
Post No. 9653
Date uploaded in London – –27 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
SAMUEL JOHNSON
(1709 – 1784)
சாமுவேல் ஜான்சன் (SAMUEL JOHNSON) முதல் ஆங்கில அகராதியை உருவாக்கினார். டாக்டர் ஜான்சன் லிச்ஃபீல்டு புத்தக்கடை உரிமையாளரின் மகன். லிச்ஃபீடில்(LICHFIELD) பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். கல்விக் கட்டணம் கட்ட முடியாததால் பட்டம் பெறுவதற்கு முன்னரே படிப்பை நிறுத்த நேரிட்டது. பின்னர் அவர் ஒரு நூல் வெளியீட்டாளரிடம் பணிபுரிந்தார். அவர், இவருக்கு சிறுதொகையை கொடுத்துவந்தார்.
26 வயதில் அவருடைய முதல் நூல் வெளியானது. இது ஒரு மொழிபெயர்ப்பு. அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதே ஆண்டில் அவர் திருமணம் செய்து கொண்டார்.
லிச்ஃபீல்டு அருகில் அவர் பள்ளிக்கூடம் துவக்கினார், அதிலும் வெற்றி கிட்டவில்லை. மூன்று மாணவர்களே வந்ததால் பள்ளிக்கூடத்தை மூட நேரிட்டது. ஆனால் அதில் ஒரு மாணவர் DAVID GARRICK பிற்காலத்தில் அவர் இங்கிலாந்தின் மிகப்பெரிய நடிகரானார்.
1737-ஆம் ஆண்டில் ஜான்சனும் கேரிக்கும் (Garrick) லண்டனுக்குச் சென்றனர். ஜான்சன் பல பத்திரிகைகளுக்கு எழுதினார். பின்னர் THE SPECTATOR என்ற பத்திரிகையையும் தொடங்கினார். அதே நேரத்தில் ஆங்கில அகராதியை தொடுக்கும் பணியிலும் இறங்கினார். அவருக்கு 46 வயதானபோது அவருடைய நூல் வெளியானது. இது அவரைப் புகழேணியின் உச்சிக்கு ஏற்றிவிட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அவருக்கு பட்டம் வழங்கியது.
இதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தாயார் இறந்தார். சடலத்தை அடக்கம் செய்யக்கூட கையில் காசு இல்லை. ஒரே வாரத்தில் ஒரு நாடகம் எழுதி பணம் திரட்டினார்.
இதற்குப் பின்னர்தான் அதிர்ஷ்ட தேவதையின் பார்வை அவர் மீது விழுந்தது. அகராதியை உருவாக்கிய அவர்தம் பெருமையை ஆங்கில உலகு உணர்ந்தது. அவருக்கு ஆண்டுக்கு 300 பௌன்ட் ஓய்வூதியம் அளிக்கப்பட்டது.
ஜான்சனுக்கு 44 வயதானபோது ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பாஸ்வெல்லை (JAMES BOSWELL) சந்தித்தார். இவர்களுடைய நட்பு வளர்ந்து வேரூன்றியது. ஆங்கில மொழியில் புகழ்பெற்ற வாழ்க்கை வரலாறு உருவாக இது வழி வகுத்தது. ஜான்சனின் வாழ்க்கையை (LIFE OF SAMUEL JOHNSON) பாஸ்வெல் எழுதினார்.
ஜான்சனுக்கு மரணத்தைக் கண்டு பயம். வாழ்நாள் முழுதும் மரணத்தை எண்ணி அஞ்சிய அவர் இறக்கும்போது அதைத் துணிவுடன் சந்தித்தார். வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.



சாமுவேல் ஜான்சன் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ச…
7 Nov 2015 — Article Written by London swaminathan. Date: 7 November 2015. Post No:2308. Time uploaded in London :–7-58 AM. (Pictures in this article are taken by London swaminathan). DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
https://tamilandvedas.com › tag › அ…
அவர்தான் எழுத்துச் சிற்பி சாமுவேல் ஜான்சன்! அவருடைய வரலாறு மிக மிகச் சுவையூட்டும் வரலாறு. சுருக்கமாகச் சொல்கிறேன். IMG_7860.
அடக்கமில்லாத | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › அ…
10 Apr 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … பேரகராதியை முறையாகத் தயாரித்து பெரும்புகழ் பெற்றவர் சாமுவேல் ஜான்சன்.
https://tamilandvedas.com › tag › த…
11 Jul 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … ஆங்கில அகராதியை வெளியிட்ட அகராதித் தந்தை சாமுவேல் ஜான்சன் (SAMUEL JOHNSON) ஜெ J சொற்களையோ V …
–subham—

tags-ஆங்கில அகராதி , சாமுவேல் ஜான்சன்