
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9339
Date uploaded in London – –4 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

சேர சோழ பாண்டிய அரசர்களைப் போலவே இந்துக்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டார்கள் அவர்கள் உயர்ந்த கோபுரங்களைக் கட்டினார்கள் நாங்கள் உயர்ந்த சிலைகளை வைக்கிறோம் என்று கிளம்பிவிட்டார்கள் . இந்துக்களைப் பார்த்து மிகப்பெரிய புத்தர் உருவங்களை பவுத்தர்கள் சமைத்தார்கள் இப்பொழுது இந்துக்களும் அந்த உத்தியைக் கடைப்பிடித்து உயரமான சிலைகளை
வைக்கத் துவங்கிவிட்டார்கள் மிகப்பெரிய அனுமார், மிகப்பெரிய சிவன், மிகப்பெரிய பெருமாள், மிக உயரமான ராமானுஜர், ஆதி சங்கரர் என்று சிலைகள் பெருகிவருகின்றன.
இவ்வகையில் இரண்டு கோவில்கள் குறிப்பிட்டத்தக்கன. இந்துக்கள் அதிகம் வாழும், இந்து மஹா சமுத்திரத் தீவு நாடான மெரிஷியஸில் (மோரிஸ் தீவு) 2018-ல் ஒரு கோவில் உருவானது. இதை ஹரிஹர தேவஸ்தானம் என்பர். இது பாரஸ்ட் சைட் என்னும் இடத்தில் இருக்கிறது.
இந்தக் கோவிலின் முகப்பிலேயே பெரிய வெங்கடாசலபதி உருவம் – திருப்பதி பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெருமாளின் உயரம் – 108
கோவிலுக்குள் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் -11
பஞ்சசமுகி ஆஞ்சாசநேயர் சிலை உயரம் –22
இது 2018ம் ஆண்டில் குரு பிதா ஆசார்ய ஸ்ரீனிவாசார்யாஜி மற்றும் ஆசார்ய பிருந்தாவனம் பார்த்தசாரதி என்பவர் முயற்சியால் உருவானது.
Hari Hara Devasthanam of 16eme Mille, Forest-Side, MAURITIUS
XXXX

அஸ்ஸாமில் மிகப்பெரிய சிவலிங்கக் கோவில்
மோரிஸ் தீவில் எப்படி பெருமாளையே கோவில் கோபுரம் போல முன்னனியில் வைத்தார்களோ அதே போல இந்த 2021-ம் ஆண்டில் அஸ்ஸாம் மாநிலத்தில் சிவலிங்க உருவத்தையே கோபுரம்போல வடிவமைத்து ஒரு கோவிலை எழுப்பியுள்ளனர். இந்த சிவலிங்க கோபுர உயரம் 126 அடி.
***
நவகான் அல்லது பெர்பெரி என்னும் இடத்திலுள்ள இந்த ஆலயத்தின் பெயர் மகா மிருத்யுஞ்சய ஆலயம் ; அதாவது மரணத்தை வெல்ல வழிகாட்டும் சிவ பெருமானின் ஆலயம்.
250 தமிழ்நாட்டு புரோகிதர்கள், அர்ச்சகர்கள் வந்து இந்தக் கோவில் கும்பாபிஷேக யாக சாலை பூஜைகளை நடத்தினர். நாட்டின் உட்துறை அமைச்சர் அமித் ஷா இந்தக் கோவில் பூஜைகளில் கலந்து கொண்டார். 2021 பிப்ரவரி 26ம் தேதிமுதல் வழிபாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது வடக்கில் இமய மலையில் வாசம் செய்யும் கயிலாய மலைக்குப் போட்டியாக இன்னும் ஒரு சிவன் வந்து விட்டார். இதற்கு வித்திட்டவர் ஆசார்ய பிருகு கிரி மஹராஜ்.
சிவலிங்க வடிவிலான கோபுர உயரம் – 126 அடி சுற்றளவு -56 அடி
2003ம் ஆண்டில் கட்டிடவேலை துவங்கியது. 2021ல் கோவில் உருவானது .
ஆதிகாலத்தில் சுக்ராச்சார்யார் தவம் செய்த இடம் இது.
5000 பேர் இடம்பெறும் பெரிய பரப்பு கொண்டது இந்தக் கோவில்.
Maha Mrityunjay Temple in Puranigudan, Nagaon,ASSAM

*** SUBHAM ***
TAGS– மோரிஸ் , மெரீஷியஸ் , தீவு, பெருமாள், கோவில் , அஸ்ஸாம், சிவலிங்க