
Compiled by london swaminathan
Date: 20 March 2016
Post No. 2649
Time uploaded in London :– 15-59
(Thanks for the Pictures; they are taken from various sources)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

1.ஆதரோ ஜாயதே த்ருஷ்டே தேஹினாம் சாரு வஸ்துனி – பாரத் கதா கோச
அழகான பொருட்களைப் பார்க்கையில், மரியாதை கொடுக்கத் தோன்றுகிறது
2.இந்தோ: களங்கோ தோஷஸ்ச தஸ்ய யேனைஷ நிர்மித: -கதா சரித் சாகரம்
சந்திரனிலுள்ள களங்கத்திற்கு இறைவனே பொறுப்பு; நிலவு அல்ல.
3.கிமிவ ஹி மதுராணாம் மண்டனம் ந அக்ருதீனாம் – சாகுந்தலம் 1-18
அழகான உருவத்துக்கு எதுதான் அழகைச் சேர்க்காது?
4.குரூபா ரூப சிந்தகா: – பரத சங்க்ரஹ
அழகில்லாதவர்கள்தான், அழகைப் பற்றிக் கவலைப்படுவார்கள்.
5.க்ஷணே க்ஷணே யன்னவதாமுபைதி ததேவ ரூபம் ரமணீயதாயா: – சிசுபாலவதம் 4-17
ஒவ்வொரு நொடியிலும் புதுமையாக இருப்பதே, அழகின் இலக்கணம்.

6.ந ரூபம் ஆஹார்யம் அபேக்ஷதே குணம் – கிராதர்ஜுனீயம் 4-23
அழகானவருக்கு, வேறு அணிகலன்களே தேவை இல்லை.
7.ந ஷட்பத ஸ்ரேணிபிர் ஏவ பங்கஜம் சசைவலாசங்கமபி ப்ரகாசதே – குமாரசம்பவம் 5-9
சேற்றில் முளைத்த செந்தாமரைக்கு, அதைச் சுற்றி வட்டமிடும், தேனீக்கள் மட்டும்தாம் அழகு சேர்க்கிறது என்று எண்ணவேண்டாம். அதைச் சுற்றியுள்ள நீர்த்தாவரங்களும் அழகு செய்யும்.
8.ந ஹி கமனீயானி குசுமானி சிரம் ரத்யாயாம் திஷ்டந்தி.
அழகான மலர்கள், சாலை ஓரத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்கா.
9.ந ஹ்யாக்ருதி:சுசத்ருசம் விஜஹாதி வ்ருத்தம் – மிருச்சகடிகம் 9-16
உடற்கட்டைப் போல கவரக்கூடியது வேறு எதுவுமில்லை.
10.யதேவ ரோசதே யஸ்மை பவேத தத் தஸ்ய சுந்தரம் – ஹிதோபதேசம் 2-53
யாருக்கு எது மிகவும் பிடிக்குமோ, அதுவே அவருக்கு அழகாகத் தோன்றும்.
தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

11.யா யஸ்யாபிமதா நாரீ சுரூபா தஸ்ய சா பவேத் –கதா சரித் சாகரம்
எல்லா மனைவியரும், அவரவர் கணவரின் கண்களில் மிக அழகானவர்.
12.யா யஸ்யாபிமதா லோகே சா தஸ்ய அதிக ரூபிணீ – பாரத் கத மஞ்சரி
ஒருத்தியை ஒருவன் விரும்பிவிட்டால், அவளே அவனுக்கு பூலோக ரம்பை!
13.ரம்யாணாம் விக்ருதிபிரபி ஸ்ரியந்தநோதி – கிராதர்ஜுனீயம் 7-5
அழகான எதுவும் நிலை பிறண்டாலும் அழகாக இருக்கும். (அழகான பெண்ணின் கேசம், காற்றில் பறந்து கலைந்தாலும் அதுவும் அழகுதானே!).
14.வினா கண்டாடணத்காரம் கஜோ கச்சன்ன சோபதே.
ஜில், ஜில் மணி இல்லாவிடில், யானைக்கும் அழகு குறைவுதான்.
15.சர்வ ஜன மனோபிராமம் கலு சௌபாக்யம் நாம – ஸ்வப்னவாசவதத்த
ஒருவரிடம் செல்வம் இருக்கும்வரை, எல்லோருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

16.சர்வ அவஸ்தாசு சாருதா சோபாம் புஷ்யதி – மாளவிகாக்னிமித்ர
அழகு, எப்போதும் வசீகரிக்கும்
17.சர்வாஸ்வவஸ்தாசு ரமணீயத்வம் ஆக்ருதி விசேஷானாம் – சாகுந்தலம்
அழகான உடற்கட்டுடையோர், எப்போதும் வசீகரிப்பர்.
18.சௌந்தர்யம் கஸ்ய ந ப்ரியம்- கஹாவத்ரனாகர்
அழகிற்கு மயங்காதோர் உண்டோ!
19.ஸ்வபாவ ரமணீயானி மண்டிதான்யதிரமணீயானி பவந்தி – அவிமாரக:
அழகான ஒருவருக்கு அலங்காரம் செய்தால், மேலும் அழகு மிளிரும்.
20.ஸ்வபாவ சுந்தரம் வஸ்து ந சம்ஸ்காரம் அபேக்ஷதே – த்ருஷ்டாந்த சதக
இயற்கையில் அழகான ஒரு பொருளுக்கு, மேலும் அணிகலனோ, அலங்காரமோ தேவை இல்லை.
தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

-சுபம்-
You must be logged in to post a comment.