WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,224
Date uploaded in London – 18 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷித செல்வம்
காக்கைகள் கூவும் போது குயில் ஓசை எடுபடுமா?
ச.நாகராஜன்
சரோஜா பட் தொகுத்த சுபாஷித சதகம் என்ற நூலிலிருந்து சில சுபாஷிதங்களைப் பார்த்தோம். இதோ இன்னும் ஐந்து சுபாஷிதங்கள்
கோலாஹலே காககுலஸ்ய ஜாதே விராஜதே கோகிலகூஜிதம் கிம் |
பரஸ்பரம் சம்வததாம் கலானாம் மௌனம் விதேயம் சததம் சுதீபி: ||
காகங்கள் பல கூடி ‘கா, கா’ என்று கரையும் போது குயிலின் இனிமையான ஓசை எடுபடுமோ? ரௌடிகள் பலர் கூடி தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருக்கும் போது அறிவாளியான ஒருவன் மௌனமாகவே இருக்க வேண்டும்.
Does the cooing of a cuckoo appeal pleasing amidst the din and noise created by a flock of crows? When wicked people are arguing with each other a wise man should always keep silent.
*
சத்சங்காத் பவதி ஹி சாதுதா கலானாம்
சாதூனாம் ந ஹி கலசங்கமாத் கலத்வம் |
ஆமோதம் குஸுமபவம் ம்ருதேவ தத்தே
ம்ருதகந்தம் ந ஹி குஸுமானி தாரயந்தி ||
கெட்டவர்களும் கூட நல்லவர்கள் சேர்க்கையால் நல்லவர் ஆவர். ஆனால் நல்லவர்களோ கெட்டவர் சேர்க்கையால் கெட்டவர் ஆக மாட்டார். பூமியானது மலர்களின் சுகந்த வாசனையால் வாசனையுறுகிறது. ஆனால் மலர்களோ பூமியின் கெட்ட நாற்றத்தைத் தாம் கொள்வதில்லை.
Bad people become good in the company of the good. But the good do not become bad in the company of the bad. The earth bears the fragrance of the flowers. But the flowers do not carry the smell of the earth.
*
சுஜனோ ந யாதி வைரம் பரஹிதநிரதோ விநாசகாலேபி |
சேதேபி சந்தனதரு: சுரபயதி முகம் குடாரஸ்ய ||
ஒரு நல்லவன் மற்றவர்களுக்கு நல்லதைச் செய்யும் போது தான் அழிந்தாலும் கூட கெடுதலைச் செய்ய மாட்டான். சந்தன மரமானது தன்னை வெட்டித் தள்ளும் கோடாலியைக் கூட மணக்க வைக்கிறது.
A virtuous person engaged in doing good to others does not become inimical even at the time of (his own) destruction. The sandal wood tree makes the blade of the axe fragrant even when it is being cut.
*
சத்பிஸ்து லீலயா ப்ரோக்தம் ஷிலாலிகிதமக்ஷரம் |
அசத்பி: ஷபதேனாபி ஜலே லிகிதமக்ஷரம் ||
விளையாட்டாக ஒரு நல்லவன் பேசினாலும் கூட அது கல்லில் எழுதப்பட்டது போல ஆகி விடும். ஆனால் துஷ்டர்கள் வாக்குறுதி அளித்தாலும் கூட அது ஜலத்தின் மீது எழுதப்பட்ட வார்த்தைகள் போல ஆகி விடும்.
Even the casual speech made by righteous people is (like) words engraved on a stone. The promise made by the wicked persons are (as transitory) as words drawn on water.
*
வதனம் ப்ரஸாதசதனம் சதயம் ஹ்ருதயம் சுதாமுசோ வாச: |
கரணம் பரோபகரணம் சேஷாம் கேஷாம். ந தே வந்த்யா: ||
சாந்தமான முகம், கருணை நிரம்பிய இதயம், அமுதம் போன்ற வாக்கு, எப்போதும் பரோபகார உதவி செய்யும் செயல்கள் கொண்ட நல்லோரை யார் தான் மதிக்காமல் இருப்பார்கள்?
Who does not respect the (kind people) whose face is the abode of tranquility, heart is full of compassion, speech, nectar and whose deeds consist in doing good to others?
***
English Translation by Saroja Bhate
Source : Subhasita Shatakam Thanks : Saroja Bhate
tags -காக்கைகள் , குயில், ஓசை,
tags-காக்கைகள் , குயில், ஓசை,
You must be logged in to post a comment.