அதிசய மூலிகை ‘அபாமார்கன்’ – – அதர்வண வேத அதிசயச் செய்தி (Post No.10,474)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,474

Date uploaded in London – –   22 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

“தாக்க தாக்க தடையறக் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட

ஆனை யடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட்டலறி மதிகெட்டோட”

………………………………………………….

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்” — கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

XXX

அதர்வண வேதம் முழுவதும் மூலிகை மர்மங்களும் அதிசயங்களும் விரவிக்கிடக்கின்றன . அவைகளைக் கண்டுபிடித்து உலகிற்கு அளிப்பது இந்துக்களின் கடமை.

அதர்வண வேதம்- நாலாவது காண்டம்- துதி 17 (சூக்தம் 119)- தலைப்பு கேடும் குறையும்

பாடலின் பொருள் : இந்த துதியானது மந்திர குணமுள்ள ஒரு மூலிகையை நோக்கி இசைக்கப்படுகிறது . நோய்கள் தாக்காமல் இருக்கவும் நோயாளிகளைக் குணப்படுத்தவும் உதவும் மூலிகை இது. பெயர் அபாமார்கன் – சுக்கிரன்- வனஸ்பதி ; இதை நாயுருவி என்று  அழைப்பதாக விக்கிப்பீடியா தகவல் கூறுகிறது

xxxx

இந்த துதியில் எட்டு மந்திரங்கள் உள்ளன

முதல் மந்திரம்

மருந்துகளின் மஹாராணியே ! வெற்றி கொடுப்பவளே ! உன்னை நான் பிடிக்கிறேன் ; ஓஷதியே ! ஒவ்வொருவருக்கும் (உதவ) ஆயிரம் சக்தி உடையவளாக செய்துவிட்டேன் .

மந்திரம் -2

நிச்சய வெற்றிதரும், சாபம் அழிக்கும்,மஹத்தான , மீண்டும் திரும்பும் உன்னை வேண்டுகிறேன்; அது எங்களைக் காக்கட்டும்; இதுவே பிரார்த்தனை

3

எங்களுக்குச் சாபம் இட்டவள் அல்லது தீய , கொலைகார எண்ணத்தை மனதில் கொண்டவள் அல்லது என் குழந்தைக்கு  தீங்கிழைப்பவள், அவள் கருத்தரித்துள்ள அவள் குழந்தையையே விழுங்கட்டும்

4.

சுடாத பானையில் அல்லது நீலம்- சிவப்பாகும் வரை சுட்ட பானையில் , சமைக்காத மாமிசத்தில்  அவர்கள் என்ன சூனியம் வைத்திருந்தாலும் அதைக்கொண்டே அவளை அழித்துவிட்டு

5

கெட்ட கனவு, அரக்கர், இராக்கதர், பிசினாறி , தீய பெயருள்ளவள், தீய நாற்றம் உடையவள் — ஆகிய அனைவரையும் விரட்டுகிறோம்

6

அபா மார்க்கனே , உன்னைக்கொண்டு —-   பசிப்பிணி மரணம், தாகத்தால் /வறட்சியால் ஏற்படும் மரணம், , குழந்தைகள் இழப்பு, கால்நடைகள் இழப்பு ஆகியவற்றை துடைத்தது அழிக்கிறோம்

7.

இந்த மந்திரத்தில் ,மேற்கூறிய விஷயத்துடன்,  உடல் உறுப்புகளின் செயல் குறைவு ஆகியவற்றையும் சேர்த்துள்ளனர்.

ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பில் உடல் உறுப்பு இழப்பு என்பதற்குப் பதிலாக சூதாட்டத் தோல்வி என்று தவறாக மொழிபெயர்த்துள்ளனர்

8

வளரும் மூலிகைகளின் மன்னன் அபா மார்கன் ; அதை வைத்து இந்த நோயாளிக்கு ஏற்பட்ட அனைத்து வியாதிகளையும் நீக்குகிறோம்.

இது எட்டு மந்திரங்களின் சாராம்சம்

Xxxx

அபா மார்கம் என்றால் என்ன ?

தேள் கடி போன்ற விஷத்தை நீக்க இது பயன்படுகிறது மருந்துகள், யாகங்களிலும் உபயோகிக்கிறார்கள்; இதனுடைய வேறு பெயர்கள்- பராக் புஷ்பம், பிரத்யாக புஷ்பம்,  பிரத்யாக பரணி

இந்தப் பெயரின் சம்ஸ்க்ருத மொழி விளக்கம் —

அபா = உடன், உதவியுடன் ; ம்ரிஜ் = துடைத்து அழி = அபாமார்க ; ஏழாவது மந்திரத்தில் இது வினைச் சொல்லாக வந்துள்ளது

இதனுடைய தாவரவியல் பெயர்—

ACHYRANTHES ASPERA ; இதை நாயுருவி என்று  அழைப்பதாக விக்கிப்பீடியா தகவல் கூறுகிறது

மேல் விவரம் — லினன் போன்ற சணல் நார் துணிகளைச் சுத்தப்படுத்தவும் உபயோகிக்கிறார்கள்

இதனுடைய இலைகளும் பூக்களும்

எதிர்த் திசை நோக்கி திரும்பி இருப்பதால் இதை ‘பராக்’ என்ற சொல்லின் மூலம் விளக்குகிறார்கள்

இந்த மூலிகையை 4-19-4, 6-129-3;  7-65-1 ஆகிய மந்திரங்களிலும் காணலாம்.

xxx

எனது விமர்சனம்

இந்துக்களிடையே இரண்டு, மூன்று  நம்பிக்கைகள் உண்டு

1. நாம் செய்த பாவத்தால் நோய்கள் வரும்

2. நாம் மற்றவர்க்கு தீங்கு செய்தால் நமக்குத் தீங்கு வரும்

3. பிறர், பில்லி, சூனியம், மாய மந்திரத்தால் நமக்கு நோய்களைத் தர  முடியும் .

இவை அனைத்துக்கும் விஞ்ஞான விளக்கமும் உளது

1. பாவம் என்பது என்ன ? கெட்ட உணவு, அதிக உணவு  உண்ணுதல், குடித்தல் , பெண் வழிச்  சேரல் , புகை பிடித்தல் முதலியன  இவை தீமை என்பதை டாக்டர்களும் நமக்குச் சொல்லுகிறார்கள்

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் – குறள் 202-  என்பது வள்ளுவன் வாக்கு.

2.நாம் மற்றவர்க்கு தீங்கிழைத்தால் அது நமக்கு கெடுதி செய்யும். உணமைதான் ; அவர்கள் பழிக்குப் பழி வாங்குவார்கள் ; அதுமட்டுமல்ல; கோபம், ஆத்திரம், சாபம் இடுதல் முதலியன ஒருவரின் சக்தியை உறிஞ்சுவிடும், மன நிலையைப் பாதிக்கும் என்று உள்ளவியல் – PSYCHOLOGIST சைக்காலஜிஸ்ட் — நிபுணர்களும் நமக்குச் சொல்லுகிறார்கள்

இந்துக்கள் இதற்கும் மேல் ஒருபடி சென்று தர்மமே நம்மைத் தண்டிக்கும் என்பர். பக்கா ஹிந்துவான  வள்ளுவனும் — மறந்தும் பிறன்கேடு சூழற்க , சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு — குறள் 204 — என்கிறான். இது தர் மோ ரக்ஷதி ரக்ஷிதஹ — என்பதன் மறு  வடிவம்.

கடைசி விஷயம்,  எல்லா பண்பாடுகளிலும் உளது. ஐரோப்பாவில் 19 வயது பிரான்ஸ் நாட்டு வீராங்கனை ஜோன்  ஆப் ஆர்க் உள்பட 90 லட்சம் பெண்களை சூன்யக்காரி என்று சொல்லி கிறிஸ்தவர்கள் , உயிருடன் எரித்துக் கொன்றதை GRIFFITH கிரிப்பித், வேத மொழி பெயர்ப்பில் சுட்டிக்காட்டுகிறார். உலகம் முழுதும் இப்படி நடந்துள்ளது.

இந்துக்கள் அப்படி யாரையும் கொல்லவில்லை ; ஆனால் சூனியம் வைத்தலை நம்புகிறோம். இதில் சில பாக்டீரியாக்கள், வைரஸ்கள்; மக்களுக்கு அவற்றைச் சொன்னால் புரியாது; ஆகையால் பேய், பிசாசு என்று சொல்லி வேப்பிலை போன்ற உண்மையிலேயே மருத்துவ குணம் உள்ள செடிகொடிகளை பயன்படுத்தினர். இரண்டாவது விஷயம் மன நோயைக் குணப்படுத்த நோயாளிக்கும், நோயாளியின் குடும்பத்துக்கும் நம்பிக்கை ஊட்ட சில விஷயங்களைக் ‘கற்பித்து’ விரட்ட வேண்டும்.

 வெளிநாடுகளில் மன நோய் உடையவர்களைக் குணப்படுத்துவது ஒரு பெரிய பிசினஸ் (Money Making Industry) . ஐந்தில் ஒருவருக்கு மன நோய் தாக்கியதாக புள்ளி விவரம் கூறுகிறது. நல்ல தூக்கம் தூங்கும் வயதுள்ள ஆட்கள் வெளிநாட்டில் இல்லை; சிறுவர்கள் மட்டுமே நல்ல தூக்கம் தூங்குகிறார்கள். மன உளைச்சவர்கள், சண்டை போடுவோர் முதலியோர் கவுன்சலிங் COUNSELLING என்ற பெயரில் ஆயிரக்கணக்கான டாலர்களை டாக்டர்களுக்கு கொடுக்கின்றனர். இந்துக்கள் மாய மந்திரம் என்று சொல்லி 5, 6 மாதம் கோவிலைச் சுற்றச் செய்வார்கள். அவர்களும் பெரும்பாலும் குணம் அடைந்து விடுகிறார்கள்.

ஆயினும் பில்லி சூனியம் வெகு அபூர்வமாக நடை பெறுவதுண்டு . இதை கோடிக்கணக்கான இந்துக்கள் நம்புவதை கந்த சஷ்டிக் கவசம் முதலிய மந்திரங்கள் காட்டுகின்றன.; இது பற்றிய அச்சமும் மக்களிடையே இருக்கக்கூடாது என்பதற்காகவே தேவராய சுவாமிகள் இதைச் சொல்கிறார் என்றே நாம் கருத வேண்டும் .

தாக்க தாக்க தடையறக் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட

ஆனை யடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியேனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு…

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் எனை தொடர்ந்தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்”

………………………… கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

—SUBHAM–

TAGS- அபாமார்க , நாயுருவி, அதர்வண வேதம், கந்த சஷ்டிக் கவசம், பில்லி, சூனியம்

எகிப்து, சுமேரியாவிலும் த்ருஷ்டி பொம்மை, கந்த சஷ்டிக் கவச வரிகள்!!

Drishti-Bomma

Research Article No. 2040

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 3  August  2015

Time uploaded in London : – 17-51

(This has been published in English already)

கந்த சஷ்டிக் கவசம் தெரியாத அல்லது கேட்டறியாத தமிழர்கள் இருக்க முடியாது.தேவராஜ சுவாமிகள் அருளிய இக்கவசம் மிகவும் சக்தி வாய்ந்தது. வட இந்தியாவில் இதே போல துளசிதாசர் இயற்றிய ஹன்மான் சாலீசா மிகவும் பிரசித்தமானது. இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அனுமன் பெயரைச் சொல்லிய மாத்திரத்தில் பூதப் பிசாசுகள் நடுங்கி ஓடி விடும். அதே போல கந்த சஷ்டிக் கவசம் சொன்னால் பேய், பிசாசுகள், பில்லி, சூனியம் அண்டாது.

கந்த சட்டிக் கவசத்தில் வரும் வரிகள், பில்லி சூனியம் பற்றி மிகவும் விளக்கமாக விளம்புகிறது. இதே நம்பிக்கை பழங்கால எகிப்திலும் இருந்தது. மத்தியக் கிழக்கில் இப்பொழுது சிரியா, இராக் நாடுகள் உள்ள சுமேரியாப் பகுதியிலும் இருந்தது. இதற்கெல்லாம் மூலம், அதர்வண வேதம் அதன் பத்தாவது மண்டலத்தில் இந்த விஷயங்கள் வருகின்றன.  கேரளத்தில் இப்பொழுதும் மாந்த்ரீகச் சடங்குகள் நடக்கின்றன. நம்மூர் அரசியல்வாதிகள் கூட எதிரிகளை ஒடுக்கவோ, மடக்கவோ, ஒரேயடியாக ஒழிக்கவோ இத்தகைய “மிளகாய் யாகங்களை” நடத்துகின்றனர்.

வேத கால மக்கள் உலகெங்கிலும் பரவியபோது நல்ல விஷயங்களை எடுத்துச் சென்றது போலவே இது போன்ற “ஆபிசாரப் பிரயோகங்களையும்” எடுத்துச் சென்றனர்.

இங்கிருந்து போனதற்கு என்ன ஆதாரம்? ரிக் வேத கலம் முதல் இன்று வரை இது மட்டுமின்றி எல்லாச் சடங்குகளையும் நாம் மட்டுமே செய்து வருகிறோம். இடையில் வந்த கலாசாரம் என்றால் என்றோ மறைந்து போயிருக்கும்.

bes

எகிப்திய பேஸ்

இப்பொழுது என்னைப் பொன்றோர் லண்டனில் குடியேறி ஒவ்வொரு தலை முறையிலும் எப்படி பழைய வழக்கங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு வருகிறோமோ அப்படி ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் குடியேறிய இந்துக்கள் விட்டு விட்டனர். ஆனால் அவை அனைத்தும் எகிப்திய பபைரஸ் (பேப்பர்) தாளிலும், சுமேரியக் களிமண் பலகைகளிலும் பொறித்து வைக்கப்பட்டுள்ளன.

“பில்லி சூனியம்

பெரும்பகை அகல

……………………………….

ஆனை அடியினில் அரும் பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்

பாவைகளுடனே பல கலசத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்

……………………………………………………………………..

இப்படி நாம் கவசம் சொல்லுகிறோம். விநாயக கவசத்தில் சுருக்கமாக மாரணம் என்ற ஒரு சொல்லில் இவை அடக்கப்படுவிட்டது. பில்லி, சூனியம், ஏவல் வைப்போர், இப்படி எதிரிகளின் வீட்டில் மயிர், எலும்பு, நகம், பொம்மைகள் ஆகியவற்ரைப் புதைத்து வைத்து அவர்களை ஒடுக்குவர். இதைத் தான் தேவராய சுவாமிகள் விளக்கமாகப் பாடியுள்ளார்.

bes in Louvre

எகிப்தில் பல சிலைகள் மூஞ்சி சிதைக்கப் பட்டுப் மூளியானதற்கு இத்தகைய சடங்குகள் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதி யுள்ளனர். ஒருவருடைய உருவத்தைச் செய்து அதன் மீது மந்திரம் ஏவி அதை உடைத்தால் அவர் அழிந்து போவார் அல்லது மனம் உடைந்து போவார் என்ற நம்பிக்கை உலகெங்கிலும் நிலவியது.

எகிப்தியர் கீழ்கண்ட முறைகளைக் கையாண்டனர்:-

1.சாபம் இடும் மந்திரங்களைச் சொல்லுவது

2.களிமண் அல்லது மெழுகு பொம்மைகளைச் செய்து, சில சடங்குகளுக்குப் பின்னர், அவைகளை உடைப்பது

3.துர் தேவதைகளை அழைத்து அவர்களுக்கு கெட்ட சொப்பனங்களை உண்டாக்கி பயமுறுத்துவது

4.ஐஸிஸ் என்னும் தேவதையைக் குறித்தே பெரும்பாலான உச்சாடனங்கள் சொல்லப் படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக பேஸ் என்னும் குள்ள தெய்வம் உதவி செய்யும். இது நல்லதுக்கும் பொல்லாததுக்கும் உதவும் விகடகவி, பபூன் போன்ற உருவமுள்ள தெய்வம். ஆண்குறி பெரிதாகக் காட்டப் பட்டிருக்கும். திருஷ்டி பொம்மை போல நாக்கு வெளியே தொங்கும். அதைப் போலவே அவலட்சணமாக இருக்கும்.  நன்மை, தீமைகளுக்கு உதவும் மாந்த்ரீக தெய்வம். நம் பண்பாட்டில் கணபதி விக்னங்களை உருவாக்கவும் செய்வார், உடைக்கவும் செய்வார் என்பது போல.

250px-Kanthristi

இது தவிர எகிப்தியர்கள் ஏராளமான வகை தாயத்துகளைப் பயன்படுத்தினர். மம்மி என்னும் சவங்களுடன் நிறைய தாயத்துக்கள் கிடைக்கின்றன. நாம் யந்திரத் தகடுகளில் எழுதி அதை தாயத்துக்குள் போட்டுக் கழுத்தில் தொங்க விடுவதுபோல எகிப்தியர், புதிய பபைரஸ் புல் காகிதத்தில் எழுதி அதை தாயத்தாக வைத்துக் கொண்டனர். நாம் சங்கரன் கோவில் முதலிய கோவில்களிலும் மாரியம்மன் கோவில்களிலும் உடல் உறுப்புகளை வெள்ளியில் செய்து காணிக்கை உண்டியலில் போடுவது போல எகிப்தியர்களும் செய்தனர். எனது முந்தைய ஆராய்ய்சிக் கட்டுரைகளில் இது போன்ற பல விஷயங்களைச் சொல்லி இருக்கிறேன். இந்த நம்பிக்கை கிரேக்க நாடு வரை சென்று பரவியது.

அதர்வ வேதம் பத்தாவது மண்டலம் சொல்லும் விஷயங்கலை தமிழ் மாறன் எழுதிய, “அதர்வ வேதம் அருளும் ஆனந்த வாழ்வு” (பக்கம்175-182) நூலில் காண்க.

hecate 2

கிரீஸ் நாட்டில்

வெளிநாட்டுக் காரர்கள் சரித்திரம் எழுதியபோது பிதகோரஸ், சாக்ரடீஸ், பிளாட்டோ ஆகியோரைக் காட்டி உலகில் மிகவும் முன்னேறிய மக்கள் கிரேக்கர்கள் என்று புகழ்ந்து வைத்துள்ளனர். அவர்களுடைய மூட நம்பிக்கைகளையோ, அட்டூழியங்களையோ பெரிதுபடுத்தவில்லை. ஏனெனில் உலகில் யாரும் அடிமைப்படுத்தாத சுதந்திர நாடு கிரேக்கம்.

ஆனாலங்கும் மேற்கூறிய எல்லா நம்பிக்கைகளும் இருந்தன. சாக்ரடீஸ் விஷம் அருந்தி சாவதற்கு முன்னர். ஆத்ம நண்பன் கிரீட்டொவை அழைத்து, குறிப்பிட்ட தெய்வத்துக்கு மறக்காமல் கோழியடித்துக் கும்பிட்டு விடு என்று சொல்லிவிட்டுச் செத்ததை முன்னரே எழுதி இருக்கிறேன்.அவர் சேவல்கோழி காணிக்கை செலுத்துவதாக வேண்டுதல் செய்திருந்தார்.

கிரேக்கர்கள் ஹெகதி என்னும் தெய்வத்தை முச்சந்திகளில் நிறுத்திவைத்து பேய் பிசாசு, துர் தேவதைகளுக்குப் பரிகாரம் செய்தனர். ஹெகதி என்பது சக்தி என்ற சொல்லின் திரிபு. நாம் முச்சந்திகளில் இரவில் போகப் பயப்பட்டது போல அவர்கள் முச்சந்திகளில் உணவு வைத்து வழிபட்டனர். அது நள்ளிரவில் முச்சந்திகளில் ஊளையிடும் நாய்களுடன் தோன்றும் என்று நம்பினர். இப்பொழுது எல்லா, எகிப்திய, சுமேரிய, கிரேக்க தெய்வங்களையும் மியூசியங்களில் காணலாம்.

ரிக் வேதத்தில் பூஷன் என்னும் தெய்வம் சாலைத் தெய்வமாகவும் , வழிப்போக்கர்களுக்கு உதவும் தெய்வமாகவும் போற்றப்படுகிறது.

pazuzu, british museum

சுமேரியப் பண்பாட்டில்

கண் திருஷ்டி விழுந்தால் கெடுதி என்ற நம்பிக்கை சுமேரியாவில் இருந்தது. நாம் வீட்டு வாசல்களிலும் கடை வாசல்களிலும் பூதம் போல, அவலட்சணமான ஒரு உருவத்தை வைக்கிறோம். அல்லது த்ருஷ்டி கழிய பூசனிக்காய் மீது வரைந்து தொங்க விடுகிறோம். சுமேரியர்கள் இதே போல பசசுஜு என்னும் அவலட்சண தேவதையை வாயில்களில் தொங்கவிட்டனர். போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம் – என்பது போல அதை தாயத்தாகச் செய்து கழுத்திலும் மாட்டிக் கொண்டனர். அவர்களும் இந்துக்களைப் போல சாபங்கள் கொடுத்தனர். தீய சக்திகளை ஒழிக்க இரவு பூஜைகளைச் செய்தனர். அவர்களுடைய உச்சாடனங்கள், அதர்வ வேத மந்திரங்கள் போல இருக்கும்.

பெண்களை வசீகரிக்க மந்திரங்கள் வைத்திருந்தனர். இப்பொழுது வெளிநாடுகளில் காதலர் தின அட்டைகளில் ஒரு இருதயத்தை அம்பு (மன்மதன் மலர் அம்பு) துளைப்பது போல வரைந்து உலகெங்கிலும் பயன்படுத்துகின்றனர். இது அதர்வ வேத மந்திரத்தில் உள்ள வர்ணனை என்பதை முன்னொரு கட்டுரையில் தந்தேன். எல்லா உச்சாடனங்களையும், அதர்வ வேத மந்திரங்களையும் ஒப்பிட்டால் நாம்தான் மூலம்/ வேர் என்பது வெள்ளிடை மலை யென விளங்கும்.

எகிப்தில் பேஸ், சுமேரியாவில் பசுஜு. கிரேக்கர்கள் இவைகளின் பெயருக்கு இணையான கிரேக்க தெய்வங்களைச் சொன்னார்கள்.

pazzuzu assyrian

Source:

Dictionary of the Ancient Near East by British Museum

Ancient Egypt by David Silverman

Atharva Vedam (Tamil Book) by Tamilmaaran

Dictionary of World Myth by Roy Willis

Encyclopaedia of Gods by Michael Jordan

Pictures from various sources

pazuzu 3