
Article written by S.NAGARAJAN
Date: 15 June 2016
Post No. 2896
Time uploaded in London :– 6-17 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
17-6-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்!
ச.நாகராஜன்

“அற்புதங்கள் தினமும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அற்புதங்கள் பற்றிய உங்கள் பார்வையை மாற்றிக் கொண்டு பாருங்கள். உங்களைச் சுற்றி ஏராளமான அற்புதங்கள் நிகழ்வதை நீங்கள் காண்பீர்கள்.” – ஜோன் போன் ஜோவி
அறிவுஜீவியான இண்டிகோ பையன் (மிகவும் அறிவு மிக்கவர்களை இண்டிகோ என்று அழைப்பர்) தான் முற்பிறவி ஒன்றில் செவ்வாய் கிரகத்தில் பிறந்தவன் என்று சொன்னதைப் பார்த்தோம். ரஷியாவைச் சேர்ந்த இந்தப் பையனின் பெயர் போரிஸ்கா (Boriska). நாளுக்கு நாள், வளர வளர, வயது ஏற ஏற, தன் வியத்தகு அறிவினால் அனைத்து விஞ்ஞானிகளையும் அசத்தி வருகிறான் போரிஸ்கா.
அறிவியலுக்குச் சவால் விடும் வகையில் உலகெங்கும் பலர் இப்படி அடிக்கடி பிறந்து கொண்டே தான் இருக்கின்றனர். விஞ்ஞானிகளால் திகைப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. பார்ப்பதற்கு ஆதாரமாக இருக்கும் விழிகளின் கட்புல மேலுறை (Visual Cortex) இல்லாமல் ஒருவரால் பார்க்க முடியுமா? முடியும் என்று சொன்னால் விஞ்ஞானிகள் என்ன, சாமான்ய மனிதர்களே சிரிப்பார்கள்.
விழிகளின் பார்வைக்கு ஆதாரமான கார்டெக்ஸ் இல்லாமல் பார்ப்பது எப்படி என்று கேலியும் செய்வார்கள்.
ஆனால் மருத்துவ ரீதியாக “பார்வையற்ற” ஒருவர், விஷுவல் கார்டெக்ஸ் இல்லாமல் பார்க்க முடிகிறது என்றால் அதை விஞ்ஞானிகளாலேயே நம்ப முடியவில்லை!
‘பயலாஜி’ என்ற விஞ்ஞான இதழில் 2008ஆம் ஆண்டு இவரைப் பற்றிய அதிசய விவரங்கள் வெளியிடப்பட்டன.
இவரது முழுப்பயரைச் சொல்லாமல் இவர் டிஎன் (TN) என்று குறிப்பிட்ப்பட்டார்
டி என் ஒரு டாக்டர். துரதிர்ஷ்டவச்மாக இவர் இருமுறை பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். இரு விழிகளின் மேலுறையும் முற்றிலுமாக பழுதுபட்டன. உறுப்புகள் சிதைந்தே விட்டன. ஒன்றும் செய்ய முடியாத நிலை.
ஆனால் இவர் எதிரில் இருக்கும் தடைகளை எல்லாம் “பார்க்கிறார்” அல்லது உணர்கிறார்.
இதை நம்ப மறுத்த விஞ்ஞானிகள் இவருக்கு ஒரு சோதனையை வைத்தனர்.
நெதர்லாண்ட்ஸ் பல்கலைக் கழகம் இந்த ஆய்வை முன்னின்று நடத்தியது.
ஒரு ஹாலில் ஏராள்மான தடைகளை ஏற்படுத்தி – நாற்காலி,மேஜை ஆகியவற்றைக் குறுக்கும் நெடுக்குமாக வைத்து – அதில் இவரை நடந்து போகச் சொன்னார்கள்.
என்ன ஆச்சரியம், சரியாக கண்பார்வை உள்ளவர் போல இவர் தடையின்றி எதன் மீதும் இடிக்காமல் நடந்தார்.
இது எப்படி சாத்தியம் என்று யாராலும் விளக்கமுடியவில்லை.
மூளைக்கு இன்னொரு பாதை இருக்கிறதா – பார்ப்பதற்கு?!
பிரப்ல விஞ்ஞான இதழான, ‘தி ஸயின்டிஸ்ட்’ பத்திரிகையில் இவர் இன்னொருவரின் முகபாவத்தில் ஏற்படும் கோபம் மற்றும் பயத்தைக் கூட உணர்கிறார் என்று எழுதப்பட்ட கட்டுரை உலகையே பரபரப்புக்குள்ளாக்கியது.
உலகில் பார்வையற்ற நிலையில் இப்படிப் பார்க்கும் ஒரே நோயாளி இவர் தான் என்று அறிவிய்ல் உலகம் கூறுகிறது.
இவர் எப்படிப் பார்க்கிறார் என்ற மர்மத்தை விடுவிக்க இன்னும் முடியவில்லை!

இன்னொரு அதிசயப் பெண்மணி எலிஸபத் சல்ஸெர் (Elisabeth Sulser) என்பவர். இவருக்கு இரு புலன்கள் ஒரே சமயத்தில் வேலை செய்கின்றன.
பதினாறு வயதிலேயே அவர் இதைக் கண்டு பிடித்து விட்டார். தொழில் துறையில் இவர் ஒரு இசைக் கலைஞர்.
2004, 2005ஆம் ஆண்டுகளில் ஸ்விட்ஸர்லாந்தில் ஜூரிச் பல்கலைக் கழகம் இவரை ஆய்வுக்காக அழைத்தது.
ஒலியைக் கேட்கும் போது அதன் வடிவத்தை இவர் உணர்கிறார். உதாரணமாக இசை ஸ்வரத்தில் சி நோட் (C Note)
இசைக்கப்பட்டால் அதை சிவப்பாக இவர் காண்கிறார். டி நோட் என்றால் நீல நிறத்தை இவர் காண்கிறார். கலைடாஸ்கோப் போல பல்வேறு வண்ணங்களை ஸ்வர மாறுதலுக்குத் தக்கபடி இவர் தொடர்ந்து காண்கிறார்.
அதே போல இசையில் ஒரு நோட்டிற்கும் இன்னொரு நோட்டிற்கும் இடையே உள்ள சிறிய இடைவெளியில் இவர் நாக்கில் சுவையை உணர்கிறார். ஒரு சமயம் புளிப்புச் சுவை. இன்னொரு சமயம் கசப்புச் சுவை. ஒரு சமயம் நீரை அருந்தும் உணர்வு. இன்னொரு சமயம் ஐஸ் க்ரீம் சாப்பிடும் உணர்வு. ஒவ்வொரு ஸ்வர இடைவெளிக்கும் இடையே ஒவ்வொரு விதமான சுவை.
இந்த அரிய அனுப்வத்தை அறிவியல் ‘ஸினஸ்திசியா’ (Synesthesia) என்று அழைக்கிறது. உலகில் உள்ள 750 கோடி பேரில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பேருக்கே இப்படிப்பட்ட இரு புலன்களின் கலப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதாம்! மூளையில் உள்ள சில அமைப்புகள் தீவிரமாக இணைக்கப்பட்டிருப்பதால் இப்படி புலன் கலவை ஏற்படுகிறதாம்.
ஸினஸ்தீசியா என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தை. பல்வேறு உணர்வுகளின் அனுபவம் என்று இதற்குப் பொருள்.
இப்படிப்பட்டவர்களில் வெளி உலகிற்குத் தெரியும் வகையில் ஆய்வுக்கு வந்த முதல் இசைக் கலைஞர் இவர் என்பதால் இவருக்கு ஏகமான புகழ். விஞ்ஞானிகளும் இவரை எல்லா ஆராய்ச்சிகளுக்கும் அழைத்து சோதனைகளைச் செய்து வருகின்றனர்.

இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட இரு புலன் உணர்வுகளை அறிவியல் இனம் கண்டுள்ளது. சிலருக்கு எண்களை வண்ணங்கள் மூலமாக மட்டுமே அறிய முடிகிறது! எந்த எண்ணைச் சொன்னாலும் அவர்களுக்கு அதற்குரிய வண்ணமே தோன்றும்!
ஆனால் இப்படி ஏன் அதீத புலன் உணர்வு சிலருக்கு மட்டும் வருகிறது என்பதை விஞ்ஞானிகளால் இது வரை கண்டு பிடிக்க முடியவில்லை.
விநோதமான உலகத்திலே வித விதமான் அதிசயங்கள்! அதைச் செய்து காட்டும் மனிதர்கள்!! அறிவியலும் விடுவதாயில்லை. அவர்களின் மீதான தனது ஆராய்ச்சியைத் தொடர்கிறது!!!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
இயற்பியலில் பெரும் மேதை ஜான் பர்டீன் (John Bardeen – தோற்றம் 23-5-1908 மறைவு 30-1-1991)
இயற்பியலில் இரு முறை நோபல் பரிசு பெற்ற பெருமை இவர் ஒருவரை மட்டுமே சாரும்.

டிரான்ஸிஸ்டரைக் கண்டுபிடித்ததற்காக 1956இல் முதல் முறையாக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் சூபர்கண்டக்டிவிடி துறையில் இவர் செய்த ஆராய்ச்சிக்காக 1972இல் இரண்டாம் முறையாக நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.
அதிகம் பேசாத மேதை இவர். சொற்களை யோசித்துப் பேசுவார்.
டிரான்ஸிஸ்டர் கண்டுபிடிப்பு மின்னணுவியலில் ஒரு பிரம்மாண்டமான மாறுதலை ஏற்படுத்தியது. கம்ப்யூட்டர் உருவாக இது பெரிதும் காரணமாக அமைந்தது.
முதல் முறை பரிசைப் பெற இவர் ஸ்வீடனுக்குச் சென்றார். சாதாரணமாக நோபல் பரிசு பெறும் அறிஞர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் தன் குடும்பத்துடன் விழாவிற்குச் செல்வது வழக்கம்.
ஜான் பர்டீனுக்கு மூன்று மகன்கள். மூவரில் ஒருவரை மட்டும் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவிற்குத் தன்னுடன் அழைத்துச் சென்றார் அவர்.
அவரை வரவேற்ற ஸ்வீடன் மன்னர் ஆறாம் குஸ்டாஃப் (King Gustaf VI) , “கூட யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்?: என்று அவரிடம் வினவினார். தன் மகன்களில் ஒருவர் மட்டுமே தன்னுடன் வந்திருப்பதாக பர்டீன் பதிலளித்தார்.
உடனே அவரைச் செல்லமாகக் கடிந்து கொண்டார் மன்னர். அனைவரையும் கூட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டாமா என்றார் அவர்.
எப்போதுமே மெதுவாக பதில் சொல்லும் பர்டீன் இப்போது, உடனடியாக, “அடுத்த முறை குடும்பத்துடன் வருகிறேன்” என்று பதிலளித்தார்.
அனைவரும் பிரமித்துப் போயினர். ஒருமுறை நோபல் பரிசு பெறுவதே முடியாத காரியம். அடுத்த முறை அழைத்து வருவதாவது?
ஆனால் மேதை தன் வாக்கை மெய்யாக்கிக் காட்டினார்.
1972இல் இரண்டாம் முறை நோபல் பரிசைப் பெற்றார்; விழாவிற்கும் குடுபத்துடன் சென்றார்!
************
You must be logged in to post a comment.