்லினுள் நுழைந்து வந்திருப்பது போல ஒரு அழகிய சிற்பம் உள்ளது. இன்னொரு தூணில் இரு பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்க, அவற்றின் மத்தியில் சிவலிங்கம் இருக்கும் சிற்பம் உள்ளது. முருகபிரான் சிவலிங்கத்தை வழிபடும் இன்னொரு சிற்பமும் இங்கு அழகுற அமைந்துள்ளது/
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது இக்கோவில்.
கோவிலின் உள்ளே சப்தமாதர், பிட்சாடனர், விஸ்வநாதர், விசாலாட்சி, பைரவர், முருகன் ஆகியோரது சந்நிதிகள் உள்ளன. காசிக்குச் சமமான தலமாக இரு கருதப்படுகிறது. மாடக்கோயிலாக இருந்த இக்கோவிலை பராந்தக சோழன் விரிவுபடுத்திக் கட்டினான்.
இத்தலத்தில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஒவ்வொரு பதிகம் பாடி அருளியுள்ளனர்.
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத் தணையரங்கம் பேரன்பில் – நாகத்
தணைப்பாற் கடல் கிடக்கு மாதி நெடுமால்
அணைப்பார் கருத்தனா வான்
– திருமழிசை ஆழ்வார் திருவடி போற்றி
திரு அன்பில் 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகும்.
மூலவர் : வடிவழகிய நம்பி, கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
உற்சவர் : சுந்தர ராஜன்
தாயார் : அழகியவல்லி நாச்சியார்
தீர்த்தம்: மண்டூக தீர்த்தம் – கொள்ளிடம்
விமானம் : தாரக விமானம்
காட்சி கண்டவர்கள் : சிவன், பிரம்மா, ஊர்வசி
மூன்றடுக்கு ராஜகோபுரத்தை இக்கோவில் கொண்டுள்ளது. ஆதிசேஷன் மீது சாய்ந்தவாக்கில் சுந்தராஜப் பெருமாள் காட்சி அளிக்கிறார். ஏழே ஏழு தலங்களில் தான் இப்படி சாய்ந்தவாக்கில் தரிசனம் தரும் காட்சி உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.
மஹரிஷி சுதாபர் என்பவர் நீரினுள் அமிழ்ந்து தவம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம் துர்வாச முனிவர் இவரைக் காண வந்தார். நெடுநேரம் காத்திருந்தும் நீரிலிருந்து ரிஷி வெளியில் வரவில்லை. தன்னை அவர் அலட்சியப்படுத்தி விட்டார் என்று கோபம் கொண்ட துர்வாசர் அவரை ஒரு மண்டூகமாக ஆகுமாறு சாபம் கொடுத்தார். மண்டூகம் என்றாள் தவளை என்று பொருள். அந்த ரிஷியும் ஒரு தவளையாக மாறி மண்டூக மஹரிஷி என்ற பெயரைப் பெற்றார். அங்கேயே மஹாவிஷ்ணுவை நோக்கித் தவம் புரிந்து வந்தார்.
அவரது தவத்தை மெச்சிய விஷ்ணு அவருக்குக் காட்சி தந்து அவரது சாபத்தை நீக்கினார். ஆகவே இந்தத் தலத்திற்கு மண்டூகபுரி என்ற ஒரு பெயரும் உண்டு.
சோழ சரித்திர வரலாற்றின் படி சுந்தர சோழன் எதிரிகளை வெல்ல போருக்குப் புறப்படும் முன்னர் இங்கு வந்து தன் உடைவாளை பெருமாளுக்கு முன் வைத்து வணங்கிச் சென்றான் என்றும் போரில் வெற்றி பெற்றான் என்றும் குறிப்புகள் குறிப்பிடுகின்றன. ஆகவே தனது நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் ஏராளமான நிலங்களை இறையிலி நிலமாக இக்கோவிலுக்கு அவன் அளித்தான் என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ பிரம்மபுரீஸ்வரரும் சௌந்தரநாயகி அம்மனும், வடிவழகிய நம்பியும், அழகியவல்லி நாச்சியாரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
11-7-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
உலகின் அதிசய இடங்கள்!
லஸ் மரீஸ்மாஸ் (Las Marismas)– பறவைகளின் புகலிடமான ஒரு சதுப்புநிலம்!
ச. நாகராஜன்
2500 ஆண்டுகளுக்கு முன்னர் போனீஷியன் போர் ஆரம்பித்தது. அது ஸ்பெயினில் தென்மேற்கில் உள்ள க்வாடல்குவீர் (Guadalquivir) நதி வரை பரவியது. 1200 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த விரிகுடாவானது சதுப்பு நிலமாக மாறியது. அப்போது அங்கு ஒரே உப்பு மயமான ஒரு ஏரி உருவானது. அருகிலிருந்த கடல் மண்ணானது அங்கு அவ்வப்பொழுது கொண்டு வந்து தள்ளப்படவே ஒரு நிலப்பகுதியும் உருவானது.
ஸ்பெயினில் உள்ள பெரிய மலைத்தொடரான சியாரா மோரீனா (Sierra Morena)விலிருந்தும் அருகில் உள்ள மலைகளிலிருந்தும் வண்டலும் சகதியும் கீழே வரவே கடற்கரை ஓரமாக ஒரு ஆழமில்லாத நிலப்பகுதி உருவானது.
1980களில் இது 45 மைல் நீளமுள்ளதாக இருந்தது. மணல்குன்றுகள் மட்டும் 8 மைல் நீளத்திற்கு பரவியிருந்தது.
இது தான் லஸ் மரீஸ்மாஸ்!
லஸ் மரீஸ்மாஸ் என்ற ஸ்பானிய சொல்லுக்கான அர்த்தம் சதுப்பு நிலம் என்பதாகும்.
இது காலப்போக்கில் அரச வம்சத்தினருக்கு மட்டுமே உரித்தான வேட்டையாடும் பகுதியாக ஆனது. நான்காம் சாஞ்சோ என்ற மன்னன் 1298ம் ஆண்டு இந்தப் பகுதியை ஜிப்ரால்டர் அருகிலிருந்த டாரிஃபா என்ற நகரை மூர்களின் படையெடுப்பிலிருந்து காத்த வீரனான அலொன்ஸோ பெரிஸ் டீ குஸ்மான் என்ற வீரனுக்கு நன்கொடையாகக் கொடுத்தான்.
அதே சமயம் அவனுக்கு டியூக் ஆஃப் மெடினா-சிண்டோனியா என்ற பட்டமும் அளிக்கப்பட்டது.
இதே வம்சத்தில் வந்த ஏழாம் டியூக் மன்னன் தன் ராணிக் டோனா ஆனாவுக்காக ஒரு அழகிய மாளிகையை நிர்மாணித்தான்.
இந்தப் பகுதியில் இருந்த ஒரே தங்குமிடம் இது தான்.
ஆயிரத்திதொள்ளாயிரத்து ஐம்பதுகளில் ஏராளமான உணவு விடுதிகள் இங்கு தோன்ற ஆரம்பித்தன. அது அற்புதமான இந்த இயற்கைச் சூழலை வெகுவாகப் பாதித்தது. இதனால் கவலை அடைந்த ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானியான டாக்டர் ஜோஸ் வெல்வர்டே ஐரோப்பிய உயிரியல் வல்லுநர்களுடன் இணைந்து உலக விலங்குப் பாதுகாப்பு நிதியின் உதவியுடன் இதைப் பாதுகாப்பு பகுதியாக அறிவித்தார்.1
964ல் 16055 ஏக்கராக இருந்த இது 1969ல் 86450 ஏக்கர் பகுதியைக் கொண்ட பெரும் பகுதியாக ஆக்கப்பட்டு தேசீய பூங்கா என்ற அந்தஸ்தைப் பெற்றது.
கோடோ டொனானா தேசீயப் பூங்கா என்ற பெயரைக் கொண்ட இந்தப் பூங்காவானது அருகி வரும் ஏராளமான ஐரோப்பிய பறவை இனத்திற்கு ஒரு புகலிடமாக ஆனது.
ஸ்பானிய இம்பீரியல் கழுகு, இங்கு வளர ஆரம்பித்தது. 1977 வாக்கில் 60 ஜோடிகள் இங்கு வாழ்ந்தன.
லஸ் மரீஸ்மாஸ் பருவ நிலைக்குத் தகுந்தபடி வேகமாக மாறும் பகுதியாகும்.
க்வாடல்குவீர் நதியில் எப்போதெல்லாம் சியரா நெவேடாவிலிருந்து நீர் வருகிறதோ அப்போதெல்லாம் அது லஸ் மரீஸ்மாஸை வெள்ளக்காடாக்கும். இந்த நீர்ப்பரப்பு இரண்டு அடி ஆழம் கொண்டதாக இருக்கும். ஆகவே அழகிய அன்னப் பறவைகளுக்கும் இதர பறவைகளுக்கும் இது வாழ்விடமாக ஆனது; கூடவே அவற்றின் இனப்பெருக்கத்திற்கும் உதவியது.
வசந்த காலம் வந்தால் கேட்கவே வேண்டாம். ஆண்-பெண் பறவைகள் ஒன்றுக்கொன்று அறைகூவல் விடுத்து மகிழ்ந்திருக்கும் ஒலியால் இந்த பிரதேசமே குதூகல பிரதேசமாக ஆகி விடும்.
173 விதமான அரிய பறவை இனத்தை இங்கு காண முடியும். கறுப்பு பருந்து உள்ளிட்டவை இங்கு தங்கள் கூடுகளை அமைத்துக் கொள்ளும்.
கோடைகாலத்திலோ சூரிய ஒளி அதிகமாகவே நீர் வறண்டு நிலப் பகுதி தோன்ற ஆரம்பிக்கும். அப்போது மான் இனங்கள் உள்ளிட்டவை ஏராளமாக இங்கு வர அரம்பிக்கும்.
இதைப் பார்க்க வனப் படகுகள் தமது சேவையைத் தொடங்கும். பயணிகள் கூட்டமும் அதிகமாகும்!
மொத்தத்தில் உலகில் பார்ப்பதற்கு மிக மிக அரிதான பறவைகளின் சரணாலயம் இது என்றே சொல்லலாம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Village Gods and Goddesses are found all over India. There are three types of village Gods and Goddesses:
1.Gods and Goddesses of Vedic Origin
2.Local Heroes and Heroines with Memorial Stones
3.Persons who self- sacrificed in Sati and Navakandam.
Since it is a vast subject we will look at Village Gods and Goddesses only. All such Gods and Goddesses have Sanskrit names such as Sastha/Ayyanar, Rakkaayee/Vedic Goddess Raka, Kaththaayee/ Kathyayani, Makamaayee /Mahaa Maayaa., Mookkaayee/Mukambhika etc
Kanchi Paramacharya (1894-1994) dispelled the wrong notion that these Gods are of local origin.
The only difference from the big temples and the shelter less, open spaced Village gods is that they are maintained by Non Brahmins. Moreover, they don’t have daily pujas or rituals. During summertime they are celebrated on a grand scale. Lot of Brahmin families hold such Gods and Goddesses as their family deities. Every year, particularly during weddings, birth of new babies they go there and give offerings.
Another difference is offering flesh and wine. This is also over blown by half baked foreigners and Dravidians. They offer meat, fish and wine because they consume it every day. Even Cigarettes, Cigars and Beedies were offered to the village Gods for the same reason.
Sati Stones (Following Parvati’s self -sacrifice in to her father’s Yaga Kundam chaste women also do that; Sati means Parvati), Nava Kandam (Cutting his own body into nine different parts as in Mahabharata) memorials are found all over India. Because Muslim invaders destroyed them in the North, we see a smaller number of monuments in North India. Unfortunately, this topic has not been dealt with on Pan Indian basis.
Kanchi Paramacharya mentioned this type of worship in his lectures. Dr R Nagaswamy, world famous archaeologist and historian, has contributed much on this topic. Local villagers raise a memorial for a hero and in course of time, it became temples. In and around Madurai we see such temples.
(author who lived in Madurai visited Peacchi Amman, Chellath Amman, Sittuk Kuruvi Kali Aaththaa temples very often in Madurai. Just before entering Meenakshi temple used to worship Muniswaran in the northern entrance, and Madurai Veeran in the Eastern entrance. He used to go to Mari Amman temple with his mother outside the town and offer silver replicas of Body parts to avoid small pox. His mother used to offer Maa Vilakku/ lighted wicks in the midst of sweet flour. This is to show that Brahmin families worship village Goddesses. Every year during summer, street aster street celebrate their Goddesses and march to Vaigai River to dissolve/immerse the Goddesses they made with clay. Very big crowd with all the music and dance march to the river bank)
Even big temples have village Gods at the entrance or in front of them. Mostly they are outside villages or towns are in the border of a town.
Each festival of such Gods has different customs. Fire Walking is one of them; offering hair, making Gruel or Sweet Pongal for distribution, taking the clay model of goddesses in procession, making temporary Urchava Murtis with clay and paint, immersion on the third day of festival, carrying Umbrellas (Kudai Eduththal) men dressing themselves like females, wearing only neem leaves to hide their private parts etc are found throughout Tamil Nadu.
Dr Nagaswamy has written one article about the references in Raurava Agama about erecting memorials for the departed heroes or saints. Brahmins used to bury the stones under the earth in their gardens.
Orthodox Hindus bury the dead saints and erect Tulsi Plant Brindhavanams for Vaishnavie saints , Adhistanam with Lingas for Saivite saints. Such Samadhis are seen from Kashmir to Kanyakumari.
After Gajabhahu visited the erection of Patni Goddess Stone for Kannaki in Kerala around 132 CE, Patni cult spread all over Ceylon/Sri Lanka. This shows creation of new gods in Hinduism.
Now Samadis of Shirdi Baba, Sathya Sai Baba, Ragavendra, Ma Ananda mayi, Dhargas of Muslim saints, Gurudwaras of departed Sikh Gurus, Maharashtra Hindu sains, Samadhis of great composers are visied by millions. They are all considered Gods and regular pujas are offered. This is to show that hero worship is not new to Hindus.
Renula Devi, Draupati temples are in several places.
Not only villages, even cities have their Goddesses according to Valmiki Ramayana, Silappadikaaram, Manimekali and several other Hindu books.
Greatest of the ancient Tamil poets, Tiru Valluvar justified it in his Kural couplet:
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
7-7-25 அன்று கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
எண்ணத் தெரியும் வண்ணப் பூச்சிகள், பறவைகள், விலங்குகள்!
ச. நாகராஜன்
பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் எண்ணத் தெரியும் என்று சொன்னால் ஆச்சரியம் தான் ஏற்படும். ஆனால் அது உண்மை!
ஜார்ஜியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் உளவியில் பேராசிரியாகப் பணி புரியும் மைக்கேல் பெரான் (MICHEAEL BERAN, PROFESSOR OF PSHCHOLOGY, GEORGIA STATE UNIVERSITY) பெரிய ஆய்வு ஒன்றைச் செய்து பல பூச்சிகள், மெல்லிய உடல்கொண்டவை, பறவைகள், நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள், விலங்குகள் ஆகியவற்றிற்கு அளவுகள் நன்கு தெரியும் என்கிறார்.
நியூமராசிடி (numerosity) என்று கூறப்படும் அளவுகள் பற்றிய அறிவு இவற்றிற்கு இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
உயிர் வாழத் தேவையானது உணவு. உணவை உட்கொண்டு உயிர்வாழ்வதோடு அவை தனது ஜீன்களுக்கு இந்த அறிவைக் கொண்டு செலுத்துகிறது.
தேனீக்கள் பறக்கும் போது எங்கெல்லாம் தேன் அதிகம் உள்ள மலர்களைக் காண்கிறதோ அந்த வளமான பகுதிகளை எண்ணி வைத்துக் கொள்கிறது.
கோல்டன் ஆர்ப் வீவர் ஸ்பைடர் எனப்படும் சிலந்திப்பூச்சிகள் (Nephila clavipes)தங்களது கூட்டில் எத்தனை பூச்சிகளைப் பிடித்து வைத்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்கிறது.
தவளைகளில் துங்க்ரா தவளைகள் (Physalaemus pustulosus) தங்களது செக்ஸ் அழைப்புக்கு இந்த எண்களைத் துணை கொள்கிறது. ஒரு ஆண் தவளை முதலில் சக் என்கிறது. உடனே இன்னொரு ஆண் தவளை சக் என்று பதில் தருகிறது. இந்த சக் என்னும் ஒலிப் போட்டி தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கிறது. கடைசியில் ஒரு தவளை சக்தி இல்லாமல் சக் சொல்லாமல் நின்று விடுகிறது. அதிகமாக சக் சொல்லி, ஜெயித்த தவளை பெண் தவளையை ஈர்த்து செக்ஸில் வெல்கிறது.
பெண் சிங்கங்களை (Panthera leo)எடுத்துக் கொண்டால் எதிரியின் பலத்தை அறிந்து கொள்ள ஹோ என்று கர்ஜிக்கிறது. பதில் கர்ஜனை உடனே வரும். எத்தனை பதில் கர்ஜனைகள் வருகிறது என்பதை எண்ணிக் கொண்டு அதை எதிர்த்துத் தாக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்கிறது.
2024ல் நடந்த ஒரு அதிசய ஆய்வில் பூமியில் உள்ள காக்கைகளில் உள்ள ஒரு அதிசயமான இனமான கேரியன் காக்கைகள் (Corvus corone) நினைவூட்டும் குறிப்புகளாக கா, கா என்று ஒன்று முதல் நான்கு முறை வரை கத்திக் கத்தி செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறது.
ஆனால் இவை அனைத்தும் மனிதனுக்கு நிகாராகாது. என்றாலும் இவைகள் எண் பற்றிய அறிவைக் கொள்ளும் ஒரு ஏ என் எஸ் எனப்படும் அப்ராக்ஸிமேட் நம்பர் சிஸ்டத்தைக் (ANS – Approximate Number System) கொண்டவையாகும்.
இதை விட ஆச்சரியகரமான சம்பவம் ஒன்று 1891-ம் ஆண்டு நிகழ்ந்தது. சாதாரண பள்ளி வாத்தியாரான வில்லியம் வான் ஆஸ்டன் என்பவர் தனது க்ளூஸ் ஹான்ஸ் என்ற குதிரைக்கு கணக்குப் போடும் திறனைக் கற்றுக் கொடுத்தார். ஒரு மேஜை மேல் கொட்டைகளை வைத்தால் எத்தனை இருக்கிறதோ அத்தனை தடவை அது தனது கால் குளம்புகளைத் தட்டிக் காட்டி எண்ணிக்கையைச் சரியாகச் சொல்லும்.
இதனால் கவரப்பட்ட எல்பர்பெல்ட் நகரில் இருந்த ஒரு நகை வியாபாரியான ஹெர் க்ரால் என்பவர் தன்னுடைய குதிரைகளுக்கும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார். அவருடைய நான்கு குதிரைகளான முகம்மது, ஜரீஃப், பெர்டோ மற்றும் ஹான்சென் வர்க்கம் மற்றும் க்யூப் ரூட்டைக் கூட போட ஆரம்பித்தன. இதில் ஆங்கில ஸ்பெல்லிங்கை வேறு அவை தெரிந்து கொண்டன. 34 என்று சொன்னால் இடது கால் குளம்பை மூன்று தடவையும் வலது கால் குளம்பை நான்கு தடவையும் அவை தட்டும்.
இது உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே இது உண்மை தானா என்பதை அறிய நோபல் பரிசு பெற்ற பிரபல சிந்தனையாளரான மௌரிஸ் மேடர்லிங்க் (பிறப்பு28-8-1862 மறைவு 6-5-1949) எல்பர்பெல்ட் நகருக்கு வந்து நேரில் முகம்மதைப் பார்த்தார். குதிரை அவர் பெயரைக் குளம்புகளினால் தட்டிக் கூறி அவரை வரவேற்றது. பல
கணக்குகளை அவர் போட்டார். விடைகளைச் சரியாக குதிரை கூறியது. அதிசயித்த அவர் குதிரை கணக்குப் போடுவது உண்மை தான் என்று கூறினார். உலகமே வியந்தது.
இப்போது நவீன யுகத்தில் இது பற்றிய ஆய்வுகள் தொடர்கின்றன. நாளுக்கு நாள் வரும் சோதனை முடிவுகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
Making bangles, making pounded rice (pohaa),Salt making, Salt selling, Boiling rice for making parboiled rice, Spying work?, Chasing elephants with Sling shots,
Protecting crops from birds and animals, harvesting, cross border attacks to steal cows, recovering stolen cows (this is how ancient Hindus indicate battle readiness; it is in Mahabharata as well), diving for pearls, diving for rare conches called Valampuri Sangu, Fishing, drying fish, selling fish, catching elephant calf etc
தொழில்கள்
அரத்தால் வலைபோழ்தல் , அவள் இடித்தல், உப்பு விற்றால், ஊன்புழுக்கையர்த்தல், ஒற்றுச் செல்லுதல் கவண் கல்லால் யானையை எறிதல், கொழுப்பானவெறிதல், சாத்தெறிதல், சேக் கொள்ளத் தண்ணுமை கொட்டல், தினை காவல் செய்தல், தினை அறுத்தல், நிரை கவர்தல், மீட்டல் , நெல் அரியுணர் தண்ணுமை கொட்டல் மீன் உவத்தல், மீன் விற்றால், முத்துக் குளித்தல், முதைப்புனஞ் சுடுதல், யானைக்கன்றைப் பிடித்தல், வலம்புரி மூழ்குதல்
***
104
Famous assemblies or Judicial Courts
Uranthai Sabha, Kalloor Sabha.
சபைகள்/ அவைகள்
உறந்தை அவை, கள்ளூர் அவை
Some interesting tit bits
In Sangam literature we see B=V
Sabha in Rig Veda changed to Avai because in Tamil , initial letter SA is banned by Tolkappiam.
So, Tamils dropped SA and inserted vowel A+vai/bai
Thi schange is seen in Avestan language which is extinct now.
The Rig Vedic ASVA is changed to ASPA (V=P) in Avestan. We see it in all words in Bengal nowadays. Vangam is pronounced as Bengal. Vandematarm= Bandemataram
No linguist has explained this change linking Tamil, Avestan and Sanskrit.
Now the question is who directed them to change V=B or B=V.
This is a Vedic rule; Paninian rule followed all over the world. It is seen even in Inca culture and Melanesian (Pacific Ocean Islands) languages.
Unless one studies Sanskrit, no one can understand linguistics. I have already shown how letter “J” migrated from India. If we study the route of J around the world one will understand Yaaz= Jazz, Yazpaanam= Jaffna, Yesu=Jesus, Yusuf= Joseph, Yuudha= Jew. Hindus spread the culture and language around the world. Oxford and Cambridge Linguists give ridiculous reasons for this J=Y change, because they don’t know this change is in Sangam Tamil Literature.
புறநானூற்றுப் புலவர் முடி/ நாக/ ராயர் = முடி/ நாக/ ரா ஜர் (ய= ஜ) Poet name is MR NAGARAJAN.
Oldest Tamil poet in Purananuru is MUDI NAAGA RAAYAR; his real name is Mudi NaagaraaJAr. So the J = Y change is seen even in Sangam Tamil Literature. Regal= Royal are derived from Sanskrit RAJA (J=Y). that is why they say Raja= Roya/l. in my previous research paper, I have given examples from more languages.
Those who don’t know Tamil and Sanskrit can’t be linguists!
J sound is found only in ancient Sanskrit; not even in Greek; Jason of Homer is actually Esan (Shiva’s name)
To be continued……………..
Tags- Ancient Tamil Encyclopaedia- Part 16, One Thousand Interesting Facts, Part 16, Akananuru wonders
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Yesterday we saw Skanda/ Murugan in English; here is the Tamil version.
please see the Murugan pictures posted yesterday.
Part- Three
முருகன் பற்றி முப்பது விஷயங்கள் !
1.முருகன் யார் ?
கணபதிக்கு அண்ணன் ; சிவன்- உமா தேவியின் மகன்.
***
2.அவனுக்கு எத்தனை முகங்கள்? ஏன் ?
அவனுக்கு ஆறு முகங்கள். ஏனெனில் அவனை ஆறு கிருத்திகைப் பெண்கள் வளர்த்தார்கள் .
***
3.முருகனுக்கு கார்த்திகேயன், காங்கேயன், சரவண பவன் என்ற பெயர்கள் ஏன் வந்தன ?
அவனைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும் அவன் சரவண பொய்கையில் தோன்றியதால் சரவண பவ என்றும் சிவனின் ஆறு தீப் பொறிகளை கங்கை தாங்கி வந்து, அவன் பிறக்க வழி செய்ததால் காங்கேயன் என்று பெயர்.
வடக்கில் இந்திரனின் மகளான தெய்வயானையையும் தெற்கில் குற மக்கள் வள்ளியையும் மணந்தான்
***
8.முருகன் கொன்ற அரக்கர்கள் யார் ?
வடக்கில் தாரகாசுரனையும் தெற்கில் சூரபதமனையும் அழித்தான். ***
9.சங்கத் தமிழில் முருகன் பற்றி எங்கு அதிகப் பாடல்கள் உள்ளன?
நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையிலும் பல புலவர்கள் பாடிய பரிபாடலிலும் உள்ளன
***
10.முருகனைப் புகழ்ந்து 1300 பாடல்களைப் பாடியவர் யார்?
அருணகிரிநாதர் பாடிய 1300++ பாடல்களில் முருகனின் புகழ் உள்ளது.
***
11. முருகனுக்குரிய பண்டிகைகள் என்ன ?
வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூசம்
***
12.முருகனை எந்த நாட்டு மக்கள் பெருமளவில் வணங்குகிறார்கள் ?
இந்தியாவில் தமிழ்நாடு, வெளியே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் தீவு, சீஷெல்ஸ் தீவு, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் பாரம்பரயமாக முருக வழிபாடு உள்ளது இப்போது உலகம் முழுதும் தமிழர்கள் இருப்பதால் ஏராளமான நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.
***
13.முருகனுக்குப் பிடித்த பிரசாதம் எது?
பஞ்சாமிர்தம்
***
14.பழனியில் ஆண்டி கோலத்தில் இருப்பது ஏன்?
மாம்பழத்தைப் பிரித்துக்கொடுக்கும் போட்டியில் அண்ணன்கணபதி வென்ற முறையை ஆட்சேபித்து கோபித்துக் கொண்டு கோவணத்தை அணிந்து தண்டத்தை ஆயுதகமாக எடுத்துக்கொண்டு பழனி மலைக்குச் சென்றார்; அங்கே தண்டாயுத பாணியாக நிற்கிறார் .
***
15.அறுபடை வீடுகள் யாவை?
திருப்பரங்குன்றம், திருத்தணி திருச்செந்தூர், சுவாமி மலை, பழனி, பழமுதிர்ச்சோலை
***
16.சூர சம்ஹாரம் எங்கு பெரிய விழாவாக நடக்கிறது ?
திருச் செந்தூரில்
***
17.தைப்பூச விழா எங்கு பிரசித்தம்?
மலேஷியாவில் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூசம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது .****
18.இலங்கையில் புகழ்பெற்ற முருகன் கோவில்கள் எவை?
நல்லூர் கந்தசாமி கோவில் கதிர்காம முருகன் கோவில்.
***
19.முருகன் என்றால் என்ன?
அழகன்
***
20.முருகன் பற்றி அருணகிரிநாதர் தவிர வேறு யார் பாடினார்கள் ?
தமிழில் அவ்வையார் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணம் சம்ஸ்க்ருதத்தில் ஸ்காந்தம் மற்றும் காளிதாசன் பாடிய குமார சம்பவம்
***
21.கெளமாரம் என்றால் என்ன?
ஆதிசங்கரர் வகுத்த அறுமதங்களில் முருகனை- குமாரனை- வழிபாடும் பிரிவு கெளமாரம்.
***
22.கார்த்திகைக்கும் முருகனுக்கும் என்ன தொடர்பு ?
முன்னொரு காலத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்த போது சிவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாக நமது புராணங்கள் விளக்குகின்றன. ஆறு தலைகளும் பன்னிரு கைகளும் கொண்டு மயில் வாகனத்தில் பவனி வரும் முருகன் தமிழர் தம் தனிப்பெரும் கடவுள்! கார்த்திகை மாதர் அறுவர் முருகனை வளர்த்ததாகப் புராணம் கூறுகிறது. அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என்பவை ஆறு நட்சத்திரங்கள். இந்த ஆறு பேருமே முருகனை சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்தபோது எடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்தனர்.
xxxx
23.வானத்தில் கார்த்திகை நட்சத்திரம் எங்கே உளது ?
வானத்தில் ஒரையன் ORION (திருவாதிரை, மிருக சீர்ஷம்) நட்சத்திரக் கூட்டத்துக்கு அருகில் உற்று நோக்கினால் ஒரு நட்சத்திரக் கொத்து PLEIADES பிரகாசிக்கும். இதை பைனாக்குலரில் பார்த்தால் ஏழு நட்சத்திரங்கள் தெரியும்; முருகனும் அவரை வளர்த்த ஆறு பெண்களும் என்று நாம் சொல்லலாம். ஒரையன் நட்சத்திரக் கூட்டம் செவ்வக வடிவில் இருப்பதால் யாரும் எளிதில் கண்டுபிடிக்கலாம். நாலு மூலைகளில் நான்கு விண்மீன்கள் இருக்கும். (கார்த்திகை = பிளையடஸ் PLEIADES )
xxxx
24.சங்க இலக்கிய காலத்துக்கு முன்னதாக வந்த நூல் என்று கருதப்படும் தொல்காப்பியத்தில் கார்த்திகை விழா பற்றிய குறிப்பு இருக்கிறதா?
தொல்காப்பியத்தில் கார்த்திகை விழா
வேலி நோக்கிய விளக்கு நிலையும்–
தொல்.பொருள்.புறத்திணை இயல்-35
வேலி நோக்கிய விளக்கு நிலையும்– என்ற சூத்திர வரிகளுக்குப் பொருள் கூறுகையில் “கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு” என்று உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்.
xxxx
25.சங்க இலக்கியத்தில் எந்த நூலில் கார்த்திகைத் திருநாள் விழாவைப் போற்றுகிறார்கள் ?
அகநானூறு நற்றிணை , மலைபடுகடாம் , பரிபாடல் ஆகிய சங்க நூல்கள் இவ்விழாவினாக்க குறிப்பிடுகின்றன.
தொழில் விஷயமாக வெளியூர் என்ற கணவன், கார்த்திகை விழாவுக்கு வரட்டும் என்று மனைவி சொல்லும் பாடல் அகநானூற்றில் (141) இருக்கிறது.
குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருநடுநாள்
அறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி (அகம்.141)
இதே போல அகம்.185, 11, நற்றிணை 202 ஆகிய பாடல்களிலும் கார்த்திகை விழா சிறப்பிக்கப் படுகிறது.
சேயோன் ; சிவப்பு நிறம் உடையோன் அல்லது சிவனின் சேய்= குழந்தை .
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
(குறிஞ்சிக் கடவுள்)
***
27.முருகன் பெண்ணின் வயிற்றில் பிறக்காமல் தீப்பொறி உருவில் பிறந்ததால் அக்கினி பூ ஹு என்றும் அழைப்பார்கள்.
28.கர்நாடக மாநிலத்தில் குக்கே சுப்ரமணியர் கோவிலில் எண்ணற்ற நாகர் சிலைகளுடன் முருகன் கோவில் உள்ளது தமிழ் நாட்டில் குன்று தோராடும் குமாரனாக பல குன்றுகளில் குடிகொண்டுள்ளான். அங்கெல்லாம் பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு சென்று வழிபடுகிறார்கள்.
***
Sydney Murugan Temple, Australia.
30.முருகன் எங்கெங்கு இருப்பான் என்று நக்கீரர் பாடுகிறார் ?
முருகன் இருப்பிடங்கள்
சிறு தினை மலரொடு விரைஇ, மறி அறுத்து,
வாரணக் கொடியொடு வயிற் பட நிறீஇ,
ஊர்ஊர் கொண்ட சீர் கெழு விழவினும், 220
ஆர்வலர் ஏத்த மே வரு நிலையினும்,
வேலன் தைஇய வெறி அயர் களனும்,
காடும் காவும், கவின் பெறு துருத்தியும்,
யாறும் குளனும், வேறு பல் வைப்பும்,
சதுக்கமும் சந்தியும், புதுப் பூங் கடம்பும்,
மன்றமும் பொதியிலும், கந்துடை நிலையினும்
–From Tirumurgaatruppadai
—Subham—
TAGS- part three, Hinduism through 500 Pictures in Tamil and English – படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-3 , முருகன், முப்பது விஷயங்கள்