சைவம் பற்றிய 4 பழமொழிகள் என்ன ? (8762)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8762

Date uploaded in London – –1 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.



விடைகள்:–

1.சைவத்திற்கு ஆசைப்பட்டு மரக்கறி தள்ளிவிட்டேன்

2.சைவப்பழம் வில்வக்கிளை

3.சைவ முத்தையா முதலியாருக்குச் சமைத்துப் போட வள்ளுவப் பண்டாரம்

4.சைவம் முற்றி எலும்பெலும்பாய்க் கழிகிறது

SOURCE BOOK – பக்கம் 211, கழகப் பழமொழி அகரவரிசை , சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1970

tags–சைவம் , பழமொழிகள்

INDEX 28 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post No.8761)

MORE  RARE PICTURES FROM SIVA PURANA 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8761

Date uploaded in London – –1 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 8700 PLUS POSTS.

MARCH  2015 INDEX OF TAMIL ARTICLES

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா ?,31 மார்ச் 2015, 1761

காலம் என்னும் அற்புதம் பற்றி 30 பொன்மொழிகள், 30/3, 1758

கதை கேட்ட நாயை ………………………………. அடி, 28/3 1756

ஒரு நிமிட ராமாயணம், பா கவதம், மஹாபாரதம் 28/3; 1754

பாவாஹ ரி பாபா கதை ; கல் மனமும் கரைந்தது, 25/3, 1748

பேய்களை விரட்ட வெண் கடுகு 24/3, 1745

பெண்கள் மட்டுமே ஆண்ட அதிசய நாடு, 23/33, 1744

சொட்டை, யாராவது வந்திருக்கானா ? குருகைக்காவலன் கேள்வி ,22/3, 1740

மிலேச்சர்களை அளிக்கும் கல்கி அவதாரம் எப்போது ,21/3; 1736

பிராமணன் மீது  ஒரு  நஷ்ட ஈடு வழக்கு;சுவையான ஒரு பழைய சுவையான கதை 20/3, 1734

கூப்பிடு தூரத்தில் இறைவன் , 19/3, 1731

மன்னர்-முனிவர் இடையே சுவையான உரையாடல் , 18/3; 1729

மோட்சம் வேண்டாம் என்று சாமியார் ஓட்டம் , 17/3; 1725

ஜோதிடத்தைக் கண்டுபிடித்தது தமிழனா , 16/3; 23/3

அர்ஜுனனுக்கு பரிசு – தங்கம்; கிருஷண னுக்கு கடும் கோபம் 15/3, 1719

கங்கையில் புனித நீராடுவோர் பற்றி பார்வதி கேள்வி ;14/3, 1715

சுவையான கதை- கர்ணன் கேட்ட கேள்வியும் கிருஷ்ணன் சொன்ன பதிலும் 13-3; 1713

பூ வா தே காய்க்கும் மரமும் உள ; 11/3, 1708

இந்துக்களின் அதி நவீன, அதி பயங்கர ஆயுதங்கள் ; 10/3, 1705

ஐந்து தந்தை, ஐந்து தாய், ஐந்து குரு யார் ; 9/3, 1702

தமிழில் ஜ , யா மர்மம் 7/3; 1698

மாசி நிலா பாசி படரும், 4/3, 1690

தமிழன் கண்ட செயல்முறை அறிவியல் , தண்ணீர், தண்ணீர் ; 2/3; 1685

Xxx

ENGLISH ARTICLES -MARCH 2015

Kings of Gupta and Kushan Dynasties, 31 March 2015 Post 1763

1764 S Nagarajan articles, listed separately

Twenty types of temples in Ancient India, 30/3,1760

1759 S Nagarajan articles, listed separately

30 Quotes on Time, 29/3;1757

Kali Yuga and the Government, 28/3:1755

One Minute Mahabharata, one minute Baghavatha, 27/1753

1751 S Nagarajan articles, listed separately

Rta, Marta, Amrta, Pramrta, Satyanrta, 26/3;1751

1750 S Nagarajan articles, listed separately

One Minute Ramayana, 25/3; 1749

Animals in Manu Smrti 24/31747

1746 S Nagarajan articles, listed separately

White Mustard Seeds to drive away the Ghosts,23/3:1743

1742 S Nagarajan articles, listed separately

Stri Rajya- Kingdom of Women in India, 22/3: 1741

1739 S Nagarajan articles, listed separately

Subrahmanya Siva’s personalExperience with Miracle Men ,21/3;1748

1737 S Nagarajan articles, listed separately

Date ofKalki avatara, 20/3: 1735

1733 S Nagarajan articles, listed separately

Silence is Not golden , 19/3, 1732

1730 S Nagarajan articles, listed separately

What is the Distance between You and God?18/3: 1728

1727 S Nagarajan articles, listed separately

Sorry, No Time for religious Stories 17/3: 1726

1724 S Nagarajan articles, listed separately

Lions and Elephants I Maha Bharata, 16/2, 1722

Arjuna got a Surprise Gift, Krishna angry 15/3: 1720

1718 S Nagarajan articles, listed separately

Holy dip in Ganga ! Parvati’s question : Shiva’s Answer 14/3; 1717

1716 S Nagarajan articles, listed separately

Mystery of Thirst: Karnas Question and Krishna’s Answer 13/3: 1714

1712 S Nagarajan articles, listed separately

Strange Bird Stories in Mahabharata, 12/3: 1711

1710 S Nagarajan articles, listed separately

Fish, Tortoise and Crocodile Stories in Mahabharata, 11/3;1709

1707 S Nagarajan articles, listed separately

Snakes and Snake bites in Mahabharata 10/3:1706

1704 S Nagarajan articles, listed separately

Hindu s Ultra Modern Weapons! 9/3; 1703

1701 S Nagarajan articles, listed separately

Our Five Fathers, Five Mothers and Five Teachers, 8/3; 1700

1699 S Nagarajan articles, listed separately

Mystery of J and Y in Literature, 7/3: 1697

1696 S Nagarajan articles, listed separately

Hindu Issues: Questions from Medical Students-Part 2; 6/3; 1695

1694 S Nagarajan articles, listed separately

1693- s Srinivasan article on navagraha sthalas around chennai, 5/3: 1693

Questions from London Medical Students-Part 1; 5/3;1692

1691 S Nagarajan articles, listed separately

1689 S Nagarajan articles, listed separately

Water Purification Technique s in Ancient Indian Literature, 3/3;1688

1687 S Nagarajan articles, listed separately

Amazing Yadava Kings, Part 17 of Dictionary of 10000 kings, 2/3: 1686

Navaratna Mystery in Sanskrit Literature,1 March 2015;1684

1683 S Nagarajan articles, listed separately

TAGS- INDEX 28, SWAMINATHAN POSTS, MARCH 2015

–subham—

தொல்காப்பியத்தில் வட திசை பற்றி முதலில் சொன்னது ஏன் ?–1 (Post.8760)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8760

Date uploaded in London – –1 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொல்காப்பியம் என்னும்  பழந்தமிழ் நூலுக்கு — முதல் தமிழ் நூலுக்கு– பாயிரம் எழுதியவர் பனம்பாரனார் .

“வடவேங்கடந் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுல   கத்து

வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்

…………………………”

இந்தப் பாயிரம் நமக்கு அரிய பெரிய செய்திகளை வழங்குகிறது.

முதல் செய்தி —

தமிழனுக்கும் சிந்து-ஸரஸ்வதி  நதி தீர நாகரீகத்துக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. ஏனெனில் தமிழ் பேசிய பகுதிகள் தென்  குமரி முதல் வடவேங்கடம் வரைதான். திருப்பதிக்கு அப்பால் வேறு மொழிகள் வழங்கின. இதைப் பனம்பாரனார் மட்டும் சொல்லவில்லை; தொல்காப்பியத்துக்குப் பின்னர் 2000 ஆண்டுகளாக வந்த அத்தனை உரைகாரர்களும் சொல்கின்றனர் . அதுமட்டுமல்ல. 30,000 வரிகளைக் கொண்ட சங்கத் தமிழ் நூல்கள் பதினெட்டிலும் கங்கை, இமயம், அருந்ததி, சப்த ரிஷிக்கள் முதலிய குறிப்புகள் உள . ஆனால் சிந்து நதி , சமவெளி பற்றிய குறிப்பே இல்லை. சிலர் இந்தியாவின் வடமேற்கில் வசித்த யவனர் பற்ரிய குறிப்புள்ளதே எனலாம். யவனர் என்ற சொல் சங்க இலக்கியத்தில் உண்டு. ஆயினும் இஃது ரோமானியர்களையே குறிக்கிறது என்பதை பல அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.

இரண்டாவது செய்தி

வடதிசை புனிதமானது !

கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார் முதலியோர் வட திசை நோக்கி அமர்ந்து, உண்ணா விரதம் இருந்து, உயிர் துறந்ததை புறநாநூறு செப்பும்.

பாண்டவர் ஐவரும்  வட திசை நோக்கி பயணம் செய்து ஒவ்வொருவராக உயிர் துறந்ததை மஹாபாரதம்  செப்பும்.

வடதிசை கயிலை நோக்கி சேரமான் பெருமாள் நாயனார், சுந்தர மூர்த்தி சுவாமிகள் சென்றதை பெரிய புராணம் செப்பும்.

பனம்பாரனாரும் ‘வட’வேங்கடம் என்ற சொல்லை முதலில் வைத்ததற்கு அதன் புனிதத் தன்மையே காரணம் என்று உரைகாரர்கள் புகல்வது படித்து இன்புறத்த தக்கது. அதில் இந்தியாவை அரச இலையின் வடிவத்துக்கு ஒப்பிடுவதும் இமயம் முதல் குமரி வரை புனித நிலப்பரப்பு என்று நவில்வதையும் படிக்கையில் ஆனந்தம் பொங்கும். வெள்ளைக்காரன் வந்து இந்திய ஒருமைப்பாட்டினை நமக்குக் கற்பித்தான் என்று உளறும் அரை வேக்காடுகளின் தலையின் பாறை இடி கொடுக்கும்.

இதோ உரைகாரர்களின் விளக்கம். சிவஞான முனிவரின் ‘தொல்காப்பிய விருத்தி’ நூலுக்கு திருவாவடுதுறை ஆதீன வித்துவான் தண்டபாணி தேசிகர் எழுதிய விளக்கவுரையிலிருந்து எடுக்கப்பட்டது —

1

தமிழ் நாட்டிற்கு வடக்கட் பிறவெல்லையும்  உளவாக, வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் . அகத்தியனார்க்குத் தமிழைச் செவி அறிவுறுத்த செந்தமிழ் பரமாசாரியனாகிய அறுமுகக் கடவுள் வரைப்பென்னும் இயைபுபற்றி என்பது . தெற்கட்  குமரியாறாகலின் , அதுவே எல்லையாயிற்று . கிழக்கு, மேற்கு கடல் எல்லையாகலின் , வேறெல்லை கூறா ராயினர் .

“வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத்

தென்திசை யுள்ளிட்  டெஞ்சிய மூன்றும்

வரைமருள் புணரியொடு பொருதுகிடந்த

நாட்டியல் வழக்க நான்மையின் கடைக்கண்

யாப்பின திலக்கணம் அறைகுவன் முறையே”

என்று சிறுகாக்கைப்பாடினியார் தெற்குங் கடலெல்லை கூறியது , குமரியாறு கடல்கொண்ட பிற்காலத்துச் செய்ததென அறிக

ஈண்டு வடக்கை முற் கூறியதற்கும் , வேங்கட முதலிய இடங்களைக் குறித்தமைக்கும் ஆசிரியர்களால் காரணங்கள் தனித்தனியே  கூறப் பெறுகின்றன–

சிவஞான முனிவர் —

வேங்கடம் வடக்கின் கண்ணுள்ளது என்பதும்  குமரி தெற்கின்  கண்ணுள்ளது என்பதும் உலகறிந்ததொன்று . அவற்றைத் திசையுடன் சேர்த்து வடவேங்கடம் தென் குமரி என்றதற்குக்  காரணம் திசை கூறி எல்லை கூறுதலே முறைமையாதலின் என்க.

நச்சினார்க்கினியர் —

மங்கல மரபிற் காரியஞ் செய்வார்  வடக்கும் கிழக்கும் நோக்கியும் சிந்தித்தும் செய்வாராதலின் மங்கலமாகிய வடதிசை முற் கூறப்பட்டது என்பர் .

(இங்கே நமக்கு ஒரு முக்கிய செய்தி கிடைக்கிறது; சுப காரியங்களை முடிவு செய்கையில் நீங்கள் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி உட்கார்ந்து அல்லது நின்று கொண்டு முடிவு செய்ய வேண்டும்.)

அரசஞ்சண்முகனார் —

வடக்கு எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாய்த் தன்னோடு ஏனைத்திசையையும் உணர்த்தற்குத் தானே காரணமாய்நிற்கும் மங்கலத் திசையாகலின்  தம்பாயிரமும் நூலும் நின்று நிலவுதல் வேண்டி முற்கூறப்பட்டது . மற்றும் என்றும் மாறாத துருவ நட்சத்திரத்தை அடையாளமாகக் கொண்டு அறியப்படுத்தலானும் இற்றைய விஞ்ஞான திசையறி கருவி எ ஞஞான்றும் வடக்கையே காட்டலானும் கூறினார்  எனவும் உரைப்பர் .

உலக வழக்கில் தென்வடல் , கீழ்மேல் எனவே எல்லை கூறும் வழி ஆடசியுண்மையானும் யாண்டும் வடக்குத்தெற்கு -மேல் கீழ் என்ற வழக்காறிண்மையானும்

“இரு திசை புணரின் ஏயிடைவருமே “

என்னும் சூத்திரத்தினும் ‘தெற்கே வடக்கு கிழக்கே மேற்கு’ என்ற வழக்குண்மையே எடுத்துக் காட்டப் பெறுதலானும் , இக்கூறிய இவைகளேயன்றிப் பிற காரணங்களும் உளவாதல் வேண்டும். . அவை – திசைகளுள்  வடக்கும் தெற்கும் பெருந்திசைகளாக, இமயம் முதல்  குமரி வரையுள்ள  நிலப்பரப்பைக் கொண்டு உணரப்பெற்று வந்தன .

‘திரிபு வேறு கிளப்பின் ‘ என்னுஞ் சூத்திரத்துக்குப் பெருந்திசைகளோடு கோணத்  திசைகள் புணரின்  என்று உரையெழுதப்பெறுவதும்  ‘பெருந்திசை’ என்ற வழக்குண்மையை வலியுறுக்கும் .

அரச இலை = இந்தியா !

இமயமுதல் குமரி வரையுள்ள நிலப்பரப்பு ஓரரசிலைபோல்வது .அதன் அடிப்பகுதி வடக்கு; அகன்று பரந்து கிடப்பது. அதன் நுனி போல நீண்டு ஒடி வளைந்த பகுதி தெற்கு. ஆதலால் அகன்று பந்த வடபகுதியை முற்கூறி , நீண்டு பரந்த தென் பகுதியைப் பிற்  கூறினார் எனலுமாம். . காந்த மலையும் வடவைத் தீயும் இருத்தலிற் கூறினார் என்றலுமாம் .

புறநானுற்றில்  இமயம் !

இங்ஙனமே புறத்தினும்

‘வடா அது பனி படு நெடுவரை வடக்கும் – தெனாஅது  உருகெழு குமரியின் தெற்கும்’  எனவும், சிகண்டியார்

‘வேங்கடங்குமரி   தீம்புனற் பவ்வமன்று – இந்நான் கெல்லை  தமிழது வழக்கே ‘ எனவும் , காக்கைபாடினியார்

‘வடக்குந் தெற்கும் குடக்கும் குணக்கும் வேங்கடங் குமரி கீழ் புனற் பவ்வமமென் – றன் நான்கெல்லை  யகவயிற் கிடந்த நூல் ‘ எனவும் வழங்குதலான் உணர்க.

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் நச்சி. சொல்லும் ஒரு அரிய செய்தி எகிப்திய நாகரீகத்திலும் உள்ளதைக் காண்போம்.

To be continued…………………………………

tags– வட திசை, வடவேங்கடந் தென்குமரி,

தலையாய ஹிந்து மகனை, முன்னணித் தலைவரை இழந்தோமே! (Post.8759)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8759

Date uploaded in London – – 1 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

தலையாய ஹிந்து மகனை, முன்னணித் தலைவரை இழந்தோமே!

ச.நாகராஜன்

இன்று 30-9-20 மாலை கிடைத்த செய்தி மனதையும் உடலையும் வெகுவாக பாதித்து நோகவைத்து செயலற்ற நிலைக்குக் கொண்டு சென்று விட்டது.

மானனீய கோபால்ஜி நம்மிடையே இல்லை என்ற செய்தியை ஜீரணிக்கவே முடியவில்லை.

சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளின் நினைவுகள் அலை அலையாய் நினைவில் வந்து மோதுகின்றன.

ஒன்றா, இரண்டா ஒரு நூற்றுக்கும் மேற்பட்ட அற்புத நிகழ்வுகள்.

வருடம் 1968.

சந்திரசேகர் என்ற நண்பர், ‘இராம கோபாலன் எனது வீட்டில் இருக்கிறார், வருகிறீர்களா’ என்று கேட்டார்.

கரும்பு தின்னக் கூலியா, ஆர் எஸ் எஸ் இயக்க பிரசாரக் என்றால் பார்ப்பதற்கு கேட்கவா வேண்டும், உடனே புறப்பட்டோம்.

அவரைச் சந்தித்த முதல் சந்திப்பே காந்தத்தால் இரும்புத் துளிகள் இழுப்பது போல இருந்தது. இழுக்கப்பட்டோம்!

முதல் சில நிமிடங்களில் அவர் பேசியதையே நாங்கள் உடனடியாக வீட்டில் வந்து ‘கமெண்ட்’ அடித்த போது விவேகானந்தரைப் பார்த்தது போல இருக்கிறது என்று பேசினோம்.

பின்னர் ‘சங்க வேலையாக’ அவருடன் நெடுங்காலம் தொடர்பு ஏற்பட்டது.

எங்கள் வீட்டில் அவருக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு என்ற நிலை ஏற்பட்டது.

இறுதியாக நான் அவரைத் தொடர்பு கொண்டது சில நாட்களுக்கு முன்னர்.

மதுரையில் உள்ள பெருமாள் தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்ரமிக்கப்பட்டிருந்த கடைகள் இடிக்கப்பட்டன என்ற செய்தியை உடனே அவருக்குத் தெரிவிக்க போன் செய்தேன். அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நிலையில் அவரது உதவியாளரிடம் என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.ஏனெனில் இதற்காக உற்சாகமும் உத்வேகமும் அவரிடமிருந்தும் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு கமிட்டியின் செயலாளர் திரு எம்.ராமசாமியிடமிருந்தும் பெற்றிருந்தேன்.

மதுரையில் ஆத்திக சமாஜங்களை ஒன்றிணைத்து ஊர்வலம் நடத்தினோம்.

ஆலயப் பாதுகாப்பு மாநாட்டின் மதுரை செயலாளராக இருந்து எட்வர்ட் ஹாலில் பெரிய மாநாடு நடத்தினோம். அதில் முக்கிய தீர்மானமாக இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி இருந்தோம்.

இதற்கு முன்னர் சில மாதங்களுக்கு  முன்னதாக அவரே என்னை அழைத்தார் போனில்.

மாலைமலரில் வெளியான எனது கட்டுரை ஒன்றை அவர் பாராட்டினார்.

ஏன் பேசவில்லை என்று அவர் என்னைக் கேட்ட போது அவருக்குள்ள இடைவிடாத பணியில் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை என்றேன். ‘இல்லை பேசு’ என்று அவரது தனி செல் நம்பரைத் தந்தார்.

பாராட்டத் தயங்காத பெரிய உள்ளம் கொண்டவர் அவர். அவரது உடலில் உள்ள ஒவ்வொரு திசுவும் ஹிந்து சிந்தனை கொண்டதே.

மகா தைரியசாலி.

கன்யாகுமரியில் விவேகானந்தர் பாறையை சில விஷமிகள் தகர்க்க  முயன்ற போது கடல் நீச்சுக்காரர்களுடன் படகில் சென்று விஷமிகளை எதிர் கொண்டு அவர்களை எச்சரித்தது யாரும் அறிந்திராத ஒன்று. விளம்பரத்தை விரும்பாதவர் அவர்.

காலையில் 4  மணிக்கு எழுந்து காயத்ரி மந்திரம் ஜபித்து பின் பல யோகாசனங்களைச் செய்வது அவர் பழக்கம். நாள் தவறாமல் இதைச் செய்யும் அவர் உடனடியாக சஙகப் பணிக்கு ஆயத்தமாவார். இரவு நெடு நேரம் வரை பணி தொடரும்.

இடைவிடாத பயணத்தை மேற்கொண்ட அவர் தமிழ்நாட்டில் செல்லாத ஊரே இல்லை. தமிழ்நாட்டில் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவு நெருங்கிய தொடர்பை அனைத்து சங்க ஸ்வயம்சேவகர்களுடனும் அவர் கொண்டிருந்தார்.

பெரிய எழுத்தாளர். நல்ல மொழிபெயர்ப்பாளர். பல்மொழி வல்லுநர்.

எழுமின் விழிமின் என்ற புத்தகத்தை அவர் தான் அற்புதமாக மொழிபெயர்த்தவர் என்பதை வெகு சிலரே அறிவர். விவேகானந்தரின் அற்புதமான உத்வேகமூட்டும் உரைகளைக் கொண்டது இந்த நூல். இது ARISE! AWAKE என்று ஆங்கிலத்தில் ஏக்நாத்ஜி ரானடே அவர்களால் தொகுக்கப்பட்டது.

 தொட்டதெல்லாம் தங்கமாகும் என்ற மொழிக்கேற்ப அவர் தொட்ட ஒவ்வொருவரும் ஹிந்து சிந்தனை கொண்ட பெரும் தொண்டராக மாறினர்.

பலர் கவர்னராக ஆகி உள்ளனர். பலர் தேசியத் தலைவர்களாக பாரத நாட்டுத் தொண்டில் இன்று ஈடுபட்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் அவலமான அரசியல் நிலையைப் போக்க் அவர் ஹிந்து முன்னணியைத் தொடங்கினார்.

ஹிந்து முன்னணி ஆற்றிய, ஆற்றி வரும் அற்புதப் பணிகள் மகத்தானவை.

இன்று தலையாய ஒரு ஹிந்து மகனை, முன்னணித் தலவரை இழந்து வாடுகிறோமே!

அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது ஆன்மா சாந்தி அடைவதாக. அவரது நினைவே நமக்கு உத்வேகம் ஊட்டி நமது பணியைத் தொடரச் செய்யுமாக!

***

tags- ஹிந்து முன்னணி, இராம கோபாலன், கோபால்ஜி

மஹரிஷி ஆபஸ்தம்பர்! – 2 (Post No.8758)

மஹரிஷி ஆபஸ்தம்பர்! – 2

ச.நாகராஜன்

ஆபஸ்தம்பரைப் பற்றி பிரம்ம புராணம் கூறும் இன்னொரு சம்பவம் இது :

ஒரு முறை அகஸ்திய மஹரிஷி ஆபஸ்தம்பரின் ஆசிரமத்திற்கு வந்தார்.ஆபஸ்தம்பர் தன் சிஷ்யர்களோடு கூட அகஸ்தியரை நன்கு வரவேற்று உபசரித்தார்.

பின்னர் அவரிடம் கேட்டார்: “ஓ! மஹரிஷியே! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய இந்த மூவரில் எவர் மிகவும் பூஜிக்கத் தகுந்தவர்? எவரிடமிருந்து சுகானுபவத்தையும் முக்தியையும் அடைய முடியும்? எவர் அன்ன தாதா? எவர் அழிவற்றவர்? எவர் தேவர்களுக்கெல்லாம் தேவர்? எவர் யாகங்களால் பூஜிக்கப்படுகிறார்? வேதங்கள் யாருடைய புகழை விசேஷித்துச் சொல்கின்றன? எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சந்தேகங்களைத் தயவுசெய்து தீர்த்தருள்வீராக.”

அகஸ்தியர் உடனே அவரை நோக்கிப் பின்வருமாறு நீண்ட பதிலை உரைத்தார்:” அறம், பொருள்,இன்பம், வீடு ஆகிய இந்த நான்குமே உலகில் உலகியல் பிரமாணமாகச் சொல்லப்படுகிறது. இந்த நான்கு சப்தங்களை விட வேத சப்தமே முக்கியமான பிரமாணமாகச் சொல்லப்படுகிறது. வேதத்தால் எவர் துதிக்கப்படுகிறாரோ அவரே பராத்பரர்.

அபரர் என்பது யார் என்றால் ம்ருதர் – அதாவது அழியை அடைபவர்.

பரர் என்பது யார் என்றால் அம்ருதர் – அதாவது அழிவை அடையாமல் என்றும் இருப்பவர்.

எவர் சரீரம் இல்லாதவரோ அவரே பரர்.

சரீரமுள்ளவர் அபரர்.

அபரன் என்பது குணம், ரூபம், வியாபகம் ஆகிய இவற்றின் வேறுபாடுகளினால் – அதாவது பேதங்களால் – மூன்று விதங்களாக மாறுகிறது. ஒருவரே பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று விதமாகச் சொல்லப்படுகிறார். இம்மூன்று பேர்களில் அறியத்தக்கதான பதார்த்தம் ஒன்று தான். அது தான் பரம் என்று சொல்லப்படும். அந்தப் பரம் என்ற பொருளே உலகத்தின் நன்மையின் பொருட்டு வியாபகம், குணம், செயல் ஆகிய பேதங்களாக இப்படி மூன்று ரூபங்கள் உள்ளதாக ஏற்படுகிறது.

இதுவே முக்கியமான உண்மை.

இதை எவன் ஒருவன் அறிகிறானோ அவனே வித்வான். (கற்றறிந்தவன்)

இந்த விஷயத்தில் எவன் ஒருவன் பேதத்தைச் சொல்கிறானோ அவன் லிங்கபேதி என்று சொல்லப்படுகிறான்.

அப்படிப்பட்டவனுடைய பாவத்திற்குப் பிராயச்சித்தமே கிடையாது.

இந்த மூன்று தேவர்களுடைய மூர்த்தி பேதமானது வேதத்தில் தனித்தனியே விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சரீரம் இல்லாமல் இருக்கும்படியான அந்த ஒரே பதார்த்தமாகிய பரம் மேற்சொன்ன மூன்றிலும் மேலானதாகும்.”

என்று இப்படி முடித்த அகஸ்தியரை நோக்கி ஆபஸ்தம்பர் கேட்டார்:” நீங்கள் கூறிய இந்த பதிலில் எனக்கு எந்த வித நிச்சயமும் ஏற்படவில்லை. என்றாலும் கூட அதற்குள் ரகசியமாய் இருக்கும் விஷயத்தை எனக்குச் சொல்வீராக!”

அகஸ்தியர் உடனே, “ இந்த மூன்று உலகங்களிலும் ஒருவருக்கொருவர் பேதம் என்பதே கிடையாது. என்றபோதிலும் மங்கள ரூபமாய் இருக்கின்ற சிவனிடமிருந்தே  எல்லா சித்திகளும் உண்டாகின்றன. அவரே இந்த ஜெகத்திற்குக் காரணம். அவரே ஜோதி ரூபமாக விளங்குகிறார். ஆகவே தண்டகாவனத்தில் உள்ள கௌதமி நதிக்கரை ஓரத்தில் சேவிப்பவர்களின் பாவத்தைப் போக்கும் பரமசிவன் இருக்கிறார். அங்கு சென்று மிகுந்த பக்தியுடன் அவரை பூஜித்து வாரும்” என்றார்.

இதைக் கேட்ட ஆபஸ்தம்பர் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்.

நேராக கங்கை நதிக்குச் சென்று அங்கு ஸ்நானம் செய்து பரமசிவனை நோக்கி இப்படித் துதித்தார்:-

“ கட்டைகளில் நெருப்பும், மலர்களில் வாசனையும், விதைகளில் மரமும், கற்களில் தங்கமும் போல  எல்லாப் பிராணிகளிலும் எவர் மறைந்திருக்கிறாரோ அப்பேர்ப்பட்ட சோமநாதரை நான் சரண் அடைகிறேன்.

எந்த பரமசிவன் விளையாட்டினால் ஜெகங்களை சிருஷ்டித்து காப்பாற்றி வருகிறாரோ, எவர் விஸ்வரூபரோ, எவர் ஸத்துக்கும், அஸத்துக்கும் மேலானவரோ, எந்த ஒருவரை நினைத்த மாத்திரத்தில் ஒருவன் தரித்திரம், பாபம், சாபம், ரோகம் ஆகியவற்றின் கொடுமைகளிலிருந்து பாதிக்கப்படாமல் இருக்கிறானோ எவரால் ஆதியில் பிரம்மா முதலியவர்கள் வேதத்தில் சொல்லப்பட்ட தர்மத்தை அறிந்து அதில் ஆசை கொண்டார்களோ, யாரால் இவ்விதம் இரு சரீரங்களை அடைந்தார்களோ, மந்திரத்தினால் பரிசுத்தமாயிருக்கிற நமஸ்காரமும் அக்னியில் ஹோமம் செய்யப்பட்ட பதார்த்தமும் எவரைச் சென்று அடைகிறதோ, எவரைக் காட்டிலும் வேறொரு பிரசித்தமான வஸ்து இல்லையோ, எவரைக் காட்டிலும் பெரிது, சிறிது வேறொன்றும் இல்லையோ, எவரது ஆணையால் இந்த உலகம் ஆச்சரியகரமாகவும், பெரிதாகவும் இருக்கிறதோ, எவரிடத்தில் ஐசுவரியம், கர்த்தத்வம், மகத்துவம், அன்பு, கீர்த்தி, சுகம், சாஸ்வதமான தர்மம் ஆகிய அனைத்தும் இருக்கின்றனவோ, யார் எல்லோரையும் காக்கிறாரோ, சரணம் அடைந்தவர்களிடம் யார் ஒருவர் பிரியமுடன் இருக்கிறாரோ அந்த சோமேஸ்வரரை நான் சரணடைகிறேன்.”

இந்த ஸ்தோத்திரத்தினால் மகாதேவர் சந்தோஷமடைந்து ஆபஸ்தம்பர் முன் தோன்றினார்.

ஆபஸ்தம்பர் மகாதேவரிடம், “ யார் ஒருவர் இவ்விடத்தில் ஸ்நானம் செய்கிறார்களோ, அவர்கள் இஷ்டப்படி அனைத்தையும்  அடைய வேண்டும்” என்று தனக்காகவும் மற்ற அனைத்து மக்களுக்காகவும் இப்படி வேண்டினார்.

பரமசிவனும்,” அப்படியே ஆகுக” என்று கூறி அனுக்ரஹித்தார்.

அது முதல் அந்த தீர்த்தம் ஆபஸ்தம்ப தீர்த்தம் என்ற பெயரில் பிரஸித்தம் அடைந்தது.

அதில் ஸ்நானம் செய்பவர்கள் வெகு காலம் தன்னைத் தொடர்ந்து வரும் அஞ்ஞான இருளிலிருந்து நீங்கி ஞான ஒளியைப் பெறுவான் என்ற நிலை உருவானது.

மஹரிஷி ஆபஸ்தம்ப சூத்ரத்தை அனுஷ்டிப்போர் இன்றும் ‘ஆபஸ்தம்ப சூத்ர:’ என்று தங்கள் சூத்ரத்தைச் சொல்வது வழக்கமாக உள்ளது.

***  (முற்றும்)

tags —ஆபஸ்தம்பர்! –2

அன்னம்/ உணவு பற்றிய 7 பழமொழிகள் என்ன? (Post 8757)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8757

Date uploaded in London – –30 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

அன்னம் இட்டாரைக் கன்னம் இடலாமா

அன்னமயம் பிராண மயம்

அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்

அன்னம் மிகக் கொள்வானும் ஆடை  அழுக்கு ஆவானும் பதர்

அன்னம் முட்டானால் எல்லாம் முட்டு

அன்னம் இறங்குவதே அபான வாயுவால்

அன்னத்தில் புத்தி கூர்மையேயன்றி வித்தையில் புத்தி கூர்மையில்லை

tags– அன்னம்/ உணவு , பழமொழிகள்

SWAMI CROSS WORD 30920 (Post No.8756)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8756

Date uploaded in London – –30 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

1 2 3 456 7
      8    
9     10    
           
11     12    
    13      
      14.    
15          
16     17    
18          

ACROSS-

1. –11letters—FOUNDER OF HINDU FRONT IN TAMIL NADU

8.—5—CAPITAL OF KUBERA AS PER SIVA PURANA

9 — 6—FIRST AND FOREMOST GOD IN HINDU PANTHEON

10.—4—WHERE JAIN TIRTHANKARA MAHAVIR DIED IN UTTAR PRADESH

11.—5—FASTING IN HINDUISM; VOW

12.—5—NAIL IN SANSKRIT AND OTHER INDIAN LANGUAGES

13.—4—WORLD’ S FIRST LAW GIVER

14.—5—CHILD, BABY

15.—6—UNTRASLATABLE  HINDU WORD FOR ALL GOOD THINGS

16—6—FAVOURITE STAR OF MOON

17.—5—LOWER CASTE PEOPLE OF MAHARASHTRA

18.—9—HALF SIVA, HALF GODDESS FORM

*******

DOWN—

1.—11—MANTRALAYA MAHAN

2.—8—ONE WHO CHURNS  OUR MIND

3.—6—SLOGAN, RECITATION  SOUND

4.—9—ONE WHO DESTROYS PAPA, TWO TOWNS  ARE IN TAMIL NADU

5.—5—MELODY IMPROVISATION,

6.—8—TWINS IN RAMAYANA

7. – – 10—HAND GESTURES IN BHARATA NATYA DANCE

founder of Hindu Front

tamilandvedas.com, swamiindology.blogspot.com

crossword, 30920,

–SUBHAM–

தகுதி, திறமை பற்றிய 31 பொன்மொழிகள் (Post No.8755)

அக்டோபர் 2020 நற்சிந்தனை காலண்டர்

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 8755

Date uploaded in London – –30 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பண்டிகை நாட்கள் – 2-காந்தி ஜெயந்தி , 17-நவராத்ரி ஆரம்பம், துலா விசு புண்ய காலம்; 

25-சரஸ்வதி பூஜை,  26-விஜய  தசமி, தசரா .

பவுர்ணமி -1, 31;  அமாவாசை -16; ஏகாதசி விரதம் – 13, 27

முகூர்த்த தினங்கள் – 18, 26, 29, 31

கடந்த எட்டு ஆண்டுகளில் 3000 தமிழ் பொன்மொழிகளையும் 3000 ஆங்கிலப் பொன்மொழிகளையும் ஸப்ஜெக்ட் -வாரியாக SUJECT WISE தமிழ், ஸம்ஸ்க்ருத புஸ்தகங்களிலிருந்து கொடுத்துள்ளேன். எனக்கே வியப்பு; எல்லாம் இறைவன் செயல்.

அக்டோபர் 1 வியாழக்கிழமை

அயோக்ய புருஷோ நாஸ்தி , யோஜகஸ் தத்ர துர்லபஹ – சுபாஷித ரத்ன பாண்டா காரம்

உலகில் உதவாக்கரை என்று எவருமிலர் ; அவரவர் திறமையைக் கண்டு உபயோகிக்கும் ஆட்கள் தான் இல்லை .

***

அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை- GANDHI JAYANTI

அதி ப்ரவ்ருத்தா சால்மலி வாரணஸ்தம்போ  ந பவதி – சாணக்கிய நீதி சாஸ்திரம்

இலவம் பஞ்சு மரம் எவ்வளவு உயர வளர்ந்தாலும் யானையைக் கட்டிப்போட உதவாது.

****

அக்டோபர் 3 சனிக்கிழமை

அயோக்யாய பதம் தத்தம் ஸர்வதா ஹானிக்ருத் பவேத் – கே ஆர்

தகுதியற்றவனிடம் பொறுப்பை ஒப்படைப்பது எல்லாவகையிலும் ஆபத்து

***

அக்டோபர் 4 ஞாயிற்றுக்கிழமை

குருட்டுப் பூனை விட்டத்தில் பாயும்

***

அக்டோபர் 5 திங்கட்  கிழமை

தக்கார் தக்கவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்படும் – திருக்குறள் 114

ஒருவன் இறந்தபின்னர் நிற்கும் புகழோ வசையோ அவரைக் காட்டிக்கொடுத்துவிடும் .

***

அக்டோபர் 6 செவ்வாய்க்கிழமை

இதனை இதனால் இவன் முடிக்கும்  என்றாய்ந்து

அதனை அவன் கண் விடல் – திருக்குறள் 517

யார் எதை திறமையாக செய்வார் என்று சிந்தித்து அந்த வேலையை அவனுக்குக் கொடு.

***

அக்டோபர் 7 புதன்  கிழமை

அங்கணம் சம்ஸ தே வக்ரம் நர் தனே குசலோ ஜனஹ

ஆடத் தெரியாத தேவடியாள் தெருக்கோணல் என்றாளாம்

***

அக்டோபர் 8  வியாழக்கிழமை

யோக்யம் யோக்யாய தாதவ்யம் – ஸதோபதேச ப்ரபந்த

தகுதியுள்ளவருக்கு தகுதியானதைத் தாருங்கள்

***

அக்டோபர் 9 வெள்ளிக்கிழமை

யோக்யேனார்த்தஹ  கஸ்ய ந ஸ்யாஜ்ஜனேன – சிசுபால வதம்

தகுதியுள்ள மனிதர்களால் பயன் அடையாதோர் உண்டா

***

அக்டோபர் 10 சனிக்கிழமை

யோ யஸ்மின் கர்மணி குசலஹ ஸ தஸ்மின் நியோக் தவ்யஹ- சாணக்கிய நீதி

யாருக்கு எந்த வேலையில் திறமை இருக்கிறதோ  அவரிடம் அந்த வேலையை ஒப்படை

***

அக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமை

சகடம் ச்வா ந கர்ஷதி – கே ஆர் கஹாவத் ரத்னாகர்

வண்டியை இழுக்க நாய் உதவாது

***

அக்டோபர் 12 திங்கட்  கிழமை

மந்தார மாலா மாலோக்ய மாலத்யாம் கோ ஹி  சாதரஹ –  ப்ருஹத் கதா மஞ்சரி

தேவ லோக மந்தார மலர் மாலை கிடைத்த பின்னர் , மல்லிகையை நாடுவோமா

****

அக்டோபர் 13 செவ்வாய்க்கிழமை

கையில் வெண்ணெய் இருக்கையில் நெய்க்கு அலைவாருண்டா ?- தமிழ் பழமொழி

****

அக்டோபர் 14 புதன்  கிழமை

சிறு துரும்பும் பல்குத்த உதவும் (யாரையும் ஒதுக்காதீர்கள் )

****

அக்டோபர் 15  வியாழக்கிழமை

ஹேம் நஹ சம்லக்ஷ்யதே ஹயக்நெள விசுத்திஹி ஸ்யாமிகாபி – ரகு வம்சம் 1-10

தங்கத்தின் தூய்மையை நெருப்பில் பரிசோதிப்போம்

(ஒருவரின் தன்மை/தகுதி  கஷ்டம் வரும்போது தெரிந்து விடும்)

அக்டோபர் 16 வெள்ளிக்கிழமை

பாரிஜாத லதாபருங்கொ ந ஹி  ஜாதிஷு சாதராக -ப்ருஹத் கதா மஞ்ச ரி

பாரிஜாத மலரை மொய்க்கும் வண்டு, மல்லிகைப்  பூவுக்கு மதிப்பு தராது

அக்டோபர் 17 சனிக்கிழமை- NAVARATRI BEGINS- DOLL DISPLAY IN SOUTH INDIAN HOMES

தன்  முதுகு தனக்குத் தெரியாது (தன்னைப் பற்றி மற்றவர் கருத்தைக் கேட்கவேண்டும் )

அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை

வெளவிய கருமம் எண்ணித் துணி – தமிழ்ப் பழமொழி

அக்டோபர் 19 திங்கட்  கிழமை

வீர சூரனானாலும் முன்படை வேண்டும் (டீம் ஒர்க் team work அவசியம்) தமிழ்ப் பழமொழி

அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை

அடிக்க அடிக்க அம்மியும் நகரும் ; முயற்சி திருவினை ஆக்கும் —தமிழ்ப் பழமொழி

அக்டோபர் 21 புதன்  கிழமை

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ—நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?– பாரதி பாடல் (Good Things/People are available from unexpected places)

XXX

அக்டோபர் 22 வியாழக்கிழமை

“முயல்விட்டுக் காக்கைப் பின் போனவாறே-

அப்பர் தேவாரம் – பழமொழிப்பதிகம்

அக்டோபர் 23 வெள்ளிக்கிழமை

“கரும்பிருக்க இரும்பு கடித்து எய்த்தவாறே-

அப்பர் தேவாரம் – பழமொழிப்பதிகம்

அக்டோபர் 24 சனிக்கிழமை

சுகஹ ஸ்லோகான் வக்தும் ப்ரபவதி ந காகஹ க்வசிதபி – ஸுபாஷித ரத்னாவளி

கிளிதான் ஸ்லோகங்களைத் திரும்பச் சொல்லும்   காகத்தினால் ஒருபோதும் செய்ய முடியாது

அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை- Sarasvati Puja

தலைவனை நம்பாதே ; தத்துவத்தை நம்பு –தமிழ்ப் பழமொழி (YOU DON’T NEED TO IMITATE YOUR BOSS; BUT STICK TO PRINCIPLES/ RULES)

அக்டோபர் 26 திங்கட்  கிழமை- Vijaya Dasami

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்- தமிழ்ப் பழமொழி

பாடப்பாட ராகம், மூட மூட ரோகம் PRACTICE MAKES PERFECT

அக்டோபர் 27 செவ்வாய்க்கிழமை

புராண மித்யேச்வ ந சாது சர்வம் –மாளவிகாக்னி  மித்ரம்

பழமை என்பதால் மட்டும் பெருமை சேர்ந்துவிடா து

அக்டோபர் 28 புதன்  கிழமை

வ் ருதா வ்ருஷ்டிஹி ஸமுத்ரேஷு – சாணக்கிய நீதி 11-12

கடலில் பெய்யும் மழை எல்லாம் வீண் (தகுதியற்றவருக்கு பதவி கொடுப்பது வீண் )

*****

அக்டோபர் 29 வியாழக்கிழமை

ந பேகஹ கோகநதிநீ கிஞ்சல்கா வாத கோவிதஹ – கதா சரித் சாகரம்

செந்தாமரையின் மகரந்தத் தாதுக்களை அனுபவிக்க தவலைக்குத் தகுதி இல்லை

****

அக்டோபர் 30  வெள்ளிக்கிழமை

ந ஹி  தாபயிதும் சக்யம் சாகராம்ப ஸ் த்ருனோ நுகயா – ஹிதோபதேசம்

கடல் நீரை வைக்கோல் தீப்பந்தத்தைக் கொண்டு  சூடுபடுத்த முடியாது

அக்டோபர் 31 சனிக்கிழமை

வினைக்கண் வினையுடையான்  கேண்மை வேறாக

நினைப்பானை நீங்கும் திரு – Tirukkural 519

நன்றாக வேலை செய்பவனின் நட்பை இழந்தால் , உள்ளதும் போய்விடும்

TAGS– தகுதி, திறமை, பொன்மொழிகள் ,அக்டோபர் 2020 காலண்டர்

—SUBHAM–

மஹரிஷி ஆபஸ்தம்பர்! – 1 (Post No.8754)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8754

Date uploaded in London – – 30 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷி ஆபஸ்தம்பர்! – 1

ச.நாகராஜன்

கீர்த்திமானும், புத்திமானுமான ஒரு மஹரிஷி இருந்தார். அவர் பெயர் ஆபஸ்தம்பர்.

அவருக்கு மிக்க பதிவிரதையான அக்ஷசூத்ரை என்ற மனைவி இருந்தாள். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் கற்கி.

ஒரு பிரார்த்தனையையும் இரு மந்திரங்களையும் கொண்ட ‘க்ருஹ்ய சங்க்ரஹசூத்ரா’ என்பதை அருளியவர் ஆபஸ்தம்பர்.

ஸ்மிருதி கர்த்தாக்களில் ஒருவரான ஆபஸ்தம்பர் க்ருஹ்ய சூத்திரத்தை இயற்றியதோடு ச்ரௌத சூத்திரமும் இயற்றியுள்ளார்.

க்ருஹ்ய சூத்திரங்களை இயற்றியுள்ள மஹரிஷிகள் இருப்பத்தைந்து பேர்கள் உள்ளனர்.

எதிர்காலத்தில் வருகின்ற சிஷ்ய ஜனங்கள், காலத்தின் கோலத்தினால் புத்திக் குறைவு ஏற்பட, அதனால் அந்தந்த கிரியைகளுக்கு உரிய மந்திரங்களை அந்தந்த காலத்தில் எடுத்து உபயோகிக்கத் தடுமாறுவர் என்பதை உணர்ந்து சிறந்த யுக்தியுடன் சூத்ரத்தை இவர் அமைத்துச் சிறந்தவரானார்.

ஜாதகர்மம் முதல் அக்னி ஹோத்ரம் வரை உள்ள பூர்வ சம்ஸ்காரங்களுக்கும், பிராணோத் க்ரமண சமய முதல் பிதுர் லோக பிராப்தி வரையிலான அபர சம்ஸ்காரங்களுக்கும் உரிய வேத மந்திரங்களைக் கோர்வையாக எடுத்து மந்த்ரப் ப்ரச்னம் என்று இரு ப்ரச்னங்களை இவர் நன்றாக செய்து அருளியதால் ஸூத்ரகாரர்கள் பலர் இருப்பினும் இவருக்கே ஸூத்ரகாரர் என்ற பெயர் அமைந்து விட்டது.

இவருக்கு ஆபஸ்தம்பர் என்ற பெயர் வந்த வரலாறு சுவையான ஒன்று.

அதை பிரம்மபுராணம் விவரிக்கிறது.

வேதங்களை நன்கு கற்ற பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் ச்ரௌத ஸ்மார்த்த கர்மங்களில் சிரத்தை உடையவராக இருந்து அவற்றை நல்ல முறையில் அனுஷ்டித்து வந்தார். சிரார்த்த காலங்களில் வேதங்களை நன்கு உணர்ந்த உத்தமமான அந்தணர்களையே அவர் அழைப்பது வழக்கம்.

ஒரு சமயம் சிரார்த்தம் செய்ய விழைந்த போது அவர் எண்ணியபடி ஒரு பிராமணர் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆகவே சகடம் என்று சொல்லப்பட்ட ஒரு விதியைக் கடைப்பிடிக்க எண்ணினார். அந்த விதியின் படி கூர்ச்சத்தில் பிராமணர்களை ஆவாஹனம் செய்து சிரார்த்தம் செய்ய எண்ணினார்.

அவரது இந்த எண்ணத்தை மஹரிஷி ஆபஸ்தம்பர் அறிந்தார். உலக க்ஷேமத்தை மனதில் எண்ணிய அவர் மிகுந்த அறிவைக் கொண்டிருந்தாலும், கொண்டிருக்காவிட்டாலும் பிரம்ம காயத்ரியை எவன் ஒருவன் முறையாக உபதேசம் பெற்று ஜபிக்கிறானோ அவன் யோக்கியனாகிறான் என்றும் படிப்படியாக அவனும் கற்றறிந்தவர் அடையும் நிலையை அடைகிறான் என்பதையும் உலகத்தாருக்கு உணர்த்த எண்ணினார்.

தானே ஒரு பிராமணர் வேடம் பூண்டு மேற்சொன்ன சிரார்த்தம் செய்ய விழைந்த பிராமணர் வீட்டுக்கு வந்தார்.

ஆபஸ்தம்பரைக் கண்ட பிராமணர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அவரை நன்கு வரவேற்று அர்க்ய பாத்திரம் முதலியவற்றால் உபசரித்து அவரை சிரார்த்தம் செய்யும் படியும் போஜனத்திற்கும் அழைத்தார்.

சிரார்த்தம் முறையாக நன்கு நடந்தேறியது. பிறகு போஜனமும் நடைபெற்றது.

உணவு உண்டு முடித்த பின்னர் சிரார்த்த காலத்தில் கடைசியில் கேட்க வேண்டிய முறைப்படி பிராமணர் ஆபஸ்தம்பரை நோக்கி, “அன்னமும், திரவ பதார்த்தங்களும் நன்றாக இருந்ததா, தங்களுக்கு திருப்தி தானா?” என்று கேட்டார்.

இதற்கு சாதாரணமாக போஜனம் கொண்டவர் திருப்தி என்று சொல்வது வழக்கம்.

ஆனால் ஆபஸ்தம்பரோ வழக்கத்திற்கு மாறாக, “சற்று அன்னமும், தயிரும் கொண்டு வாரும்!” என்றார்.

இதைக் கேட்ட சிரார்த்த கர்த்தா, “இப்படி கேட்பதானது தர்மத்திற்கு விரோதமாயிற்றே. செய்த சிரார்த்தம் வீணாகி விட்டதே” என்று எண்ணி கோபம் அடைந்தார். கையில் ஜலத்தை எடுத்து சபிப்பதற்காக பூமியை நோக்கி விட்டார்.

அதைக் கண்ட ஆபஸ்தம்பர் புன்சிரிப்புடன்  அந்த தண்ணீரை கீழே விழாமல் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்தார். நீர் அப்படியே நின்றது.

இந்த அதிசயத்தைக் கண்ட சிரார்த்த பிராமணர் இவர் ஒரு மஹாத்மா என்பதை உணர்ந்து அவரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். தனது சாப பிரயோகம் தன்னை வந்து சாராமல் இருக்க அனுக்ரஹிக்கும்படி வேண்டினார்.

அந்த பிராமணர் மீது இரக்கம் கொண்ட ஆபஸ்தம்பர் அவரை மன்னித்து அருளியதோடு, தான் யார் என்பதை அவருக்குத் தெரிவித்தார். பிறகு தான் அங்கு வந்த காரணத்தையும் சொன்னார்.

சிரார்த்தத்திற்கு வரும் பிராமணர்களை அதிக பரிசோதனையில்லாமல் அவர்களை ஆதரிப்பதே உத்தமம் என்றும், கூர்ச்சத்தில் பிராமணர்களை ஆவாஹித்து சிரார்த்தம் செய்வது மத்திமம் என்று கூறினார்.

அன்று முதல் சிரார்த்தத்திற்கு வரும் பிராமணர்களை யாரும் அதிக சோதனை செய்வதில்லை என்ற வழக்கம் ஏற்பட்டது.

குலம், கோத்திரம் விசாரித்து காயத்ரி சொல்லும் பிராமணர் தானா என்பதை மட்டும் பார்த்தால் போதும் என்ற வழக்கம் ஏற்பட்டது.

ஆபஸ்தம்பர் பிராமணரால் உபசரிக்கப்பட்டு தன் ஆசிரமம் சென்று சேர்ந்தார்.

தண்ணீரை அப்படியே ஸ்தம்பித்து நிற்க வைத்த இந்த சம்பவத்தால அவருக்கு ஆபஸ்தம்பர் என்ற பெயர் ஏற்பட்டது.

அடுத்து இன்னும் ஒரு சம்பவம்.

          ***  தொடரும்

tags- ஆபஸ்தம்பர்

சிரிப்பு பற்றிய 6 பழமொழிகள் என்ன? (Post No.8753)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8753

Date uploaded in London – –29 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

விடைகள்  கீழே  உள்ளன . ஒரு சொல் மீண்டும் மீண்டும் பழமொழிகளில் வரக்கூடும் .

ஆனால் கட்டத்தில் ஒரு முறை மட்டுமே இருக்கும் .

விடைகள்

1.சிரித்துச் சிரித்துக் கழுத்தறுக்கிறது

2.சிரித்தாயோ, சேலை அவிழ்த்தாயோ ?

3.சிரித்துச் சிரித்துத் தின்ற தோசைக்கு காசில்லையா ?

4.சிரித்தையோ சீரைக் குலைத்தையோ ?

5.சிரிப்பாணிக் கூத்துச் சிரிப்பாய்ச் சிரித்துச் சீலைப்பேன் குத்துகிறது

6.சிரிப்பார்  சிரித்துத் தெருவிலே நிற்கிறது

உதவிய நூல் – கழகப்  பழமொழி அகர  வரிசை

tags-   சிரிப்பு , பழமொழிகள்

–subham–