அன்னிய மத மன்னர்களுக்கும் அருளிய மகான்கள்!

tansen

தான்ஸேன்   தபால்தலை

Written  by S NAGARAJAN

Article No. 1963

Dated 30 ஜூன் 2015.

Uploaded at London time : 7-47 am

By ச.நாகராஜன்

மகமதிய படையெடுப்பு

வில் டியூரண்ட் என்ற பிரபல அறிஞர் மனித குலத்தின் சரித்திரத்தை எழுதும் போது மனித குல சரித்திரத்திலேயே இந்தியாவின் மீதான முகமதியர்களின் படையெடுப்பு தான் மகா மோசமானது என வர்ணிக்கிறார். அழிந்த ஆலயங்கள் ஆயிரக் கணக்கில்; வதை பட்ட ஹிந்துக்களோ பல்லாயிரக் கணக்கில்!

என்றாலும் கூட இந்த தேசத்தையும் அதன் பண்பையும் அழிந்து விடாமல் காக்க இந்த மோசமான கால கட்டங்களிலும் மகான்கள் தோன்றி ஒரு பெரும் அரணாக விளங்கி ஹிந்து மதத்தைக் காத்து வந்துள்ளனர். சமர்த்த ராமதாஸர் – சிவாஜி, வித்யாரண்யர் – ஹரிஹர புக்கர் போன்ற ஏராளமான உதாரணங்கள் இந்த சரித்திரத்தில் உள்ளன. இந்த சரித்திரத்தின் தொடர் வரிசையில் அக்பரின் வாழ்விலும் ஔரங்கசீப் வாழ்விலும் ஏற்பட்ட இரு சம்பவங்கள் பிரமிப்பை ஊட்டுபவை.

அக்பரும் தான்ஸேனும்

அக்பர் காலத்தில் பிரசித்தி பெற்ற பாடகராக விளங்கிய தான்ஸேன் ஒப்புவமை இல்லாத உயர்ந்த இசை விற்பன்னராகத் திகழ்ந்தார். தனது அரசவையில் இப்படிப்பட்ட பெரும் பாடகர் இருப்பது குறித்து அக்பருக்கு சொல்லவொண்ணாப் பெருமை.ஒரு சமயம் தான்ஸேன் பாடக் கேட்ட அக்பர் அப்படியே உருகி விட்டார். கண்கள் ஆறாய்ப் பொழிய பாட்டு முடிந்த பின்னரும் நெடு நேரம் அப்படியே உருகிப் போய் அமர்ந்திருந்தார். அவையினரும் அப்படியே மெய்மறந்து இருந்தனர். நேரம் சென்றது. மெதுவாகத் தன் இயல்பு நிலைக்குத் திரும்பிய அக்பர் தான்ஸேனை தழுவிப் புகழ்ந்து, “எனக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி ஒரு மனிதனால் இப்படிப்பட்ட தேவ கானத்தைத் தர முடியும்? இது எப்படி உங்களுக்கு வந்தது. காரணத்தைக் கட்டாயம் கூற வேண்டும்!” என்றார்.

தான்ஸேன், “இசை நுணுக்கங்களையும் நுண்ணிய உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளும் என்னிடம் சிறிதளவே இருக்கின்றன! இதையே இப்படிப் புகழ்கிறீர்களே! இதற்கெல்லாம் காரணமான என் குரு நாதரின் இசையைக் கேட்டால் நீங்கள் எப்படி உணர்வீர்களோ! என் சிறிதளவு திறமைக்கு என் குருநாதர் போட்ட பிச்சையே காரணம்!” என்று அடக்கத்துடன் கூறினார்.

அக்பர் எல்லையற்ற ஆர்வத்துடன், “உடனே உங்கள் குருநாதரை அரசவைக்கு அழைத்து வாருங்கள். அவரை நன்கு கௌரவிக்க வேண்டும்” என்றார்.

தான்ஸேனோ, “அரசே! என் குருநாதர் வனத்தில் குடில் ஒன்றைக் கட்டிக் கொண்டு இறைவன் புகழ் பாடி வாழ்ந்து வருபவர். அவர் பொன்னுக்கும் புகழுக்கும் ஆசைப் படுபவர் இல்லை” என்று பணிவுடன் கூறினார்.

அக்பருக்கு ஒரே ஆச்சரியம். பேரரசனான தன்னைப் பார்க்கக் கூட விரும்பாத ஒரு ‘மனிதர்’ இருக்க முடியுமா என்ன?! அவர் யோசித்தார். தான்ஸேனை நோக்கி, “சரி, அவர் இங்கு வராவிட்டால் என்ன? நான் அவர் இருக்குமிடம் வருகிறேன். அவருக்கே தெரியாமல் செல்வோம். குடிலின் அருகில் என்னை அழைத்துச் செல்லுங்கள்” என்றார்.

ஆரவாரமின்றி அக்பரின் சிறு படை குடிலை நோக்கிச் சென்றது. ஒரு பல்லக்கில் பொன் நாணயங்களும் பவளம், முத்து, வைரம் முதலிய நவமணிகள் தட்டு தட்டாக எடுத்துச் செல்லப்பட்டன. குடிலுக்கு அருகில் யாரையும் வரவிடாது தான்ஸேனும் அக்பரும் மட்டும் சென்றனர்.

ஆஹா, அற்புதமான கான மழை பொழிந்து கொண்டிருந்தது. அக்பர் பிரமித்து சிலை போல நின்றார். தான்ஸேனை விட பல மடங்கு உணர்ச்சி பாவங்களை எழுப்பிய அந்த இசையில் அவர் முற்றிலுமாகக் கரைந்து போனார்.

வீசி எறியப்பட்ட நவமணிகள்

நீண்ட இசை நின்றது. அக்பர் சுய உணர்வுக்குத் திரும்பினார். ஏவலாள்களை அழைத்து அனைத்துத் தட்டுக்களையும் கொண்டு வரச் சொன்னார். வைரங்களையும், முத்துக்களையும், பவழம், கோமேதகம், பொன் நாணயங்கள் அனைத்தையும் இரு கரங்களாலும் வாரி வாரி எடுத்து குடிலின் முன் புறம் வீசலானார்.

தான்ஸேன் திகைத்து நின்றார். என்ன இது? அக்பரை நோக்கி, “அரசே! என்ன, இப்படிச் செய்கிறீர்கள்?” என்றார்.

“தான்ஸேன்! இந்த நவ மணிகளையும் பொற்காசுகளையும் கொடுத்து இவரைக் கௌரவிக்க நான் இங்கே வந்தது உண்மை தான்! ஆனால் இறைவனைப் பாடி இவர் உதிர்த்த ஸ்வர வரிசைகளுக்கு முன்னர் என் மணிகள் எம்மாத்திரம்! இறைவனைப் பற்றிய இசை மணிகள் அல்லவோ மணிகள்!” அது தான் ஒன்றுக்கும் உதவாத இவற்றை அவர் குடில் முன்னேயே வீசி எறிந்து விட்டேன். வாருங்கள், உள்ளே சென்று அவரை வணங்கி வருவோம்!” என்றார் அக்பர்.

எல்லையற்ற மகிழ்ச்சியுடன் தான்ஸேன் அக்பரை தன் குருநாதரான ஹரிதாஸ் ஸ்வாமியிடம் அழைத்துச் சென்றார். ஹரிதாஸர் அக்பரை ஆசீர்வதித்து இறைவன் ஒருவனே என்பதையும் அவனைப் பல வழிகளிலும் அடையலாம் என்பதையும் உணர்த்தினார்.

பல மதங்களையும் ஒன்று இணைத்து தீன் இலாஹி காண அக்பரை உத்வேகமூட்டிய சம்பவங்களுள் இது முக்கியமான ஒன்று!

kumaraguruparar-1

ஔரங்கசீப்பும் குமரகுருபரரும்

அக்பரின் கால கட்டத்திற்குப் பின்னர் டில்லி பாதுஷாவாக அரசாண்ட ஔரங்கசீப்பைக் காண அருளாளரான குமர குருபரர் விரும்பினார். (சிலர் காசியை ஆண்ட பாதுஷாவையே குமரகுருபரர் கண்டதாகக் கூறுவதும் உண்டு) காசியில் ஓரிடத்தைக் கேட்டு அங்கு ஒரு மடம் அமைக்க வேண்டும் என்பது அவரது உன்னத நோக்கம். சைவம் பரப்பும் ஒரு மடத்தைக் காசியில் அதுவும் ஔரங்கசீப்பின் அனுமதி பெற்று அமைக்க முடியுமா! யாருக்கும் நம்பிக்கை இல்லை.

அரசனைப் பேட்டி காண அரசவைக்கு வந்த குமரகுருபரர் திடீரென அரசன் பேசும்  அவனது மொழியிலேயே பேசலானார்.

முதல் நாள் சரஸ்வதியை துதி செய்து சகலகலாவல்லி மாலையை அவர் இயற்றி  அநுக்ரஹம் பெற்று அரசனுடன் பேச அவன் அறிந்ததற்கும் மேலாக அந்த மொழியில் புலமை பெற்றிருந்தார். பாதுஷா திடுக்கிட்டார். குமரகுருபரருக்கு ஆசனம் கொடுக்காமல் அவரை எதிரிலே நிறுத்தி, “என்ன விஷயம்!” என்று கேட்டார்.

சிங்கமே சரியாசனம்

தனக்கு ஆசனம் தரப்படாததை எண்ணிய குமரகுருபரர், ஒரு சிங்கத்தை வரவழைத்து அதன் முதுகின் மீது அமர்ந்தார். அரசவையில் உள்ளோர் பயந்தனர்; திடுக்கிட்டனர்; பிரமித்தனர். பாதுஷா கேள்விகளைக் கேட்க குமரகுருபரர் பதில் சொல்ல, அனைவருக்கும் அவரது மெய்ஞானத்தைப் பற்றிய மெய் சிலிர்ப்பு ஏற்பட்டது. மறுத்துக் கூற முடியாத இறை மொழிகள்!

அரசனிடம் மகமதிய குருமார்கள் சென்று, “இவரது தெய்வம் உண்மை என்றால் பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையில் ஏந்தி பதில் தரச் சொல்லுங்கள்” என்றனர்.

குமரகுருபரர் புன்சிரிப்போடு அந்த சவாலை ஏற்றார். பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டைக் கையில் ஏந்தி இன்னும் ஆணித்தரமாக உவமைகளுடன் தன் பதில்களைக் கூறினார். அடுத்து என்ன செய்வது?! தன் பதில்களைக் கூறிய குமரகுருபரர், பாதுஷாவை நோக்கி, “மன்னா! நான் இதைப் பிடித்தவாறே என் தெய்வத்தின் துணையோடு பதில்களைக் கூறி விட்டேன். இப்போது இவர்கள் முறை!” என்றார். பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கும் அவரின் கேள்விகளுக்கும் பயந்த அவர்கள் அனைவரும் வெளியே ஓடினர்.. பாதுஷா அவரை வணங்கித் தன் கடைசி சோதனையைச் செய்தான். அனைவரும் சமம் எனில் தன்னுடன் விருந்துண்ண முடியுமா என்பதே அவன் கேள்வி. ஒரு செவ்வலரி மலரைத் தட்டில் வைத்து அதை மூடி மன்னனிடம் குருபரர் அளித்தார். அதில் என்ன இருக்கிறது என்று பாதுஷா கேட்க பன்றியின் மாமிசம் என்று அவர் பதிலளித்தார். பாதுஷா வெறுப்புடன் விழித்துப் பார்க்க, “அனைத்துமே சமம் என்று பாருங்கள்” என்று கூறிய குமரகுருபரர் விருந்தில் வைக்கப்பட்ட புலால் வகை உணவுகளை சைவ உணவுகளாக மாற்றி அனைவரையும் திகைக்க வைத்தார்.

 

ஶ்ரீ காசி மடம் உருவானது

எல்லையற்ற விளையாட்டின் முடிவில் அவரின் மெய்யான நிலைகயைக் கண்ட பாதுஷா, “உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும், கூறுங்கள்” என்று பணிவுடன் வினவினான்.

“மடம் ஒன்றைக் காசியில் துவங்க நமக்கு உத்தேசம். அதற்கு இடத்தையும் இதர வசதிகளையும் செய்ய வேண்டும்” என்று அருளினார் குமரகுருபரர்.

ஶ்ரீ காசி மடம் உருவானது; பாதுகாப்புடன் அது அன்னியர் காலத்தில் நடந்ததோடு சைவ சமயத்தைப் பரப்ப ஆரம்பித்தது.

இன்றும் காசியில் அற்புதமாக நடந்து வரும் ஶ்ரீ காசி மடம் உருவான வரலாறு இது தான்!

மிக பிரம்மாண்டமான ஆலமரமான ஹிந்து மதத்தின் விழுதுகள் போல அவ்வப்பொழுது தோன்றிய மகான்கள் ஏராளம்; அவர்கள் அருளிய விளையாடல்களும் ஏராளம்.

சகலகலாவல்லி மாலை உள்ளிட்ட அருள் நூல்களைப் படித்து ஹிந்து மதத்தின் எல்லையற்ற பெருமையை உணர்வோம்; அதை ஏற்றம் பெறச் செய்து ஏற்றமுறுவோம்!
நன்றி ஞான ஆலயம்

(This article was written by my brother S Nagarajan for Jnana alayam magazine:London swaminathan.)

ஜூலை 2015 ஞான ஆலயம் இதழில் வெளியான கட்டுரை

குமரகுருபரர் அருளிய சகலகலா வல்லி மாலை

saras hindi
Saraswati stamp issued during World Hindi Conference

(With English Translation of Sakala Kala Valli Malai)

Compiled by London Swaminathan

Post No.1321; Dated 1st October 2014.

வெண் தாமரைக்கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளையுள்ளத்
தண் தாமரைக்கு தகாது கொலோ சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலா வல்லியே.

சகம் ஏழும் அளித்து

உண்டான் உறங்க

ஒழித்தான் பித்தாக

உண்டாக்கும் வண்ணம் கண்டான்

சுவைகொள் கரும்பே !

சகலகலா வல்லியே. !

நின்பதம் தாங்க

வெண் தாமரைக்கு அன்றி

என் வெள்ளை உள்ளம்

தண் தாமரைக்கு

தகாது கொலோ?

1.Saraswathi, Goddess of Learning! While the Lord of Preservation is asleep and the Lord of Dissolution has gone crazy and the Lord of Creation is happy in you- his sweet consort. Your abode is in the white lotus. But can you not condescend to rest your feet on the cool lotus of my simple heart?
sarastelegu
Saraswati Stamp issued during World Telugu Conference

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும் பொற்கொடியே கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலா வல்லியே.

பங்கய ஆசனத்தில்

கூடும் பசும் பொன் கொடியே !

கனதனக் குன்றும்

ஐம்பால் காடும்

சுமக்கும் கரும்பே !

சகலகலா வல்லியே. !

நாடும் பொருள் சுவை சொற்சுவை தோய்தர

நாற்கவியும் பாடும் பணியில்

பணித்து அருள்வாய்

2. Goddess of all Learning! Goddess of beautiful breasts and five styled hair! Goddess of slender golden figure who rests in the lotus throne! May you graciously make me sing songs in the four genres, songs with beautiful ideas, couched in sweet language.
(Five Different styles of Hair Do are known as Aimpal Kunthal in Tamil: The five different hairdos are Kondai , Surul , Kuzal, Panichai, Mudi in Tamil.
Four different genres are 1. Asu Kavi: extempore poetry, 2.Madura Kavi= sweet poems set to music, 3.Chitra Kavi= poems composed which will fit into the drawn figure such as Chariot, Snake, Peacock etc. and 4.Visththara Kavi= detailed compositions.

sarasthanjavur

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்கென்று கூடும் கொலோவுளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே சகலகலா வல்லியே.

உளம் கொண்டு தெள்ளித் தெளிக்கும்

பனுவல் புலவோர்

கவிமழை சிந்தக்கண்டு

களிக்கும் கலாப மயிலே !

சகலகலா வல்லியே. !

அளிக்கும்

செழும் தமிழ்த் தெள் அமுது

ஆர்ந்து

உன் அருட்கடலில்

குளிக்கும் படிக்கு

என்று கூடும் கொலோ?

3. Goddess of all Learning! The peacock dances in ecstasy on the approach of showers. So also you rejoice when the poets rain showers of song of deep thinking and clear expression. When shall I experience the beauty of Tamil, the crystalline nectar that you can bestow? When shall I immerse myself in the ocean of Your Grace?

SA saraswati
Saraswati in Saudi Arabia

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய்
வாக்கும் பெருக பணித்தருள்வாய் வட நூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ் செல்வமும் தொண்டர் செந்நாவினின்று
காக்கும் கருணைக் கடலே சகலகலா வல்லியே.

வட நூல் கடலும்

தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும்

தொண்டர் செந்நாவில் நின்று

காக்கும் கருணைக் கடலே !

சகலகலா வல்லியே.!

தூக்கும் பனுவல்

துறைதோய்ந்த கல்வியும்

சொற்சுவை தோய்

வாக்கும் பெருக பணித்து அருள்வாய்

4. Goddess of all Learning! Ocean of Mercy! You rest on the grateful tongues (lips) of poets and preserve the sea of Sanskrit scholarship and the rich heritage of Tamil songs. May you grant that I become proficient in the deep and varied branches of Learning! May you grant me the gift of singing felicitous songs!

thailandfiscal saras
Saraswati on Thailand Fiscal Stamp

பஞ்சப்பு இதம் தரும் செய்ய பொற்பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்தலராதென்னே நெடுந்தாட்கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவி சொத்திருந்தாய் சகலகலா வல்லியே.

நெடும் தாள் கமலத்து

அஞ்சம் துவசம் உயர்த்தோன்

செந்நாவும் அகமும்

வெள்ளைக் கஞ்சம்

தவிசு ஒத்து இருந்தாய்

சகலகலா வல்லியே. !

பஞ்சு அப்பு இதம் தரும்

செய்ய பொன் பாத பங்கேருகம்

என் நெஞ்சம் தடத்து

அலராதது என்னே?

5. Goddess of all Learning! You rest, as on the lotus throne, on the tongue (lips) and the heart of Brahma, the Creator whose banner depicts the Swan which rests on the lotus with long stalk. Your beautiful soft lotus feet are painted with rouge. Cannot those lotus feet bloom in the cool waters of my heart?
saras

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல் காய் எழுதாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலுமன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலா வல்லியே

எழுதா மறையும்

விண்ணும் புவியும்

புனலும் கனலும்

வெம்காலும்

அன்பர் கண்ணும் கருத்தும்

நிறைந்தாய்

சகலகலா வல்லியே !

பண்ணும் பரதமும்

கல்வியும் தீஞ்சொல் பனுவலும்

யான் எண்ணும் பொழுது

எளிது எய்த நல்காய்

6. Goddess of all Learning! You pervade everything: you pervade the Vedas, the five elements, namely, ether, air, water, fire and the earth; you fill the vision and the hearts of Your devotees. Grant me this boon; make me proficient in all the arts whenever I wish. Make me proficient in music, in dance, in learning and in singing sweet poems.

Saraswati_by_bpresing

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கண்நல் காய் உளங்கொண்டுதொண்டர்
தீட்டும் கலைத் தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ளோதிமப் பேடே சகலகலா வல்லியே.

தொண்டர் உளம் கொண்டு

தீட்டும் கலைத் தமிழ்

தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்

காட்டும் வெள் ஓதிமப் பேடே !

சகலகலா வல்லியே. !

பாட்டும் பொருளும்

பொருளால் பொருந்தும் பயனும்

என்பால் கூட்டும் படி

நின் கடைக்கண் நல்காய்

7. Goddess of all Learning! Like the white swan which separates water from milk, you also show discrimination in approving of the songs sung poets. Grant me Your benign look: vouchsafe unto me this boon that all song, meaning of song and the goal of all singing, namely, righteousness, wealth and happiness, be integrated in my life.

saras green

சொல்விற் பனமும் அவதானமும் கல்வி சொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளிநாசனம் சேர்
செல்விக்கு அரிதென்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகலகலா வல்லியே.

நளின ஆசனம் சேர்

செல்விக்கு அரிது என்று

ஒருகாலமும் சிதையாமை நல்கும்

கல்விப் பெரும் செல்வப் பேறே !

சகலகலா வல்லியே. !

சொல் விற்பனமும்

அவதானமும்

கல்வி சொல்லவல்ல நல்வித்தையும்

தந்து அடிமை கொள்வாய்

8. Goddess of all Learning! You are the giver of the supreme everlasting wealth, namely the imperishable wealth of wisdom through learning. The Goddess of Wealth, Lakshmi, who has her abode in the red lotus, cannot bestow this wealth. Grant me eloquence of tongue, skill of attending to many things simultaneously, and the art of singing good songs. Grant me this boon and make me your servant.

saraswathy

சொற்கும் பொருட்கும் உயிரா மெய்ஞ்ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலத் தோய் புழக்கை
நற் குஞ்சரத்தின் பிடியோடு அரச அன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத்தாளே சகலகலா வல்லியே.

நிலம் தோய் புழக்கை

நல் குஞ்சரத்தின் பிடியோடு

அரச அன்னம் நாண

நடைகற்கும் பத அம்புயத்தாளே !

சகலகலா வல்லியே. !

சொற்கும் பொருட்கும் உயிர் ஆம்

மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?

9. Goddess of all Learning! The female elephant and the queen swan are celebrated for the beauty of their gait. But they pale into insignificance before the graceful gait of your lotus feet. You are the Manifest form of True Wisdom that pervades all word and thought. Who can comprehend you?

kumaraguruparar-1
Kumaragurupara, author of Sakala Kala Valli Malai

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலா வல்லியே

படைப்போன் முதலாம்

விண்கண்ட தெய்வம்
பல்கோடி உண்டேனும்
விளம்பில் உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ?

சகல கலா வல்லியே !

மண்கண்ட

வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்
பண் கண்ட அளவில்
பணியச் செய்வாய்

10. Goddess of all Learning! There are myriads of Gods, and celestial beings like the Creator. But is there one to equal you? Grant me this boon that all monarchs, who rule over the earth, bow unto me the moment I sing my poems.
English Translation of Sakalakalavallai malai from The Tanjore Art Gallery Guide Book, year 1954

09TH_SARASWATHI__1481666f
Saraswathi statue in Washington,USA.

contact swami_48@yahoo.com
*******************

கருமமே கண்ணாயினார்!

kumaragurupara

16.சம்ஸ்கிருதச் செல்வம்

ச.நாகராஜன்

சம்ஸ்கிருத இலக்கியத்தில் தனக்கென அழியாத இடத்தைப் பெற்ற மாபெரும் கவிஞரான பர்த்ருஹரியின் நீதி சதகத்திலிருந்து ஒரு பாடலை முன்பு பார்த்தோம்.(அத்தியாயம் 9). இன்னொரு பாடலை இப்போது பார்க்கலாம்.

ஒரு தீரனான மனிதன் கார்ய சித்தியைப் பெறுவது பற்றி அழகுற நீதி சதகத்தில் 73ஆம் பாடலில் கூறுகிறார் அவர். பாடல் இதோ:

க்வசித் ப்ருத்வீசய்ய: க்வசிதபி பர்யங்க ஸயக:
க்வசித் சாகாஹார: க்வசிதபிச ஸால்யோ தன ருசி: I
க்வசித் கந்தாதாரீ க்வசிதபிச திவ்யாம்பரதர:
மநஸ்வீ கார்யார்த்தி ந கணயதி துக்கம் ந ச சுகம் II

கார்யார்த்தி : கார்யசித்தி பெற விரும்பும் (ஒரு காரியத்தில் வெற்றி பெற விரும்பும்)
மநஸ்வீ : தீரனான ஒரு மனிதன்
துக்கம் : துக்கத்தையோ
சுகம் : சுகத்தையோ
ந கணயதி : பாராட்ட மாட்டான்
க்வசித் ப்ருத்வீசய்ய: : சில சந்தர்ப்பங்களில் வெறும் பூமியில் படுப்பான்
க்வசிதபி பர்யங்க ஸயக: : வேறு சந்தர்ப்பத்தில் உயர்ந்த கட்டிலிலும் படுப்பான்
க்வசித் சாகாஹார: : ஒரு சமயம் வெறும் காய் கிழங்குகளையே புசிப்பான்
க்வசித் ஸால்யோ தன ருசி: : இன்னொரு சமயம் உயர்ந்த சம்பா அரிசி சாதத்தைப் புசிப்பதில் ருசி கொள்வான்
க்வசித் கந்தாதாரீ : ஒரு சமயம் கந்தை ஆடையை அணிவான்
க்வசிதபிச திவ்யாம்பரதர: : இன்னொரு சமயமோ திவ்யமான ஆடையை அணிவான்

ஆக வெற்றியை விரும்பும் ஒரு மனிதன் சுக துக்கங்களைப் பொருட்படுத்தமாட்டான். இப்படி வெற்றி பெற இலக்கணம் வகுக்கிறார் பர்த்ருஹரி.

இந்தப் பாடலை குமர குருபரர் எழுதிய பாடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். நீதி நெறி விளக்கத்தில் 53ஆவது பாடலாக இது மலர்கிறது.

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் கண் துஞ்சார்,
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்

இதன் பொருள்: ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று முனைப்புடன் இறங்கியவர்கள் தனது உடலில் உண்டாகும் நோவைப் பொருட்படுத்தமாட்டார் பசியைப் பார்க்க மாட்டார், தூங்க மாட்டார், யார் தீங்கு செய்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்,காலத்தின் அருமையைப் பற்றியும் கவலைப்படமாட்டார். அடுத்தவர் கூறும் அவமதிப்பான சொற்களைக் கேட்கமாட்டார் தங்கள் காரியத்திலேயே கண்ணாயிருந்து அதில் வெற்றி பெறுவதிலேயே கவனமாக இருப்பார்.

எடுத்த காரியத்திற்குத் தடைகள் செய்வோர் ஏராளம். அதை விட்டு விடுமாறு கூறுவதோடு அவமதிப்பைச் செய்வோரும் ஏராளம்.ஆனால் அதையெல்லாம் மீறி தனது உறுதியை விடாமல் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுபவனே உண்மையில் தீரன் ஆவான்.

புராணங்களில் புகழுடன் திகழும் துருவன், நசிகேதன், பகீரதன் என ஏராளமானோர் நமக்கு உத்வேகம் ஊட்டுகின்றனர்.
நல்ல காரியத்தை லட்சியமாகக் கொள்வோம்; அதை முடித்து வெற்றியும் பெறுவோம்!

நாகராஜன் எழுதிய 60 கட்டுரைகளும் லண்டன் சுவாமிநாதன் 600 (60+600=660) கட்டுரைகளும் இந்த பிளாக்கில் கிடைக்கும். படித்து மகிழ்க.