26-10-20 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH (8863-c)

RSS LEADER MOGAN BHAGAVAT

WRITTEN BY LONDON SWAMINATHAN (News Editor, Producer, Gnanamayam)

Post No. 8863-c

Date uploaded in London – –27 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Read by SUJATHA RENGANATHAN .

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at ONE pm London Time and 6-30 Pm Indian Time Every Monday.

Even if you miss our live broadcast on Mondays, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

 Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘AaKaasa DwaniI’ — Read by SUJATHA RENGANATHAN .

Xxx

Rashtriya Swayamsevak Sangh (RSS) chief Mohan Bhagwat on Sunday lashed out at China for encroaching India’s borders during the coronavirus disease (Covid-19) pandemic. In his annual address, Bhagwat said that the world knows China’s expansionist nature.

Bhagwat further asserted that that securing cooperative ties with our neighbours and at international relations is the only way to neutralise the expansionist aspirations of China.

The RSS chief also spoke about the Citizenship Amendment Act. “Citizenship (Amendment) Act not against any religious community, but some people misled our Muslim brothers claiming it was aimed at restricting their population,” he said.

Xxxx

NOW SOME INTERESTING NEWS FROM TELENGANA

Telangana ministers offered special prayers to pacify flooded Hyderabad’s Musi river. In order to calm the flooded Musi, which has ravaged several parts of HYDERABAD, Home Minister Mahmood Ali and Animal Husbandry Minister Talasani Srinivas Yadav on Wednesday performed a special shanti puja, praying to the River Goddess to spare the residents, at the river’s temple at Puranapul on Wednesday.  It is remarkable that Muslim minister also joined the prayers.

They also offered jewellery, silk robes and a chadar at the Musa Qadri Dargah. The Ministers then presented flowers to the tamarind tree that saved 200 people from the floods in 1908.  

Hyderabad Mayor Bonthu Rammohan and Deputy Mayor Baba Fasiuddin also presented flowers to the tamarind tree that still bears fruit.

NOW A REPORT FROM ANDHRA PRADESH

Navaratri celebrations in ANDHRA PRADESH that used to be held in every locality were virtually absent, though the festival started on October 17 and is concluding with Teppotsavam in Krishna River on Sunday.

 Every year, nearly 70,000–80,000 devotees would daily visit Durga temple on Indrakeeladri during Dasara festivities. The rush would cross the one-lakh figure on the auspicious Moola Nakshatram Day, which is the birth star of Goddess Durga. ONLY 25,000 DEVOTEES CAME TO THE TEMPLE THIS YEAR

XXX

NEWS FROM TAMILNADU

A case was registered against Chidambaram MP and VCK president Thirumavalavan at Perambalur police station on Tuesday based on a complaint by Hindu Munani functionary.

The complaint was against his speech at an event in Pondicherry last week. Hindu Munani Perambalur town secretary Kannan filed the complaint against the VCK chief for allegedly ‘insulting Hindu religion and fanning religious tensions’.

“At an event in Pondicherry, Thirumavalavan spoke in a way that degraded Hindu gods and our faith. He has insulted the sentiments of Hindus. The video is spreading and is hurting our faith,” said Kannan in the complaint.

The Chennai city police have ALSO registered a case against VCK leader Thol Thirumavalavan for promoting enmity against different religious groups over his comment on Manusmriti on Friday.  The police have registered a case based on an online complaint by BJP legal cell state secretary Ashwathaman on Friday.

The controversy between the BJP and VCK started after a video clip from September went viral on social media. During a webinar organised on Periyar and Indian politics, VCK MP Thol Thirumavalavan ALLEGDELY MADE SOME DEROGATORY REMARKS AGAINST WOMEN.

XXX

NOW A REPORT FROM UTTAR PRADESH…………………….

Ayodhya Ramlila  FESTIVAL Organisers claim over 10 crore viewers watched RAM LILA PROGRAMMES ON TELEVISION.  Due to the coronavirus protocol, people are not allowed to watch the performance at the venue.

XXX

THAT IS THE END OF ‘AaKaaSA Dwani’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –

READ BY SUJATHA RENGANATHAN.

Please Wait for our Tamil News Bulletin

Now I pass it on to VAISHNAVI ANAND

SUJATHA RENGANATHAN

tags – World Hindu news 261020

கொல்லூர் மூகாம்பிகை தலம் (Post 8863-b)

. WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 8863-b

Date uploaded in London – –27 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

26-10-2020 அன்று இந்திய நேரப்படி மாலை 6.30 ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற பங்களூர் செய்தி மடல்!

***

ஞானமயம் வழங்கும் பங்களூர் செய்தி மடல். வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!

ஒரு வரிச் செய்திகளைத் தொடர்ந்து புகழ்பெற்ற புண்ய ஸ்தலமான மூகாம்பிகை கொலுவீற்றிருக்கும் கொல்லூர் தலம் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தையும் இப்போது வழங்குகிறோம்.

இனி, ஒரு வரிச் செய்திகள் :-

நவராத்தி விழா கோலாகலமாக கர்நாடகம் எங்கும் கொண்டாடப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழாவும் பாரம்பரிய வழக்கப்படிக் கொண்டாடப்பட்டுள்ளது.

இனி  இதோ, மூகாம்பிகை அருள் பாலித்து வரும் கொல்லூர் தலம் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.

கொல்லூர் மூகாம்பிகை ஆலயம் கர்நாடகத்தில் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சக்தி வாய்ந்த தேவி தலமாகும். இது உடுப்பியிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலும் மங்களூரிலிருந்து சுமார் 135 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் குடசாத்ரி மலையில் ஒரு சிகரத்தில் இது உள்ளது. மிகப் பண்டைய காலத்தில், த்வாபர யுகத்தில் கோலன் என்ற மஹரிஷி தவம் புரிந்த தலமாகும் இது.

இங்குள்ள மூகாம்பிகை தேவிக்கு மூன்று கண்களும் நான்கு கரங்களும் உள்ளன. இரு கரங்களில் சக்கரமும் சங்கும் ஏந்தி இருக்கும் அன்னை, மற்ற இரு கரங்களில் ஒரு கை அபயகரமாகவும் இன்னொரு கை தன் பாதத்தைச் சுட்டிக்காட்டும் படியாகவும் பத்மாசனத்தில் அமர்ந்தபடி இருக்கிறாள். மூகாம்பிகையின் இந்த ஆலயம் தெள்ளிய நீர் ஓடும் சௌபர்ணிகா நதி தீரத்தில் அமைந்துள்ளது. குடசாத்ரி மலையிலிருந்து உருவாகி விழும் 64 நீர்வீழ்ச்சிகள் ஒன்று சேர்ந்து இந்த சௌபர்ணிகா நதியாக மாறிப் பாய்கிறது.

ஸ்வயம்பு லிங்கத்தில் அருள் பாலிக்கும் தேவி, உத்பவ லிங்கமாக சக்தியும் சிவமும் இணைந்தவளாக இருக்கிறாள். கர்பகிரஹ விமானம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.

கர்பகிரஹத்தில் அம்பாளின் முன்னர் தரையோடு தரையாக ஸ்வயம்பு லிங்கம் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவா ஆகிய முப்பெரும் தெய்வங்கள் வலது புறத்தில் இருக்க ஒரு தங்கச் சங்கிலி இடது புறத்தைத் தனியே பிரிக்கும் காட்சி அரிய காட்சியாகும். கர்ப கிரஹத்தின் எதிரில் பணிவுடன் அமர்ந்த நிலையில் சிம்ம வாகனம் இருக்க இரு புறமும் தியான மண்டபம் உள்ளன.

இந்த தேவியின் சிலையை பிரதிஷ்டை செய்தவர் ஆதி சங்கரர் என்றும்  ஸ்ரீசக்ரத்தின் மீது இதை அவர் நிறுவியுள்ளார் என்றும் வரலாறு கூறுகிறது. வெளி பிரகாரத்தில் சரஸ்வதி மண்டபம் உள்ளது. சௌந்தர்ய லஹரியை ஆதிசங்கரர் இயற்றியுள்ள இடம் இதுவே என்றும் கூறப்படுகிறது.

ஆதிசங்கரர் அமைத்துள்ள வழிபாட்டு முறையின் படியே கோவில் பூஜைகள் நடைபெறுகின்றன என்பதோடு சங்கர பீடம் ஒன்றை கர்பகிரஹத்தின் மேற்குப் புறத்தில் காணலாம்.

கர்பகிரஹத்தின் முன்னே கொடிக் கம்பம் உள்ளது. அருகில் உள்ள ஒரே கல்லினால் ஆன விளக்குத்தூணில் ஆயிரம் விளக்குகளை ஏற்றலாம்.

பழைய புராண வரலாற்றைக் கொண்டுள்ளது இந்தத் தலம். கம்ஹாசுரன் என்னும் ஒரு அசுரனை தேவி வதைத்த தலம் இது. அரிய தவம் ஒன்றைச் செய்து  பூமியை நடுங்கச் செய்ய உள்ளம் கொண்ட அந்த அசுரனை பார்வதி தேவி பூமியைப் பாதிக்கும்படியான வரத்தை அவன் கேட்பதைத் தடுத்து நிறுத்த அவனை ஊமையாக்கினாள். ஆகவே அவன் மூகாசுரன் என்ற பெயரைப் பெற்றான். மூகம் என்றால் ஊமை என்று பொருள்.

என்றாலும் கூட அவன் அசுரர்களின் குருவான சுக்ராசாரியரின் ஆசியினால்  பேசும் சக்தியைப் பெற்று முனிவர்களைக் கொல்ல ஆரம்பித்தான். இந்தக் கொடுஞ்செயல் பொறுக்க முடியாதபடி எல்லை தாண்டிச் சென்ற போது பார்வதி தேவி மூகாசுரனை வதம் செய்தாள். ஆகவே மூகாம்பிகை என்ற பெயரையும் பெற்றாள். ஆகவே இந்தத் தலம் கொல்லூர் மூகாம்பிகை தலம் ஆனது.

வாக் தேவதையை வழிபடும் தலமான இதில் அன்னையை வணங்கினால் நுண்ணறிவும் ஆன்மீக அறிவும் பெருகும் என்பது ஐதீகம். இங்குள்ள அம்மனின் சிலை பஞ்ச லோகத்தினால் ஆனது.

விஜயநகர மன்னர்களால் பெரிதும் வழிபடப்பட்ட இந்த தெய்வத்திற்கு ஏராளமான அரிய நகைகளை அவர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். இங்கு திருப்பதி, திருவனந்தபுரம் கோவில்களில் உள்ளது போன்ற பெருமளவு தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆயிரக் கணக்கில் கூட்டம் கூட்டமாக வந்து அன்னையை வழிபடும் பக்தர்கள், எந்தக் காரியத்திலும் வெற்றியை அடைவது இன்று வரை நிதர்சனமாகக் காணப்படுகிறது. நோய்களிலிருந்து விடுபட வடை நைவேத்யத்தையும் வெற்றி பெற குங்கும அர்ச்சனையையும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

காலம் காலமாக மக்கள் பக்தியுடன் வணங்கி வரும் கொல்லூர் மூகாம்பிகை தேவி அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.  இதுவரை நீங்கள் கேட்டது பங்களூர் செய்தி  மடல்.

வழங்கியது ப்ரஹன் நாயகி சத்யநாராயணன். நன்றி.

tags- மூகாம்பிகை தேவி

***

GNANAMAYAM PROGRAMME ON 26 OCTOBER 2020 (Post.8863 a)

prayer by Ms Jayashree Umasankar

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8863

Date uploaded in London – –27 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Tevaram by Somasundaram 
Tevaram by Ramasubrahmanyam
Jayakanthan Sharma

FACEBOOK.COM/GNANAMAYAM PROGRAMME ON 26-10-20

1.PRAYER BY NEEDAMANGALAM MS. JEYASHREE UMASHANKAR

2.TEVARAM PRAYER BY SOMASUNDARAM AND RAMA SUBRAMANYAM- SONS OF NELLAI RAJA OF HEALTH CARE MAGAZINE

3.WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH MY MS SUJATHA RENGANATHAN

4. WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH MY MS SUJATHA RENGANATHAN

5. WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL  MY MS VAISHNAVI ANAND

6. BENGALURU NEWS LETTER READ BY MS.BRAHANNAYAKI SATHYANARAYANAN

Ms Saraswathy Chandrasekaran

7.LISTENERS LETTERS READ BY MS.SARASWATHY CHANDRASEKARAN

8.Q AND A HINDUISM- ONE QUESTION ON BASKARARAYAR ANSWERED BY BENGALURU S NAGARAJAN

9.’ALVAR AMUTHAM’ BY DR. PROFESSOR NARAYANAN KANNAN

10.SONG BY MR.JAYAKANTHAN SHARMA OF AUSTRALIA

11.SONG BY MASTER SASWAT PRABHU OF LONDON

Dr N Kannan

12.PRODUCER – LONDON SWAINATHAN

Master Saswat Prabhu

tags – Gnanamayam 261020

–subham—

தேசத்திற்கு உழைத்த ஒரு நல்ல தேசபக்தரின் மறைவு! (Post No.8862)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8862

Date uploaded in London – – 27 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

தேசத்திற்கு உழைத்த ஒரு நல்ல தேசபக்தரின் மறைவு!

ச.நாகராஜன்

தொடர்ந்து கொரானா காலத்தில் பல இழப்புகளைச் சந்தித்து வருகிறோம்.

காலனுக்குக் கண் இல்லை என்பார்கள்; அதனால் தான் அவனுக்கு அந்தகன் என்று பெயர்!

நண்பர் திரு ராகவேந்திர ராவின் மறைவுச் செய்தியை 24-10-20 காலை கேட்டவுடன் மனம் துக்கத்தில் ஆழ்ந்து விட்டது. காலனுக்குக் கண் இல்லை என்பதை நினைத்துப் பார்க்க மனம் தூண்டியது!

மானனீய கோபால்ஜி மறைந்து சில நாட்களே ஆகி இருக்கின்றன; அதற்குள் இன்னுமொரு இழப்புச் செய்தி!

அவரால் உத்வேகம் ஊட்டப்பட்ட ஆயிரக்கணக்கானோரில் மதுரை சிம்மக்கல் ஷாகாவைச் சேர்ந்த ராகவேந்திரனும் ஒருவர்.

ஆர் எஸ் எஸ் -இன் சிம்மக்கல் ஷாகா மதுரையில் விறுவிறுப்பாக ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளின் பிற்பகுதியிலும் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளிலும் இயங்கிய போது ஏராளமான அரும் ஸ்வயம்சேவகர்கள் அதில் தினமும் தவறாமல் வருகை புரிவர். அவர்களில் பலரும் இன்று பெரிய நிலைகளில் உலகெங்கும் உள்ளனர்.

ராகவேந்திரன் சேதுபதி பள்ளியில் அப்போது மாணவர். திரு சிவராம்ஜியால் கண்டெடுக்கப்பட்ட அவர் சங்கப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பின்னர் சங்க பிரசாரக்காகவே ஆகி விட்டார்.

இனிமையான முகம். கடுஞ்சொல்லே பேச முடியாத ஒருவரைப் பார்க்க முடியுமா? முடியும் – ராகவேந்திரனே அதற்கு உதாரணம்.

மெல்லிய குரலில் எளிமையுடனும் பணிவுடனும் அன்புடனும் அனைவரிடமும் பழகுவது அவரது இயல்பாக ஆகியிருந்தது.

தேனி உள்ளிட்ட வட்டாரங்களில் அவர் ஷாகாக்களைத் தொடங்கி அரும் பணி ஆற்றினார்.

பின்னர் ஐயப்பன் கோவிலில் பணி; அத்துடன் ஒரு அனாதை இல்லத்தையும் அவர் இயக்கிப் பாதுகாத்து வந்தார்.

அந்த அனாதை இல்லத்திற்குச் செல்லும் ஒரு நல் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

எங்கள் குடும்பத்தில் அவரும் ஒரு அங்கத்தினர் என்பதை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்; கள்ளம் கபடில்லாமல் இயல்பாக குடும்பத்தில் ஒருவராக அவர் ஆகியிருந்தார்.

மிகப் பெரும் சாணக்யர் என்று மதிக்கப்பட்டவரும், பிரபல வக்கீலானவரும், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் கேரள, தமிழ்நாட்டுத் தூண்களில் பிரதானமானவருமான மானனீய அண்ணாஜியின் அபிமானம் பெற்றவர் ராகவேந்திர ராவ். வடக்கு வெளி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் காலையிலும் மாலையிலும் அவரை தினசரி சந்திப்பது பாட்டரியை சார்ஜ் செய்வது போல இருக்கும்; அரும் ஆற்றலைப் பெறும் வாய்ப்பாக இருக்கும். இதில் முதல் ஆளாக இருப்பவர் ராகவேந்திர ராவ் அவர்களே!

எந்தப் பணி என்றாலும் களத்தில் முதல் ஆளாக இறங்குவது அவர் பழக்கம்.

அவர் சிரித்த முகத்தை இனிப் பார்க்க முடியாது; அவர் இனிமையான மென்மைக் குரலை இனி கேட்க முடியாது என்பது அவரை அறிந்திருக்கும் எல்லோருக்கும் ஆழ்ந்த துயரத்தைத் தரும். 

பிரம்மசாரியாக இருந்து தேசப்பணியில் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர் என்பதால் பாரத அன்னை ஒரு முழு அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்ட மகனையும் இழந்து விட்டாள் என்பதே உண்மை!

அவர் ஆன்மா சாந்தி அடைய அன்னை மீனாட்சியை எங்கள் குடும்பத்தினர் அனைவரும் பிரார்த்திக்கிறோம்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!

tags —  ராகவேந்திரன், , MADURAI RSS

***

TAMIL WORDS IN ENGLISH – PART 12 (Post No.8861)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8861

Date uploaded in London – –27 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 12

WORDS BEGINNING WITH ‘H’ ARE CONTINUED…………………….

H.31.HOT- SHOT= SHUUTU IN TAMIL; H=S சூடு

H.32.SHOOT, SHOT – SUDU WITH A GUN; H=S சுடு

H.33.HANG/HUNG – THONGU; THUUKKU தொங்கு, தூக்கு

H.34.HEAR – KEL; R=L கேள்

H.35.HOOM – HUM-KAR IN ANSKRIT; UUUU SOUND ஹும் – கார , ஊஊ ,

H.36.HOWL- UUUULAI ஊளை

H.37.HOROSCOPE – ORAI FOR HOUR; HORA SASTRA CHART ஓரை ; ஹோரா சாஸ்திரம்

H.38.H/OLE – TOLAI/ TULAI ALSO OOTTAI தொளை , துளை

H.39.HUBRI – KUPPAI; ALSO UPAI = EVRYTHING EXTRA; OR IN EXCESS குப்பை, உபரிப் பொருள்

H.40.HAM – GRAAMAM IN SANSKRIT; USED IN ALL INDIAN LANGUAGES FROM RIG VEDIC DAYS; HAM IS IN ENGLAND AS BIRMING/HAM, EAST/HAM, NOTTING/HAM ETC. GRAMANI- VILLAGE OFFICIAL IS ALSO IN VEDAS கிராம், கிராமம், ஹாம், பர்மிங்ஹாம், நாட்டிங்ஹாம்

H.41.HELLO – ALAA IN SANGAM TAMIL LITERATURE; AALOLAM, HALA, HELA, ELA, EDI IN SANSKRIT ALSO ஹலோ, எலா , ஏலா , ஏடி

H.42.HAWK/ HORUS – KALUGU; KAZULGU= GARUDAN IN SANSKRIT ; R=L

ALSO KARULAN, KALULAN IN , 1300 YEARS OLD DEVOTIONAL VERSES கரு-டன் , கரு-ளன் , கலுழன் (ஆழ்வார் பாடல்கள்), கழுகு ; ஹோரஸ் /எகிப்திய தெய்வம்

H.43.HUNCH – KUUN; KOONI கூன் , கூனி ,

H.49.H/OLD – UDAIYA உடைய, உடையார்,

H.50.HARAKIRI/JAPANESE – KIIRI ARU கீறி அறு

H.51.HELL – ALARU அளறு ,

H.52.HILL – GIRI; R=L கிரி /ஹிரி

H.53.HOOK- UUKKU, KOKKI ஊக்கு , கொக்கி

H.54. HIP- IDUPPU, இடுப்பு

H.55. HECKLE- KELI, EKKAALAM, ELANAM, கேலி/செய் ,கெக்கலி, கொக்கரி, எக்காளம் , ஏளனம்

H.56. HANDSOME- AMSAMAANA ; SANSKRIY WOD GREEVA, அம்சம்/ அம்சமான

HORSE IS ASVA; ANOTHER  DERIVATION HORSE- HAYA AS IN HAYA

அஸ்வ= ஹய

–subham—

TAGS – TAMIL WORDS -12 

KNIFE AND WIFE பெண்களை நம்பாதே, கண்களே பெண்களை…… நம்பாதே! (Post.8860)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8860

Date uploaded in London – – 26 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Compiled by Kattukutty

கணவனின் வாயைப் பூட்டி அதன் சாவியை வைத்திருப்பவளின்

பெயர் மனைவி!!!

XXX

பேன்களின் குடியிருப்பான கூந்தலைப் பிடித்துக் கொண்டு

இயற்கை மணம் உண்டு தானே இதில் என்று  அதட்டிக்

கேட்பவளே மனைவி !!!

XXXXX

பணத்தைச் செலவழிப்பது எப்படி என்ற கேள்விக்கு

இலக்கணமாவாள் மனைவி!!!

XXXX

ஒரு பொய் உண்மையாக வேண்டுமா? மனைவியிடம் அதை

ரகசியம் வெளியே சொல்லிவிடாதே என்று சொன்னாலே போதும்

XXX

கணவன் என்ற போட்டோவிற்கு மனைவியே நான்கு பக்கமும்

சட்டமாவாள்!!!

XXXX

மனைவி என்பவள் சுவற்றில் ஆணியில்லாமல் தொங்கும்

கேலண்டர்!!!

XXXX

மனைவியிடம் அதிக உண்மையும் சொல்லக் கூடாது

அதிக பொய்யும் சொல்லக் கூடாது

XXX

மனைவி என்பவள் நான்கு பக்கமும் வீடியோ கேமிரா பொருத்தப்பட்ட உருவம்

உண்மை வீரன் யார் தெரியுமா???

மனைவியின் பீரோவை அவள் முன்பே திறப்பவன்!!!

நல்ல கணவன் யார்????

சரி, சரி, சரி, சரி, சரி, சரி…………….(என்பவனே!)

XXXX

வாஷிங் கம்பெனிகாரர்கள் சர்வே எடுக்க வந்தார்கள்

மனைவியைக் கேட்ட கேள்வி – நீங்கள் துணி துவைக்க எதை உபயோகிக்கிறீர்கள்????

பதில் – என் கணவனை!!!

XXXX

மனைவி ஒரு மந்திரி

என்ன நான் சொன்னது சரியா???

மந்திரியை அடிக்கடி மாற்றலாமே???

XXXX

உன்னைப் பற்றித் தெரியவேண்டுமா???

உன் மனைவிடம் கேட்டுப்பார் உன் யோக்யதையை….

உன் மனைவியைப் பற்றித் தெரிய வேண்டுமா???

பக்கத்து வீட்டுக்காரியிடம் கேட்டுப்பார் அவள் யோக்யதையை!!!

XXXX

மனைவி புரட்டிப் புரட்டி செலக்ட் பண்ணினா புடவை

செலக்ட் பண்ணிட்டு புரட்டி புரட்டி எடுத்தா புருஷன்!!!

XXXX

நீ மனைவி வேணும்ன்னு நினைச்சா அது ஆசை

அதற்கு பிறகு சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சா

அது பேராசை!!!!

XXXX

மனைவி கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து

சமாளிப்பவன் புத்திசாலி !!!

வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே

சமாளிப்பவன் திறமைசாலி!!!

XXXX

அரசன் அன்று கொல்வான்!

தெய்வம் நின்று கொல்லும்!

மனைவி பேசியே கொல்வாள்!!!

XXXX

கல்யாணம் ஆகி மனைவி வந்த பின்

ஒண்ணு அடி விழும்,

இல்லேன்னா முடி விழும்…..

அவ்வளவுதாங்க வாழ்க்கை……..

XXXX

மனைவி சொன்னால் கணவனுக்கு மகிழ்ச்சி,

கணவன் சொன்னால் மனைவிக்கு ருத்தம்

“ஊரிலிருந்து என் தங்கச்சி வரா”

XXX

பட்டுச்சேலை கட்டினா மனைவி உள்பட

எல்லா பெண்களுக்கும் எடுப்பாத்தான் இருக்கும்,

அதை வாங்கித்தர புருஷனுக்கு கடுப்பாத்தான் இருக்கும்

XXX

மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ணை விட,

நாக்குக்கு நயமா சமைக்கற பொண்ணுங்க தான்

ஆண்களுக்குத் தேவையாம் !!!

XXXX

யாரோ பெத்த பொண்ண மனைவியா த்துக்கிட்டு,

காலம் முழுவதும் சோறு போடும் உயர்ந்த உள்ளமே “ஆண்”

XXXX

ஒரு பக்கம் ஷார்ப்பா இருந்தா KNIFE

இரு பக்கமும் ஷார்ப்பா இருந்தா WIFE!!!

(இத புரிஞ்சுகிட்டா நல்லா இருக்கும் LIFE)

TAGS – KNIFE AND WIFE, பெண்களை நம்பாதே

                                 ***

பாஸ்கரராயரின் ‘சௌபாக்ய பாஸ்கரம்’! -1 (Post No.8859)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8859

Date uploaded in London – – 27 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

லண்டனிலிருந்து 26-10-2020 அன்று இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஞானமயம் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. அதில் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற கேள்வியும் பதிலும் கீழே தரப்பட்டுள்ளது.  Facebook.com/gnanamayam

பாஸ்கரராயரின் ‘சௌபாக்ய பாஸ்கரம்’! -1

QUESTION ASKED BY MR SARAVANAN

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று நம் முன் இருக்கும் கேள்வி : பாஸ்கரராயரின் நூல்களின் சிறப்பு பற்றியும், அவை எங்கு கிடைக்கும் என்பது பற்றியும் தான்.

அம்பிகையின் அனுக்ரஹத்தைப் பெற்ற பெரிய மஹான் பாஸ்கர ராயர். மஹராஷ்டிரத்தில் பாகா என்ற ஊரில் இவர் அவதரித்தார். சிவதத்த சுக்லர் என்ற மகானிடமிருந்து ஸ்ரீ வித்யா உபதேசத்தை பெற்று அம்பிகையை நேரில் தரிசிக்கும் அளவு தவம் செய்தார்; அம்பிகை அவருக்கு தரிசனம் தந்து அருளினாள்.

அவர் வாழ்க்கையில் ஏராளமான மெய் சிலிர்க்கும் சம்பவங்கள் உண்டு. இரு சம்பவங்களை மட்டும் இங்கு பார்ப்போம்.

ஒரு சமயம் அவர் மத்யார்ஜுனம் என்னும் திருவிடைமருதூரில் மஹாதானத் தெருவில் வசித்து வந்தார். அங்கு உள்ள தனது இல்லத்தில் தெருத்திண்ணையின்  மீது மாலை வேளைகளில் சாய்ந்து கொண்டு தனது பாதங்களை தூணிற்கு முட்டு வைத்து உட்கார்ந்து கொண்டிருப்பது அவர் பழக்கம்.

ஒரு சமயம் அந்த ஊருக்கு அருகிலிருந்த வேப்பத்தூரிலிருந்து வந்த ஒரு சந்யாசி தினமும் பாஸ்கரராயரின் வீட்டு வழியே ஸ்ரீ மஹாலிங்க ஸ்வாமியை தரிசிக்க கோவிலுக்குப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பாஸ்கரராயர் யதிகளுக்குச் செய்ய வேண்டிய மரியாதைப்படி அவர் வரும் போது எழுந்து நிற்பதில்லை. இதை தினமும் கவனித்து வந்த அந்த துறவிக்கு பாஸ்கரராயர் மீது கோபமும் துவேஷமும் ஏற்பட்டது.

ஒரு நாள் பிரதோஷ தினத்தன்று மாலை நேரத்தில் அந்த துறவியும் பாஸ்கரராயரும் நேருக்கு நேர் சந்திக்கும்படி நேரிட்டது. அப்போது துறவியார் பாஸ்கரராயரை இழித்துப் பேச ஆரம்பித்தார்.

பாஸ்கரராயர் அவரை அணுகி மிகவும் சாந்தமான குரலில், மற்ற இல்லறத்தாரைப் போலத் தாமும் அவரை நமஸ்கரித்திருந்தால் அவரது தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறி இருக்கும் என்றும் அவரைக் காப்பாற்றவே தான் அப்படி நமஸ்கரிக்கவில்லை என்றும் எடுத்துச் சொன்னார்.

அங்கிருந்தோர் அவர் சொல்வதை நம்பாமல் இருப்பதை அவர் தெரிந்து கொண்டார்.

அந்தத் துறவியின் தண்டம், கமண்டலம், காஷாய வஸ்திரம் ஆகியவற்றை ஓரிடத்தில் வைக்கச் சொன்னார். பின்னர் அவற்றிற்கு அவர் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். உடனே அந்த தண்ட, கமண்டலம், காஷாய வஸ்திரம் அனைத்தும் சுக்கு நூறாய் வெடித்துச் சிதறின.

அனைவரும் பாஸ்கரராயரின் மஹிமையை உணர்ந்து அவருக்கு நமஸ்காரம் செய்து மன்னிக்குமாறு வேண்டினர். துறவி அவரது மஹிமையை முற்றிலுமாக உணர்ந்தார்.

ஆனால் அன்று முதல் துறவி அந்தத் தெரு வழியே வரும் சமயம் பாஸ்கரராயர் அங்கு இருப்பதில்லை!

இன்னொரு சம்பவம் காசியில் அவர் இருந்த போது நடந்த ஒன்று. அவரது வித்வத் மஹிமையையும் தேவி அவர் மீது காட்டும் கருணையையும் அருளையும் புரிந்து கொள்ளாத சிலர் அவர் மீது மிகுந்த துவேஷம் கொண்டிருந்தனர்.

இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணிய பாஸ்கரராயர் தான் ஒரு பெரிய யாகம் செய்யப்போவதாகக் கூறி அதற்கு அனைவரும் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அங்கு சென்று அவரை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணிய த்வேஷிகள் குறித்த நாளில் யாகசாலையில் குழுமினர். ஆனால் யாகம் நடத்தப்பட்ட நேர்த்தியையும் அவரது தேஜஸையும் தபோபலத்தையும் கண்டு அவர்கள் வியந்து போயினர். என்றாலும் கூட இடக்கு மடக்காக கண்டபடி கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர்.

பாஸ்கரராயரோ மந்திர சாஸ்திர விற்பன்னராக இருந்ததால் கேட்ட கேள்விக்கெல்லாம் உடனுக்குடன் தக்க பதிலை அனைவரும் வியக்கும் படி கூறிக் கொண்டே வந்தார். இதையெல்லாம் உடனிருந்து கவனித்துக் கொண்டிருந்த குங்குமானந்த ஸ்வாமி என்ற தேவி உபாஸகர் அனைவரையும் நோக்கி, “இங்கு இருக்கும் இவர் சாமான்யர் இல்லை. இவர் தோள்களில் அம்பாள் ஆரூடையாக அமர்ந்து கொண்டு உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாள்” என்றார்.

அங்கிருந்தவர்களில் நாராயண பட்டர் என்பவர் அப்படி அம்பாள் இருப்பது உண்மை எனில் தான் அம்பாளைத் தன் கண்களால் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். குங்குமானந்த ஸ்வாமி அவர் தரிசன பாக்கியத்திற்கு யோக்யதை கொண்டவர் என்பதையும் அவர் நோக்கம் தூய்மையானது தான் என்பதையும் நிச்சயித்துக் கொண்டார். பாஸ்கரராயரால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஜலத்தால் அவரது கண்களைத் துடைக்கச் சொல்லி விட்டு அவருக்கு சரியான திருஷ்டியை ஏற்படச் செய்தார். நாராயண பட்டர் பாஸ்கரராயர் தோளில் கிளியாய் அமர்ந்திருந்த அம்பாளைக் கண் குளிரக் கண்டு ஆனந்த பரவசம் அடைந்து கண்ணீர் விட்டார்.

பின்னர் அங்கிருந்த அனைவரும் பாஸ்கரராயரிடம் எதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வது என்று தமக்குள் விவாதித்தனர்.

எந்தப் புராணத்திலும் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க ஒருமனதாக அவர்கள் முடிவு செய்தனர்.

*** தொடரும்

S NAGARAJAN OF BENGALURU ANSWERING QUESTIONS ON HINDUISM 

TAGS  பாஸ்கரராய-1 

TAMIL WORDS IN ENGLISH – PART 11 (Post No.8858)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8858

Date uploaded in London – –26 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

H SOUND DOESN’T EXIST IN MANY LANGUAGES INCLUDING TAMIL. SOFT SOUNDED TAMIL WORDS HAVE THESE H SOUND IN ENGLISH; IT MAY BE DUE TO THE ROOT WORD HAVING H SOUND OR THE SPEAKERS OF CERTAIN LANGUAGES USE H SOUND LIKE ARABIC

EXAMPLE-

HORSE- ASVA IN SANSKRIT

HARVEST – ARUVADAI IN TAMIL

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 11

WORDS BEGINNING WITH ‘H’ ARE GIVEN BELOW

H.1.HICCUP – VIKKAL; H=V விக்கல்,

H.2.HEA/VEN- VAANAM; H=V வானம்,

H.3.HALO- SALTY- KALAR NILAM களர் நிலம்

H.4.HERO – VEERA; SANSKRIT WORD; H=V வீரன்

H.5.HEURISKEIN- ARI/KNOW- GERMANஅறி ,

H.6.HORROR ;HORRENDUOS –  ARANDAN; ARATRUஅரண்டான் ,

H.7.HUM/ERE, HUMIDITY – IIRA- ஈர

H.8.HOLO/ WHOLE – MUZU/MULU முழு ,

H.9.HOLLOW- PALLAM; பள்ளம்,OOTTAIதுளை,

H.10.HORTARI; HOST –  AATHARI/SUPPORT ஆதரி/ ஹோதா  /யாகத்தில்

H.11.HONEY / BEE– THEN, THENEE தேனீதேன் தொல்காப்பியம்

H.12.H/ALF- ARAI அரை

H.13.H/ARD – ARITHU அரிதுஅரிஷ்ட/ அரில்

H.14.HARD/SHIP – ARIL IN TOLKAPPIAM; ARISHTA IN SANSKRITகரடு /முரடு

HARD/SURFACE- KARADU கரடு /முரடு

H.15.H/INDU – INDU; HINDU=SINDHU; H=S ஹிந்து=சிந்து= இந்து

H.16.HYPNO – SWAPNA/SOMNAMBULISM- H=S; SWAPNA IS SANSKRIT ஹிப்னோஸ்வப்ன சோம்னாம்புலிசம்;/தூக்க மின்மை 

H.17.HIGGELY PIGGELY – ESAGU, PISAGU இசகு/எசகு/பிசகு

H.18.H/AIR – MAYIR IN TAMIL; H=M மயிர்,

H.19.HONOUR – MAANAM;  H=M மானம் ,

H.20.H/EINOUS – EENATHTHANAM ஈனத்தனம்

H.21.HAUL – IZU/ ILU இழு,

H.22.HOME- A/HOME = AHAM IN TAMIL; IT IS IN SANSKRIT AS WELL அகம்

H.23.((HORSE – HRASVA= ASVA IS IN SANSKRIT. அஸ்வ

H.24.HORA – HOUR = ORAI ஹோரா – ஓரை IN TAMIL AND GREEK; HORA SASTRA IN SANSKRIT

BOTH THESE HORSE/ASVA AND HORA ARE ACCEPTED BY LINGUISTS.

THIS I GIVE AS LOGIC TO DERIVE TAMIL WORDS- IN THE SAME WAY THEY DERIVE SINNDHU/INDUS/HINDU ; IN THE SAME WAY THEY DERIVE HERMES IN GREEK FROM H.25.SARAMA IN RIG VEDA சரமா /ரிக் வேத நாய்= கிரேக்க ஹெர்மிஸ். IF THEIR APPROACH IS RIGHT THEN MY APPRACK IS ALSO RIGHT; H=S.))

H.26.HISTORY- CHARITA; SARITHTHIRAM IN TAMIL)) சரிதசரித்திர

H.27.HARRY – HARI/ HARAN ஹரி ஹரன்

ஹ= ச

ஹ சொற்களும் ச சொற்களும் பழந் தமிழில் தடை செய்யப்பட்டுள்ளது. அவை அ  அல்லது ம / மா – ஆக மாறுவதைக்   காணலாம்

H.28.H/ILARIOUS – ILI/LAUGH இளி / இளிச்சவாயன்

H.29.HARM- HARAAM/ ABACHARAM/ BLASPHEMOUS ஹராம் =மறம் /அதர்மம்

HARAAM IS ACTUALLY MARAAM= ADHARMA= HARMFUL ACT; H=M

H.30.H/ARVEST – ARUVADAI அறுவடை

tags – Tamil words -11

(விஷக்) கடி ஜோக்ஸ் (Post No.8857)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8857

Date uploaded in London – – 26 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

குடும்பத்திலே குதிரைக்கு பிடித்தவர் யார்???

“கொள்ளு” தாத்தா!!!

Xxx

நிலம் பொய் பேசாது ஏன்???

ஏன்னா அது ரியல் Real எஸ்ட்டேட் !!!

Xxx

தாலிகட்டின நாடு எது ???

இத்தாலி

Xxx

சென்னையில் சூடான இடம் எது ???

சூளை !!!

Xxx

T V வியில் எறும்பு எப்படி வந்தது???

“ANT”TENNA வழியாக……

xxx

அழுமூஞ்சி நாடு எது ???

சிரியா

Xxx

வாசனையான ரயில்வே ஸ்டேஷன் எது???

“சென்ட்” scent ரல் !!!

Xxx

காலே இல்லாத டேபிள் எது???

TIME TABLE

Xxx

கையிலிருக்கிற “கை”எது ???

ரேகை!!!

Xxx

பசுமையான நாடு எது ???

கிரீன் லாந்து !!!

Xxx

இன்பம் எது???

அடுத்த வீட்டு ஜோடி அனுபவிப்பது !!!

Xxx

துன்பம் எது ???

என் மனைவியுடன் நான் அனுபவிப்பது

Xxx

சுகம் எது ???

அடுத்தவன் எனக்குச்செய்யும் வேலை…….

Xxx

சோகம் எது ???

அடுத்தவனுக்கு நான் செய்யும் வேலை….

xxx..

வளமை எது ???

பஸ் ஸ்டாண்டில் பார்த்த பெண்ணின் அழகான மேனி!!!!

Xxxx

வறுமை எது???

என் மேலதிகாரியின் மன இறுக்கம்???

Xxx

எல்லா மொழியும் பேசக் கூடியது எது???

எதிரொலி!!

Xxx

வெய்யில்ல வெளியே வந்தா உருகிடறாரு இந்த மனுஷர்???

யாரு அது???

பெருமாள் “பட்டர்”

Xxxx

சொத்துக்கள் நிறைந்த நாடு எது ???

“ஆஸ்தி”ரேலியா!!!

Xxx

உட்கார முடியாத தரை???

புளியோதரை…….

Xxx

பட்டுப் பூச்சியிலிருந்து எதை எடுக்கிறார்கள்???

உயிரை !!!

Xxxx

இந்திய நாட்டில் ஜனத்தொகை நாளுக்குநாள் பெருகுவதேன்???

இந்தியா தீப ‘கற்ப’மாக இருப்பதால் !!!

Xxx

டாக்டர் ஏன் கோபமா இருக்கார்???

யாரோ அப்பரேஷன் தியேட்டர் வாசலில் “ஒன் வே” எவனோஎழுதி

வச்சிருக்கானாம்!!!

Xxx

tags- (விஷக்) , கடி  ஜோக்ஸ், 

–subham—-

வீர ஜெயத் திருப்புகழும் மந்திரத் திருப்புகழும்! (Post No.8856)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8856

Date uploaded in London – – 26 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

வீர ஜெயத் திருப்புகழும் மந்திரத் திருப்புகழும்!

ச.நாகராஜன்

திருப்புகழ் 1324 பாடல்கள் நம்மிடையே இன்று உள்ளது. இது வரை வெளி வராத சில அரிய பாடல்கள் ஆறைச் சேர்த்து இதை சிலர் 1330 என்று குறள் எண்ணிக்கைக்கு நிகராகக் கொண்டு வருவதும் உண்டு. ‘யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்’ என அருணகிரிநாதரே கூறுவதால் அவர் வாக்கு முருகன் வாக்கே என ஆகிறது. ஆகவே இவை மந்திரப் பாடல்களாக அமைந்துள்ளன என்று சொல்வது சத்திய வாக்காகும்.

பல பாடல்களை தங்கள் அனுபவத்தால் கண்டறிந்த பெரியோர்கள், அவற்றின் பயனைத் தெளிவுறச் சொல்லி வைத்துள்ளனர்.

அவற்றில் வீர ஜெயத் திருப்புகழாக, ‘சினத்தவர் முடிக்கும்’ என்ற பாடலும், மந்திரப் பாடலாக ‘இருமலு ரோக’ என்ற பாடலும் அமைந்துள்ளன.

வீர ஜெயத் திருப்புகழ் பகைவரை வென்று எந்தக் காரியத்திலும் வெற்றியைத் தரும் ஒரு அரிய திருப்புகழாகும்.

எந்த வியாதி வந்தாலும் அதைத் தீர்க்க பாட வேண்டிய பாடலாக அமைகிறது

‘இருமலு ரோக’ எனத் தொடங்கும் பாடல்.

அவற்றைக் கீழே பார்க்கலாம்.

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்

     செகுத்தவர் ருயிர்க்குஞ் …… சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

     திருப்புகழ் நெருப்பென் …… றறிவோம்யாம்

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்

     நிசிக்கரு வறுக்கும் …… பிறவாமல்

நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்

     நிறைப்புக ழுரைக்குஞ் …… செயல்தாராய்

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்

     தகுத்தகு தகுத்தந் …… தனபேரி

தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்

     தளத்துட னடக்குங் …… கொடுசூரர்

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்

     சிரித்தெரி கொளுத்துங் …… கதிர்வேலா

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்

     திருத்தணி யிருக்கும் …… பெருமாளே.

பொருள் : முருகனை வழிபடுவோர்களைக் கோபிப்பவர்கள் தலைக்கும், அவர்களைப் பகைத்து இருக்கும் குடும்பத்திற்கும், அவர்களைச் செகுக்கத் துணிபவர் உயிருக்கும், முருகன் அடியாரைக் கண்டு சினத்துடன் சிரிப்பவர்க்க்கும், பழிப்பவர்க்கும் திருப்புகழே நெருப்பாய் அமைந்து அவர்களை அடியோடு அழித்து விடும். இதை நன்கு அறிவோம் நாம்.

முருகனை வழிபடும் அடியவர் என்ன நினைத்து வேண்டுகிறார்களோ அதை அளிக்க வல்லது, மனத்தை உருக்குவது, மீண்டும் மீண்டும் பிறப்பு என்ற நிலையை இல்லாமல் செய்து இருள் நிறைந்த கருப்பையில் வராமல் செய்வது, நெருப்பையே எரிக்க வல்லது, மலைகளையே இடிக்க வல்லது, அனைத்துப் பொருள்களையும் தம்முள் உள்ளடக்கியது ஆகிய திருப்புகழை பாடுகின்ற நல்ல செயலை அருள்வாயாக. தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்த் தகுத்தகு தகுத்தந்தன என்ற ஒலியுடன் பேரிகைகள் முழங்க, தடுட்டுடு டுடுட்டுண் டென ஒலியுடன் உடுக்கை முழங்க, சேனைகளுடன் போருக்கு அணி வகுத்து வந்த கொடு சூரர் சினத்தையும் அவர்கள் தம் உடலைச் சங்கரித்த (அழித்த) பிண மலைகள் யாவையும் புன்னகை ஒன்றினாலேயே அதில் தோன்றிய அனல் பொறியால் சாம்பலாக்கிய கதிர் வேலா, தினைப்பயிரை விளைவிக்கும் மலைக் குற வள்ளியை மார்புற அனைத்து இன்புற்று எண்ணுகின்ற திருத்தணியில் அமர்ந்து அருள் புரியும்

வேலவனே!

 அநுஷ்டான திருப்புகழ் பாடல்கள் என்று சில திருப்புகழ் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் நோய் வரின் அதைப் போக்க ‘இருமலு ரோக’ பாடல் பாடி துதிக்கப்படுகிறது.

நோய் வராமல் தடுக்கவும் அன்றாடம் அன்பர்களால் இது ஓதப்பட்டு வருகிறது.

பாடல் இதோ:

     இருமல்  உரோகம் முயலகன் வாதம்

     எரிகுண நாசி ……         விடமேநீர்

இழிவு விடாத தலைவலி சோகை

     எழுகள மாலை …… இவையோடே

பெருவயி றீளை எரிகுலை சூலை

     பெருவலி வேறும் …… உளநோய்கள்

பிறவிகள் தோறும் எனைநலி யாத

     படி உன தாள்கள் …… அருள்வாயே

வருமொரு கோடி அசுரர் பதாதி

     மடியஅ நேக …… இசைபாடி

வருமொரு கால வயிரவர் ஆட

     வடிசுடர் வேலை …… விடுவோனே

தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி

     தருதிரு மாதின் …… மணவாளா

ஜலமிடை பூவின் நடுவினில் வீறு

     தணிமலை மேவு …… பெருமாளே.

இந்த மந்திரத் திருப்புகழைச் சொல்லி திருநீறு அணிந்து கொண்டால் நோய்கள் வராது; வந்த நோய்களும் போகும்.

இப்படி ஏராளமான பலன் தரும் திருப்புகழ் பாடல்கள் அன்றாட வாழ்க்கையின் வெற்றிக்கு உறுதுணை செய்வதை அன்பர்கள் காலம் காலமாக அனுபவித்து உணர்ந்து பயன் அடைந்துள்ளனர்.

நாமும் பயன் பெறலாமே!

***