Date uploaded in Sydney, Australia – 31 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Festivals -Feb.1- Thai Pooasm festival in temples; 15- Maha Sivaratri.
Largest Sahasra Linga in Bihar
Full Moon/Purnima-1, ;New Moon/Amavasya-17;
Hindu Fasting Days/Ekadasi- 13, 27;
Hindu Auspicious Days/Muhurtha- 6, 8, 15, 16, 20 of February 2026.
Yaksha Prasna is a dialogue between Pandava king Yudhishthira and Lord of Dharma who appeared as a yaksha. It is found in the Vana Parva of Mahabharata . There are 124 questions answered by Yudhishthira . Here is the first batch.
***
February 1 Sunday
Question: What is more important than the earth itself?
Yudhishthira: One’s mother.
***
February 2 Monday
Question: What is higher than heaven?
Yudhishthira: One’s father.
***
February 3 Tuesday
Question: What is swifter than the wind?
Yudhishthira: The mind.
***
February 4 Wednesday
Question: More numerous than the blades of grass?
Yudhishthira: The thoughts in the mind.
***
February 5 Thursday
Question: What is the highest sanctuary of dharma?
Yudhishthira: Liberality.
***
February 6 Friday
Question: What is the highest sanctuary of fame?
Yudhishthira: A gift.
***
February 7 Saturday
Question: Of heaven?
Yudhishthira: The truth.
***
February 8 Sunday
Question: What is the most praiseworthy thing of all?
Yudhishthira: Skill.
***
February 9 Monday
Question: The most valuable possession?
Yudhishthira: Knowledge.
***
February 10 Tuesday
Question: The greatest treasure?
Yudhishthira: Health.
***
February 11 Wednesday
Question: The greatest happiness?
Yudhishthira: Contentment.
***
February 12 Thursday
What is the greatest wonder in the world? Every day, creatures die, yet those who remain live as if they are immortal.
***
February 13 Friday
Who is truly happy? He who lives within his means, is not in debt, and stays at home.
***
February 14 Saturday
What is the best way to cross the world? Knowledge.
***
Mrutyunjaya Mantra from the Yajur Veda
February 15 Sunday
By what does one become learned? By Srutis/ Vedas (that scriptures which are heard)
***
February 16 Monday
How one acquires something very great? By ascetics’ austerities (tapas)
***
February 17 Tuesday
How can one acquire intelligence? By serving the old
Brahmins (learned/saints)
***
February 18 Wednesday
What constituents the divinity of Brahmanas?
Study of Vedas (scriptures)
***
February 19 Thursday
What sleeps but does not close its eyes? Fish
***
February 20 Friday
What does not move after birth? Egg
***
February 21 Saturday
What which is without a heart? Stone
***
February 22 Sunday
Who is friend of the exile? Companion.
***
February 23 Monday
Who is friend of the householder? Wife
***
February 24 Tuesday
Who is friend of the sick? Physician
***
February 25 Wednesday
Who is friend of one who is about to die? Charity
Duty, guest, amrita, universe
***
February 26 Thursday
What is Amrita? Milk of cow is Amrita
***
February 27 Friday
What is highest shelter of happiness? Good behavior is the highest guard of happiness
அஞ்ச லெனவலிய மயில்மேல் நீ அந்த மறலியொடு உகந்த மனிதன் நமதன்பன் எனமொழிய வருவாயே
XXX
பிப்ரவரி 25 புதன் கிழமை
(தேவர்கள் தொழும் உன் பாதங்களை தொழ அருள் புரி)
உம்பர் தொழும்பத கஞ்சம் தம் தஞ்ச மெனும்படி
என்றென்றுந் தொண்டு செயும்படிஅருள்வாயே .
***
பிப்ரவரி 26 வியாழக் கிழமை
இனிமையில் ஒன்றாய்ச் சென்று உட்படும் மனம் உன் தாட்கு
அன்பு உற்று இயல் இசை கொண்டு ஏத்து என்று உள்
தருவாயே … இனிமையில் ஒன்றுபட்டுச் சென்று உட்படுகின்ற என் மனம் உன்னுடைய தாள் மீது அன்பு கொண்டு, இயற்றமிழிலும், இசைத் தமிழிலும் பாக்களை இயற்றி ஏத்த வேண்டும் என்னும் மனப் பக்குவத்தைத் தருவாயாக.
***
பிப்ரவரி 27 வெள்ளிக் கிழமை
யமபடர்கள்நின்று சருவ மலமே யொழுக உயிர் மங்கு பொழுது
பூளைச் செடியின் பூ (Aerva lanata) சிறியது, வெள்ளையாக, தேங்காய் பூ போன்ற அமைப்பைக் கொண்டது, எனவே இது தேங்காய்ப்பூக் கீரை என்றும் அழைக்கப்படுகிறது. இது பொங்கல் திருவிழாவின் போது காப்புக் கட்டவும், தோரணம் கட்டவும் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகைச் செடியாகும். இதன் பூக்கள், இலைகள் மருத்துவ குணம் கொண்டவை, இலைகள் ரசம் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன.
பூளைப்பூவின் வேறு பெயர்கள்: பொங்கப்பூ, சிறுபீளை, பீளைசாறி, கற்பேதி, பாஷாணபேதி, கண்பீளை.
***
ராவணன் ஒரு முட்டாள் !
ஏதத்து இலங்கையினில் ஆதிக்கம் உண்டது ஒரு முட்டாள்
அரக்கர் தலை இற்றே விழக் கணைகளே தொட்ட கொண்டல்
உருவு ஆகி … குற்றம் பொருந்திய இலங்கையில் தலைமை கொண்ட முட்டாளாகிய ராவணனுடைய தலை அறுந்து கீழே விழ அம்புகளை ஏவியவரும், மேக நிறத்தை உடையவரும்,
சுமந்து அதிகம் மட்டு ஆர் மலர்க் கமலம் உற்றா சனத்
திருவை மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய
மருமகன் ஆகி … மிகுந்த வாசனையை உடைய தாமரை மலர்
மணம் கொண்ட, ஜனகன் மகளாகிய சீதையை மார்பில் அணைத்த ரகுராமனுக்கு அன்புடைய மருகனாகி,
–திருவீழிமிழலை , சம்பந்தர் தேவாரம், முதல் திருமுறை
***
மலையான் மகளஞ்சவ் வரை எடுத்தவ் வலியரக்கன்
றலை தோளவை நெரியச் சரணுகிர் வைத்தவன்
–திருவேணுபுரம்
***
இசைகயிலை யையெழுதரு வகையிருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு விரல் பணி கொலுமவ னுறை பதி
இவ்வாறு ஒவ்வொரு பதிகத்திலும் இராவணன் கதறியதும், சிவ பிரான் அருளியதும் சம்பந்தர் தேவாரத்தில் காணக்கிடக்கிறது . ராவணன் ஒரு கிரிமினல் CRIMINAL என்பதால் அவனை நிசி சரன் NIGHT WALKER (ராத்திரியில் ஆட்டம்போடும் கள்ளன் ) என்றும் திட்டுகிறார் திரு ஞான சம்பந்தர்.
–திருச் சிவபுரம்
***
திரி நயனி, திரி புவனி !
நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி … மாசு
இல்லாதவளும், மூன்று கண்களை உடையவளும், ஒளி வீச
எழுந்தருளும் குமரி,
கவுரி பயிரவி அரவ பூணாரி திரி புவனி … கெளரி, காளி,
பாம்பை அணி கலனாகப் பூண்டுள்ளவள், மூன்று உலகங்களுக்கும் தலைவி,
நிபுட மலை அரசன் அருள் வாழ்வான புரண உமை
அருள்பாலா … நெருக்கமாக உள்ள இமய மலை அரசன் வளர்த்தருளிய மகளான, எங்கும் நிறைந்தவளும் ஆகிய உமா தேவி பெற்ற மகனே,
***
காசுக்காக கற்பகமே என்று பாடும் கவிகள் !
பெருகி ஒரு காசே கொடாதவரை ஐந்து தருவை நிகரே
ஆகவே எதிர் புகழ்ந்து பெரிய தமிழே பாடி … தாராள மனத்துடன்
ஒரு காசு கூட கொடுக்காத லோபிகளை ஐந்து கற்பகத் தருக்களையும்* நிகர்ப்பீர்கள் என்று எதிரிலே புகழ்ந்து, (அவர் மீது) பெரிய தமிழ்ப் பாக்களையே பாடி,
நாள் தொறும் இரந்து நிலை காணாப் பிணியின் அகமே
ஆன பாழ் உடலை நம்பி … தினமும் (இங்ஙனம் பிச்சை எடுக்கும் காண முடியாத நோய்க்கு உள்ளாகும் பாழான இந்த உடலை நம்பி,
உயிரை அவமாய் நாடியே பவ(ம்) நிரம்பு பிறவி தனிலே
போக மீளவும் உழன்று திரிவேனோ … உயிரைப் பயனிலதாக
நினைத்து, பாவ வினைகள் நிரம்பியுள்ள பிறவியில் சேரவே மீண்டும் அலைந்து திரிவேனோ?
அரி புத்திர சித்தஜனுக்கு அருமைக்கு உரியத் திரு மைத்துன
வேளே … திருமாலின் மகனான மன்மதனுக்கு அருமையான அழகிய மைத்துனனாகிய* தலைவனே,
மன்மதன் திருமாலின் மகன். வள்ளி திருமாலின் மகள்.
எனவே வள்ளிக் கணவன் முருகன் மன்மதனுக்கு மைத்துனன் ஆகிறான்.
***
தயிர்த் திருடனும் தனுஷ்கோடியும்
தயிரச் சோரன் எனும் அவ் உரை வசைக் கோவ
வனிதையர்கள் தரத்து ஆடல் புரியும் அரி மருகோனே …
தயிரைத் திருடுபவன் என்ற அந்த மொழி நிந்தையைப் புகல்கின்ற கோபிகளுடன் திருவிளையாடல் புரிந்த கண்ணபிரானின் மருகனே,
தமிழ்க் காழி மருத வன மறைக்காடு திரு மருகல்
தனுக்கோடி வரு குழகர் தரு வாழ்வே … (சம்பந்தரின் திருநெறித்தமிழ் எனப்படும் செந்தமிழ்த் தேவாரத்துக்குப் பிறப்பிடமாகிய) சீகாழி,திருவிடை மருதூர், வேதாரண்யம், திருமருகல், தநுஷ்கோடி ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சிவபெருமான தந்த குமரனே,
****
மனிதர்கள் பற்றி பாரதியாரும், அருணகிரியாரும் போட்ட கணக்கு!
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்
ஒருகுண வழியு றாத …… பொறியாளர்
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி
உறநம னரகில் வீழ்வ …… ரதுபோய்பின்
வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி
மறைவரி னனைய கோல …… மதுவாக
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாத …… மருள்வாயே
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் … ஒருவர் சொல்வதை மற்றவர் இன்னதென்று தெரிந்து அறியமாட்டாதவர்களாகிய
மத விசாரர் ஒருகுண வழியு றாத பொறியாளர் … மத
ஆராய்ச்சியாளர்களும், ஒரு கொள்கை வழியில் நிலைக்காத மனத்தை உடையவர்களுமான மக்கள்
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி … இந்த
உடல் நீடித்து இருக்கும் என்று எண்ணி, களவும், பொய்யும், கொலையும் செய்து கொண்டே வந்து,
உற நமன் நரகில் வீழ்வர் … இறுதியாக அனைவரும் யமனுடைய
நரகத்தில் சென்று வீழ்வர்.
அதுபோய்பின் வருமொரு வடிவ மேவி … அந்த நிலை
முடிந்தபின்பு கிடைக்கும் வேறு ஓர் உருவத்தை மறு பிறவியில் அடைந்து,
இருவினை கடலுள் ஆடி மறைவர் … நல்வினை, தீவினை என்ற
இருவினைக் கடலில் உளைந்து மறைவர்.
இனனைய கோலம் அதுவாக … இத்தகைய மனிதர்களின் கோலம்
அவ்வாறாக, மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு … (யான் அவ்வாறு அலையாமல்) பொருந்திய பரமஞானமாகிய சிவகதியைப் பெறுவதற்காக திருநீற்றைத் தந்து,
வடிவுற அருளி பாதம் அருள்வாயே … நல்ல நிலையை நான்
அடைய எனக்கு அருளி, உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக.
***
பாரதியாரும் காளி தேவியிடம் சொல்கிறார் !
வேடிக்கை மனிதன் போல் வீழ்வே னென்று நினைத் தாயோ?-
தேடிச் சோறுநிதந் தின்று –
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி –
மனம் வாடித் துன்பமிக உழன்று –
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து –
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி –
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் –
பல வேடிக்கை மனிதரைப் போலே –
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?– பாரதியார் பாடல்
—subham—
Tags- பழனி ,திருப்புகழில், அரிய செய்திகள், பாரதியார் , அருணகிரிநாதர் , வேடிக்கை மனிதர் , பூளைப்பூ , முட்டாள் இராவணன், சொல் அழகும், பொருள் வளமும்- Part 6
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
குரு பூர்ணிமா அன்று ஷீர்டி சாயி பாபா கொடுத்த கட்டளை!
ச. நாகராஜன்
1909ம் ஆண்டு பாபாவின் நித்ய பூஜையும் ஆரத்தியும் ஆரம்பமானது.
ஆனால் குரு பூர்ணிமா அன்று விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.
அந்த வருடம் குரு பூர்ணிமா வந்தது. பாபா அணுக்கத் தொண்டரான தாதா கேல்கரை தன்னிடம் வரச் சொன்னார். அவரும் வந்தார்.
அவரிடம் பாபா, “இன்று குரு பூர்ணிமா தினம் என்பது உனக்குத் தெரியாதா, என்ன? உனது பூஜை சாமான்களை எல்லாம் கொண்டு வந்து குருவுக்கு பூஜை செய்” என்றார்
அவ்வளவு தான், ஓடோடிச் சென்ற கேல்கர் பூஜா திரவியங்களைக் கொண்டு வந்து வெகு விமரிசையாக குரு பூஜையைச் செய்தார்.
அன்று ஆரம்பித்த குரு பூர்ணிமா தினத்தன்று செய்யும் குரு பூஜை இன்று வரை தொடர்கிறது.
ஆனால் ஹெச். வி. சாதே என்ற பக்தர் சிவராத்திரி தினத்தன்று நள்ளிரவில் வழிபட வந்த போது பாபா வேண்டாம் என்று கூறி அதை மறுத்து விட்டார்.
ஒரு முறை பாபா கூறினார் இப்படி:
“இந்த உலகம் வேடிக்கையானது. எல்லோரும் எனக்கு வேண்டியவர்களே. எல்லோரையும் சமமாக நோக்கி நான் சமமாக பாவிக்கிறேன். ஆனால் சிலரோ திருடர்களாக மாறி விடுகிறார்கள். அவர்களுக்காக நான் என்ன செய்ய முடியும்? மரண வாயிலில் இருக்கும் அவர்கள் மற்றவர்களைத் தீர்த்துக் கட்டத் திட்டம் தீட்டுகிறார்கள்! அவர்கள் எனக்கு மிகுந்த வேதனை தருகிறார்கள். நான் பேசாமல் அமைதியாக இருந்து விடுகிறேன். கடவுள் மிகப் பெரியவர். அவர் மிகவும் சக்தி வாய்ந்த தனது அதிகாரிகளை எங்கும் கொண்டிருக்கிறார். அவர்களிடம் அனைவரும் திருப்தியுடன் இருக்க வேண்டும்.
நான் மிகவும் சக்தி வாய்ந்தவன். நான் இங்கு எட்டாயிரம் அல்லது பத்தாயிரம் வருடங்களுக்கு முன் இருந்திருக்கிறேன்.
பாபா இப்படி தன்னைப் பற்றி அபூர்வமாகக் கூறிய தருணம் இது.
அவர் ஹிந்துக்களையும், இஸ்லாமியரையும், கிறிஸ்தவர்களையும் சமமாகவே பாவித்தார். அருள் புரிந்தார்.
இதை விளக்கும் ஏராளமான சம்பவங்கள் உண்டு.
29-8-1835 அன்று அவதாரமெடுத்த ஷீர்டி சாயிபாபா 15-10-1918 அன்று சமாதி எய்தினார்.
அதுவரை அவரது வாழ்வில் ஏராளமான அற்புதமான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருந்தன.
படிக்கப் படிக்கத் திகட்டாத பல ஆன்மீக ரகசியங்களை விளக்குபவை அவை என்பது மட்டும் திண்ணம்!
Date uploaded in Sydney, Australia – 30 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
In the Tiruppugaz composed by 15th century Tamil poet cum saint Arunagirinathar, we come across interesting detail about the structure of an atom.
All of us know the first reference to an atom comes in 2300 Ganada’s Vaishesika sastram. Later we come across the famous quote from the Katopanishad and other scriptures
“Anor aneeyaam mahatho maheeyaam” (अणोरणीयान् महतो महीयान्) is a profound Sanskrit phrase from the Vedic tradition, most famously found in the Katha Upanishad (1.2.20). It translates to: “Smaller than the smallest, greater than the greatest.” It occurs in other Upanishads as well.
This is translated and used in Tamil hymns as well.
But Arunagirinathar’s statement is different from this अणोरणीयान्महतोमहीयान्. He says
“aNuvil aNu ena niRainthittu ninRathu oru samprathAyam uthayam ezha iruLvi dinthu: and an atom within an atom” Only two hundred years ago the western scientists discovered the structure of an atom. Arunagiri said it five hundred years ago. His statement an atom within atom means Hindus know what is inside an atom. I am not making a sweeping statement without any proof.
Before Arunagirinathar’s time, three poets have sung about splitting an atom and the energy it produces. Avvaiyar and Idaikadar, two earlier poets said when atom is split seven oceans can be punt into it. They stated it when they praised the book Tirukkural.
Splitting an Atom
Another poet Tirumular of ninth century CE gives more details in the following poem:
“Take one piece of cow’s hair and cut it into 100
Parts, then take one part of it and again cut it into
1000 parts, then take one part from that and again
cut it into another 10000 parts. The remaining 1 part
from those 10000 parts will resemble the size of the
Atom (Anu in Tamil)”.
He tried to explain the size of an atom to a layman.
***
Following Tiruppugaz has other details about 14 worlds and 96 Tatvas
athalam vithalam muthal anthath thalangaL ena: All the seven lower worlds* including athalam, vithalam and others,
avani ena amarar aNdaththu akaNdam ena: this earth, all the seven upper worlds* of the celestials,
akila salathi ena eN thikku uL viNdu ena: all the oceans, all the mountains in the eight cardinal directions,
angi pAnu amutha kathirkaL ena anthiththa manthram ena: the Fire God, the Sun and the Moon with cool radiation (the Three Effulgences), the ManthrAs that mutually intermingle,
aRaiyum maRai ena arum thaththuvangaL ena: the VEdAs that are chanted impressively, the rare tenets** (96 ThathvAs)
aNuvil aNu ena niRainthittu ninRathu oru samprathAyam uthayam ezha iruLvi dinthu: and an atom within an atom; – likewise, It is something omnipresent; in order that such a Principle of Truth emerges in my heart, destroying the darkness of ignorance,
akkaNam thanil iruthaya kamalam mukizham kattu avizhnthu uNarvil uNarum anupavam manam petRidumpadiyai: and at that very moment, for the lotus bud of my heart to blossom, and to enable me to attain enlightenment that can be experienced only inwardly,
vanthu nee mun uthava: You have to manifest before me graciously to help so that
iyalin iyal sem sol prapantham ena: a work of art is composed with sweet words of love,
mathura kavikaLil manam patRirunthu pukazh uriya: rendered in the form of musical poems, with utmost devotion, in lilting meters, to be known as Thiruppugazh (Glory of the Lord); having obtained Your blessings for such a great honour,
adimai unai anRip prapancham athai nampuvEnO: will this servant of Yours ever trust in any other aspect of this world excepting You?
thakaka thakathakaka thanthaththa thanthakaka enRuthALam: To (this) meter,
pathalai thimilai thudi thampattamum peruka: various drums such as pathalai, thimilai, hand-drum and thampattam were beaten making a lot of noise;
akila nisisarar nadungak kodum kazhuku pariya kudar pazhu elumpaip pidunga: the demons who were scattered everywhere began to shake with fear; wild eagles plucked with their beaks fat tissues of intestines and rib bones (of the corpses);
raNa thunga kALi pavuri ida nari pulampa parunthu iRaku kavari ida: KALi, the triumphant deity of the battlefield, danced ecstatically; the jackals yelled; and the vultures blew their feathers as if they were gently swaying the royal hand-fans;
ikalai venRu sikaNdi thanil pazhani malaiyin misai vanthu utRa inthirarkaL thambirAnE.: when You won the war and mounted the peacock heading towards Pazhani, where You are seated as the Lord of the celestials, Oh Great One!
***
* The lower seven worlds are:
athalam, vithalam, suthalam, tharAthalam, mahAthalam, rasAthalam and pAthAlam.
** The upper seven worlds are:
bUlOgam, bhuvalOgam, suvalOgam, janalOgam, thabOlOgam, mahAlOgam and sathyalOgam.
ஆரத்தினை … வெற்றி கொண்டு துன்பம் நீங்கும்படி (அறம், பொருள்,
இன்பம் என்ற) முப்பால் கூறும் திருக்குறளினும் மேலாகிய தேவாரத்தை
எழுதி வனத்தே எற்றிய பெருமாளே. … (ஞான சம்பந்தராகத்
தோன்றி) ஏட்டிலே எழுதி வைகை ஆற்றில் எதிர் ஏற விட்ட பெருமாளே.
இதில் ஆறு சமயம் என்பன
சாங்கியம்
யோகம்
வைசேஷிகம்
நியாயம்
பூர்வமீமாம்சம்
வேதாந்தம்
அல்லது
காணாபத்தியம்
சைவம்
வைணவம்
சாக்தம்
கௌமாரம்
சௌரம் என்பன ஆகும்
மூன்று வினைகள் என்பன -ஆகாமியம், சஞ்சிதம், பிராரப்தம்
நக்கீரர் திருமுருகாற்றுப்படை:
குதிரை முகமுடைய ஒரு பெண் பூதம், சிவ பூஜையில் தவறியவர்களை ஒரு குகையில் அடைத்து, ஆயிரம் பேர் சேர்ந்ததும் கொன்று தின்னும். குகையில் சிக்கிய நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாட, முருகன் மகிழ்ந்து வேலால் குகையையும் பூதத்தையும் பிளந்து, நக்கீரரையும் மற்ற புலவர்களையும் விடுவித்தான்– முதலிய செய்திகளையும் அருணகிரி விளம்புகிறார்.
ஓதுகின்ற வேதம் எனவும், அருமையாகச் சொல்லப்படும் (96) தத்துவப் பொருள்கள் எனவும்,
96 தத்துவங்கள் பின்வருமாறு:
36 பரதத்துவங்கள் (அகநிலை):
ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.
ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து – 25 (புறநிலை):
மண், தீ, நீர், காற்று, வெளி.
ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை):
வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
***
அணு விஞ்ஞானம் Nuclear Science
அணுவில் அணு என நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம் … அணுவுக்குள் அணு எனவும், இங்ஙனம் எங்கும் நிறை பொருளாய் நின்றுள்ள ஒரு பேருண்மை,
முதல் விளக்கம்
“Anor aneeyaam mahatho maheeyaam” (अणोरणीयान् महतो महीयान्) is a profound Sanskrit phrase from the Vedic tradition, most famously found in the Katha Upanishad (1.2.20). It translates to: “Smaller than the smallest, greater than the greatest.”
கடோபநிஷத் , ச்வேதாச்வரோபநிஷத்தில் உள்ள வாக்கியம் “அணோர் அணீயாம் மஹதோ மஹீயாம் “
“அணுவுக்கும் சிறியதாய் பெரியதற்கும் பெரியதாய்”
இதை அவ்வையார், திருமூலர், இடைக்காடர் முதலியோர் செப்பியுள்ளனர்
திருவள்ளுவரின் திருக்குறளின் பெருமையை விளக்குகையில் திருவள்ளுவ மாலையில் இடைக்காடர் பாடலில் ,அவர் “கடுகை துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தறித்த குறள்” என்கிறார். அவ்வையார் புகழ்ந்த பாடலில் அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தறித்த குறள் என்கிறார். ஆனால் திருமூலர் ஒரு பாடலில் வேறுவகையான விளக்குகிறார்
மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறயிரத்தொன்றாமே”—திருமந்திரம் 1974
“Take one piece of cow’s hair and cut it into 100
Parts, then take one part of it and again cut it into
1000 parts, then take one part from that and again
cut it into another 10000 parts. The remaining 1 part
from those 10000 parts will resemble the size of the
Atom (Anu in Tamil)”.
சங்க இலக்கிய நூல்களான பரிபாடல் (3-53), புறநானூறு (பாடல் 2) ஆகியவற்றுக்கு உரை எழுதியோர் அணுச் செறிந்த உலகம் என்று பூமியை வருணித்துள்ளனர்.
இவர்களுக்கு எல்லாம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கணாதர் வைசேஷிக சாஸ்திரத்தில் அணு விஞ்ஞானம் பற்றி விளக்கியுள்ளார்
2600 ஆண்டுகளுக்கு முன்னர் கணாதர் என்பவர் எழுதிய வைசேஷிக சூத்திரத்தில் कणाद वैशेषिकसूत्र அணு என்பதுதான் மிகச்சிறிய , பிரிக்க முடியாத பொருள் என்று கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளும் இதே கருத்தைத்தான் 2000 ஆண்டுகளாகக் கூறி வந்தனர். அப்படிப் பிரித்தால் பிரம்மாண்டமான சக்தி கிடைக்கும் என்பதை இரண்டாவது உலக யுத்த (1939-1945) காலத்தில் கண்டறிந்தனர் . அமரிக்கா 1945-ம் ஆண்டு அப்பாவி புத்த மத , ஷிண்டோயிச மத மக்களின் மீது இரண்டு அணுகுண்டுகளை வீசி லட்சக்கணக்கான மக்களை ஒரு சில வினாடியில் கொன்று குவித்தது. இது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரண்டு நகரங்களில் நடந்ததை நாம் அறிவோம்.
எனது இரண்டாவது விளக்கம்
வேறு யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை அருணகிரிநாதர் சொல்கிறார் ; அது என்ன?
அணுவில் அணு (அணுவுக்குள் அணு)!
அணு பற்றிய அறிவியல் வளர்ந்தவுடன் அணுவுக்குள் என்ன இருக்கிறது என்று கண்டுபிடித்தனர் ; இது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர்தான் நடந்தது . ஆனால் அருணகிரிநாதரோ 500 ஆண்டுகளுக்கு முன்னரே அணுவுக்குள் அணு இருப்பதாகப் பகர்ந்தார் . அது என்ன ?
அணுவின் அமைப்பு
புரோட்டான்கள், எலக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரான்களால் ஆனவை அணுக்கள்.
அணுவின் நடுவில் நேர்மின்னூட்டம் கொண்ட அணுக்கரு (புரோட்டான் + நியூட்ரான்) மற்றும் அதைச் சுற்றி வரும் எதிர்மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்கள் உள்ளன. அணுக்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை அவ்வணு எந்த வேதித் தனிமத்தைச் சார்ந்த்து என்பதை முடிவு செய்கிறது. அதை வைத்துதான் நாம் தங்கம்,வெள்ளி இரும்பு, செப்பு என்ற மூலகங்களைப் பெறுகிறோம்.
ஞான திருஷ்டி மூலம் கண்டு அணுவில் அணு (அணுவுக்குள் அணு) என்று அருணகிரி சொல்லியிருக்கலாம் அல்லது அழிந்து போன இந்துமத அறிவியல் நூல்களில் இந்த உண்மையை கணாதரின் சீடர்கள் சொல்லியிருக்கலாம் . ஆகவே எலெக்ட்ரான்கள், புரோட்டான்கள் நியுட்ரான்கள் பற்றி முதலில் சொன்னவர் அருணகிரிநாதர் தான் !
—subham—
Tags- அருணகிரிநாதர், அணு விஞ்ஞானம், திருப்புகழில் சொல் அழகும், பொருள் வளமும்- Part 5, ‘அரிய தகவல்கள், அணோர் அணீயாம் மஹதோ மஹீயாம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
13-11-2025 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான முக்கிய செய்தியைத் தெரிந்து கொள்வோமா?
ச. நாகராஜன்
இன்றைய ஏஐ உலகத்தில் – செயற்கை நுண்ணறிவு உலகத்தில் – அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உண்டு.
அதைத் தெரிந்து கொண்டால் நம்மை நாம் பாதுகாப்பதோடு நமது குழந்தைகளையும் இளைஞர்களயும் பாதுகாக்க முடியும்?
என்ன அது என்று தானே கேட்கத் தோன்றுகிறது?
சாட் ஜிபிடி (Chat GPT) மற்றும் ஓபன் ஏஐ (Open AI) உள்ளிட்ட பல நவீன சாதனங்களைப் பயன்படுத்துவோர் ஜாக்கிரதையாக இருங்கள் என்பது தான் செய்தி.
இதைப் பயன்படுத்தும் பத்து லட்சம் பேர்கள் ஒவ்வொரு வாரமும் தாங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் போல இருக்கிறது என்ற எண்ணத்தைச் சொல்கிறார்கள். இதை ஓபன் ஏஐ நிறுவனம்
24-10-25 அன்று ஒரு ப்ளாக் செய்தியில் தெரிவிக்கிறது!
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் உலகின் தலையாய நிறுவனம் தரும் இந்தச் செய்தி உலகத்தினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\
இது மட்டுமின்றி ஒரு வாரத்தில் ஐந்து லட்சத்து அறுபதினாயிரம் பேர்கள் அதாவது 0.07% பயனாளர்கள் தங்கள் மனநிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் சைக்கோ பிரச்சினை உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
சாட் ஜிபிடி-ஐ அதிகமாகப் பயன்படுத்தி வந்த ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொள்ளவே அவனது குடும்பத்தினர் சட்டரீதியாக வழக்குத் தொடர்ந்திருப்பது பரபரப்பாக இப்போது பேசப்படுகிறது.
அமெரிக்காவின் ஃபெடரல் ட்ரேட் கமிஷன் சென்ற மாதம் ஒரு பெரிய ஆய்வை செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது தொடங்கி இருப்பது குறிப்பிடத் தகுந்தது.
சாட்பாட் – 5 (GPT 5)- ஐ இப்போது அறிமுகப்படுத்தியுள்ள ஓபன்ஏஐ இப்போது தங்கள் நிறுவனம் மனோநிலை மேம்படுவதற்கான முற்போக்கான விஷயங்களை இதில் சேர்த்துள்ளதாகக் கூறுவதோடு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆயிரம் மாடல்களை (மாதிரிகளை) அலசி ஆராய்ந்து இதை உருவாக்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக பெரும் உளவியல் நிபுணர்களும், உளவியல் வியாதிகளுக்கு சிகிச்சை தரும் நிபுணர்களும் 1800 மாதிரிகளை எடுத்து பயனாளர்களின் எதிர்வினைகளை ஆராய ஆரம்பித்துள்ளனர்.
ஓபன் ஏஐ-இன் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன், “மனநிலை பாதிப்பைப் பற்றிய விஷயத்தில் நாங்கள் மிகவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்” என்று அறிவித்திருக்கிறார்.
சாட் ஜிபிடி-ஐப் பயன்படுத்திய ஒரு இளைஞரின் புலம்பல் இது:
நான் அதை என் வாழ்க்கையைக் கொஞ்சம் சீர்திருத்த முடியுமா என்று கேட்ட போது அது தந்த பதில் இது தான்:
ஒரு டாக்டரைப் பாருங்கள்.
உடனே கவுன்சிலிங் செய்ய முயற்சி செய்யுங்கள்.
உங்கள் மேலதிகாரியுடன் உடனே பேசுங்கள்.
புது வேலைக்குப் போய் விடுங்கள்.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள், உங்கள் மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் நல்லுறவைக் கொள்ளுங்கள்.
ஒரு விடுமுறையை எடுத்து விடுங்கள்.
கொஞ்சம் அதிகம் சம்பாதிக்கும் வழியைப் பாருங்கள்.
உடல் பயிற்சி செய்யுங்கள்.
ஒரு நல்ல ஹாபியைத் தேர்ந்தெடுங்கள்.
தியானம் செய்யுங்கள்….
பட்டியல் தொடர்கிறது.
“போதும்டா சாமி” என்று சாட் ஜிபிடி-யை அவர் விட்டு விட்டார்.
இந்த விவரங்களை எல்லாம் யாரோ சொல்லவில்லை. பிரபல மேலை நாட்டு இதழான கார்டியன் (27-10-25 இதழில்) முக்கியச் செய்தியாக இதைத் தருகிறது.
ஆகவே அதிகமதிகம் சாட் ஜிபிடி-ஐப் பயன்படுத்துவதை நிறுத்தினால் நல்லது என்பதே நியாயமான முடிவு.
Date uploaded in Sydney, Australia – 29 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
We went to Sri Karphaga Vinayakar Temple in Sydney, Australia on 29-1-2026. It is a temple in one large hall with a small tower. When we went there the temple was celebrating its Annual Mango Festival. We could see about 25 devotees enjoying the Puja to the Dwaja Sthamba. About five priests were doing the decorations and the Puja.
The temple has the main shrine with Karpaka Vinayakar in the centre of the hall .On either side of the main shrine are other deities including Lord Siva, Goddess Meenakshi, Nataraja, Lord Skanda Muruga, Nava Graha etc.
Because of the festival, musicians were playing the Nayanam and Melam (Pipes and drums) that echoed in the hall. We could see a small chariot. The temple has announced that chariots and other idols will be taken along the streets.
Since the temple was located in a Sri Lankan Tamil area we saw several devotees walking towards the temple. Temple distributes free food and Prasad all through the festival days. Other days there is a canteen which sell food in the evening.
It has a good atmosphere and sanctity, and one must visit to get the blessings of Lord Ganesh.
Temple Address
123, The Crescent, Homebush West, New South Wales 2140
Mango Festival is celebrated by all the Sri Lankan temples. The story behind the festival is a popular story. Inter Galactical Space Traveller Narada is famous or notorious for creating quarrels among the celestials which always end with good results. He came with a mango fruit and gave it to Lord Siva in the Kailash with a condition that it can’t be cut when it was to given to any one. Siva’s two sons Lord Ganesh and Lord Skanda Muruga were demanding it. And Siva was in a great dilemma. Siva told them that whoever goes around the world and come back first would get it. Lord Skanda immediately flew on his peacock space rocket and circled the earth in a few minutes. But before that the big tummy boy, Lord Ganesh went round his father and mother Siva and Parvati and said they were the world. Both the parents were happy to hear it. And Siva gave the mango to him. Late comer Lord Skanda Muruga was disappointed. This is the background of the Mango festival which illustrated that father and mother are greater than the earth.
During the festival which runs up to ten days or so, the temple idols are taken around the town. The finale will be the chariot festival, and the chariot is pulled by all the people without any discrimination of rich and poor, of high and low status or man and woman or young and old. This festival celebrated by all the Hindu temples around the world inculcate social unity. Moreover God comes to everyone who could not go to a temple.
–Subham—
Tags- Sydney, Karphaga Vinayakar temple, My visit, Chariot festival, Australia
Date uploaded in Sydney, Australia – 29 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிட்னியில் ஹோம்புஷ் வெஸ்ட் பகுதியிலுள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்துக்கு இன்று வியாழக்கிழமை 29 -1-2026 அன்று சென்றோம். பெரிய மண்டபத்தில் முக்கிய சந்நிதியில் கணேசர் வீற்றிருக்கிறார். மாம்பழ விழா நடைபெற்று கொண்டிருப்பதால் குருக்கள்மார்கள் அதில் மிகவும் ஈடுபாட்டிருந்தார்கள்; த்வஜ ஸ்தம்பத்துக்கு அலங்காரமும் பூஜையும் நடந்து கொண்டிருந்தது.
இந்தக்க கோவில் இலங்கைத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருப்பதால் நிறைய பேர் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்கள். கோவிலுக்குள் சுமார் ஐம்பது பேர்களும் வந்து செல்வோரின் எண்ணிக்கை சுமார் 25 பெரும் இருந்தனர் . நாயனம் மேளம் வாசிப்போர் இன்னிசையை முழங்கி மண்டபத்தை அதிர வைத்திருந்தார்கள்.
விநாயகர் சந்நிதிக்கு வலது புறம் சிவலிங்கத்துடன் மீனாட்சி சந்நிதியும் அதையடுத்து முருகன் நடராஜர் சந்நிதிகளும் இருந்தன எதிர்ப்புறத்தில் நவக் கிரக சந்நிதியும் அமைந்திருந்தது.
கோவிலில் நாலைந்து அர்ச்சகர்கள் இருந்தார்கள். கோவிலொடு மாலை நேரத்தில் மட்டும் இயங்கும் ஒரு உணவு விடுதியும் இருக்கிறது. கோவிலில் நடக்கும் மாம்பழத் திருவிழா பற்றிய துண்டுப் பிரசுரமும் கிடைத்தது . ஜனவரி 23 ம் தேதி துவங்கி பிப்ரவரி மூன்றாம் தேதி வரை விழா நடப்பதையும் அன்றாடம் நடக்கும் பூஜைகளையும் விவரமாக அழகாக அச்சிட்டிருக்கிறார்கள்.
தேர்த் திருவிழா அன்று தெரு வீதிகள் வழியே தேர் வரும் என்பதையும் விளம்பரப்படுத்தி இருந்தார்கள்; விழா நடக்கும் எல்லா நாட்களிலும் மதிய நேரத்தில் அன்னதானமும் வழங்குகிறார்கள் . இரவு பூஜை முடிந்தவுடன் பிரசாதம் உண்டு.கோவில் நிகழ்ச்சிநிரலின் படி
23 -1-2026 கொடியேற்றம்
24 -1-2026 தைலாப்பியங்கோற்சவம்
26 -1-2026 பக்தமுத்தி பாவனோற்சவம்
27 -1-2026 வசந்தோற்சவம்
28 -1-2026 மாம்பழத் திருவிழா
29 -1-2026 வேட்டைத் திருவிழா
30 -1-2026 சப்பரத் திருவிழா
31 -1-2026 தேர்த் திருவிழா
1 -2-2026 தீர்த்தத் திருவிழா
2 -2-2026 பூங்கவனம் / மீனாட்சி திருக்கல்யாணம்
3 -2-2026 வைரவர் மடை.
கோவிலின் முகவரி
Temple Address
123, The Crescent , Homebush West, New South Wales 2140
சிவ பெருமானிடம் நாரதர் கொடுத்த மாம்பழத்தை, கத்தி கொண்டு வெட்டாமல் யாருக்காவது கொடுக்கலாம் என்றவுடன், சிவ பெருமான் சொன்னார் : யார் உலகத்தை முதலில் வலம் வருகிறாரோ அவருக்கே பழம்!
இதைக் கேட்டவுடன் விநாயகர், தாய் தந்தையரே உலகம் என்பதை உணர்ந்து பார்வதியையும் பரமசிவனையும் வலம் வந்து வணங்கினார். முருகனோ மயில் மீது புறப்பட்டு உலகைச் சுற்றி தாமதமாக வந்தார். ஆகையால் பிள்ளையாருக்கே மாம்பழம் கிடைத்தது .
இந்த விழாவை இலங்கைத் தமிழர்கள் நடத்தும் கோவில்கள் வெகு விமரிசையாகி கொண்டாடிவருகின்றன. ஒருவருக்கு தாய்-தந்தையரே உலகம் என்பதை வலியுறுத்தும் கருத்துள்ள விழா இது . இந்த விழாவின்போது எல்லா கடவுளரும் வீதி வலம் வருவதோடு பூஜைகளும் பிற யாக யக்ஞங்களும் நடைபெறும்.
–subham—
Tags – மாம்பழத் திருவிழா, சிட்னி, கற்பக விநாயகர் கோவில், லண்டன் சுவாமிநாதன், விஜயம்
Date uploaded in Sydney, Australia – 29 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 4
நக்கீரர் குகையில் அடைபட்ட கதை
மலை முகம் சுமந்த புலவர் செம் சொல் கொண்டு வழி திறந்த
செம் கை வடிவேலா … மலைக் குகையில் அடைக்கப்பட்டிருந்த
புலவராகிய நக்கீரரின் சிறந்த பாடலை (திருமுருகாற்றுப்படையைக்)
கேட்டு, அந்தக் குகையின் வாயிலைத் திறந்து விட்ட செவ்விய
கைகளை உடைய வடிவேலனே
***
பாண்டிய மன்னன் தனது சந்தேகத்தைத் தீர்த்துவைப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாக அறிவித்தார்; தருமி என்ற ஏழைப் பிராமணனுக்கு , அவருடைய வறுமையை தீர்ப்பதற்காகக் கவிதையெழுதிக் கொடுத்து புலவரை மன்னரிடம் அனுப்பினார் சிவபெருமான் .
அதில் பிழை இருப்பதாக நக்கீரர் சொன்னவுடன் சிவனே நேரில் வந்து வாதிட்டார் ;அப்போதும் அடங்காத நக்கீரரின் கொட்டத்தை அடக்க சிவ பெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்தார் ; நக்கீரர் மனம் திருந்தினார். இந்த திரு விளையாடல் புராணக்கதை அப்பர் பாடிய தேவாரத்தில் இருப்பதால் சங்க காலத்தில் நடந்தது உண்மை என்பது தெரிகிறது. இதே போல ஒரு கதை பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படைத் தோன்றியதற்குக் காரணமாக உரைகாரர்களால் சொல்லப்படுகிறது.
அந்தக் கதை பின்வருமாறு
நக்கீரர் சிவனுக்கு அபராதம் செய்ததால் சிவ பூதகணங்கள் அவரைச் சிறையில் அடைத்தது; திருப்பரங்குன்றம் என்னும் தலத்திலுள்ள அந்த குகை ஒரு பூதத்துக்குச் சொந்தமானது. குகையில் உள்ள மற்ற 999 புலவர்களுடன், தினமும் ஒருவரை உணவாக உட்கொள்ளும் பூதத்திற்காகக் காத்திருந்த நக்கீரர், முருகப்பெருமானை வேண்டித் திருமுருகாற்றுப்படை பாடினார். அவரின் பக்தியை மெச்சிய மகிழ்ந்த முருகன், பூதத்தை அழித்து, குகையைத் திறந்து, அவரைக் காப்பாற்றினார்.
இந்தக் கதையில் மேலும் சில தகவல்கள் உள்ளன
அந்த பூதம் ஆயிரம் பேர் சேர்ந்தவுடன் தினசரி ஒருவரை உண்ணத் திட்டமிட்டிருந்தது. 1000-மாவது ஆளாக நக்கீரர் வந்து சேர்ந்தார் தன் உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்ந்த நக்கீரர், முருகப் பெருமானை சரணடைந்து, திருமுருகாற்றுப்படை பாடினார்.
அந்தப் பாடலினைக்கேட்டு மகிழ்ந்த முருகன், பூதத்தை அழித்து, குகையைப் பிளந்து நக்கீரர் உட்பட அனைவரையும் விடுவித்தார்.
சிவ பூசையில் தவறு செய்பவர்களை உண்ணுகின்ற ஒரு பெண்பூதத்தின் பெயர் கற்கிமுகி. நக்கீரர் ஒரு குளக்கரையில் சிவபூசை செய்துகொண்டிருந்தார். அப்பூதம் அங்கு வந்து சேர்ந்தது. ஓர் இலையை உதிர்த்தது. அந்த இலை பாதி நீரிலும் பாதி நிலத்திலுமாக வீழ்ந்தது. நீரில் வீழ்ந்த பாதி மீனாகவும், நிலத்தில் வீழுந்த பாதி பறவையாகவும் மாறியது. பறவை நிலத்துக்கும் மீன் நீருக்குமாக இழுத்துப் போர் புரிந்தன; இந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர் பூசையில் மனம் பதியாது அதனையே நோக்கி நின்றார். பூசையில் வழுவிய அவரை எடுத்துக்கொண்டு போய் பூதம் குகையில் அடைத்துவிட்டது என்பது பின்னணிக் கதை.
***
ருத்திர சன்மன் கதை
வாய்ப்புற்றத் தமிழ் மார்க்கத் திட்பொருள் … வாய்ப்புள்ள தமிழின் அகத்துறையின் உறுதியான பொருளை
திருவிளையாடல் புராணத்தில் சங்கப்புலவர் சண்டை தீர்த்த
உருத்திரசன்மன் கதை
மதுரையில் இருந்த கடைச் சங்க புலவரிடையே போட்டியும் பொறாமையும் வளர்ந்தது ; ஒவ்வொருவரும் தனது கவிதையே சிறந்தது என்று வாதாடினார்கள்; அவர்களில் நல்ல உள்ளம் படைத்தோர் மதுரை ஆலவாய் அண்ணலாகிய சொக்க நாதப் பெருமானிடம் முறையிட்டனர் . சிவபெருமான் மனித வடிவில் தோன்றி அறிவுரை வழங்கினார் :
“மதுரைநகரில் தனபதி என்ற வணிகன் இருக்கிறான், அவன் மனைவி குணசாலினி என்பவள்; அவர்களுக்குப் பிள்ளை இல்லாமல் தவம் செய்து ஒரு மகனைப் பெற்றிருக்கிறார்கள் உருத்திரசன்மன் என்பது அவன் பெயர்; ஐந்து வயதும் நிரம்பாத சிறுவன்; அவன் பிறவி ஊமை, பேச மாட்டான். அவனை அழைத்துச் செல்லுங்கள் அவன் உம்பாடலைக் கேட்டு முடிவு கூறுலான்” என்று சொல்லி அனுப்பினார்.
ஊமை எப்படி பாடலைக் கேட்பான், பதில் சொல்லுவான் என்ற ஐயங்கள் எழுந்தன, எனினும் இறைவன் சொன்னபடியே ஊமைப்பியை பிள்ளையை சங்கத்துக்கு அழைத்துச் சென்று அவரவர் தம் கவிதைகளைப் படித்தனர்.
உப்புச் சப்பு அற்றக் கவிதைகளைக் கேட்கும் போது அவன் எந்த வித உணர்ச்சியையும் காட்டவில்லை; சொற் சுவை , பொருட் சுவை அணி நயம், இசை உடைய கவிதைகளைக் கிடக்கும்போது மட்டும் புளகித்துக் கண்களில் நீர் அரும்ப முகமலர்ந்து அவற்றைப் பாராட்டினான். அவன் முன் பாடிய புலவர்களுள் கபிலர், பரணர், நக்கீரர், தலை சிறந்தவர். இம் மூவரே தலைமைக்கு உரியவர் ஆயினர்.