31 சம்ஸ்கிருத பொன் மொழிகள்!

IMG_3405

Compiled by London Swaminathan

Article No. 1961

Dated 29 ஜூன் 2015.

Uploaded at London time : 7-54

சுவாமியின் பொன்மொழி காலண்டர் – மன்மத வருடம்-ஆடி (ஜூலை 2015). இந்த மாதம் மேலும் 31 சம்ஸ்கிருத பொன்மொழிகளைப் படித்து மகிழுங்கள்.

இந்த பிளாக்—கில் இதுவரை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆயிரத்துக்கும் மேலான தமிழ், சம்ஸ்கிருத பொன் மொழிகள் வெளியிடப் பட்டுள்ளன! படித்துப் பயன் பெறுக!!

முக்கிய நாட்கள்/ விழாக்கள்:–

ஜூலை 18: புரி ரத யாத்ரா; ரம்ஜான் ; 31- வியாச பூர்ணிமா/ குரு பூர்ணிமா. ஏகாதசி  : 12 & 27; அமாவாசை- 15;  பவுர்ணமி- 1 மற்றும் 31; முகூர்த்த நாட்கள்:– 6, 8

 

ஜூலை 1 புதன்கிழமை

அவசரோபசர்பணீயா ராஜான: — சாகுந்தலம்

ராஜா தரும் வாய்ப்பை நழுவவிடக்கூடாது:

ராஜ தர்சனம் தவிர்க்கப்படக்கூடாதது

(காற்றுள்ள போதே தூற்றிக்கொள்)

Make hay while sun shines

 

ஜூலை 2 வியாழக்கிழமை

 

அரண்ய ருதிதோபமம் (பஞ்ச தந்திரம்)

காட்டில் அழுதது போல (கடலில் கரைத்த பெருங்காயம் போல பலன் தராத செயல்)

ஜூலை 3 வெள்ளிக் கிழமை

அர்கே சேன்மது விந்தேத கிமர்த்தம் பர்வதம் வ்ரஜேத் – சாங்க்யகாரிகா

மந்தார மரத்தில் தேன் கிடைக்குமானால் மலைக்கு ஏன் போக வேண்டும்?

கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழுவானேண்?

 honey3

ஜூலை 4 சனிக்கிழமை

அமோகோ தேவதானாம் ச ப்ரமாத: கின்ன சாதயேத் – கதா சரித் சாகரம்

தேவர்களுடைய அருள் அதிகம் இருந்தால் எதைத்தான் சாதிக்க முடியாது?

(கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்)

ஜூலை 5 ஞாயிற்றுக்கிழமை

அலப்யம் ஹீனமுச்யதே

கிடைக்காவிட்டால் அது மட்டமானது (என்பர்)

(சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும் கதை)

ஜூலை 6 திங்கட் கிழமை

அபாவாதல்பதா வரம்

ஒன்றுமில்லாததைவிட கொஞ்சமாவது கிடைப்பது சிறந்ததே

Something is better than nothing

 

ஜூலை 7 செவ்வாய்க்கிழமை

அஸ்தி யத்யபி சர்வத்ர நீரம் நீரஜ மண்டிதம்

ரமதே ந மராலஸ்ய மானசம் மானசம் வினா – சுபாஷிதாவளி

எல்லா இடங்களிலும் தாமரை மலர்கள் மலர்ந்திருந்தாலும்

ஹம்ச பட்சியின் மனமானது மானஸரோவர் இல்லாத இடத்தில் ஈடுபடாது

(உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்– குறள்)

lotus thamarai

ஜூலை 8 புதன்கிழமை

ஆதுரோ விநயே நாஸ்தி

கஷ்டப்படுவோருக்கு விதிகள் கிடையாது.

(பசி வந்திடப் பத்தும் பறந்து போம்)

ஜூலை 9 வியாழக்கிழமை

உச்சேதும் ப்ரபவதி யன்ன சபத சப்திஸ்தன்னைசம் திமிரமபாகரோதி சந்த்ர: — சாகுந்தலம்

சூரியன் போக்கமுடியாத இருட்டை சந்திரன் போக்க முடியுமா?

((இந்தி பழமொழி:- ஜஹாம்  கம் ஆவே சுயீ, கஹா கரே தல்வார்

ஊசி வேலை செய்ய முடியும் போது அரிவாள் எதற்கு?))

ஜூலை 10 வெள்ளிக் கிழமை

ஏகஸ்ய ஹி விவாதோத்ர த்ருஸ்யதே ந து ப்ராணின:

ஒரே ஒரு ஆள் இருக்குமிடத்தில் பிரச்சனை இல்லை

(இரண்டு கையும் சேர்ந்தால்தானே சப்தம் வரும்)

  

ஜூலை 11 சனிக்கிழமை

குலீனை: சஹ சம்யர்கம் பண்டிதை: சஹ மித்ரதாம்

ஜாதிபிஸ்க சமம் சக்யம் குர்பாணோ நாவசீததி – சாணக்யநீதி தர்பணம்

நல்ல குலத்தில் உதித்தவர்கள் தொடர்பு, அறிஞர்களுடன் நட்பு, சொந்தக்காரர்களுடன் நேசம் வைத்திருப்பவன் துன்பமடைய மாட்டான்.

 

ஜூலை 12 ஞாயிற்றுக் கிழமை

க உடுபேன தரதி சாகரம்

யார் சிறு படகு மூலம் கடலைக் கடக்க முடியும்?

ஜூலை 13 திங்கட் கிழமை

கீத்ருசஸ்த்ருணானாம் அக்னினா சஹ விரோத: – முத்ரா ராக்ஷசம்

புல்லுக்குத் தீ எதிரியாகும்

millet

ஜூலை 14 செவ்வாய்க்கிழமை

குதேசேஸ்வபி ஜாயந்தே க்வசித்கேசின்மஹாயசா:-கதாசரித் சாகர்

கெட்ட இடங்களில் கூட நல்லவர்கள் உதிக்கலாம்

(சேற்றில் செந்தாமரையும் சிப்பியில் முத்தும் விளையும்)

 

ஜூலை 15 புதன்கிழமை

ஓதகாந்தம் ஸ்நிக்தோ ஜனோ அனுகந்தவ்ய: – சாகுந்தலம்

கடல் வரைக்கும் பிரியமுள்ளவர்கள் தொடர வேண்டும் 

 

ஜூலை 16 வியாழக்கிழமை

க்வாபி ந கச்சேதனாஹூத:

எங்கேயும் அழையாமல் போகாதே

ஜூலை 17 வெள்ளிக் கிழமை

க்ஷீரேண தக்தஜிஹ்வஸ்தக்ரம் பூத்க்ருத்ய பாலக: பிபதி – ஹிதோபதேசம்

பாலினால் ஒரு  முறை நாக்கு சுட்டவன், மோரைக் கண்டாலும் ஊதி ஊதிக் குடிப்பான்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

சூடு கண்ட பூனை (தெனாலி ராமன் பூனை வளர்த்த கதை)

 

ஜூலை 18 சனிக்கிழமை

க்த்யோதோ த்யோததே தாவத் யாவன்னோதயதே சஸீ

உதிதே து சஹஸ்ராம்சௌ  ந க்த்யோதோ ந சந்த்ரமா:  — சார்ங்கதர பத்ததி

சந்திரன் இல்லாதபோதுதான் மின்மினிப் பூச்சி பிரகாசிக்கும்

சூரியன் உதித்துவிட்டாலோ மின்மினி எங்கே, சந்திரன் எங்கே!

(ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை)

moon over rock

ஜூலை 19 ஞாயிற்றுக் கிழமை

கஜானாம் பங்கமக்னானாம் கஜா ஏவ துரந்தரா:

— ஹிதோபதேசம்

சேற்றில் சிக்கிய யானைக்கு யானைகள்தான் உதவ முடியும்

((முள்ளை முள்ளால்தான் எடுக்கலாம்

வைரத்தை வைரத்தால்தான் அறுக்கலாம்

யானையால் யானை யாத்தற்று- TIRUKKURAL))

ஜூலை 20 திங்கட் கிழமை

கதே ஜலே ஸ்யாத்கிமு சேது பந்த:

ஜலம் வற்றிய பின்னர் பாலம் கட்டி/இருந்து என்ன பயன்?

(கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?)

 

ஜூலை 21 செவ்வாய்க்கிழமை

சந்தனப்ரபவோ ந தஹதி கிமனல: — காதம்பரி

சந்தன மரத்தால் உண்டான தீ சுடாதா?

(தங்க ஊசி என்றால் கண் குத்தாதா?)

 

ஜூலை 22 புதன்கிழமை

சின்னே மூலே நைவ சாகா ந பத்ரம் – சாணக்ய நீதி தர்பணம்

வேரே போன பின்னர் கிளை என்ன? இலை என்ன?

(தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன? முழம் என்ன?)

 

ஜூலை 23 வியாழக்கிழமை

ஜனானனே க:கரமர்பயிஷ்யதி –  நைஷத காவ்யம்

ஊர் வாயை மூட முடியுமா? (யாரால் மூட முடியும்?

ஜூலை 24 வெள்ளிக் கிழமை

ஜலம் ஜலேன சம்ப்ருக்தம் மஹாஜலாய பவதி

சிறு துளி பெரு வெள்ளம்

ஜூலை 25 சனிக்கிழமை

தினமணிமபித: குதோ அந்தகார:

சூரியன் இருக்குமிடத்தில் இருட்டா?

((ராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்

லெட்சுமி இருக்கும் இடத்தில் சரஸ்வதி இராள்))

sunlight meenakshi

ஜூலை 26 ஞாயிற்றுக் கிழமை

த்யஜேதேகம் குலஸ்யார்த்தே க்ராமஸ்யார்த்தே குலம் த்யஜேத் — சாணக்ய நீதி தர்பணம், மஹா பாரதம், பஞ்ச தந்திரம்

குலத்தின் நலனைக் காக்க உயிரே விடலாம்

கிராமத்தின் நலனைக் காக்க குலத்தையே விடலாம்

 

ஜூலை 27 திங்கட் கிழமை

தூரஸ்தா: பர்வதா ரம்யா: சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

இக்கரைக்கு அக்கரை பச்சை

Distance lends enchantment to the view – English proverb

ஜூலை 28 செவ்வாய்க்கிழமை

ந கூப கனனம் யுக்தம் ப்ரதீப்தே வன்னினா க்ருஹே – ஹிதோபதேசம்

வீடு பற்றி எரியும் போது கிணறு தோண்டத் துவங்குவது சரியல்ல

(கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?)

 WELL

ஜூலை 29 புதன்கிழமை

த்ருஷ்டிபூதம் ந்யசேத் பாதம் – மனு

பாதத்தை நன்றாகப் பார்த்து வை

(ஆழம் தெரியாமல் காலை விடாதே)

 

ஜூலை 30 வியாழக்கிழமை

ந விடாலோ பவேத் யத்ர தத்ர க்ரீடந்தி மூஷகா:

பூனை இல்லாத இடத்தில் எலிகள் விளையாடும்

(தலை இல்லாவிடில் வால் ஆடும்)

ஜூலை 31 வெள்ளிக் கிழமை

நஷ்டே மூலே நைவ பலம் ந யுஷ்மம்

வேர் வீணாகிவிட்டால் பழம் கிடைக்காது

((முதல் கோணல் முற்றும் கோணல்

முதலுக்கே மோசம்))

 

நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன்……

Compiled by London swaminathan

Article No.1922; Dated 10 June 2015.

Uploaded at London time: 10-56 am

 

சுய நலம் பற்றி தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலத்தில் உள்ள பழமொழிகளைப் பாருங்கள். வயிற்றுக்காக சாமியார் வேஷம் போடுவோரை ஆதிசங்கரர் எப்படித் தாக்கித் தகர்க்கிறார் என்றும் படியுங்கள். இதோ 16 பொன்மொழிகள்:–

 

1.கோ ஹி  ஸ்வாதர்த்துமுபேக்ஷதே

யார்தான் தன்னலத்தில் அக்கறை இல்லாதிருப்பர்?

2.அவரவர் அக்கரைக்கு அவரவர் பாடுபடுவார்

Each one will exert himself for his own interest

3.ஊரார் வீட்டைச் சோற்றைப் பார், ஒசுபாடி வயிற்றைப்பார்

Look at the villager’s rice; look at this shameless man’s stomach

4.எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருகிறாய்?

If you come to my house what will you bring me? If I come to your house what will you give me?

What is yours is mine, what is mine, is my own

 

5.நீ அவல் கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன்; அதை எங்கள் வீட்டுத் திண்ணையில் ஊதி ஊதித் திண்ணலாம். (அதாவது கொண்டுபோன உமியும் திரும்பக் கிடைக்கும்)

6.எது எப்படி போனாலும் தன் காரியம் தமக்கு

7.தன் காரியம் என்றால் தன் சீலை பதைபதைக்கும்

If it concerns her own affair, even her cloth will be restless

Everyman wishes water to his own mill – English proverb

8.பார்த்திருக்க தின்று, முழித்திருக்க கை கழுவுவான்

Though I saw him, he went on eating; and though I watched him, he washed his hands

(He finished his meal without giving me a share said of one who enjoys himself selfishly.)

9.குக்ருத்யே கோ ந பண்டித: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

கெட்ட செயல்களில் யாருக்குத்தான் கெட்டிக்காரத்தனம் இல்லை?

10.அரைக்கிரவன் ஒன்று நினைத்து அரைக்கிறான், குடிக்கிறவன் ஒன்று நினைத்துக் குடிக்கிறான்

He who grinds the ingredients thinks one thing and grinds, he who drinks the medicine thinks of something else, and drinks

(A doctor only thinks of the profit he will get by medicine he is preparing, the sick person only wonders whether it will cure him or not. Each thinks of his own interests.)

 

11.உதரநிமித்தம் பஹுக்ருதவேஸ:

வயிற்றுப்பாட்டுக்காக பல வேஷம் போடுகிறான்

12.வெட்கம் கெட்டாலும் கெடட்டும், தொப்பை இட்டால் போதும்

Let me lose my respect (if necessary); I am satisfied, if I get fat (said of one who seeks profit at any cost

Kashmiri proverb: A fat man has no religion.

These pictures are shown only  as examples. Shankara made the statement only in general.

13.BHAJA GOVINDAM

“Matted locks, the shaven heads, and the plucked hair,

Diverse, the guises in saffron robe,

The fool sees it, but perceives not

All guises are, indeed devices to fill the belly big”- verse 14, Bhaja Govindam

jaûilo muïãi luòchitakeùaç
káúayámbarabahukøtaveúaç
paùyannapi ca na paùyati müãho
hyundaranimittam bahukøtaveúaç.(14)

The ascetic with matted lock, the one with his head shaven, the one with hairs pulled out one by one, the one who disguises himself variously with the ochre-coloured robes – such a one is a fool who, though seeing, does not see. Indeed, this varied disguise is for the sake of the belly.

ஜடிலோ முண்டி, லுஞ்சித கேச:

காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:

பஸ்யன்னபி ச ந பஸ்யதி மூடோ

ஹி உதர நிமித்தம் பஹுக்ருத வேஷ:

—–(பாடல் 14, ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம்)

14.ஆத்மார்தே கோ ந ஜீவதி – ஹிதோபதேசம்

தனக்காக வாழாதவர் யார்?

தனக்கு என்றால் பிள்ளையும் களை வெட்டும்

தன் காரியத்தில் புலி (சுய கார்யப் புலி)

15.ஆத்மார்தே கோ ந பண்டித:

தன் விஷயத்தில் யார்தான் அறிவாளி இல்லை?

16.சுய காரிய துரந்தரன், சுவாமி காரியம் வழ வழ

He is smart about his own business, but let God’s things slip.

இருபதாயிரம் தமிழ் பழமொழிகள்

 

தமிழ் மொழி மிகவும் வளமான மொழி. உலகிலேயே அதிகமான பழமொழிகள் இதில் தான் இருக்கின்றன. சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று ஆங்கிலேயர்கள் 19,000க்கும் மேலான பழமொழிகளைத் தொகுத்து ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டனர். சம்ஸ்கிருதத்தில் சுபாஷிதங்கள் எனப்படும் பாடல் வகை நீதிக் களஞ்சியம், தனிப்பாடல்கள் இருபதாயிரத்தும் மேலாக இருக்கின்றன. ஆயினும் தமிழ் மொழிதான் பழமொழித் தொகுப்பில் உலகில் முன்னிலையில் நிற்கிறது.

வெள்ளைக்கரகள் தொகுப்பதற்கு முன்னரும் தமிழ் மொழியில் பழமொழித் தொகுப்பு இருந்தது. இதை பெர்சிவல் என்பவரே தன் நூல் முகவுரையில் குறிப்பிடுகிறார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பெருமான் பழ மொழிகளைக் கொண்டே சிவன் மீது ஒரு பதிகம் பாடிவிட்டார். அதற்கு முன்னர் முன்றுரை அரையனார் என்பார் பழமொழி 400 என்ற தொகுப்பில் 400 வெண்பாக்களையும் பழமொழிகளைக் கொண்டு முடிக்கிறார். இப்படி ஒரு நூல் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. இதிலும் தமிழுக்கே முதலிடம்!! கம்பன், தன் ராமாயணத்தில் நிறைய பழமொழிகளைக் கையாளுகிறான்.

பழமொழி என்பது என்ன? ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு நடையில் வெளிப்படும் ஒரு சொற்றொடர். தமிழ் பழமொழிகள் பேசாத பொருளே இல்லை. ஆகையால் தமிழ் பழமொழிகளை இந்த சமூகத்தின் கலைக்களஞ்சியம் என்று கூறலாம்.

தனிப்பாடல்கள், சங்க இலக்கியப் பாடல்கள் அல்லது திருக்குறள் போன்ற நீதிநெறி இலக்கியப் பாடல்கள் கற்றோருக்கு மட்டுமே தெரியும். ஆனால் பழமொழிகளோ  எனில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கும் தெரியும். கிராமப் புறப் பெண்களின் வாயில் பழமொழிகள் புகுந்து விளையாடும். சண்டை சச்சரவானாலும் சரி, பொழுதுபோக்கு அரட்டைக் கச்சேரியானாலும் சரி, கிண்டல், வேடிக்கையானாலும்சரி எல்லா இடங்களிலும் சரளமாகப் புழங்கும்

ஆயிரக கணக்கான ஆண்டு அனுபவம், பழமொழிகளில், எதுகை மோனையுடன் வரும் நாலைந்து சொற்களில் அடங்கிவிடும்

 

யானை பற்றி நூறு பழமொழிகள்

யானை பற்றி மட்டுமே நூற்றுக்கும் மேலான பழமொழிகள் கிடைத்திருக்கின்றன. பறவைகளில் காகமும், பிராணிகளில் யானையும் தமிழர்களை மிகவும் கவர்ந்துவிட்டதன. ஆனை வரும் பின்னே, மணி ஓசைவரும் முன்னே, ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன், யானை உண்ட விளாங்கனி போல, யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும், யானைக்கும் கூட அடி சறுக்கும்— இப்படி நூற்றுக்கும் மேலாகப் படிக்கலாம்

சமயம், பெண்கள், பண்புகள், உணவு, மருத்துவம், பழக்க வழக்கங்கள், மிருகங்கள், தாவரங்கள், ஜாதிகள், அரசு, தொழில்கள், சோதிடம், அறிவியல், வானசாத்திரம், பருவநிலை, விவசாயம்—இப்படி ஏராளமான விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 20,000 பழமொழிகள் ஒவ்வொன்று பற்றியும் ஆராய்ந்து தனித் தனி கட்டுரை எழுதலாம். சில பழமொழிகளுக்கு நேரிடையான பொருளும் எதிர்ப்பத பொருளும் கிடைக்கும்.

முதல் முதலில் ரெவரண்டு பெர்சிவல் என்பவர் 1842 ஆம் ஆண்டு 2000-க்கும் குறைவான பழமொழிகளுடன் ஒரு புத்தகம் வெளியிட்டார். பின்னர் அவரே 1877 ல் மூன்றாம் பதிப்பை வெளியிட்ட போது அதில் 6156  தமிழ் பழமொழிகள் இருந்தன. அவர் தொகுப்பில் விட்டுப் போன பழமொழிகளாக எடுதுத் தொகுத்து 9415 பழமொழிகளுடன் ஜான் லசாரஸ் என்பவர் 1894ல் வெளியிட்டார். பின்னர் ரெவரண்ட் ஹெர்மன் ஜென்சன் என்பவர் 1897ம் ஆண்டில் 3644 பழமொழிகளுடன் இன்னும் ஒரு நூலை வெளியிட்டார். இவற்றைத் தொகுத்தவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்களுக்கு இதன் பொருளை விளக்கியதில் நம்மவரின் பங்கே அதிகம் அதுமட்டுமல, நம்மவர்களும் பழமொழிகளைத் திரட்டித் தந்தனர். இந்த 3 புத்தகங்களும் தமிழ் பழமொழிகளின் ஆங்கில மொழி பெயர்ப்புகளுடன் வந்தன.

சமயம் பற்றிய பழமொழிகள் (பழமொழிகளில் இந்து மதம் என்ற என் கட்டுரையைப் படிக்கவும்):

தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் (நரசிம்மாவதாரம் கதை), எல்லாம் அவன் செயல், நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும், தலைக்கு வந்தது தலைப் பாகையுடன் போனது (கர்ணன் கதை) இப்படி மதம் தொடர்பாக நூற்றுக் கணக்கில் பழமொழிகள் உண்டு.

 

சோதிடப் பழமொழிகள்

ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப் பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி,முப்பது ஆண்டு வாழ்ந்தவனும் இல்லை, முப்பது ஆண்டு தாழ்ந்தவனும் இல்லை (சனிக் கிரகத்தின் சுழற்சி), பரணி தரணி ஆள்வான், அவிட்ட நட்சத்திரக் காரனுக்கு தவிட்டுப் பானை எல்லாம் தங்கம்—இப்படி நிறைய சோதிட பழமொழிகள் .

ஆயிரக் கணக்கான ஆண்டுகளில் ஒரு சமுதாயம் சம்பாதித்த அனுபவம் எல்லாவற்றையும் பழரசமாகப் பிழிந்து கொடுப்பது போன்றது பழமொழி.

பெண்களுக்கும் ஜாதிகளுக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பழமொழிகள் கிடைக்கின்றன. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே, பெண் என்றால் பேயும் இரங்கும், பெண் பாவம் பொல்லாதது, பெண் புத்தி பின் புத்தி இப்படி எதிரும் புதிருமாகப் படிக்கலாம்.

ஆலும் வேலும் பல்லுக் குறுதி, வறுத்த பயற்றை விடாதே, சுட்ட எண்ணெயைத் தொடாதே, உடம்பைக் கடம்பால் அடி, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம், சுப்பிரமணியத்துக்கு மேல் தெய்வமும் இல்லை, சுக்குக்கு மேல் மருந்தும் இல்லை, மருந்தே ஆயினும் விருந்தோடு உண்— இப்படி நூற்றுக் கணக்கான மருத்துவப் பழமொழிகள்.

ஆடிப் பட்டம் தேடி விதை, எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை பெய்யும் என்பன பருவ நிலை, விவசாயம் பற்றிப் பேசும்.

தாய்க்குப் பின் தாரம் என்று சினிமாப் பட தலைப்புகளில் கூட பழமொழி இடம்பெறும்

 

இரு பொருள்படும் பழமொழிகள்

சில பழமொழிகளுக்கு இன்றுவரை அர்த்தமே தெரியவில்லை. இன்னும் சில பழமொழிகளுக்கு இருவேறு விதமாகப் பொருள் சொல்லலாம். தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் என்று ஒரு பழமொழி. இது தன் சக்திக்கும் அப்பால் போய் ஒருவர் செய்வதே தானம் என்பாரும் உளர்; தனக்குப் பின் மிஞ்சிப் போனதைக் கொடுப்பதே தானம் என்பாரும் உளர். ஆக இது போன்ற பழமொழிகளுக்கு அவரவர் விருப்பப்படி வியாக்கியானம் செய்யலாம்!!

உலகில் எல்லா மொழிகளிலும் பழமொழிகள் இருக்கும். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பதோடு அதைப் பேச்சு மொழியில் சுவைபடச் சொல்லுவதே இதன் இலக்கணம். தமிழ் மொழியில் இது உச்சநிலையை எட்டி, தமிழுக்குத் தனிப் பெருமையை ஈட்டித் தந்துள்ளது.

***************

தமிழ் ஒரு கடல்!!


“கல்வி கரையில, கற்பவர் நாள் சில” என்பது ஆன்றோர் வாக்கு. கலைமகளும் கூட “கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு” என்று கூறினார். தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்களை எல்லாம் ஒருவர் கணக்கெடுத்தால் அவையனைத்தையும் கற்றறிய ஒரு வாழ்நாள் போதாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புலப்படும்.

உலகில் பழமையான இலக்கியம் படைத்த மொழிகள் ஒரு சில மொழிகளே. தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், எபிரேயம், சீனம் என்று விரல் விட்டு எண்ணி விடலாம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் தன் சீரிளமைத்திறம் குன்றாதது தமிழ். இந்தக் காலக் கட்டத்தில் வளர்ந்த முக்கிய சில நூல்களின் நீளத்தை அல்ல து அளவை மட்டும் சிறிது சிந்தித்துப் பார்ப்போம். சங்க இலக்கியம் என்பதில் எட்டு நூல்களைக் கொண்ட எட்டுத்தொகையும் பத்து நூல்களைக் கொண்ட பத்துப்பாட்டும் அடக்கம். இந்த 18 நூல்களில் 473 புலவர்கள் பாடிய 2381 பாடல்கள் உள்ளன. ஏறத்தாழ 30,000 வரிகள்! ஒரு நாளைக்கு நூறு அடிகள் வீதம் படித்தாலும் கூட சங்க இலக்கியத்திற்கு மட்டும் முந்நூறு நாட்கள் தேவைப்படும்.!!

இதற்கு முன்னர் எழுந்த தொல்காப்பியம், அதற்குப் பின்னர் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ஏழாம் நூற்றாண்டு முதல் பெருகிய பக்தி இலக்கியங்கள் (தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம்) ஆகிய அனைத்திலுமுள்ள பாடல்களை எண்ணிக் கூட்டினால் தமிழைக் கற்பதற்குப் பல பிறவிகள் எடுக்க வேண்டும் என்பதை உணர்வீர்கள். கையில் ஒரு கணக்கிடும் கருவியை (கால்குலேட்டர்) வைத்துக்கொண்டு பின்வரும் செய்யுட்களின் எண்ணிக்கையைக் கூட்டுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் எவ்வளவு செய்யுட்களை நன்கு மனதில் பதியுமாறு படிக்க முடியும் என்பதைத் தீர்மானித்து அதனால் இந்தச் செய்யுட்களின் எண்ணிக்கையை வகுத்துப் பாருங்கள். இப்படிச் செய்தால் இனி ஒரு வினாடி கூட தாமதிக்காமல் தமிழைப் படிக்கத் தோன்றும். ஒரு அறை முழுவதும் பொன்னும் மணியும் குவித்து வைக்கப்பட்டுள்ளது. உங்கள் கையில் அறைக்கான சாவியும் (தமிழ் அறிவு) உள்ளது. இனியும் தாமதிப்பது நியாயமா?

புள்ளிவிபரம்

தொல்காப்பியம் 3,999 அடிகள் 
எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் 30, 000 அடிகள்
சிலப்பதிகாரம் 5,001 அடிகள்
மணிமேகலை 4,759 அடிகள்
பெருங்கதை 16,230 அடிகள்

பாடல் கணக்கு

பதினெண் கீழ்க்கணக்கு (குறள் உள்பட 18 நூல்கள்) 3,250 பாடல்கள்
கம்ப ராமாயணம் 10,500 பாடல்கள்
சீவக சிந்தாமணி 3,145 பாடல்கள்
திவ்யப் பிரபந்தம் (ஆழ்வார் பாடியவை) 4,000 பாடல்கள்
பன்னிரு திருமுறை 18, 326 பாடல்கள்
தாயுமானவர் 1,454 பாடல்கள்
அருணகிரி 1,361 பாடல்கள்


இராமலிங்க சுவாமிகள் 5,800 பாடல்கள்

20,000 பழமொழிகள்

தமிழில் 20,000க்கும் மேலாக பழமொழிகள் இருக்கின்றன. மூன்று வெள்ளைக்காரர்கள் இவைகளைத் தொகுத்து தனித்தனி புத்த்கங்களாக வெளியிட்டனர். அவைகளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புகள் அல்லது ஆங்கிலத்திலுள்ள இணையான பழமொழிகளைக் கொடுத்தனர். பழமொழிகள் ஒவ்வொன்று பற்றியும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதலாம்!!
முக்கியமான சில பாடல் தொகுப்பை மட்டுமே கொடுத்துள்ளேன். பாரதி வரையுள்ள ஆயிரக்கணக்கான புலவர்களின் பாடல்களை எல்லாம் கணக்கிட்டால் அந்த நூல்களின் பெயர்களை எழுத மட்டுமே தனியாக ஒரு நூல் தேவைப்படும். தமிழ் ஒரு பெருங்கடல்! முத்துக்குளிப்போம் வாருங்கள்!

******************