புறநானூற்றில் 21 யாகங்கள் பற்றி அதிசயச் செய்திகள் (Post No.7840)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7840

Date uploaded in London – 17 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

புறநானூற்றில் யாகங்கள் பற்றி அதிசயச் செய்திகள் உள . ரிக் வேதத்தில் புரியாத ஒரு  (RV 1-164; 1-72) பாடலைப்  புரிந்துகொள்ள சங்கத் தமிழ் நூல்கள் உதவலாம். பதினெட்டு சங்கத் தமிழ் நூல்களில் மிகவும் முக்கியமானது புறநா னூறு . இது இல்லையேல் தமிழர் பற்றிய பாதி செய்திகள் தெரியாமல் போயிருக்கும். இதிலுள்ள யாக யக்ஞங்கள் பற்றிய செய்திகள் ரிக்வேதப் புதிர்களை விடுவிக்கலாம். அது மட்டுமல்ல சங்க காலத்தில் சேர சோழ , பாண்டிய மன்னர்கள் செய்த அபூர்வ யாகங்கள் பற்றியும் சங்க நூல்கள் பேசுகின்றன.

ஒரு பார்ப்பனப் புலவரை சேர மன்னன், உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டான். நான் இந்த உடம்போடு சொர்க்கம் போக வேண்டும் என்றார் . அதற்கு என்ன வழி ? என்ன என்று கேட்டான். இந்த குறிப்பிட்ட பத்து யாகங்கள் செய்ய வேண்டும் என்று அந்த பிராஹ்மணப் புலவர் சொன்னார். பத்தாவது யாகம் செய்யும்போது அந்தப் பார்ப்பனரும் அவரது மனைவியும் மாயமாய் மறைந்தனர் என்ற அதிசயச் செய்தி பதிற்றுப் பத்து என்னும் சங்க நூலில் உளது.

இன்று புறநானூற்றின் 166ஆவது பாடலைக் காண்போம் .

இதைப் பாடியவர் ஆவூர் முலங்கிழார்

பாடப்பட்டவர் பூஞ்சாற்றுர் பார்ப்பான் விண்ணன்தாயன். இந்தப்பாடலின் துறை ‘பார்ப்பன வாகை’.

விஷ்ணுதாசன் என்னும் சம்ஸ்கிருதப் பெயர் தமிழில் விண்ணந்தாயன் ஆகும்.

தமிழ் இலக்கியத்தில் ‘பார்ப்பன வாகை’ என்றே ஒரு துறை உளது. யாகத்தின் மூலம் வெற்றியடையும் விஷயத்தைக் கூறும் துறை. வேண்டுவன வேண்டி, வேள்வி செய்து, வெற்றி வாகை சூடுவதால் இப்பெயர் .

முதலில் இதிலுள்ள அதிசயச் செய்திகளை BULLET POINTS புல்லட் பாயிண்டுகளில் தருகின்றேன் —

இதைப் பாடியவர் ‘கிழார்’ என்று அழைக்கப்படுவதால் வேளாளர் ஜாதியைச் சேர்ந்தவர். அவர் இந்த யாகத்துக்கு வந்து பரிசு பெற்றது புதிய செய்தி. பிராமணர் தவிர மற்றவர்களுக்கும், யாகத்தின் பொருட்டு  பரிசு முதலியன வழங்கப்பட்டன.

அதுமட்டுமல்ல அவர் கூறும் பல செய்திகள் , உரை இல்லாவிடில் எவருக்கும் அர்த்தம் புரியாது. அவ்வளவு யாக நுணுக்கங்களை ஒரு வேளாளர்  சொல்லுவது வியப்புக்குரியது. இவர் பாடிய மேலும் பல பாடல்கள் இதே நூலில் இருப்பதால் இவரைப் பற்றி நன்கு அறியமுடிகிறது.

முதலில் சிவபெருமானின் பெரிய பக்தர் என்று விஷ்ணுதாசனைப் புகழ்கிறார் புலவர் . அந்தக் காலத்தில் சிவ – விஷ்ணு பேதம் கிடையாது என்பதை இவர் பெயரே பறைசாற்றும்.

‘நீள் நிமிர்சடை முது முதல்வன்’ – சிவ பெருமான் ;

சிவபெருமான் வாயிலிருந்து எப்போதும் வேத முழக்கம் கேட்டுக்கொண்டே இருக்கும் என்ற செய்தியை “முது முதல்வன் வாய்போகா” என்று சங்கப்புலவர் விதந்து ஓதுகிறார்.

பிராமணர்களைப்  புகழும் போதெல்லாம் சங்கப்  புலவர்கள் , 1, 2, 3, 4, 5, 6 என்ற எண்களை ஏற்றிப் பாடுவார்கள் . பிற்காலத்தில் இது எழு கூற்றிருக்கை என்ற புதிய பாணியை உருவாக்கியது (1-7)

தர்மம் ஒன்றே அவர்களின் குறிக்கோள்.

நான்மறைகளை அறிந்தோர்.

துணைப்பாட ‘சிலபஸ்’ஸில் ஜோதிடம், இலக்கணம்  உள்பட மேலும்

 ஆறு ‘சப்ஜெக்ட்’டுகளைப் படித்தோர்  பிராமணர் என்று புலவர் பாராட்டுகிறார்.

இதில் மூன்று அற்புதமான வரிகள் வருகின்றன.

“நீர் நாண நெய் வழங்கியும்

எண் நாணப் பலவேட்டும்

மண் நாணப் புகழ் பரப்பியும்”– என்று பாடுகிறார்.

அந்தப் பிராமணன், யாகத்துக்குப் பயன்படுத்திய நெய்யைப் பார்த்து தண்ணீருக்கே வெட்கம் வந்துவிட்டதாம்.

அந்தப் பிராமணன், செய்த யாகங்களின் எண்ணிக்கையைப் பார்த்து எண்களுக்கே  வெட்கம் வந்துவிட்டதாம்.

அந்தப் பிராமணன், பரப்பிய புகழ் கண்டு பூமிக்கே  வெட்கம் வந்துவிட்டதாம்.

அவர் வாழும் சோழ நாட்டுக்கு வளம் சேர்க்கும் காவிரி நதியை “பூ விரி புது நீர்க் காவிரி” என்கிறார்.

உலகில் பெண்களுக்கு இந்துமதம் கொடுக்கும் மதிப்பு வேறு எந்த மதத்திலும் இல்லை. ஏனெனில் பெண்கள் , தாவது மனைவி இல்லாமல் எவரும் யாகம் செய்ய முடியாது. அந்த மனைவியின் குண நலத்தை வருணிக்கையில் ‘சில சொல்லின் பல கூந்தல் மகளிர்’ என்கிறார். அதாவது அவருடைய மனைவி அதிகம் பேசமாட்டார்.

Fewness of words is an ornament to a woman – Democritus

என்று 2400 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க தத்துவ ஞானி சொன்னதும் இங்கு நினைவு கூறத்தக்கது.

‘மறம் கடிந்த அருங் கற்பின்’ என்று அந்தக் கற்புக்கரசியைப் பாராட்டிவிட்டு சொன்ன சொல் கேட்கும் துணைவி என்கிறார்.

‘நின் நிலைக்கொத்த நின்துணைத் துணைவியர்

தமக்கு அமைந்த தொழில் கேட்ப’ — என்றும் போற்றுவார்

துணைவியர் என்றால் பல மனைவி என்று பொருளல்ல. சிலவகை யாகங்களில் பணிவிடை செய்ய குறைந்தது மூன்று பத்தினிப் பெண்கள் இருக்கவேண்டும். அப்போது நெருங்கிய உறவினர்களின் மனைவிமார்கள் வந்து துணையாக நிற்பார்கள் .

21 வகை யாகங்கள்

3x 7 என்று சில சடங்குகளும் யாகங்களும் ரிக் வேத முதல் மண்டலத்தில் 1-71,  1-164  கவிதைகளில் குறிப்பிடப்படுகின்றது இவற்றை 21 வகை மர்மச் சடங்குகள் என்று கிரிப்பித் (Griffith) மொழிபெயர்த்துள்ளார். ஆனால் புறம் -166 உரையில் உ.வே.சாமிநாதையர் 21 யாகங்களை விளக்குகிறார் —

சோம யக்ஞங்கள் -7

ஹவிர் யக்ஞங்கள் -7

பாக யக்ஞங்கள் -7

அக்னிஷ்டோமம் அதியக்னிஷ்டோமம் உக்தியம் , ஷோடஸி , வாஜபேயம், அதிராத்ரம் , அப்தோர்யாமம் ஆகிய ஏழும் சோம யக்ஞங்கள்.

அக்நியாதேயம், தர்சபூர்ணமாசம் , சாதுர்மாஸ்யம், அக்நிஹோத்ரம் , நிரூ டபசுபந்தம், ஆக்கிரயணம், சௌத்ராமணி  ஆகிய ஏழும் ஹவிர் யக்ஞங்கள்.

அஷ்டகை, ஆபார்ணவம் , சிராத்தம் , சிராவணி , ஆக்கிரகாயனி , சைத்ரி, ஆச் வயுஜி ஆகிய ஏழும் பாக யக்ஞங்கள்.

இந்த விஷயம் கிரிப்பித் தின் ஆங்கில மொழிபெயர்ப்பிலோ, ஜம்புநாதனின் ரிக்வேத தமிழ் மொழிபெயர்ப்பிலோ இல்லை.

‘வேதங்களை ஏற்றிப்போற்றும் தமிழ் இலக்கியங்கள்’ என்ற நூலில் கே. சி.லெட்சுமிநாராயணன் இந்த அரிய விஷயத்தை உ.வே.சா . உரையிலிருந்து தந்துள்ளார். இதைப்படித்த பின்னர் ரிக்வேத 1-72, 1-164 துதிகளுக்குப் புதிய அர்த்தம் கிடைக்கிறது

இன்னொரு அரிய விஷயம்

“காடு என்றா நாடு என்று ஆங்கு

ஈரேழின் இடம் முட்டாது”

என்ற வரிகளில் 7, காட்டுப்பசுக்கள் 7 நாட்டுப் பசுக்கள் ஆகியவற்றின் பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட நெய்யால் யாகம் செய்தார் என்று புலவர் போற்றுகிறார்.

இது தவிர கிழார் சொல்லும் விஷயங்கள்

யாகத்துக்கு வ ரு ம் பெண்கள் ‘சாலகம்’ என்ற சிறப்பு அணியை அணிவர்;

யாகம் செய்யும் பிராமணன் பூணுலுக்கு மேலே மான் தோலை அணிவர்.

மெய் போலப் பொய் பேசுவோர் சாருவாகர் ; இனிமையாக, கவர்ச்சியாகப் பொய் பேசுவதைக் கேட்டால் இதுதான் உண்மையோ என்று மயங்கி விடுவர் பாமரர்கள்;  அத்தகையோரை வாதத்தில் தகர்த்து அழித்தான் இந்தப் பார்ப்பனன்.

சிலர் புத்த சமண மத ‘வாயாடி’ களையும் , இவர் ‘வாதாடி’ வென்றார் என்று உரை எழுதியுள்ளனர்.

XXXXX

ரிக்வேதத்தின் முதல் மண்டல 164-ஆவது பாடலுக்கு இதுவரை எவருமே முழு விளக்கம் சொல்ல முடியவில்லை. மேலை நாட்டார் விழி பிதுங்கிப் போயினர். வேதத்துக்கு பாஷ்யம் எழுதிய சாயனரும் சில இடங்களில் புரியவில்லை என்று சொல்லிவிட்டார். அந்தக் கவிதையையும் இந்த 166ஆவது பாடலையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் புலப்படும் . ஏனெனில் இரண்டு பாடல்களிலும் 7+7+7 வருகிறது. 7 பசுக்கள் வருகின்றன.

பிராமணன் ஒருவன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ‘தாசன்’ என்று பெயர் வைத்துக்கொண்டான். இவனுக்கு முன்னர் வாழ்ந்த காளி’’தாசனும் தாசன் என்று பெயர் சூட்டிக் கொண்டான். ரிக்வேதத்திலும் திவோதாஸன் என்ற மன்னர் பெயர்வருகிறது . ஆக ‘தாச’ , ‘தஸ்யூ’ என்ற சொற்களுக்கு  வெள்ளைக்காரர் சொல்லும் வியாக்கியானங்களைக் கொண்டு மயங்கி விடக்கூடாது  .

இந்தப் பார்ப்பனன் வாழ்ந்த பூஞ்சாற்றுர் தஞ்சை ஜில்லாவில் உள்ளது. அவர் கவுண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பதை கவுணியன் என்ற அடைமொழியிலிருந்து அறிகிறோம். திருஞான சம்பந்தரும் தன்னைப் பல பாடல்களில் கவுணியன் என்று பெருமைபடப் பேசுகிறார்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்று இந்து நாகரீகத்தை நிலை நாட்டியவரும் கௌண்டின்யர் ஆவார்

ஆவூர் மூலங்கிழார், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியவர்.  இதேகாலத்தில் கோவூர் கிழார் , நப்பசலை, கல்லாடனார், இடைக் காடனார் ஆகியோரும்  வாழ்ந்தனர்

இவருடைய ஸ்டைல் / பாணி சிறு சிறு சொற்களுடன் பாடுவதாகும் ; இந்திய தேசிய கீதம் “ஜன கண மன அதி நாயக ஜயஹே” என்று சிறு சொற்களுடன் அமைந்தது போல இவர் பாடுகிறார். பாடலை இணைப்பில் காண்க.

இமயம் போல வாழ்க

2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசனை எல்லா சங்கப் புலவர்களும் நன்கு அறித்திருந்தனர் . இதனால் சங்கப் புலவர்களுக்கும் இமயமலை, கங்கை நதி முதலியன அத்துபடி. காளிதாசனின் 1500 உவமைகளில் 200 உவமைகளை சங்கப் புலவர்கள் கையாண்டுள்ளனர். ஆவூர் கிழாரும் அதையொட்டி ஐயரை, ‘இமயம் போல வாழ்க’ என்கிறார். அந்தக் காலத்திலேயே உலகிலேயே உயர்ந்த மலை இமய மலை என்பது இந்தியர் களுக்குத்  தெரியும்.

XXXX

வேத பாஷ்யக்காரர்கள் திணறல்

வேதங்களுக்கு உரைகண்டவர்களை  ஏழு (7) என்ற எண் திணறடிக்கிறது.

ரிக்வேதம் 1-164- 3-ல் கண் தெரியாத அந்தப் புலவர் திரு. நீண்ட இருள் — தீர்க்க தமஸ் – இப்படிப் பாடுகிறார்—

ஏழு சக்கரங்கள் கொண்டதும் , ஏழு குதிரைகளால் இழுக்கப்படுவதுமான இந்த தேரிலே ஏழு பேர் அமர்ந்திருக்கிறார்கள். இதன் முகப்பில் ஏழு சகோதரிகள் வருகிறார்கள். இதில் பசுக்களின் ஏழு நாமங்கள்/பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.”

இதற்கு உரை கண்டோர் இப்படி இருக்க’லாம்’, அப்படிச் சொல்லியிருக்க’லாம்’ என்பர்; உறுதி யான  பொருளைக் கூறமுடியாது திணறுகின்றனர்.

ஏழு சகோதரிகள் என்பது நதியாக இருக்கலாம் என்பர்.

ஏழு பசுக்களை இசையின் 7 ஸ்வரம் என்பர்.

உண்மையில் இவை ஆவூர் மூலங் கிழார் பாடிய ஆரண்யப் பசு 7, கிராமப் பசு 7 என்றே நான் கருதுகிறேன்.

இதே போல ரிக் 1-72-6–ல் மூவேழு 7+ 7+7 மர்ம யக்ஞங்கள் பற்றி வருகிறது எவரும் உ.வே. சா. சொன்ன விஷயங்களைச் சொல்லவில்லை 1-72-8-ல் “வானத்திலிருந்து பாயும் ஏழு நதிகள்” என்பதற்கு விளக்கமே இல்லை.

ஆக தமிழ் சங்க உரைகளை படிப்போருக்கு ரிக் வேத பாடல்களுக்கு முழு விளக்கம் கிடைக்கும் என்று நான் கருதுகிறேன்.

யாகங்களைப் பற்றி மேலும் பல பாடல்கள் உள்ளன; அவற்றின் விளக்கங்களைப் பின்னர் காண்போம்.

tags — புறநானூறு, 166 , யாகங்கள், விண்ணன்தாயன், ஆவூர் முலங்கிழார்

–SUBHAM–

ஹிந்தி படப் பாடல்கள் – 9 – ஆஹா, வந்தது முதல் தேதி! (Post No.7839)

WRITTEN BY R.NANJAPPA                         

Post No.7839

Date uploaded in London – – 17 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 9 – ஆஹா, வந்தது முதல் தேதி!

R.Nanjappa

இது 2020 ஆகிய நல்லாண்டு. ஒரு 70 வருஷம் பின்னோக்கிப் போவோமா? அப்போது முக்காலும் நடுத்தர வர்க்கத்தினர்தான்- மாத வருமானம் அதிகமில்லை. சொத்து சுகம் பலருக்கும் இல்லை. வங்கிகள் அதிகம் இல்லை, பலருக்கும் அதில் கணக்கில்லை. ஏடிஎம் இல்லை, கிரெடிட் கார்டு இல்லை! மாத வருமானத்தை நம்பியே  வண்டி ஓடவேண்டும். இது பெரும்பாலும் பெண்களின் பொறுப்பு- அல்லது  சுமை! அல்லது சமர்த்து!  இந்த நிலையில் மாதம் முதல் தேதி  வந்தால் கொண்டாட்டம்தான்!  எல்லோரும் ஒரு நாள் சுல்தான் தான்! விவசாயிக்கு பருவ மழைபோல , முதல் தேதிக்கு அவ்வளவு  முக்கியத்துவம். எத்தனை தான் சாதாரண வேலையாக இருக்கட்டுமே, குறைந்த வருமானமாக இருக்கட்டுமே, இன்று வீடு முழுதும் மகிழ்ச்சி வெள்ளம்தான். அப்படிப்பட்ட ஒரு நடுத்தரக் குடும்பத்தில் என்ன நடக்கும்?  கவிஞர் பார்க்கிறார்-பாடுகிறார்.   ஆஹா, வந்தது முதல் தேதி!  

Din hai suhana aaj pehli tarikh hai Din hai suhana aaj pehli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai Pehli tarikh aji pehli tarikh hai



இன்று இனிய நாள்- இன்று முதல் தேதி உலகமே மகிழ்ச்சியில் திளைக்கிறது-இன்று முதல் தேதி முதல் தேதி-ஆம், இன்று முதல் தேதி !  

Biwi boli ghar zara jaldi se aana Jaldi se aana Sham ko piya ji hume cinema dikhana Hume cinema dikhana Karo na bahana ha bahana bahana Karo na bahana aaj pehli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai Pehli tarikh aji pehli tarikh hai  

மனைவி சொல்லிவிட்டாள்- ‘என்ன, இன்று சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிட வேண்டும்- என்ன, தெரிகிறதா, சீக்கிரம் வந்துவிடவேண்டும்! மாலையில் சினிமாவுக்குக் கூட்டிப் போகவேண்டும்- சினிமா பார்க்கவேண்டும் ! சால்ஜாப்பு- கீல்ஜாப்பெல்லாம் எதுவும் செல்லாது- இன்று முதல் தேதி- சால்ஜாப்பு நடக்காது இன்று முதல் தேதி- உலகமே மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது !  

Kisne pukara ruk gaya babu Lalaji ki jaan aaj aaya hai kabu Aaya hai kabu Ho paisa zara lana Ho paisa zara lana lana lana Ho paisa zara lana aaj pehli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai Pehli tarikh aji pehli tarikh hai   


அதோ, யார் கூப்பிட்டது? ஏன் பாபு நின்று விட்டார்? ஓ, கடைக்காரர்- அவர் குரல்தான் ஆணையிட்டது ! அவரிடமிருந்து ஆணை வந்துவிட்டது ! ஓ, பைசா கொண்டு வா, கொண்டு வா! பைசா  கொண்டு வா ! உலகம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது இன்று முதல் தேதி !   [அப்பொழுதெல்லாம் மளிகைக் கடையில் மாசக் கணக்கு வைத்திருப்பார்கள்.]  

Bada bekar hai kismat ki maar hai Sab din ek hai roz aitbaar hai Mujhe na sunana ha sunana sunana Mujhe na sunana aaj pahli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai Pehli tarikh aji pehli tarikh hai



இது என்ன பெரிய கஷ்டம்! விதி ஒரு போடு போட்டுவிட்டதே! இன்று முதல் தேதி போல் இல்லையே- எல்லா நாளும் ஒன்று தானோ? தினமும் நம்பிக்கையில் தான் ஓடவேண்டுமா? இன்று முதல் தேதி- என்னிடம் ஒன்றும் சொல்லாதே! இன்று முதல் தேதி- உலகமே மகிழ்ச்சியாக இருக்கிறது !  

Daftar ke samne aae mehman hai Bade hi sharif hai purane meharaban hai Bade hi sharif hai purane meharban hai Are jeb ko bachana bachana bachana Jeb ko bachana aaj pehli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai Pehli tarikh aji pehli tarikh hai

ஆஃபீஸ் வாசலில் இது என்ன- விருந்தாளிகள் வந்துவிட்டார்களே!
நல்லவர்கள், பெரிய மனதுள்ளவர்கள் ! ஓ, அப்பனே, உன் பாக்கெட்டை பத்திரமாகப் பார்த்துக்கொள் இன்று முதல் தேதி- உன் பாக்கெட்டை பத்திரமாகப் பார்த்துக்கொள்!

[ விருந்தாளிகள் பிக்பாக்கெட்டுகள்]
  Dil bekarar hai soye nahi raat se Sethaji ko gham hai ki paiso chalo hath se Are lutega khazana khazana khazana Lutega khazana aaj pehli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai  Pehli tarikh aji pehli tarikh hai  

சேத்ஜீக்கு வருத்தம்- மனது கெட்டுவிட்டது இரவெல்லாம் தூக்கம் பிடிக்கவில்லை இன்று பணப்பெட்டி காலியாகிவிடுமே, காலியாகுமே ! இன்று முதல் தேதி – பணம் பட்டுவாடா ஆகுமே இன்று முதல் தேதி- உலகமே மகிழ்ந்திருக்கிறது!  


Aye cinema walo aao aao khel mazedar hai Ho khel mazedar hai ji khel mazedar hai Aagha hai bhagwan hai kishore kumar hai Nimmi geeta bali hai ashok kumar hai Naragis raaj kapur hai dilip kumar hai Gito ka toofan hai nach ki bahar hai Nach ki bahar hai Panch aane ka das aana Are wapas nahi jana jana jana Wapas nahi jana aaj pehli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai Pehli tarikh aji pehli tarikh hai


ஆ, சினிமாவுக்கு வந்தீர்களா, வாரும் வாரும் நல்ல மனதுக்கினிய படம் ஓடுகிறது! ஓ, இனிய படம் இனிய படம் ஆகா உண்டு, பக்வான் உண்டு, கிஷோர் குமாரும் உண்டு  நிம்மி, கீதா பாலி, அஷோக்குமார்-எல்லோரும் உண்டு நர்கீஸ் ராஜ்கபூருடன் திலீப் குமாரும் உண்டு பாட்டுக்களின் புயல், நாட்டியத்தின் வசந்தம்! நாட்டியங்களின் வசந்தம்! ஐந்தணா டிக்கட் சும்மா பத்தணாதான்! அரே, திரும்பிப் போகாதீர்கள்- வெறும் பத்தணா தான்! இன்று முதல் தேதி- திரும்பிப் போகாதீர்கள் உலகமே மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது!!

Mil jul ke bachcho ne bapu ko     Ghera bapu ko ghera Kehte hai sare ki bapu hai Mera baapu hai mera Khilone zara lana Khilone zara lana aaj pehli tarikh hai Khush hai zamana pehli tarikh

குழந்தைகள் அப்பாவைச் சூழ்ந்து கட்டிக்கொண்டு விட்டன ! எல்லோரும் கூடிச் சொல்கிறார்கள்; ‘அப்பா, உன்னைப்போல் உண்டா !’ அப்பா, மாலையில் விளையாட்டு பொம்மை வாங்கிவா ! இன்று முதல் தேதி, விளையாட்டு சாமான் வாங்கிவா ! உலகமே மகிழ்ச்சியாக இருக்கிறது! இன்று முதல் தேதி !

Song: Din hai suhana Film: Pehli Tarikh 1954 Lyricist: Qamar Jalalabadi Music: Sudhir Phadke Singer: Kishore Kumar.

எத்தனை இயற்கையான நிலையை விவரிக்கிறது இப்பாடல்! இது போலெல்லாம் நாம் சிறுவயதில் பார்த்து, அனுபவித்தது தானே! இத்தகைய குடும்பங்களும் மகிழ்ச்சிச் சூழல்களும் இருக்கத்தானே செய்கின்றன! முள்ளுடன் ரோஜாவும் தானே இருக்கிறது!   

Despite the Muslim sounding Urdu name. Qamar Jalalabadi was a Punjabi HIndu. LIke most Punjabis of pre-partition days, he learnt Urdu. His name was Om Prakash Bhandari. Qamar means moon, and Jalalabad was his hometown.

ICONIC என்ற சொல்லை இன்று தாராளமாக பயன்படுத்துகிறார்கள். இந்தப் பாடல் உண்மையிலேயே ICONIC. இந்தப் படம் வந்தது முதல் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று காலை 7.30 மணிக்கு ரேடியோ சிலோனில் இது ஒலிபரப்பாகும். நீண்ட பாட்டானதால் ஓரிரு பத்திகளே ஒலிபரப்பாகும். ஜனவரி முதல்தேதியன்று முழுப்பாடலும் ஒலிபரப்பாகும். எங்கள் கல்லூரி நாட்களில் முதல்தேதியன்று இதைக் கேட்பது எங்களுக்கு ஒரு சாங்கியம், ஒரு ரக்ஷை மாதிரி! ! எல்லா வேலையும் விட்டு ரேடியோ பெட்டி அருகில் உடகார்ந்துவிடுவோம். கரன்ட் இருக்க வேண்டுமே என்று வேண்டாத தெய்வமில்லை ! இன்றுவரை இப்பாடல் முதல் தேதியன்று ரேடியோ சிலோனில் ஒலிபரப்பாகிறது!!

உலகில் வேறு எங்காவது இப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை. இதுதானே உண்மையில் ICONIC!     சுமார் 35 வருஷங்களுக்குமுன் ஒரு முதல் தேதியன்று இப்பாடலில் முதல் இரண்டு-மூன்று வரியுடன் ஒலிபரப்பு நின்றுவிட்டது.. எங்களுக்கெல்லாம் பகீர் !. பின் , இந்த ரெகார்டு பழுதடைந்ததாகவும், மேற்கொண்டு ஒலிபரப்பமுடியவில்லை என்றும் அனௌன்ஸர் வருத்தத்தோடு சொன்னார். மேலும் நேயர்கள் யாரிடமாவது இந்த ரெகார்டு இருந்தால் அவர்களுக்கு அனுப்பும்படியும் கேட்டுக்கொண்டார்! இப்படியெல்லாம் இருந்ததால் தானே ரேடியோ சிலோனுக்கு அவ்வளவு ஆதரவு கிடைத்தது! இதை எழுதிய கமர், இசை அமைத்த ஸுதிர் ஃபட்கே., பாடிய கிஷோர், இதில் பெயர் வரும் நடிக நடிகையர்கள்- என எல்லோருமே அமரத்வம் வெற்று விட்டார்கள்!   சிலர் ஒரே ஒரு விஷயத்திற்காக புகழ் பெறுகிறார்கள்.



அமெரிக்காவில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் எழுத்தாளர்கள் குழுமியிருந்தனர். பலர் பல புத்தகம் எழுதியவர்கள். ஒரு பெண்மணி அமைதியாக அமர்ந்திருந்தார். பக்கத்திலிருந்தவர் பேச்சுக்கொடுத்தார்.எத்தனை புத்தகம் எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்டார். அம்மையார், ‘ஒன்றுதான்” என்று சொன்னார். கேட்டவர் முகத்தில் ஏளனப் புன்னகை மலர்ந்தது. ‘புத்தகம் பெயர் என்னவோ’ எனக் கேட்க “GONE WITH THE WIND’ எனப் பதில் வந்தது, கேட்டவருக்கு வாயடைத்தது. இந்த ஒரு புத்தகத்தால் உலகப் புகழ் பெற்றவர் அந்த அம்மையார் Margaret Mitchell. அதே போல To Kill A Mocking Bird (1960) என்ற ஒரு புத்தகத்திற்காகப் புகழ் பெற்றவர் Harper Lee. இது படமாக வந்த போது 1962அதில் நடித்து அகாடமி அவார்டு வாங்கினார் Gregory Peck. சுதீர் ஃபட்கேவுக்கும் கமர் ஜலாலாபாதிக்கும் இந்த ஒரு பாடல் போதும்! முதல் தேதி என்று தமிழிலும் ஒரு படம் வந்தது. 1955. அதில் ‘முதல் தேதி-இன்று முதல் தேதி’ என ஒரு பாட்டு இருந்ததாக நினைவு. விவரம் தெரியவில்லை. தமிழ்ப்படம் ‘இரும்புத்திரையில்’ காசு பற்றாக்குறை பற்றி ஒரு பாட்டு வரும். “கையிலே வாங்கினேன் பையிலே போடலே   காசு போன இடம் தெரியலே” என்று நினைவு. எஸ்.சி. க்ருஷ்ணன் தங்கவேலுவுக்காகப் பாடியது. இது அன்றைய கீழ் நடுத்தரக் குடும்பத்திற்கு வருமானம் போதவில்லை என்பதைச் சொல்ல வந்தது. இந்தப் பாட்டிற்கு நடிக்க தங்கவேலுவுக்கு இஷ்டமில்லை. இந்தப் பாட்டில் “அறம் விழுந்தது”, இதைச் சேர்க்கவேண்டாம் என்று தங்கவேலு சொல்லிப் பார்த்தார். தயாரிப்பாளர்கள் – ஜெமினி ஸ்டுடியோ கேட்கவில்லை. பின்னர் படிப்படியாக ஜெமினி வீழ்ச்சி யடைந்தது என்று தங்கவேலுவுக்கு வேண்டியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.



கிராம இந்தியா-காந்தீய இந்தியா
இந்தியா 7 லட்சம் கிராமங்கள் கொண்ட நாடு என்பதில் காந்திஜிக்குப் பெருமை அதிகம்.
எளிமை, கள்ளம்-கபடமில்லாத தன்மை கொண்ட மக்கள், யார் வந்தாலும் உபசரிக்கும் பண்பு, ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் நிலை, வறுமையிலும் ஒரு நிறைவு, தன்னம்பிக்கை. கம்பீரம்-இத்தகைய பண்புகளை நாம் கிராமப்புறங்களில் பார்த்திருக்கிறோம். இதையெல்லாம் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஒரு கவிஞர்.
தேவதைகளின் இடம்
ஒரு நகர்ப்புற இளைஞன் கிராமத்திற்கு வருகிறான். அங்கு காணும் காட்சிகளை விவரிக்கிறான்.  

फरिश्तों की नगरी में मैं आ गया हूँ, मैं
आ गया हूँ
फरिश्तों की नगरी में
ये रानाइयाँ देख चकरा गया हूँ मैं
आ गया हूँ मैं
आ गया हूँ…



ஃபரிஷ்தோ(ன்) கீ நகரீ மே மை ஆ கயா ஹூ (ன்) மை
ஆகயா ஹூ(ன்) ஃபரிஷ்தோ(ன்) கி நகரீ மே  …ஆ கயா ஹூ((ன்) யே ரானாயியா(ன்) தேக் சக்ரா கயா ஹூ(ன்) மை ஆ கயா ஹூ(ன்) மை …ஆகயா ஹூ(ன்)     நான் இங்கே தேவதைகளின்   இடத்திற்கு வந்துவிட்டேன் ஆம், தேவதைகளின் இடத்திற்கு வந்திருக்கிறேன் ! இந்த அழகைக் கண்டு மதி மயங்கி விட்டேன் இங்கே வந்துவிட்டேன்

यहाँ बसने वाले, बड़े ही निराले
बड़े सीधे सादे, बड़े भोले भाले
पति-पत्नी मेहनत से करते है खेती
तो दादा को पोती, सहारा है देती
यहाँ शीरी फरहाद कंधा मिलाकर
है ले आते झीलों से नदिया बहाकर
ये चांदी की नदिया, बहे जा रही है
कुछ अपनी जुबां में, कहे जा रही है
फरिश्तों की नगरी में… 



    யஹா(ன்) பஸ்னே வாலே, படே ஹீ  நிராலே படே ஸீதே ஸாதே,  படே போலே பாலே   பதீ-பத்னீ மேஹனத் ஸே கர்தே ஹை கேதீ தோ தாதா கோ போதீ ஸஹாரா ஹை தேதீ யஹா(ன்) ஷீரி ஃபர்ஹாத் கன்தா மிலாகர் ஹை லே ஆதே ஜீலோ(ன்) ஸே நதியா பஹாகர் யே சாந்தீ கீ நதியா, பஹே ஜா ரஹீ ஹை குச் அப்னீ ஜுபா(ன்) ஸே , கஹ ஜா ரஹீ ஹை ஃபரிஷ்தோ (ன்) கீ நகரீ……     இங்கே வசிப்பவர்கள்  தனித்தன்மை கொண்டவர்கள் கள்ளம்-கபடம் இல்லாதவர்கள், எளியவர்கள் (பார்) புருஷன்-பெண்ஜாதி சேர்ந்து வயலில் உழைக்கிறார்கள் (கூடவே)  தாத்தாவுக்குப் பேத்தி உதவி செய்கிறாள் ! இங்கே ஷிரின்-ஃபர் ஹாத் சேர்ந்து  மலைக்கு அப்பாலிருந்து நதியை இங்கே  அழைத்துவந்து பெருகச் செய்கிறார்கள் தெள்ளிய வெள்ளிபோல்  நீருடன் இங்கே நதி பாய்கிறது! தன்னுடைய மொழியில் அது ஏதோ சொல்லிச் செல்கிறது! நான் தேவதைகளின் இடத்திற்கு வந்திருக்கிறேன்!

  कन्हैया चला, ढोर बन में चराने
तो राधा चली, साथ बसी बजाने
बजी बांसुरी, नीर आँखों से छलका
मुझे हो गया है, नशा हल्का हल्का
परिंदे मेरे साथ गाने लगे हैं
इशारों से बादल बुलाने लगे हैं
हँसी देख कर मुस्कुराने लगे हैं
कदम अब मेरे डगमगाने लगे हैं
फरिश्तों की नगरी में…
 


கன்ஹையா  சலா, தோர் பன் மே சரானே தோ ராதா சலீ, ஸாத்பன்ஸீ பஜானே பஜீ பான்ஸுரி நீர் , ஆங்கோ ஸே சல்கா முஜே ஹோ கயா ஹை நஷா ஹல்கா ஹல்கா பரிந்தே மேரே ஸாத்  கானே லகே ஹை இஷாரோ ஸே பாதல் புலானே லகே ஹை ஹ(ன்) ஸீ தேக் கர் முஸ்குரானே லகே ஹை கதம் அப் மேரே ஜக்மகானே லகே ஹை ஃபரிஷ்தோ(ன்) கீ நகரீ…..   பார், மாடுகள் மேய்க்க கண்ணன் வனம் செல்கிறான் ராதா சும்மா இருப்பாளா, அவளும் செல்கிறாள் குழல் ஊத! அந்த குழலின் வாசிப்பில், கண்ணில் நீர் பெருகுகிறது!  எனக்குச் சிறிது சிறிதாக போதை ஏறுகிறது ! பறவைகள் என்னுடன் சேர்ந்து பாடத்தொடங்கிவிட்டன! மேகமும் சமிக்ஞை செய்து என்னை அழைக்கிறது! என் சிரிப்பைக் கண்டு புன்முறுவல் பூக்கிறது! என்னுடைய நடை இப்பொழுது தடுமாறத் தொடங்கிவிட்டது! ஆம், நான் தேவதைகளின் இடத்திற்கு வந்திருக்கிறேன் !
अरे वाह लगा है, यहाँ कोई मेला
तो फिर इस तरह मैं, फिरूँ क्यों अकेला
मैं झूले पे बैठूँगा, चूसूँगा गन्ना
किसी का तो हूँ मैं भी हरियाला बन्ना
ओ भैया जी लो ये, दुअन्नी संभालो
चलो मामा उतरो, मुझे बैठने दो
फरिश्तों की नगरी में…
 
அரே வாஹ் லகா ஹை, யஹா(ன்) கோயீ மேலா தோ ஃபிர் இஸ் தரஃப் மை, ஃபிரூ(ன்) க்யோ(ன்) அகேலா மை ஜூலே பே பைடூங்கா, சூஸூங்கா கன்னா கிஸீ கா தோ ஹூ(ன்)  மை பீ ஹரியாலா பன்னா ஓ பையா ஜீ லோ யே, துவன்னீ ஸ்ம்பாலோ, சலோ மாமா உத்ரோ, முஜே பைட்னே தோ  ஃபரிஷ்தோ(ன்) கீ நகரீ…..     அடடே, இங்கே ஏதோ திருவிழா போல் தெரிகிறதே ! பின் நான் ஏன் இப்படி  தனியாகச் சுற்றவேண்டும்? நான் ராட்டினத்தில் உட்காருவேன், கரும்பு கடித்துத் தின்பேன்! எனக்கும் யாரோ இருக்கிறார்கள், நான் ஏன் ஆதரவற்றவன் போல் இருக்கவேண்டும்? அண்ணா, இந்தா, இந்த இரண்டணாவைப் பிடி! மாமா, இடத்தைக் காலி செய், நான் உட்காரவேண்டும்! ஆம், நான் தேவதைகள் வசிக்கும் இடத்திற்கு வந்திருக்கிறேன்!   { இங்கே நம் ஆள் ராட்டினத்தில் உட்காருகிறான்]   

यहाँ बसने वाले, बड़े ही निराले
बड़े प्यारे-प्यारे, बड़े भोले भाले
मुझे डर है हो जाए दिल की न छुट्टी
लो मैं इनको भूला, चलो इनसे कुट्टी
ये ठण्डे पसीने जो आने लगे हैं
कदम इस तरह डगमगाने लगे हैं

फरिश्तों की नगरी में.  


யஹா(ன்) பஸ்னே வாலே, படே ஹீ நிராலே படே ப்யாரே ப்யாரே,, படே போலே பாலே முஜே டர் ஹை ஹோ ஜாயே தில் கீ ந சுட்டீ யே டண்டே பஸீனே ஜோ ஆனே லகே ஹை கதம் இஸ்  தரஹ் ஜகமகானே லகே ஹை ஃபரிஷ்தோ கீ நகரீ……     இங்கே வசிப்பவர்கள் தனியானவர்கள் தான்! பிரியமானவர்கள்,  கள்ளம் கபடில்லாதவர்கள் மனதை இங்கேயே இழந்துவிடுவேனோ என்று பயம் வந்துவிட்டது! குளிர்ந்த வியர்வை வரத்தொடங்கிவிட்டது ! கால்கள் இப்படி தடுமாறத்   தொடங்கிவிட்டன! நான் தேவதைகள் வசிக்கும் இடத்திற்கு வந்துவிட்டேன்!   

Song: Farishton ki nagari  Film: Hamari Yaad Aayegi 1961 Lyrics: Kidar Sharma Music; Snehal Bhatkar  Singer: Mukesh ( one version; Mubarak Begum) Beautiful song, excellent rendering by Mukesh. Kidar Sharma was a producer, director, lyricist- a doyen of the industry. Snehal Bhatkar was a sensitive composer, but did not promote or market himself into prominence.  This song was picturised on a novice, so did not get the prominence it deserved.  

மறையும் கிராமங்கள்   எத்தனை அருமையான பாடல்! கிராமப்புறக் காட்சிகளை அப்படியே விவரிக்கிறது. 70/75 வயதான நம்மில் பலர் இத்தகைய இடங்களிலிருந்து வந்தவர்கள் தாமே! இத்தகைய காட்சிகளை தினமும் கண்டவர்கள் தாமே! ஷிரீன் -ஃபர் ஹாத் என்பவர்கள் லைலா-மஜ்னு போன்ற காதல் ஜோடி-வட இந்தியாவில்  பிரபலமாக இருப்பது. இங்கு நம் ஹீ ரோவுக்கு ஒவ்வொரு கிரமப்புற ஜோடியும் ஷ்ரீன்-ஃபர் ஹாத் ஆகத் தெரிகிறது. அதேபோல் இங்கிருக்கும் மாடுமேய்க்கும் இளைஞர்கள்  க்ருஷ்ணன்-ராதா போல் தெரிகின்றனர்.   நம் கிராமப்புறங்களில் இத்தகைய காதல் ஜோடிகள் இல்லாமல் இல்லை. இதெல்லாம் மிகைப்படுத்திச் சொல்லப்பட்டதோ? இத்தகைய இடங்களிலிருந்து வந்தவர்கள் (அடியேன் உட்பட) அப்படி நினைக்கவில்லை. இதெல்லாம்  நாம் கண்ட காட்சிகள்.     இன்று  இத்தகைய கிராமங்கள் இல்லை, ஒவ்வொரு நகரமும் விரிந்து, பல கிராமங்களை விழுங்கி வருகின்றன. பெங்களூரில் சில பகுதிகள் கிராமப்புறங்களாக இருந்து  Bangalore Rural  என்று ஒரு ஜில்லாவே இருந்தது. இன்று இங்கு கிராமமே இல்லை என்று அரசு சொல்கிறது! இந்தியா முழுவதும் இதே நிலைதான். டிவி, செல்ஃபோன் வந்தபிறகு  நகரத்திற்கும்-கிராமத்திற்கும் இடையேயான வித்தியாசம் அளவிலேயே தவிர வகையில் இல்லை. Difference of degree, not of kind!  இருந்தாலும் நல்லவர்கள் எங்கும் இருக்கிறார்கள். நாடு முழுவதும் கெட்டுப்போகவில்லை. சென்ற கட்டுரையில் கண்டபடி எல்லாம்

மோசமாகிவிடவில்லை. நல்ல இடங்கள், நிகழ்ச்சிகள் இருக்கின்றன, நல்லவர்கள் இருக்கிறார்கள். கவிஞர்களின் பார்வை வெவ்வேறாக இருப்பதால்  காட்சியும் மாறுபடுகிறது.    ஆங்கிலக் கவிஞர் தாமஸ் க்ரே  இத்தகைய ஒரு கிராமத்தை விவரிக்கிறார்:  



Elegy Written in a Country Churchyard BY THOMAS GRAY 1751   The curfew tolls the knell of parting day,          
The lowing herd wind slowly o’er the lea,
The plowman homeward plods his weary way,    
      And leaves the world to darkness and to me.
  Now fades the glimm’ring landscape on the sight,         
 And all the air a solemn stillness holds, Save where the beetle wheels his droning flight,        
  And drowsy tinklings lull the distant folds;  
Beneath those rugged elms, that yew-tree’s shade,          
Where heaves the turf in many a mould’ring heap, Each in his narrow cell for ever laid,          
The rude forefathers of the hamlet sleep.  
The breezy call of incense-breathing Morn,        
  The swallow twitt’ring from the straw-built shed,
The cock’s shrill clarion, or the echoing horn,        
  No more shall rouse them from their lowly bed.  
Full many a gem of purest ray serene,        
  The dark unfathom’d caves of ocean bear:

Full many a flow’r is born to blush unseen,         
 And waste its sweetness on the desert air.

  ஆம், நம்மில் பலர் இத்தகைய இடங்களிலிருந்து தான் வருகிறோம் . நம் குலத்துப் பெரியவர்கள் அங்குதான் வளர்ந்து, வாழ்ந்து இன்னமும் ஆத்ம சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  

  Yes, that is where “forefathers of the hamlet sleep”.  That India is also true, not only the one described by Sahir Ludhianvi. Some poets do not want to see the real India, its ticking soul!  



                                       

 
—xxxxx—

மஹரிஷி ஜாபாலி! -Part 1(Post No.7838)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7838

Date uploaded in London – – 17 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷி ஜாபாலி பற்றிய மூன்று கட்டுரைகளில் இது முதல் கட்டுரை!

மஹரிஷி ஜாபாலி! -1

ச.நாகராஜன்

ஜாபாலி என்ற பெயரில் நான்கு மஹரிஷிகள் இருப்பதை புராண, இதிஹாஸங்களில் காண்கிறோம்.

நாம் இங்கு ராமாயண காலத்து மஹரிஷியான ஜாபாலி குறித்து மட்டும் பார்ப்போம்.

தசரதரின் அரசவையில் எட்டு ரிஷிகள் இருந்ததாக வால்மீகி ராமாயணம் பால காண்டம் 48ஆம் ஸர்கத்தில் காண்கிறோம். சுயக்ஞர், வாமதேவர், ஜாபாலி, கஸ்யபர், வசிஷ்டர் போன்றோர் தசரதரின் அரண்மனையில் வசித்து வந்து அவருக்கு ஆலோசனைகள் கூறி வந்தனர்.

பரதன் ராமரை மீண்டும அயோத்திக்கு வருமாறு வேண்டிக் கொள்ள ஆரண்யம் சென்ற போது ஜாபாலியும் பரதனுடன் கூட வே சென்றார்.

அங்கு அவர் ராமரிடம் மீண்டும் அயோத்தி வருவதற்காகப் பல காரணங்களைக் கூறினார். இவையனைத்தும் ராமருக்கும் கோபத்தை உண்டு பண்ணின. ஒரு மஹரிஷியிடம் ராமர் கோபம் கொண்டது இந்த ஒரு தடவை தான் என்பதைப் பார்த்து வியக்க முடிகிறது.

ஏன் ராமர் கோபம் கொண்டார் எனில் ஜாபாலி ராமரிடம் கொண்ட அளவு கடந்த அன்பால் நாத்திக வாதம் பேச ஆரம்பித்தார்.

அதையெல்லாம் செவி மடுத்த ராமர் அஸத்தியத்தைப் பேசும் அவரது ஒரு வார்த்தையைக் கூடத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்ட வட்டமாகத் தெரிவித்தார்.

அது மட்டுமல்ல,

“விஷமபுத்தியைக் கொண்ட உம்மை எனது தந்தையார்  தமது சேவையில் சேர்த்துக் கொண்டார் என குற்றம் சாட்டுகிறேன். இப்படிப்பட்ட தவறுதலான வழிகாட்டும் புத்தியால் உண்மையை விட்டு விலகும் நாஸ்திகத்தில் நீர் வீழ்ந்து விட்டீர்” என்று கடுமையான வார்த்தைகளையும் ராமர் கூறுகிறார்.

“நிந்தாம்யஹம் கர்ம பிது: கர்தும் த

த்யஸ்த்வாமாஹ்ரிநாத்ய விஷமஸ்த புத்திம்

புத்தயாநயைர்ஏவம் வித்யயா சரந்தம்

சுநாஸ்தீகம் தர்மர்பயாதபேதம் ||

निन्दाम्यहं कर्म पितुः कृतं त |
द्यस्त्वामगृह्णाद्विषमस्थबुद्धिम् |
बुद्ध्यानयैवंविधया चरन्तं |
सुनास्तिकं धर्मपथादपेतम् || २-१०९-३३

33. aham = I; nindaami = accuse; tat = that; karma = act; kR^itam = done; pituH = by my father; tvam aagR^ihNaat = in taking you into his service; yaH = you; viSamastha buddhim = with your misleading intelligence; charantam = moving; evam vidhayaa = with this type; buddhyaa = of intelligence; sunaastikam = a firm atheist; apetam = fallen; dharma pathaat = from the true path.

“I accuse the act done by my father in taking you into his service, you with your misleading intelligence, a firm atheist fallen from the true path.”

இப்படி ராமரைக் கோபமுறை வைத்த அவர் பேசிய நாத்திக வாதம் என்ன என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

ஜாபாலி பற்றி மஹாபாரதம், அநுசாஸன பர்வத்தில் நான்காம் அத்தியாயத்தில் 55வது ஸ்லோகத்தில் ,”அவர் விஸ்வாமித்திரரின் புதல்வர்களில் ஒருவர்” என குறிப்பிடுகிறது.

ஆனால் அவர் வசிஷ்டரிடம் சிஷ்யராக இருந்து பாடம் கேட்டார். (வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் இடையே உள்ள போட்டி, பகையை நினைத்தால் இது சற்று ஆச்சரியமாகத் தான் இருக்கும்!)

வியாஸர் வேதத்தை நான்காக வகுத்து அதர்வண வேதத்தை சுமந்துவுக்குக் கற்பித்தார். சுமந்து தனது சிஷ்யர் கபந்தருக்குக் கற்பிக்க, அவர் அதை இரண்டு பகுதிகளாக்கி  தமது இரண்டு சிஷ்யர்களான தேவதர்ஸருக்கும் பத்யருக்கும் கற்பித்தார்.

தேவதர்ஸர் தனது சிஷ்யர்களான மகதர், ப்ரஹ்மபாலி, சௌத்காயனி ஆகியோருக்கு இதைக் கற்பிக்க பத்யர் தமது பங்கிற்கு தான் கற்றதை ஜாபாலி, குமுதர், சௌனகர் ஆகிய மூவருக்குக் கற்பித்தார்.

ஆக ஜாபாலி அதர்வண வேதத்தில் நிபுணர் என்பது தெரியவருகிறது. இந்தத் தகவல்களை விஷ்ணுபுராணம் மூன்றாம் அம்சத்தில் தெரிவிக்கிறது.

வால்மீகி ராமாயணத்தில் பட்டாபிஷேக ஸர்க்கத்தில் (யுத்த காண்டம் 131வது ஸர்க்கம், 60ஆம் ஸ்லோகம்) ராமரின் பட்டாபிஷேகத்தின் போது அந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆசி கூறிய ரிஷிகள் எண்மர். வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஸ்யபர், காத்யாயனர், சுயக்ஞர், கௌதமர், விஜயர் ஆகிய இந்த எண்மரில் ஜாபாலியும் ஒருவர். இவர் ராமரின் மீது கொண்ட பேரன்பாலேயே அவர் அயோத்திக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆசையினாலேயே நாத்திகவாதத்தை முன் வைத்தார் என்று கொள்ள வேண்டியிருக்கிறது.

ஜாபாலி வாதம் இன்றைய நாஸ்திகர்களுக்கு பெரிதும் பிடித்த வாதம்.

அதை அடுத்துக் காண்போம்.

** தொடரும்

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 1642020 (Post No.7837)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7835

Date uploaded in London – 16 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1.—(6) – மணிமேகலைக்குக் கிடைத்த பாத்திரம்; எடுக்க எடுக்க குறையாது உணவளிக்கும் கலம்.

5. – (5) இலங்கையில் பிரபலமான பெயர்; சுருக்கம் பாலு; திரைப்பட டைரக்டர் பாலு மகேந்திராவின் முதல் பெயர்

8. -(4)- தமிழில் அரிமா

9.– (2) தமிழில் பகலவன்

10. (4)  திருடன்; களவு செய்பவன்

கீழே

1. – (8) திரவுபதிக்குக் கிடைத்த பாத்திரம்; எடுக்க எடுக்க குறையாது உணவளிக்கும் கலம்.

2.– (5) – இந்தியாவின் தென் கோடி மாநிலம்

3.– (4) பர்மாவின் தலைநகர்

4.–(6)- சிதம்பரம் அருகிலுள்ள சதுப்பு நிலக்காடுகள் ; படகு சவாரி செய்யலாம்; கடல் வரை செல்லலாம்

6.–(5)- ராணுவங்கள் அமைக்கும் தாக்குதலமைப்புக்கள்

7. – ஆண்டுதோறும் பல இடங்களில் நடக்கும். நடனம் நாடகம், நாட்டுப்புற இசை, ஆடல், பாடல் அனைத்தும் நிகழும்

XXXXXX

Bankers are Eagles- Abraham Lincoln (Post No.7836)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No.7836

Date uploaded in London – 16 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Stocks and Bonds Anecdotes

During the hectic days following the crash of 1929, many discussions of the whys and wherefores were overheard along Wall Street. One of the more honest and direct explanations of his plight was the following:

I hear that you lost quite a lot of money in the crash.

Were you a bull or a bear?

Neither, just a plain, simple jackass.

(The term “bull market” refers to a stock market that has been rising; a “bear market” is one where prices have been falling. … When it comes to individual investors, a “bull” expects stocks to rise, while a “bear” acts on the assumption they will fall.

Jackass – A Stupid Person.)

Xxx

Please Buy, Buy!

A stock broker suffering a slight nervous breakdown from the constant pressure of fluctuating business, was taken to hospital to rest.

While more or less in a daze, his nurse say, as she handed the patient’s chart to the doctor,

Temperature today 102.

Weakly the broker raised his head and said,

When it reaches 100-5, sell, then wearily fell back against his pillow.

Xxx

Bankers Meeting with Lincoln

The Hon.Hugh McCulloch, Secretary of the Treasury during Lincoln’s second term, was once announced with a delegation of New York bankers. As the party filed into the room, he proceeded them and said to the president, in a low voice,

These gentlemen from New York have come on to see the Secretary of the Treasury about our new loan. As bankers they are obliged to hold our national securities. I can vouch for their patriotism and loyalty, for, as the good Book says,

“Where the treasure is , there will the heart be also.”

To which Lincoln quickly replied,

There is another text Mr McCulloch I remember, that might equally apply,

“Where the carcass is there will the eagles be gathered together”.

Xxx

You hang People without ID!

Judge Giles Baker of a Pennsylvania county was likewise cashier of his home bank. A man presented a cheque one day for payment. He was a stranger. His evidence of identification was not satisfactory to the cashier.

Why, judge, said the man, I have known you to sentence men to be hanged on no better evidence than this!

Very likely, replied the judge. But when it comes to letting go of cold cash we have to be mighty careful.

Tags — bankers, stocks, bonds , anecdotes

Xxx Subham xxxx

சித்தர் பாடலில் எண்கள்; ரிக் வேத எதிரொலி (Post No.7835)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7835

Date uploaded in London – 16 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சித்தர்கள் என்போர் யார்?

முதலில் இதை புரிந்து கொள்ள சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க  வேண்டும்.

சித்தி அடைந்தவர்கள் சித்தர்கள்.

அது என்ன சித்தி?

அஷ்டமா சித்திகள். அதாவது எட்டுவகை அதிசய சக்திகள்.

அணுவாகவும் மாறலாம். மலைபோல எடை கூடலாம். கூடு விட்டு கூடும் பாயலாம்.

இவை எப்படி கிடைக்கும்?

பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி யோக முறைகள் மூலம் கிடைக்கும்.

இது தவிர வேறு சக்திகள் உண்டா ?

அவர்கள் ‘காயகல்பம்’ செய்து நீண்ட காலம் வாழும் முறையைக் கண்டுபிடித்தனர். மூலிகைகளின்

அபூர்வ குணங்களைக் கண்டுபிடித்து அகஸ்தியர், போகர் முதலிய பெயர்களில் மருத்துவ நுல்களைப் படைத்தனர்.

ரசவாதம் செய்து இரும்பு, ஈயம் முதலிய சாதாரண உலோகங்களை தங்கமாக மாற்றினர்.

இவைகளை எதற்காக செய்தனர்?

சமுதாயத்துக்கு உதவ, சீடர்களைக் கவர, அற்புத சக்திகளை பயன்படுத்தினர்

அவர்களின் நோக்கம்தான் என்ன?

இறைவனை, குறிப்பாக சிவபெருமானை அடைந்து முக்தி பெறவேண்டும்.

மண், பெண், பொன் ஆகிய மூன்றும் சிற்றின்பமே தரும். அவைகளை மறந்து பேரின்பம் பெறுவதே குறிக்கோள்.

இதை எப்படிச் சொல்ல முடியும்?

அவர்கள் விட்டுச் சென்ற பாடல்களால் அறிகிறோம். அவர்கள் உட்கார்ந்து நூல்கள் என்று எதுவும் எழுதி அரங்கேற்றவில்லை. அவர்களுடைய சீடர்கள் பிற்காலத்தில் இவைகளை எழுதினார்கள் .

அவர்களின் வாழ்க்கை வரலாறு  கிடைக்குமா?

பெரிய புராணத்தை சேக்கிழார் பெருமான் உட்கார்ந்து எழுதியதால் 63 நாயன்மார்கள் சரிதமும் திருவாதவூர்ப் புராணம் முதலியவற்றால் மாணிக்க வாசகர் சரிதத்தையும் நாம் அறிய முடிகிறது. தேவாரம், திருவாசகம் அதற்கு உறுதுணையாக நிற்கிறது. ஆனால்  சித்தர் வரலாறுகள் அப்படி முறையாக எழுதப்படவில்லை. தற்காலத்தில் சிலர் செவி வழிச் செய்திகளைப் புஸ்தகமாகப் போட்டுள்ளனர். சித்தர் பாடல்களையும் அச்சேற்றியுள்ளனர்

எவ்வளவு சித்தர்கள் இருந்தனர்?

18 சித்தர்களும் அவர்கள் சமாதி அடைந்த இடங்களும் அதன் அருகில் எழுந்த புகழ் பெற்ற கோவில்களையும் நாம் அறிவோம். ஆனால் நுற்றுக்கணக்கான சித்தர்கள் உளர். அதை அந்தந்த ஊர் மக்களே அறிவர். ‘தருமமிகு சென்னை’ என்று ராமலிங்க சுவாமிகளால் போற்றப்பட்ட சென்னையைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேலான சித்தர் சமாதிகள் இருக்கின்றன.

சித்தர்கள் எப்போது வாழ்ந்தனர்?

பொதுவாக பக்தி இலக்கிய காலம் முடியும் தருவாயில் , அதாவது  எட்டு, ஒன்பது நுற்றாண்டுகளுக்குப் பின்னரே இவர்கள் வாழ்ந்தனர்.

இவர்களுடைய பாடல்களின் சிறப்பு என்னவென்றால் பாமர மனிதனின் பேச்சுத் தமிழில் இவர்கள் பாடினர் . ஆயினும் யோகம், தியானம், குண்டலினி, சமாதி ஆகியன பற்றி அறிந்தவர்களே முழு அர்த்தத்தையும் உணர முடியும்.

இவர்களுக்கு முன்னர் வாழ்ந்த நால்வர் அடங்கிய நாயன்மார்களுக்கும் இவர்களுக்கும், வேறுபாடு உண்டா?

நிறையவே உண்டு. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார் ஆகியோர் கோவில்களையும், சடங்குகளையும், அவற்றைப் பற்றிய ஆகம நுலகளையும் மதித்தனர். சித்தர்களோவெனில் அவைகளை உடைத்தறிந்து பேசினர் ; பாடினர்.

மேலும் அவர்களைப் போல ஸ்னாநம் , பூஜை, புனஸ்காரம் என்ற கட்டு திட்டங்களில் இவர்கள் வாழவில்லை. தெருவிலுள்ள குப்பை கூலங்களில் உருண்டனர்.

பேச்சுத் தமிழில் பாடினார. ஆனால் நாயன்மார்கள் பாடியதோ செந்தமிழ்.

இவர்களில் பெரும்பாலோர் சிவனைப் பாடினாலும் நாதமுனிகள் போன்ற சில வைஷ்ணவப் பெரியார்களை யோகி என்றும் சித்தர் என்றும் குருபரம்பரை நூல்கள் பகர்கின்றன,

சைவர்கள் இவர்களை ஒதுக்கினார்களா?

ஆமாம். பல சைவ நூல்கள் இவர்களை பகிரங்கமாகவே சாடின. ஆயினும் திருமூலர், கருவூர் சித்தர், திருமாளிகைத் தேவர் போன்ற சில சித்தர்களின் பாடல்களை பன்னிரு திருமுறைகளில் ஏற்றிப்  போற்றுகின்றனர்.

இவர்களின் சிறப்புத் தன்மை என்ன?

ரிக்வேத ரிஷிகளைப் போல மறைபொருளில் பாடுவர் . வேதங்களை சங்க காலத் தமிழர்கள் நான்’மறை’ என்று போற்றினர். ‘மறை’பொருளில் இறைபொருள் பற்றிப் பாடியதால் இப்படி அழைத்தனர். அதாவது சொல்ல வரும் பொருளை நேரடியான மொழியில் சொல்லாமல் அடையாள சொற்களால், சங்கேதக் குறியீடுகளால் (Symbolic language, coded language) சொல்லுவார்கள்.

வேதகால ரிஷிகள்  நாங்கள் இப்படித்தான் படுவோம் என்று மந்திரங்களில் பகிரங்கமாகவே கூறியுள்ளனர். குறிப்பாக எண்களை — நம்பர்களை — அதிகம் பயன்படுத்துவர்.

அந்த ஒரு அம்சத்தைக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

சித்தர்கள் மூலிகைகளின் பெயர்களைக் கூட சங்கேத மொழியில் உரைத்தனர். கண்ட கண்ட தோழான் , துருத்தி எல்லாம் டாக்டர் என்று சொல்லிக்கொண்டு திரியக்கூடாது, ஈ னர்கள் எல்லோரும் காவி உடை போட்டுக்கொண்டு தத்துவம் பேசக்கூடாதென்பதற்காக இப்படிச் செய்தனர் போலும்.

திருமூலர், திருவள்ளுவர்  போன்றார் ‘ஐந்து அடக்கு’ என்றால் அவர்கள்  ஐம்புலன்களை குறிப்பிடுகின்றனர் என்று தெரியும். ஆனால் ஒரேயடியாக எண்களாகப் பாடினால், நமக்கு உரைகார ர்களின் பாஷ்யம் இல்லாவிடில் எதுவும் புரியாது .

ரிக்வேதம் போன்றவற்றுக்கு அர்த்தம் பார்க்கத் தேவையில்லை; அவைகளின் மந்திர சக்தியே பலன்தரும் என்ற பாரம்பர்ய நம்பிக்கை காரணமாக, சாயனர் போன்றோர் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய  உரையைக் கூட சங்கராச்சார்யார்கள் பயன்படுத்துவதில்லை.இதை அப்படியே ஆங்கிலத்தில் , பிரெஞ்சில்,ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தோரும், இடையிடையே தங்களுடைய கருத்துக்களைப்  புகுத்தி  உளறிக்கொட்டி இருக்கின்றனர் .

வேதத்தில் உள்ள 30 குட்டி தெய்வங்களுக்கு (அஜ ஏக பாத, அபாம் ந பாத் , வ்ருஷாகபி) வெள்ளைக்காரர்கள் பத்துப் பதினைந்து வெவ்வேறு விளக்கங்களைக் கூறுவது நமக்கு நகைப்பை உண்டாக்கும்.

ரிக்வேதத்தில் முதல் மண்டலத்தில் உள்ள அந்தகக் கவிஞர் (blind poet)  தீர்க்க தமஸின் பாடல்கள் மிகவும் பேசப்படுகினறன. RV.1-164 பாடலில் இறைவன் ஒருவனே; அவனை அறிஞ ர்கள் பல பெயர்களால் அழைப்பர் என்ற வரிகள் வருவதால் எல்லோரும் மேற்கோள் காட்டுவர் . ஆயினும் அதிலுள்ள 52 மந்திரங்களுக்கும் பொருள் கூற முடிவதில்லை. சாயனர்கூ ட ‘புரியவில்லை’ என்று சில மந்திரங்களுக்கு உரை எழுதினார். அதில் முதல் மூண்று மந்திரங்களில் வரும் எண்களை சிவவாக்கியர் என்னும் சித்தர் பாடலுடன் ஒப்பிடுவோம்.

(18 சித்தர்களின் பட்டியல், அஷ்டமாசித்திகள் பட்டியல் பற்றித் தனியே கட்டுரைகளை முன்னரே இங்கு வெளியிட்டதால் அவைகளை இன்று விளக்கவில்லை)

xxxx

சிவவாக்கியரும்,  ரிக் வேதமும்

எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர்  ஏழும் ஏழும் ஏழுமாய்

எட்டும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதிதேவனே

எட்டும் ஆய பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே

எட்டு எழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே — சிவவாக்கியர் பாடல்

இதிலுள்ள எண்களை யார் எப்படி வேண்டுமானாலும் வியாக்கியானம் செய்ய வாய்ப்புண்டு. மேலும் இதே பாடல் ஒரு சிறிது மாற்றத்தோடு திருமழிசை ஆழ்வார் பாசுரங்களில் வருவதால் இருவரும் ஒருவரா? சமயம் மாறினார்களா? என்ற சர்ச்சைகளும்  இருக்கின்றன.

சிவவாக்கியரும் ஆழ்வாரும் ஆறு, ஐந்து, பத்து முதலிய எண்களைக் கொண்டும் அடுத்தடுத்துப் பாடினார்.

இவர்களுக்கு எல்லாம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த  தீர்க்கதமஸும்,  ரிக் வேதத்தில் இப்படி பாடி இருக்கிறார்.

ரிக்.1-164-1 முதல் 1-164-3 வரை

இந்த நன்மைதரும் புரோகிதன் சாம்பல் நிறத்தவனின் நடு  சகோதரன் எங்கும் பரவியுள்ளான் . மின்னல் போல ஒளி வீசுகிறான் . மூன்றாவது  சகோதரன்  நெய் முதுகு உடையவன். நான் இந்தச் சகோதரர்களிடையே ஏழு புதல்வர்களோடுள்ள தலைவனைக் காண்கிறேன்.

ஏழு பேரும் ஒரே சக்கரமுள்ள தேரை ஏந்துகிறார்கள். ஏழு பெயர்களைக் கொண்ட குதிரை அதை இழுக்கிறது. சக்கரத்துக்கு மூன்று நாபிகள் – இருசுகள் – உண்டு. சக்கரம் தேயாது, தளராது மக்கள் அனைவரும் அங்கே ஜீவிக்கிறார்கள்.

ஏழு சக்கரங்கள் கொண்டதும் , ஏழு குதிரைகளால் இழுக்கப்படுவதுமான இந்த தேரிலே ஏழு பேர் அமர்ந்திருக்கிறார்கள். இதன் முகப்பில் ஏழு சகோதரிகள் வருகிறார்கள். இதில் பசுக்களின் ஏழு நாமங்கள்/பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.”

இதன் பின்னர் வரும் 49 மந்திரங்களில் மேலும் 20 எண்களைப் பயன்படுத்துகிறார் . அதில் 1000,  720, 360 முதலிய எண்கள் அடக்கம் . எளிய தமிழில், நமது காலத்துக்கு நெருக்கமான காலத்தில், பாடிய சிவவாக்கியர்/ திருமழிசை ஆழ்வாரின் பாடலுக்குப் பொருள் காணவே நாம் திணறும் போது   சுமார் 6000  ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடலுக்கு வெள்ளைத் தோலினர் சொல்லும் பொருளை நம்பலாமா ?


அஷ்டமா சித்திகள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › அஷ்டமா-சித…

29 May 2018 – ஆருஷத் திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளின் முன், … திருமண வகைகள் | Tamil and Vedas · https://tamilandvedas.com › tag › திருமண-வக… 1. 9 Apr 2015 …

Missing: அஷ்டமாசித்திகள் ‎| Must include: அஷ்டமாசித்திகள்


சித்தர்கள் செய்த எட்டு வகை …

tamilandvedas.com › 2018/02/13 › சித்தர்க…

13 Feb 2018 – Date: 13 FEBRUARY 2018. Time uploaded in London- 8-43 am. Compiled by London swaminathan. Post No. 4738. PICTURES ARE TAKEN from various sources. WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T …

Missing: அஷ்டமாசித்திகள் ‎| Must include: அஷ்டமாசித்திகள்

பதினெட்டு சித்தர் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › பதினெட்டு-ச…

  1.  

Translate this page

6 Nov 2018 – தமிழ் சித்தர்கள் 18 பேர் என்று சொல்லுவர். ஆனால் அந்த பதினெட்டு பேர் யார் என்பதில் கொஞ்சம் கருத்து வேறுபாடு இருக்கும்.

‘பாரதி கண்ட சித்தர்கள்’ | Tamil and Vedas

tamilandvedas.com › tag › பாரதி-கண்ட-ச…

  1.  

Translate this page

21 Aug 2018 – 1837ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுவாமிகள் ஜீவ சமாதி எய்தினார். இன்றும் அவரது குருபூசை ஆண்டு …

Missing: பதினெட்டு ‎| Must include: பதினெட்டு

நெரூர் மஹான் சதாசிவ … – Tamil and Vedas

tamilandvedas.com › 2019/05/01 › நெரூர்-…

  1.  

Translate this page

1 May 2019 – … swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள்.

அற்புதங்கள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › அற்புதங்கள்

  1.  

Translate this page

((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள். 8.


6 நாட்களில் 30 கோவில்கள்! | Tamil and Vedas

tamilandvedas.com › tag › 6-நாட்களில்-…

  1.  

Translate this page

4 Apr 2019 – கருவூர் சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள். 8.தேர்தல் (Election Inscription) …

tags –  சித்தர் பாடல்கள் , எண்கள்; ரிக் வேதம் 

–சுபம்-

ஹிந்தி படப் பாடல்கள் – 8 – குறை நிறைந்த உலகம்! (Post No.7834)

WRITTEN BY R.NANJAPPA                         

Post No.7834

Date uploaded in London – – 16 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 8 – குறை நிறைந்த உலகம்!

R.Nanjappa

உலகம் அதன் போக்கில் சென்றுகொண்டிருக்கிறது. அதில் வாழ்பவர்கள், அதைப் பற்றிச் சிந்திப்பவர்கள் வெவ்வேறு விதத்தில் அதை அனுபவிக்கிறார்கள், உணர்கிறார்கள், கருதுகிறார்கள்.

பலருக்கு இந்த உலகம் பிடிப்பதில்லை. சொந்தக் காரணமாக இருக்கலாம், தொழிலில் நஷ்டமாக இருக்கலாம், குடும்பச் சூழ்நிலை  சரியாக இல்லாமலிருக்கலாம்ஏதோ காரணம், உலகம் பிடிக்கவில்லை. ஒர் ஊர் பிடிக்காவிட்டால் வேறு ஊருக்குப் போகலாம், வீட்டை மாற்றலாம், வேறு தொழில் செய்யலாம், வேறு வேலை தேடிக்கொள்ளலாம். “வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை உலகிலேஎன்று நம் கவிஞர் பாடினார். வீட்டு  நிலை சரியில்லை என்றால் என்ன செய்வது? ஔவையார் சொல்கிறார்:

பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்

எத்தாலும் கூடி வாழலாம்சற்றேனும்

ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்

கூறாமல் சந்நியாசம் கொள்

ஆனால் இந்த உலகமே பிடிக்கவில்லையென்றால்? யோசிக்கிறார் கவிஞர்.

பிடிக்காத இடத்தில் இருக்காதே

दुखी मन मेरे, सुन मेरा कहना
जहाँ नहीं चैना, वहाँ नहीं रहना
दुखी मन मेरे

 துகி மன் மேரே, சுன் மேரா கஹனா

ஜஹா(ன்) நஹீ சைனா, வஹா(ன்) நஹீ ரஹனா

துக்கப்படும் மனமே, நான் சொல்வதைக் கேள்

எங்கு உனக்கு சாந்தி இல்லையோ அங்கு வசிக்காதே



दर्द हमारा कोई जाने
अपनी गरज के सब हैं दीवाने
किसके आगे रोना रोएं
देस पराया, लोग बेगाने
दुखी मन मेरे..

தர்த் ஹமாரா கோயீ ஜானே

அப்னீ கரஜ் கே ஸப் ஹை தீவானே

கிஸ்கே ஆகே ரோனா ரோயே(ன்)

தேஸ் பராயா, லோக் பேகானே .

என் வருத்ததை யாரும் அறிய மாட்டார்கள்

ஒவ்வொருவரும் தங்கள் வேலையிலேயே குறியாக இருக்கிறார்கள்

இவர்களுக்கு எதிரில்  எவ்வளவு அழுதால் தான் என்ன ?

இது அன்னியர் தேசம், இந்த மக்கள் அன்னியர்கள்

 

लाख यहाँ झोली फैला ले
कुछ नहीं देंगे इस जग वाले
पत्थर के दिल मोम होंगे
चाहे जितना नीर बहाले
दुखी मन मेरे

லாக் யஹா(ன்) ஜோலீ ஃபைலாலே

குச் நஹீ தேங்கே இஸ் ஜக வாலே

பத்தர் கே தில் மோம் ஹோங்கே

சாஹே ஜித்னா நீர் பஹாலே

நீ எவ்வளவு துணியை விரித்துப் போட்டு பிச்சை கேட்டால் தான் என்ன?

இந்த  இடத்து வாசிகள் ஒன்றும் தரமாட்டார்கள்.

இவர்கள் கல் மனது எதற்கும் கறையாது

நீ எவ்வளவு கண்ணீஈர் விட்டும் பயனில்லை.

अपने लिये कब हैं ये मेले
हम हैं हर इक मेले में अकेले
क्या पाएगा उसमें रहकर
जो दुनिया जीवन से खेले
दुखी मन मेरे

அப்னே லியே ஹை கப் யே மேலே

ஹம் ஹை ஹர்  இக் மேலே மே அகேலே  

க்யா பாயேகா உஸ் மே ரஹகர்

ஜோதுனியா ஜீவன் ஸே கேலே

துகி மன் மேரே……

எனக்காக இந்தக் கொண்டாட்டங்கள் எப்போது நிகழும்?

எந்தக் கொண்டாட்டத்திலும் நான் தனித்தே இருக்கிறேன்!

எந்த உலகம் உன் வாழ்க்கையுடன் விளையாடுகிறதோ

அந்த உலகில் இருந்து நீ என்ன லாபம் அடையப்போகிறாய்?

Song: Dukhi man mere Film: Funtoosh 1956 Lyricist: Sahir Ludhianvi

Music: S.D.Burman Singer : KIshore Kumar

 [இது கிஷோர்குமாரின் iconic, landmark பாடல்களில் ஒன்று.இதன் பின்னனியில் இருபுராணங்கள்உண்டு. இது சோகப்பாடல்இதைப் பாடுவது சரிவராது என்று கிஷோர் நினைத்தார். ஆனால் பர்மன் தாதா விடவில்லை. கட்டாயமாகப் பாடவைத்தார்பாட்டு படு ஹிட் ஆனது.

இன்னொரு விஷயம். கிஷோருக்குப்  பெரிய பாடகனாக ஆசை. நடிக்கச் சான்ஸ் வந்ததே தவிர, அதிகம் பாடக் கிடைக்கவில்லை. 1956 வாக்கில் பம்பாயை விட்டுப் போக நினைத்தார். அந்தச் சமயத்தில் தான்  பர்மன் இவரை அழைத்தார். ” தாதா, நான் பாடவெல்லாம் வரமாட்டேன்என்றார் கிஷோர். தாதா விடவில்லை. ” மடையா, உனக்கு என்னடா பாட வரும், நீ சாப்பிட வாஎன்றார்.  { Gaane ko nahi, khaane ko aa[ பர்மனுக்கு கிஷோரை சிறு வயது முதல் தெரியும்.]வந்த கிஷோர் சாப்பிட்ட பிறகு. ரிஹர்சல் ரூமிற்கு கைப்பிடியாக இழுத்துச் சென்று இந்தப் பாடலைப் பாடவைத்தார். ” எங்கு சாந்தியில்லையோ அங்கு இருக்காதேஎன்ற வரி கிஷோர் மனதைத் தொட்டிருக்கவேண்டும். இப்பாட்டு மிகுந்த உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது.]

ஒரு குறிப்பு: இந்த Funtoosh படம் பின்னர்பலே பாண்டியாஎன்ற பெயரில் தமிழில் வந்தது.அதில் வந்த பாட்டுதான்வாழ நினைத்தால் வாழலாம்“.

இந்தப் பாடல் ஒரு மனிதனின் சொந்த அனுபவம். சிலர் உலக நடப்புகளையே பொதுவாக விமர்சிக்கின்றனர். நமது இடதுசாரிகள் இதில் தேர்ந்தவர்கள்.[ பணக்காரர்களைத் திட்டுவார்கள், ஏழைகளைக் கொண்டாடுவார்கள். ஆனால் பல இடது சாரிகள் பணக்காரர்களாக இருக்கிறார்கள்- யாரும் தங்கள் பணத்தையோ, சொத்தையோ ஏழைகளுடன் பகிர்ந்துகொண்டதாக சரித்திரம் இல்லை!]  கவிஞர் ஸாஹிர் லுதியான்வி பக்கா இடதுசாரி, பல பாடல்களில்

உலகின் குறைகளைப் பாடியிருக்கிறார். அதில் ‘ப்யாஸா” படத்தில் வந்த ஒரு சீரியஸ் பாட்டில் சில வரிகள்:

கண்ணை உறுத்தும் , மனதை வருத்தும் காட்சிகள்

ये कूचे, ये नीलामघर दिलकशी के
ये लुटते हुए कारवाँ ज़िन्दगी के
कहाँ हैं, कहाँ है, मुहाफ़िज़ ख़ुदी के
जिन्हें नाज़ है हिन्द पर वो कहाँ हैं

யே கூசே கே நீலாம்கர்  தில்கஷீ கே

யே லுட்தே ஹுயே கார்வான் ஜிந்தகீ கே

கஹா(ன்) ஹை, கஹா(ன்) ஹை, முஹாஃபிஃஜ் ஸுதீகே

ஜிநே நாஜ்  ஹை ஹிந்த் பர் வோ கஹா(ன்) ஹை

இந்தச் சந்துபொந்துகள்இந்தக் கவரும்  பரத்தையர் வீடுகள்

கொள்ளையடிக்கப்பட வாழ்க்கையின் இந்த நடப்பு

நம் கௌரவத்தைக் காப்பவர்கள்அவர்கள் எங்கே?

கீழ்த்திசை நாடுகளைப் பற்றிப் பெருமைப்படும் அவர்கள்

அவர்கள்  எங்கே ? அவர்கள்  எங்கே ?


ये पुरपेच गलियाँ, ये बदनाम बाज़ार
ये ग़ुमनाम राही, ये सिक्कों की झन्कार
ये इस्मत के सौदे, ये सौदों पे तकरार
जिन्हें नाज़ है हिन्द पर वो कहाँ हैं

யே புர்பேச் கலியா(ன்), யே பத்னாம் பாஃஜார்

யே கும்னாம் ராஹீ, யே சிக்கோ கீ ஃஜங்கார்

யே இஸ்மத் கே  ஸௌதே, ,யே ஸௌதே பே தக்ரார்

ஜிநே நாஃஜ் ஹை ஹிந்த் பர் வோ கஹா(ன்) ஹை

வளைந்து போகும் இந்தச் சந்துகள், பெயர் கெட்ட இந்த பஜார்,

இந்த அனாமதேய பயணி, நாணயங்களின் இந்த சப்தம்,

இங்கு நடக்கும் “மதிப்புமிக்க  வியாபாரம், அதன் விலை மீது எழும் தகராறு

கீழ்த்திசை நாடுகளைப் பற்றிப் பெருமைப்படுகிறார்களே

அவர்கள் எங்கே? அவர்கள் எங்கே?

ये सदियों से बेख्वाब, सहमी सी गलियाँ
ये मसली हुई अधखिली ज़र्द कलियाँ
ये बिकती हुई खोखली रंगरलियाँ
जिन्हें नाज़ है हिन्द पर वो कहाँ हैं  

யே ஸதியோ(ன்) ஸே பேக்வாப், சஹமீ ஸீ கலியா(ன்)

யே மஸலீ ஹுயீ அத்கிலீ ஃஜர்த் கலியா(ன்)

யே பிக்தீ ஹுயீ கொகலீ ரங்ரலியா(ன்)

ஜிநே நாஃஜ் ஹை ஹிந்த் பர் வோ கஹா(ன்) ஹை

வளந்துபோகும் இந்தச் சந்துகள், நூற்றாண்டுகளாக சரிசெய்யப்படாதவை,

இந்த கசங்கிய, வெளிறிய பாதி விரிந்த மொட்டுக்கள்

இப்படி விலைபோகும் இந்தக் குழிவிழுந்தகளியாட்டங்கள்

கீழ்த்திசை நாடுகளைப் பற்றிப் பெருமைப்படும் அவர்கள்– 

அவர்கள் எங்கே, அவர்கள் எங்கே?

(இது நீண்ட பாடல். 3 சரணங்களே இங்கு தந்திருக்கிறேன் )

Song: Jinhe naaz hai Hind par  Film: Pyaasa 1957 Lyricist: Sahir Ludhianvi

Music: S.D.Burman Singer: Mohammad Rafi

இது உருது கவிதையின் உச்சம், கருத்திலும் காட்டம்! இதைப் படத்தில் பார்த்தால்தான் இதன் முழு உலகைப் பரிமாணம் விளங்கும்.

ஹீரோ ஒரு ஏழைக் கவி. இன்னமும் பெயர் எடுக்கவில்லை. லக்னௌ வீதியில் ( சந்துகளில்) நடந்து போகிறான் அது சிவப்பு விளக்குப் பகுதி. அங்கு பார்ப்பதை விவரிப்பது இந்தப் பாடல்.

வேறு யார் என்ன சொன்னாலும் தமிழ்ச் சங்க இலக்கியம் சிறிதாவது படித்த நாம் நிதானிக்கவேண்டும். சங்க இலக்கியத்தில் பரத்தையரைப் பற்றி வரவில்லையா? அருணகிரிநாதர் ( 15ம்  நூற்றாண்டு) எழுதவில்லையா? வள்ளுவர்வரைவின் மகளிர்என்று ஒரு அதிகாரமே வகுக்க வில்லையா?

ஸாஹிர் லுதியான்வி புதிதாக ஒன்றும்  எழுதிவிட வில்லைNo need to pretend we are shocked.

இவர் எழுதிய இந்த விஷயங்கள் சோஷலிச நாடுகளில் இல்லையா? இடதுசாரிகள் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த மேற்குவங்காளத்தில் மறைந்துவிட்டதா? இதுவேதான் முழு உலகமுமா?

இதை வைத்தே உலகை வைவது சரியா

உலகைத் தாக்க ஏதோ ஒரு சாக்கு வேண்டும் இந்தக் கவிக்கு இது கிடைத்தது!

இதே ரீதியில் இன்னொரு பெரிய கவிதை அதே படத்திற்கு எழுதினார்.

வேண்டாம் இந்த உலகம்!

ये  महलों, ये तख्तों, ये ताजों की दुनिया,

ये इंसान के दुश्मन समाजों की दुनिया,

ये दौलत के भूखे रवाजों की दुनिया,

ये दुनिया अगर मिल भी जाए तो क्या है .

யே மெஹ்லோ(ன்) யே தக்தோ(ன்) யே தாஃஜோ கீ துனியா,

யே இன்சான் கே துஷ்மன் சமாஜோ(ன்) கீ துனியா,

யே தௌலத் கே பூகே ரவாஃஜோ கீ துனியா,

யே துனியா அகர் மில் பீ ஜாயே தோ க்யாஹை

அரண்மனைகள், சிம்மாசனங்கள், கிரீடங்கள் நிறைந்த இந்த உலகம்

மனிதனுக்கு எதிரியான சமாஜங்கள் நிறைந்த இந்த உலகம்,

கட்டுப்பாடுகள் நிறைந்த, செல்வத்திற்கு ஏங்கும் இந்த உலகம்

இந்த உலகமே எனக்குக் கிடைத்துவிட்டாலும் அதனால் ஆவதென்ன?

हर इक जिस्म घायल, हर इक रूह प्यासी

निगाहों में उलझन, दिलों में उदासी

ये दुनिया है या आलमबदहवासी

ये दुनिया अगर मिल भी जाए तो क्या है .

ஹர் இக் ஜிஸ்ம் காயல், ஹர் இக் ருஹ் ப்யாஸீ

நிகாஹோ(ன்) மே உல்ஜன், திலோ(ன்) மே உதாஸீ,

யே துனியா ஹை யா ஆலம்பத்ஹவாஸீ

யே துனியா அகர் மில் பீ ஜாயே தோ கயாஹை

ஒவ்வொரு உடலும் காயம் பட்டது, ஒவ்வொரு மனதிலும் ஒரு தாகம்,

அலையும் கண்கள்வெற்றிடமான மனது,

வக்கரித்து, தூய்மையிழந்த காற்று வீசும் இந்த உலகம்

இந்த உலகமே எனக்குக் கிடைத்து விட்டாலும் அதனால் என்ன?

यहाँ इक खिलौना है इसां की हस्ती

ये बस्ती हैं मुर्दा परस्तों  की बस्ती

यहाँ पर तो जीवन से है मौत सस्ती

ये दुनिया अगर मिल भी जाए तो क्या है .

யஹா(ன்) இக் கிலோனா ஹை இன்ஸான் கீ ஹஸ்தீ

யே பஸ்தீ ஹை முர்தா பரஸ்தீ கீ பஸ்தீ

யஹா(ன்) பர் தோ ஜீவன் ஸே ஹை மௌத் ஸஸ்தி

யே துனியா அகர் மில் பீஈ ஜாயே தோ க்யா ஹை

இங்கே மனிதன் ஒரு பொம்மை தான்

செத்தவர்களைக் கொண்டாடும் மக்கள் உள்ள இடம் இது

இங்கு உயிருடன் இருப்பதைவிட  மரணமே சல்லிசு

இந்த உலகமே கிடைத்து விட்டாலும் அதனால் ஆவதென்ன?

जवानी भटकती हैं बदकार बन कर

जवान जिस्म सजते है बाज़ार बन कर

यहाँ प्यार होता है व्योपार  बन कर

ये दुनिया अगर मिल भी जाए तो क्या है .

ஜவானீ படக்தீ ஹை பத்கார் பன் கர்

ஜவான் ஜிஸ்ம் ஸஜதே ஹை பாஃஜார் பன் கர்

யஹா(ன்) ப்யார் ஹோதா ஹை வ்யோபார் பன் கர்

யே துனியா அகர் மில் பீ ஜாயே தோ க்யா ஹை

இளமை பாவத்தில் கிடந்து அலைகிறது

இளம் உடல்கள் சந்தைக்கடை போல் அலங்கரிக்கப்படுகின்றன

இங்கே அன்பு என்பதும் வியாபாரமாகி விட்டது

இந்த உலகமே கிடைத்து விட்டாலும் அதனால் என்ன லாபம்?

ये दुनिया जहाँ आदमी कुछ नहीं है

वफ़ा कुछ नहींदोस्ती कुछ नहीं है 

जहाँ प्यार की कद्र कुछ नहीं है  

ये दुनिया अगर मिल भी जाए तो क्या है .

யே துனியா ஜஹா(ன்) ஆத்மீ குச் நஹீ ஹை

வஃபா குச் நஹீ, தோஸ்தீ குச் ஹீஹை

ஜஹா(ன்) ப்யார் கீ கத்ர் குச் நஹீ ஹை

யே துனியா அகர் மில் பீ ஜாயே தோ க்யா ஹை

இந்த உலகம்இதில் மனிதனுக்கு மதிப்பில்லை,

நம்பிக்கைக்கு மதிப்பில்லை, நட்புக்கு மதிப்பில்லை

இங்கு அன்புக்கு மதிப்பில்லை, அதைக் கருதுவார் இல்லை

இந்த உலகம் கிடைத்தாலும் அதனால் என்ன ஆகிவிடும்?

जला दो इसे फूक डालो ये दुनिया

जला दो, जला दो, जला दो

जला दो इसे फूक डालो ये दुनिया

मेरे सामने से हटा लो ये दुनिया
तुम्हारी है तुम ही संभालो ये दुनिया

ये दुनिया अगर मिल भी जाए तो क्या है .

ஜலாதோ இஸே பூங்க் டாலோ யே துனியா

ஜலாதோ, ஜலாதோ, ஜலாதோ

ஜலாதோ இஸே பூங்க் டாலோ யே துனியா

மேரே ஸாம்னே ஸே ஹடா லோ யே துனியா

தும்ஹாரீ ஹை தும் ஜஹீ ஸ்ம்பாலோ யே துனியா

யே துனியா அகர் மில் பீ ஜாயே தோ க்யா ஹை

இந்த உலகத்தைக் கொளுத்தி விடு, ஊதி ஒன்றுமில்லாமல்  செய்துவிடு

கொளுத்திவிடு, கொளுத்திவிடு, கொளுத்திவிடு

இந்த உலகத்தைக் கொளுத்திவிடு, ஊதி இல்லாமல் செய்துவிடு

என் கண்ணெதிரிலிருந்து  இதை அகற்றிவிடு

இது உங்கள் உலகம்நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள்!

இந்த உலகம் கிடைத்தாலும் அதனால் ஆவதென்ன?

Song: Ye mehlon, ye takhton   Film: Pyaasa, 1957

Lyricist: Sahir Sudhianvi Music: S.D.Burman

Singer: Mohammad Rafi.

இசை, சாஹித்யம், பாடியவர் குரல் சிறப்பு, படமாக்கிய விதம் ஆகிய எல்லா வகையிலும் இது நமது சினிமாவில் ஒரு உன்னத இடத்தைப் பிடித்திருக்கிறது. இன்றும் இது Classic தான்.

[ இவ்விரண்டு பாடல்களும் இலக்கிய வாதிகளால் இன்றும் கொண்டாடப்படுகின்றன. திரை இசை வரலாற்றிலேயே ஒரு மைல் கல்லாக, உச்சகட்ட சாதனையாகக் கருதப்படுவது. அதனால் இவற்றை இங்கே  பார்த்தோம்.]

இப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமாயின. ஸாஹிர் லுதியான்வி  இதற்கு தன் சாஹித்யம் தான் காரணம்எஸ்.டி பர்மனின் இசையல்ல என்று வெளிப்படையாகவே சொன்னார்.. அதனால் இசையமைப்பாளரைவிட தனக்கு அதிகப் பணம் தரவேண்டும் என்று கேட்கத்தொடங்கினார். ஒரு ரூபாயாவது அதிகம் தரவேண்டும்  என்றார்

தவ்லத் கே பூகே ரவாஃஜோ கீ துனியா“- இந்த உலகம் அதிகச்செல்வத்திற்காக ஏங்குகிறது என்று இப்பாடலில் எழுதிய சோஷலிசக் கவிஞர் அதிகக் காசு கேட்டு நின்றார்! இந்த  நிலைப்பாடு முன்னணி இசையமைப்பாளர்களுக்குச் சம்மதமில்லை.அதனால் அவர்கள் ஸாஹிருடன் பணிசெய்ய இசையவில்லை.

 ஸாஹிர் பிரபல மடைய எஸ்.டி. பர்மன்  1951ல் இசையமைத்தநௌஜவான்என்ற படத்தில் வந்ததண்டீ ஹவாயே(ன்)” என்ற பாட்டுதான் காரணமானது. அதுமுதல் 1957ல் ப்யாஸா வரை இருவரும் இணைந்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பர்மன் இவருடன் தொடர்பை துண்டித்துக்கொண்டார்.

 [லதா மங்கேஷ்கர்  பாடிய இந்த தண்டீ ஹவாயே(ன்) பாட்டு நாடுமுழுதும் பிரபலமடைந்தது. இதன் மெட்டில் தமிழில்   “கொஞ்சும் புறாவே” என்று எம்.எல்.வசந்தகுமாரி பாடிய தமிழ்ப் பாடலும் ஹிட் ஆனது!  இது  நாகையாவின் “தாய் உள்ளம்” படத்தில் இடம்பெற்றது, இதன் இசையும் நாகையாவே அமைத்தார். இரவல் மெட்டாக இருந்தாலும் தமிழ் வடிவமும் சிறந்ததே எம்.எல் வி குரலும் இதற்கு வயலின் பின்னணி இசையும் அபாரம். பல முறை கேட்டு ரசிக்கலாம்.]

இந்தப் பாடல் முதல்பாடலை விடச் சிறப்பானது. பொதுவில் மனித நேயம், மனிதப் பண்புகள் குறைந்திருப்பதைச் சொல்கிறார். உலகம் வியாபார மயமாகி வருவதைச் சொல்கிறார். இதை 18ம் நூற்றண்டிலிருந்து கவிஞர்கள், கலைஞர்கள் எச்சரித்து வந்திருக்கின்றனர். கோல்ட்ஸ்மித் 1770ல் எழுதினார்:

“If to the city sped—What waits him there?
To see profusion that he must not share;
To see ten thousand baneful arts combined
To pamper luxury, and thin mankind.

[ Oliver Goldsmith: The Deserted Village]

 To thin mankind–  

மனித நேயம் குறைந்துதான் வருகிறது! 

நம் கவிஞர் குறைகளைக் கண்டார்

ஆனால் தீர்வு சொல்ல வில்லை! உலகைக் கொளுத்துவது தீர்வாகுமா

தலைவலி வந்தால் தலையையே வெட்டுவார்களா?

இந்த உலகம் பிரச்சினைகள் நிறைந்தது தான், குற்றம் குறைகள் உள்ளது தான்பல தரப்பட்ட மக்கள் வாழ்ந்துவருவதுதான்.It takes all sorts to make the world.

இது பழங்காலத்திலிருந்து நாம் பார்த்துவருவது

ஆனால் நாம் காணும்  குறைகள், குற்றங்கள் நாம் பார்க்கும் இடத்தைப் பொறுத்தது, நம் பார்வையைப் பொறுத்தது. சில சமயம் காலத்தைப் பொறுத்தது.Place and Time.

சமயம், அரசியல்சீர்திருத்தம், புரட்சி, பொருளாதாரம் , இப்போது விஞ்ஞானம் என்று எத்தனையோ வழிகளில் இதற்குத் திர்வு காண முயல்கின்றனர். இதுவரை வெற்றி பெறவில்லை.

இந்திய ஆன்மீகம் இதற்கு ஒரு வழி கண்டது. நீ உன் பார்வையை மாற்றிக்கொள் என்றது. இந்த உலகம் துக்கம் நிறைந்தது தான், அதை மாற்ற உன்னால் முடியாது, நீ உன்னை மாற்றிக்கொள் என்பது கீதை முதல் புத்தர் வரை வற்புறுத்திய விஷயம். உலகத்தையே ஒழித்துவிடு என்று சொல்லவில்லை!

We cannot control the events in the world, we can only control our reaction. This is also the essence of the Greek Stoic philosophy which reflects Indian (Hindu-Buddhist) thoughts.

ஆனால் உலகில் நல்ல விஷயங்களே இல்லையா? நல்ல இடங்களே இல்லையா? இதையும் திரைக் கவிஞர்கள் வழியில் பார்ப்போம்!

tags – ஹிந்தி படப் பாடல்கள் – 8 , funtoosh, Pyasa, S D Burman, Dev anand, Guru dutt

****

உலகின் தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள்! (Post.7833)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7833

Date uploaded in London – – 16 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில்

ஒன்பதாவது உரை

(9-3-2020 அன்று ஒலிபரப்பானது)

உலகின் தட்பவெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள்!

உலகின் இன்றைய மாபெரும் அபாயமாக கருதபப்டுவது Climate change எனப்படும் தட்பவெப்பநிலை மாற்றமே. உலகின் வெப்பம் கூடிக் கொண்டே போவதால் ஒவ்வொரு தனி மனிதனும் பாதிப்புக்குள்ளாவது நிச்சயமாகிறது.

கடந்த நூற்றாண்டுகளில் 2016ஆம் ஆண்டு தான் மிக அதிகம் வெப்பம் உடைய ஆண்டாக இருப்பது தெரிய வருகிறது. மிக அதிகமான வெப்ப அலைகள் உலகெங்கும் வீச ஆரம்பித்து விட்டது. இது இன்னும் அதிகமாகிக் கொண்டே போகும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.

கார்பன் டை ஆக்ஸைடு வளி மண்டலத்தில் அதிக அளவில் கலக்கும் போது அது போர்வை போல செயல்பட்டு  வெப்பம் வெளியே தப்பிச் செல்ல வழியில்லாது செய்து விடுகிறது. இதனால் உலகில் உஷ்ணநிலை கூடுதலாகி  பல்வேறு பயிர்களின் நாசத்தை ஏற்படுத்துகிறது; விலங்கினங்களையும் பறவையினங்களையும் அழிக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் உஷ்ணநிலை மொத்தத்தில் 10 டிகிரி பாரன்ஹீட் அதிகமாகி விடும்.

அடுத்து Glacier எனப்படும் பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கும். இதன் விளைவாக கடல் மட்டம் உயர ஆரம்பிக்கும். கடலோரப் பகுதிகள் அழிந்துவிடும். வெப்பமயமாதல் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் இந்த நூற்றாண்டின் இறுதியில் கடல் மட்டம் சுமார் 8 அடி வரை உயரக்கூடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாகும்.

வெப்பமயமாதலால் பருவம் பொய்க்கும்; அத்துடன் சீரற்ற நிலையில் ஆங்காங்கே அதிக மழை பெய்யச் செய்து ஏராளமான வெள்ள பாதிப்பை உருவாக்கும். பாதிப்பை ஏற்படுத்தும்.

சூறாவளிகள் அடிக்கடி உருவாகி பெருமளவில் மக்கள் வாழும் குடியிருப்புகளை அழிக்கும் அபாயமும் ஏற்படும். மிகப் பெரும் சூறாவளிகள் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் என்ற நிலை மாறி 16 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து பெருமளவில் அழிவை ஏற்படுத்தும்.

மிகப் பெரிய அளவில் பஞ்சத்தை ஏற்படுத்தி வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சுமார் 80 கோடிப் பேரைப் பெருமளவில் பாதிக்கும். அத்துடன் வாழ்விடங்களும் குடியிருப்புகளும் அழிக்கப்படுவதால் சுமார் 10 கோடிப் பேர் பாதிக்கப்பட்டு வீடுகளை இழப்பர்.உலகில் உள்ள பவழப்ப்பாறைகளில் 70 விழுக்காடு அழியும் அபாயமும் ஏற்படும்.

இந்த அபாயத்தைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடைச் சேர விடாமல் செய்வ்தே. இதற்கு வாகனங்களே காரணம் என்பதால் படிம எரிபொருளான பெட்ரோல் மற்றும் டீஸல் பயன்பாடு கட்டுப் படுத்தப்பட வேண்டும். பெட்ரோல் வாகனங்களைத் தவிர்ப்பதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அனைவரும் மாறுவதும் ஒரு சிறந்த வழியாக அமையும்.

Script by S.Nagarajan (ச.நாகராஜன்)

tags- உலக, தட்ப வெப்ப நிலை, விளைவுகள்.

SWAMI CROSSWORD 1542020 (Post No.7832)

SWAMI CROSSWORD 1542020 (Post No.7832)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7832

Date uploaded in London – 15 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ACROSS

1. – (7) greatest Sanskrit poet, playwright

6.–(6) humans who through merit and yogic practices become semi divine, gaining psychic and super human powers, known as Siddhis

8.  –(6)- Mind born; a lake near Kailas; now both are in China

9. –(6)- Hindus preferred star day for marriages; Tamil Sangam verses Akam.86 and 136 praise this star

DOWN

1.—(7) – Indian state which got the name of Kashyapa Rishi with capital in Goddess name

2. (5)-  First of the 8 Supernatural Powers of Hindu Yogis, becoming minute like Anu/Atom

3.–(5) – Greeks and Persians called Bharat with this name.

4.AGAMA – (5) – Books of Rules for Temple Rituals and Temple priests.

5. – (7) – The celestial cow, fabled cow of plenty; Kamadhenu’s another name

7.– (5)- smiling, charming, laughing; it is masculine name ; if one adds ‘I ‘ sound it becomes feminine name

TAMIL SIDDHARS AND VEDIC SYMBOLISM IN POETRY (Post No.7831)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7831

Date uploaded in London – 15 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

It will be interesting to compare the symbolism in Vedas and Tamil Siidhar songs though they are separated in time by thousands of years. Vedic seers said openly they enjoy using mystic and mysterious language. They used coded language. Orthodox Hindus believe that Vedas are followed for its magical sound effect and literal meaning is not important. Even Shankaracharyas don’t quote Sayana’s commentaries. They still follow the orthodox school. But Westerners translated Vedas in French, German and English and started interpreting them in their own way. Tamil Siddhars are not known to them and so they don’t understand the symbolic language.

Who are Siddhars? What is the meaning of Siddhar?

Siddhar is a Sanskrit word. Siddhar means one who has attained ‘Siddhi’, i.e. special psychic and supernatural powers which has been defined eight fold in the science of Yoga (Ashta Ma Siddhi- Eight Great Supernatural powers) . The term has been loosely used and understood to denote a certain category of mystic poets , who were grim and uncouth ascetics credited with supernatural powers.

A floating tradition has it that there are Eighteen Siddhars; but there are more than 18 siddhars, some are known only locally.

Tamil literature is rich in religious and philosophic poetry. In fact, Tamils produced more religious poetry than Sanskrit writers if we take the last 15 centuries into account. Kanchi Paramacharya(1894-1994)  also highlighted this point in his discourses.

Siddha verses are famous for their brevity, terseness, epigrammatic and enigmatic symbolism. They are iconoclasts. They threw out the old rules and rituals in the wind. Because of this anti- Agamic approach orthodox Saivites ignored them. But some like Tirumular, Karuvur Thevar and Tirumaligai Thevar are recognised and their verses are included in the Saivite canonical literature known as Panniru Tirumurai (12 Holy Books/Compilations)

To almost all the Tamil Siddhars, Lord Shiva is the Supreme God. But there is a tradition recorded in the ‘Guruparampara’ that Vaishnavite Nathamuni was a Yogi and Siddhar. He taught Yoga to his disciple Kurugal Kavalappan. But when Nathamuni tried to teach Yoga to Uyyakkondar, another disciple of his, he declined it and remained as an ordinary devotee.

The siddhars are seers and highly evolved and realized souls. They are not agnostics. They had faith in the divine essence of man and his capacity to become a superman and even to work miracles by developing his latent powers by Yoga. They allowed all castes to follow them or practise what they teach. Unlike devotional poets most of the Siddhars were celibates. They criticised sensual pleasures

Bur they emphasised all that is said in devotional poetry, which are older by several centuries. Only difference was that devotional poets respected Agamic rules, Temples and Rituals. Following are the common things between the two groups:

1.Belief in Divine Essence of Man

2.Man is mortal and sensual pleasures are short lived .

3.Wealth and material comforts are impediments to virtue, moral well- being and spiritual endeavour.

4.Caste is no bar. Anyone can reach god .

Main difference is

1.To siddhars religious institutions , festivals or rituals and conformity of any kind whatsoever are not important.

2.Siddhars used herbs and Kaya kalpam (elixir) to prolong life span. They did research in herbal cure and wrote books.  They also believed in philosopher’s stone  which converted base metals in to silver and gold.

Sufis and Siddhas

A V Subramaniya Aiyar in his book ‘The Poetry and the Philosophy of the Tamil Siddhars’ compared the Tamil Siddhas with the Sufis of Islam and Gnostics of Europe:-

“ The Islamic Sufis appear to have been similar to the Tamil Siddhars. Sufism is defined ‘ as a total disengage ment of the mind from all temporal concerns  and worldly pursuits; an entire throwing off, not only of every superstition, doubt or the like , but of practical mode of worship, ceremonies etc. laid down in every religion’.

Christianity also had the antitypes of the Tamil Siddhars in the early Gnostics of Europe. St .Francis of Azzizi , can be compared to mystic poets of India

Characteristics of Siddha Poetry

On the whole , the literature of Siddhars  is inferior to the hymnal literature of Saivism and Vaishnavism

They adopted common speech for poetry.

They did not leave their life history or biographical details in their poems.

All we know about them comes from the traditional accounts written later.

Thiru vilaiyadal Puranam in Tamil, written by Paranjothi Munivar, refers to many Siddhas including Idaikkadar.

xxx

I will compare one or two Rig Vedic Mantras with the  Siddha Poetry:-

Tamil Siddha Sivavakkiyar and Tirumazisai Alvar (not a Siddhar but one of the 12 Alvars) both used same symbolism in their verses.

A rough translation of one of the verses runs like this-

8+8 and as 8 and 7+7 as 7

8 and 3 and became 1 as the original Deva

And as 8 pada/beda, reciting His name

Those who recite  8 letters will live without Troubles.

These verses are composed with rhyme and rhythm but wont make any sense without a commentary. And even commentators can interpret it differently.

This is approximately 1200 year old.

Let us compare it with the most difficult Hymn of the blind poet of Rig Veda Dirga Tamas (literally Mr Long Darkness) RV.10-164.

Ludwig and others consider it the most difficult one.

Out of the 52 mantras in this verse we will take the first three stanzas or mantras –

1).“Of this benignant priest with eld grey coloured , the brother of the 3 is lightning

 midmost

The THIRD is he whose back oil is sprinkled. Here I behold the chief with 7 children.

2.) Seven to the one wheeled chariot yoke the course; bearing 7 names the single courser draws it.

Three – naved the wheel is, sound and decaying, whereupon are resting all these worlds of being

3). The 7  who on the 7 wheeled car are mounted have horses , 7 in tale, who draw them onward.

7 sisters utter songs of praise together, in whom the names of 7 cows are treasured.

Out of 52 mantras in this particular hymn I have given the first three mantras/stanzas.

Further down he uses 720, 360, 12, 6, 3, 5, 33, 6, 2, 4 etc. in other mantras; we know he is singing about 360 nights and 360 days , but other numbers are with obscure meaning. Commentators use “it MAY mean”, “It is PROBABLY” , “PERHAPS he says”etc.

If we find it difficult to understand simple Tamil worded symbolism of yesterday’s Siddhas how are we going to get the meaning of Dirgatamas verse who lived many thousand years before our time?

tags – Tamil Siddhas, Siddhar, Symbolism, Sufi, Gnostic,Dirgatamas, RV 10-164, Sivavakkiyar, Tirumzisai alvar.

–subham–