சங்க காலத்தில் விலைமாதர்களும் விபச்சாரமும் (Post No.15,666)

Written by London Swaminathan

Post No. 15,666

Date uploaded in London –28 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(ENGLISH VERSION OF Prostitution in Ancient Tamil Nadu; Parattaiyar or public women in Narrinai (Post No.15,663) WAS POSTED YESTERDAY)

உலகில் விபச்சாரமும் விலை மகள்களும் இல்லாத எந்த சமுதாயமும் இல்லை; கலாசாரமும் இல்லை ; எல்லா மத நூல்களிலும் இது குறித்த எச்சரிக்கைகள் உள்ளன . எனினும் சங்கத் தமிழ் பாடல்களிலும் அருணகிரிநாதர் யாத்த திருப்புகழ் பாடல்களிலும் இது சற்று தூக்கலாகக் காணப்படுகிறது . இதனால் இது குறித்து தமிழ் அறிஞர்கள் கதைக்கவே பயப்படுகிறார்கள் ; கே கே பிள்ளை எழுதிய ஆங்கில நூலில் நற்றிணையில் உள்ள விலைமாதர்கள் பாடல்களை எழுதி இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்கிறார் . எங்கள் குடும்ப நண்பரும் மதுரை வடக்கு மாசிவீதியில் எங்கள் வீட்டுக்கு அடுத்து வசித்தவரும் கம்பனும் மில்டனும் எழுதி டாக்டர் பட்டம் பெற்றவருமான டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன் (எஸ் ஆர் கே ) இது குறித்து மிக அருமையான விளக்கம் கொடுத்துள்ளார் :

“அகத்தினை இலக்கியம் உலக இயல் வாழ்வின் படப்பிடிப்பு இல்லை என்பதை இன்னும் ஒரு வகையிலும் ஊகிக்கலாம். சங்க காலத்தில் பரத்தையர் இருந்தனர் என்பதும் , மேல்வருக்க இளைஞர் பலர் பரத்தையர்களை நாடி இழிவுற்றனர் என்பதும் மதுரைக் காஞ்சிசிலப்பதிகாரம் முதலியவற்றால்  விளங்குவது மெய்யே . ஆனால் பரத்தைமை என்பது சிறுபான்மையோரைப் பிடித்த நோயே. மக்கட் தொகையுடன் ஒப்பிடும்போது விலைமகளிர் சிலரே . அவர்களும் பெரும்பாலும் புகார், மதுரை முதலிய பெரு நகரங்களிலே வாழ்ந்தனர் . ஆனால் அகத்திணை இலக்கியத் தலைவர்கள் மனைவியரை நீங்கி பரத்தையரை நாடிச் செல்வோராகக் காட்சி தருகின்றனர் . 966 கற்பியர் பாக்களில் 279 பரத்தையர் பிரிவுக்குரியனவாக உள்ளன. இது உண்மை வாழ்வின் வெளியீடு எனில் , குல மகளிர் பாதி, விலை மகளிர் பாதியாகப் பெண்குலம் அமைந்திருந்தது என்று தோன்றும். அத்தகைய இழிநிலை சமுதாயத்துக்கு ஒருபோதும் வாய்க்கவில்லை என்பது வெளிப்படை . எனவே அகத்திணை கற்பனையை சமுதாய வாழ்வின் சித்திரமாகக் கொள்வது பிழையே “.

— இந்தியப்  பண்பாடும் தமிழரும் – எஸ் இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை , 1971

தொல்காப்பியரும் திருவள்ளுவரும் கூட இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு தமிழர்களை எச்சரிக்கின்றனர் .

***

இனி நற்றிணையில் வரும் பாடல்களில் விலைமகளிர் பற்றி வரும் இடங்களைக் காண்போம்.

எல்லாப் பாடல்களும் மருதத் திணையில் உள்ளவை  ;  அந்த திணையில் இப்படிப்படுவது ஒரு மரபு; ஒரு பாணி ; அதிலும் குறிப்பாக பரணர் பாடல்கள் மிகுந்திருப்பதையும் கவனிக்க வேண்டும் . இவை தவிர ஒரே ஆணுக்குப் பல விலைமாதர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவனை இழுத்த விஷயமும் , விபச்சகாரிகளிடையே ஆட்களை பிடிக்க நடந்த சண்டைகளும் ஒரு விலைமாதர் சேரி க்குள்  வேறு ஒருவள் வாடிக்கையாளரைப் பிடிக்க வந்த போது விரட்டிய செய்திகளும் ஏனைய அகப்பாடல்களில் கிடைக்கின்றன

***

நற்றிணை 30 ஒரே ஆண்மகனைச் சுற்றி பல விலைமாதர்கள் இழுபறி

கடலில் செல்லும் பாய்மரக் கப்பல் கவிழ்ந்ததால் மனம் கலங்கி, அதிலிருந்த ஒரே ஒரு மிதக்கும் பலகையைப் பலர் அவரவர் பக்கம் இழுப்பது போல உன்னை பரத்தையர் பலர் அவரவர் அணைப்புக்கு இழுத்துத் துன்புறுவதைப் பார்த்தேன்.

30. மருதம்

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், ”யாரையும் அறியேன்” என்றாற்குத் தோழி சொல்லியது.கொற்றனார் பாடல்

கண்டனென் மகிழ்ந! கண்டு எவன்செய்கோ?

பாணன் கையது பண்புடைச் சீறியாழ்

யாணர் வண்டின் இம்மென இமிரும்,

ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின்

மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர்  5

கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி

கால் ஏமுற்ற பைதரு காலை,

கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன் வீழ்பு,

பலர் கொள் பலகை போல

வாங்க வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே.      

***

நற்றிணை Natrinai 100

பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச் சொல்லியது. பரணர் பாடல்.

பரத்தை சொல்கிறாள்: அவன் என் கூந்தலையும் கையையும் பிடித்து இழுத்தான். உன் மனைவியிடம் சொல்லிவிடுவேன் என்றேன். அவன் நடுங்கிப் போனான். அதை நினைத்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது.

பாடல் 100. மருதம்

உள்ளுதொறும் நகுவேன் தோழி! வள்உகிர்

மாரிக் கொக்கின் கூரல் அன்ன

குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்

தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்

வான் கோல் எல் வளை வௌவிய பூசல்   5

சினவிய முகத்து, ”சினவாது சென்று, நின்

மனையோட்கு உரைப்பல்” என்றலின், முனை ஊர்ப்

பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்

தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்

புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்    10

மண் ஆர் கண்ணின் அதிரும்,

நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே.

***

நற்றிணை 20 பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன், ”யாரையும் அறியேன்” என்றாற்குத் தலைவி சொல்லியதுஓரம்போகியார் பாடல்.

மனைவி சொல்கிறாள் ,“ஐய, நீயா ஒன்றும் தெரியாதவர்?

அவளா ஒன்றும் தெரியாத மடந்தை? அவளை நான் என் கண்ணால் பார்த்தேனே.உன்னுடைய மார்பிலே அவள் படுத்துக்கிடந்தாள். அதனால் உன்னுடைய பூ மாலையின் மணம் அவள் கூந்தலில் கமழ்ந்தது.

அந்தக் கூந்தலை அவள் உலர்த்திக்கொண்டு ஆடையையும் ஆட்டிக்கொண்டு ,.வளையல் ஓசை கேட்கும்படி கையை வீசிக்கொண்டு தெருவில் நடந்துவந்தாள். கண்களை விரித்து அங்குமிங்கும் (உன்னைத்) தேடிக்கொண்டு வந்தாள்.

ஆமாம். அவள் உன்னைத் தழுவவே இல்லை?  (தழுவியவள் என்னும் ஏளனக் குறிப்பு).

மருதம்

ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,

மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்

தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்

துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,

செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகில்,     5

பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,

சென்றனள் வாழிய, மடந்தை! நுண் பல்

சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்;

மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை,

பழம் பிணி வைகிய தோள் இணைக்    10

குழைந்த கோதை, கொடி முயங்கலளே.

***

நற்றிணை 380 Natrinai 380பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.;கூடலூர்ப் பல்கண்ணனார் பாடல்

பரத்தை வீட்டிலிருந்து மீளும் தலைவன் ,தன் வீட்டிற்குள் நுழைய முனைகிறான். பாணன் அவனுக்கு ஆதரவாகப் பேசுகிறான் அப்போது தோழி சொல்கிறாள்  “பயன் இல்லாத சொற்களைப் பேச வேண்டாம். சமையல் செய்த எண்ணெய் (தாளிக்கும்போது சிதறிய) பட்டு என் தலைவியின் ஆடை அழுக்காக உள்ளது. பால்

பருகும் குழந்தையின் வாயும் பட்டு,  நாற்றம் வீசுகிறது. தேரில் சென்று சிறந்த அணிகலன்களுடன் சேரியில் பகட்டும் மகளிருடன் வாழும் உன் தலைவனுக்கு என் தலைவி தகுந்தவள் இல்லை. அவனைக் கூட்டிக்கொண்டு ஒடி விடு” .

திணை மருதம்

நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு

மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும்,

திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற,

புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;

வால் இழை மகளிர் சேரித் தோன்றும்     5

தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால்

பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்

எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்;

கொண்டு செல் பாண! நின் தண் துறை ஊரனை,

பாடு மனைப் பாடல்; கூடாது நீடு நிலைப்  10

புரவியும் பூண் நிலை முனிகுவ;

விரகு இல மொழியல், யாம் வேட்டது இல் வழியே!

***

உன்னைத் தொட்டால் எச்சில்கலையைத் தொட்டதற்குச் சமம்இங்கிருந்து ஒடு

நற்றிணை 350 Natrinai 350தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது.பரணர் பாடல்

நீ என்னை அணைக்காமையால் என் நலம் தொலையும்.

அப்படித் தொலைந்தாலும் தொலைந்துவிட்டுப் போகட்டும்.

நீ என்னை நெருங்க விடமாட்டேன். அப்படி உன்னை என்னிடம் நெருங்க விட்டால்,  என் கை என்னை அறியாமல் உன்னைத் தழுவிவிடும். அதனைத் தடுக்கும் வலிமை எனக்கு இல்லை.

உன் மார்போ, பரத்தை முலையைத் தழுவிய சந்தனத்தையும்,

தழுவியதால் வாடிய மாலையையும் உடையது. அது

பரத்தை உணவு உண்ட எச்சில் வட்டி போன்றது. என்னிடம் வராதே.

அவளைத் தழுவிய தோளுடன் என்னிடம் வராதே.

திணை மருதம்

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,

பழனப் பல் புள் இரிய, கழனி

வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்

தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்

தொல் கவின் தொலையினும் தொலைக! சார   5

விடேஎன்: விடுக்குவென் ஆயின், கடைஇக்

கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை

சாடிய சாந்தினை; வாடிய கோதையை;

ஆசு இல் கலம் தழீஇயற்று;

வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே!              

***

பக்கத்தில் வராதேபோபோ !

நற்றிணை Natrinai 260 ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.பரணர் பாடல்

என்னை விரும்புபவன் போல நடித்துக்கொண்டு என்னை அணைத்துக்கொண்டு உறங்கும் பகைவன் நீ.

நான் உன் பழைய செயலை மறக்கமாட்டேன்;

அரசன் வயவன், பகைவர்களைப் போர்முனையில் அழித்தவன்.

அவன் தலைநகரம் இரும்பை. அது நீர்வளம் மிக்க ஊர்.

அந்த ஊர் போலத் தழைத்த என் கூந்தலில் சூடிய பூக்களை வாடச்செய்த பகைவன் நீ. அதனை நான் மறக்கமாட்டேன்.

இவ்வாறு பரத்தையிடம் சென்று வந்த தலைவனிடம் தலைவி கூறுகிறாள்.     

திணை மருதம்

கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை

பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ,

தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது

குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர!

வெய்யை போல முயங்குதி: முனை எழத் 5

தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன்

மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என்

ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த

முகை அவிழ் கோதை வாட்டிய

பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே!                               

***

நற்றிணை Natrinai 225 பரத்தை தலைமகள் கேட்கும்படி சொல்லியது;  கபிலர் பாடல்

முருகக் கடவுள் போன்ற வலிமையோடு தன் சினத்தால் போரிட்ட யானையின் வெள்ளைக் கொம்பு கரை படிந்து சிவப்பாக காணப்படுவது போலவும், வாழைப்பூ மொட்டு போலவும், மகளிரின் ஓதிக் கொண்டை போலவும், தோன்றும் முலை உடையவர் யாரேனும் ஆசைதீரத் தழுவியவர் உண்டோ,  தோழி! என்னிடம் அன்பு இல்லாதவனாக அவன் இருக்கிறானே, என்று காமக்கிழத்தி தன் தோழியிடம் கலங்கிக் கூறுகிறாள்.

திணை குறிஞ்சி

முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்

பொருத யானை வெண் கோடு கடுப்ப,

வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,

மெல் இயல் மகளிர் ஓதி அன்ன

பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை     5

இரந்தோர் உளர்கொல் தோழி! திருந்து இழைத்

தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்

பயந்து எழு பருவரல் தீர,

நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?

வன்புறை எதிர் அழிந்தது;

***

நற்றிணை 320 Natrinai 320 தெருவில் பொது மகளிர் நடமாட்டம்;  குடும்ப்பப்பெண்கள் அச்சம்

பரத்தையின் காதில் விழும்படி  சொல்லியது. கபிலர் பாடல்

துணங்கை விழா முற்றுப்பெற்றது. விழாவில் முழக்கிய முழவு மாட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது. என்ன நோக்கத்தோடு இவள் தன்னை அழகு படுத்திக்கொள்கிறாள், என்று கேட்கிறாயா?  (தலைவனுக்குத் தோழி சொல்கிறாள்)

தழை அணிந்த அல்குலை உடைய ஒருத்தி (பரத்தை)

தெருவில் நடந்து சென்றாள். அதற்காக, ஊரில் உள்ள மகளிர் அனைவரும் தன் கணவனுக்கு வைத்திருக்கும் காவலை

அதிகப்படுத்தினர். அவர்கள் நல்ல அழகிகள் தான் என்றாலும் தம் கணவன்மாரின் கவனம் தம்மிடம் திரும்புமாறு தம்மை அழகுபடுத்திக் கொள்கின்றனர்.

காரி அரசன் ஓரி அரசனைக் கொன்றுவிட்டு

தன் பகையாளி ஓரி நகரில் நடந்துசென்றபோது

ஊரே ‘கல்’ என்று ஆள் நடமாட்டம் இல்லாமல் கிடந்தது போல்

இந்த ஊரின் நிலைமை ஆயிற்று.

திணை மருதம்

”விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;

எவன் குறித்தனள்கொல்?” என்றி ஆயின்

தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,

இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்

ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில்,                5

காரி புக்க நேரார் புலம்போல்,

கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,

காவல் செறிய மாட்டி, ஆய்தொடி

எழில் மா மேனி மகளிர்

விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே.   

***

நற்றிணை 340 Natrinai 340 பரத்தை வீட்டிலிருந்து திரும்பிய  தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.நக்கீரர் பாடல்

மகிழ்ந! நீ உன் உடலுறவுக்காரி வீட்டிலிருந்து வந்துள்ளாய்.

அதனால் உன்னை நான் தழுவமாட்டேன். அதற்காக உன்னை நான் சினந்துகொள்ளவும் மாட்டேன். செழியன் ஊர் போல் வளமுடன் திகழ்பவள் நான். என் வளையல்களைக் கழலச் செய்தவன் நீ  .என்னைப் பிரிந்து உன் பரத்தையோடு வாழுங்காலத்து என் வளையல்கள் உன்னை நினைந்து கழன்றன.அப்படிப்பட்ட உன்மீது சினம் கொள்வேனா? மனைவி தன் கணவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.

திணை மருதம்

புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்

கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்

படை மாண் பெருங்குள மடை நீர் விட்டென,

கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை

அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி,        5

பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,

செஞ் சால் உழவர் கோல் புடை மதரி,

பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும்

வாணன் சிறுகுடி அன்ன, என்

கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே!     

***

போ போ நீ யார்கிட்ட வேணுமானாலும் போ !

நற்றிணை 360 Natrinai 360

விழாவில்,  விறலிப் பெண்பாவை ஆடுவாள். அவள் போன்ற ஒருத்தியை, நேற்று இழுத்துப் புணர்ந்து  அவளது புத்தழகைத் துய்த்தாய். இன்று  இன்பம் தரும் மெல்லிய தோள் கொண்ட மகளிரைப் பெறுவதற்காகச் சென்றுகொண்டிருக்கிறாய். பெருமானே!

உன் பரத்தைமை சிறக்கட்டும்.

அங்குசத்தால் குத்தி யானைக் குருதியைப் பலக்குவோர் சோறு கொடுத்தால் அது அதைத் திண்ணாமல் வாரி இறைக்கும்; அந்தச் சோற்றுக் கவளம் பயனற்றுப் போவது கண்டு பாகர் வருந்துவது போல, நீ சில பெண்களுக்கு கொடுத்த  செல்வம் பயன் இல்லாமல் போவது கண்டு நீ வருந்துகிறாய். அது எனக்கு மகிழ்வாக இருக்கிறது.இந்த இல்லத்தில் இன்பத்தை எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.இப்போது நீ விரும்பியவளிடம் செல். உன் பரத்தமை வாழ்க.

(தலைவி சொல்வது போலத்

தோழி தலைவனிடம் சொல்கிறாள்.)

திணை மருதம்

முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய

விழவு ஒழி களத்த பாவை போல,

நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வௌவி,

இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர்,

சென்றீ பெரும! சிறக்க, நின் பரத்தை!               5

பல்லோர் பழித்தல் நாணி, வல்லே

காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப,

கைஇடை வைத்தது மெய்யிடைத் திமிரும்

முனியுடைக் கவளம் போல, நனி பெரிது

உற்ற நின் விழுமம் உவப்பென்;               10

மற்றும் கூடும், மனை மடி துயிலே.

பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி, தலைமகள் குறிப்பறிந்து, வாயில் மறுத்தது; ஓரம்போகியார் பாடல்

***

பொது மகளிர் பற்றித் திருக்குறள்

வரைவின் மகளிர்

அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.1

கிடைக்கக்கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனியசொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.2

பொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்யான தழுவுதல், இருட்டறையில், தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.3

பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்தமாட்டார்.4

இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.5

அழகு முதலியவற்றால் செருக்குக்கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொதுமகளிரின் தோளை, தம் நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.6

நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறு பொருள்களை விரும்பிக் கூடும் பொதுமகளிரின் தோளைப் பொருந்துவர்.7

வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவர்க்கு அணங்கு தாக்கு (மோகினி மயக்கு) என்று கூறுவர்.8

ஒழுக்க வரையறை இல்லாத பொதுமகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.9

இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரும் கள்ளும் சூதுமாகிய இம் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.10

–subham—

Tags-

சங்க காலத்தில், விலைமாதர்களும் விபச்சாரமும் , பொது மகளிர் , நற்றிணைப் பாடல்கள் , உண்மை நிலை என்ன? பொது மகளிர் பற்றித் திருக்குறள்

வாழ்வை வளமாக்க உதவும் கிண்ட்சூகி – தங்க இணைப்பு! (Post. 15,665)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,665

Date uploaded in London – 28 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

வாழ்வை வளமாக்க உதவும் கிண்ட்சூகி – தங்க இணைப்பு! 

ச. நாகராஜன்

ஜப்பானிய வார்த்தையான கிண்ட்சூகி (Kintsugi) என்பதற்கான நேரான அர்த்தம் தங்க இணைப்பு என்பதாகும். இதையே கிண்ட்சூகுரோய்  (Kintsukuroi) என்றும் சொல்வார்கள். இதற்குப் பொருள் தங்க ரிப்பேர் என்பதாகும்.

உடைந்து போன ஜாடிகள், கோப்பைகள், பானைகள் ஆகியவற்றைச் சாதாரணமாக உலகெங்கும் உள்ள மக்கள் தூக்கி எறிந்து விடுவர்.

ஆனால் ஜப்பானிலோ இந்த உடைந்த துண்டுகளை மிக அழகாக ஒட்டி விடுவார்கள். இது தான் கிண்ட்சூகி!

அரக்குடன் வெள்ளி, தங்கம், பிளாட்டினம் ஆகியவற்றின் பொடியைச் சேர்த்து உடைந்து போனதை ஒட்டி விட்டால் அது மின்னும்; பளபளக்கும்.

15ம் நூற்றாண்டில் இந்தப் பழக்கம் ஆரம்பித்தது. ஜப்பானியர்களுக்கு டீ சடங்கு என்பது மிக மிக முக்கியம். பீங்கான் கோப்பைகளில் டீயை ஊற்றி பெரிய சடங்காக அன்புடன் வருவோருக்குத் தருவது ஜப்பானியப் பண்பாகும்.

இந்த பீங்கான் கோப்பைகள் உடைந்து போனால் அவற்றை அழகுற ஒட்டி அலங்கரித்து அதை வீட்டின் முன்னறையில் வைத்து விடுவார்கள் ஜப்பானிய மக்கள்.

இதில் அவர்களுக்கு எந்த அளவு மோகம் என்றால் சிலர் நல்ல புதிய கோப்பை மற்றும் ஜாடிகளைக் கூட வேண்டுமென்றே உடைத்து கிண்ட்சுகி செய்து விடுவார்கள்.

ஆனால் இந்த வார்த்தைக்கு இது மட்டும் அர்த்தம் அல்ல. இன்னும் ஆழ்ந்த அர்த்தம் உண்டு. வாழ்வில் எல்லோருக்கும் எல்லாமும் எப்போதும் கிடைக்காது. எல்லோரும் எல்லாவற்றிலும் பரிபூரணமாக இருக்க மாட்டார்கள்; அது முடியாத ஒன்று;. சில குறைகள் நிச்சயமாகவே இருக்கும்.

அந்தக் குறைகளைப் பொருட்படுத்தாதே; உன்போக்கில் நீ வாழ்க்கையை உற்சாகமாக நடத்து என்கிறது கிண்ட்சூகி. வாபி-சாபி என்ற ஜப்பானிய கொள்கையை ஒத்திருப்பது இது. குறைகளைப் பார்க்காதே; குறைகளில் உள்ள அழகைப் பார் என்பது ஒரு பெரிய வாழ்க்கைத் தத்துவம்.

 அதிகமாக ஓடி ஓடி வாழ்க்கை ஓட்டத்தில் களைத்து, செய்வதறியாது திகைப்பவர்கள், அதிகமதிகம் எதையாவது எண்ணி எண்ணி மன உளைச்சலுக்கு தங்களை ஆளாக்கிக் கொள்பவர்கள் இந்த கிண்ட்சூகியைக் கடைப்பிடித்தால் அவர்களது களைப்பும் மன உளைச்சலும் போய்விடும்.

ஒருவருடைய குறைகளை அவர் மனமார ஒத்துக் கொண்டு முன்னேறும் வழியைப் பார்ப்பது தான் கிண்ட்சூகி!

உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் அந்தக் குறைகள் ஒரு பங்கு என்பதை உணர்ந்து அதை தங்க ஜரிகைகளை ஒட்டி துணியையும் அல்லது தங்கப்பொடி தூவி ஜாடிகளையும் அழகு படுத்துவது போல உங்களை நீங்களே அழகு படுத்திக் கொள்ளலாம். 

பிரிட்டிஷ் கலைஞரான சார்லட் பெய்லி என்ற பெண்மணி தனது நூற்பு வேலைகளில் ரிப்பேர் செய்யும் போது தங்க ஜரிகைகளை ஒட்டி துணியை பளபளக்க வைப்பார்.  அமெரிக்க கலைஞரான கரேன் லாமாண்டி மற்று நியூயார்க் நகரில் உள்ள ஜார்ஜ் ருஃப் உள்ளிட்டோரும் இந்த கிண்ட்சூகியில் வல்லவர்கள்.

 இதே போல உலகெங்கும் சில குறைகளைக் கொண்டுள்ள பலரும் கிண்ட்சூகியைக் கடைப்பிடித்து  தங்கள் எண்ணங்களைச் சீராக்கி ஒப்பற்ற இந்த வாழ்க்கைப் பயணத்தை சுவை நிறைந்த ஒன்றாக ஆக்கிக் கொண்டு வருகின்றனர்.

எதையும் வீணாக்காதே; எதையும் அதிகமதிகம் விரும்பாதே என்ற மந்திரமே கிண்ட்சூகி கூறும் அற்புதமான தத்துவமாகும். 

அட, நம்மிடம் குறை இருக்கிறதா! இருந்து விட்டுப் போகட்டுமே இருக்கவே இருக்கிறது கிண்ட்சூகி!

**

உலகத்திலேயே அதிசயமான திருமண வாழ்த்து!-Part 2 ஆறு கதைகள்!(Post.15,664)

Written by London Swaminathan

Post No. 15,664

Date uploaded in London –27 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ரிக்வேத திருமண மந்திரத்துக்கு சூர்யா சூக்தம் என்று பெயர்;  பத்தாவது மண்டலத்தில் 85 ஆவது துதி இது .

இந்தத் துதியில் உள்ள மேலும் சில சுவையான செய்திகளைக் காண்போம் :

கிருத்யா

கிருத்யை என்னும் ஒரு பெண் தேவதை / அணங்கு பற்றி மந்திரம் 28, 29, 30 எச்சரிக்கிறது ; அதன் நிறம் நீளமும் சிவப்பும் ஆகும் ; அதை விரட்டுவோமாகுக என்று ௨௮ஆவாத் மந்திரம் சொல்கிறது .

அழுக்கடைந்த ஆஅடைய யை அகற்றவும் ; இந்த கிருத்யா தேவதை மனைவி போல நடித்து காலடி வைத்து கணவனின் இதயத்தில் நுழைகிறாள்; மனைவியின் ஆடைகளைக்கொண்டு கணவன் தன்னுடைய அங்கங்களை மறைக்கும்போது  அவனுடைய அழகினை இவள் பறிக்கிறாள்.

இதற்கு அடுத்த மந்திரம் நோய்கள் அணுகாமல் இருக்கட்டும் என்று வாழ்த்துகிறது

யார் இந்த கிருத்யா என்னும் துஷ்ட தேவதை ?

 Kṛtyā (कृत्या).—(KṚTYAKĀ) I. A Rākṣasī who is born when the black arts as enunciated in the Atharvaveda are practised to annihilate enemies. Kṛtyā may appear in male form too.

எதிரிகளை ஒழிப்பதற்கு அதர்வண வேத மந்திரங்களை பயன்படுத்தி கிருத்யா என்னும் ராக்ஷஸியை உருவாக்கலாம் ; ஆன் உருவத்திலும் கிருத்யா வரும்

இந்த க்ர்த்யா பேய் பற்றி மஹாபாரத்திலும் புராணங்களிலும் கதைகள் வருகின்றன.

***

முதல்கதை

பாண்டவர்களும் கெளரவர்களும்  (Vana Parva, Chapter 252)

வனபரவத்தில் உள்ள கதை)

பாண்டவர்கள் வனவாசம் செய்த காலத்தில் துரியோதனன் தனது பரிவாரம் புடை சூழ கானகத்துக்கு வருகிறான்; அப்போது ஒரு கந்தர்வன் துரியாதனனைக் கடத்திச் சென்று விடுகிறான் ; சொந்தக்காரன் என்ற பாசத்தின் பேரில் அர்ஜுனன் அவனை காப்பாற்றுகிறான் . துரியோதன ஹஸ்தினாபுரத்துக்குத் திரும்பியவுடன் பாண்டவர்களுக்குப் பாதி ராஜ்யத்தைக் கொடுப்பதா வேண்டாமா என்ற விஷயம் விவாதத்துக்கு வருகிறது . சகுனியும் ஏனையோரும் கொடுத்து விடுவோம் என்கின்றனர் ; பொறாமையே உருவான துரியோதனன் பிடிவாதமாக மறுத்துவிடுகிறான்; உடனே அவனது தந்தை தர்ப்பைப்புல்லினை பரப்பி அதன் மேல் அமர்ந்து உயிர்விட முயல்கிறான் ; அசுரர்கள் இதை அறிந்து மந்திரங்கள்  மூலம் ஒரு கிருத்யாவை உண்டாக்குகிறார்கள் . அந்த தேவதை துரியோதனனை பாதாள உலகத்துக்குத் தூ க்கிச் செல்கிறது; அங்கே அசுரர்கள் துரியோதனனுக்கு துர் போதனை செய்து சமாதானம் செய்யாதே ; என்ன வந்தாலும் நாங்கள் உனக்குத் துணையாக நிற்போம் என்கிறார்கள்.

(இதிலிருந்து அந்த துஷ்ட தேவதையின் சக்தி தெரிகிறது.)

***

கதை 2

தேவேந்திரன் ஒரு முறை அஸ்வினி தேவர்களுக்குச் சோமபானம் கிடைக்காமல் செய்துவிடுகிறான். பின்னொரு சமயம் அஸ்வினி தேவர்கள், காடுகளில் ஸ்யவன ரிஷியைச் சந்திக்கிறார்கள் ; அவர்கள் மந்திர சக்தியைப் பயன்படுத்தி கண் பார்வை இழந்த ஸ்யவன ரிஷிக்கு பார்வையை மீண்டும் வரவழைக்கிறார்கள்; அவரும் மனம் மகிழ்ந்து ஒரு யாகம் இயற்றி அஸ்வினி தேவர்களுக்கு சோமபானம் வழங்குகிறார்; இந்திரன் ஆத்திரமடைந்து அதைத் தடுக்க வஜ்ராயுதத்தை உயர்த்துகிறான்; ரிஷியின் மந்திர சக்தியால் அவனுடைய கைகள் செயல் இழந்து நிற்கின்றன ; மேலும் யாகத்  தீயிலிருந்து ஒரு க்ருத்யாவை உண்டாக்குகிறார். அதன் பெயர் மதன. அதன் பற்கள் மிகவும் நீளமானவை; உருவமோ மலைபோன்றது ; அந்த பயங்கரமான க்ருத்யாயாவைக் கண்டு பயந்த இந்திரன் அஸ்வினி தேவர்கள் சோமபானம் செய்ய அனுமதிக்கிறான்  (இங்கு கிருத்யாவின் தோற்றம் ஒரு பேய் போல ராக்ஷஸன் போல வருணிக்கப்படுகிறது )

***

கதை 3

அம்பரீஷன் என்ற மன்னன் ஒரு முறை ஏகாதசி விரதம் இருந்தான்; அப்பொழுது அதைத் தடுப்பதற்காக தேவர்கள் துர்வாச முனிவரை அனுப்புகிறார்கள் ; துர்வாசரும் அம்பரீஷனைச் சந்திக்க வந்தார் ; ஸ்நான கர்மாக்களை முடித்துவிட்டு வாருங்கள் என்று அம்பரீஷன் சொன்னான் ; அவர் வரவில்லை; இதனால் தேவர்களுக்கு வழங்க வேண்டிய ஹவிஸ் முதலிய உணவுகளை அம்பரீஷன் வழங்கினான் ; திரும்பி வந்த துர்வாசர் எனக்கு மிச்சம் மீதிகளைத் தருகிறாய் என்று சொல்லி  அவனைத் தண்டிக்க ஒரு கிருத்யாவை உருவாக்குகிறார் அம்பரீஷன் விஷ்ணுவை வேண்டவே சுதர்சன சக்ரம் கிருத்யாவைக் கொன்றுவிட்டுத்  துர்வாசரை விரட்டுகிறது. மூவுலகம் முழுவதையும் சுற்றிவிட்டு களைத்துப் போய் அம்பரீஷன் காலில் துர்வாசர் விழுகிறார் ; இது பாகவத புராண கதை. (Bhāgavata, 9th Skandha).

***

கதை 4

துவாரகையை கிருஷ்ண பரமாத்மா ஆண்டுகொண்டிருந்தபோது காரூசா தேசத்தை பெளண்ட்ரக வாசுதேவ ஆண்டுகொண்டிருந்தார். தான்தான் உண்மையான வாசுதேவ என்றும் ஆகையால் கிருஷ்ணர் வந்து தன்னை வணங்க வேண்டும் என்றும் அவர் தூதனை அனுப்பினார். கோபமடைந்த கிருஷ்ணன், சுதர்சன சக்ரத்தை ஏவி அவனது தலையைத் துண்டித்தார் ; அவனுடைய மகன், சுதட்சிணன் , கிருஷ்ணரை எதிர்க்கும் சக்தியைப் பெறுவதற்கு  காசி மா நகருக்குச் சென்று சிவ பெருமானை நோக்கித் தவம் இயற்றினார்; சிவ பெருமானும் அவன் முன்தோன்றி கிருத்யாவைஉண்டாக்கும் மந்திரத்தை உபதேசித்தார் அவன் யாகத்தியிலிருந்து கிருத்யாவை எழுப்பி கிருஷ்ணன் மீது ஏவினான்; அவர் தனது சுதர்சன சக்ரத்தைக் கொண்டு சுதட்சிணனையும் கிருத்யாவையும் வீழ்த்தினார். 

***

கதை 5

நாராயணனை மட்டுமே வணங்குவேன் என்று சொன்ன இளம் வயது மகன் பிரகலாதனின் மனத்தை மாற்ற, அவனது தந்தை ஹிரண்யகசிபு பல அசுர குருமார்களை அனுப்பினான் . அவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெறாத போது ‘தீயில் பொசுக்குவேன், விஷத்தைக் கொடுப்பேன்’ என்றெல்லாம் ஹிரண்யகசிபு பயமுறுத்தினான்; இறுதியில் அசுரர்கள் தீயை வளர்த்து ஒரு கிருத்யாவை  உண்டாக்கி ஏவினார்கள்; அந்த கிருத்யா எறிந்த சூலம் பிரகலாதனின் தொண்டையில் பட்ட போது சுக்கு நூறாக உடைந்தது ; கோபம் அடைந்த கிருத்யா , ஏவி னோர்

மீதே பாய்ந்தது; அவர்கள் அனைவரும் மயக்கம் அடைந்தனர் ; கருணை கொண்டு பிரகலாதன்,  அவர்களைத் தொடவே அவர்கள் உயிர் பெற்றனர். (Viṣhṇu Purāṇa, Part 1, Chapter 18) இது விஷ்ணு புராணத்திலுள்ள கதை.

கதை 6

சிவ புராணத்திலும் ஒரு கதை உள்ளது  Śivapurāṇa 2.5.20 .

சலந்தரன் என்னும் அசுரன் கைலாசத்தை முற்றுகையிட்டான் ; இதைக் கேட்ட சிவபெருமான் ருத்ரனாக மாறினார் ; அவருடைய வாயிலிருந்து ஒரு கிருத்யா உருவானது ; அதனுடைய வாய் குகை போன்று இருந்தது ; கால்கள் பனை மரம் போல இருந்தன; அவளுடைய முலைகள் மரங்களை வீழ்த்தின ; அது விரைந்து சென்று அசுரர்களை விழுங்கியது.

இந்தக் கதைகளை படிக்கும்போதுதான் , ஓரிரு இடத்தில் மட்டும் ரிக் வேதம் குறிப்பிடும் கிருத்யாவின் கோரா தாண்டவம் நமக்கு விளங்குகிறது .

To be continued…………………..

Tags- கிருத்யா , ராக்ஷஸி, பேய், ஆறு கதைகள், உலகத்திலேயே அதிசயமான, திருமண வாழ்த்து- Part 2

Prostitution in Ancient Tamil Nadu; Parattaiyar or public women in Narrinai (Post No.15,663)

Compiled by London Swaminathan

Post No. 15,663

Date uploaded in London –27 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(Narrinai is one of the anthologies in Sangam Tamil Literature)

From HISTORICAL HERITAGE OF THE TAMILS

K K PILLAY, MJP PUBLISHERS, CHENNAI, 1979

“Karpiyal or the wedded life of the married couple invariably followed Kalaviyal. Theoretically the observance of a moral code in conjugal relationship was enjoined on men no less than on women. But there seems to have existed a gulf between theory and practice. Man appears to have often deviated from the lawful path. According to the prescribed tradition of the Tamils ideal love is of the AINTINAI type. Both Kaikkilai and Perundinai were not suited for the higher sections of society. One form of Perundinai was man’s relationship with Parattaiyar or public women. Therefore, connections with Parattaiyar or concubines was looked down upon as unnatural and unbecoming of elegant men. Tolkappiyanar and Tiruvalluvar condemn this illicit relationship in unmistakable terms. Nevertheless, Narrinai no less than the other classics of love, reveals, in actual practice harlotry has become a well-established institution; several men fell victims to the paramours of the public women .

It is notable that during the period of pregnancy and confinement of the wife the man was inclined to seek sexual indulgence at the hands of Parattaiyar 53. It was but natural that the lawfully wedded wife became furious when she came to know about it. Public opinion, too, condemned  such immoral relationship. The Panan ( paanan)  and Virali served as the mediators between the man and the Parattaiyar. Later, too, when the wedded wife protested and evince her wrath the Panan tried to intervene and restore cordiality between the husband and wife 54.

Often there sprang up acute rivalry and ill feeling between the Parattai and who had enticed the man and his lawful wife. There is an interesting instance of a Parattai inciting the hatred of the wife against her husband by causing his attachment to herself to be made known to the wife. 55

She sent the word that it was he , who, out of infatuation had seized her sweet smelling tuft of hair. Evidently the Parattai wanted to sow discord between the man and his legitimate partner so that he permanently come under her own influence.  A more or less similar idea is found in stanza 225 in which it is stated that the Parattai openly accused the man  for having voluntarily sought her association.

In one case on behalf of the mistress her companion burst out furiously against the week minded man who had fallen a victim to the amours of a Parattai, and she scornfully asked him to gratify his physical lust as he liked and never to return to the house of his mistress. Even more attesting is the righteous indignation of a devoted wife who refused to touch her husband on account of  his association with Parattai. She reproached him by saying that touching of a person who had illicit connection with a Parattai is like touching the discarded pots.56

Parattayar seems to have vied with each other  in winning the affliction of affluent men. Unseemly quarrels and bitter rivalry arose between two Parattayar who competed in capturing the heart of  one and the same person. Certain stanzas 57 of Narrinai refer to the piquant situations which arose when a Parattai who had won the heart of a man found to her utter discomfiture that a rival had entered the field.

It is notable that among the Parattayar there are two categories known as Cherri Parattai and Kadal Parattai- (kaadal). The Cherri Parattai appears to have been a public harlot, while the Kaadal Parattai preferred to have relationship with a single individual of her choice. More often than not, she led virtuous life characterised by fidelity to the chosen person. Little wonder than, of the two classes the Kaadal Parattai occupied a higher social position than the Cherri Parattai.

On the whole it is clear that Parattayar constituted stain on society. married women sedulously tried to protect their husbands from the seductions of Parattayar.58

While recognising the existence of this foul institution it would be improper to over emphasise the position it occupied. It is of supreme importance to realise that the Parattayar have received a great attention at the hands of the poets because of the piquant situations which arose when dealing with men. From the number of stanzas devoted to the handling of themes connected with Parattayar it would be totally improper and unfair to exaggerate the role played by them in social life of the day. Indeed, it would not be too much to say ti was because of social disapprobation that poets found a special interest in handling of themes connected with this blot on society.

An outspoken characterisation, breathing a bitter condemnation of this social stain is of a piece with the forthrightness of the poets. It is because society has built up some standards of conduct that deviations from them  received an excessive  and almost a disproportionate attention at the hands of the poets of the age. False conversions of depicting the rosier side of life and ignoring the darker one was totally alien to the tendencies of those times.

Narrinai References

53- Narrinai stanza 380

54- stanza 30

55- stanza 100

56- stanzas 350, 260, 340, 360

57- stanzas 300, 320

58- stanza 20.

***

P T SRINIVASA IYENGAR ON TAMIL PROSTITUES

Tamil historians and Tamil scholars are scared to touch this subject . P T Srinivasa Iyengar in his book HISTORY OF THE TAMILS devote only nine lines in a book of 635 pages! So scared to touch this topic. He says,” Married life though commenced under such auspices, often did not run on even course. Post nuptial love was often put to a temporary or permanent end by the wiles of harlots who seduced husband from the path of faithfulness to the wedded wife. The instruction of harlotry- parattamai- was peculiar to the agricultural tracts, for during the periods of enforced idleness when the grain is ripening in the fields and when the fields lying fallow after harvest Satan finds some mischief for idle hands to do.”

***

Dr S Ramakrishnan on Tamil Prostitutes

Out of 966 Karpial (Family life) poems, 279 poems are about Parattai (prostitutes, harlots or public women). If we take it literally it appears that Tamil society consists of 50 percent prostitutes and 50 percent family women. But it is obvious that did not exist in any society. So, it will be a blunder to consider these imaginary scenes as actual portrayal of the society.

(English translation is mine)

***

My comments

Prostitution existed in all societies, cultures. One should not exaggerate it out of proportion. Foreigners took one reference in the Vedic literature about any bad thing and wrote absurd things in volumes. We must always remember this.

Word prostitute came from Sanskrit word Para Stri /other woman; and the Tamil word Parratai is also derived from this Para Stri. But there are many words in Tamil and English to describe public women.

***

Tiruvallluvar on Public Women

CHAPTER 92

PROSTITUTES

911. Behold the women that desire a man for the sake of his gold and not for the sake of love : their cajoleries will lead only to misery.

912. Behold the women who speak honeyed words, but whose thoughts are ever fixed on their own profit : consider their ways and keep them at a distance.

913. The prostitute pretendeth love when she embraceth her lover : but in her heart she feeleth even as one who hath touched a stranger dead body in a dark room.

914. Behold the men whose hearts are inclined to deeds of purity: they defile themselves not with the touch of harlots.

915. Behold the men who add deep study to a clear understanding: they defile themselves not with the touch of women whose charms are free to all.

916. Behold the men that have a regard for their own good : they touch not the hand of wantons who put up their lewd charms for sale.

917. Behold the men who are light-minded: they will seek the women who embrace with the body while their heart is somewhere else.

918. Behold the men who have not a discriminating understanding : the embraces of wily women are to them even as the fascination of the siren of the solitudes.[1]

919. The soft arms of the well-decked harlot are the filthy ditch wherein contemptible fools drown themselves.

920. Women of two hearts, drink, and the dice-table, these are the delights of men when fortune forsaketh them.

–subham—

Tags-  Tamils, Sangam Age, Prostitution, Parattai, Harotry, concubines,Narrinai, KK Pillai, PTS, Prostitution , Ancient Tamil Nadu, Public women,  Tiruvalluvar, Tirukkural , SRK

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-6 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,661)

Written by London Swaminathan

Post No. 15,661

Date uploaded in London –27 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 6

திரு ஆதனூர்

சுவாமிமலை ஸ்டேஷனிலிருந்து சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது. இந்தக் கோவில் ஸ்ரீ அஹோபில மடத்து நிர்வாஹத்தில் உள்ளது.

மூலவர் – ஆண்டாளக்குமையன், புஜங்கசயனம், தலையின் கீழ் மரக்காலும் இடது கையில் ஓலை எழுத்தாணியும் காண்கின்றன, கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – ரங்கநாயகி.

தீர்த்தம் – ஸ¨ர்யபுஷ்கரிணி.

விமானம் – ப்ரணவ விமானம்.

ப்ரத்யக்ஷம் – திருமங்கையாழ்வார், காமதேநு

திருக்கோலம்- கிடந்த (புஜங்க சயனம்)

திசை –     கிழக்கு

விசேஷம் – பெருமாளுடைய பாதாரவிந்தங்களில் திருமங்கையாழ்வாரும், காமதேநுவும் உள்ளனர்.

இப்பெருமாளை ‘ஆதனூர் ஆண்டளுக்கும் ஐயன்’ என்பர்.

மங்களாசாஸனம் – திருமங்கையாழ்வார் – 2674 (130) – 1 பாசுரம்.

திரு ஆதனூர் பாசுரம்

பாசுரம் (பெரிய திருமொழி 2.6.4):

என்னை மனங்கவர்ந்த ஈசனை – வானவர்தம்

முன்னவனை மூழிக்களத்து விளக்கினை

அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை

தன்னைத் தலைக்கண்டு கொண்டேன்-தன்னை.”

பொருள்: அடியவர்களின் மனதை கவர்கின்ற ஈசனும் (பரமாத்மா), தேவர்களுக்கெல்லாம் முதன்மையானவனும், மூழிக்களம் என்னும் திவ்யதேசத்தில் விளக்காய் இருப்பவனுமான, திருஆதனூரில் அடியவர்களை ஆண்டருளும் ஐயனை (தலைவனை) நான் கண்டு கொண்டேன்.

–subham—

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-6 , திவ்யதேசம், லண்டன் சுவாமிநாதன் படங்கள் , Part 6, திரு ஆதனூர்

கடவுளுக்காக ஏங்கு: உனக்கு ஒரு வழி கிடைக்கும்! பிரார்த்தனை செய்: உனக்கு இறைவனின் கருணை கிடைக்கும்!! (Post.15,660)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,660

Date uploaded in London – 27 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கடவுளுக்காக ஏங்கு: உனக்கு ஒரு வழி கிடைக்கும்! பிரார்த்தனை செய்உனக்கு இறைவனின் கருணை கிடைக்கும்!! 

ச. நாகராஜன்  

31-8-1981 அன்று சத்யசாயி ஆடிடோரியத்தில் ஶ்ரீ சத்ய சாயிபாபா நிகழ்த்திய உரை:-

 தெய்வீகம் இல்லை என்றால் எல்லாமே அரக்கத்தன்மையாக இருக்கும். ஆகவே, ஆசிரியர்களும் மாணவர்களும் கடவுளிடம் நம்பிக்கை வைத்து கடவுளை தைரியமாக அழைக்க வேண்டும்; பிரார்த்தனை புரிய வேண்டும். அது நமது எல்லையிலிருந்து அரக்கத்தன்மையை துரத்தி அப்புறப்படுத்தும்.

கடவுளை பிரார்த்திக்காமல் இருப்பது என்பது வெளிவேஷம் தான்! பரிட்சையின் போது ஒவ்வொரு மாணவனும் இறைவனைப் பிரார்த்திக்கிறான். துன்பங்கள் நேரும் போதும், நஷ்டங்கள் ஏற்படும் போதும், குடும்ப உறுப்பினர்கள் வியாதியினால் பீடிக்கப்படும் போதும், உயிருக்கே ஆபத்து என்கின்ற போதும் அவர்கள் பிரார்த்தனை புரிகிறார்கள். ஆகவே எதற்காக வீணான கர்வத்திற்கு ஆளாகி, கடவுளைத் தொழ மறுக்கவேண்டும். இது வெறும் வெளி வேஷம் தான்!

 படித்த அறிவாளிகளின் இன்னொரு குணாதிசயம் அவர்களது கர்வம் தான். அகம்பாவம் என்ற மகுடத்தை அணிந்து கொண்டு அவர்கள் அலைகிறார்கள். அனாத்மாவிடமிருந்து ஆத்மாவை கர்வம் என்ற சுவரே தடுத்து ஒளித்து வைக்கிறது. சத்யத்திற்கும் அசத்யத்திற்கும் இடையில் திரையாக இருக்கிறது. தெய்வீகம் உருவெடுக்கவும் ஐக்கியமான தன்மை அறியப்படவும் இந்தத் தடை அகற்றப்பட வேண்டும். மாணவர்கள் பலர் இந்த நோயை தங்களிடம் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் உடல் அழகு, கல்வியில் மேன்மை, பண பலம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவற்றை அகற்ற அவர்கள் விழிப்புணர்வு கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.

 முன்னொரு காலத்தில் சாக்ரடீஸிடம் ஒரு மாணவன், “ஐயா! கடவுள் மனிதனுக்கு அவன் வாழ நூறு வருடமே கொடுத்திருக்கிறார். ஆனால் அபூர்வமாகவே அவன் அவ்வளவு காலம் வாழ்கிறான்.  25 வருடங்கள் குழந்தைப் பருவத்திலும் இளமையிலும் போய் விடுகிறது. அடுத்து 25 வருடங்கள் குடும்பத்திலும் சமூக நிகழ்ச்சிகளிலும் போய் விடுகிறது. அடுத்த 25 வருடங்கள் சொத்துக்களை குழந்தைகளுக்குப் பிரிப்பதிலும் அவற்றை அவர்களுக்குத் தருவதிலும் போய்விடுகிறது.  75 வயது ஆகி விட்டாலோ அவனை நோய் பீடித்துக் கொள்கிறது அல்லது அவனது மகனையோ அல்லது மகளையோ இழப்பதினால் துக்கம் அவனை ஆட்கொள்கிறது. அவனுக்கு கடவுளை நினைக்கவே நேரம் கிடைப்பதில்லை.  இன்னும் ஒரு இருபத்தைந்து வருடங்களை அவனுக்குக் கடவுள் கொடுத்தால் அவரைப் பற்றி மட்டுமே நினைக்க ஏதுவாக இருக்கும் இல்லையா? என்றான்.

சாக்ரடீஸ் அவனுக்கு இன்னொரு துன்பமயமான சூழ்நிலையைச் சுட்டிக் காட்டி பதில் கொடுத்தார்.

“மகனே! கடவுள் இந்த பூமி என்ற பெரிய இடத்தை நமக்கு வசிப்பதற்காக அளித்திருக்கிறார். ஆனால் இதில் மூன்று பங்கு கடலால் நிறைந்திருக்கிறது. மீதி ஒரு பங்கிலோ மலைகள், பாலைவனம், ஏரிகள், காடுகள் ஆகியன உள்ளன. வாழ்வதற்கு எனக்கு இடமே இல்லை” என்று சொல்லி விட்டு சாக்ரடீஸ் அழ ஆரம்பித்தார்.

 உடனே மாணவன் அவருக்கு ஆறுதல் கூறினான்: “ ஏன் இல்லை? கோடிக்கணக்கானவர்கள் பூமியில் வாழும் போது உங்களுக்கும் ஒரு இடம் நிச்சயம் கிடைக்கும்” என்றான் அவன்.

 சாக்ரடீஸ் கூறினார்: “கோடிக்கணக்கான எண்ணங்கள் உன் மனதை ஆக்ரமிக்கும் போது, மகனே, உனக்கும் நிச்சயம் கடவுளை நினைக்க  நேரம் இருக்கும். சோம்பேறிகள் தாம் கடவுளை நினைக்க நேரம் இல்லை என்று புகார் செய்வார்கள்.”

கடவுளுக்காக ஏங்கு: உனக்கு ஒரு வழி கிடைக்கும்! பிரார்த்தனை செய்: உனக்கு இறைவனின் கருணை கிடைக்கும்!!

நிரந்தரமான அடிப்படைகளுக்கும் நிலையற்றவையாக மதிப்பற்றவையாக இருப்பவைக்கும், உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளும் அரிய விஷயத்தை அனைவரும் அறியுமாறு செய்தல் வேண்டும்.

**

Tirukkural Encyclopaedia- Chapter 1 (Kural 1 to 5) Post.15,659

Written by London Swaminathan

Post No. 15,659

Date uploaded in London –26 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Tamil Veda Tirukkural in English Translations Compiled by London Swaminathan – Chapter 1

Tamil Scholar Ki Va Jagannathan has given us he commentary of five old commentators on Tamil Veda Tirukkural in his massive volume running to 950 pages, published by Ramakrishna Mission Vidhyalayam, Coimbatore. But English translations by several translators are scattered. I am trying to put them together. In the past fifty years a lot of corrupted Tamil translations are published by politically oriented Tamils. But English translations are not that corrupted. They are more reliable.

I am compiling translations from at least six translators cum commentators.

To avoid repetitions and to save space I use the following abbreviations for authors.

Tiruvalluvar, author of Tirukkural, was a pukka, ardent Hindu and a great master of Bhagavad Gita. In the first chapter he praised GOD and so he was neither a Buddhist nor a Jain. Buddha never spoke about God and Jains were atheists. Tiru Valluvar used Bhagavad Gita in the first couplet Aksharaanam Akaarosmi (among the alphabets I am A)  from the Gita. He also used Gita’s Samsaara Saagaram in the last couplet of the first chapter.

Through out his book Valluvar used Dwanthwa/opposites found in Bhagavad Gita: like and dislike, this birth and future birth, earth and heaven, Day and Night etc

No person from Abrahamic religions (Jew, Christian, Muslim) will support Tiru Valluvar because he quotes FEET OF GOD in Seven out of ten couplets in the first Chapter. He belonged to fifth century CE according to linguists. His style and syntax placed him in Post Sangam era.

Neither Mahavir nor Buddha used SEA much because they were born and preaching in land locked regions of India. But Valluvar like Vedas, use sea even in the very first chapter.

God is incomparable, Peerless One are in Vishnu Sahasranama and Upanishads.

****

Following Translations are used:

1.V R Ramachandra Dikshitar- VRR, year 1949

(followed Aranganatha Mudaliyar’s translation that was published in 1933. See (ANM+2) )

2.GU Pope – GUP. Year 1886

3.Suddhananda Bharathiyar- SB

4.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

5.EVS Publishers, Singapore- EVS. Year 1986

6.S M Diaz, I G of Police- SMD Year 2000

H A Popley – HAP (not full book) Year 1931

Mrs Tirunavukkarasu, Jaffna (not full book)

Wherever possible, I will add more translations.

****

In Praise of the Lord

1.A is the first stir in the world of sound; even so the Eternal Adorable One is the prime impulse of all creation A Aranganatha Mudaliyar – (ANM+2)

**

1.All alphabets have the letter (A) for their first, so has the world eternal God for its beginning– EVS Publishers, Singapore- (EVS)

**

1.All the letters have the letter A as their origin; this world has God as its origin- V R Ramachandra Dikshitar- (VRR)

**

1
A, as its first of letters, every speech maintains;
The “Primal Deity” is first through all the world’s domains.
As the letter A is the first of all letters, so the eternal God is first in the world. .(GU Pope)

**

Verse 1 “A” is the first and source of all the letters. Even so is God Primordial the first and source of all the world. (.Suddhananda Bharathiyar- SB)

**

1.The alphabet begins with A ;

So does the universe, with God -S M Diaz (SMD)

**

1.As letters all are based on A

The world is based on God – the First – H A Popley – HAP

**

திருக்குறள் கடவுள்வாழ்த்து

குறள் 1:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

**

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

2. Of what avail is one’s vast learning, if one adores not the holy feet of Him who is the pure light of wisdom– (ANM+2)

**

2.Of what avail is a man’s learning if he does not pray to God. (EVS)

**

2.Of what avail is learning, if the learned do not adore the good feet of Him who is of immaculate wisdom? (VRR)

**

2.
No fruit have men of all their studied lore,
Save they the ‘Purely Wise One’s’ feet adore.
What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ? .(GU Pope)

**

Verse 2 What has learning profited a man, if it has not led him to worship the Good Feet of Him who is pure knowledge itself? (SB)

**

2.Learning and scholarship are of no avail if they do not lead

One to worship at the wise one’s divine feet (SMD)

**

2.What use is lore, if the leaned will not bow

Before the feet of -Him – The All wise One? – HAP

**

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

3.Those who mediate day and night on the sacred feet of the Lord that abides in the lotus shaped region of a devout heart shall endlessly inhabit the heavenly abode – (ANM+2)

**

3.Those who meditate day and night on the sacred feet of the Lord that abides in the lotus shaped region of a devout heart shall endlessly inhabit the heavenly home. (EVS)

**

3.Those who find refuge in the great feet (of Him) who lives in lotus of the heart (of the devotee) live eternally in heaven. (VRR)

**
3.
His feet, ‘Who o’er the full-blown flower hath past,’ who gain
In bliss long time shall dwell above this earthly plain.
They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds. .(GU Pope)

**

Verse 3 The Supreme dwells within the lotus of the heart. Those who reach His Splendid Feet dwell endearingly within unearthly realms. (SB)

**

3.Only those finding last life that that contemplate on Him,

Who has made the blossomed mind His abode (SMD)

**

3.They’ll live for ever in the land above

Who cling to Him that bides in lotus-hearts– HAP

**

குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

4.
His foot, ‘Whom want affects not, irks not grief,’ who gain
Shall not, through every time, of any woes complain.
To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come. .(GU Pope)

**

4.No ills of life ever touch those that alone cling to the feet of Him who is beyond the world of lies and dislikes (EVS)

**

4.No ills of life ever touch those that cling to the feet of Him who is beyond the world of likes and dislikes – (ANM+2)

**

4.Those who have attained the feet of Him who has likes or dislikes will be rid of all troubles. (VRR)

**

Verse 4 Draw near the Feet of Him who is free of desire and aversion. And live forever free of suffering. (SB)

**

4.No evil shall ever come to those who have contemplated,

Of Him who is above human frailties of desire and hatred (SMD)

**

4.Trouble shall never come to those

Who cling to the desireless One– HAP

**

குறள் 4:

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

5. Deeds, good or evil, that spring from darkness shall not affect those who gloriously sing the praises of the Lord – (ANM+2)

**

5.Deeds, good or evil, that spring from darkness shall not affect those who gloriously sing the praises of the Lord (EVS)

**

5.Actions, both good and bad that spring from darkness of the mind will never touch those who ever chant the glories of the Lord-(VRR)

**
5.
The men, who on the ‘King’s’ true praised delight to dwell,
Affects not them the fruit of deeds done ill or well.
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God. .(GU Pope)

**

Verse 5 Good and bad, delusion’s dual deeds, do not disturb Those who delight in praising the immutable, worshipful One. (SB)

**

5.Th twin deeds of dark illusion, will not affect

Those who delight meaningfully in God’s praise (SMD)

**

5.The twain dark deeds shall never be theirs,

Who give the Lord His rightful praise– HAP

**

குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

To be continued …………………………………..

–subham—

Tags-Tirukkural Encyclopaedia, Chapter 1,Tamil Veda, English Translations, Compiled by, London Swaminathan – Chapter 1, God, In praise of God, Kural 1 to 5, Valluvar image

உலகத்திலேயே அதிசயமான திருமண வாழ்த்து!- Part 1 (Post No.15,658)

Written by London Swaminathan

Post No. 15,658

Date uploaded in London –26 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 ரிக் வேத திருமண மந்திரத்தில் 19 வேத கால கடவுள்கள்! மணப்பெண், வீட்டின் மஹாராணி ஆக வாழ்த்து!!

ரிக்வேத திருமண மந்திரத்துக்கு சூர்யா சூக்தம் என்று பெயர்;  பத்தாவது மண்டலத்தில் 85 ஆவது மந்த்ரம் இது .

ரிக்வேத கல்யாண மந்திரத்தை பிராமணர் வீட்டுக் கல்யாணங்களில் இன்றும் கேட்கலாம் ; அதில் 19 வேத காலக் கடவுள்களைத் துதித்துவிட்டு இறுதியில் “மணமகளே நீதான் புகுந்த வீட்டுக்கு அரசி! அங்குள்ள மச்சினி மச்சினன் (மைத்துனன், மைத்துனி ) மாமனார் மாமியார் எல்லோருக்கும் நீதான் ராணி!! என்று வாழ்த்திவிட்டு இறுதியில் அதி மதுரமான,  ரொம்ப சுவையான  ஒரு வாழ்த்தினையும் ஐயர்கள் மந்திரத்தில் ஓதுகிறார்கள் ;நீ பத்து குழந்தைகளைப்  பெற்றுக்கொள்வாயாக ; உனது கணவன் பதினோராவது குழந்தை ஆகட்டும் !”

இதை ஒரு ஜோக் போல எல்லோரும் சிரித்துக்கொண்டே கேட்பார்கள் ; உண்மையில் இது பெரிய மனோதத்துவ , உளவியல் கூற்று Psychological statement ஆகும்.

ஒரு மணப்பெண் குழந்தை பெறும் வரை, கணவனை நூறு சதவிகிதம் நேசிப்பான் ; குழந்தை பிறந்தவுடன், அது ஐம்பது சதமாகக் குறைந்து விடும்; சில ஆண்களைப் பெற்று , அவர்கள் கொஞ்சம் வளர்ந்து விட்டாலோ, அப்புறம் கணவனைப் பக்கத்தில் கூட விடமாட்டாள் ; இன்னும் சொல்லப்போனால் கணவனைக் கவனிப்பது சமையல் அறை  சாப்பாட்டுடன் நின்றுவிடும்; இதை அனுபவத்தில் உணர்ந்த  வேத கால  இந்துக்கள் பெண்ணே , நீ எத்தனை குழந்தை பெற்றாலும் அந்தக் குழந்தை வளரும்வரை எப்படிக் கண்ணும் கருத்துடன் கவனிப்பாயோ, வளர்ப்பாயோ அப்படி உன்னுடைய கணவனையும் கண்ணும் கருத்துடன் கவனிக்க வேண்டும் ; அது மட்டுமல்ல ; நீ பத்துக் குழந்தை பெற்றாலும் கூட இதுவே உனக்கு கட்டளை ! நீதான் புகுந்த வீட்டுக்கு அரசி என்றெல்லாம் புகழ்ந்து தலையில் டன் கணக்கில் ஐஸ் வைத்துவிட்டு இதையும் மந்திரத்தில் சேர்த்துவிட்டார்கள்! 

நிறைய அரைவேக்காடுகள் வெள்ளைக்காரன் எழுதியதை படித்துவிட்டு வேத காலக் கடவுளரை யாரும் வணங்குவதில்லை என்று பிதற்றுவார்கள் ; இப்படிச் சில பிராமணர்களும் கூட எழுதுவதைக் கவனித்திருக்கிறேன் ; அதுகள் எல்லாம் தினசரி சந்தியா வந்தனம் செய்யாத கேஸுகள்; அதுமட்டுமல்ல தர்ப்பணம், திதி, மற்றும்  சில அடிப்படை ஹோமங்களைக்கூட அறியாத அபத்தங்களாக இருக்கும் ; அதுகளை மறந்துவிட்டு சுவையான கல்யாண விஷயத்துக்கு வருவோம் .

***

19 கடவுளர்கள்! யார் அவர்கள்?

அக்னி, இந்திரன், பகன் , வாயு , அஸ்வினி தேவர்கள், வருணன், கந்தர்வன், விசுவாவசு, பூஷன், புரந்தி, சோமன் / சந்திரன், சூர்யா, அர்யமான், மாதரிஸ்வான், தாத்ரு, த்வஸ்த்ரீ , ரைபி, நாராசம்சி, ஸவித்ரு.

***

47 மந்திரங்கள்

இந்த கல்யாண மந்திரத்தில் 47 மந்திரங்கள் உள்ளன.

ஒரு காலத்தில் எல்லா ஜாதியினரும் இதை பின்பற்றியிருக்க வேண்டும் ; ஏனெனில் பூணுல் போடுவது பற்றி ஜாதி வாரியாகக் குறிப்பிடும் மனு ஸ்ம்ருதி, திருமணம் பற்றி ஜாதிவாரியாகக் குறிப்பிடவில்லை ; மேலும் மனு ஸ்ம்ருதி சொல்லும் எட்டு வகைத் திருமணங்களைக் குறிப்பிடும் தொல்காப்பியமும் ஜாதிவாரித் திருமணம் பற்றிச் சொல்லவில்லை .

ஸ்வயம்வரம், காதல் முதலியானவற்றுக்கும் இறுதியில், எல்லோரும் இப்படிச் சடங்குப்படி திருமணம் செய்திருக்கலாம் .

தீயை வலம் வந்து திருமணம் செய்தல் பெண்கள் அணிந்த தாலி ஆகியன பற்றி சங்கத் தமிழ் நூல்களிலும் பாடல்கள் உள்ளன .

***

சங்க காலத்தில் தாலியும் தீ வலமும்

தீ வலம்- குறுந்தொகைப் பாடல் 106; சிலப்பதிகாரம்

தாலி- புறநானுறு 127;  நெடுநல்வாடை 136, 137

திருமண விருந்து வானோர் அமுதம் போல இருந்தது என்று தொ ல்காப்பியமும் சம்ஸ்க்ருத அமிர்தம் பற்றிச் சொல்வதால் (தொல். கற்பு 5)  வேத கால வழக்குகள் தமிழ்நாட்டில் தொல்காப்பியர் காலத்தில் இருந்ததை அறிகிறோம் ; மேலும் தொல்காப்பியர் மனு ஸ்ம்ரிதி சொல்லும் எட்டு வகைத் திருமணத்தை அப்படியே சொல்வதையும் நினைவிற் கொள்ளவேண்டும் .

***

வேத கால மணப்பெண்  ரதம்

இப்போதெல்லாம் மாப்பிள்ளை ஊர்வலம் நடக்கிறது ; ஆனால் வேத காலத்தில் பெண், ஊர்வலமாக மணமகன் வீட்டுக்குச் சென்ற செய்தி மட்டுமே உள்ளது ; அது மட்டுமல்ல தாவரவியல் பிரியர்களான  வேத கால மக்கள் அந்த ரதம் எந்த மரங்களினால் செய்யப்பட்டன என்று செய்தியையும் கூறுகிறது! கிம்சுக மரத்தினாலும் சால்மலி மரத்தினாலும் அந்த ரதம் செய்யப்பட்டது; மேலும் அந்த ரதத்தினை இரண்டு மாடுகள்தான் இழுத்துச் சென்றன ;  அந்தக் காலத்தில் எல்லோருக்கும் Botany பாட்டனி பாடத்தில் புலமை இருந்தது வேறு பல மரங்கள் பற்றிய வேதப் பாடல்களிலும் தெரிகிறது.

 சதஸ் ( அவை)  மண்டபத்தில் அத்தி (உடும்புரா) மரத்தை நடும் மந்திரம் விரிவாக உளது; விஸ்ணு ஸஹரநாமத்திலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆல், அத்தி அரச மரசம் ஆகிய மூன்றினையும் விஷ்ணுவின் பெயர்களாகச் சூட்டியதைக் காண்கிறோம்

ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் ஏனெனில் ஐரோப்பாவில் சில தடயங்கள் உள்ளன என்று புஸ்தகங்கள் எழுதிய வெள்ளைக்கா ரர்கள் திருமணச் சடங்கினையோ இறுதிச் சடங்கினையோ உதாரணம் காட்ட முடியவில்லை ; ரிக் வேதத்தில் உள்ள நூற்றுக் கணக்கான செய்திகளுக்கு இந்தியாவுக்கு வெளியே ஒரு எடுத்துக்காட்டினையும் அவர்களால் காட்ட முடியவில்லை ; ஈரான் என்னும் பாரசீகத்தில் கூட இந்தச் சடங்குகள் இல்லை ; இதிலிருந்து தெரிவது என்ன வென்றால் இங்கிருந்து பல திசைகளிலும் சென்ற இந்துக்கள் சில ஆயிரம் ஆண்டு இடைவெளியாலும் வாழும் இடத்திலுள்ள பருவ நிலையாலும் சில சடங்குகளை மட்டும் அங்கே செய்தனர் என்றே தோன்றுகிறது .

***

ரிக் வேத கால காதல் திருமணங்கள்

சங்க இலக்கியத்தில் பார்ப்பது போல காதல் திருமணங்கள் அதிகம் நடந்தது தெரிகிறது; சமன என்னும் பொது விழாக்களில் இளம் சிட்டுகள் சந்திப்பதும் காதல் வலையில் விழுவதும் பல மந்திரங்களில் வருகிறது. சங்க இலக்கியம் போலவே மணப்பெண்ணின் சகோதரனின் அனுமதியும் ஆதரவும் வலியுறுத்தப்பட்டுள்ளது பெற்றோர்களே பார்த்து மணமகனைத் தேர்நதெடுத்த செய்திகளும் உள்ளன . அசுரர் வகைத் திருமணங்களும் நடந்தன இது தொல்காப்பியர் சொல்லும் எட்டு வகைகளில் ஒன்று .

பீஷ்மர் , காசிராஜனின் மகள்களைக் கடத்தி வந்ததும் கிருஷ்ணர் ருக்மிணியைக் கடத்தி வந்ததும் , கிருஷ்ணனின் மகன் சம் பா, துரியோதனன் மகளைக் கடத்தி வந்ததும் இதிஹாச காலத்தில் நடந்தன .

இதே போல சுயம்வரம் என்னும் திருமணங்களையும் தமயந்தி திரவுபதி முதலிய திருமணங்களிலிருந்து அறிகிறோம்

***

பாணி கிரஹணம் / கைத்தலம் பற்றுதல்

இதை ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழி வரை காண்கிறோம். இன்றும் பிராமண கல்யாணப் பத்திரிகைகளில் இந்த ரிக்வேதச் சொல் வருகிறது; ஆகையால் கணவனும் மனைவியும் கை கோர்ப்பதுதான் திருமணத்தின் முக்கியச் சடங்கு என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வருகிறது ; இதை ரிக் வேதம் ஹஸ்தக் கிராப – கைகளைப் பற்றுதல் – என்று சொல்கிறது.

மணப்பெண் என்பவள் மங்களத்தின் சின்னம்/ சுப அறிகுறி , அவள்தான் வீட்டுக்கு அரசி என்று அவளைப் புகழும் மந்திரங்கள் பல உள்ளன.

***

க்ர்த்யா என்னும் பேய் / அணங்கு

தீய சக்திகளை, அரக்கி போன்ற கிரத்யாவை அகற்றும் வழிகளையும் சில மந்திரங்கள் கூறுகின்றன .

தொடரும்……………………..

Tags- உலகத்திலேயே,  அதிசயமான, திருமண வாழ்த்து, கல்யாண மந்திரம், சூர்யா சூக்தம், 19 கடவுளர்கள்,சங்க காலத்தில், தாலியும் தீ வலமும் , மணப்பெண் ரதம்

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-5 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,657)


Written by London Swaminathan

Post No. 15,657

Date uploaded in London –26 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 5

கபிஸ்தலம்  பாசுரங்கள் KAPISTHALA and KAITHAL IN HARYANA

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலம் (திருக்கவித்தலம்) கஜேந்திர வரதப் பெருமாள் கோவிலை, திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரத்தில் (நாலாயிர திவ்ய பிரபந்தம்) மங்களாசாசனம் செய்துள்ளார். “ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன்” என்று இவர் பாடிய பாசுரம் கபிஸ்தலம் தலத்தின் சிறப்பை விளக்குகிறது.

கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ

மாற்றமும் சாரா வகையறிந்தேன்

ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும்

மாயன் உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு

— நான்முகன் திருவந்தாதி (திருமழிசையாழ்வார்)

***

திவ்யதேசம்- திருக்கவித்தலம் / கபிஸ்தலம் / கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம்

மூலவர்   –     கஜேந்திர வரதன் (புஜங்க சயனம்) / ஆதிமூல பெருமாள் / (ஆற்றங்கரை கிடக்கும்) கண்ணன்    

உத்ஸவர் -கஜேந்திர வரதன்   

தாயார்-    ரமாமணிவல்லி / பொற்றாமரையாள் / செண்பகவல்லி

ஆடி மாத பௌர்ணமி அன்று இங்கு நடக்கும் கஜேந்திர மோக்ஷம் ஒரு சிறப்பு.

பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்று. (திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, திருக்கவித்தலம், என்ற நான்கு சோழதேச திவ்யதேசங்களும், நடுநாட்டில் உள்ள திருக்கோவிலூரும் சேர்ந்து பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள் என்று கூறப்படும்).

ஆஞ்சநேயர் இந்த தலத்தில் வழிபட்டதாக வரலாறு. கபி என்றால்குரங்கு என்று ஒரு அர்த்தம் உள்ளது. அதனால் இந்த ஊர் கபி ஸ்தலம் என்று ஆனது.

***

இரண்டு கபிஸ்தலங்கள்

தஞ்சையிலும் பஞ்சாபிலும் கபிஸ்தலம்!! (Post No.8782)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8782

Date uploaded in London – –6 OCTOBER 2020  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

***

Look at the Map: KAPISTHALA IS IN FAR LEFT IN GREEN COLOUR

KAITHAL= KAPISTHALA IS UNDER KURUKSHETRA 

வடக்கில் கிருஷ்ண ஜன்ம பூமியான மதுரா உளது. அதனால் கடல்கொண்ட தமிழ்ச் சங்க மதுராவை ‘தென் மதுரை’ என்று அழைத்தனர் . வடக்கில் இந்துக்களின் மிகப் பழைய புனித ஸ்தலமான காசி உளது. அதனால் தமிழ் நாட்டிலுள்ள காசியை ‘தென் காசி’ என்று அழைக்கிறோம்.. அதே போல வடக்கில் பாடலிபுரம் உளது, தெற்கில் திருப்பாதிரிப்புலியூர் என்று மாற்றிக்கொண்டோம்.  இது போல நிறைய ஊர்கள் தமிழ் நாடு மட்டிலும் இன்றி பல்வேறு இடங்களில் ‘தக்ஷிண கைலாசம்’ முதலியவற்றைக் காண்கிறோம். ஆனால் பாணினி சொல்லும் ஒரு விஷயம் வியப்பானது.

பஞ்சாபிலும் ஒரு  கபிஸ்தலம் இருந்தது. இப்பொழுது அது ஹரியானா மாநில எல்லைக்குள் கைதால் என்ற பெயருடன் விளங்குகிறது!

கும்பகோணத்தின் அருகில் ஒரு கபிஸ்தலம் இருக்கிறது. அங்குள்ள கஜேந்திர வரதர் கோவில் மிகவும் புகழ் பெற்றது ; கஜேந்திர மோட்சம் கதையும் மிகவும் பிரபலமானதே. தமிழ் நாட்டில் திருமோகூர் உள்பட பல வைணவத் தலங்களுடன் இக்கதை தொடர்பு படுத்தப்படுகிறது. அதற்கெல்லாம் முன்னதாக குப்தர்கால சிற்பங்கள் 2000 ஆண்டுகளாக நமக்கு இதைக் காட்டி வருகின்றன.

பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார் என்பதை கோல்ட்ஸ்டக்கர்  (Goldstucker) ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கிறார். ‘பாணினி கால இந்தியா’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிய வி.எஸ்.அக்ரவாலா கி.மு.நாலாம் நூற்றாண்டு என்று சொன்னபோதிலும் அவர் எழுதிய ஒவ்வொரு அத்தியாயமும் அவர் சொல்லும் ஆண்டு ‘தப்பு’ என்று காட்டுகிறது. ஏனெனில்  நாணயம், நடை உடை  பாவனை , அளவுமுறைகள், இலக்கண வழக்குகள் ஆகிய அனைத்திலும் காத்யாயனர், கெளடில்யர் காலத்துக்கும் பாணினி காலத்துக்கும் மிகப்பல வேறுபாடுகளைக் காண்கிறோம். புத்தர், மஹாவீரர் போன்ற பெயர்களையே பாணினியத்தில் காணமுடியாது ஆக 2700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கபிஸ்தலம் இருந்தது உறுதியாகிறது. 

கபிஸ்தலம் என்பது ஸம்ஸ்க்ருதப் பெயர் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது . அது மட்டுமல்ல ‘கபி’ என்றால் குரங்கு என்பதும் தெரிந்ததே. 

முந்தைய பஞ்சாபில் , தற்போதைய ஹரியானா எல்லைக்குள் இருக்கும் கபிஸ்தலம் 2700 ஆண்டுக்கும் முந்தையது என்பதற்கு பாணினி நூலில் சான்றுள்ளது. ஆனால் கும்பகோணம் அருகிலுள்ள கபிஸ்தலம் அவ்வளவு பழமையுடையது அல்ல. அதற்கு கபிஸ்தலம் என்ற பெயர் வந்ததற்கான காரணங்களும் வலுவாக இல்லை. உ’ப்புக்குச் சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை’ என்று ஏனோ தானோ என்று அனுமனையும், வாலியையும் சுக்ரீவனையும் வலிய இழுத்து வந்து தொடர்புபடுத்துகின்றனர் . ஆகையால் வாலி- சுக்ரீவன்- அனுமன் தொடர்புக்கு நல்ல ஆதாரம் கிடைக்கும் வரை பஞசாபுக்கும் இதற்கும் தொடர்பு உண்டா என்று ஆராய்தல் நலம் பயக்கும்.

இரண்டு கபிஸ்தலம் பற்றியும் காண்போம்; ஒப்பிட்டு ஆராய்வோம்.

கைதால்(Kaithal=Kapisthal)  என்பது இப்பொழுது பஞ்சாப் எல்லையில் ஹரியானா மாநிலத்துக்குள் இருக்கிறது. ஆனால் இதன் பழைய பெயர் கபிஸ்தலம் என்பதை எல்லோரும் எழுதுகின்றனர் யுதிஷ்டிரர் இந்த நகரை ஸ்தாபித்தார். அங்கே ஆஞ்சனேயரின் தாயாரான அஞ்சனி தேவிக்கு ஒரு கோவிலும் உளது. இந்த இடத்தில் மட்டுமே சிவனுக்கு 108 கோவில்கள் உண்டு என்றும் அதில் ஒன்று ஏகாதச லிங்கக்கோவில் என்றும் ஊர் மக்கள் பெருமையாகக் கூறுகின்றனர். குருக்ஷேத்திரத்தைச் சுற்றியுள்ள 48 புண்ய ஸ்தலங்களில் கபிஸ்தலம் முக்கியமானது. 48 கோவில்களையும் வல ம் வருவோர் — பரிக்ரமம் செய்வோர்- இங்கு வருவார்கள் . இதையெல்லாம்  பார்க்கும்போது இது மஹாபாரத காலம் முதல் புகழ் பெற்ற ஊர் என்பது தெளிவாகிறது. மேலும் அனுமனின் தாயார் கோவில் இருப்பதால் கபி (குரங்கு) என்ற பெயரையும் தொடர்புபடுத்துகிறது.

இதை கும்பகோணம் அருகிலுள்ள கபிஸ்தலத்துடன் ஒப்பிட்டால் இதில் எந்த ஒரு விஷயத்தையும் காணமுடியவில்லை. கஜேந்திர மோட்சக் கதைக்கு அடுத்தபடியாக, அதற்குச் சம்பந்தமில்லாத வாலி- சுக்ரீவன் – அனுமன் கதையைத்தான் வலுக் கட்டாயமாகச் சேர்க்கின்றனர். ஆகையால் பஞ்சாப்-ஹரியானா கபிஸ்தலம் பெயர், இங்கே எப்படி வந்தது என்பதை  ஆராய்தல் அவசியம். வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பதை துருவி ஆராய்வோம்..

கபிஸ்தலம் பற்றி  பாணினி  மற்றும் கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ்  கூறும் வியப்பான செய்திகள் இதோ :–

கபிஸ்தல என்பதை கோத்திரங்களில் ஒன்றாக பாணினி குறிப்பிடுகிறார்.சூத்திரம் 8-3-91

பொதுவாக ரிஷிகளின் பெயரிலேயே கோத்திரங்கள் பெயர்கள்  அமையும். ஆகையால் கபிஸ்தல என்பதும் ரிஷியின் பெயரே. மெகஸ்தனீஸ் பஞ்சாபிலுள்ள ஒரு மக்கள் குழுவை ‘கம்பிஸ்தலோய்’ என்று அழைக்கிறார். இது கபிஸ்தல என்பதன் மருவு. அலெக்சாண்டரின் படையெடுப்பை எதிர்த்த காடக இனத்தினரோடு அவர்கள் இருந்திருக்கலாம். ஊர்ப்பெயரான கபிஸ்தலத்துடன் தொடர்பில்லாமலும்  இருந்திருக்கலாம்..

 பாணினி அலெக்ஸ்சாண்டருக்கும் அசோகருக்கும் பல நுறு ஆண்டுகள் முன்னால் வாழ்ந்தவர். ஒரு இனமோ, குழுவோ நகர்ந்து முன்னேற முன்னேற அவர்கள் வாழும் நாடோ , ஊரோ , பிரதேசமோ விரிவடைவதைக் காண்கிறோம்.

தமிழ் நாட்டின் கபிஸ்தலத்தோடு ரிஷி பெயரோ இனப் பெயரோ சம்பந்தப்படவில்லை .இரண்டு கபிஸ்தலங்களும் ஆராய்ச்சியாளருக்கு சவால் விடுகின்றன .

XXXX

பாணினியில் பிராமண அதிசயம்!

பிராமணர்கள் உலக மஹா அதிசயம் என்றும் அவர்கள் வாழும் படிம அச்சுக்கள் (Living Fossils) என்றும் பழமையைக் காக்கும் இனம் என்ற வரிசையில் கின்னஸ் புஸ்தகத்தில் அவர்களைச் சேர்க்க வேண்டும் என்றும் நான் நீண்ட கட்டுரைத் தொடர் எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நீண்ட காலம் பழமையான விஞ்ஞான விஷயங்களைக் கடைப்பிடிக்கும் இனம் என்பதைக் காட்டி இருந்தேன் .

சப்த ரிஷி மண்டலம் எனப்படும் பெருங்கரடி நட்சத்திரக் கூட்டத்தில் (Ursa Major= Great Bear)  7 நட்சத்திரங்கள் இருப்பதும் அதிலுள்ள அருந்ததி/வசிஷ்ட நட்சத்திரத்தை முதலிரவு அறைக்குள் நுழைவதற்கு முன்பாக புதுமணத் தம்பதிகள் ‘அருந்ததி காட்டல்’ என்ற சடங்கில் அருந்ததி நட்சத்திரத்தைக் காண்பது பற்றியும் அனைவரும் அறிவர். சங்க இலக்கிய நூல்களில் அருந்ததி வழிபாடு , சப்த ரிஷி வழிபாடு இரண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிராமணர்கள், தினசரி மூன்று முறை சூரிய வணக்கம் செய்வர். இதை ‘சந்தியா வந்தனம்’ என்பர். இதன் இரண்டாவது பகுதியில் நான்கு வேதங்கள் புகழும் காயத்ரி மந்திரம் உளது. அந்த காயத்ரீ தேவதையை இதயத்துக்குள் எழுந்தருளச் செய்ய ஒரு மந்திரம் சொல்லுவார்கள் .

 அப்பொழுது தலையின் முன் பகுதியில் கையை வைத்துத் தொட்டு, ஏழு ரிஷிகளின் பெயர்களைச் சொல்லுவர். (இதை நானும் லண்டனில் தினமும்  செய்து வருகிறேன்.) அதில் நாங்கள் சொல்லும் ரிஷிகளின் பெயர்கள் ஏழும் அதே வரிசையில் 2700 ஆண்டுகளுக்கு முந்தைய பாணினியின்  வியா கரணத்தில் வரிசை மாறாமல்  உளது.

இதோ அந்த சூத்திரம்—

சூத்திரம் 2-4-65-ல் அவர் சில இலக்கண விதிகளை விளக்குகிறார்.

‘அத்ரி ப்ருகு குத்ஸ வசிஷ்ட கோ த்தமாரங்கிரேப் ய ஸ் ச’

என்கிறார். அவர் விளக்கும் இலக்கண விதிகளை நாம் இப்போது அலச வேண்டியதில்லை.

இதே வரிசையில் தான் பிராமணர்கள் தினசரி மூன்று முறை 7 ரிஷிகளின் பெயர்களைச் சொல்கிறா ர்கள் —

அத்ரி, பிருகு, குத்ஸ, வசிஷ்ட, கெளதம, காஸ்யப, ஆங்கிரஸ என்பன அந்த 7 ரிஷிக்கள். சில பகுதிகளில் பெயர்கள் ஒன்றிரண்டு மாறுபட்டிருக்கும் . அதே கோத்திரத்தைச் சேர்ந்த ரிஷி என்பதால் பெயர் வரிசையில் மாறுதல் இல்லை.

ஆக 2700 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமணர்கள் சப்த ரிஷிக்களின் பெயர்களை ஒரே மாதிரியாகச் சொல்லி  வணங்கி வருகின்றனர்.

–சுபம்–

TAGS – பிராமணர்கள், அத்ரி ப்ருகு குத்ஸ, கபிஸ்தலம், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-5 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள் Part 5, கபிஸ்தலம் பாசுரம், Kaithal, Kapisthala

ஆஹா தருணங்கள் அமைவது எப்படி? (Post No.15,656)

Post No. 15,656

Date uploaded in London – 26 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

4-12-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

ஆஹா தருணங்கள் அமைவது எப்படி? 

ச. நாகராஜன்

உலகின் பழங்காலத்தில் மிகப் பெரும் விஞ்ஞானியாகத் திகழ்ந்தவர் ஆர்க்கிமிடிஸ். சிசிலி தீவில் இருந்த சிராகுஸ் நகரில் அவர் வாழ்ந்தார்.

 அப்போது மன்னனாக இருந்த இரண்டாம் ஹிரான் ஒரு தங்க மகுடத்தை இறைவனுக்குச் சமர்ப்பிக்க நினைத்தான். குறிப்பிட்ட காலத்தில் தங்க மகுடத்தை ஒரு பொற்கொல்லன் உருவாக்கிக் கொண்டு வந்து அரசனிடம் கொடுத்தான்.

தான் கொடுத்த தங்கம் முழுவதும் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் மன்னனின் மனதில் எழ அவன் ஆர்க்கிமிடீஸிடம் அதைப் பற்றிக் கேட்டான்.

என்ன பதில் சொல்வது? என்று திகைத்தார் ஆர்க்கிமிடீஸ்.

மறுநாள் இதை யோசித்தவாறே தனது குளியலறைத் தொட்டியில் தொபீரென்று குதித்த ஆர்க்கிமிடீஸ் பளிச்சென்று தண்ணீர் வெளியேறுவதைப் பார்த்தார்.

யுரேகா! என்று அவர் கத்தினார்; குதூகலப்பட்டார்.

அது தான் ஆஹா தருணம் என்று இன்றளவும் கூறப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பொருளுக்கும் அடர்த்தி வித்தியாசமானது என்பது அவர் மனதில் தோன்ற  மிதக்கும் தன்மை  (BUOYANCY) பற்றிய கொள்கையைக் கண்டுபிடித்தார். மகுடத்தில் உள்ள தங்கம் அரசன் கொடுத்த தங்கத்தின் அளவை விடக் கூடுதலாக இருந்தால் அது சரிதான்! ஆனால் அதில் வெள்ளி கலக்கப்பட்டிருந்தாலோ தாமிரம் கலக்கப்பட்டிருந்தாலோ அதன் எடை குறைவாக இருக்கும்.

மகுடத்தில் தங்கத்துடன் இதர உலோகம் கலக்கப்பட்டிருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்தார் ஆர்க்கிமிடீஸ்.

அரசன் பிரமித்தான். 

பின்னால் வந்த பிரபல விஞ்ஞானியான ஐஸக் நியூட்டன் ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் விழுவதைப் பார்த்து ஒரு ஆஹா தருணத்தை அடைந்தார். புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்.

இதே போல விஞ்ஞானிகளுக்கு மட்டும் தான் ஆஹா தருணம் அமையும் என்பதில்லை.

ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை எழும் போது ஆஹா தருணம் அமையவே செய்கிறது. அதை அவர்கள் கண்டுகொள்வதில்லை; அவ்வளவு தான்! 

ஆஹா தருணம் பற்றிய நூற்றுக் கணக்கான ஆராய்ச்சிகள் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டு விட்டன; இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதைப் பற்றிய புத்தகங்களும் ஏராளமாக வெளி வந்துள்ளன. 

ஆஹா தருணம் அமைவதற்கு ஆதாரமாக இருப்பது பிரச்சினைகளால் ஒருவர் அளவிற்கு அதிகமாக அலட்டிக் கொள்ளக் கூடாது என்பது தான் அறிவியல் அறிஞர்கள் தரும் ஒரு புத்திமதி!

நல்ல ஓய்வான மனதில் ஆஹா தருணம் ஏற்படுகிறது. அப்போது

மூளையில் டோபமைன் ஒரு குதி குதிக்கிறது. 

நல்ல பாஸிடிவ் மூட் – அதாவது ஆக்கபூர்வமான மன நிலை – இருக்கும் போதும் ஆஹா தருணம் அமைகிறது.

உளவியலாளரான அமோரி டேனக் (Amory Danek) என்ற பெண்மணிபல ஆண்டுகளாக இது பற்றி ஆராய்ந்து ஏராளமான உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளார். இவர் ஜெர்மனியில் மூனிச் டெக்னிகல் பல்கலைக் கழகத்தில் மூத்த ஆய்வாளராகப் பணி புரிபவர். 

ஓய்வான நிலையில் தான் ஆஹா தருணம் வரும் என்பது அவரது  முதல் கண்டுபிடிப்பு. ஏராளமான ஆஹா தருணங்களைப் பெற்றவர்கள் அது கிடைத்த தருணம் 3 B’s என்கிறார்கள்.

அதாவது BED, BATH (Shower) and BUS என்கின்றனர் அவர்கள். 

படுக்கையில் படுத்திருக்கும் போதோ அல்லது குளியலறையில் குளிக்கும் போதோ அல்லது பஸ்ஸில் செல்லும் போதோ விடை காண முடியாமல் தவித்த தங்களுக்கு ஆஹா தருணம் அமைந்ததாக அவர்கள் கூறுகின்றனர். 

ஒரு பிரச்சினை பற்றி ஆராயாமல் இருப்பவர்களுக்கு ஆஹா தருணம் அமையவே அமையாது என்பதும் உண்மை தான்! 

ஆகவே ஆஹா தருணம் பெற விரும்புபவர்கள் பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு சிந்தனை செய்யலாம்; அதிகம் அலட்டிக் கொள்ளாமல் ஓய்வாக இருக்கலாம்! அப்போது வரும் ஆஹா தருணம்!

**