உடல் ஆரோக்கியத்திற்கு மசாஜ்! (Post No.3921)

 

Written by S NAGARAJAN

 

Date: 19 May 2017

 

Time uploaded in London:-  5-51 am

 

 

Post No.3921

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளிவரு ஹெல்த்கேர் மாத பத்திரிகையில் மே 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

உடல் ஆரோக்கியத்திற்கு மசாஜ்!

 

தமிழாக்கம் ச.நாகராஜன்

 

மசாஜ் ஏன் உங்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது?

உடலின் ஒவ்வொரு இயக்க அமைப்பும் மசாஜினால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நல்ல விதத்தில் பாதிப்புக்கு உள்ளாகிறது.  மசாஜினால் உங்கள் உடலில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதற்கான வழிகாட்டி இதோ:-

 

எலும்பு மண்டலம் :-

 

மசாஜினால் எலும்புகள் மறைமுகமாக நலமடைகிறது. இரத்த ஓட்டத்தில் ஏற்படும் மேம்பாடானது ஆக்ஸிஜனையும் ஊட்டச்சத்துக்களையும் எலும்புகளுக்குத் தருகிறது. மூட்டுகளின் இறுக்கமும் வலியும் குறையும். தசைகள் மிகவும் நெகிழ்வுத் தனமையை அடைவதால் மூட்டின் இயக்கம் அதிகரிக்கப்படுகிறது.

தசை மண்டலம்:-

 

சில மசாஜ் இயக்கங்கள் தசைகளுக்கு ஓய்வையும் நீட்சியையும் தருகின்றன. இதனால் தசையின் இறுக்கமும் தசைப்பிடிப்பும் குறைகிறது.மசாஜ் த்சை உரத்தைக் (muscle tone) குறைத்து தசைகளின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. தசைகள் ஓய்வு எடுப்பதன் மூலம் சோர்விலிருந்து மீள்வ்தை விட உடல்ப்யிற்சியின் மூலம் வெகு சீக்கிரம் சோர்விலிருந்து மீள்கிறது.

 

நரம்பு மண்டலம் :-

 

இதமாகத் தரப்படும் மசாஜ் நரம்பு எரிச்சலிலிருந்தும் இன்சோம்னியா மற்றும் தலைவலி போன்ற இறுக்கத்தினால் ஏற்படும் நிலைகளிலிருந்தும் நிவாரணத்தை அளிக்கிறது. ஊக்க்த்தை ஏற்படுத்தும் வண்ணம் மசாஜ் செய்யப்பட்டால், அது சோம்பேறித்தனத்தையும் களைப்பையும் போக்கி விடுகிறது.

 

இரத்த ஓட்ட அமைப்பு :-

 

மசாஜ் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் மந்தமான இரத்த ஓட்டம் நீங்கும். நடமாட சக்தியின்றி இருந்த இடத்திலேயே இருப்பவர்களுக்கு இது ஒரு வரபிரசாதமாக பெரிதும் பயனளிக்கும்.

 

நிணநீர் மண்டலம் (Lymphatic System)

 

மிருதுவான மசாஜ் நிணநீர் மண்டலத்தை ஊக்குவிக்கிறது. உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை வெளியே அகற்ற இது உதவுகிறது. மசாஜினால் ஏற்படும் ஓய்வு இறுக்கத்தை நீக்க உதவும். இது நோய் எதிர்ப்புத் தன்மையையும் அதிகரிக்கும்.

 

சுவாச அமைப்பு:

 

மசாஜின் போது மிக அதிகமான ஓய்வைப் பெறுவதால், சுவாசம் விடுவது மெதுவாக ஆகி விடுவதோடு ஆழ்ந்த சுவாசமும் ஏற்படும். உங்கள் உதரவிதானத்தை சுவாசத்திற்காக சுவாசிக்கவும் பெருக்கவும் தேவையான சக்தி இதனால் குறைவாகவே தேவைப்படும். பிஸியோதெராபிஸ்டுகள் மார்பில் ஏற்படும் இறுக்கத்தை (செஸ்ட் Chest Congestion) நுரையீரலின் அடியில் கப் இயக்கம் (Cupping movements) எனப்படும் இயக்கத்தைச் செய்வதன் மூலம் அதை அகற்றி விடுவர்.

 

ஜீரண மண்டலம்:

 

மசாஜ் ஓய்வை அதிகரிப்பதால் உணவு மற்றும் கழிவுகளின் இயக்கத்தை ஜீரண மண்டலத்தில் அதிகரிக்க உதவுகிறது. இந்த ஓய்வானது ஜீரண மண்டலத்தில் ஒரு சமச்சீர் தன்மையை உருவாக்குகிறது.

 

சிறுநீரக மண்டலம் :

 

மசாஜ் செய்யப்படும் போது கழிவுப் பொருள்கள் இரத்தத்தின் மூலமாக சிறுநீரகங்களுக்குச் செல்லும் வழியைக் காண்கிறது. அங்கு இவை வடிகட்டப்பட்டு வெளியேற்றப்படுகிறது.

 

பெண்களின் இனப்பெருக்க மண்டலம்:

மாதவிலக்கு வரும் போது உருவாகும் பிரச்சினைகளான வ்லி மற்றும் பிஎம்ஸ் (Premenstural Syndrome)  போன்றவை மசாஸ் செய்வதால் அது ஓய்வை ஏற்படுத்துவதன் காரணமாக மிகவும் தணியும். மாதவிலக்கு அறிகுறிகளில் மசாஜ் ஒரு நல்ல நிலைமையை ஏற்படுத்தும்

 

நன்றி டைய்லி மெயில் மார்ச் 4, 2017.

*****