3.c.Srinivasan family :– Kumari Shreya Srinivasan, Smt Aruna Srinivasan; Sri Srinivasan
4.LIVE SPEECH PLUS VIDEO CLIP BY LATHA KUMAR FROM DETROIT TAMIL SANGAM, USA- SHE SPOKE ABOUT VIPULANANDA’S YAAZ NUL- BOOK ON TAMIL LYRE.
5.INTRO BY MURALI RAJAGOPAL FROM MISCHIGAN, USA
VAISHNAVI ANAND INTRODUCED S. NAGARAJAN
6.TALK BY BENGALURU S NAGARAJAN- ON BHARATI’S GREAT POEMS
7.TAMIL SONG BY SARASWATHI CHANDRASEKARAN
8.MRS BRHANNAYAKI SATHYANARAYANAN TALK ON PUDUCHERY MANAKKULA VINAYAKAR TEMPLE.
9.VAAZKA NIRANTHARAM BY MRS HARINI RAGHU AND MRS UMASHANKAR JEYASHREE
XXXXX
WHAT IS NEW?
INTERNATIONAL BHARATI CENTENARY MEMORIAL COMMITTEE IS BEING FORMED; PLEASE JOIN US.
SPECIAL STUDENTS PROGRAMMES DURING DECEMBER HOLIDAYS.
(PLEASE SEND UR CHIDREN’S SONGS, SPEECHES ETC.). IT IS SCHEDULED FOR 25TH DECEMBER 2020. IF THERE IS OVERWHELMING RESPONSE, IT WILL BE EXTENDED TO ONE MORE DAY.
54 BHARATI SONGS ARE RELEASED IN NEW RAGAS DURING BHARATI MEMORIAL CENTENARY YEAR 2020- 2021. BHARATI PROJECT WAS LAUNCHED LAST MONTH. WE HAVE ALREADY BROADCAST SOME OF BHARATIYAR’S POEMS/SONGS IN NEW RAGAS.
Xxxx
INTRODUCTION TO GNANAMAYAM
WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.
NOW WE HAVE EXTENDED IT ON ONE MORE DAY, ON SUNDAYS.
BOTH OUR BROADCASTS ARE NON POLITICAL ND NON COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS A ONE HOUR BROADCAST FROM LONDON.
TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME
DAYS- MONDAYS AND SUNDAYS
MONDAYS FOR HINDUISM
SUNDAYS FOR TAMIL LANGUAGE
WHO DOES THIS?
I (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து 6-12-2020 தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட
உரை!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.
வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம்
மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
கணபதி சரணம்!
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது புதுச்சேரி என்றும், பாண்டிச்சேரி என்றும், இன்று அழைக்கப்படும் வேதபுரியில் எழுந்தருளியுள்ள மணக்குள விநாயகர் ஆலயம் ஆகும். இந்த ஆலயம் புதுச்சேரி நகரிலேயே அமைந்துள்ளது. சென்னையிலிருந்து இது சுமார் 160 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
மணல் குளத்தின் மீது அமைந்துள்ளதால் இந்த ஆலயத்திற்கு மணக்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் அமைந்தது.
பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பேயே இந்த ஆலயம் இருந்து வந்திருக்கிறது. ஆகவே சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வரலாறைக் கொண்டுள்ள ஆலயம் இது.
கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் விநாயகரின் முன்னிரு கரங்கள் அபயம் அளிக்கின்றன. பின்னால் உள்ள இரு கரங்கள் பாசம் மற்றும் அங்குசம் ஏந்தி உள்ளன.
பெயருக்கேற்றபடி விநாயகர் குளத்தின் மீது இருப்பதால் நீர் சுரக்கும் ஆலயமாக இது உள்ளது. விநாயகருக்கு அருகில் ஒரு குழி உள்ளது. இதன் ஆழத்தை யாராலும் காணமுடியவில்லை. தொடர்ந்து நீர் மட்டும் இங்கு வற்றிடாமல் சுரக்கிறது.
விநாயகரின் பல்வேறு வடிவங்களும் அவரது திருவிளையாடல்களும் சுதைச் சிற்பங்களாக இங்கு சித்தரிக்கப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பாகும்.
பெரிய ராஜகோபுரம் முழுவதுமே தங்கத்தால் வேயப் பட்டுள்ளது. இந்தப் பிள்ளையாருக்கு ஏழரை கிலோ தங்கத்தால் ஆன தங்க ரதமும் உண்டு; வெள்ளி ரதமும் உண்டு. தங்கத்தினால் அமைந்த கோபுரமும், தங்கத் தேரும் கொண்டுள்ள விநாயகர் ஆலயம் பாரதத்திலேயே இது ஒன்று தான்.
இந்த ஆலயத்தில் பள்ளியறை ஒன்று உள்ளது. பள்ளியறையில் இரவு பூஜை முடிந்தவுடன் விநாயகரின் பாதம் மட்டுமே உள்ள உற்சவ விக்ரஹம் பள்ளியறைக்குள்ளே எடுத்துச் செல்லப்படுகிறது. பள்ளியறையின் உள்ளே விநாயகரின் தாயார் சக்தி தேவியார் எழுந்தருளி இருக்கிறார். இப்படிப்பட்ட சிறப்பையும் கொண்ட கோவில் இது ஒன்று தான்.
மேலும் விநாயகரின் மனைவிகளாக சித்தி, புத்தி ஆகிய இருவரும் இங்கு எழுந்தருளியுள்ளனர். சித்தி புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவமும் இங்கு உண்டு.
பிரெஞ்சுக்காரர்கள் ஆயிரத்தி அறுநூறாம் ஆண்டுகளின் முற்பகுதியில் இங்கு வந்தனர். அவர்களில் ஆளும் சில பிரபுக்களுக்கு விநாயகர் கோவில் அங்கு இருப்பது பிடிக்கவில்லை.
கோட்டை ஒன்றை அமைக்க எண்ணம் கொண்ட அவர்கள் கோவிலை அகற்ற முனைந்தனர். உடனடியாக அங்கு வாழ்ந்து வந்த பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் குடும்பங்கள அங்கிருந்து செல்லப் போவதாக அறிவித்தனர். இதனால் அரண்டு போன பிரெஞ்சு தலைமை அந்த எண்ணத்தைக் கைவிட்டது.
இருந்த போதும் ஆட்சியாளர்கள் இந்தப் பிள்ளையாரை அருகிலுள்ள கடலில் தூக்கிப் போடுமாறு பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
அப்படியே அவர்களும் நள்ளிரவில் பிள்ளையாரைக் கடலில் தூக்கிப் போட்டனர். என்ன ஆச்சரியம்! மறுநாள் தனது வழக்கமான இருப்பிடத்தில், ஆலயத்தில் அமர்ந்து, காட்சி அளித்தார் மணக்குளத்து விநாயகர்.
திடுக்கிட்ட ஆட்சியாளர்கள் விநாயகரின் மஹிமையை உணர்ந்து அவரைச் சரணமடைந்தனர்!;
பாண்டிச்சேரியின் பிரபலமான, கவர்னர் ஜெனராலான, டூப்ளே விநாயகரின் பெரும் பக்தரானார். அவர் உள்ளிட்ட பல வெள்ளையருக்கும் அருள் பாலித்ததால் வெள்ளைக்கார பிள்ளையார் என்ற பெயரையும் மணக்குள விநாயகர் பெற்றார்.
மாபெரும் சித்தர்கள் இங்கு வந்து வணங்குவது வழக்கம். அவர்களில் தொள்ளைக்காது சித்தர் என்பவரும் ஒருவர். விநாயகரின் பேரருளுக்குப் பாத்திரமான அவர், தான் சமாதி அடையும் சமயம் அங்கேயே இருக்க விரும்பியதால் அவரது சமாதி, ஆலயத்தின் அருகிலேயே பக்தர்களால அமைக்கப்பட்டது.
மஹரிஷி அரவிந்தர், மஹாகவி பாரதியார் உள்ளிட்ட பல பெரியார்கள் வணங்கிய பிள்ளையார் மணக்குளத்துப் பிள்ளையார்.
பாரதியார் இவர் மீது விநாயகர் நான்மணி மாலை என்ற நூலை இயற்றினார். அற்புதமான நாற்பது பாடல்கள் அடங்கியுள்ள இந்த நூலில் தான், “நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்ற தன் அமர வரிகளை வடித்தார் அவர். “புதுவை விநாயகனே” என்றும் “மணக்குளத்து வள்ளல் பாத மணிமலரே” என்றும் போற்றிய அவர், “மங்கள குணபதி மணக்குளக் கணபதி நெஞ்சக் கமலத்து நிறைந்து அருள் புரிவாய்” என்று வேண்டினார்.
காலம் காலமாக ஆயிரமாயிரம் பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும் மணக்குள விநாயகர் அனைவருக்கும் அனைத்துத் தடைகளையும் நீக்கி சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
உலகப் பெருங்கவிஞனான பாரதியாரின் பாடல்களை பாரதி நூற்றாண்டிலே நினைப்பது, போற்றுவது நமது கடமை!
பாரதியாரைக் கற்று விட்டால் உலகக் கவிஞர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்ட திருப்தி கிடைக்கும். அது மட்டுமின்றி அந்தக் கவிஞர்களையும் தாண்டிய புது கற்பனை ஒளியையும், சிறப்பையும், அவர்கள் சொல்லாத பல புது விஷயங்களையும் அதில் உள்ள நயங்களையும் நாம் காணலாம்.
ஒவ்வொரு பாடலும் ஒரு சுடர் விளக்கு. சில அமுதத் துளிகளை இங்கு பருகி மகிழ்வோம்.
முதலில் பாரதியாரின் ஒரிஜினல் கவித்திறனைப் பார்ப்போம்.
தேனை மறந்திருக்கும் வண்டும், ஒளிச்
சிறப்பை மறந்து விட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
வையம் முழுதும் இல்லை தோழி! ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி.
இதில் வந்திருக்கும் யாரும் சொல்லாத சிறப்பான உவமைகள் அவரை கவிதை வானில் உச்சத்தில் ஏற்றி விடுகின்றன.
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்று கொஞ்சி அழைக்கும் கவிஞர், உன் கண்ணில் நீர் வழிந்தால் – என்னெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா, என்னுயிர் நின்னதன்றோ என்று சொல்லும் போது அதில் இருக்கும் உருக்கத்திற்கு உவமை உண்டா, என்ன?
காலைக் கதிரழகின் கற்பனைகள் பாட வந்த கவிஞன்,
தங்கம் உருக்கித் தழல் குறைத்து தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ என்கிறான். இது என்ன புது ரஸவாதம்! தங்கத்தை உருக்க வேண்டுமாம். பின்னர் அதன் வெப்பத்தை – சூட்டைத் தணிக்க வேண்டுமாம். அதைத் தேனாக்க வேண்டுமாம். பின்னர் எங்கும் பரப்ப வேண்டுமாம். அது காலைக் கதிரழகாம்! கற்பனையின் எல்லையையும் கடக்கிறான் கவிஞன். செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றான் அவன். காதிலே தேன் வந்து பாயும் உவமை ஒரு புறம் இனிமையைத் தர ஆடி வரும் தேனே என்று பிள்ளைக் கனியமுதை அவன் அழைக்கும் பாங்கு உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது!
ராமன் சீதை இலக்குவன் நடந்து செல்லும் காட்சியை வர்ணிக்க வந்த கம்பன் பாடுகிறான் இப்படி:
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி ஜோதியின் மறையப்
பொய்யோவெனும் இடையாளொடும் இளையானுடன் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்
ஐயோ! இவன் அழகை வர்ணிக்க முடியாது என்கிறான் கம்பன். ஐயோ என்னா பந்து வீச்சுடா என்று கிரிக்கெட் மைதானத்தில் பரம ரசிகன் விளையாட்டில் ஒன்றிக் கூறும் ஐயோவில் எத்துணை அழகு இருக்கிறது.
பாரதியோ ஐயோவை விட்டு விட்டு புதுச் சுவையை புதுச் சொல்லில் தருகிறான் குயில் பாட்டில்!
கண் எடுக்காது என்னைக் கணப்பொழுது நோக்கினாள்
சற்றே தலை குனிந்தாள். சாமீ! இவளழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன்.
மங்கை அவளின் ஒரு கணப் பார்வை. சற்றே தலை குனிந்த சமயம். சாமீ! இவளழகை எப்படிக் கூறுவேன் என்று கவிஞன் கூறும் போது கம்பனின் ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான் நம் முன் தோன்றுகிறது. ஐயோ, – சாமீ இதில் எது சிறப்பு மிக்க சொல் என்று யாரால் சொல்ல முடியும்?!
ஊழிக் கூத்தை பாரதி கண்டான், பாடினான்:
வெடிபடு மண்டத்திடிபல் தாளம் போட – வெறும்
வெளியில் இரத்தக் களியொடு பூதம் பாடப் – பாட்டின்
அடிபடு பொருள் உன் அடிபடும் ஒலியில் கூடக் களித்து
ஆடும் காளீ! சாமுண்டீ! கங்காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை!
எத்துணை அற்புதமான கூத்து! எத்துணை அற்புதமான வர்ணனை!
இனி உலகக் கவிஞர்களின் வரிசையிலே சிறப்பான இடத்தைக் கொண்டவன் பாரதி என்பதற்கும் சில உதாரணங்களைச் சுட்டிக் காட்ட முடியும்!
ஷெல்லி தாசன் என்று தன் பெயரைச் சூட்டிக் கொண்ட கவிஞன் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியிலே திளைத்தவன். To Sophia என்ற கவிதையில் ஷெல்லி
Thy Deep Eyes a Double Planet
என்று கூறுவதை சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ என்ற பாரதியின் அழியாத வரியிலே காண முடிகிறது. நமது பாரம்பரியத்திற்கு ஏற்றபடி டபிள் ப்ளானட் சூரிய சந்திரனாகிறது!
குரு கோவிந்த சிங்கின் கர்ஜனை உரையிலே,
சவா லாக் சே ஏக் லடாவூம் சிடியன் தே மை பாஜ துடாவூம் தபை குரு கோவிந்த சிம்ஹ நாம கஹாவூ (सवालाखसेएकलड़ाऊं, चिड़ियनतेमैंबाजतुड़ाऊं, तबैगुरुगोबिंदसिंहनामकहाऊं“)
என்று கூறுகிறார். சிடியா என்றால் சிட்டுக் குருவிகள் பாஜ என்றால் ராஜாளி சிட்டுக்குருவிகள் ராஜாளிகளாகும்!
சவா லாக் -ஒன்றே கால் லட்சம் பேருடன்- ஏக்- ஒரே ஒருவன் சண்டையிடுவான். அப்போது குரு கோவிந்த சிங்கின் பெயரை கேளுங்கள் என்றார்.
இதை, பாரதியார் மிக எளிதாக ‘ஈயை கருட நிலை ஏற்றுவாய்’ என்கிறார்.
இலங்கையிலே தங்க மயமான இலங்கையைக் கண்ட ராமர் லட்சுமணனிடம் இது எனக்கு பெரிதாகத் தெரியவில்லை; ருசிக்கவில்லை; பெற்ற தாயும் எனது தாய்நாடும் சுவர்க்கத்தை விடச் சிறந்ததாகும் என்கிறார்.
இதன் தமிழ் வடிவத்தை ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானிலும் நனி சிறந்தனவே’ என்று தருகிறான் நம் அருமைக் கவிஞன்.
வேத சூக்தங்களை அரவிந்தரிடமிருந்து கற்ற பாரதியார் அப்படியே அவற்றை தமிழ்க் கவிதைகளாகத் தந்துள்ளார்.
அக்னி ஸ்தோமம் என்ற கவிதையில் ரிஷிகள் எங்கள் வேள்விக் கூடமீதில் ஏறுதே தீ தீ தீ என்று வேள்வியைத் தொடங்குகின்றனர்.
இளையும் வந்தாள் கவிதை வந்தால் இரவி வந்தானே – இந்நேரம்
விளையும் எங்கள் தீயினாலே – மேன்மையுற்றோமே
என ரிஷிகள் ஆனந்தக் கூத்திடுகின்றனர்.
பிரெஞ்சு மொழியில் உள்ள தேசீய கீதத்தையும் கூட இரு விதமாக மொழி பெயர்த்துத் தந்திருக்கிறான் நம் கவிஞன்.
‘அன்னை நன்னாட்டின் மக்காள் ஏகுவம்
மன்னு புகழ் நாளிதுவே’ என ஆரம்பிக்கும் அந்த கீதம்!
ஏராளமான கவிஞர்கள் பாரதியை அண்ணாந்து பார்த்து வியக்கின்றனர்.
ஒரு பெரும் முயற்சியாக பாரதி போற்றி ஆயிரம் என்று ஆயிரம் பாடல்களைத் தொகுக்க ஆரம்பித்தேன். அந்த ஆயிரம் பாடல்களும் http://www.tamilandvedas.comஇல் பிரசுரிக்கப்பட்டன.
மரணத்தை வென்ற மகாகவியை கவியரசு கண்ணதாசன் பாடுகிறான் இப்படி;
சந்திரர் சூரியர் உள்ளவரையிலும்
சாவினை வென்று விட்டான் – ஒரு
சாத்திரப் பாட்டினில் பாரததேசத்தின்
தாய்மையை வார்த்து விட்டான்
இந்திர தேவரும் காலில் விழும்படி
என்னென்ன பாடி விட்டான் – அவன்
இன்று நடப்பதை அன்று சொன்னான் புவி
ஏற்றமுரைத்து விட்டான்
வங்கத்து நீரினை மையத்து நாட்டுக்கு
வாரிக் கொணர் என்றான் – அந்த
வானம் அளந்து விஞ்ஞானம் படைத்திட
வாரும் தமிழரென்றான்
சிங்க மராட்டியர் கற்பனைக்கீடொரு
சேரத்துத் தந்தமென்றான் – இந்த
தேச பெருமைக்கு ஆரம்பம் செய்தவன்
பாரதித் தேவன் என்பான்!
பாரதி எனும் பெயரைச் சொல்லு – கெட்ட
பயமெனும் பகைவனை வெல்லு
நேரினி உனக்கு நிகர் இல்லை – உடன்
நீங்கும் அடிமை மனத் தொல்லை என்கிறார் நாமக்கல் கவிஞர்.
பாரதிக்கு வாழ்நாள் முழுவதும் தாசனாக இருந்த பாரதிதாசன் பாரதியைப் பற்றி விரிவாகக் கூறுகிறார் இப்படி:
பைந்தமிழ் தேர்ப்பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை
குவிக்கும் கவிதைக் குயில்! இந்த நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம் பாட வந்த மறவன் புதிய
அறம் பாட வந்த அறிஞன் நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவ்ன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
என்கிறார்.
நான் தொகுத்த ஆயிரம் பாடல்களிலே ஒரு சிலவற்றைப் பார்த்தோம்.
பிரான்ஸென்னும் உயர்ந்த புகழ் நாட்டில் உயர் புலவோரும் பிறரும் ஆங்கே விராவு புகழ் ஆங்கிலத் தீம் கவியரசர் தாமும், சுவை புதிது நயம் புதிது, வளம் புதிது, சொற் புதிது, ஜோதி கொண்ட நவ கவிதை, எந்நாளும் அழியாத மஹா கவிதை என்று பாரதியார் கவிதையை வியந்து கூறியுள்ளனர். அதை இப்படி அவரே கூறி இருக்கிறார்.
இனி இதற்கு மேல் நாம் உரைக்க என்ன இருக்கிறது.
இந்தியர் தம் நெஞ்சினிலே தேசப்பற்றை ஊட்டினான்
வஞ்சக வெள்ளையரை நாட்டைவிட்டு ஓட்டினான்
தமிழர்க்குத் தமிழ் போற்றும் வழி காட்டினான்
புகழோங்கு பாரதத்தை நிலை நாட்டினான்
புதியதொரு பாதையைப் புவியினிலே காட்டினான்
புகழவோர் வார்த்தையிலை புகழுக்கே புகழ் ஊட்டினான்
புண்ணியன் சுப்பிரமணி பாரதியின் பெருமையினை
எண்ணியெண்ணி அவன்வழி நடப்போம் உயர்வோம்
கற்க கசடற பாரதி பாக்களை
நிற்க அதற்குத் தக
என்ற எனது இந்த அஞ்சலிச் சொற்களை பாரதியின் தாளில் சமர்ப்பித்து விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்!
WE BEGIN WITH A PRAYER FROM MRS PAVITHRA MAHESH FROM CHENNAI
XXXX
DR NARAYANAN KANNAN TALKS ON ALVARS AND VAISHNAVAM
XXXX
WHAT IS NEW?
INTERNATIONAL BHARATI CENTENARY MEMORIAL COMMITTEE IS BEING FORMED; PLEASE JOIN US.
SPECIAL STUDENTS PROGRAMMES DURING DECEMBER HOLIDAYS.
(PLEASE SEND UR CHIDREN’S SONGS, SPEECHES ETC.). IT IS SCHEDULED FOR 25TH DECEMBER, 2020. IF THERE IS OVERWHELMING RESPONSE, IT WILL BE EXTENDED TO ANOTHER DAY.
54 BHARATI SONGS ARE RELEASED IN NEW RAGAS DURING BHARATI MEMORIAL CENTENARY YEAR 2020- 2021. BHARATI PROJECT WAS LAUNCHED LAST MONTH. WE HAVE ALREADY BROADCAST SOME OF BHARATIYAR’S POEMS/SONGS IN NEW RAGAS.
XXXX
EVERY SUNDAY FOR TAMIL
EVERY MONDAY FOR HINDUISM
XXX
SAME TIME ONE PM LONDON TIME;
6-30 PM INDIAN TIME
XXX
WHERE ? AT FACEBOOK.COM/GNANAMAYAM
Facebook.com/gnanamayam
XXX
V R HERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE AT FACEBOOK.
IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THE SAME DAY, U CAN WATCH US.
SAME PLACE, SAME TIME ; EVERY SUNDAY, EVERY MONDAY
PROTO INDIAN LANGUAGE CONSISTING OF SANSKRIT AND TAMIL ROOTS IS THE MOTHER OF MOST ANCIENT LANGUAGES. INDIANS SPREAD CIVILISATION THROUGH OUT THE WORLD.
ANY GREEK OR LATIN ROOT CAN BE TRACED BACK TO THIS PROTO-INDIAN LANGUAGE.
SO THERE IS NO DRAVIDIAN LANGUAGE; IT IS AN ABSURD THEORY. FOUR LANGUAGES HAVE MORE OR LESS SIMILAR SOUNDS ; BUT ALL OF THEM HAVE MORE SANSKRIT WORDS, WHICH COME FROM 1970 ROOTS LISTED BY PANINI.
I AM GOING TO SHOW IT IN MY NEXT SERIES OF ARTICLES.
XXX
BASIC LINGUISTIC RULES ARE SAME AND APPLICABLE TO ALL THE LANGUAGES.
IN THE NEXT SERIES I AM GOING TO SHOW THAT THERE ARE ENGLISH AND TAMIL WORD ROOTS IN 2800 YRAR OLD ASHTDHYAAYI OF PANINI.
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவீன ஞான மொழிகள் – 10 Kattukutty
கெட்டவனுக்குக் கூட நன்மை செய், அது தப்பல்ல, ஆனால், நல்லவனுக்கு மட்டும் கெடுதல் செய்யாதே…… அது தர்மம் அல்ல! xxx
அன்று வயதைப் பார்த்து வந்தது மரியாதை, இன்று வசதியைப் பார்த்துத் தான் வருகிறது.
xxxx
தேங்காய் உடைக்கிறார்கள், வாழ்க்கை சிதறிப்போகாமலிருக்க, தேங்காய் பொறுக்குகிறார்கள், வாழ்க்கை சிதறிப்போனவரகள்…….
xxx
VALLUVAR TEMPLE, MYLAPRE
இதுவே உண்மை FEMALE ல்ல MALE இருக்கு, WOMAN ல்ல MAN இருக்கு, SHE லே HE இருக்கு MRS லே MR இருக்கு……….. xxx
உடம்புல வலி இருந்தா MOVE தடவலாம், மனசுல வலி இருந்தா அந்த இடத்தை விட்டு MOVE ஆயிடு……… xxx
பழக வேண்டியது – முதுகுத் தண்டை நேராக வைத்தல் மறக்க வேண்டியது – காபி, டீ, சிகரட், மது செய்ய வேண்டியது – சர்வாங்காசனம் செய்யக்கூடாதது – கெட்ட சகவாசம் குறைக்க வேண்டியது – அதிக தூக்கம் கூடவே கூடாதது – பகலில் தூக்கம் துலக்க வேண்டியது – பகலிலும், இரவிலும் பற்களை உடுக்க வேண்டியது – எளிய உடை சேர்க்க வேண்டியது – ராகியும் கம்பும்
xxxx
கடவுளுக்கு கொடுத்து பக்தனாவதை விட ஏழைக்குக் கொடுத்து இறைவனாகலாம்!!!
xxx
இறந்தவர்களுக்கு சிலை வைத்து மாலை போடுவதை விட இல்லாதவர்க்கு இலை வைத்து சோறு போடுங்கள்……..
xxxx
VALLUVAR, VASUKI
அந்தக் காலத்தில் திரு வள்ளுவர் வாசுகியைக் கூப்பிட்டா வாளி அப்படியே நிற்கும், இப்ப கூப்பிட்டா வாசுகி அப்படியே நிற்பா, வாளி பறந்து வரும் !!!
xxxx
காசு ஆணா??? பெண்ணா??? பொண்ணுதான் சார்….. எப்படி??? தலைக்கு பின்னால் பூ இருக்கே !!! xxxx
நீ முதலில் திருந்து, அதுவே உனக்கு மருந்து !!!
வல்லவன் பம்பரம் மணலிலும் ஆடும்
xxxx
உலகில் ஏழு பாவங்கள்
1.உழைப்பில்லாத சொத்து 2.மனச்சாட்சியில்லாத சொகுசு வாழ்க்கை 3.ஒழுக்கமில்லாத கல்வி 4.நாணயம் இல்லாத வார்த்தை 5.மனித நேயமில்லாத அறிவியல் 6.தியாகமில்லாத பிரார்த்தனை 7.கொள்கையில்லாத அரசியல்
Xxxx
வருமானம் என்பது தண்ணீர் போல ஒரே இடத்திலிருந்து தான் வருது செலவு எனபது வியர்வை போல, எல்லா இடத்திலேர்ந்தும் வருது……