துரியோதனா! எங்கு தர்மமோ அங்கே ஜயம்! : காந்தாரி! (8567)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8567

Date uploaded in London – – –25 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹாபாரதத் துளிகள்!

துரியோதனா! எங்கு தர்மமோ அங்கே ஜயம்! : காந்தாரி!

ச.நாகராஜன்

மஹாபாரதப் போரில் துரியோதனன் ஏன் வெற்றி பெறவில்லை?

படைபலமும் அவனுக்கு அதிகம். பீஷ்மர், துரோணர், க்ருபர், கர்ணன் உள்ளிட்ட ஏராளமான அஸ்திர சஸ்திர வித்தைகள் தெரிந்தவர்களும் அவன் பக்கமே.

பதினோரு அக்ஷௌஹிணி சேனை கொண்ட அவனால் ஏழு அக்ஷௌஹிணி சேனை கொண்ட பாண்டவர்களை ஏன் வெல்ல முடியவில்லை?

இதற்கான காரணத்தை ஒரு அழகிய சம்பவம் விவரிக்கிறது.

யுத்தம் வரப்போகிறது, வரப்போகிறது, வந்தே விட்டது.

உடனே துரியோதனன் அவனது தாயான மஹாபதிவிரதையான காந்தாரியிடம் ஆசீர்வாதம் பெறச் செல்கிறான்.

அன்னையிடம் வந்த அவன் கைகளைக் குவித்துக் கொண்டு, “ அம்மா, இந்த ஞாதிகளுடைய சண்டையில் எனக்கு ஜயத்தைக் கூற வேண்டும் என்று வேண்டினான்.

ஒரு அம்மாவாக உடனே ‘தந்தேன் ஆசீர்வாதம், நீ ஜயிப்பாயாக என்று காந்தாரி சொன்னாளா? சொல்லவில்லை.

காந்தாரி கூறினாள் : “எங்கு தர்மமோ அங்கு ஜயம்

தர்மம் வென்றது.

காட்சி மாறுகிறது.

போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்த துரியோதனனின் உடலைப் பார்த்துக் கதறுகின்ற போது காந்தாரி இப்படிக் கூறி புலம்புகிறாள்:

“பெரிய வில்லை உடையவன்.மஹா பலசாலி. அப்படிப்பட்ட இந்த துரியோதனன் சிங்கத்தினால் புலி தள்ளப்படுவது போல பீமசேனனால் தள்ளப்பட்டுக் கிடக்கிறான்.

சிறுவனும் மந்தர்களை அடைந்தவனும், மந்தனுமான இவன் விதுரரையும் பிதாவையும் அவமதித்து விருத்தர்களுடைய அவமானத்தினால் இப்படி மரணத்தை அடைந்து விட்டான்.

பல்வேறு விதமாகப் புலம்பும் காந்தாரி, கிருஷ்ணனை நோக்கி, “நான் எதற்காகப் பிழைத்திருக்கிறேன்? என்று கேட்கிறாள்.

தன் துக்கத்தை விட இன்னும் பெரிதான ஒரு துக்கத்தை அவள் கிருஷ்ணரிடம் கூறுகிறாள் :

“கிருஷ்ணா, இதோ பார்! அழகிய இடையை உடையவள். பொன்னாலாகிய வேதிக்கு ஒப்பானவள். இவள் இப்போது விரித்த கூந்தலை உடையவளாக இருக்கிறாள். துரியோதனனுடைய தோள் நடுவை அடைந்த லக்ஷ்மணனின் இந்தத் தாயைப் பார். நல்ல மனமுள்ளவளான இந்தச் சிறு பெண் துரியோதனன் உயிரோடிருந்த காலத்தில் துரியோதனனுடைய இரு கைகளையும் அடைந்து சுகித்தாள்.

யுத்தத்தில் என் பேரனும் புத்திரனும் கொல்லப்பட்டதைக் காணும் என் உள்ளம் ஏன் இன்னும் நூறு சுக்கலாகச் சிதறிப் போகவில்லை?!

இவள் புத்திரனை முகர்ந்து பார்க்கிறாள். துரியோதனனை கையினால் நாற்புறமும் தடவிக் கொண்டிருக்கிறாள்!

நல்ல மனமுள்ள இந்தப் பெண் தன் கணவனுக்காக அழுவாளா, அல்லது தன் மகனுக்காக அழுவாளா?

ஹே கிருஷ்ணா, நீண்ட கண்களை உடைய இவள் இரு கைகளாலும் தன் தலையில் அடித்துக் கொண்டு அவன் மார்பில் விழுந்து அழுகிறாளே!

சாஸ்திரங்கள் மட்டும் உண்மையாக இருக்குமாகில், அதே போல வேதங்களும் ஸத்தியமாக இருக்குமாகில் இந்த துரியோதனன் தோள்வன்மையால் அடையப்பட்ட உலகங்களை அடைந்தான் என்பது மட்டும் நிச்சயம்!

இப்படி ஆரம்பிக்கும் காந்தாரி கிருஷ்ணரிடம் போர்க்களத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்ததையும் அவர்களின் மனைவிமார்கள் கதறுவதையும் காண்பிக்கிறாள்.

துச்சாதனன் திரௌபதியை சபையில் இழுத்து வந்த போது அவளை விட்டு விடு என்று துச்சாதனனிடம் சொன்னதை நினைவு கூர்கிறாள்.

விகர்ணன், துர்முகன் ஆகிய ஒவ்வொரு புத்திரனையும் பார்த்துப் பார்த்து அவள் அழுது புலம்புகிறாள்.

பின்னார் காந்தாரி கர்ணனின் மனைவியரைக் காட்டுகிறாள். பீஷ்மர் உள்ளிட்டோரின் குணங்களைக் கூறி அழுகிறாள்.

அவள் மனம் ஆறவில்லை.

இந்தப் போரின் வெற்றி தோல்விக்கு கிருஷ்ணனே காரணம் என்பதைத் தெளிந்து தெரிந்து கொண்ட அவள் கிருஷ்ணனை நோக்கிக் கூறுகிறாள்;

“ஹே! மதுசூதன! நீ கௌரவர்களது சேனை அழிவை விரும்பி இருக்கிறாய்! ஆகவே கூறுகிறேன் கேள். நான் கணவனுக்குச் செய்த பணிவிடையினால் சிறிது சம்பாதித்ததும் பிறரால் அடைய முடியாததுமான தவத்தின் பெயரால் சக்கரத்தையும் கதையையும் தரித்திருக்கிற உன்னைச் சபிக்கிறேன். இது முதல் முப்பத்தாறாவது வருடம் நீ நாசத்தை அடையப் போகிறாய். இதே போல உன்னைச் சேர்ந்த பெண்களும் கதறி அழப் போகிறார்கள்

கோரமான இந்த சாபத்தைக் கேட்ட கிருஷ்ண பரமாத்மா புன்முறுவல் பூத்தார்!

“க்ஷத்திரியப் பெண்ணே! நானும் இப்படி ஆகப் போகிறேன் என்பதை அறிவேன். என்னால் அநுஷ்டிக்கப்பட்டதையே நீ அனுஷ்டிக்கிறாய்! யாதவர்கள் யாராலும் கொல்லப்பட முடியாதவர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு நாசமடைவர்

அனைவரும் இதைக் கேட்டுத் திடுக்கிட்டனர்.

போரின் முடிவு தான் உச்சகட்டம் என்று நினைத்திருந்தவர்களுக்கு அடுத்த கிளைமாக்ஸை இப்படி கண்ணன் முன் வைக்கிறார்.

யுத்தத்தின் விளைவையும், அறம் வெல்லுவதையும், இதையெல்லாம் நடத்தும் சூத்ரதாரியான கிருஷ்ணன் தன் முடிவையும் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்வதையும் வியாசரைத் தவிர வேறு யாரால் இப்படித் திறம்பட அழகுறச் சொல்ல முடியும்?

ஸ்திரீ பர்வத்தில் பதினேழாவது அத்தியாயம் முதல் இருபத்தைந்து அத்தியாயம் வரை விளக்கப்படும் இந்தச் சம்பவங்கள் போரில் துரியனின் அழிவுக்கான காரணத்தை அறிய முடிகிறது.

சூத்ரதாரியான கண்ணன் அறத்தைக் காக்கவும் மறத்தை வீழ்த்தவும் யுகம் தோறும் அவதரிக்கும் பரமாத்மா தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

*

வ்யாஸாய விஷ்ணு ரூபாய! உமக்கு ஒரு நமஸ்காரம்!

வியாசர் உள்ளிட்டோராலும் அறிய முடியாத அற்புத கிருஷ்ணரே! உமக்கு கோடி நமஸ்காரம்!!

tags – காந்தாரி, துரியோதனன்

**

TAMIL Q & A ON MAGNETIC POLE CHANGE AND THE ETERNAL SEVEN IN HINDUISM(8566)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8566

Date uploaded in London – 24 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

TAMIL Q & A ON MAGNETIC POLE CHANGE AND THE ETERNAL SEVEN IN HINDUISM

FOLLOWING IS THE RECORDING BY WORLD HINDU MAHASANGAM, UK UNDER THE AUSPISCES OF JNANA SUDAR AND JNANA EEPAM.

SUBJECTS COVERED:

DID SITA DEVI WEAR PUNUL/SACRED THREAD?

WHY DO WE CALL  SEVEN PEOPLE AS CHIRNAJEEVI/ THE ETRNAL SEVEN?

IS THE WORLD COMING TO AN END BECAUSE OF MAGNETIC POLE CHANGE?

60 PERCENT CLARITY IS ON THE TAPE. I WILL IMPROVE IT DURING  NEXT MONDAY.

SEND YOUR QUESTIONS NOW.

EXPERTS WILL ANSWER THEM.

TAGS – TAMIL Q&A 24820, MAGNETIC POLE, ETERNAL SEVEN

உலகம் அழியுமா? புதிய புஸ்தகம், புதிய செய்தி!(Post No.8565)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8565

Date uploaded in London – 24 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகம் அழியுமா? புதிய புஸ்தகம், புதிய செய்தி!(Post No.8565)

“கலியுகம் பற்றிய விஞ்ஞான உண்மை : உலகம் அழியுமா? “என்று ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ‘பிளாக்’ (Blog)கில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் . ஒருவர் கேள்வி ஒன்றை அனுப்பியிருக்கிறார்;

“பூமியின் காந்த துருவங்கள் மாறி விட்டதா? இதை இந்து மதத்தில் சொல்லப்படும் சதுர் யுகங்களுடன் தொடர்புபடுத்தி எழுதியுள்ளீர்கள் ;  யுகங்களுக்கு இடையேயான யுக சந்தி என்னும் 1000 ஆண்டு நிகழ்வு பற்றியும் எழுதினீர்கள். இது நிகழ்ந்து கொண்டு இருக்கிறதா? இதை எப்படி அறிய முடியும்? பிரம்மாவின் புதிய கல்பம் துவங்கிவிட்டதா?”

இதற்கு சில புதிய விடைகள் கிடைத்துள்ளன. 2018-ம் ஆண்டில் “சுழலும் காந்தம்” THE SPINNING MAGNET என்னும் புஸ்தகத்தை ஆலன்னா மிட்ஷெல் (ALANNA MITCHELL) என்பவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்படும் செய்திகள் முந்தைய அச்சங்களை அகற்றுகின்றன. அவர் சொல்கிறார் பூமியின் காந்த மண்டலம் கடைசியாகத் தலை கீழாக மாறியது 780000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது தெளிவாகத் தெரிகிறது. அதனால் ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை. இந்தப் பூமியும் அழியவில்லை என்று காட்டுகிறார். ஆயினும் காந்த மண்டலம் நகர்வது உண்மைதான் அடுத்த முறை இது (தலை கீழாக) எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது என்கிறார்.

முதலில் நமக்குள் ஒரு கேள்வி எழும்.

சரி, காந்த மண்டலம் தலை கீழாக மாறினால் என்ன நடக்கும்?

நமது காம்பஸில் (compass)  வட துருவத்தைத்  தென் துருவமென்று காட்டும் .

காந்த மண்டலத்தைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் பல்லாயிரம் மைல்களுக்குக்  குடியேறிச் செல்லும் (Migratory whales, birds, Monrach Butterflies and Salmon fish) திமிங்கிலங்களும் , பல வகைப் பறவைகளும் சிலவகை பட்டுப்பூச்சி  ,மீன் வகைகளும் குழம்பிப் போகும் ; அவை அழிந்துபோகவும் வாய்ப்பு உண்டு.

நாம் பயன்படுத்தும் மின்சார, மின் அணு உபகரணங்கள் பாதிக்கப்பட்டு பூமியில் மஹா குழப்பம் (Utter chaos) ஏற்படும்

நம் பூமி ஒரு பெரிய காந்தம். அது உண்டாக்கும் காந்த மண்டலம்தான் நம்மை கேடயம் போல் காத்து வருகிறது. அது பலவீனமானால் விண்வெளியிலிருந்து சதாசர்வ காலமும் வரும் தீய கிரணங்கள் நம்மைத் தாக்கி அழித்துவிடும். காந்த மண்டலம் பலவீனம் ஆக ஆக வட துருவத்தில் மட்டும் காணப்படும் அதிசய வான மண்டல ஒளி வெளிச்சம் (Aurora borealis) , வர்ண ஜாலம் இந்தியா  போன்ற நாடுகளில்கூட தெரிய ஆரம்பிக்கும்.

நம்முடைய டி .வி.க்களும் கம்ப்யூ ட்டர்களும் மின்சாரத்தால் இயங்குகின்றன. காந்த துருவம் மாறினால் இவை எல்லாம் பாதிக்கப்படும்

ஆகவே இது குறித்து நாம் கவலைப்படுவதும் ஆராய்வதும் அவசியம்தான். பூமி என்னும் உருண்டையின் வயிற்றில் அதி பயங்கர வெப்பத்தில் இரும்பு, நிக்கல் ஆகியன கொதித்துக் கொண்டு இருக்கின்றன. அத்தோடு பூமி தன்னைத் தானே தட்டாமாலை சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. பூமியின் காந்த மண்டலத்துக்குக் காரணம் அதன் வயிற்றில் உள்ள கொதிக்கும் உலோக திரவமும் தட்டாமாலையும்தான். சைக்கிளில் உள்ள விளக்குக்கு டைனமோ உதவுவது போல இது செயல்படுகிறது..

அமெரிக்காவில் மேரிலாண்டில் 30 டன் எடை யுள்ள செயற்கை பூமி காந்தத்தை உருவாக்கி ஆராய்கின்றனர். அதற்குள் உருகிய நிலையில் சோடியம் திரவம் உள்ளது. இது போல ரஷ்யா, ஜெர்மனி முதலிய நாடுகளில் செயற்கை டைனமோ செய்து காந்த மண்டல ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். விண்வெளியிலிருந்து விண்கலங்கள் நம்முடைய காந்த மண்டலத்தைக் கண்காணித்து வருகின்றன .

புதிய புஸ்தகம் எழுதிய மிட்ஷெல் என்னும் பெண்மணியைப் பேட்டி கண்ட போது துருவங்கள் நகர்வது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது . ஆனால் எப்போது முழு பல்டி அடிக்கும், குட்டிக்கரணம் போடும் என்று சொல்லமுடியாது. ஆண்டுக்கு 55 கிலோமீட்டர் வீதம் துருவம் நகர்வதை விண்வெளிக் கலங்கள் காட்டுகின்றன. தென் துருவத்தில் கூடுதலாகவே பாதிப்பு இருக்கிறது என்று மட்டும் சொல்ல முடியும் என்று பதில் தந்தார்.

இவ்வளவு சொன்னாலும் புதிய புஸ்தகம் இப்படி அழிவு ஏற்பட்ட சான்று எதுவும் இல்லை என்கிறது.

அமெரிக்காவில் கொலராடோ பல்கலைக்கழகத்தில் டேனியல் பேக்கர் என்பவர் விண்வெளிக் கதிரியக்க கிரணங்கள் பற்றி ஆராயும் பிரபல விஞ்ஞானி ஆவார். .அவரிடம் துருவங்கள் மாறினால் என்ன ஆகும் என்று கேட்டபோது , கட்டாயம் பூமியிலுள்ள ஒருபகுதி மக்களின் திசுக்களை இது பாதிக்கும். மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் தீய கிராணங்கள் விழுந்தால் எல்லா வகை உயிரினங்களும் பாதிக்கப்படும் என்றார்.

பூமியின் தென்துருவ காந்த மண்டலத்தில் ஏற்படும் மாற்றம் பூமியின் ஐந்தில் ஒரு பகுதி பரப்பை வியாபித்து விட்டதால் ஆராய்சசியாளர்கள்  கவலையுடன் கவனித்து வருகின்றனர்

இதை முந்தைய கட்டுரையில் கலியுகம் முதலிய யுகக் கணக்குகளுடன் சாப்பிட்டேன். 2018ம் ஆண்டு புஸ்தகமோ சுமார் எட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்த துருவ பல்டி, குட்டிக் கரணம் ஏற்பட்டதாகச் சொல்கிறது.

கட்டுரையின் முதற்பகுதி நேஷனல் ஜியோகிராஃபிக் மகசின் (National Geographic Magazine Interview with Alanna Mitchell)  கட்டுரை நடத்திய இன்டெர்வியூவில் கண்ட செய்திகளாகும்

நம்மிடையேயும் யுகம் பற்றி பலவித தியரிக்கள்  உள்ளன. இது பற்றி நடிகர் ரஜினி காந்த் அவருடைய குருக்களான  பரமஹம்ச யோகானந்தா அவருடைய குருவான யுக்தேஸ்வர் சொல்லும் புதிய யுகக் கொள்கையை அடுத்த கட்டுரையில் காண்போம். அவருடைய கூற்றுப்படி இப்போது துவாபர யுகம் நடக்கிறது; கலியுகம் அல்ல.

Xxxxx

MY OLD ARTICLE

கலியுகம் பற்றிய விஞ்ஞான உண்மை : உலகம் அழியுமா??

Research paper written by London Swaminathan
Research article No.1462; Dated 6th December 2014.

2030-ஆம் ஆண்டில் காந்த துருவங்கள் இடம் மாறும் என்று ஜே.எம்.ஹார்வுட் என்பவர் 1970 ஆம் ஆண்டிலேயே கூறிவிட்டார். இப்படி மாறுவதால் உலகில் பேரழிவுகள் ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர். இதிலலென்ன உண்மை உளது என்று காண்போம்.

இந்துக்கள் உலகத்தின் வயதை நான்காகப் பிரித்துள்ளனர்: கிருத யுகம்(4), த்ரேதா யுக (3), த்வாபர யுகம் (2), கலியுகம் (1). ஏன் இப்படி தலைகீழ் வரிசையில் 4,3,2,1 என்று யுகத்திற்குப் பெயரிட்டார்கள்?

ஏன் என்றால் சத்திய யுகமான கிருத யுகத்தில் தர்மம் என்னும் பசு மாடு நான்கு கால்களில் நிற்குமாம். த்ரேதா யுகத்தில் அதற்கு மூன்று கால்கள்தான். அதவது தர்மம் 25 விழுக்காட்டை இழந்துவீட்டது. அப்போது ராம பிரான் தோன்றினார். த்வாபர யுகத்தில் தர்மம் என்னும் மாடு இரண்டு கால்களை – அதவது 50 விழுக்காட்டை இழந்து விட்டது. அப்போதுதான் கிருஷ்ணன் தோன்றினார். யுகத்தின் முடிவில் மஹாபாரத யுத்தம் நடந்தது. கலியுகத்தில் தர்மப் பசுவுக்கு இன்னும் ஒரு காலும் போய், ஒற்றைக் காலில் 25 சதவிகித புண்ய கர்மாவுடன் தள்ளாடிக் க்ண்டிருக்கும். கலியுக முடிவில் அந்தக் காலும் போய் உலகமே அழியும். பிறகு மீண்டும் கிருத யுகம் பிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

இப்படி மாறிமாறி வரும் யுகங்களுக்கு காலம் எவ்வளவு என்றும் இந்துக்கள் கணக்கிட்டனர். உலகில் மற்ற நாகரீகங்கள் எல்லாம் 20-ன் மடங்குகளிலும் (மாயா நாகரீகம்), 40-ன் மடங்குகளிலும் (செமிட்டிக் மதங்கள்) சிறிய எண்களுடன் நின்றுவிட்டன. இந்துக்களோவெனில் பல லட்சம் வருடங்களைச் சொன்னதோடு இதற்கு முடிவு என்பதே இல்லை. இந்து வட்டச் சுழல்—மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும் என்றும் மனித ஆண்டு, தேவ ஆண்டு, பிரம்மாவின் ஆண்டுகள் என்பன வெவ்வேறு என்றும் சொன்னார்கள். இது ஏதோ கற்பனையில் பிறந்த வருடங்கள் என்று 200 ஆண்டுகளுக்கு முன் வரை நினைத்தார்கள். இப்பொழுது பல்வேறு உலகங்கள் பல்வேறு வேகத்தில் சுற்றும்போது இவை எல்லாம் சாத்யம் என்று தெரிகிறது.

இதற்கு என்ன விஞ்ஞான விளக்கம் என்று எண்ணிப் பார்த்தால் விடை கிடைக்கவில்லை. இப்பொழுது விஞ்ஞானம் முன்னேற, முன்னேற புதுப்புது விளக்கங்கள் கிடைக்கின்றன. இந்துக்கள் சொன்ன காலக் கணக்கீடு:–

கிருத யுகம் – 1728 ,000, 000 ஆண்டுகள்
த்ரேதாயுகம் – 1296, 000, 000 ஆண்டுகள்
த்வாபரயுகம் – 864,000 ஆண்டுகள்
கலியுகம் – 432, 000 ஆண்டுகள்

இந்த நாலு யுகங்களையும் சேர்த்து சதுர்யுகம் என்பார்கள். 8,640,000,000 ஆண்டுகள் ஒரு கல்பம் எனப்படும். அதுதான் பிரம்மாவின் ஒரு நாள். அதுபோல அவர் நூறு ஆண்டுகள் வாழ்வார். அவருக்குப் பின்னால் வேறு ஒரு பிரம்மா வருவார். இந்தக் காலச் சுழற்சிக்கு முடிவே இல்லை.

கலியுகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் ஓரளவு விஞ்ஞான விளக்கம் சொல்லலாம். நம்முடைய பூமி ஒரு காந்த உருண்டை. எப்பொழுதும் காந்த மண்டலத்தை உருவாக்கிய வண்ணம் இருக்கும். ஏன் இப்படி நடக்கிறது. நாம் வாழும் பூமியின் மேல் ஓடு வெறும் எட்டு மைல்கள்தான். அதன்மீதுதான் நாம் வசிக்கிறோம். அதற்குக் கீழே அதள பாதாளத்துக்குப் போனால் பூமியின் வயிற்றில் அது நெருப்பைக் கட்டிக்கொண்டு தன்னைத் தானே சுற்றுகிறது. அது மட்டுமா? தான் தட்டாமாலை சுற்றுவதோடு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமியானது சந்திரனையும் தன்னோடு இழுத்துக் கொண்டு சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனோவெனில் நவக் கிரஹங்களுடன் பால்வெளி மண்டலத்தைச் சுற்றிவருகிறது. இப்படி பூமி சுற்றுவதால், கடலைக் கடைந்தது போல பூமியின் வயிற்றைக் கடையும் போது பூமியே காந்த சக்தி உருவாக்கும் ‘டைனமோ’ ஆகிவிடும்.

இந்த பூமியில் வட துருவம், தென் துருவம் என இரு துருவங்கள் உண்டு. அதே போல காந்தத்திலும் – அதாவது பூமி என்னும் கிரஹத்தைச் சுற்றி இருக்கும் – காந்த இரு துருவங்கள் உண்டு. வானத்தில் பூமியைச் சுற்றிவரும் பல விண்கலங்கள் மூலம் இவற்றை ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவது தெரிகிறது. பூமியின் காந்த மண்டலம்தான் நம்மை சூரியனிடமிருந்து வரும் தீய கதிர்களிl இருந்து காத்துவருகிறது. இப்படி காந்த மண்டலம் இல்லாவிடில் நமது பூமியும் சந்திரன், செவ்வாய் போல வறண்ட இடங்களாகக் காட்சி தரும். உயிரினங்களே இரா.

மாக்னெட்டொகெட்டொன்
காந்த மண்டல வட துருவம் மெதுவாக நகர்ந்து தென் துருவத்துக்குப் போய்விடும். அதே போல தென் துருவம் மெதுவாக நகர்ந்து வட துருவத்துக்குப் போய்விடும். அதாவது இரண்டும் இடத்தை மாற்றிக் கொள்ளூம். இது ஓரிரவில் நடந்து விடாது ஆயிரம் ஆண்டுகூட ஆகலாம்.

இது நடைபெறும் காலம் பக்கத்தில் வந்துவிட்டது விண்கல ஆய்வில் தெரிய வந்ததால் விஞ்ஞானிகள் கவலை அடந்துள்ளனர். 2030-ல் இது நடைபெறும் என்று ஏற்கனவே பல விஞ்ஞானிகள் கூறியது உண்மையாகி வருகிறது. இப்படி துருவம் மாறுவது நாலு லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடைபெறும் என்றும் இதற்குக் காரணம் காந்தப் புலன் பலவீனம் அடைவதுதான் என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுவர். கடந்த சில நூறு ஆண்டுகளில் பூமி அதன் காந்த சக்தியில் பத்து சதவிகிதத்தை இழந்துவிட்டது.

துருவங்கள் மாறும் நாலு லட்சம் அண்டுகள் என்பது கிட்டத்தட்ட கலியுகத்தின் காலத்தை (432,000) ஒட்டிவருகிறது. நாம் கலியுகம் முடிவில் பெரிய மாறுதல் வரும் என்று நம்புவது போல விஞ்ஞானிகளும் காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பர். தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பர். இதை மாக்னெட்டோகெடான் என்று அழைப்பர். கடந்த காலத்தில் இப்படி மாறிய போது உலகம் அழியவில்லை என்று கல் படிம அச்சுகள் காட்டுகின்றன.ஆனால் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டன என்பது அவர்கள் தரப்பு வாதம். மற்றவர்களோவெனில் டைனோசர் போன்ற ராட்சத மிருகங்கள் அழிந்தது இதனால்தான் என்பர்.

ஒரு சுனாமி வந்த பின்னர்தான் அதன் பேரழிவுச் சக்தியை நாம் உணர்ந்தோம். அது போல ஒரு காந்த துருவ மாற்றம் ஏற்பட்ட பின்னர்தான் நமக்கு அது பற்றி விளங்கும் என்றும் அவர்கள் கூறுவர்.

காந்த துருவ மாற்றம் மெதுவாகத்தான் நடைபெறும்; அது நடக்க 1000 ஆண்டு ஆகும் என்பது போல நாமும் யுகங்களுக்கு இடையே துருவ சந்தி என்று இடைக்கால, இன்டர்வல் – வைத்திருக்கிறோம். இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கையில்தான் கலியுகம் என்பது காந்தப் புலன் மாற்றம் அடையும் காலம் என்று எண்ணத் தோன்றுகிறது. பெரிய இடைவெளி, சின்ன இடைவெளி என்று இருக்கும் என்றும் அதற்குப் பின்னரே யுகங்கள் முழுதும் மாறுபட்டிருக்கும் என்றும் புராணங்கள் பகரும். இவைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கையில் விஞ்ஞானம் வளர, வளர நமக்குப் புராணங்கள் சொன்னது உண்மையே என்ற உணர்வு பலப்படுகிறது.

சந்திரனில், விண்கலம் இறங்கிவிட்டது, செவ்வாய்க்கு விண்கலம் போய்ச் சேர்ந்துவிட்டது, வாயேஜர் என்னும் விண்கலம் சூரிய மண்டலத்தையே தாண்டிப் போய்விட்டது என்றெல்லாம் பத்திரிக்கையில் வரும் செய்திகளைக் கேள்வியே கேட்காமல் நம்பும் நம்மவர், நமது முன்னோர்கள் —– நம்மிடம் தேர்தலில் வோட்டோ, கையில் பணமோ கேட்காமல்—— நமது நன்மைக்காக எழுதிவைத்ததை நாம் நம்ப வேண்டாமா? அதுதான் அறிவுடைமை அன்றோ!

contact swami_48@yahoo.com

தம்பி பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8564)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8564

Date uploaded in London – 24 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தம்பி என்ற சொல் மீண்டும் மீண்டும் பல இடங்களில் வந்தால் ,

கட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே இருக்கும் .

1.தம்பி உடையவன் படைக்கு அஞ்சான்

2.தம்பி உழுவான், மேழி எட்டாது

3.தம்பி கால்நடை, பேச்சு பல்லக்கிலே

4.தம்பி பேச்சைத்  தண்ணீரில் எழுத வேண்டும் 

5.தம்பி சமர்த்தன், உப்பில்லாக் கஞ்சி கலம் குடிப்பான்

6.தம்பி சோற்றுக்குச் சூறாவளி, வேலைக்கு வாரா வழி

–subham–

tags…..தம்பி , பழமொழி,

QUIZ முடிஞ்சா கண்டு பிடி! இல்லேன்னா ‘காப்பி’யடி !!!! (Post No.8563)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8563

Date uploaded in London – 24 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

QUIZ முடிஞ்சா கண்டு பிடி! இல்லேன்னா ‘காப்பி’யடி !!!!


ஏதாவது 4 கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால்  புத்திசாலி!!!
எங்கே ஆரம்பியுங்கள் பார்க்கலாம். கத்துக்குட்டியின் விடைகள் கீழே உள்ளன

1.இப்போது நடக்கும் காலத்தின் பெயரென்ன???
இது கூட தெரியாமலா??? என்ன முட்டாள்தனமான கேள்வி
“நிகழ்காலம்”இது கூட தெரியாதா…..
என்ன கல்பம்??? (காலத்தை அளக்கும் நேரம் இது)
விட்டுத்தள்ளு இன்னம் 9 கேள்விகள் இருக்கே….



2)உயிரினம்  தோன்றி எவ்வளவு வருடங்களாகின்றன???


3)ஒரு மன்வந்திரத்திற்கும் இன்னோரு மன்வந்திரத்திற்கும்
உள்ள இடை வெளியின் பேரென்ன???


சரி சரி இவன் கேட்கிற கேள்விக்கெல்லாம்’ கூகுள்’ (GOOGLE) தான் பதில்
சொல்லும்!

சரி ,அதைத்தான் பாருங்களேன், பதில் எழுதுங்களேன்


4)கணவனை இழந்த பெண்ணை விதவை என்கிறோம்
மனைவியை இழந்த ஆணுக்கு என்ன பெயர்???


5)ஒரு வருடம் என்பது எவ்வளவு நாள் சரியாக????
இது கூட தெரியாதா??? சும்மா 5 ம்கிளாஸ் பாடத்தையெல்லாம்
கேட்டுகிட்டு…….365 1/4 என்றால் 2 மார்க் தான்
கேள்வியை கவனியுங்கள் துல்லியமாக……
என்ன தலையுல குத்திகிறீங்களா???


6)சுவானம் என்றால் என்ன???அது யாருடைய வாகனம்???


7)தர்பையிலிரந்து பிறந்தவர் யார் யார்??
சரி சரி கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு உங்க மூஞ்சிய
பார்க்க…….ஒண்ணே ஒண்ண நான் சொல்லிடறேன் இன்னொண்ண
நீங்க சொல்லுங்க பார்போம்
தர்ப்பையிலிருந்து வந்த ஒருவன் லவன்,குசன் (TWINS) .
இன்னொருத்தர் யார்???
உங்க வீட்ல பெரிய வயதானவர்  யாராவது இருந்தா கேட்டு
பாருங்களேன்…….


8)வானத்தில் பெருங்கரடி கூட்டம் (GREAT BEAR- URSA MAJOR)  என்று ஒன்று,7 முனிவர்கள்
சேர்ந்தது….அவர்கள் யார் யார்…????


9)கிருஷ்ணரின் 8 பட்ட மகிஷிகளின் பெயர்கள் என்னென்ன ?


10)ஒரு மண்டலம் இந்த மருந்தைச் சாப்பிட வேண்டும்.
ஓரு மண்டலம் விரதம் இருந்து சபரி மலைக்குச் சென்று
சுவாமி அய்யப்பனைக் காண வேண்டும்……
ஓரு மண்டலம் எனபது எவ்வளவு நாள்??? எப்படி கணக்கிடப்
படுகிறது????


11)சிவனுக்கு எத்தனை பிள்ளைகள்???
அதான் ஊருக்கே தெரியுமே…….வினாயகர்,முருகன்….தப்பு


12)(பாற் )கடலின் மேல் உள்ள தெய்வம்- நாராயணன்
மலை மேல் உள்ள தெய்வம் சிவன்,முருகன்.
பாதாளத்தில் உள்ள பாம்பின் பெயெரென்ன???


13)உலகில் தோன்றிய முதல் மொழி எது???
உடனே ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தில்வாளொடு
முன்தோன்றிய மூத்த குடி…தமிழ்’!!!
இது இல்லை விடை- உடனே நீ ஒரு தமிழ் விரோதி பார்ப்பன
கைக்கூலி…சரியப்பா சமஸ்கிருதமும் இல்லை
ஓஹோ நீ கிருஸ்துவனா இயேசு பேசிய அராமியமா???
இல்லை தெரிந்து விட்டது ஹீப்ரூ??? இல்லை பாலி! இல்லை;
இலத்தீன்;இல்லை , கிரேக்கம்….பின்னெ என்னதாய்யா அது???
கண்டுபிடி கண்டுபிடி……


14)”கண்ணாடி முன் நின்று நீ உனது வலது கரத்தை தூக்கினால்
அது இடது கரத்தை தூக்கும்”
இந்த ஸ்டேட்மெண்ட் (STATEMENT)  சரியா????
சரி என்றால் எப்படி ??? இல்லை என்றால் எப்படி???


15)மொத்த எண்கள் எத்தனை 1, 2, 3, ???
அப்பாடா செத்தான்டா சேகரு….சிலர் மற்றவனை மாட்டி விட்டு
சிரிப்பது, அல்லது கண்டு பிடித்து விட்டோம்; அவன் வாயில மண்
என்று சந்தோஷப்படுவது!!


சரி, கடைசீ கேள்விக்கு வருவோம்

கடவுளே, கடவுளே இந்த கேள்வியாவது ஈஸியாக இருக்க
வேண்டுமே…..

16)அக்னி நடசத்திரம் எப்போது ஆரம்பிக்கும் எப்போது முடியும்?
உடனே பஞ்சாங்கத்தை தேடி போகாதீங்க ஒவ்வொரு வருஷமும்
எப்படி கணக்கிடப்படுகிறது???


*****

சரி,ஓவ்வொன்றுக்கும் 10 மார்க் போட்டுக் கொள்ளுங்கள்
150 க்கு 40 வாங்கினாலே நீ ங்க இன்டலிஜென்ட் தான்!!!
இந்த tamilandvedas -ஐ அடமின் செய்கிற திரு .சாமி நாதன்
லண்டன் B.B.C யில் இருக்கும் போது இது மாதிரி நிறைய
கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அவர் 30 வருடங்களுக்கு 

முன் எழுதிய புத்தகம் “ வினவுங்கள் விடை தருவோம்”.

நன்றி வணக்கம்

*****

ANSWERS

1.விடை -சுவேத வராக கல்பம்

2.விடை- 1,972,944,460 வருடங்கள்;சுமார் 198 கோடி.

3.  விடை- ஸந்த்யா காலம்

4. விடை- விதுரன்

5.விடை-365 நாள்,15 நாழிகை,31 வினாடி 15 தற்பரை

6.விடை- நாய் பைரவர்

7.விடை- கருப்பண சாமி

8. அத்ரி ,பிருகு, குத்ஸர், வசிஷ்டர் கவுதமர், காஸ்யபர், ஆங்கீரசர் (சப்த ரிஷிக்கள்)

9. ருக்மணி,,சத்யபாமா,ஜாம்பவதி, காளிந்தி, மித்ரவிந்தா
சத்மயி, பக்ரா , லக்ஷ்மணா

10. 48 நாள் = 27+12+9 (27 நட்சத்திரங்கள்,12 மாதங்கள், 9 கிரகங்கள்)

11. விடை- 4 ; வினாயகர்,வீர பத்ரர், அய்யப்பன் முருகன்

12. விடை வாசுகி என்னும் பாம்பு

13.விடை சைகை (SIGN LANGUAGE)

14.விடை தவறு.கண்ணாடி, தன் முன் இருப்பதை பிரதிபலிக்கிறதே
தவிர, கண்ணடிக்கு இடது, வலது தெரியாது.இடது,வலது
என்று வைத்துக்கொண்டது நீ தான்,சரியா????

15.விடை- 10;  பூஜ்யத்தைச் சேரக்க மறந்தீர்களா???

16. விடை சூரியன் பரணி நட்சத்திரத்திறகுள் நுழையும் போது 

ஆரம்பித்து பரணி நட்சத்திரத்தை விட்டு. போகும்போது முடிவடைகிறது

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

tags– முடிஞ்சா கண்டு பிடி!,, kattukuty quiz,

BOOKS INDIANS SHOULD READ – 25 (Post No.8562)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8562

Date uploaded in London – – – 24 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

BOOKS INDIANS SHOULD READ – 25

                                                      R. Nanjappa

                          THE COLLECTED WRITINGS OF DHARAMPAL- 4.

                                                      Chapter 9 – Part 4

WESTERN INDIA: G.L. PRENDERGAST, 1821 

Prendergast was a member of the Council in the Bombay Presidency. He stated in 1821:

“…every member of the Board knows …that there is hardly a village, great or small,

throughout our territories, in which there is not at least one school, and in larger villages

more; many in every town, and in large cities in every division: where young natives are

taught reading, writing and arithmetic, upon a system so economical, from a handful or

two of grain to  perhaps a rupee per month to the school master according to the ability of

the parents, and at the same time so simple and effectual, that there is hardly a cultivator

or petty dealer who is not competent to keep his own accounts with a degree of accuracy,

in my opinion, beyond what we meet with amongst the lower orders in our own country;

while the more splendid dealers and bankers keep their books with a degree of ease,

conciseness, and clearness that I rather think fully equal to those of any British

merchants.


 UNANIMOUS PRAISE

We thus see from the accounts of Britishers and other foreigners themselves that India did

have a flourishing system of education, which served it well. It was comparable to the best

in the world. Indeed, it was better in some respects to their own that even the British

borrowed elements from it. 

All this testimony was available in writing, but they had not yet become ” printed documents”

to which “precise references” could be drawn. The colonial powers willfully suppressed

them. It was a pity that no nationalist leader did take up this challenge. It was unfortunate

that even our so called academics did not access the original documents and follow up

on the debate, even after Independence. Most of them continue to follow the British lies

and concoctions without critical scrutiny or application of mind, or even plain conscience..

It was Dharampal who unearthed the hidden papers and published them. He has done what

a true University should have done. He proved, on the basis of British documents

themselves, that Gandhiji was totally right in his claims about Indian education.

ALL ROUND DECAY 

These accounts also reveal more than educational decay. They show how the country

got into the deathly grip of the imperial power , our whole economic system, polity, social

arrangements, which indeed supported education and other public purposes, collapsed.

There had been revenue assignments for many of the teachers, and these were

dispossessed. The village community lost its financial independence and

political  control. They lost their financial resources. There was an “over all disruption 

and decline of Indian society and its institutions under British rule”. Decline of our

education was but one part of it.

We are not idealising or romanticizing the past or working for its return as it was. But

we should at least  know that in its own time and place, Indian education served the

intended purposes well, and promoted national prosperity so that India was a leading

contributor to world GDP till the middle of the 18th Century. It contains elements which

are still relevant. It incorporates methods which are still valid. It may not be beyond

criticism, from the modern mentality, but those who choose to criticise should at least

know what they are criticising! They should know the facts first. These are what

Dharampal provides in his volumes-incontrovertible, solid facts, based on official

records.. 
After conducting surveys and collecting much information about the state of our

education, and knowing well how extensive and effective it was, the British allowed

the material to gather dust, and the education system to decay and die. As Gandhiji

said in 1931,

“They scratched the soil and began to look at the root and left the root like

that, and the beautiful tree perished.”

Yes, the Beautiful Tree of indigenous Indian education perished. The government of

Independent India buried the remnants.  Our so called educated and the pseudo

intellectuals, the sepoys of Macaulay, are celebrating it.                                                                   *** Chapter 9 concluded

ஹிந்து விரோதிகள் ஜாக்கிரதை! (Post No.8561)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8561

Date uploaded in London – – –24 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்து விரோதிகள் ஜாக்கிரதை!

ச.நாகராஜன்

அப்பாவி ஒருவன் கிடைத்தால் போகிறவன் வருகிறவன் எல்லாம்

அவன் தலையில் ஒரு ‘போடு போட்டு விட்டுப்’ போவார்கள்!

ஹிந்து  மதமும் அதைப் பின்பற்றும் ஹிந்துக்களும் அஹிம்ஸாவாதிகள்.

அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், இது தான் வெறி பிடித்த கிறிஸ்தவ பாதிரிமார்களும், தீவிர வாதிகளும், கம்யூனிஸ்டுகளும், தேச, ஹிந்து துரோகிகளும் துணிந்து எடுத்த முடிவு.

இவர்கள் எந்த ரூபத்தில் எப்படி வருவார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது.

நகரத்தின் நடுவில் பிரமாதமாக கண்காட்சி நடத்துவார்கள். அதில் நடுவில் ஒரு ஸ்டாலில் ஹிந்து தெய்வங்களை இழிவு படுத்துவார்கள்.

சரஸ்வதி தேவி நிர்வாணமாக இருப்பாள். சிவன் சூலாயுதத்தால் யாரையோ குத்துவான்.

திடீரென்று ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகும். அதில் ஹிந்துக்கள் முட்டாள்கள் என்று ‘அபூர்வ முடிவு’ தெரிவிக்கப்படும்.

திடீர் திடீரென்று அபூர்வமான ஆய்வு முடிவுகள் சோஷியல் மீடியாக்களின் வாயிலாக ‘அறிஞர்கள்’ மூலமாக ‘தெரிவிக்கப்படும்’!

அதில்  கிருஷ்ணன் ஒரு உதவாக்கரை, ராமர் ஒரு பத்தாம்பசலி என்றெல்லாம் ‘ஆதாரபூர்வமாக’ அறிவிக்கப்படும்!

இதற்கு கணினியில் உள்ள டிசைன் உத்திகள் அனைத்தும் உதவிக்கு வரும்.

இன் டிஸைன், போட்டோ ஷாப், கோரல் ட்ரா – இத்யாதிகள் அனைத்தும் பயன்படுத்தப்படும்!

அசந்து போவோம்.

அடடா, கிருஷ்ணன் பிறந்த தேதி விநாடி சுத்தமாக துல்லியமாக சொல்லப்படும்.

ராமர் அயோத்தியை விட்டு வெளியேறிய நேரம், திரும்பி உள்ளே வந்த நேரம் எல்லாம் அந்த சார்ட்டில் அத்துபடியாகத் தெரிந்த இவர்களால் சித்தரிக்கப்படும்.

பிரமிப்போம்.

அந்த சார்ட், அட்டவணை ஊடே விஷக் கிருமிகளை – விஷக் கருத்துக்களை இவர்கள் ‘தூவி’ விட்டிருப்பார்கள்.

நல்ல ஆய்வு மனப்பான்மை கொண்ட சிறந்த ஹிந்துக்கள் கூட ஏமாந்து போவார்கள்.

அந்த சோஷியல் மீடியா செய்திகளைப் பரப்புவார்கள்.

சமீபத்தில் எனக்கு கிருஷ்ணரைப் பற்றிய 44 செய்திகள் இப்படித்தான் அபூர்வமான ஒரு ‘அயோக்கிய புத்திசாலியால்’ பரப்பப்பட்டு வந்து சேர்ந்தது.

அதில் கிருஷ்ணரைப் புகழ்வது போலவும் அவரது அத்யந்த பக்தர் தொகுத்தது போலவும் அலங்காரங்கள் இருந்தன! கீழே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்று  செய்தித் தொகுப்பு முடிந்தது!

அடடா, என்ன கிருஷ்ண பக்தி!

இவர் சொல்வது அனைத்தும் உண்மையாகத் தான் இருக்கும் என்று எண்ணி அதை நம் குழந்தைகளுக்கும் சொல்லித் தந்து விடுவோம்.

நச்சுக் கருத்துக்கள் விஷம் போல ஹிந்து சமுதாயத்திற்குள் ஊடுருவி விடும்.

இது ஒரு புது டெக்னிக்!

சமீபத்தில் வந்த 44 ‘அபூர்வமான ஆய்வுக் கருத்துக்களில்’ 41 வது கருத்து இது:-

41) He never did any miracles. His life was not a successful one. There was not a single moment when he was at peace throughout his life. At every turn, he had challenges and even more bigger challenges. 

41) அவன் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. அவனது வாழ்வு வெற்றிகரமான ஒன்று அல்ல. அவனது வாழ்வில் ஒரு கணம் கூட அவன் நிம்மதியாக இல்லை. ஒவ்வொரு கணமும் அவனுக்கு ஏராளமான சவால்கள் இருந்தன, இன்னும் அதிகமதிகம் பெரிய சவால்கள் இருந்தன.

கிருஷ்ணர் வெற்றிகரமான புருஷர் இல்லையா?!

கிருஷ்ணர் அவதார புருஷர்!

அவரது கீதையை உலகமே போற்றி வியக்கிறது.

வாரன் ஹேஸ்டிங்ஸ் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஒருவேளை ஓர் நாள் அழியக் கூடும்! ஆனால் கீதை ஒரு நாளும் அழியாது என்றார்.

தோரோ கீதை படிக்காமல் இருந்ததே இல்லை.

ஐன்ஸ்டீன் அலமாரியில் கீதை  இருந்தது.

நேதாஜி விபத்துக்குள்ளான விமானத்தில் ஏறும் போது கூட கீதையை எடுத்து வைத்துக் கொண்டார்.

விவேகானந்தர் கீதையைத் தான் தன்னுடன் அமெரிக்கா கொண்டு சென்றார்.

ஸ்வாமி ராமதீர்த்தர் கையில் காசில்லாமல், அமெரிக்காவில் அறிமுகம் செய்யக் கூட ஒருவரும் இல்லாத நிலையில் கப்பலில் செல்லும் போது அவர் கையில் இருந்த ஒரே துணை கீதை தான்!

ஸ்வாமி துரியானந்தர் – ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடர் – கீதையை தினமும் முழுதும் படிக்காமல் உணவு அருந்த மாட்டார்.

மஹாத்மா காந்திஜி தனக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் அதற்குத் தீர்வு காண கீதையை நாடி அதிலிருந்து தீர்வு கண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

வினோபா பாவே கீதையை உயிர்நாடியாகப் போற்றினார்.

தேசபக்தர் சத்தியமூர்த்தி தினமும் கீதையைப் படிப்பார்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கு ஒரு முடிவே இருக்காது.

எங்கு கிருஷ்ணன் இருக்கிறாரோ அங்கே ஜயம்! வெற்றி!

யதோ கிருஷ்ண ததோ ஜய:

ஆனால் ‘ஆராய்ச்சி தடியனின்’ ஆய்வு முடிவின் படி – His life was not a successful one! அடடா, என்ன முடிவு!

நச்சுக் கருத்தை நைஸாக உள்ளே நுழைக்கிறான் பாருங்கள்.

அது மட்டுமல்ல இந்த தடியனின் ஆய்வுக் கருத்துக்களில் திரு சுவாமிநாதன் கண்டு பிடிக்கும் பிழைகள் ஏராளம்!

உதாரணத்திற்குச் சில :

lot of factual errors.

LOT OF CONTRADICTIONS

KRISHNA’S  NAVAL ATTACK,, KRISHNA’S CAPITAL SHIFTING 800 MILES AWAY FROM MATHURA,

JAYADRATHA’S DEATH ON SOLAR ECLIPSE DAY ARE FROM MY THREE ARTICLES.

BUT SOLAR ECLIPSE DATE IS WRONG. IF EKADASI FALLS ON 8TH DECEMBER THERE CAN’T BE AN ECLIPSE ON 21ST DECEMBER.

SOLAR ECLIPSE CAN HAPPEN ONLY ON AMAVASYA DAY. IT CANT BE 21 DEC.

HE KILLED ONLY FOUR PEOPLE IS ALSO ABSURD. EVEN CHILDREN’S BOOKS AND BHAJAN SONGS HAVE ALL THE ASURA NAMES.

MATTER ABOUT HIS SCHOOLING AGE, DATE OF TSUNAMI ATTACK ON DWARAKA  AND SO MANY OTHERS HAVE NO BASIS.

HE HAS CLOTHED ALL WRONG INFORMATION IN A FACT LOOKING FAKE CAPSULE.

எல்லா தப்புத் தகவல்களையும் தந்த ‘தடியன்’ இறுதியாக கிருஷ்ணரை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லி ‘நல்ல பெயரை’ – சரியான ஆய்வாளராகத் தன்னை – காப்பாற்றிக் கொள்கிறான்.

இப்படிப்பட்ட ‘கருத்துக் கருவூலங்கள்’ வந்தால் யாருக்கும் அனுப்பக் கூடாது; சோஷியல் மீடியாக்களில் பகிரக் கூடாது.

மாறாக அனுப்பியவருக்கு உடனடியாக கண்டனத்தை அனுப்பி அதைப் பதிவு செய்ய வேண்டும்.

ஏராளமான சார்ட்டுகள், விசேஷ படங்கள் – இவை எல்லாம் ஃபேக்! (Fake)

இந்த ஹிந்து விரோதிகளின் நவீன டெக்னிகல் தாக்குதலையும் நாம் எதிர்கொள்வோம்; அவர்களை ஓட ஓட விரட்டுவோம் – உண்மைச் செய்திகளைப் பரப்பி!

ஹிந்துக்களே ஒன்று சேருங்கள்.

விவேகானந்தர் நமக்கு அருளிய தாரக மந்திரம் : எழுமின்! விழிமின்!!

(Arise! Awake!!)

tags- ஹிந்து விரோதிகள் ,ஜாக்கிரதை,கிருஷ்ணன்

***

INDEX 15 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post No.8560)

YUDDHA KANDA PICTURES FROM VALMIKI RAMAYANA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8560

Date uploaded in London – 23 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனவரி 2014

கால்ட்வெல் பாதிரியார் தவறுகள் , ஜனவரி 30, 2014

பனை மரங்கள் வாழ்க, கட்டுரை எண் 804, 27/01

மரத்தமிழன்  வாழ்க , 25/01

பணமும் படிப்பும், 24/01

சங்க இலக்கியத்தில் யக்ஷினி அணங்குகள் 23/01

சிந்தனைச் சிற்பிகள் காலண்டர்-பிப்ரவரி 2014 ,21/01

யக்ஷப் ப்ரச்னம் -பகுதி 3, 19/01

25 முக்கிய வள்ளலார் பாடல்கள் 1701

தோஷம் நீங்க, சந்தோசம் ஒங்க , போஸ்ட் 701, 16/01

யக்ஷப்  ப்ரச்னம்- பகுதி 2, 14/01

யக்ஷப்  ப்ரஸ்னம்- பகுதி1, 123 கேள்விகள் , 11/01

வங்கக் கடல் கடைந்த – ஆண்டாள் தரும் அற்புதத் தகவல், 9/01

இந்துமதத்தில் விலைமாதர்கள் – தேவர் அடியாள் 3/01

துறவிக்கு வேந்தன் துரும்பு, போஸ்ட் 777, 5/01

அசரீரி – ஆகாசவாணி – பற்றி ஒரு ஆராய்ச்சி 3/01

வினவுங்கள் விடை தருவோம் ; அறவாழி அந்தணன் யார்? 2/01

சிறு துரும்பும் பல் குத்த உதவும் ; அவ்வையாரும்  ஐன்ஸ்டைனும் , போஸ்ட் 771, ஜனவரி 1, 2014

சிந்தனைச் சிற்பிகள் காலண்டர் 2014, ஜனவரி , 1/1/2014

Xxxxxxxxxxxxxxxxxxxxxxx

பிப்ரவரி 2014

வணக்கம் வளர்ச்சி தரும், அகந்தை அழிவைத் தரும் , பிப்ரவரி 28, 2014

யார் நல்ல ஆசிரியர் ?, போஸ்ட் 871, 27/02

அலெக்ஸாண்டரை அசத்திய கோவில் அழிந்தது எப்படி? , போஸ்ட் 868, 26/02

மனத்தின் ஏழு நிலைகள், போஸ்ட் 865, 25/02

பூமிக்கடியில் புதிய பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு , போஸ்ட் 863, 24/02

16,000 பெண்களுடன் கிருஷ்ணன், கட்டுரை எண் 859, 23/02

திருவிளையாடல் புராணம் உண்மையே , கட்டுரை 855, 21/02

தீதும் நன்றும் பிறர் தர வாரா , கட்டுரை 853, 20/02

த ………த ………த ……………….தேசிய கீதம் ஆக்கலாமே! , கட்டுரை 850, 19/02

மனம் ஒரு பெண், மனம் ஒரு  புலி, கட்டுரை 845, 17/02

ரகசியத்தில்  செய்த பாவம்- ஆதி சங்கரர், கட்டுரை 843, 16/02

காதலர் தினமும் இந்துமதமும், கட்டுரை 839, 14/02

எப்போது பொய் சொல்லலாம்;வள்ளுவர், சங்கரர் அறிவுரை கட்டுரை 837, 13/02

மொட்டையும் குடுமியும், கட்டுரை 835, 12/02

விவேகானந்தருக்குப் பிடித்த கீதை ஸ்லோகம் , கட்டுரை 831, 10/02

சிந்தனைச் சிற்பிகள் காலண்டர், மார்ச் 2014, 8/02 (ஜனவரியில் வள்ளுவரின் குறள்,

பிப்ரவரியில் மாணிக்கவாசகரின் திருவாசகம்,மார்ச்சில் திருமூலரின் திருமந்திரம்!)

வினவுங்கள் விடை தருவோம்;அதர்வவேத புஸ்தகங்கள், கட்டுரை 824, 7/02

நீங்கள் நாளும் தெரிந்தவரா? , கட்டுரை 820, 5/02

உலக மகா தியாகி பீஷ்மர் நினைவு தினம் ,3/02

மான் குட்டிக்குப் பால் கொடுத்த புலி, கட்டுரை 2/02

Xxxxxx

January 2014

Very Important Date: 23rd October 4004 BC, January 30,2014

On Wisdom and Courage: Gems from Katha Sarit Sagara– Part 3 , 29/01

On Women, Wealth and World- Gems from Katha Sarit Sagara- part 2

Gems from Katha Sarit Sagara- Part 1,25/01

Who are Yakshas? 23/01

Good Thoughts Calendar 2014 (February),21/01

Analysis of Yaksha Prasna -Part 3: 19/01

How to sell your old Currency 16/01

Analysis of Yaksha Prasna- part 2, 14/01

Analysis Yaksha Prasna part 1: 123 Questions from a Tree Spirit , 11/01

New Research on Origin of Words: Bengal, Bangladesh and Vanga 9/01

Enlightened by Prostitutes- 3 Stories 7/01

What you will be Your Next Birth? ,Post 778,5/01

Analysis of Asariri = Voice from the Sky= Astral Voice, 3/01

Everybody is a Genius, Post 772,1-1-2014

Good Thoughts Calendar 2014, January,1-1-2014

Xxxxxxxxxxxx

February 2014

The More You Bow, The More You Grow-Adi Shankara, Post 874,28 February 2014

Saint who ate with a dog, Post 872,27/02

Why do Hindus Worship Shiva Linga? Kanchi Paramacharya’s Talk,Post 870, 26/02

Multan in Pakistan: Wonder of Magnetic Hindu God , Post 869,26/02

Adi Shankara on Wives and Friends,Post 866,25/02

New Discovery: A University under a Mound, Post 864,24/02

Pari Padal: Suitable for Dance and Music by Dr R Nagaswamy, Post 862,24/02

Reference to Brahma in Purananuru by Dr Dr R Nagaswamy, Post 860, 23/02

Socrates Meeting with a Hindu Saint, Post 858,22/02

Three Questions to Gandhiji, Post 856,21/02

Lord Rama Vs Kama, Post 854,20/02

Da…..Da…….Da………Story,Post 852,19/02

How Non Brahmins became Brahmins,Post 848,18/02

Mind is aTiger :Adi Shankara , Post 846,17/02

Mind is a woman : Tamil Poet Bharati , Post 847, 17/02

Sin committed in Secrecy: Adi Shankara, Post 844,16/02

Valentine Day and Hinduism, Post 840,14/02

When can you tell a lie? Adi shankara’s Advice, Post 838,13/02

Matted Locks and Shaven Heads: Four Leaders’ Criticism, Post 836,12/02

On Alexander and Naked Hindu Saints: Vivekananda and Yogananda Post 834,11/02

Every Town a Home Town: Famous Tamil Poem, Post 832,10/02

Good Thoughts calendar 2014(March),8/02

How Western Educated Bandicoot killed Indian Rats, Post 826, 7/02

Can a man be born a Pig in his Next Birth? 6/02

Two Interesting Conversations about Women, Post 821,5/02

Are you familiar with Number Four? , Post 819,5/02

Why did Bhishma cry?, Post 816,3/02

Tigers and Deer: Friends in Hindu World, Post 814, 2/02

XXXXXXX

INTRODUCTION

I started blogging in tamilandvedas.wordpress.com and swamiindology.blogspot.com from June 2011, I am giving above the INDEX for  JANUARY AND FEBRUARY,  2014

 I did not give the date of loading or number for the article in the beginning. But all articles are available in both the blogs in the name of

 ‘London Swaminathan’.

Like you did with S Nagarajan’s articles INDEX, get the articles by googling.

Following  is the method:-

Paste the title of the article in the google (space)and add ‘from tamilandedas.com or ‘from swamiindology.blogspot.com’

 Here is an example :

Is Brahmastra a Nuclear Weapon? from tamilandvedas.com

Or

Is Brahmastra a Nuclear Weapon? From swamiindology.blogspot.com

Since I am going to give nearly 6000 titles, you may not find time to read all the articles/ posts at once.

So, please take a printout of the Index or note down the titles and dates of your favourite posts.

Thanks for all your support. We are reaching two million hits now.

If you have any difficulty in getting the articles, please let us know.

Be careful about the spelling of the title. Even a small mistake will take you somewhere and waste your precious time.

TAMIL TITLES ARE GIVEN SEPARATELY.

***

IN THE BEGINNING I UPLOADED MY ARTICLES IN

1.THE SPEAKING TREE OF TIMES OFINDIA

2.TAMIL HERITAGE FOUNDATION SITE

3.TAMIL BRAHMINS.COM etc.

So you may find the same articles on different days on different blogs

*****

To be continued…………………….

Tags- சுவாமிநாதன், கட்டுரை இன்டெக்ஸ் 15, INDEX 15,  LONDON SWAMINATHAN,  2014 ,POSTS

கொல்லன் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8559)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8559

Date uploaded in London – 23 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொல்லன் என்ற சொல் மீண்டும் மீண்டும் பல பழமொழிகளில் வந்தால் ஓரிரு இடத்தில்தான் இருக்கும்.

விடைகள் கீழே உளது.

கொல்லன் உலையில் கொசுக்குக்கு என்ன அலுவல் ?

கொல்லன் தெருவில் ஊசி விற்றார் போல

கொல்லனைக் கண்டால் குரங்கு மல்லுக்கட்டச் சொல்லும்

கொல்லன் கைக்குறடு போல

கொல்லன் எளிமை கண்டு குரங்கு காலுக்குப் பூண்  கட்டச் சொன்னதாம் .

tags-  கொல்லன்,பழமொழி

நீ பாதி நான் பாதி கண்ணா! (ஜோதிடக் கட்டுரை)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8558

Date uploaded in London – 23 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

kattukutty

சரி, இப்போது பெண்கள் ஆண்களைப் பற்றி என்ன
நினைக்கிறார்கள் என்று பார்ப்போமா??

ஏ மேஷராசி பெண்களே, (நினைத்ததை முடிப்பவள்) நீங்க
கொஞ்சம் படபடப்புப் பேர்வழி — சரியாகச் சொன்னால் “முசுடு”.
எப்போதும் உங்களைப் பற்றியும் உங்கள் கணவரைப்
பற்றியும் உயர்வாகத்தான் நினைக்க வேண்டும் இந்த உலகம்.
உங்கள் கணவரை நீங்கள் சரியான முறையில் “ரிப்பேர்”
பண்ணி முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என வேகமாக
இறங்கி விடுவீர்கள்

ஏ ரிஷப ராசி பெண்களே (உல்லாச உலகம் எனக்கே சொந்தம்)
உல்லாசம், உற்சாகம், சந்தோஷம் எல்லாவற்றையும் அனுபவிக்க
வேண்டும் என வெறி கொண்ட நீங்கள் எதையும் ஊகித்தறியும்
செம intelligent!!!! அப்படி இப்படி என புருஷனை உங்க வழிக்கு
கொண்டு வந்து விடுவீர்கள். பார்க்கறவர்கள் அவ அப்பிடி இப்பிடின்னு
புருஷனை மயக்கி தன் வழிக்கு கொண்டு வந்துட்டாளே,
என உலகமே மெச்சும் உங்களை!!!



ஏ மிதுன ராசி பெண்களே, நீங்க பாடற பாட்டு என காதுல விழுது
நீ பாதி நான் பாதி கண்ணா!!!எல்லாவற்றிலும் சம உரிமை, ஆனால்
புருஷன் வேறு பக்கம் செல்வதாக கொஞ்சம் தெரிந்தாலும் சரி
உங்கள் கை வரிசையைக் காட்டி இரண்டில் ஒன்று பார்த்து விடுவீர்கள்……

ஆல் அவுட் இல்லே, ஆளே அவுட்!!!

ஏ கடக ராசி பெண்களே உங்கள் ஜால்ரா மிகமிக பெரிசு!!!
என் புருஷன்னா புருஷன் தான் அவர மாதிரி உண்டா???என்ற
நீங்கள் புருஷன்மார் தப்பு ஏதாவது செய்தால் ஏன் தான் இப்படி
புத்தி போகிறதோ என சலித்துக் கொள்வீர்கள். சலிப்புடன் வாழ்க்கையும் ஓடும் அப்புறம் என்ன நண்டு மாதிரி கொட்டி
சரி செய்து விடுவீர்கள்.



ஏ சிம்ம ராசி பெண்களே நான் பார்த்திலே அவன் ஒருவனைத்தான்
நல்ல அழகனென்பேன் என்று சரியாக எடை போட்டு தான்
உங்கள் ஜோடியை நீங்களே தேர்ந்தெடுப்பீர்கள்.உயர்ந்த நோக்கம் உள்ளவரையே விரும்பும் நீங்கள் அவரது வாழ்க்கையை
வெற்றி பெறச் செய்வீர்கள் அவருக்கு உறு துணயாய் இருந்து!!!
ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணுக்கும் பின் ஒரு பெண் இருக்கிறாள்
என்றால் அது நீங்கள் தான்!!!!

ஏ கன்னி ராசி பெண்களே இந்த ஆம்பளைக் கண்டாலே பிடிக்காது
ஒருத்தன் வாழ்ந்தால் இன்னொருத்தனுக்கு பிடிக்கவில்லை….சரி
யாரையாவது கட்டி தொலைப்போம்……பிறகு அவன் எப்படிப்
பட்டவனானாலும் சரி கணவனே. கண்கண்ட தெய்வம் என சிறப்பாக பிறர் மெச்சும் படி வாழ்க்கை நடத்துவீர்கள்


ஏ துலாம் ராசி பெண்களே, எதோ என் புருஷனும் நாலு காசு
சம்பாதிக்கத் தெரிந்தவர். நான்சொல்வதைக் கேட்டுக்கொண்டு
சமர்த்தா இருப்பார். என் கணவன் தவிர மற்ற ஆண்களெல்லாம்
தில்லு முல்லு கூட்டம்.என் புருஷன் உத்தம புத்திரன் என
புகழ்ந்து கொண்டே வாழ்க்கையைச் சிறப்பாக, ஓட்டுவீர்கள்.
ஆளை எடை போட்டு சமயம் பார்த்து வேலை வாங்குவதில்
உங்கள் சாமர்த்தியம் யாருக்கும் வராது

ஏ விருச்சிக ராசி பெண்களே என் புருஷனா அதுக்கு ஒண்ணுமே
தெரியாதே! பாவம்….படபடன்னு ஏதாவது செஞ்சுட்டு வந்து நிக்கும்.
நான் தான் போய் “கரக்‌ஷன் பேக்டர்”சரி செய்வேன். ஏதோ புருஷன்
ஒரு மக்கு மாதிரியாகவும் நினைத்துக் கொண்டு தன் தலையில் தான் உலகம் சுற்றுவதாகவும், பெரிதாக நினைத்துக் கொண்டு பீத்திக்கொண்டு கொண்டு வாழ்கையை ஓட்டுகிறீர்கள் நீங்கள்…….
ஆனாலும் உங்களிடம் “அட்ஜஸ் மெண்ட் “ ஜாஸ்தி எல்லா
விஷயத்திலும் !!!!

ஏ தனுசு ராசி பெண்களே நீங்க ரொம்ப ஆக்டிவாக புருஷனை
பிறாண்டி, பிறாண்டி எல்லா விஷயங்களயும் தெரிந்து கொண்டு
தன் விஷயங்ளையும் புருஷனிடம் சொல்லி நல்லது கெட்டது
தெரிந்து வாழ்க்கையை சூப்பராக, எல்லோரும் பொறாமைப்
படும் படியாக நடத்துபவர்கள்! நீங்கள் ஒரு லேடி ஜேம்ஸ் பாண்ட்!!!

ஏ மகர ராசி பெண்களே கணவனே கண்கண்ட தெய்வம் என பய
பக்தியோடு பணிவிடை செய்து சொன்னபடி கேட்டு அவர் பக்கமே பேசி தன் காரியத்தை சாதித்துக்கொள்ளும் தந்திரமான பெண்!
சாமர்த்தியமாக தக்க நேரத்தில் சரியான முடிவு எடுத்து ,உலகமே போற்றும் அளவுக்கு உயர்ந்து விடுவீர்கள்



ஏ கும்ப ராசி பெண்களே நாங்க இல்லையென்றால் நீங்கள்
வாழ முடியாது என்று சேலஞ்ஜ் விடும் நீங்க அடிக்கடி புருஷனை
யாரும் உங்களை தப்பாகவே எடுத்துக் கொள்ளக் கூடாதென்று
விழுந்து விழுந்து உதவி செய்து புருஷனை டாப் பொஸிஷனுக்கு
கொண்டு வந்து நிறுத்துவீர்கள் விடா முயற்சியின்
சின்னம் நீங்கள்!!!!!

ஏ மீன ராசி பெண்களே இந்த ஆம்புளைங்களை மொதல்ல சரி
செய்யணும்….இவங்க அப்பா, அம்மாவும் இவர எப்படிதாள்
வளர்த்தாங்களோ???? அவர்கள் குறையை சொல்லிச் சொல்லி
மாற்றி தங்கள் வழிக்கு மாற்றி ஒரு வழி செய்து விடுவீர்கள்
கிட்ட தட்ட அது உண்மையாகவும் இருக்கும். உங்களை மாதிரி
யாரும் பிளானிங் பண்ணமுடியாது்!!!

இதோ, பெண்களே, உங்களுக்கென்றே ஒருத்தர்
போட்டிருக்கிறார் ஒரு பாட்டு
T.N.தஞ்சை ராமய்யா தாஸ்
படம்- மிஸ்ஸியம்மா

இசை- S.ரஜேஸ்வர ராவ்

பாடியது ஏ.எம்.ராஜா

1955இல் வெளி வந்த படம்

பழக தெரிய வேணும் உலகில்

பார்த்து நடக்க வேணும் பெண்ணே

பழக தெரிய வேணும்..

பழங்காலத்தின் நிலை மறந்தி

வருங்காலத்தை நீ உணர்ந்து (பழக)

பிடிவாதமும் எதிர்வாதமும்

பெண்களுக்கே கூடாது..

பேதமில்லா இதயத்தோடு

பெருமையோடு பொறுமையாக (பழக)

கடுகடுவென முகம் மாறுதல்

கர்னாடக வழக்கமன்றோ

கன்னியர்கள் ஆடவரை

புன்னகையால் வென்றிடவே (பழக)

                                ***

 tags –நீ பாதி நான் பாதி ,ஜோதிடக் கட்டுரை