
Post No. 8105
Date uploaded in London – 4 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரு சொல் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறதோ அவ்வளவு உறுதியாக அந்தச் சொல் நிலைத்து நிற்குமாம். இது ஆங்கிலத்தை ஆராய்ந்தோர் வெளியிட்ட ஆராய்ச்சி.
இதற்கான என்னுடைய மறுப்புரை கட்டுரையின் பின் பகுதியில் வருகிறது .
ஆங்கில மொழியில் நான் I (ஐ) YOU நீ (யூ ), நாங்கள் WE (வீ ) என்பன 15, 000 ஆண்டுகளாக மாறவில்லை என்று ஆராய்ச்சியில் தெரியவந்தது. 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் குகையில் வாழ்ந்த ஆதி மனிதன் பேசிய 23 சொற்களையும் இவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவர்கள் இங்கிலாந்திலுள்ள ரெடிங் (UNIVERSITY OF READING ) பல்கலைக் கழ கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.தீ (FIRE) யைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு, மரவுரியை (BARK) அணிந்து கொண்டு, மாமிசத்தை வாட்டி, வதக்கிக் கடிக்கையில் துப்பிக் கொண்டே இருப்பார்கள். ஆகையால் துப்பு (SPIT), மாமிசம், தீ , நீ, நான், அம்மா (MOTHER மதர் ), பேன் /ஈறு (LOUSE, LICE) , சாம்பல், மரவுரி ஆகியன அவர்கள் அடிக்கடி பயன்படுத்திய சொற்கள் என்பது இவர்கள் துணிபு. ஆயினும் இவர்கள் சொல்வது, மாக்ஸ்முல்லர் சொல்வது ஆகியன எல்லாம் பிழையுடைத்து என்று இந்திய தேதிகள் (DATES OR PERIODS) காட்டுகின்றன.

ஒரு மொழி 200 ஆண்டுக்கு ஒரு முறை மாறும் என்ற கணக்கில் ரிக் வேதத்துக்கு தேதி குறித்தார் மாக்ஸ்முல்லர். உடனே வில்சன் முதலானோர் அது தவறு என்று காட்டியவுடன் அவர் ‘ஜகா’ வாங்கினார். இதே கொள்கையை நாம் தமிழுக்கும் வைத்தால் பல நூல்களின் காலம் சரிந்து விழும். திருக்குறள், சங்க நூல்கள், சிலப்பதிகாரம் ஆகிய எல்லாவற்றையும் 200 ஆண்டு வரம்புக்குள் வைக்க முடியாது. தொல்காப்பியத்தை மிகவும் முன் வைக்கிறோம். ஆயினும் மொழி நடை புரியும்படியாகவே இருக்கிறது..
இதை எல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? நமக்குக் கிடைத்த நூல்களில் உள்ள சொற்களை கம்யூட்டரில் போட்டு ஆவை என்ன வேகத்தில் எப்படி மாறுகின்றன என்று பார்ப்பார்கள். அதை வைத்து ஒரு மாடல் MODEL உருவாக்குவார்கள். அதை அதே குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளுடன் ஒப்பிடுவர். பின்னர் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுவர் . உலகிலுள்ள பழைய மொழிகளை 7 சூப்பர் மொழிக் குடும்பமாகப் பிரித்துள்ளனர் (SEVEN SUPER LANGUAGE FAMILIES) .
இதே போல நமது பழைய 36 நூல்களை (18 மேல் கணக்கு + 18 கீழ்க்கணக்கு) கம்பியூட்டரில் கொடுத்தால் நமது பழைய காலக்கணக்கீடுகள் அட்டை டப்பாக்களில் கட்டிய வீடு போல சரிந்து விழும். சங்க இலக்கிய, தொல்காப்பிய, திருக்குறள் சொல்லடைவுகளை வைத்து ஆராயும் எனக்கே இது தெரிகிறது. கம்ப்யுயூட்டரில் கொடுத்தால் அதன் முடிவுகளை மறுக்கமுடியாது.
‘நான்’, ‘நீ’ மாறாது என்பது தமிழ் மொழியில் பொய்யாக்கப்பட்டு வருகிறது. ‘நான்’ என்ற சொல்லே சங்க காலத்தில் கிடையாது. ‘யான்’தான் இருந்தது. சிலப்பதிகாரம், மணி மேகலையில் கடைசி அத்தியாயங்களில் (காதை) ஓரிரு இடங்களில் மட்டும் வருகிறது. திருக்குறளில் இல்லை. ஆனால் தேவார காலத்திலிருந்து ‘நான்’ வந்து விடுகிறது சங்க காலத்துக்கும் தேவார காலத்துக்கும் 500 ஆண்டு கூட இடைவெளி இல்லை. எப்படி ‘யான்’, நான் ஆக மாறியது? வெள்ளைக்கார ஐரோப்பாவில் மட்டும் 15, 000 (I, WE, YOU) ஆண்டுக்கு மாறவில்லையாம்.
ஆனால் சம்ஸ்கிருதத்தில் அஹம் (நான்) வேதகாலம் முதல் இன்று வரை மாறவில்லை. ‘அஹம்காரம்’ பிடித்தவன் என்று நாம் இப்போதும் சொல்கிறோம். ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற உபநிஷத கால வாக்கியம் மிகவும் பிரசித்தம்.
‘நீ’ என்னும் சொல் சங்க காலம் முதல் இன்றுவரை மாறவில்லை என்பது உண்மைதான். ஆனால் சங்க காலத்தில் இல்லாத ‘நீங்கள்’ எப்போது வந்தது? எப்படி வந்தது? சுருக்கமாகச் சொல்லப்போனால் மொழிக் கொள்கையாளர் (LINGUISTS) சொல்வதெல்லாம் பிதற்றல் என்றே சொல்லத் தோன்றுகிறது..
மாக்ஸ்முல்லர் சொல்வதை பயன்படுத்தினால் சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலியவற்றுக்கு இடையே குறைந்தது தலா 200 ஆண்டு இடைவெளி இருக்க வேண்டும்! திருக்குறள் நடை வேறு. சொல் வேறு. 125 ஸம்ஸ்கிருதச் சொற்களை நூற்றுக் கணக்கான குறள்களில் பயன் படுத்துகிறார்!!
நிற்க !

இன்னும் ஒரு சுவையான விஷயம் .
கம்பியூட்டர் மூலம் கிடைத்த இன்னும் ஒரு ஆய்வு. நாங்கள் அதாவது ‘வீ ‘ WE 19,000 ஆண்டுகளாக மாறவில்லையாம். ஆனால் பிரிட் BRID என்பது 3200 ஆண்டுகளுக்கு முன்னர் BIRD பேர்ட் ஆகிவிட்டதாம் . அதாவது ‘R ‘ ஆர் என்னும் எழுத்து அல்லது உச்சரிப்பு இடம் மாறிவிட்டதாதம் . அப்படியானால் நாம் சொல்வதும் சரிதானோ!!! மருதமரம் நிறைந்த மருதை ‘ர்’ இடம் மாறி மதுரை ஆச்சாம் ; குருதை என்பதில் ர/ ஆர் இடம் மாறி குதிரை ஆச்சாம் . மருதை, குருதை என்ற கிராமத்தான் பேச்சுதான் சரி!
ஆங்கிலத்தில் ஆண்டுதோறும் 2500 புதிய சொற்களை ஆக்ஸ்போர்ட் அகராதி சேர்க்கிறது. தமிழ் ஏன் அப்படி வளரவில்லை?? எந்த தமிழ் அகராதி வாங்கினாலும் அதில் சம்ஸ்கிருத சொற்கள்தான் அதிகம் இருக்கின்றன. ஏன் ?
சிந்திடா , தமிழா , சிந்தி ; வெறும் மூக்கைச் சிந்தாதே ! சிந்தித்துப் பார்.
tags – 15,000 ஆண்டுக்கு முன், சொற்கள், ஆதி மனிதன்
–SUBHAM—

