Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
15-7-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
புத்தோபதேசம்!
ஆறு திசைகளுக்கு நமஸ்காரம் செய்தவருக்கு புத்தர் கூறிய அறிவுரை!
ச. நாகராஜன்
ஆறு திசைகளுக்கு நமஸ்காரம்!
தனது தந்தையின் அறிவுரைக்கு ஏற்ப ஒரு அந்தண இளைஞன் குளித்து விட்டு வந்து நனைந்த துணியுடன் வந்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, ஆகாயம், பாதாளம் ஆகிய ஆறு திசைகளுக்கு நமஸ்காரம் செய்யலானான்.
இதைப் பார்த்த புத்தர், “ என்ன செய்கிறாய்?” என்று கேட்டார்.
உடனே புத்தர், “ உண்மையான ஆறு திசைகள் எவை என்பதைத் தெரிந்து கொள், அப்பனே” என்றார்.
இளைஞன் மிகுந்த ஆர்வத்துடன் அவரை நோக்கி, “:ஐயனே! கூறி அருளுங்கள்” என்று வேண்டினான்.
புத்தர் கூறிய ஆறு திசைகள்!
உடனே புத்தர் கூறலானார்:
தந்தை, தாய் ஆகிய இருவருமே கிழக்கு.
கலைகளைச் சொல்லிக் கொடுத்த குருவே தெற்கு
மனைவியும் குழந்தைகளுமே மேற்கு
நண்பர்களும் உறவினர்களுமே வடக்கு
வேலையாட்களும் பணியாளர்களுமே பாதாளம்
மகான்களே ஆகாயம்
இவர்கள் ஒவ்வொருவருக்கும் செய்ய வேண்டிய கடமைகளையே நீ செய்ய வேண்டும். அது தான் ஆறு திசைகளுக்கு நீ செய்யும் உண்மையான வணக்கம்”
திசைகளின் விளக்கம்!
ஒரு நல்ல மனிதன் ஐந்து விதமாக நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவ வேண்டும். பெருந்தன்மை, பணிவன்பு, அவர்களுக்கு மதிப்புத்தரல், தன்னை நடத்திக் கொள்வது போல அவர்களையும் நடத்துவது, தான் சொல்லிய வார்த்தைகளுக்குத் தக உண்மையாக நடந்து கொள்வது ஆகிய இந்த ஐந்தையும் அவன் கடைப்பிடிக்க வேண்டும். இதுவே வடக்குத் திசைக்கான வணக்கமாகும்.
அவனது நண்பர்களும் உறவினர்களும் அவனை நேசிக்க வேண்டும், அவன் ஆபத்துக்குள்ளாகும் போது அவனைக் கவசமாகக் காக்க வேண்டும், அபாய காலத்தில் அகதியாக சரண் அடைய வேண்டும், பிரச்சனைகள் வரும் போது அவனைக் கைவிடக் கூடாது, அவனது குடும்பத்தின் பால் அவர்கள் அன்பு செலுத்த வேண்டும் – இந்த ஐந்தே வடக்குத் திசை அவனுக்குக் கொடுக்கும் பாதுகாப்பாகும்.
பாதாள லோகத்திற்கு அவன் செய்ய வேண்டியவை ஐந்து. வேலைக்காரர்களின் திறனுக்கு ஏற்ப அவர்களுக்கு வேலை தருவது, அவர்களுக்கு பணமும் உணவும் தருவது, நோய்வாய்ப்பட்ட போது அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பது, விசேஷமான நல்லனவற்றை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது, அவர்களுக்குத் தேவையான பொழுதுபோக்கு வசதிகளைச் செய்து தருவது – ஆகிய இந்த ஐந்துமே ஒருவர் தனது வேலைக்காரர்களுக்குச் செய்ய வேண்டும்.
எஜமானன் எழுவதற்கு முன்பே எழுந்திருப்பது, அவன் உறங்கிய பின்னரே தான் உறங்குவது, தங்களுக்குக் கொடுத்தவற்றில் திருப்தி அடைவது, தமக்கு அளிக்கப்பட்ட வேலைகளைத் திறம்படச் செய்வது,தனது எஜமானனைப் பற்றி எங்கும் நல்ல விதமாகச் சொல்லி அவனது புகழைப் பரப்புவது – இந்த ஐந்துமே வேலைக்காரர்கள் செய்ய வேண்டும்.
இதுவே பாதாள திசைக்கான வணக்கமும் பயனும் ஆகும்.
இப்படி ஒவ்வொரு திசையையும் பற்றிய அவரது விளக்கத்தைக் கேட்ட இளைஞன் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்து அதன் படி வாழலானான்.
இந்த விளக்கங்களை விரிவாக புத்த மத நூலான சிகாலோவத சூத்திரத்தில் காணலாம்.
மனத்தின் வேகமுடையவர் ; காற்றுக்கு இணையாக வேகம் கொண்டவர் ; புலன்களை வென்றவர்;புத்திமான்களில் மிகச் சிறந்தவர்; வாயுவின் மகன்; வானர சேனைகளின் முக்கியத் தலைவன்; ஸ்ரீ ராம தூதனான அவனை தலையால் வணங்குகிறேன்.
ஐன்ஸ்டைன் சொன்ன ஒளியின் வேகத்தை விட வேகமாகச் செல்லக்கூ டியது மனம்; மனத்தின் சக்தியை அறியாத வெள்ளைக்காரர்களுக்கு இது புரிய இன்னும் கொஞ்ச காலம் ஆகும் .நாரதர் போல பிரபஞ்சம் சுற்றும் பயணிகளை அவர்கள் அறியவில்லை!
ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன்.அவனைப் பற்றிய கம்பனின் அருமையான பாடல் ஒன்று உண்டு.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்
இதன் பொருள்:-
அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்
அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு
அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்
****
Vali- Sugriva fighting; Rama shooting with an arrow from behind the tree
யார் கொலோ சொல்லின் செல்வன் !!
கம்ப ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில்தான் அனுமன் என்னும் கதாபாத்திரம் அறிமுகமாகிறான். அதைத்தொடர்ந்து அனுமன்– ராமன் சந்திப்பும், சுக்ரீவன் — ராமன் சந்திப்பும் நடைபெறுகிறது. இதை சுவையாக வருணிக்கிறான் கம்பன்.
“அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு” –
(அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம் கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்).
இராம இலக்குவரை மறைவில் நின்று பார்த்து “கருணையின் கடல் அனையர்” என்று மதிப்பிடுகிறான். பின்னர் அவன் மனதில் தோன்றியதை கம்பன் வருணிக்கும் அழகே தனி:-
“சதமன் அஞ்சுறு நிலையர்
தருமன் அஞ்சுறு சரிதர்
மதனன் அஞ்சுறு வடிவர்
மறலி அஞ்சுறு விறலர்”
பொருள்:–
இந்திரனும் (சதமன்) அஞ்சும் தோற்றத்தை உடையவர்,
தருமதேவனும் கண்டு அஞ்சும் ஒழுக்கம் உடையவர்,
மன்மதனும் (மதனன்) இவர்கள் முன் நிற்க அஞ்சும் அழகர்கள்,
யமனும் (மறலி) அஞ்சும் வீரர்கள்.
என்ன அழகான வருணனை!
அடுத்த ஒரு பாடலில் வள்ளுவன், கடவுளுக்குத் தரும் ‘தனக்குவமை இலாதான்’ என்ற அடைமொழியை கம்பன், அனுமனுக்குச் சூட்டி மகிழ்கிறான். அனுமனை ” தன் பெருங் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான் – என்கிறான் கம்பன் .
Vaanara Sena acceptedd Rama only after testing his strength; Rama was asked to pierce throuh seven strongest trees in Kishkinda (Now Hampi in Karnataka)
ராமனையும் லட்சுமணனையும் நேரில் பார்த்த அநுமன்
“வெல்கம் டு கிஷ்கிந்தா” – என்கிறான். அதாவது “கவ்வை இன்றாக நுங்கள் வரவு” (உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக) என்கிறான்.
இப்படி ஒரு பிரம்மச்சாரிப் பையன் (அனுமன்) வரவேற்றவுடன் ராமலெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று ராமன் வினவுகிறான்..
உடனே அனுமன்,
“யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன் ” என்று பதில் தருகிறான்.
உடனே ராமனும் அனுமனை எடை போட்டு விடுகிறான். அப்பொழுது ராமன் சொன்ன சொற்கள் அனுமனுக்குக் கிடைத்த மிகப் பெரிய பட்டம் ஆகும்!
இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன்
வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ
இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),
இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு வனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா?
வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)?
இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!
***
அனுமனின் சொல்லாற்றல்
அனுமனின் சொல்லாற்றலால் அவனை ‘சொல்லின் செல்வன்’ என்று போற்றுவார் கவிச் சக்ரவர்த்தி கம்பர்.
இந்தக் காலத்தில் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தி போடுவது போல கண்டேன் கற்பினுக்கு அணியை (சீதையை) என்று சொல்லிவிட்டு என் கண்களால் பார்த்தேன் என்றும் சேர்க்கிறான். இக்காலப் பத்திரிக்கைகள் போல சொல்லப்படுகிறது, அறியப் படுகிறது, நம்பப்படுகிறது என்றெல்லாம் சொல்லாமல் என் கண்களால் கண்டேன் என்கிறான். இங்கே அனுமனின் சொல்லாற்றலையும் கம்பனின் கவி புணையும் ஆற்றலையும் ஒருங்கே காண்கிறோம்.
இதனால்தான் ராமன் – அனுமன் முதல் சந்திப்பின் போதே
இல்லாத உலகத்து எங்கும் ஈங்கிவன் இசைகள் கூறக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே – என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற் றன்றே! யார் கொல் இச் சொல்லின் செல்வன்!
வில்லார் தோள் இளைய வீர! விரிஞ்சனோ! விடைவலானோ!
இந்தச் சொல்லின் செல்வன் நான்மறைகளை நாலு வாயாலும் சொல்லும் பிரம்மாவா? மொழிகளுக்கு எல்லாம் மூல முதல்வனான விடை ஏறு சிவ பிரானா? என்று வியக்கிறான் ராமன். காரணம் முதலில் அனுமன் தன்னைப் பணிவுடன் அறிமுகப் படுத்திக் கொண்ட முறை!!
ஆக பொது இடங்களில் பேசுவது எப்படி என்பதில் ஆதி சங்கரரரும் வள்ளுவரும் ஒன்றிப்போவதைக் கண்டு சுவைத்து மகிழலாம்.
***
பணிவுக்கும் துணிவுக்கும் மட்டும் பெயர் எடுத்தவர் ஆஞ்சனேயர் என்று எண்ணிவிடக்கூடாது; கண்மூடித்தனமான பக்திக்கும் அவர் எடுத்துக்காட்டு இதை தாஸ்ய பக்தி என்பர். ராமதாஸனாக விளங்கும் அவரை கிஷ்கிந்தா காண்டத்திலும், சுந்தர காண்டத்திலும் , யுத்த காண்டத்திலும் காணலாம்
இதோ ஒரு கதை :
ஜாம்பவான் மூலம் அனுமனின் பக்தியையும் அளவுகடந்த திறமையையும் அறிகிறோம்; பிராம்மாஸ்த்திரத்தின் தாக்குதலால் , போர்க்களத்தில் லெட்சுமணன் உளப்பட அனைவரும் மூர்ச்சசையாகி இருக்கின்றனர்; ஆனால் விபீஷணன் பாதிக்கப்படவில்லை; அவர் ஒவ்வொருவர் அருகிலும் வந்து உடல்நிலையைச் சோதிக்கிறார். ஜாம்பவான் அருகில் வந்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி :
ஆஞ்சனேயர் உயிருடன் இருக்கிறாரா ?
விபீஷணனுக்கு ஒரு அதிர்ச்சி. ராமர், லட்சுமணர், சுக்ரீவன், அங்கதன் முதலியோர் பற்றிக் கேட்காமல் ஏன் அனுமன் பற்றி மட்டும் விசாரிக்கிறீர்?
என்று வினவினார் விபீஷணன் ..
ஜாம்பவான் பதில் சொல்கிறார் :
அனுமன் ஒருவன் உயிரோடு இருந்தால் அனைவரும் பிழைத்துவிடுவார்கள் அவன் புத்திமான்; பலவான்; காற்றினும் கடுகிச் செல்பவன் அவன் எல்லோருக்கும் உயிர்ப்பிச்சை அளிக்க முடியும் . இதை ராமாயணக் கதையிலும் காண்கிறோம்; சஞ்சீவி பர்வதத்தையே பெயர்த்து எடுத்து வந்து — ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தியது போல– அனைவருக்கும் உயிர்மூச்சினை உண்டாக்கினார்
***
சிவ பெருமானின் அவதாரம் தான் ஹனுமான் என்பதற்கு குறைந்தது மூன்று இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன.
அதில் ஒரு ஆதாரம் , முருகன் புகழ் பாடிய திருப்புகழில் கிடைக்கிறது. இந்த 3 ஆதாரங்களும் ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமையானது ; வால்மீகி சம்ஸ்க்ருதத்தில் எழுதிய ராமாயணம்தான் மிகவும் பழமையானது என்றாலும் பரந்த பாரத பூமியில் செவி வழியாக வந்த எவ்வளவோ செய்திகள் 3000 ராமாயணங்களிலும் ராமன் பற்றிய பாடல்களிலும் கிடைக்கின்றன. இவைகளை எல்லா மொழிகளிலும் இருந்தும் தொகுத்து புஸ்தகமாக வெளியிட்டால் அவை பல தொகுதிகளாக, ஒருவேளை பல நூறு தொதகுதிகளாக வர வேண்டியிருக்கும். கடல் அளவுக்குப் பெருகியது ராமாயணம்; தென்கிழக்கு ஆசியாவுக்குப் பயணம் செய்தால் அங்குள்ள அதிசய வினோத ராமாயணங்களில் நாம் அறியாத புதிய கதைகளைக் கேட்டு ரசிக்கலாம்; அதில் வியப்பில்லை. நம்முடைய சம்ஸ்க்ருத பெயர்கள், இந்தியாவுக்கு வெளியே எத்ததனை விதமான ஸ்பெல்லிங்க்குகளில் எழுதப்படுகிறது என்ற விநோதத்தைக் கண்டால் , இன்னும் வியப்பாக இருக்கும்;
அனுமனின் தாயின் பெயர் அஞ்சனா (அஞ்சனை ); தந்தையின் பெயர் கேசரி . அஞ்சனா என்ற பெண்மணி , சிவபெருமானை வேண்டி பெற்றபிள்ளை அனுமன் என்று பாவார்த்த ராமாயணம் கூறுகிறது. இதை எழுதியவர் மராட்டிய பூமியில் அவதரித்த மஹான் ஏக நாதர் .
தசரதன், புத்ர காமேஷ்டி யாகம் செய்த பின்னர் யாக குண்டத்திலிருந்து வந்த பாயசத்தை மூன்று மனைவியருக்கும் பிரித்துத் தந்ததை வால்மீகி நமக்குச் சொன்னார். அதில் கீழே சிந்திய ஒரு பகுதியை கருடன் எடுத்துச் செல்லவே , அது அஞ்சனை தவம் செய்த காட்டில் விழுந்தது; அதை வாயு பகவான் அஞ்சனை இடம் தந்தான். அவளும் சிவனை நினைந்து அதை அருந்தவே கர்ப்பம் அடைந்து வாயுகுமாரனைப் பெற்றாள் . பிறந்த குழந்தை சிவனுடைய அம்சத்துடன் பிறந்தது .
***
இன்னுமொரு கதை :
ராமன் என்னும் அவதாரம் ராவணன் என்னும் ராட்சசனை அழிக்க வந்தது ; அப்போது வைகுண்டத்தில் அல்லது சொர்க்கத்தில் இருந்த ஒவ்வொருவரும் பூமியில் வெவ்வேறு பெயர்களில் தோன்றினார்கள். தேவர்கள் வானரங்களாகவும், சிவ பெருமான் அனு மானாகவும் அவதரித்து ராவண ஸம்ஹரத்தில் உதவினார்.
இதை ஏகநாதர் பாடல்களும் , அருணகிரி நாதரின் திருப்புகழும் , துளசிதாஸரின் ஹனுமான் சாலீசாவும் சொல்கினறன.
அனுமன் சிவனின் அவதாரம்
கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று
கடையில் வந்து உதித்து குழந்தை வடிவாகி
கழுவி அங்கு எடுத்து சுரந்த முலை அருந்துவிக்க கிடந்து
கதறி அங்கை கொட்டி தவழ்ந்து நடமாடி
அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை
அவை அணிந்து முற்றி கிளர்ந்து வயது ஏறி
அரிய பெண்கள் நட்பை புணர்ந்து பிணி உழன்று சுற்றித்திரிந்தது
அமையும் உன் க்ருபை சித்தம் என்று பெறுவேனோ
இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி
இறைவன் எண்கு இன கர்த்தன் என்றும் நெடு நீலன்
எரியது என்றும் ருத்ரற் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனம் மேவ
அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற
அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே
அயனையும் புடைத்து சினந்து உலகமும் படைத்து பரிந்து
அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே
பொருள்–
கருவிலே சேர்ந்து பத்து மாதங்கள் தாயின் வயிற்றில் இருந்து
கரு முற்றிப் பக்குவம் அடைந்து கடைசியில் பூமியில் வந்து பிறந்து
குழந்தையின் வடிவத்தில் தோன்றி, குழந்தையை அங்கு கழுவியெடுத்து, சுரக்கும் முலைப்பாலை ஊட்டுவிக்க தரையிலே கிடந்தும், அழுதும், உள்ளங்கையைக் கொட்டியும், தவழ்ந்தும், நடை பழகியும், அரைநாண் கட்டியும், காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும், பொன் கொலுசு, தண்டை அவைகளை அணிந்தும், முதிர்ந்து வளர்ந்து வயது ஏறி,அருமையான பெண்களின் நட்பைப் பூண்டு,
சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன் (அவன் அம்சமாக வாலி) வெற்றி வானர அரசர்களாகவும், ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த பிரமன் கரடி இனத் தலைவன் (ஜாம்பவான்) ஆகவும், நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும், ருத்திர அம்சம் அநுமன் என்றும், ஒப்பில்லாத தேவர்கள் யாவரும் இன்னின்ன வகைகளிலே வந்து இப் பூமியில் சேர்ந்திட, (இவர்களே) தன் அரிய படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து, அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன் புகழும் குணம் வாய்ந்த மருமகனே, பிரம்மாவையும் கோபித்து, (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும் அன்புடன் அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
***
ஹனுமான் சாலீசா
ஶங்கர ஸுவன கேஸரீ நன்த³ன ।
தேஜ ப்ரதாப மஹாஜக³ வன்த³ன ॥ 6 ॥
வித்³யாவான கு³ணீ அதி சாதுர ।
ராம காஜ கரிவே கோ ஆதுர ॥ 7 ॥
பொருள்
. நீங்கள் சிவபெருமானின் அவதாரம் பரிசுத்தமான, ஏகாந்தமான, அழகான கைலாச பர்வதத்தில் அமர்ந்து ராம நாம ஜபம் செய்கிறீர்கள் ; உங்களுடைய இருதயம் என்னும் காட்டில் ராமன் எபோதும் உலவிக்கொண்டு இருக்கிறார். ராமாவதார நோக்கத்தை நிறைவேற்ற நீங்களே கேசரி மைந்தனாக அவதரித்தீர்கள் புகழ் ஒளியாலும் , வீரத்தாலும் உயர்ந்த உங்களை உலகமே தொழுது நிற்கிறது என்று உரைகாரர்கள் விளக்கியுள்ளனர்.
8.ஆழம் காண முடியாத அறிவுடையவர் நீங்கள்; நற்குணங்களும் செயலாற்றுவதில் பெரும் திறமையும் வாய்க்கப் பெற்றவர் .ராமனுக்குப் பணி செய்வதையே குறிக்கோளாக உடையவர்.
ஆக துளசிதாஸர் , ஏகநாதர் , அருணகிரி நாதர் மூவரும் அனுமனை சிவனின் அம்சமாகவே கருதுகின்றனர்.
to be continued………………….
tags–Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-7, Part Seven, அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி,கண்டெனன் கற்பினுக்கு அணியை, சொல்லின் செல்வன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Hanuman , monkey faced God is a great devotee of Rama , one of the ten Avatars/ incarnation of Vishnu. He is a popular god throughout India, particularly in the north. Almost all villages have a shrine for hanuman also known as Anjaneya .
He is the son of wind god Vayu and Anjana and so called Maruti , Vayu putra and Anjaneya ; and being the messenger of Lord Rama , he is also known as Rama duta.
Valmiki in Sanskrit and Kamban in Tamil describe his adventures and heroic acts in three cantos from Kishkinda Kaanda to Yuddha kaanda of Ramayana.
Valmiki illustrated him as a person with two hands folded together and raised above head. This means I bow and worship you from head to foot, Sirasaa namaami .
***
Hanu means jaw and his jaw was deformed in an incident and so he is called Hanuman
There are two scientific explanations,
The vaanara – vana + nara= Vaanara= forest men shows that they deformed their jaw as a custom ; this type of body or mouth or ear alteration is seen around the world in certain tribes.
Second explanation is they wore monkey emblem or monkey masks. He is shown as a normal man when he met Rama and Lakshmana for the first time. More over Ramayana has bear people,eagle people as well showing more totem symbols. In paintings they were shown with animal face just to explain it to common people.
Even Sangam Tamil literature describes a painting in Tirupparankundram where Indra is shown as a cat in the Ahalya episode. It is written 2000 years ago.
When Hanuman saw his master Rama and his brother Lakshmana faint with fatigue on the battle field of Lanka, he flew in an amazingly short time to the Himalaya. He uprooted the whole hill with rare herbs that have power to raise a dead man to life and returned to Lanka to revive Rama and Lakshmana and with them also thousands of monkeys.
His heroism, strength and devotion are always admired, and these characteristics are shown in his statues and idols. Kings erected hanuman shrines at the gates of their forts to infuse into the hearts of their fighting men the spirit of heroism.
Sometimes he is represented with hands showing the Abhaya and Varadha postures. He is Brahmachari
Hanuman in Ramayana had super human powers. He was able to fly with tremendous speed. He jumped from India to Ceylon/ Sri Lanka in one bound; he tore up trees, carried away big rocks, even hills and performed many other wonderful tasks.
He tackled all hurdles on the way to Lanka in different ways; this served as a management lesson in solving problems.
In one of his fights with the rakshasas /demons they greased his tail and set it on fire, but to their own destruction, for with it Hanuman burnt down their capital city.
Along with his army of monkeys, he built a bridge to Lanka so that his army could march towards Lanka. He killed several demons in the battle.
When he met Rama in Kishkinda he made Rama and Sugriva, King of Kishkinda to sign a friendship treaty. As a result of which, Vali, sugriva’s brother was killed by Rama.
After Rama killed Ravana, demon king of Lanka, Hanuman accompanied Rama and Sita to Ayodhya and there he received from him the reward of perpetual youth and life. So he is one of the SEVEN CHIRANJEEVIS, never dying seven. This means his service will be remembered for generations.
Hanuman was well versed in grammar according to Valmiki and Kamban
Tulsidas attributes great powers like Ashtama Siddhis (Eight Types of Superhuman powers) to Anjaneya in his Hanuman chaalisaa. Millions of Hindus recite it every day
to be continued……………….
Hinduism through 500 Pictures, in Tamil and English, படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-6, Part Six, Hanuman, Anjaneya
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
13-7-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
ஏஐ என்னும் அதிசயம்!
அன்றாட வாழ்வில் புகுந்து விட்ட ஏஐ!
ச. நாகராஜன்
முழுக்க முழுக்க ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் புகுந்து விட்டது ஏஐ.
இனி அதை நீக்கவே முடியாது. ஆகவே ஏற்றுக் கொள்ள வேண்டியது தான் – வேறு வழியே இல்லை.
கோல்ட்மேன் சாச்ஸ் குழுமம் (Goldman Sachs Group), ஏஐ வந்ததால் உலகில் 30 கோடி பேருக்கு வேலை பறி போகும் என்று கூறுகிறது. 2025இல் இப்போதே 76440 பேர்கள் வேலையை இழந்து விட்டனர் என்று கூறுகிறது.
ஏஐ வரவால் அதற்கான சந்தை 243.70 பில்லியன் டாலருக்கு விரிவடைந்து விட்டது. 2030க்குள் அது 826.70 பில்லியன் டாலருக்கு விரிவடையும் என்பது கணிப்பு. (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு சுமார் ரூ 85/)
ஏஐ 12 கோடி பேர்களுக்கு புதிய வேலை வாய்ப்பைத் தரும். அது கூடிக் கொண்டே போகும் என்பது இன்னொரு பார்வை!
ஏஐ-யை ஏற்றுக் கொள்ளும் வணிகம் மட்டுமே இனி உலகில் நிற்கும்.
2025 முடிவதற்குள் ஏஐ தனது நிலையை உறுதி செய்து கொள்ளும்.
ஐந்து துறைகளில் ஏஐயின் ஆதிக்கம்
உடல்நலம் பேணும் ஆரோக்கியம் என்ற துறையில் அது ஏற்கனவே வியாதிகளைப் பற்றி துல்லியமாக அறிவிக்க ஆரம்பித்து விட்டது. சிகிச்சை எப்படி கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் சொல்ல ஆரம்பித்து விட்டது.
நிதித் துறையில் தவறான ஃபிராடு பரிமாற்றங்களை அல்காரிதம் கண்டு பிடிக்க ஆரம்பித்து விட்டது.
கல்வித் துறையில் ஏஐ கருவிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் தேவையானவற்றைக் கற்றுக் கொடுக்கத் தயார். ஒவ்வொருவருடைய முன்னேற்றம். கிரேடு ஆகியவை பற்றி ஏஐ நிர்ணயித்து அறிக்கை தந்து விடும்.
போக்குவரத்துத் துறையில் கார்கள் சிக்னலில் தானே நிற்கும். தானே புறப்படும். பயணிகளின் பாதுகாப்பு முன் எப்போதும் இல்லாதபடி அற்புதமாக இருக்கும்.
பொழுதுபோக்குத் துறையில், இனி நெட்ஃபிளிக்ஸ் போன்றவை ஏஐ சிபாரிசு செய்யும் படங்களையே தனது வாடிக்கையாளர்களுக்குக் காட்டும். அட, ஏஐ-யே நல்ல படம் என்று சர்டிபிகேட் கொடுத்து விட்டதா, நம்பிப் பார்க்கலாம் என்று வாடிக்கையாளர்கள் அதிக அளவில் படங்களைப் பார்க்க ஆரம்பிப்பர்.
சந்தேகப்படுவோரின் கேள்விகள்!
ஆனால் ஏஐ பற்றிப் பயப்படுவோர் கூறுவது என்ன தெரியுமா?
பதிக்கப்படும் தரவுகளில் (DATA) ஏற்கனவே பாரபட்சம் காண்பிக்கப்பட்டு அவை ஏற்றப்பட்டால் முடிவுகள் தவறாகவே இருக்கும்.
ஏராளமான அந்தரங்க விஷயங்கள் ஒவ்வொருவர் பற்றியும் தரவுகளாக ஏற்றப்படுவதால் அவை பாதுகாப்பாக இருக்குமா? ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க முடியுமா?
எல்லாமே மெஷின் மயம் என்றால் மனிதர்களுக்கு என்ன வேலை? வேலை இழந்தோரும் வேலை தேடுவோரும் உலகில் என்றுமில்லாத அளவில் அதிகமாக இருப்பார்களா?
ஏஐ அமைப்புகள் ஆரோக்கியத் துறையில் முடிவுகளை எடுக்கும் போது சிக்கலான கேஸ்களில் அது சரிப்படுமா?
சரி, யார் இந்த ஏஐயின் முடிவுகள் எல்லாம் சரிதான் என்று நிர்ணயிப்பது?
ஏஐ உலகைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுமோ?
இவை எல்லாம் ஏஐ பற்றி சந்தேகப்படுவோரின் கேள்விகள்.
உலகளாவிய அளவில் ஏஐயின் உதவி!
விண்வெளியில் செல்லவிருக்கும் மனிதர்களுக்கு ஏஐ பெரிதும் உதவி செய்யப் போகிறது.
புவி வெப்பமயமாதலைத் தடுத்து ஆரோக்கியமான லட்சிய காலநிலையை ஏஐ கொண்டு வரப் போகிறது.
கலைகளை வேற லெவலுக்கு ஏஐ கொண்டு செல்லும்.
திரைப்படத்துறையிலும் இசைத் துறையிலும் ஒரு பெரும் புரட்சி ஏஐயால் ஏற்படும்.
கதைகள், கட்டுரைகள், கவிதைகள் இனி மனிதர்கள் படைப்பது போல இருக்காது. அது வேற லெவலில் இருக்கும்.
அன்றாடம் செய்தித்தாள்களை எடுத்தால் குழந்தைகளுக்கு ஏஐ மூலம் படிப்பு சொல்லித் தரப்படும் என்பதில் ஆரம்பித்து சாடலைட் ஏவுவதற்கு ஏஐயின் உதவி என்பது வரை ஏராளமானவற்றைப் பார்த்து வியக்கிறோம்!
ஏஐ என்னும் அதிசயம் இன்னும் என்னென்ன மாயாஜாலம் செய்யப் போகிறதோ, தெரியவில்லை!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
116.
Guide to Decipher Harappan Script! Strange names in Tamil Sangam Literature! (Post No.15,064)
Names of Sangam Tamil poets reveal many secrets to us. For some strange reason they used EYE in 64 names out of 470++ names.
We may use it in deciphering Indus Script. Many scholars said Fish symbol in Harappan script represent Star. But I would like to apply it for EYE. In the same way if we identify the prefixes mentioned below, we may decipher Indus Script one day.
We have got Tamil names of at least 470 poets from Sangam Literature My research shows some similarities with Sanskrit and some peculiarities as well.
***
117.
EYE names
The strangest thing about Tamil names in Sangam period is an obsession with EYE!
Over 60 poets have EYE in their names. It is KAN in Tamil.
In Sanskrit we have several words for EYE used in naming children :
Visaalaakshi
Kaamaakshi
Meenaakshi
Neelaayathaakshi
Nayanatara
Trayambaka
Sulochana
Pundareekaakshan
Meena lochani
Nayana, Nethra, Lochana, Akshi etc are words for eye in Sanskrit.
In Tamil KAN only used for Eye in 64 names
***
118.
PREFIX like Sanskrit
In Sanskrit names, we have more prefix in names; SU means Good; in Tamil Nal, Nar, Nap (=Su) are used in 32 names.
In the same way Senior (Jyeshta=Muuththa or Muthu) and Junior (Kanishta= Ilam) are fixed as prefix. This is also in Sanskrit
Jeshta = senior, Elder; Kanishta – Junior.
In Western countries they use it at the end; George Bush Sr
George Bush Jr.
In Tamil,and Sanskrit iit s always prefix!
***
119.
Colours also used in both languages as Prefix.
Rudra Aksha – Red Eyed in Skt.
Seng Kannan – Red Eyed in Tam.
In short Tamil and Sanskrit follow the same pattern. But Tamil has more EYEs in their names in Sangam period.
Now Kannan means Lord Krishna; but in Sangam period it meant Eye man; Kanni means Eye woman.
****
120.
சங்கப்புலவர் பெயர்கள் Names of Sangam Tamil Poets
மதுரை – Madurai city used as prefix for 44 poets; City name.
உறையூர் – Uraiyur used for 9 poets ;City name.
கரு – Karur in 12 names ; it was called Vanji ;City name. .
நல்- Nal, Nap, Nak, Nar all Su in Sanskrit- Good in Tamil; Su in Skt.
In Sanskrit we have Su/mathi, Su/lochana, Su/gandhi, Su/keerti, Su/kanya etc
If one reads Vande Mataram of Bankim Chandra Chatterji or Lalita Sahsranama , one can find more SU/good in them
Tamils also followed Sanskrit speakers by using it in 32 names!
நற் -Nar-good
நப் -Nap- Good
கண் – Kan EYE used in 64 names
செங் – Seng Red; only for names have Red colour
தலை – Thalai- Head in at least Nine names
இள – Junior, Young in 34names
கீர – Keera 27 names
பூத –Bhuuta or Pootha 25 names ; it is in Tamil and Sanskrit.
காரி = Kaari- black 2cplaces
முட – Muda – lame- few places.
தத்த- Dutt or Datta – 10 times
in short Tamil and Sanskrit speakers used Young and Old, Colours, Town names , Good etc as Prefix. This may help us to decipher Harappan script!
More research is needed. Tamil list must be compared with 450 names of Rig Vedic seers and over 100 names in Prakrit work Gatha Sapta Sati1
Gundukal Paliyathan has written poems in both Prakrit and Tamil.
–Subham—
Sangam Tamil Poets, names, prefix, Sanskrit, Harappan Script, colours Ancient Tamil Encyclopaedia- Part 18, One Thousand Interesting Facts! – Part 18
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சங்கத் தமிழ் புலவர்களின் 470+++ பெயர்களில் ஒரு அதிசய விஷயம் உள்ளது அறுபதுக்கும் மேலான புலவர்களின் பெயர்களில் “கண்” உள்ளது ; ஸம்ஸ்க்ருதப் புலவர்களின் பெயர்களில் இவ்வளவு கண் இல்லை ; ஆனால் பெண்களின் பெயர்களில் கண் உள்ளது ; ஹரப்பா நாகரிக குறியீடுகளில் கண் என்ற உறுப்பினைக் கண்டுபிடித்துவிட்டால் அவற்றின் பொருளை உணரலாம்
சங்கத் தமிழ்ப் புலவர்களின் பெயர்களில் நீண்ட ஆராய்ச்சி தேவை . பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் தண்ணீரின் மூலம் உடலின் உறுப்புகளைத் தொட்டு 12 மந்திரங்களை சொல்வார்கள் அதில் உள்ள முதல் மந்திரமான கேசவன் என்பதும் கடைசி மந்திரமான தாமோதரனும் சங்கத் தமிழ் புலவர் பெயர்களில் உள்ளன!
சம்ஸ்க்ருதத்தில்
விசாலாக்ஷி – நெடுங்கண்ணி
காமாக்ஷி – காமக்கண்ணி
நீலாயதாக்ஷி – நீலக்கண்ணி
மீனாக்ஷி – மீன் கண்ணி
மீனலோசனி- மீன் கண்ணி
நயனதாரா – நட்சத்திரக் கண்ணி, மின்மினி
கமலாக்ஷி- தாமரைக் கண்ணி
த்ரிநேத்ரன் – முக்கண்ணன், அம்மூவன்
த்ரயம்பகன் – முக்கண்ணன், அம்மூவன்
உருத்திரன் கண்ணனானர் – மிஸ்டர் ருத்திராக்ஷன்
புண்டரீகாக்ஷன் – தாமரைக் கண்ணன்
உலோச்சனார் – கண்ணன்
இவ்வாறு ஆண்கள் பெயர்களிலும் பெண்கள் பெயர்களிலும் நிறைய ‘கண்’கள் உண்டு
ஹரப்பா நாகரிக எழுத்துக்கள் பட எழுத்துக்கள் PICTOGRAPHS ஆகவே கண் படத்தைப் போட்டால் அதை நாம் நேத்ர, த்ரயம்பக , அக்ஷி ,நயன, கண்ணி, தாமரை போன்ற —என்று பல வகைகளில் படிக்கலாம்
ஆகவே என்னுடைய யோஜனை,
ஹரப்பா எழுத்துக்களில் உள்ள மீன் முத்திரையை கண் என்று படிக்க வேண்டும் என்பதே
இதுவரை ஆராய்ந்த நிபுணர்கள் அதை மீன் என்றும் அது நட்சத்திரத்தைக் குறிக்கும் சொல் என்றும் ஆறு கோடுகளுடன் மீன் படம் இருந்தால் அது அறுமீன்கள் என்றும் சொல்லிக் கட்டுரை எழுதினார்கள் இப்படி அகப்பட்டுக்கொண்டதால் அவர்களால் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியவில்லை ஆகையால் நடையை மாற்ற வேண்டும் ; அதாவது மாற்றுச்Break the shell and come out of it
சிந்திக்க வேண்டும்.
மீன் என்பதை தேவர்களுடனும் ஒப்பிடலாம் ஏனெனில் இருவரும் இமைப்பதில்லை ; எடுத்துக் காட்டாக ஆறு கோடுகளுடன் மீன் படம் உள்ள முத்திரையை முருகன் எனலாம்; பன்னிரு கோடுகளுடன் மீன் இருந்தால் அதை சூரியன், ராசி மண்டலம், துவாதச– என்றெல்லாம் படிக்கலாம் ; ஆகவே புது வகையில் சிந்திக்க வேண்டும் Break the shell and come out of it !
அதற்கு சங்கப் புலவர்களின் பெயர்ப் பட்டியல், ரிக் வேத ரிஷிகளின் பெயர்ப் பட்டியல் உதவும் . இதே போல பிராகிருத நூலான காதா சப்த சாதியிலும் நீண்ட புலவர் பட்டியல் உள்ளது அதிலுள்ள குண்டுக்கல் பாலியாதன் சங்கத் தமிழிலும் பாடியுள்ளார்.
ஆகவே ஒரு கண் முத்திரையை மட்டும் சிந்துவெளியில் அடையாளம் கண்டுவிட்டால் பிறகு படிப்பது எளிதாகலாம்
மேலும் சம்ஸ்க்ருதம் போலவே தமிழிலும் PREFIXES முன்னொட்டுகளாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. சம்ஸ்க்ருதத்தில் நல்ல என்பதை சு என்ற முன்னொட்டுகளாகச் சேர்ப்பார்கள்;
சு+ மதி; சு+ லபா; சு +கந்தி; சு +கீர்த்தி– என்று நூற்றுக்கணக்கான பெயர்கள் உண்டு
சங்கத் தமிழ் இலக்கியப் பெயர்களிலும் முன்னொட்டுகள்தான் அதிகம்; நற், நப், நக், இளம் (ஜூயூனியர் ) முது (சீனியர்) இவையெல்லாம் சம்ஸ்க்ருதம் பின்பற்றும் உத்திகள். மஹா என்பதை தமிழ்ப்புலவர்கள் பெரும் என்ற முன்னொட்டுடன் பயன்படுத்தியுள்ளனர் . ஹரப்பாவில் பெயர்களை ஆராய்ந்து ஒரு பெயரைக் கண்டுபிடித்தாலும் புதிய பாதை திறக்கப்படும்!
****
சங்கப்புலவர் பெயர்கள்
மதுரை – 44 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது;
உறையூர் – 9 முறை;
கரு – 12 முறை;
நல்- 32 முறை ; Nal, Nap, Nak, Nar all Su in Sanskrit- Good in Tamil
In Sanskrit we have Sumathi, Sulochana, Sugandhi, Sukeerti, Sukanya etc
Tamils also followed Sanskrit speakers by using it in 32 names;
நற் -Nar-good;
நப் -Nap Good;
கண் – 64 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது!!!
செங்கண்ணன் காரிக்கண்ணன் வெண்கண்ணன்; .
மருத்துவத்தில் வெள்ளைக் கண் என்றால் நோயுள்ள ரத்த சோகை உள்ளவன் என்று பொருள்; ஆனால் மிகவும் வியப்பான விஷயம் சங்கத் தமிழர்களில் சிவப்பு, கருப்பு கலர்களை விட இதைத்தான் அதிகம் பெயர்களில் வைத்துள்ளனர் ! ஏன்? ஏன்? ஏன்?
செங் – – நாலைந்து இடங்களில் மட்டுமே;
தலை – 9 முறை;
இள – 34 முறை;
கீர – 27 முறை;
பூத -25 முறை;
காரி = 2;
முட – 10;
தத்த- 10 முறை;
சு என்ற சம்ஸ்க்ருத முன்னொட்டு பெரும்பலான பெண்கள் பெயர்களில் வருவதைக் கவனிக்கவும் பசலை என்பது பத்ரா நப்பசலை என்பது சுபத்ரா ; இதே போல சுகன்யா/ சுலோச்சனா என்பது நக்கண்ணையாக இருக்கலாம் எப்படியாகிலும் ஸம்ஸ்க்ருதப் பெயர்வைப்பு முறையை அப்படியே தமிழர்கள் பின்பற்றியுள்ளனர்; பாணினி சொன்னபடியே பெண்பாற் பெயர்கள் உள்ளன ; பெண்களின் பெயர்கள் இ அல்லது ஆ வில் முடிய வெந்ததும் தமிழில் ஆ என்பது ஐ என்று முடியும் ; சீதா= சீதை, கீதா= கீதை . ஆர்யா- ஐயை
சிவா- ஷிவானி, பவா- பவானி , வருண= வருணானி;
தமிழில் குறவன் – குறத்தி; ஒருவன்- ஒருத்தி
இது பாணினி சூத்திரப்படி அமைந்த பெயர்கள்
மிஸ்டர் நாகராஜன் என்பதை புற நானூறு – முடி நாக ராயர் என்று எழுதுகிறது அதுவும் ஸம்ஸ்க்ருதப்பெயரே!
–subham—
Tags- லண்டன் சுவாமிநாதன் கைடு, சிந்து சமவெளி, ஹரப்பா எழுத்து, படிப்பது எப்படி ? சங்கத் தமிழ் , புலவர் , பட்டியல் கண் , நயன நேத்ர அக்ஷி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சந்திர சிந்தனை! 10-7-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
சந்திரனுக்கு என்ன நிறம்?
ச.நாகராஜன்
வாரோயோ வெண்ணிலாவே என்று பாடி விட்டு சந்திரனின் நிறம் என்ன என்று கேட்டால் சிரிப்பு தான் வரும் இல்லையா?
அது தான் வெண்ணிலவு என்று பாடி ஆயிற்றே, அப்போது வெண்மை தானே நிறம், இது தெரியவில்லையா என்று கேட்போம்.
ஆனால் சந்திரனுக்கு நிஜமான நிறம் எது?
ப்ளூ மூன், ஹனி மூன், ப்ளட் மூன் என்று பலவேறு விதமாகச் சொல்லி மகிழ்கிறோம் இல்லையா, அந்த சந்திரனின் நிறம் தான் என்ன?
உண்மையில் சொல்லப்போனால் சந்திரன் தானாக எந்த ஒளியையும் உருவாக்குவதில்லை. பதிலாக சந்திரன் சூரியனிடமிருந்து வரும் வெண்மை ஒளியைப் பிரதிபலிக்கிறது, அவ்வளவு தான்!
அப்படியானால் பூமியிலிருந்து பார்க்கும் போது ஏன் பல நிறங்களில் சந்திரன் காட்சி தருகிறான்?
அறிவியல் அறிஞர்கள் சந்திரனிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து ஆராய்ந்தார்கள்.
குறிப்பாக ல்யூனார் அண்ட் ப்ளானிடரி இன்ஸ்டிடியூட்டில் அறிவியல் எங்கேஜ்மெண்ட் மானேஜராகப் பணிபுரியும் பெண்மணி கிறிஸ்டைன் ஷுப்லா (Christine Shubla) தனது ஆய்வின் முடிவில் கூறுவது இது: சந்திரனில் உள்ள அனார்தோஸைட் (anorthosite) என்னும் சாம்பல் நிறக் கல்லே இதற்குக் காரணம். அது ஒளியை உறிஞ்சி எடுத்துக் கொண்டு வெண்மை நிற ஒளியை பூமிக்குப் பிரதிபலித்து அனுப்புகிறது,. ஆகவே சந்திரன் இளஞ்சாம்பல் நிறத்தில் காட்சி அளிக்கிறது.
என்றாலும் பல்வேறு வளிமண்டலச் சூழல்களும் வானியல் நிகழ்வுகளும் சந்திரனுக்கு வெவ்வேறு நிறத்தைப் பூமியிலிருந்து பார்க்கும் போது காட்டுகின்றன.
பூமியிலிருந்து பல்வேறு சமயங்களில் பல்வேறு இடங்களில் இருந்து பார்த்தால் சந்திரன் வெவ்வேறு நிறத்தோடு காட்சி தருவான்.
பூமியின் வளி மண்டலத்தில் பட்டு ஒளி சிதறும் போது சந்திரனின் நிறம் செக்கச் செவேலென சிவப்பாக இருக்கும் இதையே ரத்த சந்திரன் (Blood Moon) அல்லது சிவப்பு நிலவு என்கிறோம்.
ப்ளட் மூன் டே (Blood Moon Day):
பூமியில் பூரண சந்திர கிரகணம் ஏற்படும் போது பூமி நேர்பட சூரிய ஒளி விழாது தடுக்கவே சந்திரன் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள அதன் பிரதிபலிப்பு ஒளியையே வெளி விடுகிறது. இது ரத்தச் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இந்த தினம் தான் இரத்தச் சிவப்பு சந்திர தினமாகும்.(இந்தியாவில் 2025 மார்ச் 14ம் தேதி ப்ளட் மூன் டே வந்தது)
ஒரே வருடத்தில் ஆறு பௌர்ணமியும் நான்கு சிவப்பு நிலவும் வந்தால் பூமி நிச்சயம் அழிந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இதையொட்டி ஜான் சார்லஸ் ஹேஜி என்ற ஒரு பாதிரியார் எழுதிய புத்தகம் சென்ற 2015ஆம் ஆண்டு உலகையே பரபரப்புக்குள்ளாக்கியது. 2014 தொடங்கி 2015 செப்டம்பர் முடிய இந்த மாதிரி நிகழ்வுகள் வந்து விட்டன என்றார் அவர். நல்ல வேளை, இரத்த சந்திரனால் உலகம் அழியவில்லை!
ப்ளூ மூன் (Blue Moon) : ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி வந்தால் அது ப்ளூ மூன் ஆகும். இப்படிப்பட்ட நிகழ்வு அரிதாகவே தான் நிகழும். வளிமண்டலத்தில் உள்ள பெரிய துகள்கள் சந்திரனுக்கு லேசான ஒரு நீல நிறத்தைத் தரும்.
பிங்க் மூன் (Pink Moon): ஏப்ரலில் வரும் முதல் பௌர்ணமியை இளஞ்சிவப்பு சந்திரன் என்று கூறுவது வழக்கம். வட அமெரிக்காவில் மலரும் ஒரு வகை இளஞ்சிவப்பு பாசியை அடிப்படையாகக் கொண்டு இந்த பிங்க் மூன் என்று சந்திரனை அழைக்கும் பழக்கம் வழக்கத்தில் வந்தது.
மஞ்சள் நிலா : வழக்கமாக இரவில் மஞ்சள் நிறமாக காட்சி தருகிறது சந்திரன். இதுவே தான் தங்க நிலா என்று புகழப்படுகிறது!
பகல் நேரத்தில் வானத்தின் அடியில் சந்திரன் ஆரஞ்சு நிறத்திலோ அல்லது சிவப்பாகவோ காட்சி தருகிறது.
இன்னும் வயலட், ஆழ்ந்த சிவப்பு என பல வர்ண ஜாலங்களையும் சந்திரன் நமக்கு அளிக்கிறது.
தமிழ் திரைப்படங்களில் இடம் பெற்ற ஏராளாமான நிலாப் பாடல்களில் வண்ண நிலவே, வண்ண நிலவே என்று ஆரம்பித்து மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் (கண்ணதாசன், முதல் இரவு படம்) வெள்ளி நிலா முற்றத்திலே (கண்ணதாசன் வேட்டைக்காரன் படம்), தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது (கண்ணதாசன், ரத்தத் திலகம் படம்) என தொகுத்துக் கொண்டே போகலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part Five
கிராம தேவதைகள் Village Gods (English version posted yesterday)
இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள் உள்ளன ; ஆயிரக் கணக்கில் நகரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தெய்வம் உண்டு. வால்மீகி ராமாயணத்திலும், சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அந்தந்த நகர தேவதைகளை பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆகையால் கிராம தேவதைகளின் எண்ணிக்கை எண்ணிலடங்கா . மூன்று முக்கிய விஷயங்களை உலகப் புகழ்பெற்ற வரலாற்று, தொல் பொருட் துறை நிபுணர் டாக்டர் இரா. நாகா சாமியும் , நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் தெளிவு படுத்தியுள்ளனர்.
கிராமதேவதைகள் என்பவர்களின் பெயர்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களின் சுருக்கமே !:
காத்யாயனி- காத்தாயி
மூகாம்பிகை – மூக்காயி
மஹா மாயா – மகமாயி
ராகா தேவி – ராக்காயி
இரண்டாவது விஷயம், கிராம தேவதைகளையும் நடு கல் வழிபாட்டையும் பிரித்துப் பார்ப்பது கடினம் ; ஏனெனில் ஊரைக் காத்த ஆண்களையும் பெண்களையும் மக்கள் தெய்வமாக வழிப்பட்டனர்; பல இடங்களில் நடு கல் இருந்த இடங்களில் புகழ்பெற்ற அம்மன் கோவில்கள் உருவாகிவிட்டன .
மூன்றாவது விஷயம், இறந்த கணவநின் சிதையில் தீப்பாய்ந்து உயிர் நீத்தபெண்களும் தெய்வமாகக் கொண்டாடப்பட்டனர் ; அவர்ளையும் கிராம தேவதைகளாக வழிபடுகிறோம் .
இவை தவிர வேறு சில விஷயங்களும் உள்ளன . கிராமக் கோ வில்களில் பிராமணர் அல்லாதோர் பூஜை செய்வதும் கிராமக் கோவில்களில் மிருகங்களைப் பலியியிட்டு வழிபடுவதையும் காண்கிறோம் இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை பீடி , சுருட்டு , கள், சாராயம் ஆகியவற்றையும் நைவேத்தியம் செய்கின்றனர் இது கிராம மக்களின் அன்றாட உணவு ஆகையால் அவற்றை இறைவனுக்குப் படைத்தனர்
இன்னுமொரு முக்கிய விஷயம் ஏராளமான பிராமண குடும்பங்களுக்கு இந்த கிராம தேவதைகள் குல தெய்வம் ஆகும். கல்யாணம், கார்த்திகை என்று வந்தால் அவர்கள் குடும்பத்தோடு சென்று கிராம தேவதைகளுக்கு படையல் வைக்கின்றனர்; கிறிஸ்தவ பிரச்சாரத்துக்காக வந்த வெளிநாட்டினரும் திராவிடர்களும் மார்க்சீய பேர்வழிகளும் இந்த உண்மைகளை மறைத்துப் பொய்யுரை பரப்பினர் .
எல்லா இடங்களிலும் கிராம தேவதைகளின் பெயர்கள் சம்ஸ்க்ருதத்தில் இருக்கும்; அல்லது புராண இதிஹாச புருஷர்களுடன் தொடர்பு இருக்கும். எண்ணற்ற திரவுபதி அம்மன் கோவில்கள், ரேணுகா தேவி கோவில்கள் இவைகளுக்குச் சான்று
இமயம் முதல் குமரி வரை இந்த தெய்வங்கள் இருக்கின்றன. கண்ணகி போன்ற புதிய பத்தினி தெய்வங்களையும் இந்துக்கள் உருவாக்கினார்கள. ஐயப்பன், அய்யனார் சாஸ்தா என்பன ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் ஆர்யா ஏன்பது அஜ்ஜ என்று பிராக்ருதமாக மருவி அய்யன் , அய்யனார் என்று ஆகியது ஆரியங்காவு என்ற கேரளா தலம் ஐயப்பன் கோவில் !ஆர்யை, சிலப்பதிகாரத்தில் ஐயை என்ற கதா பாத்திரமாக வருகிறாள்.
திருக்குறளில் தெய்வங்கள் யார் என்று வள்ளுவர் கூறுகிறார். யார் யார் எல்லாம் தார்மீக வாழ்வு வாழ்ந்தனரோ அவர்கள் எல்லோரும் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறார் இதைக் கடவுள் வாழ்த்தில் சொல்லவில்லை; துறவற இயலில் சொல்லவில்லை இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் சொல்வதால் கிரஹஸ்தர்களும் கடவுள் ஆகலாம் என்கிறார்; ராமர், கிருஷ்ணர், கண்ணகி வாழ்க்கையில் இதைக் காண்கிறோம்
இதோ வள்ளுவன் குறள்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்— குறள் 50:
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
மேலும் இதே அதிகாரத்தில் மனு ஸ்ம்ருதி சொல்லும் பஞ்ச யக்ஞம் என்னும் ஐந்து வேள்விகளையும் சொல்கிறார் இதுவும் இல்லறத்தார் தினமும் செய்வது.
கிராம தேவதைகள் வழிபாடு ஊருக்கு ஊர் வேறுபடும்; இருந்த போதிலும் சில பொதுவான அம்சங்களைக் காணலாம் :
தீ மிதித்தல்; பூக்குழி இறங்கல்;
குடை எடுத்தல் ;
கஞ்சி, கூழ் வார்த்தல்;
பல இடங்களில் வேப்ப இலையை அணிந்து வழிபடுதல்;
சில இடங்களில் ஆண்களும் பெண் வேடம் தரித்தல்;
சாமி ஆடுதல்;
முடி இறக்கல் ;
ஊர் வழக்குகளை நீதி மன்றத்துக்குச் செல்லாமல் சாமி முன் நின்று தலையில் அடித்து சத்தியம் செய்தல் மூலம் தீர்த்துக் கொள்ளல்.
இந்த பூக்குழி இறங்குதல் சதி என்னும் பார்வதி தேவி, கணவனின் பெருமையைக் காக்க தந்தை வளர்த்த யாக குண்டத்தில் பாய்ந்து உயிர் நீத்ததைக் குறிக்கும் வழக்கம் ஆகும்
டாக்டர் நாகசாமி எழுதிய கிராம தேவதை கட்டுரையில் இன்றும் கூட பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் மதுரைச் சித்திரத் திருவிழாவில் பழங்கால பாணியில் உடை அணிந்து வருவதைக் காணலாம் என்கிறார் இந்த உடைகளையும் தண்ணீர் பீச்சும் குழாய்ப் பைகளையும் அவர்கள் காலம் காலமாகக் காத்து வருகின்றனர்
இது போல ஒவ்வொரு ஊரிலும் பல வினோத வழக்கங்கள் உண்டு.
மேலும் பெரிய கோவில்களின் நுழை வாயிலில் அல்லது எதிர்ப்புறத்தில் ஊர்த்தெய்வங்கள் இருப்பதைக் காணலாம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கருப்பணசாமி, மாளிகை புரத்து அம்மன் கோவில், மதுரையில் மீனாட்சி கோவிலில் மதுரைவீரன்,மொட்டைக்கோபுர முனி, அழகர் கோவிலில்18 படி கருப்பண சாமி என்று நீண்ட பட்டியல் உள்ளது
அந்தந்தப் பேட்டை மக்கள் கூடி, தெரு மூலையில் உள்ள காளியம்மனுக்கும், மாரி அம்மனுக்கும் ஆண்டுதோறும் திருவிழா வைத்து கஞ்சி வார்ப்பார்கள்
மதுரையில் வசித்த நான் பேச்சி அம்மன் கோவில், சிட்டுக்குருவி காளி ஆத்தா கோவில், செல்லத்தம்மன் கோவில் புகழ் பெற்ற மாரி அம்மன் கோவிலுக்குச் செல்வது வழக்கம் ; மாரி அம்மனுக்கு ஆண்டுதோறும் மாவிளக்கு வைப்பது என் தாயாரின் வழக்கம்; மேலும் அம்மை நோய் வராமல் இருக்க உடலின் பாகங்களை வெள்ளியால் செய்து உண்டியலில் காணிக்கையாகப் போடுவதும் வழக்கம்; இந்த மாதிரி உடலின்பாகங்களை செய்து இறைவனுக்கு காணிக்கை செலுத்துவது உலகின் பல பகுதிகளில் இருந்தாலும் இன்று நாடு முழுதும் உள்ள ஒரே நாடு இந்தியாதான்!
டாக்ட்டர் இரா நாகசாமி எழுதிய இன்னுமொரு கட்டுரை, சுவையான விசயத்தைத் தருகிறது ஆகம சாஸ்திரத்தில் நடுகல் எடுத்தல் பற்றிய தகவல் அது; ரௌத்திர ஆகமத்தில் விவரங்கள் உள்ளன!
புனித இமய மலையில் கல் எடுத்து அதை புனித கங்கை நதியில் குளிப்பாட்டி சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு சிலை எழுப்பியது இந்து மத வழிபாடு!
இந்துக்களில் வைஷ்ணவப் பெரியார்கள் சமாதி அடைந்தால் துளசிச் செடி பிருந்தாவனங்களையும் சைவப் பெரியார்கள் இறந்தால் சிவலிங்கத்தை எழுப்பி அதி ட்டானங்களையும் கட்டுவார்கள்; இப்போதும் காஞ்சி மடத்த்துக்குச் சென்றால் இரண்டு பெரியார்ககளின் அதிஷ்டானங்களைக் காணலாம். இப்படி ஊருக்கு ஊர் பெரியோரின் சமாதிகள் உண்டு மகாராஷ்டிரத்தில் சமாதி ஆன மஹான்களின் சமாதிகளிலிருந்து மிகப்பெரிய ஊர்வலங்கள் புறப்பட்டு பண்டரி புரத்துக்குக் கால்நடையாகச் செல்கின்றனர்
கிராம தேவதைளைப் பற்றி வெளிநாட்டுக்காரர்கள் எழுதியதை புறக்கணித்து ஆழமாகப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள விழாக்கள் பற்றி பலர் எழுதிய போதிலும் நாடு தழுவிய அளவில் இந்த கிராம தேவதைகளைப் பற்றி யாரும் இதுவரை எழுதவில்லை .
நேற்று டாக்டர் நாகசாமியின் ஆங்கிலக் கட்டுரையை வெளியிட்டேன் இன்று மேலும் இரண்டு கட்டுரைகளை இணைத்துள்ளேன். டாக்டர் நாகசாமியும் தொல்பொருட் துறை அறிஞர் எச் சாஸ்திரியும் எழுதிய கட்டுரைகள் அவை .
நாடு முழுதும் இந்துக்களை பின்பற்றி முஸ்லீம்களும் கூட புனித மகான்களுக்கு தர்கா எழுப்பி வழிபாடு செய்கின்றனர்.
To be continued…………………….
Tags- Hinduism through 500 Pictures in Tamil and English – படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-5 , கிராம தேவதைகள், Village Gods