Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிவபெருமானின் இரண்டு வடிவங்கள்: அர்த்தநாரீஸ்வரர், சங்கர நாராயணன்
Ardhanarishwara:
Long before feminist movements arose in the West to advocate for equality, Hindu philosophy had already acknowledged that man and woman share a deeply interdependent relationship, each fulfilling a vital role. Just as a balance scale is steady only when both sides are equal in weight, life attains balance when both genders enjoy equal respect and rights.
This truth was embodied by none other than Mahadev Himself when He manifested as Ardhanarishwara — one half Shiva and the other Devi Parvati (or Adi Shakti). Yet, this form represents far more than external gender equality. It teaches the importance of harmonizing the masculine and feminine energies within ourselves — not in the physical sense, but as spiritual and psychological principles that dwell in every being.
***
Harihar in Karnataka , Sankaranarayanan in Tamil Nadu
The god Harihareshwara is a combination of the gods Shiva and Vishnu. There is a story behind the avatar of this god. In ancient days this place was known as “Guharanya”, a dense jungle and habitat of a demon Guhasura. He had a gift that no human or Rakshasa or god can kill him. And he started harassing people around this place. Then Vishnu and Shiva came together in a new avatara called Hari – Hara (Harihara) – and killed demon Guhasura
Harihara is situated on the banks of the Tungabhadra River, 275 kilometres North of Bengaluru. Harihar and Davangere (14 km away) are referred as “twin cities”.
***
Tiruupaarkatal near Kanchipuram
Similar stories are behind two more famous temples.
Full name of Sankarankoil in Tirunelveli region is Sankara Narayanan Koil, where Shiva appeared as Sankara+Narayanan at the request of his wife Parvati.
In Tirupparkatal, we have slightly a different story. An ardent Vishnu devotee had a vow of having his food only after visiting a Vishnu temple every day. When he came to Tiruupaarkatal, he could not see any Vishnu temple. When he was starving and praying, an old man came and told that there was a Vishnu temple. When he took him into a Shiva temple, despite his protest, Lord Shiva appeared as Sankara and Narayana .
In many Tevara and Divya Prabantha poems we see verses in praise of this Hari Hara form. Several centuries ago, there was a conflict between Saivites and Vaishnavites and God himself settled that conflict by appearing in this combined form.
***
சிவபெருமானுடைய வடிவங்கள்
சிவபுராணத்தில் சிவனுக்கு 64 வடிவங்கள் கூறப்படுகின்றன அவற்றின் உருவமற்ற வழிபாட்டை குறிக்கும் சிவலிங்கத்தை காண்கிறோம் ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தினை விளக்கும் அர்த்தநாரீஸ்வரர் உருவத்தையும் காண்கிறோம் மே லை உலகத்தில் பெண்களுக்கு சம உரிமைகள் கேட்டு இயக்கம் நடத்துவதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆண்களும் பெண்களும் சரி என்ற கருத்தினை விளக்கும் உருவம் அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகும் இதில் சிவனையும் சக்தியையும் பாதி பாதியாக காண்கின்றோம் ஆண்களோடு பெண்களும் சரி நிக்ர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே இன்று பாரதியார் பாடினார். அந்த பாட்டிற்கு காரணமே இந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம் தான்! சிவன் இல்லாமல் சக்தி இல்லை, சக்தி இல்லாமல் சிவன் இல்லை. இரண்டு சக்தி களும் கூடினால் தான் உலகம் நடைபெறும் என்ற பெரிய கருத்தினை இந்த வடிவம் காட்டுகிறது.
இதையே இன்னொரு விதமாகச் சொல்வது சங்கர நாராயணன் வடிவம் ஆகும்.
***
சங்கர நாராயணன் , ஹரிஹரன்
அர்த்த நாரீஸ்வரனில் பாதி சக்தி; அதே போல சங்கர நாராயணன் என்றா சிவனின் வடிவத்தில் பாதி நாராயணன் ; இதன் தத்துவம் என்னெவென்றால் சிவா சக்தி வடிவமே சங்கர நாராயணன்
நாராயணன்= சக்தி
சிவன் என்பது தேக்கி வைக்கப்பட்ட ஆற்றல்
சக்தி என்பது செயல்படும்/ பயன்படும் ஆற்றல்.
****
Tirupparkadal story as told by Sri Kanchi Paramacharya (1894-1994)
சிவ – விஷ்ணு அபேதத்தைக் காட்டும் ஸ்தலங்கள் பல உள்ளன. திருநெல்வேலிச் சீமையில் சங்கர நாராயணன் கோவிலும், (‘சங்கர நயினார் கோயில்’ என்று தப்பாகச் சொல்கிறார்கள்.) மேற்கே ஹரிஹர க்ஷேத்திரத்திலும் இவ்விரண்டு மூர்த்திகளும் ஒன்றாக இணைந்த பிம்பங்கள் உள்ளன. குற்றாலத்தில் விஷ்ணு மூர்த்தியையே அகஸ்திய மஹரிஷி சிவலிங்கமாக மாற்றியிருக்கிறார். இவை பிரபலமான ஸ்தலங்கள். இவ்வளவு பிரபலமில்லாத ஒரு க்ஷேத்திரத்தைப் பற்றிச் சொல்கிறேன்:
திருப்பாற்கடல் என்று ஒரு ஊர் இருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து வேலூருக்குப் போகிற வழியில் இருபது மைலில் இருக்கிறது. முதலில் அந்த க்ஷேத்திரத்தில் ஒரு பெருமாள் கோயில்கூடக் கிடையாதாம். ஈசுவரன் கோயில்தான் இருந்ததாம். ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அநேக க்ஷேத்திரங்களுக்குச் சென்று விஷ்ணு தரிசனம் பண்ணிக் கொண்டு வருகிற காலத்தில் அந்த ஊருக்கு வந்தாராம். ஒவ்வொரு நாளும் ஊருக்குப் போகிற போது விஷ்ணு தரிசனம் பண்ணாமல், அவர் ஆகாரம் பண்ணுவதில்லை என்ற நியமத்தை வைத்துக் கொண்டிருந்தார்.
அவர் திருப்பாற்கடலுக்கு வந்து “எங்கே விஷ்ணு ஆலயம் இருக்கிறது? என்று ஒவ்வொரு கோயிலாகப் போனார். எல்லாம் சிவன் கோயிலாகவே இருந்தன. கடைசியில் விஷ்ணு ஆலயமாகத்தான் இருக்கும் என்று நினைத்து ஒரு கோவிலுக்குள் நுழைந்தார். உள்ளே போனால் ஈசுவரன் இருந்தார். உடனே வெளியே ஓடிவந்து விட்டார். ஆகாரம் பண்ணவில்லை. வயிறு பசியில் துடித்தது. அதைவிட மனஸிலே ‘இன்றைக்கு விஷ்ணு தரிசனம் பண்ணவில்லையே!’ என்று துடிதுடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு கிழவர் அவருக்கு முன்னால் வந்து “என்ன ஸ்வாமி! விஷ்ணு தரிசனம் பண்ண வருகிறீர்களா?” என்று கேட்டார்.
“இந்தப் பிரயோஜனமில்லாத ஊரில் எங்கே ஐயா விஷ்ணு கோயில் இருக்கிறது?” என்று அவர் கோபமாகச் சொன்னாராம்.
“அதோ தெரிகிறதே, அது சாக்ஷாத் விஷ்ணு கோயில்தான்” என்று கிழவர் சொன்னார்.
“நான் அந்த கோயிலுக்குள் நுழையமாட்டேன்” என்று விஷ்ணு பக்தர் சொன்னாராம்.
கடைசியில், ஊர் மத்தியஸ்தத்தின் பேரில் இவர்கள் எல்லோரும் கோவிலுக்குள் சென்றார்கள்
வாஸ்தவத்தில் அங்கே போய்ப் பார்த்தால் சிவலிங்கம் மாதிரி இருந்தது. கீழ் பிரம்ம பீடமாகிய ஆவுடையார் இருந்தது. ஆவுடையாருக்கு நடுவிலிருந்து ஒரு மூர்த்தி எழும்பியதால் அசப்பில் சிவலிங்கமாதிரியே தோன்றிற்று. ஆனால் வாஸ்தவத்திலோ ஆவுடையாருக்கு மேலே தெரிந்தது லிங்கமல்ல. லிங்கத்தின் ஸ்தானத்தில் பெருமாள் நின்று கொண்டிருந்தார்.
அதைப் பார்த்தவுடன், ‘அடடா! நாம் ஏமாந்து போய்விட்டோமே – மஹாவிஷ்ணு அல்லவா இங்கே இருக்கிறார்? என்று அந்த விஷ்ணு பக்தர் மிகவும் மனம் உருகி, அநேக ஸ்தோத்திரங்கள் பண்ணினாராம்.
கிழவரிடம் மன்னிப்புக் கேட்கத் திரும்பினால், அந்தக் கிழவரே விஷ்ணு மூர்த்திக்குள் கலந்து விட்டார். பெருமாளே கிழவராய் வந்திருக்கிறார்!
திருப்பாற்கடல் என்னும் ஊருக்குப் போனால் இப்போதும் பார்க்கலாம். ஆவுடையார் இருக்கும்; அதற்கு மேல் லிங்கம் இருக்கிற இடத்தில் பெருமாள் நின்றுகொண்டிருக்கிறார். இந்த க்ஷேத்திரமும் நமக்கு ஈசுவரன் வேறு மஹா விஷ்ணு வேறு இல்லை என்ற தத்துவத்தை விளக்குகிறது.
****
சங்கரன் கோவில் ,கர்நாடகத்தில் உள்ளஹரிஹர் (ஹரிஹரன்) நகராக கோவில்களிலும் கதைகள் உண்டு.
சங்கரன்கோவிலில் உமையம்மையின் நீண்ட தவத்துக்கு பின்னர் சிவபெருமானே ஹரி ஹரன் என்ற உருவத்தில் தோன்றினார் என்பது ஸ்தல புராணம்
ஹரிஹர் என்னுமிடத்தில் ஒரு அசுரன் மனிதனாலும் தெய்வத்தாலும் அசுரனாலும் சாகாமல் இருக்க வரம் பெற்றான் அவனது வரத்துக்கு அப்பாற்பட்டதே அரனும் அரியும் ஒன்றுபட்ட வடிவம். இந்த ஹரிஹர உருவத்தினால் குஹ்யாசுரன் என்ற அசு சுரன் கொல்லப்பட்டான்
–subham—
Tags– சங்கரன் கோவில், ஹரிஹர் , அர்த்த நாரீஸ்வரன், அரன், அரி, திருப்பாற்கடல் Harihar, Sankara Narayanan , Tirupparkatal, Ardhanareesvar, Combined form Siva Sakti, Hinduism through 500 Pictures in Tamil and English-27 படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்- 27
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
English version posted yesterday
லிங்கம் பற்றிய விளக்கம்
கடவுளுக்கு உருவமும் உண்டு உருவமும் இல்லை என்ற இரண்டு வடிவங்களில் இறைவனை வழிபடலாம்/ கும்பிடலாம் என்ற கருத்தினை சிவலிங்கம் விளக்குகிறது. லிங்கம் என்பது உருவமற்ற வழிபாட்டைக் குறிப்பதாகும். சில இடங்களில் அந்த லிங்கத்துக்குள்ளேயே ஒரு உருவத்தையும் அதாவது சிவபெருமானின் வடிவத்தைக் காண முடியும்; அதை லிங்கோதப்பவர் என்பார்கள்; இது அந்த தத்துவத்தை சரியாக எடுத்துக் காட்டுகிறது அதாவது உருவம் உண்டு உருவமும் இல்லை; அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு ஆண்டவனை வழிபடலாம் என்பதைக் காட்டுகிறது .
இந்த சிவலிங்கத்தையும் பல வகையாக வடிவமைக்கிறார்கள் ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கங்களை செதுக்கி அதை சகஸ்ர லிங்கம் என்பார்கள்இது; சிறப்பாக வழிபடப்படுகிறது.
***
லிங்கத்தின் வகைகள்
சஹஸ்ரலிங்கத்தை எப்படி உருவாக்குகிறார்கள் என்று சில்ப சாஸ்திர நூல்களிலிருந்து அறியலாம்; ஒரே கல்லில் 25 சதுரப் பகுதிகளைப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு சதுரப்பகுதிலும் 40 லிங்கங்களை செதுக்குகிறார்கள் . இது ஆயிரம்/ சஹஸ்ர லிங்கம்!
நர்மதா நதி நீர் உருட்டிக்கொண்டு வருவது பாணலிங்கம் ;
இயற்கையில் பூமிக்குள்ளிலிருந்து எழும்புவது ஸ்வயம்பு லிங்கம் ;
இமய மலைச் சிகரமே பனிக்கட்டி மூடி லிங்கம் போல காட்சிதருவது கயிலாயம்;
இயற்கையாக குகைக்குள் ஐஸ் கட்டியால் உருவாவது காஸ்மீரில் உள்ள அமர்நாத் ஐஸ் லிங்கம்;
ஆதி சங்கரர் நதியிலுருந்து எடுத்தது ஸ்படிக லிங்கம் .
சிவன் ஆவுடையார்
பஞ்சமுக சிவன், திருவானைக்கா
London Swaminathan in Chengal, Tiruvananthapuram, Kerala
***
My Old Article
QUIZ சிவலிங்கம் பத்து QUIZ (Post No.12,922)
1.இந்தியாவில் ஐஸ் கட்டி மூலம் ஆண்டுதோறும் தோன்றும் பனிக்கட்டி லிங்கம் எங்கே இருக்கிறது ?
XXXX
2.நெய் அபிஷேகம் செய்து செய்து முழுக்க, முழுக்க நெய் மலையாகி விட்ட நெய் லிங்கம் எங்கே இருக்கிறது ?
xxxx
3.ஆண்டுதோறும் சித்திரை மற்றும் ஆவணி மாதத்தில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்ச்சி நடைபெறும் கோவில் எங் இருக்கிறது ?
xxxx
4.உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் எங்கே இருக்கிறது ?
xxxx
5.கேரளத்தில் பெரிய சிவலிங்கம் உள்ள இடம் எது ? லிங்கத்தின் உயரம் என்ன ?
xxxx
6.தலையில் துளை உடைய லிங்த்தை எங்கே காணலாம் ?
xxxx
7.திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எத்தனை லிங்கங்கள் உள்ளன? அவை யாவை ?
xxxx
8. நீரூற்று அல்லது தண்ணீர் இடையே உள்ள சிவலிங்கங்களை எங்கே தரிசனம் செய்யலாம் ?
xxxx
9 . தஞ்சசைப் பெரிய கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்வளவு பெரியது?
xxx
10.சிவலிங்கத்தின் பொருள் என்ன ?
xxx
விடைகள்
1.காஷ்மீரில் அமர்நாத் குகையில் வருடம் தோறும் ஆகஸ்ட் மாதம் ஐஸ் லிங்கம் உண்டாகி பின்னர் மறைந்துவிடும்.
XXXX
2.திருஸூர் வடக்குநாதன் சிவன் கோவிலில் நெய் லிங்கம் இருக்கிறது
xxxx
3.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட சவுந்தரநாயகி அம்பாள் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண காலத்தில் ஒரு முறையும், தட்சிணாயன காலத்தில் ஒரு முறையும் தொடர்ந்து 5 நாட்கள் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி நிகழும்.
xxxx
4.அஸ்ஸாம் மாநிலத்தில் நவகாவ்ன் என்னும் இடத்தில் எழுப்பப்பட்ட சிவலிங்கத்தின் உயரம் 126 அடி. இதுதான் மிக உயரமான சிவலிங்கம் .
xxxx
5. திருவனந்தபுரத்துக்கு அருகில் செங்கல் என்னுமிடத்திலுள்ள சிவன்-பார்வதி கோவிலில் 111. 2 அடி உயரமுள்ள சிவலிங்கம் கான்க்ரீட்டினால் அமைக்கப்பட்டுள்ளது .
xxxx
6.பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்டார். அதன் அடிப்படையில் வண்டு துளைத்த குறியுடனுள்ள சிவலிங்கத்தை திருநல்லூரில் காணலாம். நீடூர் திருத்தலத்தில் நண்டு ஒன்றும் சோமநாதரை வழிபட்டதால், இங்குள்ள சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு நுழையும் அளவிற்கு துளை உள்ளது.
xxxx
7.எட்டு லிங்கங்கள் இருப்பதால் இதை அஷ்ட லிங்கம் என்பர் . அவை
8. திருச்சி அருகிலுள்ள திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவில், சீர்காழி திருக்காளமுடையார் கோவில், திருவேடகம் ஆலயம் ஆகியவற்றில் நீர் சுரக்கும் லிங்க சந்நிதிகளைக் காணலாம்.
xxxx
9.சிவலிங்கத்தின் உயரம் 12 அடிகள் ; பீடத்தின் உயரம் 18 அடிகள். மொத்த உயரம் 30 அடிகள் .
xxxx
சஹஸ்ரலிங்கம்
Huge Lingas in Karnataka, Jharkhand, Chattisgarh
10. இறைவனை உருவமற்றவராகவும் வழிபடலாம் என்பதை சிவலிங்கம் காட்டுகிறது. இறைவனுக்கு ஆரம்பமோ முடிவோ இல்லை என்பதையும் லிங்க உருவம் காட்டுகிறது . இயற்கையில் ஆறுகளில் கிடைத்த வட்ட வடிவான , வழ வழப்பான கற்களை பாண (சுயம்பு) லிங்கம் என்று வழிபடுவது எளிதாக இருந்தது . இதே போல லிங்க வடிவிலுள்ள கயிலாயம், சிவலிங்க மலை, லிங்க வடிவிலான பாறைகளை வணங்குவதும் இறைவன் ‘அடி, முடி இல்லாதவர், ஆதி அந்தம் அற்றவர்’ என்பதை காட்டுகிறது.
***
லிங்கத்தில் பிரம்மா விஷ்ணு சிவன் பகுதிகள்
லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம் என்றும், நடுப்பகுதி விஷ்ணுபாகம் என்றும், மேல்பகுதி சிவபாகம் என்றும் பெயர் பெறும். இவை படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைக் குறிக்கும் விதத்தில் உள்ளன.
***
சிவலிங்கம் அமைந்துள்ள மேடைக்கு யோனி அல்லது ஆவுடையார் என்று பெயர். அதில் பாலும் தண்ணீரும் பிற அபிஷேபப் பொருட்களும் வடிந்து செல்லும் வகையில் இடைவெளி இருக்கும் .காரணம்?
சிவ பெருமான் அபிஷேகப்பிரியன்;
விஷ்ணு அலங்காரப் பிரியன் –என்பது சான்றோர் வசனம். ஆகையால் சிவலிங்கத்து மேலே ஓட்டையுள்ள ஒரு தாமிர கலசம் இருக்கும்; அதிலிரிருந்து சொட்டுச் சொட்டாக சிவலிங்கத்தின் மீது 24 மணிநேரமும் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள் .
கர்நாடகத்தில் ஹம்பியிலுள்ள படவி லிங்கம் , திருவானைக்காவிலுள்ள ஜம்புகேஸ்வரம் ஆகியன நீர் சுரக்கும் ஊற்றுகளிலேயுயே அமைந்துள்ளன !
****
சஹஸ்ரலிங்கம்: கர்நாடகா-கம்போடியா அதிசய தொடர்பு
My article posted on Jun 5, 2012
(English version of this article is already posted under “The Mysterious Link between Karanataka “. Related subjects “Cambodia and Indus Goddess: Karnataka-Cambodia Link” and Pandya King Who Ruled Vietnam).
இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்துக்கும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள கம்போடியா நாட்டுக்கும் அதிசியமான தொடர்பு நிலவுகிறது. உலகப் புகழ்பெற்ற அங்கோர்வட் கோவில் கம்போடியாவில் இருப்பதைப் பலரும் அறிவார்கள். வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோநேசியா, கம்போடியா முதலிய நாடுகளில் இந்துக்கள் 1500 ஆண்டுகளுக்கு ஆட்சி செலுத்தியதையும் அகத்தியர், கவுண்டின்யர் என்ற இரண்டு பிராமணர்கள் இந்த ஆட்சியை நிறுவியதையும் பலரும் வரலாற்றுப் புத்தகத்தில் படித்திருப்பர். ஆனால் வியட்நாமில் ஸ்ரீமாறன் என்ற பாண்டியன் ஆட்சியை நிறுவியதும் கம்போடியாவில் சஹஸ்ரலிங்கம் இருப்பதும் பலருக்கும் தெரியாது.
கர்நாடகத்திலும் கம்போடியாவிலும் மட்டும் ஓடும் நதிக்கிடையில் இப்படி ஆயிரம் லிங்கங்களை யார் செதுக்கினார்கள், எப்போது செதுக்கினார்கள், ஏன் செதுக்கினார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது. இதற்கான சாட்சியங்கள் பழைய நூல்களில் இல்லை. பெரும்பாலும் செவி வழிச் செய்தியில்தான் கிடைக்கிறது. ஆயினும் பல நூற்றாண்டுகளாக, ஒருவேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவை இரண்டும் இருக்கக் கூடும்.
கர்நாடக மநிலத்தின் வடக்கு கன்னட பகுதியில் சால்மலா ஆற்றில் இந்த ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. சீர்சி என்னும் ஊரிலிருந்து 17 கிலோமீட்டர் பயணம் செய்தால் இதை அடையலாம். ஆற்று நீரோட்டத்தில் நூற்றுக் கணக்கான லிங்கங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இயற்கை அழகு கொஞ்சும் இடம்– மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென் மேற்குப் பருவமழை கொட்டும் காலங்களில் ஆறு கரை புரண்டு ஓடும் காட்சி கண்கொள்ளாக் கட்சியாகும். லிங்கங்கள் அதன் அடிப்பாகமான யோனியுடன் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஷால்மலா ஆற்றின் நீரால் இவைகளுக்கு எப்போதும் அபிஷேகம்தான். கோவில்களைப்போல யாரும் போய் அபிஷேகம் செய்யவேண்டியதில்லை.ஆண்டுதோறும் சிவராத்திரியின்போது ஏராளமான மக்கள் வந்து வணங்குகின்றனர்.
இயற்கை எழில் சிந்தும் இந்த இடத்தைச் சுற்றி பச்சைப் பசேல் என்று மரங்களும் சல சல என்று ஓடும் நதியும் மனதுக்கு இதம் அளிக்கும். ஆற்று நீரோட்டதுக்கு இடையே இருக்கும் பாறைகளில் லிங்கங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தரும்.
இந்தியாவில் இப்படி ஒரு மகானுக்கு யோசனை வந்து இதை நிறுவியதே ஆச்சரியமான விஷயம். இதையே கம்போடியாவின் காட்டுக்குள் ஓடும் நதியில் யார் செய்தார்கள் என்பதை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியாது! கம்போடியாவிலும் இதை சஹஸ்ரலிங்கம் என்ற சம்ஸ்கிருத பெயரிலேயே இன்று வரை அழைக்கின்றனர்.
கம்போடியாவின் உலகப் புகழ் கோவில் அங்கோர்வட்டிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் கபல் சியான் என்னும் ஊர் இருக்கிறது.அங்கே ஓடும் ஆற்றுக்கு இடையேயும் சஹஸ்ரலிங்கம் செதுக்கப்பட்டுள்ளன. அங்கே மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் லெட்சுமி, விஷ்ணு, ராமர், அனுமார், சிவன் ஆகிய உருவங்களையும் செதுக்கி இருக்கிறார்கள். இதையும், சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளையும் காண நிறைய பயணிகள் வருகிறார்கள். அவர்கள் சபரிமலை போல காடு மேடுகளக் கடந்து வந்துதான் பார்க்கவேண்டும்.
Kbal Spean in Cambodia
கபால் சியான் என்றால் பாலம் என்று பொருள். இயற்கையாகவே அமைந்த கல் பாலம் வழியாக இந்த சஹஸ்ரலிங்க தலத்தை அடைய வேண்டும். ஆற்றின் இரு பக்கப் பாறைகளிலும் மிருகங்களின் சிற்பங்களையும் காணலாம். இந்த ஆறு குலன் மலையின் தென் மேற்கு சரிவில் இருக்கிறது. அருமையான ஒரு நீர்வீழ்ச்சியும் உண்டு. சுமார் 50 அடி உயரத்திலிருந்து விழும் அருவி மனம் கவரும் ஒரு காட்சியாகும். ஒரு காலத்தில் மன்னர்கள் புனித நீராட இங்கே வருவார்களாம்.
சஹஸ்ரலிங்கம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கோவில்களை 11 ஆவது 13 ஆவது நூற்றாண்டுகளில் கம்போடியாவை ஆண்ட இந்து மன்னர்கள் முதலாம் சூர்யவர்மன், இரண்டாம் உதயாதித்யவர்மன் உருவாக்கினார்கள் என்று சொல்லப்படுகிறது. சிவலிங்கம் ஆக்க சக்தியின் வடிவம் என்றும் ஆற்றுப் படுகைகளில் சிவலிங்கங்களை நிறுவினால் தானிய விளச்சல் அதிகரிக்கும் என்றும் கம்போடீய மக்கள் நம்புகின்றனர். கம்போடிய நெல் வயல்களைச் செழிக்கச் செய்வதோடு மக்களை புனிதபடுத்தும் என்பது அவர்கள் நம்பிக்கை.
கம்போடியாவில் நீண்ட காலம் நடந்த யுத்தத்தினால் ஏராளமான இந்துச் சின்னங்கள் சின்னா பின்னமாயின. ஆனால் காட்டுக்குள் இருக்கும் சஹஸ்ரலிங்கம் பாதிக்கப்படவில்லை. கம்போடிய சஹஸ்ரலிங்கத்தைக் காண பண்டேய்ஸ்ரீ என்னும் இடத்திலிருந்து 12 கிலோமீட்டர் போகவேண்டும். மலை அடிவாரத்திலிருந்து கரடு முரடான பாதைகள் வழியாக 45 நிமிடம் மேலே ஏறிச் சென்றால் சஹஸ்ரல்ங்கங்களைக் கண்டு களிக்கலாம். மஹாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது பள்ளி கொண்டிருக்கும் காட்சி அற்புதமாக இருக்கிறது. அவருடைய நாபியிலிருந்து எழும் தாமரையில் பிரம்மா காட்சி தருகிறார்.
கர்நாடகத்துக்கோ கம்போடியாவுக்கோ போக முடியாதவர்கள் யூ ட்யூபில் இவைகளக் காணலாம்.கூகுல் செய்தால் போதும் .எனது ஆங்கிலக் கட்டுரையில் இடங்களின் பெயர்கள் இருக்கின்றன.
வட குஜராத்திலும் ஒரு சஹ்ஸ்ரலிங்கம்
வட குஜராத்தில் பதான் நகருக்குப் பக்கத்தில் சஹஸ்ரலிங்க குளம் இருக்கிறது. இதை கி.பி.1084ல் சித்தராஜ் ஜெய்சிங் என்ற மன்னன் கட்டினான். ஆனால் இப்போது 48 தூண்களுடன் கூடிய கோவில் மட்டுமே இருக்கிறது. அதில் பல குட்டி லிங்கங்கள் இருக்கின்றன. முஸ்லீம் படை எடுப்புகளில் பெரும் பகுதிகள் அழிந்துவிட்டன.
இவை தவிர நாடு முழுதும் ஒரே கல்லில் ஆயிரம் லிங்கங்கள் செதுக்கப் பட்ட சஹஸ்ரலிங்கம் சிலைகளும் உண்டு. ஒரிஸ்ஸா மாநில புவனேஸ்வரில் பரசுராமேஸ்வரர் கோவிலில் இருக்கும் சஹஸ்ரலிங்கம்தான் மிகப் பெரியது, அழகானது. இதையும் பரசுராமேஸ்வரா கோவில், புவனேஸ்வர் என்று கூகுள் செய்தால் கம்ப்யூட்டர் திரைகளிலேயே காணலாம்.
ஹம்பி நகரில் துங்கபத்திரா நதிக்கரையில் 108 லிங்கங்கள் இருக்கின்றன.
ஆயிரம் ஏன்?
யஜூர்வேதத்தில் வரும் புருஷசூக்தத்தில் இறைவனை ஆயிரம் கண்கள், ஆயிரம் தலைகள் நிறைந்தவன் என்று போற்றுகின்றனர். ரிக் வேதத்தில் ஆயிரம்கால் மண்டபம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. நாயக்க மன்னர்கள் கட்டிய கோவில்களில் எல்லாம் ஆயிரம் கால் மண்டபங்கள் உண்டு. இறைவன் எங்கும் நிறந்தவன் , கணக்கில் அடங்காதவன் என்பதற்காக இந்துக்கள் சஹஸ்ரநாமம், சஹஸ்ரலிங்கம், சஹஸ்ர கால் மண்டபம் என்று போற்றுவது மரபு.
************
பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள் பற்றிய ஸ்லோகம்
சௌராஷ்ட்ரே ஸோமனாதம் ச ஸ்ரீ சைலே மல்லிகார்ஜுனம்;
உஜ்ஜயின்யாம் மஹாகாளம்ஒங்காரமமலேச்வரம்;
பரல்யாம் வைத்யநாதம்ச டாகின்யாம் பீம சங்கரம்
ஸேது பந்தே து ராமேசம் நாகேசம் தாருகாவனே ;
வாரணஸ்யாம் து விச்வேசம் த்ரயம்பகம் கௌதமீ தடே ;
ஹிமாலயே து கேதாரம் குஸ்மேசம் ச சிவாலயே .
ஏதாநி ஜ்யோதிர்லிங்காநி ஸாயம் ப்ராத: படேந் நர:
ஸப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி .
கயிலாயம்
ஸோமநாதமும், ஸ்ரீ சைலமும், உஜ்ஜைனி மஹாகாளமும்,ஒங்காரேச்வரமும்,பரலி வைத்யநாதமும், பீமசங்கரமும், ராமேச்வரமும்,, நாகேசமும்,காசி விச்வேசமும், த்ரயம்பகமும், கேதாரமும்,குஸ்மேசமும் ஜோதிர் லிங்க ஸ்தலங்கள் என்று குறிக்கப்படுகின்றன.
இந்த 12 தலங்களை காலையிலும் மாலையிலும் நினைத்தாலே ஏழு ஜென்மங்களில் செய்த பாபங்களும் விலகிவிடும்; அழிந்துபோகும் என்று புராதன ஸ்லோகம் சொல்லுகிறது.
12 ஜோதிர் லிங்க தலங்களில் ஐந்து, மகாராஷ்டிரத்தில் இடம்பெற்றுள்ளன. இன்று பரலி என்னும் இடத்திலுள்ள வஜ்ஜிநாத் என்னும் வைத்யநாதரை தரிசிப்போம் .
மஹாராஷ்டிர மாநிலத்தில் பீட் BEED என்னும் நகரிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பெங்களூர், ஹைதராபாத் மும்பை ஆகிய நகரங்களிலிருந்து ரயிலிலும் செல்லலாம்.
இந்தக் கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இதுபற்றி பல கதைகள் இருக்கின்றன. சத்தியவான் – சாவித்திரி கதையை அறியாத இந்துக்கள் இல்லை. எமனிடமிருந்து சத்தியவானின் உயிரை வாதாடி வாங்கி வந்த சாவித்ரியின் தந்தை அஸ்வபதி ஆண்ட மாத்ரா Madra Desa தேசம் இது. ஆகையால் இங்கேதான் அந்த சம்பவம் நடந்ததாக ஐதீகம் (செவிவழி வரலாறு).
இன்னொரு கதையும் உண்டு. சிவபெருமானை அதிகம் துதிபாடிய ராவணனுக்கு சிவனே ஒரு லிங்கத்தைக் கொடுத்து , இலங்கையில் கொண்டுபோய் கோவில் கட்டு; ஆனால் வழியில் எங்கேயாவது வைத்தால் அது அங்கேயே ஸ்தாபிக்கப்பட்டுவிடும் என்று சொன்னார் . ராவணன் அதை வாங்கிக்கொண்டு வருகையில் கை, கால் கழுவுவதற்காக ஒரு பையனிடம் கொடுத்துவிட்டுச் செல்ல, அதன் எடை கூடிக்கொண்டே வந்ததாம். கனத்தைத் தாங்க முடியாதபடி அந்தப் பையன் அந்த லிங்கத்தை கீழே வைக்க அது பரலி க்ஷேத்திரமாகப் பரிணமித்தது.
கடைசி கதை என்னவென்றால், இங்குள்ள விஷ்ணுதான் தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க உதவினார் ஆகையால் இதை வஜ்ஜி நாத (அமிர்த) என்று மராத்தியில் அழைக்கின்றனர் என்பதாகும் .
இந்தக் கோவில் மிகவும் சிறியது. அரை மணி நேரத்துக்குள் கோவிலிருந்து வெளியே வந்துவிடலாம். சிறப்பு என்னவென்றால் ஒரு பெரிய தேக்கு மர மண்டபம் தூண்கள் இல்லாமலே கட்டப்பட்டிருப்பதாகும்.
*****
அஸ்ஸாமில் மிக உயரமான லிங்கம்
அஸ்ஸாமில் மிகப்பெரிய சிவலிங்கக் கோவில்
மோரிஸ் தீவில் எப்படி பெருமாளையே கோவில் கோபுரம் போல முன்னனியில் வைத்தார்களோ அதே போல இந்த 2021-ம் ஆண்டில் அஸ்ஸாம் மாநிலத்தில் சிவலிங்க உருவத்தையே கோபுரம்போல வடிவமைத்து ஒரு கோவிலை எழுப்பியுள்ளனர். இந்த சிவலிங்க கோபுர உயரம் 126 அடி.
நவகான் அல்லது பெர்பெரி என்னும் இடத்திலுள்ள இந்த ஆலயத்தின் பெயர் மகா மிருத்யுஞ்சய ஆலயம் ; அதாவது மரணத்தை வெல்ல வழிகாட்டும் சிவ பெருமானின் ஆலயம்.
250 தமிழ்நாட்டு புரோகிதர்கள், அர்ச்சகர்கள் வந்து இந்தக் கோவில் கும்பாபிஷேக யாக சாலை பூஜைகளை நடத்தினர். நாட்டின் உட்துறை அமைச்சர் அமித் ஷா இந்தக் கோவில் பூஜைகளில் கலந்து கொண்டார். 2021 பிப்ரவரி 26ம் தேதிமுதல் வழிபாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது வடக்கில் இமய மலையில் வாசம் செய்யும் கயிலாய மலைக்குப் போட்டியாக இன்னும் ஒரு சிவன் வந்து விட்டார். இதற்கு வித்திட்டவர் ஆசார்ய பிருகு கிரி மஹராஜ்.
சிவலிங்க வடிவிலான கோபுர உயரம் – 126 அடி சுற்றளவு –56 அடி
2003ம் ஆண்டில் கட்டிடவேலை துவங்கியது. 2021ல் கோவில் உருவானது
ஆதிகாலத்தில் சுக்ராச்சார்யார் தவம் செய்த இடம் இது.
5000 பேர் இடம்பெறும் பெரிய பரப்பு கொண்டது இந்தக் கோவில்.
Maha Mrityunjay Temple in Puranigudan, Nagaon,ASSAM
இந்தியாவில் ,குறிப்பாக தமிழ் நாட்டில், பல கோவில்களில் இருக்கும் லிங்கங்களை சுவயம்பு லிங்கங்கள் என்று ஸ்தல புராணங்கள் கூறுகின்றன. இதன் பொருள், இந்த லிங்கங்கள் மனிதனால் செய்யப்பட்டவை அல்ல. தானாக பூமியிலிருந்து உருவானவை என்பதாகும்.
இது உண்மையா? பூமியிலிருந்து தானாக லிங்கங்கள் தோன்றுமா? இதை விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிறதா? என்று கேட்டால் விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது என்றே சொல்லுவேன். இதற்கு லண்டன் டைம்ஸ் நாளேட்டில் நீண்டகாலத்துக்கு முன் வந்த ஒரு ஆசிரியருக்குக் கடிதமே சான்று (இந்த பேப்பர் கட்டிங் என் அலமாரியில் இத்தனை நாளும் தூங்கிக் கொண்டிருந்தது.)
ஆதிசங்கரர் போன்ற பெரிய மகான்கள் பல இடங்களில் இப்படி லிங்கங்களைக் கண்டுபிடித்து அவைகளை உரிய இடத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள் என்று படிக்கிறோம். மதுரை நகரம் ஒருகாலத்தில் கடம்பவனக் காடாக இருந்தது என்றும் தனஞ்செயன் என்ற வணிகன் இரவு நேரத்தில் காட்டைக் கடந்து போகும் நேரத்தில் ஒளிமயமான ஒருகாட்சியைக் கண்டான் என்றும் இந்திரன் முதலானோர் வந்து பூஜை செய்த காட்சி அது என்றும் ஸ்தல புராணம் கூறுகிறது. அதுவும் ஸ்வயம்பூ லிங்கம்தான். பாண்டிய மன்னனுக்கு இச்செய்தியை அறிவித்தவுடன் அவன் அங்கே கோவில் அமைத்தான்.
சில இடங்களில் இயற்கையாகவே லிங்க வடிவத்தில் மலையோ பாறைகளோ அமைவதுண்டு. இந்துக்கள் எல்லா விஷயங்களிலும் கடவுளைக் பார்ப்பார்கள். உண்ணும் உணவு, பெரியோர்கள் காலில் அணியும் செருப்பு (பாதுகை), அவர்களின் பாதச் சுவடுகள், இசை, நாட்டியம், வீட்டுக்கு முன் போடும் கோலங்கள், பறவைகள், மிருகங்கள் ஆகிய எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் இந்துக்களுக்கு பெரிய கற்களும் சிறிய கற்களும் தெய்வம்தான்!
இமயத்திலுள்ள புனித கயிலாய மலை, திருவண்ணாமலை ஆகியன லிங்க வடிவத்திலுள்ள புனித அமைப்புகள். காஷ்மீரில் அமர்நாத் என்னும் இடத்தில் ஒரு குகையில் ஆண்டுதோறும் உருவாகும் மிகப் பெரிய பனிக்கட்டி லிங்கம் ஒரு புனிதத்தலம் ஆகும். இவைகளுக்கு விஞ்ஞான விளக்கம் உண்டு. மலை இடுக்கு வழியாக சொட்டுச் சொட்டாக விழும் நீர் லிங்கமாக உருவாகிறது. இது மிகப் பெரிய இயற்கை அதிசயம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆண்டுதோறும் மிகப் பெரிய பனிக்கட்டி லிங்க வடிவத்தில் தோன்றுவதும் அற்புதமே.
ஆனால் இதைத்தவிர வேறு ஒரு சக்தியும் உண்டு. அது பூமிக்கடியில் இருக்கும் கற்களை மேலே தள்ளுகிறது. அதை அறிவியல் படித்தவர்கள் ஈ.எல்.எf. என்று சொல்லுவார்கள். அதாவது மிகவும் சன்னமான அதிர்வு அலைகள். இவைகள் பூமிக்கு அடியில் உள்ள கற்களை சிறிது சிறிதாக அசைத்து பூமிக்கு மேலே கொண்டுவந்துவிடும்! லண்டனைத் தாண்டியுள்ள பர்மிங்ஹாம்சைரில் சில்டெர்ன் என்னும் இடத்தில் இப்படி பூமிக்கு மேலே வரும் கற்களை விலைக்கும் விற்கிறார்கள். இதை மே 1994ல் சி.ஏ.சில்க் என்பவர் லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதியுள்ளார். இந்த இடத்துக்கே கல் விளையும் பூமி என்று பெயர்!
பஞ்சாயதன பூஜை
காஞ்சி மகா சுவாமிகள் அவரது சொற்பொழிவு ஒன்றில் பஞ்சாயதன பூஜை பற்றி விளக்கி இருக்கிறார். சில இந்துக்கள் வீடுகளில், நதியிலிருந்து எடுக்கப்பட்ட விஷேஷ கற்களை வைத்து செய்யப் படும் பூஜை இது. நேபாள நாட்டில் கண்டகி நதியில் கிடைக்கும் கற்களை சாலக்ராமம் என்றும் விஷ்ணுவின் சக்கரம் தாங்கிய அம்சம் என்றும் சொல்லுவர். தஞ்சாவூர் அருகில் வல்லத்தில் கிடைக்கும் சூரியாகாந்தக் கற்களை சூரியன் வடிவமாகக் கருதி பூஜை செய்வர். இதே போல பீஹாரில் சோனபத்ராவில் கிடைக்கும் சிவப்பு நிறக் கற்களை விநாயகராகவும் நர்மதை நதியில் கிடைக்கும் உருண்டைக் கற்களை பாணலிங்கமாகவும், ஆந்திரத்தில் சுவர்ணமுகி நதியில் கிடைக்கும் கற்களை அம்பாளாகவும் வைத்து பூஜை செய்வார்கள். ஐந்து கற்களை வைத்து செய்யப்படும் இந்த பூஜை பஞ்சாயதன பூஜை ஆகும்.
இதில் சாலக்ராமம் எனப்படுபவை கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பூச்சிகளின் படிம அச்சு என்று உயிரியல் படித்தோர் கூறுவர். இந்துக்களுக்கு இதில் எல்லாம் வியப்பு ஒன்றும் இல்லை. வெள்ளை உவர் மண் பூசி வந்த வண்ணானைக் கூட விபூதி பூசிய சிவனடியார் என்று எண்ணி பூசித்தவரை நாம் 63 நாயன்மர்களில் ஒருவராக வைத்து குரு பூஜை செய்யவில்லையா? மயிலுக்குப் போர்வையும் முல்லைக்குத் தேரும் ஈந்த பாரியையும் நாம் கடை எழு வள்ளல் என்று புகழ்வில்லையா? பாதி ராமாயணம் கேட்டுக் கொண்டிருக்கையில் ராமபிரானுக்கு மேலும் படைகள் தேவை என்று எண்ணி படை அனுப்ப உத்தரவிட்ட குலசேகர ஆழ்வாரை நாம் பூஜிக்கவில்லையா?
இறைவன் எங்கும் இருப்பான் என்பதே நம் கொள்கை.
—சுபம்—
நெய் லிங்கம் உள்ள அதிசய திரிசூர் சிவன் கோவில்
Post No. 12,757
Date– – – 24 November , 2023
திருச்சூர் என்ற பெயரை கேரள அரசு த்ரிசூர் என்று மாற்றியுள்ளது; இங்குள்ள வடக்குநாதன் சிவன் கோவிலும் வருடம்தோறும் நடக்கும் பூரம் விழாவும்பாரதம் முழுதும் பிரசித்தமானவை. கேரள கோவில் விழாக்களில் மிகவும் பிரசித்தமானது த்ரிசூர் கோவில் விழாதான்
திரு — சிவப் — பேரூர் என்பது சுருங்கி த்ரிசூர் ஆனதாக ஒரு கருத்து உளது
ஒன்பது ஏக்கர் பரப்பில் 4 பெரிய கோபுரங்களுடன் கம்பீரமாக நிற்கிறது. ஒரு காலத்தில் தேக்கு மரக் காட்டுக்கு இடையே நின்றது இப்பொழுது வெற்று மைதானத்துக்கு பெயர் மட்டும் தேக்கின்காடு!
கோவிலுக்குள் வடக்குநாதன் என்ற பெயரில் சிவ பெருமானும், சங்கர நாராயணன், ராமன்ஆகியோரும் மூன்று முக்க்கிய சந்நிதிகளில் இருக்கின்றனர் கோவிலின் வடக்குப் பக்கத்தில் குடிகொண்டதால் சிவனின் பெயர் வடக்கு நாதன்; அவர் மேற்கு திசையை நோக்கி இருக்கிறார். அதே சந்நிதியில் சிவனும் பார்வதியும் கிழக்கு நோக்கி இருக்கும் மூர்த்திகளும் உண்டு . தென் பகுதியில் ராமர் கோவில்; நடுவில் சங்கர நாராயணன் கோவில்.
பரசுராமருடன் தொடர்புடைய கோவில். சிவனுக்குப் பின்பக்கமுள்ள பார்வதியை பரசுராமர்நிறுவியதாக ஐதீகம் (வரலாறு). மரத்தினால் செய்யப்பட்டதால் அபிஷேகம் கிடையாது.
மேலும் கேரளத்தில் எல்லா வைணவ கோவில்களிலும் உள்ளது போல விஷ்ணு உருவம்.
சிறப்பு அம்சங்கள்
மஹாபாரதக் காட்சிகளை சித்தரிக்கும் 300 ஆண்டுப் பழமையான ஓவியங்கள் .
சிவன் ஒரு பெரிய நெய்மலை !காஷ்மீர் அமர்நாத் குகையில் பனிக்கட்டி சிவன்; இங்கு நெய் — டன்கணக்கில் — உறைந்து உருவான சிவ லிங்கம் !
எப்போதும் பசு நெய்யினால் அபிஷேகம் செய்து சிவ லிங்கத்தை மலை போன்ற நெய் மறைத்துவிட்டது. சிவலிங்கத்தின் மீது பத்து அடி (Ten Feet) சுற்றளவுக்கு நெய் உறைந்து நிற்பதால் அர்ச்சகர் சுற்றி வர கர்ப்பக்கிரகத்தில் இடம் கிடையாது.
ஆயுர் வேத சிவன்
ஆயுர்வேதத்தில் நெய் ஒரு முக்கிய மருந்துச் சரக்கு; ஆகையால் இங்குள்ள ஆயிரம் ஆண்டு பழமையான நெய்யினை வாங்குவதற்காக ஆயுர்வேத மருத்துவர்களும் வருகிறார்கள்;
யஜுர் வேதப் பகுதியான ருத்ரம்- சமகம் மந்திரத்தில் சிவ பெருமானை MR DOCTOR திருவாளர் டாக்டர் (பிஷக்), MR MEDICINE திருவாளர் மருந்து (பேஷஜம்) என்று ஒரு மந்திரம் வருகிறது. இங்கு அது உண்மையாகிறது.
சிவன் நெய்ப் பிரியர் ; அவருக்கு நெய் அபிஷேகம்; ஆனால் ராமருக்கு எண்ணெய் அபிஷேகம்; சங்கர நாராயணருக்கு பஞ் சகவ்ய அபிஷேகம் !
கோவிலில் கணபதி, காவல் தெய்வம் வேட்டைக்கொருமகன் சந்நிதிகளும் இருக்கின்றன . வலம் வரும் பிரதட்சிணப் பாதையில் பரிவார தேவதைகள் இடம்பெறுகின்றன . பரசுராமர் வசிப்பதாக கருதப்படும் தரா (தரை– மேடை)வடகிழக்கு மூலையில் இருக்கிறது. கேரளத்தில் வினோதமான ஒரு விஷயம் என்னவென்றால் பரசுராமர் சம்பந்தப்படாத கோவிலே இராது அவர்தான் பல சிலைகளைப் பிரதிஷ்டை செய்தார். அவருக்கோ திருவல்லம் என்னும் ஓரிடத்தைத் தவிர வேறு எங்கும்பரசுராமர்கோவில் இல்லை!!!
கோவில் சுவரில் ஒரு முக்கோண துவாரம் இருக்கிறது; இதன் மூலம் மூன்று முக்கிய சந்நிதிகளையும் காணலாம்.
ஆதி சங்கரர் தொடர்பு
இந்தியாவே வியக்கும் வண்ணம் தோன்றிய மாபெரும் தத்துவ வித்தகர் ஆதிசங்கரர் பிறப்பதற்கு வடக்குநாதனே காரணம். அவருடைய பெற்றோர்கள் மகப்பேறு இன்றி தவித்து நல்ல புத்திரன் பிறக்க நோன்பு இருந்தது வடக்குநாதன் கோவிலே; இதனால் சங்கரர் காலத்துக்கும் முன்னரே கோவில் இருந்ததை நாம் அறிகிறோம்.
மேற்குக் கோபுரத்துக்கு வெளிய அரசமரமும் மேடையும் இருக்கிறது. அங்குதான் நம்பூதிரி பிராமணர்களிடம் பரசுராமர் சிலையை ஒப்படைத்தார்
கூத்தம்பலம்
மேலைக் கோபுரம் வழியாக நாம் நுழைந்தால் இடது புறம் அழகிய கூத்து அம்பலத்தைக் காணலாம்; கூத்து முதலிய கலை நிகழ்ச்சிகள் நடப்பதற்கு எல்லா கோவில்களிலும் கூத்தம்பலம் இருந்தாலும் திரிசூர் போல கலை வேலைப்பாடு உடையவை வெகு சிலவே.
கூத்தம்பலம் கட்டுமானம் பற்றிப் ப ல கதைகளும் உண்டு; வெள்ள நாழி நம்பூதிரி என்பவர் கட்டிடக்க கலை நிபுணர் என்றும் அவர் வரைபடம் இல்லாமலேயே சிற்பிகளை வைத்து கட்டிடத்தைக் கட்டி முடித்தார் என்றும் சொல்லுவார்கள். அவரையே மதில் சுவர் கட்டும்படி மன்னர் சொன்னபோது அவர் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் செ ங்கற்களைக் கேட்டாராம் . அதே அளவு கற்களைக் கொண்டு வந்து மதில் சுவர் எழுப்பும்படி மன்னர் சொன்னாராம் அவரைச் சோதிப்பதற்காக இரண்டு செங்கற்களை மட்டும் மன்னர் மறைத்து வைத்தாராம்; ம தில் சுவற்றில் இரண்டு செங்கற்களான இடம் அப்படியே காலியாக இருந்தது; மன்னர் , ஒன்றும் தெரியாதவர் போல நடித்து, என்ன அறிஞரே! இரண்டு ஓட்டை தெரிகிறதே!! என்றாராம்; அவர் உடனே சட்டென்று யாரோ இரண்டு செங்கற்களை ஒளித்து வைத்து இருக்க வேண்டும் அல்லது இரண்டு செங்கற்களினை குறைத்து கொண்டு வந்திருக்க வேண்டும் என்றாராம்; உடனே மன்னர் அவரது திறமையை மெச்சி, அவருக்குத் தங்கக் காப்பு செய்து அணிவித்தாராம் .
வெள்ளை நந்தி கதை
ஒரு காலத்தில் ஒரு இளம் துறவி கோவிலுக்கு வந்து தினமும் தியானம் செய்தாராம்; அவரது தேஜஸில் மயங்கிய பெண்கள் குழந்தை பெற்றபோது அக்குழந்தைகள் அந்த துறவியின் முக ஜாடையில் இருந்தவுடன் பலருக்கும் சந்தேகம் துளிர்விட்டது; வதந்தியும் (Gossip rounds) பரவியது. அப்பாவியான துறவி தமிழ் நாட்டிலிருந்து சிற்பிகளை வரவழைத்து ஒரு அழகிய நந்தியைச் செய்தாராம்; அதைச் சுற்றி தினமும் பசுக்கள் நின்றனவாம்; அவை கன்று ஈன்ற போது அனைத்தும் வெள்ளை நந்தி போலவே இருந்தவுடன் கிசுகிசுப் பேச்சுக்கள் நின்றனவாம்.
எவ்வளவு சுவையான கதைகள் ; ஒரு வேளை கோவிலின் சிறப்பினை நின்று ஆற, அமர இருந்து ரசிப்பதற்காக இப்படிக் கதைகளை எட்டுக்கட்டினாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
உலகப் பிரசித்திபெற்ற பூரம் விழா !
கோவிலில் நடக்கும் ஒரே உற்சவம் சிவராத்திரி உற்சவம்தான் ; அப்போதும் சுவாமி புறப்பட்டு கிடையாது .
மேடம்/ மேஷம் (ஏப்ரல்-மே ) மாத பூரம் விழா நடக்கும். அதை வடக்குநாதன் ஆசீர்வதிப்பார்; கோவில் மைதானத்தில் நடந்தாலும் இது கோவில் விழா அல்ல. எல்லா கோவில் மூர்த்திகளும் சிவ பெருமானை தரிசிக்க வருகை தருவது, பிரமாண்டமான யானைகள் அணிவகுப்பு, மிகப்பெரிய வாண வேடிக்கை , மாபெரும் விருந்து ஆகியன சிறப்பு அம்சங்கள். ஒருகாலத்தில் அருகாமையில் நடந்த ஆறாட்டு விழா மழை காரணமாக தடைபட்டவுடன் மன்னரிடம் மக்கள் முறை செய்தனர். அவர் அந்த வட்டாரத்திலுள்ள கோவில்களை இரண்டாகப் பிரித்து அருகிலுள்ள கோவில் தெய்வங்களுடன் பவனி வர ஏற்பாடு செய்தார் .
நூற்றுக்கணக்கான கலைஞர்கள் விண்ணதிர வாத்ய கோஷங்களை முழக்குவர் . பத்து கோவில் தெய்வங்கள் வருகை தந்து சிறப்பிக்கின்றன 200 ஆண்டுகளுக்கு முன்னர் கொச்சி மகாராஜா சாக்தன்தம்புரான் செய்த ஏற்பாடு இன்றுவரை பின்பற்றப்படுகிறது . ஆண்டுதோறும் புதிய புதிய வண்ண வண்ண குடைகள் தயாரிக்கப்படும். நெய் திலக்கா விலம்மா என்ற தெய்வத்தை ஏந்திய யானை, கோவிலின் கதவைத் திறக்கும் சம்பிரதாயம் இருக்கிறது. காலண்டரில்/ பஞ்சாங்கத்தில் பூர நட்சத்திரம் வருவதற்கு 7 நாட்கள் முன்னதாகவே விழா துவங்கி விடும்; பூரம் நட்சத்திரத்தன்று பெரிய விழா; லட்சக் கணக்கான மக்கள் இதில் பங்கேற்கின்றனர் . கேரளத்தில் இந்து விரோத அரசுகள் ஆட்சி புரியத் துவங்கியவுடன் அரசு உதவி குறைந்ததோடு கோவில் நிலங்களும் அபகரிக்கப்பட்டன ; ஆயினும் பக்தர்கள் ஆதரவில் இறைவன் வாழ்ந்துகொண்டு இருக்கிறான் .
இது ஆதி சங்கரர் காலத்துக்கும் முன்னாலிருந்தே பக்கதர்களை ஆகர்ஷித்து வருகிறது
***
சஹஸ்ரலிங்கம், கம்போடியா , கர்நாடகம்
ஆற்று மணலில் லிங்கம்: பழுர் சிவன் கோவில்-
மூவாட்டுப்புழா பழுர் பெருந்த்ரிக் கோவில்
எர்ணாகுளம் வட்டாரத்தில் பிறவம் அருகில் மூவாட்டுப்புழா நதிக்கரையில் அமைந்த இந்த சிவன் கோவில் மிகவும் புகழ் பெற்றது எர்ணாகுளத்திலிருந்து 35 கி.மீ..
சிறப்பு அம்சம்
இங்குள்ள சிவ லிங்கம் ஆற்று மணலால் செய்யப்பட்டது. நம்பூதிரி பிராமண சிறுவர்கள் விளையாட்டாக செய்த சிவலிங்கம் பெரிய கோவில் உருவாகக் காரணம் ஆகியது .அந்த சிவலிங்கம் மணல் லிங்கம் போல உதிராமல் உறுதியாக நின்றதால் அதை பக்தர்கள் வழிபடத்துவங்கினர்.
இந்தக் கோவிலில் இன்னும் ஒரு அதிசயம் ஒரு சிறகு கொண்ட மரத்திலான கருடன் உருவம்ஆகும். இதை உருவாக்கிய சிற்பி, இரண்டாவது சிறகு செதுக்கப்பட்டவுடன் அது பறக்க எத்தனித்தது. உடனே அந்த சிற்பியே அதன் இரண்டாவது இறக்கையை வெட்டினான் என்பது இதன் பின்னாலுள்ள கதை
——xxxxxxxxx———-
Tags-சிவன் ஆவுடையார், பஞ்சமுக சிவன், சிவலிங்கம் , தத்துவம், ஸ்வயம்பு, பாணலிங்கம் , தஞ்சாவூர், சஹஸ்ரலிங்கம், கம்போடியா, Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம் -Part 26
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நான் லண்டனில் வாழும் வெம்பிளி பேட்டை, BRENT COUNCIL பிரென்ட் என்னும் நகரசபையின் கீழ் உள்ளது . இதை இலங்கைத் தமிழர்கள் எழுதுகையில் பிரென்ற் என்று எழுதுவார்கள். அவர்கள் நடத்தும் பள்ளிக்கூட அளவிலான கிரிக்கெட் போட்டிகளை பாடசாலை கிரிக்கெற் போட்டி என்று அறிவிப்பார்கள் . விக்கிப்பீடியாவுக்குப் போனால் அவர்கள் கனடா நாட்டிலுள்ள டொராண்டோ , ஒண்டாரியோ பெயர்களை எப்படி எழுதுகிறார்கள் என்று காணலாம் . இதோ விக்கிப்பீடியா :
ரொறன்ரோ= Toronto in Canada
தொராண்டோ (ஆங்கிலம்: Toronto; இலங்கை வழக்கம்:ரொறன்ரோ, தமிழக வழக்கம்: டொராண்டோ) . இதுவே கனடாவின் மிகப் பெரிய நகரமும், ஒன்ரோறியோ மாகாணத்தின் (மாநிலத்தின்) தலைநகரமும் ஆகும். இந்நகரம் தென் ஒன்ரோறியாவில் (ONTARIO ஒன்ட்டாரியோவில்), ஒன்ரோறியா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
***
இது பற்றி வியப்புடன், ஒரு இலங்கைத் தமிழரை இதை எப்படி உச்சரிப்பீர்கள் என்று கேட்டபொழுது டொரோண்டோ என்றார்
எழுதும்போது ஆங்கில “டி ” அல்லது தமிழ்ச் சபதத்திற்கு “ற்” என்று எழுதுகிறார்கள். இது வேறு எங்கும் இல்லாத வினோத இலக்கணம் . தமிழில் “ற்” எண்டு முடியும் சொற்களைக் காண முடியாது. ஆனால் இடையில் வரும்போது “டி ” என்னும் ஒலி “ற்” ஆக மாறுவதை நம்மாழ்வார் பாசுரங்களில் காணலாம் . பத்மநாபன் என்பதை ப”ற்”பானாபன் என்று சொல்லி அவர் பாடுகிறார் .
தமிழ் இலக்கணப்படி கல், பல், சொல் என்பதெல்லாம் இடையில் வரும்போது கற்குவியல், பற்பொடி, சொற்கள் என்று மாறுவதைக் காண்கிறோம் ஆனால் துவக்கத்திலும் இறுதியிலும் காண முடியாது எப்படி யாழ்ப்பாணத்தில் மட்டும் இப்படி வந்தது என்பது ஆராய்ச்சிக்குரியதே !
பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன்,
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம், என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன், விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே. 2-7-11
***
கிறி உறி மறி நெறி
கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே,
உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்,
மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை,
நெறி பட அதுவே நினைவது நலமே. 2-10-6
English translation of verse 2.10.6:
Desist from base deeds and remember
‘Tis good to think solely of traversing the road
Which leads to Māliruñ Cōlai where live together
Herds of deer and young ones and stays our Lord,
Who from hanging hoops ate up all the butter.
(From wisdomlib.org)
நம்மாழ்வாருக்கு மிகவும் பிடித்த சொற்கள் சில; இராப் பகல் என்பதை நிறைய பாசுரங்களில் உபயோகிக்கிறார் அது போல கிறி என்ற சொல்லும் அவருக்கு மிகவும் பிடித்த சொல்.
பொய், வஞ்சம், தந்திரம், மாயாஜாலம், வழி, குழந்தைகளின் முன் கையில் அணியும் ஆபரணம்.
இங்கு வழி , நல்ல வழி என்ற பொருளில் வருகிறது.
தமிழில் பொருள்
நல்ல வழியை எண்ணுவதே சிறந்தது ; இதை வீட்டுக் கீழ்மையை எண்ணாதீர்கள் . அத்திருமாலிருஞ் சோலையில்தான் உறி வெண்ணையை எடுத்துண்டு கண்ணன் கோயில் கொண்டுள்ளான். பெண் மான்கள் தன் குட்டிகளோடு சேர்ந்து வாழும் சோலை மலைக்குச் செல்லும் வழியை நினைப்பதே நல்லது .
மறி என்றால் ஆடு என்றே பெரும்பாலும் பொருள் வருகிறது. இங்கு மான்கள் என்று வருவதும் நோக்கற்பாலது .
***
திருக்குறளுக்கு புதுப் பொருள்!
ஈரடியால் உலகளந்தவனும் மூவடியால் உலகளந்தவனும்
பத்து அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம் ; அந்த அவதாரத்தைச் சொல்லும்போதெல்லாம் நம்மாழ்வார், குறளா திருக்குறளா என்று பாடுகிறார் . அவர் மனத்தில் உள்ள கருத்தினை நாம் அறிய முடிகிறது ; மூன்று அடிகளால் உலகத்தினை அளந்து ஓங்கி உலகளந்த உத்தமன்- த்ரி விக்ரமன் – என்ற பெயர் பெற்றான் விஷ்ணு .
இரண்டே அடிகளால் (குறள்) உலகத்தினையே அளந்துவிட்டான் வள்ளுவன்; அவன் பேசாத பொருள் இல்லையே!
வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-
குறளா என்று பல பாசுரங்களில் அழைத்தவர் இங்கு திருக்குறள் என்ற சொல்லையே பயன்படுத்துவத்தைக் கவனிக்க வேண்டும் . நம்மாழ்வார் திருக்குறளை நன்றாகக் கற்றவர் என்பதை பல பாசுரங்கள் மூலம் அறிய முடிகிறது . மாணிக்க வாசகரின் திருவாசகமும் அவர் பாசுரங்களில் எதிரொலிக்கிறது. அவற்றைத் தனியாகக் காண்போம் .
***
இதைத் திருவள்ளுவமாலையில் பரணரும் பாடியுள்ளார்.
மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான் – வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து
இந்த பரணர் பிற்கால பரணர் ஆவார்.
–subham—
Tags- திருக்குறளுக்கு, புதுப் பொருள், கிறி உறி மறி நெறி, நம்மாழ்வார் இலங்கைத் தமிழ், திருக்குறளா
My Old Articles
இலங்கைத் தமிழும் இந்தியத் தமிழும்! கொஞ்சம் கதைப்போமா ? (Post No.13,659)
Post No. 13,659
Date uploaded in London – 12 September 2024
பரி, கரி, அரி, நரி, மறி, கிரி, சுரி, வரி (Post No.6057)
Date: 10 FEBRUARY 2019
Post No. 6057
தமிழ் ஒரு அழகான மொழி. பழைய கால ஆநந்தவிகடன் அகராதி அல்லது அதற்கு முந்திய நிகண்டுகள் ஆகியவற்றை எடுத்துப் பார்த்தால் மிகவும் வியப்பாக இருக்கும். ஒரு சொல்லுக்கு இத்தனை பொருளா என்று ஒரு புறம் வியப்போம். ஒரே பொருளைச் சொல்ல இத்தனை சொற்களா என்று மறு புறம் வியப்போம். தாமரை என்பதற்கு பல சொற்கள் இருக்கும். அரி என்ற ஒரு சொல்லுக்கு பல வித அர்த்தங்கள் இருக்கும். மேலும் ஒருஎழுத்து, இரு எழுத்துச் சொற்களைக் கொண்டே நிறைய விஷயங்களைச் சொல்ல முடியும்.
இந்தச் சொல்லையோ,சப்தத்தையோ வேறு மொழிகளில் பிரயோகித்தால் இன்னும் வியப்பான விஷயங்கள் வரும்.
உதாரணமாக அரி என்ற சொல்லுக்கு விஷ்ணு, பகைவன், சிங்கம் இன்னும் பல பொருள்கள் வரும். ஹீப்ரூ (Hebrew) மொழியிலும் அரி என்றால் சிங்கம் என்பதைக் கண்டு வியப்போம். கேஸரி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் (கேசம்/முடி உள்ள மிருகம்) ஸீசர் என்று உச்சரிக்கப்பட்டு ஜூலியஸ் சீசர், அகஸ்டஸ் சீசர் என்ற பெயர்களில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே புகுந்தது.
ஒரே சப்தம் வரும் சொற்களைச் சொல்லுவதும் கவிதை போல இருக்கும். அதை நினைவு வைத்துக் கொள்வதும் எளிதாக இருக்கும். சொல் விளையாட்டுகளை விளையாடவும் ஏதுவாக இருக்கும்.
குறுக்கெழுத்துப் போட்டி, தமிழ் ஸ்க்ராபிள் (Tamil Scrabble) , சொல் போட்டி போன்றவை மூலமும் விடுகதைகள் மூலமும் மாணவர்களை டெலிவிஷன், வீடியோ கேம்ஸ் முதலியவற்றில் இருந்து திசை திருப்பலாம்.
நான் என் மகன்களுடன் ரயிலில் செல்லும்போது ஒரே சப்தத்தில் முடியும் ஆங்கிலச் சொற்களைச் சொல்லி விளையாடுவோம். ‘ஷன்’ (Tion or Sion) என்று முடியும் சொற்கள் என்றால்
Consternation
Conflagration
Concentration
Condemnation
Education
Fruition
என்று நூற்றுக் கணக்கில் வரும்.
நாங்கள் மூவரும் சொன்ன சொற்களைக் கேட்டு ஆங்கிலேயர் ஒருவரே வியந்து பாராட்டினார். இன்னும் சிலர் மூக்கில் விரலை வைத்து வியக்காமல் கண்களால் வியந்தனர்.
தமிழிலும் இது போல அறிவு தொடர்பான விஷயங்கள் பரவ வேண்டும்
யூ ட்யூப், You Tube, Social Media, சோஷியல் மீடியா (பேஸ் புக், வாட்ஸ் அப்), பத்திரிக்கைகள், சினிமா, நாடகங்களில் சில காட்சிகள், பள்ளிக்கூடங்களில் போட்டிகள் மூலம் இவைகளை வளர்க்கலாம்.
நான் சொல்லுவதை விளக்க ஒரே ஒரு உதாரணம்:–
“ரி” சப்தத்தில் முடிய வேண்டும்
விலங்கியல் பெயராக இருக்க வேண்டும் என்று போட்டி விதி வைத்துக் கொள்வோம். எனக்கு உடனே நினைவில் வரும் சொற்கள்
அரி- சிங்கம்
பரி-குதிரை
வரி-வண்டு
நரி- நரி,குள்ள நரி
மறி- ஆடு
கரி- யானை
கிரி-பன்றி
உரி– கடல் மீன் வகை
சுரி- ஆண் நரி
அரி-குரங்கு, சிங்கம்
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். குறுக்கெழுத்துப் போட்டிகள் பிரபலமான காலத்தில் வந்த ஆநந்தவிகடன் அகராதி போன்றவை இருந்தால், ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள வேறு பொருள்களும் வியப்பைத் தரும்
வியப்பான செய்தி
தமிழில் அகராதியே இல்லை!!! இப்போது நீங்கள் எந்தக் கடையில் சென்று எந்தப் பதிப்பக அகராதி வாங்கினாலும், ஆங்கில-தமிழ், இந்தி -தமிழ் என்று வைத்துக் கொள்ளுங்களேன். தமிழ் என்ற பெயரில், சம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும். தனித் தனியாக ஒவ்வொரு பக்கத்திலும் தமிழ்- ஸம்ஸ்க்ருத சொல் விகிதாசாரம் போட்டுப் பார்த்தால் ஸமஸ்க்ருதச் சொற்களே அதிகம் இருக்கும்.
நம் முன்னோர்கள் தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும் இரு கண்களாக பார்த்ததால் தமிழ் அகராதி என்ற பெயரில் ஸம்ஸ்க்ருதச் சொற்களையும் சேர்த்தனர். ஆங்கிலத்திலும் இப்படித்தான். பிற மொழிச் சொற்களும் ஆங்கில அகராதியில் இருக்கும்.
(ஆக்ஸ்போர்டு அகராதியில் உள்ள ‘ஐயோ,’ ‘பறையா’ என்ற தமிழ் சொற்களை அகற்றக் கோரி நான் இயக்கம் நடத்தி வருகிறேன்.)
எடிமலாஜிகல் டிக்சனரி என்ற பெயரில் பர்ரோ, எமனோ போன்றோர் திராவிடச் சொற்களை மட்டும் கொண்டு சொற் பிறப்பியல் (Etymological) அகராதி தொகுத்தனர்.
ஆனால் அதிலும் குறை கண்டேன். நீர் (Nereids=water nymphs) என்ற தமிழ்ச் சொல்
கிரேக்க மொழியிலும் உள்ளது அரிசி என்ற(Oryza) சொல் செமிட்டிக் மொழிகளிலும் கிரேக்கத்திலுமுளது. இவை தொடர்பின் மூலம் பரவியதா அல்லது மனித இனம் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தபோது பேசி, இப்போது மிச்சம் மீதியாக நிற்கின்றனவா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.
எடுத்துக் காட்டாக சப்த=ஏழு என்ற சொல் செமிட்டிக், ஸம்ஸ்க்ருதம் போன்ற பல மொழிகளில் 3000 ஆண்டுகளாக இருக்கிறது. ஆக, சிந்து-ஸரஸ்வதி நாகரீகத்திலும் இது இருக்கவேண்டும். இப்படி அணுகினோமானால் பல புதிர்களுக்கு விடை கிடைக்கும்.பிலோனிய தெய்வமான செப்பெத்து, யூதர்களின் சப்பத் (sabbath day= seventh day) ஆகியவை ஏழு தொடர்பானவை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முந்தைய கட்டுரைகளில் லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ரத்தினைக் கற்கள் , புனித நகரங்களின் பெயர்களைக் கடும். பூக்கள் இல்லாததை பூஜைகள் இல்லை பூஜை என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலே புது வந்து விடுகிறது சங்க இலக்கியத்திலும் பூஜை ப்பூக்கள் வருகின்றன . கபிலர் பாடிய புறநாநூற்றுப்படலில் பகவத் கீதை ஸ்லோகத்தை மொழிபெயர்த்துள்ளார்
புறநானூறு 106
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்,
கடவன், பாரி கை வண்மையே . . –கபிலர்
பொருள்
சூடும் மலர்களில் நல்லவை என்றும் தீயவை என்றும் உண்டு. ஆனால் குவிந்த பூங்கொத்தையும் இலையையும் கொண்ட எருக்கம் பூ எளிதில் கிடைக்கக்கூடியது ; (விலை கொடுத்து வாங்க வெண்ணடியது இல்லை.அப்பூவையோ புல்லையோ இலையையோ ஒருவன் சூட்டினாலும் கடவுள் வேண்டாம் என்று சொல்லமாட்டார் பக்தனின் அன்புதான் முக்கியம் அது போல பாரி வள்ளல் கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் வள்ளல்[ யார் சென்றாலும் பரிசைப் பெறலாம்.
இதில் புல்லிலை எருக்கம் என்பதை ஒரே செடிக்கு ஏனையோர் பயன்படுத்தினர் நான் புல், இலை , எருக்கம் என்று மூன்றாகப்பிரித்து உரை எழுதியுள்ளேன். காரணம் சங்க இலக்கியத்திலே அதிகப்பாடல்களை யாத்த பிராமணன் கபிலன்
ஸம்ஸ்க்ருதச் செய்யுட்களை அப்படியே தந்துள்ளான் இந்த மேற்கூறிய பாடலும் பகவத் கீதையின் மொழிபெயர்ப்பே !
எனக்கு பக்தியுடன் கொடுக்கும் பச்சிலை, பூ, தண்ணீர், பழம் எதுவானாலும் — (பத்ரம், புஷ்பம், பலம், தோயம்) —- அதை நான் உண்கிறேன் (பகவத் கீதை 9-26) என்று கண்ண பிரான் கூறுவான்
இந்தப் பாடலுக்கு உரை கண்டவர்கள் எருக்கம் பூவை மட்டம் தட்டும் வகையில் மொழிபெயர்த்துள்ளனர் ஏனெனில் கணபதிக்கு மட்டுமின்றி சிவன் அம்பிகை ஆகியோருக்கும் எருக்கம் பூ பிரியமானது என்பதை தேவராப்பாடல்களும் சாம்ஸக்ரு த்த ஸ்லோகங்களும் சொல்கின்றன. இதற்குக் காரணம் வில்வம் துளசி போலா அந்த ந்தச் செடிக்கும் மருத்துவ குணம் உண்டு
இவைகளில் தாமரை இந்தியாவின் தேசீய மலர் மட்டுமல்ல எல்லா தெய்வங்களுடனும் ஏதேனும் ஒருவகையில் தொடர்புடையது. மலர் மேல் எகிவந்த பிரம்மாவை வள்ளுவனும் குறளில் மலர்மிசை ஏகினான் என்று போற்றுகிறார் . தேவியர் அனைவரும் தாமரையுடன் தொடர்புடையவர்கள் தான்
மந்தார குஸுமப்ரியா – மந்தார மலரில் விருப்பம் உடையவள்
விஷ்ணுக்ரந்தி விபேதினீ -விஷ்ணுக்ரந்தி மலர்
சஹஸ்ரார அம்புஜரூடா – சஹஸ்ராரம் என்னும் தாமரை
ராஜீவ லோசனா- தாமரைக் கண்ணுடையாள்
பாடலி குஸுமப்ரியா -பாதிரி மலரில் விருப்பம் உடையவள்
பத்ம – தாமரை என்ற சொல்லில் லலிதாம்பிகைக்கு பல பெயர்கள் வருகின்றன . நளினி என்ற
பெயரும் தாமரை மலரையே குறிக்கும்
தாடிமீ குஸுமப்ரியா – மாதுளம் பூவை விரும்புபவள்
சைதன்ய குஸுமப்ரியா- சைதன்ய மலரில் விருப்பம் உடையவள் ; இப்படி ஒரு மலர் இல்லை. ஆனால் ஞானம் என்ற மலர் என்று உரைக்கார்கள் விளம்புகிறார்கள்.
சம்பக அசோக புன்னாக செளகந்திகா லஸத் கசா- செண்பகம் அசோகம் புன்னாகம் ஸெளகந்திகம் என்னும் செங்கழுநீர் ஆகிய மலர்களை அம்பாள் கூந்தலில் சூடுகிறாள். இதனால் அவள் அழகு அதிகரிக்கிறது
– கடம்ப வனத்தில் வசிப்பவள் , கடம்பமலரில் பிரியம் கொண்டவள் ; மதுரையின் ஸ்தல விருட்சம் கடம்ப மரம்தான். ஒருகாலத்தில் கடம்ப வனக்காடாக இருந்த இடத்தில் நள்ளிரவில் இந்திரன் தேஜோமயமாக பூஜை செய்தபோது, அதை தனஞ்சயன் என்ற செட்டியார் பார்த்து மதுரை நகர பாண்டியனுக்கு அறிவிக்கவே தற்போது நாம் பார்க்கும் மீனாட்சி அம்மன் கோவிலும் மதுரை நகரமும் உருவானது.
அம்பாளுக்குப் பிரியமான மலர்கள் அனைத்தும் சிவபிராபினைப்போற்றும் தேவாரத்தில் சிவணுக்குகந்த மலராக வருவதையும் கண்டு மகிழலாம்
ஜபாகுஸும நிபாக்ருதி – செம்பருத்தி மலர் போல சிவந்த செம்மேனி கொண்டவள்
இவை போல இன்னும் பல நாமங்களை நாம் காணலாம் அவைகளை செளந்தர்ய லஹரியில் சங்கராசார்யார் சொல்லும் பாடல்களுடன் ஒப்பிடும்போது இன்னும் ஆனந்தம் பெருகும்
****
காஞ்சிப்பெரியவர் (1894-1994)உரை
வடக்கே ஹிமாசலத்தில் பர்வத ராஜகுமாரியாகப் பிறந்தவள் தென்கோடியில் கன்யாகுமரியாக நிற்கிறாள். மலையாளத்தில் பகவதியாகவும், கர்நாடகத்தில் சாமுண்டேசுவரியாகவும், தமிழ்நாட்டில் தொண்டை மண்டலத்தில் காமாக்ஷியாகவும், சோழ தேசத்தில் அகிலாண்டேசுவரியாகவும், பாண்டிய நாட்டில் மீனாக்ஷியாகவும், ஆந்திர தேசத்தில் ஞானாம்பாளாகவும், மகாராஷ்டிரத்தில் துளஜாபவானியாகவும், குஜராத்தில் அம்பாஜியாகவும், பஞ்சாபில் ஜ்வாலாமுகியாகவும் காஷ்மீரத்தில் க்ஷீர பவானியாகவும், உத்திரப்பிரதேசத்தில் விந்த்ய வாஸினியாகவும், வங்காளத்தில் காளியாகவும், அஸ்ஸாமில் காமாக்யாவாகவும் – இப்படி தேசம் முழுவதிலும் பல ரூபங்களில் கோயில் கொண்டு, எப்போதும் அநுக்கிரஹம் பண்ணி வருபவள் அவளே!
***
உத்தம பெண்கள் தழுவினால் குரா / மருதோன்றி மலரும் என்று செளந்தர்ய லஹரி ஸ்லோகம் 96-ல் பாடுகிறார்
அசோக மரத்தை பெண்கள் உதைத்தால் அது பூக்கும்– ஸ்லோகம் 86-
அம்பாள் நாக்கின் நிறம் செம்பருத்திப்பூவின் நிறம் – ஸ்லோகம் 64-
காஷ்மீர் வரை கால்நடையாகச் சென்ற சங்கரர் காஷ்மீர் குங்குமப்பூவைக் கூட அம்பாளுக்கு சாத்தி ஆனந்தம் அடைகிறார்.
***
சிவ பெருமானுக்குகந்த மலர்கள்
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள்.
கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும்
போதஞ்சி நெஞ்சமென்பாய்த்
தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண்
டாய்தள ராதுவந்தி
வளர்ந்துந்து கங்கையும் வானத்
திடைவளர் கோட்டுவெள்ளை
இளந்திங் களும்எருக் கும்இருக்
குஞ்சென்னி ஈசனுக்கே 11.4.1
***
இளவெ ழுந்த இருங்குவ ளைம்மலர்
பிளவு செய்து பிணைத்தடி யிட்டிலர்
களவு செய்தொழிற் காமனைக் காய்ந்தவன்
அளவு காணலுற் றாரங் கிருவரே 5.95.9
***
திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொணெய்தல்
குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாட மலிமறை யோர்கணல்லூர்
உருவமர் பாகத் துமையவள் பாகனை யுள்குதுமே 4.97.10
***
முந்திவட் டத்திடைப் பட்டதெல் லாமுடி வேந்தர் தங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
முத்தும் பவளமும் எல்லாக் கடவுளரின் அணிகலன்களிலும் இடம்பெறுகிறது . மதுரை, ஸ்ரீரங்கம் முதலிய கோவில்களில் உள்ள முத்து அங்கிகள் மிகவும் பிரபலமானவை .
ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தா பலன்விதா என்பது லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஒரு நாமம்.
இதைத் தொடர்ந்து காமேச்வர ப்ரேம ரத்னமணி ப்ரதிபணஸ்தனீ என்ற நாமம் வருகிறதுவருணிக்கும்போது பக்தர்கள் கேசாதி பாதம், அதாவது முட்டிமுதல் அடிவரை பாடுவார்கள் . ஆகையால் அம்பாளின் கழுத்தில் அணிந்த முத்துமாலையை முதல் நாமம் வருணிக்கிறது
ரத்ன க்ரைவேய – இரத்தின மாலை அணிந்த கழுத்து;
சிந்தாகம்- பதக்கம்;
லோல – ஆடிக்கொண்டிருக்கிறது;
முக்தா – முத்து /மாலை
தமிழிலும் சம்ஸ்க்ருதத்தில் முத்துக்கு ஒரே ஒலி/ சப்தம் இருப்பதைக் கவனிக்க வேண்டும்
பாரத நாட்டைப் பொருத்த வரையில் முத்து என்றால் தமிழ்நாட்டிலுள்ள பாண்டிய நாடுதான் . 2400 ஆண்டுகளுக்கு முன்னரே பாண்டிய கவாடம் என்ற முத்தினை அர்த்தசாஸ்திரம் குறிப்பிடுகிறது இது இரண்டாவது தமிழ்ச் சங்கம் இருந்த கபாட புரத்திலிருந்து சென்ற முத்து ஆகும்.
வராஹமிஹிரரும் பலவகையான முத்து வடங்களை வெவ்வேறு பெயர்களுடன் குறிப்பிடுகிறார் . இன்றும் பல கோவில் நகைகளில் இவற்றைக்காண முடிகிறது.
இரண்டாவது நாமத்தில் சிவபெருமானுடைய அன்புக்கும் தேவியின் அன்புக்கும் ரத்தினங்கள் உவமையாக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு ரத்தினைக் கற்கள் உயர்ந்தவை! காமேஸ்வரனின் பிரேமை /அன்பு என்ற ரத்தினத்துக்கு மாறறாகத் தன்னுடைய மார்பகங்கள் என்ற ரத்தினத்தை அளிப்பவள் லலிதாம்பாள்.
முத்துமாலை பற்றிய இணைப்புக் கட்டுரைகள் கீழே உள்ளன .
***
அடுத்த நாமம் சிந்தாமணி க்ருஹ அந்தஸ்ததா;
இதன் பொருள் சிந்தாமணிக் கற்களாலான கிருஹத்தில்/ இல்லத்தில் அமர்ந்து இருப்பவள். அற்புதமான கற்பனை !
சிந்தாமணி என்பது கேட்டதையெல்லாம் கொடுக்கக்கூடிய ரத்தினக் கல் . அந்த கற்களாலான வீட்டில் வசிப்பவள் அன்னை ! நாம் எல்லோரும் செங்கற்களால் அல்லது கான்க்ரீட்டினால் ஆன வீட்டில்தான் வசிக்கிறோம், ஆனால் இறைவியோ சிந்தாமணிச் செங்கற்களால் ஆன வீட்டில் வசிக்கிறாள்! இந்த ரூபத்தில் தேவியை மனைத்தில் நிறுத்தி தியானிப்போருக்கு வீட்டில் ரத்தினக் கல் மழை பொழியும்! ஆனால் ஒரு பெரிய நிபந்தனை; மனம் மொழி மெய் – மனோ வாக் காயம்- ஆகிய மூன்றிலும் தூய்மை இருக்க வேண்டும் இந்த நிபந்தனையை நிறைவேற்றுபவர் கோடியில் ஒருவர்தான்!
பத்மராகக் கல் பற்றிய ஒரு நாமத்தில் தேவியை ஹயக்ரீவர் (குதிரைக் கழுத்துக் கடவுள்),
பத்மராக ஸமப்ரபா என்று வருணிக்கிறார் . அவள் பத்மராகம் தரக்கூடிய பிரகாசத்தை உடையவள் என்பது பொருள். இதை நாம் சொல்லும்போது கோடி பத்மராக கற்கள் என்று கற்பனை செய்தால்தான் நமது சிற்றறிவுக்கு அம்பாளின் பெருமை விளங்கும் .
ஏனெனில் விநாயாகரை நாம் வணங்கும்போது
வக்ரதுண்ட மஹா காய சூர்யகோடி ஸம்ப்ரபா
நிர்விக்னம் குருமேதேவா ஸர்வகார்யேஷு ஸர்வதா –
என்று கோடி சூரியன்களை நினைக்கிறோம் பகவத் கீதையில் இறைவனின் விஸ்வரூபத்தை வருணித்த சஞ்சயன் திவி சூர்ய சஹஸ்ரஸ்ய — ஆயிரம் சூரியன்கள உதித்தாற்போல இருக்கிறது என்கிறார் . அமெரிக்கப் பாலைவனம் ஒன்றில் முதல் அணுகுண்டு சோதனை நடத்தியத்தைக் கண்ட அணுகுண்டின் தந்தை ராபர்ட் ஓப்பன்ஹீமர் “father of the atomic bomb J. Robert Oppenheimer (1904-1967) அந்தக் காட்சியைத் தொலைதூரத்தினில் கண்டபோதே அவருக்கு அந்த பகவத் கீதை ஸ்லோகம்தான் நினைவுக்கு வந்தது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
***
மீண்டும் முத்து குறித்து ஒரு நாமம் வருகிறது
ஸகல ஆகம ஸந்தோஹ சக்தி ஸம்புட மெளக்திகா
சம்படம் அல்லது சம்புடம் என்பது மூடியுள்ள பாத்திரம் . மெளக்திகா என்பதை முத்துவினால் ஆன மூக்குத்தி என்று சொல்லலாம் .
முதல் பொருள் – முத்துச் சிப்பிக்குள் முத்து இருப்பது போல வேதங்களாகிற , ஆகமங்களாகிற , முத்துச் சிப்பிக்குள் அம்பாளுடைய முத்து மூக்குத்தியானது இருப்பதாகச் சொல்லப்பட்டது
இரண்டாவது பொருள் – வேதங்களாகிற முத்துச் சிப்பிக்குள் இருக்கும் முத்து மாதிரி இருப்பவள்.
மூன்றாவது பொருள் – இதற்கு முந்திய நாமத்துடன் சேர்த்துப் பார்க்கையில் நான்கு ஜாதியாராலும் வணங்கப்படுபவள் என்றும் பாஸ்கரராயர் உரை கூறுகிறது.
***
சர்வ வர்ண உப சோபிதா = சர்வவர்ணோப சோபிதா
என்ற நாமத்தில் தேவியின் கலர்கள் வருகின்றன ; சித்ர வர்ணமாக , அதாவது எல்லா நிறங்களுடன் ஒளிவீசுபவள் என்பது ஒருபொருள்.
உப என்றால் சமீபத்தில் அல்லது மேல் என்று பொருள் ; UPPER அப்பர் என்ற ஆங்கிலச் சொல் ஊபர் என்ற ஹிந்தி சொல் ஆகியன இதிலிருந்தே பிறந்தன.
வர்ணம் என்பதை அக்ஷரம்/ எழுத்து என்று பொருள் கொண்டால் அக்ஷர யோகினிகளுக்கு அருகில் அல்லது மேல் இருப்பவள்; கலர் என்று பொருள் கொண்டால் அவைகளுக்கும் மேலானவள்; எல்லா வர்ணங்களும் உள்ள வட்டத்தைக்/ காற்றாடியைச் சுற்றினால் நாம் காண்பது வெண்மை நிறம் ; அதாவது ஸ்படிக நிறம்.
ரத்தினங்கள் பல கலர்களைக் கொண்டவை ; ஸ்படிகம் என்னும் ரத்தினம் நிறம் வெண்மை ; நாம் எல்லோரும் ஸ்படிக மாலையை அணிந்திருக்கும் பெரியோர்களைப் பார்த்து இருப்போம் அதன் குணம் அதன் அருகிலுள்ள பொருளின் நிறத்தை ஏற்பதாகும் . சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கடவுள் எல்லா நிறத்திலும் இருப்பதாக நாம் பாவனை செய்து மகிழலாம்; நிறங்களுக்கு மேலானவர் என்று தியானித்தும் மகிழலாம் . மதுரை மீனாட்சி கோவில் காசி விசாலாக்ஷி சமேத விச்வநாதர்கோவிலுக்குச்சென்றால் ஸ்படிக நிற சிவபெருமானைத் (மூல விக்ரஹத்தைச் சொல்லவில்லை ) தரிசிக்கலாம் ஆனால் அவரையே நாம் ஐந்து நிறங்கள் என்று சொல்லி திருவாசகம் ஒதுகிறோம் .
தேவியின் நிறம் பொதுவாக சிவப்பு என்று வருணிக்கப்பட்டாலும் அர்த்தநாரி, நாராயணி, ஹரிணி என்று அழைக்கும்போது பச்சை அல்லது நீல வர்ணம் வந்துவிடுகிறது. கடவுளுக்கு எல்லா நிறங்களும் பொருந்தும் ; நிறமில்லாத ஸ்படிக நிறமும் பொருந்தும் என்பது இந்து தெய்வங்களின் நாமாவளிகளைச் செல்வோருக்கு நன்கு தெரியும் . மாணிக்கவாசகர் சிவபெருமானை நிறங்களோர் ஐந்துடையாய் என்பார்; சிவ பெருமானுக்கு ஐந்து நிறங்கள் ,
கிழக்கு முகமான தத்புருஷம்- பொன்நிறம், தெற்கு முகமாகிய அகோரம்- கருமை, வடக்கு முகமாகிய வாமதேவம்-சிகப்பு, மேற்கு முகமான சத்யோஜாதம்-வெண்மை என ஆதி சிவனுக்கு நிறங்களும் ஐந்தே.
***
பவளக்கொடி
வித்ருமாபா என்பது லலிதாவின் இன்னும் ஒரு நாமம்; வித்ரும என்றால் பவளம்CORAL ;வித்ருலதா என்றால் பவளக்கொடி முத்தும் பவளமும் கடலில் கிடைப்பவை
இதையே வித் +த்ரும = ஞான மரம் = விஸிடம் ட்ரீ ஸ் – என்றும் உரைகாரர்கள் காண்கிறார்கள் (தரு என்ற சொல்லும் ட்ரீ என்ற ஆங்கிலச் சொல்லும் த்ரும என்பதிலிருந்து பிறந்த சொற்கள் ஆகும் )
6.முத்திலும் சொத்தை உண்டு,பவழத்திலும் பழுது உண்டு.
***
முத்து பிறக்கும் இடங்கள் இருபது (Post No.3524)
தந்தி வராக மருப்பிப்பி பூகந்தழை கதலி
நந்து சலஞ்சலம் மீன்றலை கொக்கு நளினமின்னார்
கந்தரஞ்சாலி கழைகன்ன லாவின் பல்கட்செவிக்கார்
இந்துவுடும்புகரா முத்தமீனுமிருபதுமே
—–உவமான சங்கிரகம், இரத்தினச் சுருக்கம்
யானைக் கொம்பு, பன்றிக்கொம்பு, முத்துச்சிப்பி, பாக்குமரம், வாழைமரம், நத்தை, சலஞ்சலம் (வலம்புரிச் சங்கு), மீ ன் தலை, கொடுக்குத் தலை, தாமரை, பெண்கள் கழுத்து, நெல், மூன்கில், கரும்பு, மாட்டுப்பல், பாம்பு, முகில், கர்ப்பூரம், முடலை, உடும்பு என்னும் இருபது இடங்களில் முத்து பிறக்கும்.
இந்த இருபது வகைகளில் கடலில் கிடைக்கும் முத்து ஒன்றுதான் அணிவரும் அணியும் முத்து.
1.தந்தி 2.வராகம் மருப்பு= யானை, பன்றி இவைளின் கொம்புகள்
3.இப்பி = முத்துச் சிப்பிகளும்
4.பூகம் = கமுகங்காய் குல்லைகள்
5.தனி கதலி = ஒப்பற்ற வழைக்குலைகள்
6.நந்து = சங்கும்
7.சலஞ்சலம் = விசேஷ /அபூர்வ வலம்புரிர்ச்சங்கு
8.மீன்றலை = மீன் தலை
9.கொக்கு= கொக்கின் தலை
10.நளினம் = தாமரை
11.மின்னார் கந்தரம் = பெண்களின் கழுத்து
12.சாலி = செந்நெற் கதிர்க்குலை
13.கழை = மூங்கில்
14.கன்னல் = கரும்பு
15.ஆவின் பல் = பசுமாட்டின் பல்
16.கட்செவி = பாம்பு
17.கார் = மேகம்
18.இந்து = சந்திரன்
19.கரா =முதலை
20.உடும்பு= உடும்பின் தலை
***
காளிதாசனும் இதையே சொல்கிறான்:
ஆரிய திராவிட வாதம் பொய் என்பதும், பாரதம் முழுதும் ஒரே கலாசாரம்தான் இருந்தது என்பதும் காளிதாசனின் 1250 உவமைகளையும் சங்கத் தமிழ் இலக்கிய உவமைகளையும் ஒப்பிட்டால் நன்கு விளங்கும். உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் அத்தகைய உவமைகளைக் காணவும் முடியாது; தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள அடிப்படை ஒற்றுமை போல வேறு எந்த மொழியிலும் காணவும் முடியாது!
முத்துச் சரம், அறுந்த முத்து மாலை பற்றி “சூத்ர மணிகணா இவ” என்னும் பகவத் கீதை உவமை சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் இருப்பதை சென்ற வாரம் எழுதினேன். அதற்கு முன் முத்து பற்றி பல கட்டுரைகள் எழுதினேன். மிகச் சுருக்கமாக:-
சுவாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழை சிப்பியின் வாய்க்குள் புகுந்து முத்து ஆகிறது என்று பர்த்ருஹரி சொன்னது கருவூர் கதப்பிள்ளையின் புறம் 380 பாடலில் உள்ளது.
காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரத்தில் உள்ளது (1-6)
யானைத் தந்தத்திலுள்ள முத்து பற்றி காளிதாசன் குறிப்பிடும் இடங்கள்:_ குமாரசம்பவம் — 1-6; ரகுவம்சம் 9-65;
தமிழ் இலக்கியத்தில் யானை முத்து, மூங்கில் முத்து பற்றி வரும் இடங்கள்:-
காளிதாசனுக்குப் பிடித்த உவமைகளில் முத்து மாலையும் ஒன்று.
பறவைகள் குடியேறும் போது (Please read my article on Bird Migration) பறந்து செல்லுவது முத்துமாலை போல உள்ளது என்றும் நதிகளை மலை உச்சியிலிருந்து பார்க்கையில் அவை முத்துமாலை போலத் தென்படும் என்றும் (ரகு.13-48; மேகதூதம் 49) கூறுகிறான்.
வராஹமிகிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் என்னும் அற்புத சம்ஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் “பெர்fயூம் செய்வது எப்படி?” என்பது உள்பட 106 தலைப்புகளில் எழுதியுள்ள அரிய பெரிய விஷயங்களைக் கடந்த சில நாட்களில் கண்டீர்கள். இன்று முத்துக்கள் பற்றிப் பார்ப்போம்.
பொருள்: யானை, பாம்பு, முத்துச் சிப்பி, சங்கு, மேகம், மூங்கில், திமிங்கிலம், காட்டுப் பன்றி ஆகிய இடங்களில் முத்து கிடைக்கும்.
வராக மிகிரர் இப்படிச் சொன்னாலும் விஞ்ஞானிகள் அறிந்த முத்துக்கள் கடலிலும் சில இடங்களில் ஆறுகளிலும் கிடைக்கும் முத்துக்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் இதுவரை நிரூபிக்கப்படாதவையே. வராஹ மிகிரரும் தனக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் கருத்துக்களைத் தான் தொகுத்திருப்பதாகவே கூறுகிறார். அதனால் தன் நூலுக்கே சம்ஹிதை=தொகுப்பு எனப் பெயரிட்டுள்ளார்.
***
கடல் தரும் ஐந்து செல்வங்கள்
ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம்
நீர்ப்படும் உப்பினோடைந்து
இவை ஐந்தும் கடல் தரும் செல்வம் என்று பழைய செய்யுள் கூறும்
ஒர்க்கோலை – அம்பர், அம்பர் க்ரிஸ் என்று அழைக்கப்படும் இது ஸ்பெர்ம் வேல் எனப்படும் திமிங்கிலத்திலிருந்து கிடைக்கிறது. மரத்திலிருந்து வெளியேறும் கோந்து போன்ற பிசினும் ஓர்க்கோலை என்று அழைக்கப்படும். மற்ற நான்கு: சங்கு, பவளம், முத்து, உப்பு என்பன.
அம்பர் அம்பர்க்ரிஸ் என்பது திமிங்கிலத்தின் குடலில் சுரக்கப்படும் ஒரு திரவம் கெட்டியாகி அதன் மலத்துடன் வெளியே தள்ளப்படும். உடலுக்குப் பூசும் வாசனைப் பொருட்களில் (செண்ட், பெர்ஃயூம்) அந்த நறுமணத்தை நீடிக்க வைக்க இது உதவும். மரத்திலிருந்து கிடைக்கும் பிசினைக் கொண்டு அலங்காரப் பொருட்களைச் செதுக்குவர். அதற்குள் ஏதேனும் பூச்சி, புழுக்கள் சிக்கியிருந்தால் அது ஆராய்ச்சிக்கு உதவுவதோடு அதன் மதிப்பும் அதிகரிக்கிறது.
***
ரத்தினங்களை அணிவதால் என்ன கிடைக்கும்? வராஹமிகிரர் பதில்!!
ஆராய்ச்சிக் கட்டுரை எண் 1645; தேதி 12 பிப்ரவரி 2015
ரத்தினக் கற்களின் சிறப்புத் தன்மை என்ன? ஒரு கல் சிறப்பானதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது:- அது ம்ருதுவாக வழுவழுப்பானதாக இருக்கவேண்டும். தடவிப்பார்த்தால் கையில் எதுவும் நெருடக் கூடாது. கல்லுக்குள் மாசு, மரு, குற்றம், குறை இருக்கக் கூடாது. மின்னல் (டால்) அடித்து பளபளக்க வேண்டும்; ஒளிவீச வேண்டும். கனமாகவும் நல்ல வடிவத்திலும் இருக்க வேண்டும். மாணிக்கக் கல்லானால் நல்ல சிவப்பு வர்ணத்தில் இருக்கவேண்டும்.
இந்த ஸ்லோகம் முத்து பற்றிய அத்தியாயத்தில் வருகிறது. இது எல்லா ரத்தினக் கற்களுக்கும் பொருந்தும் என்பது உரைகாரர்களின் கருத்து.
இதன் பொருள் என்ன? எல்லா வகை முத்துக்களும் மிகவும் மதிப்பு மிக்கவை. இவைகளை அணிவோருக்கு புத்ர (மகன்கள்) பாக்கியம், பணம், புகழ், செல்வாக்கு ஆகியன வந்து குவியும்; நோய்களையும் துக்கத்தையும் அழிக்கும்; அரசர்கள் அணிந்தாலோ இஷ்டப்பட்டது எல்லாம் கிடைக்கும்.
குறையுள்ள வைரங்கள் படுகொலைகளை உருவாக்கும் என்பதால் கிருஷ்ண பரமாத்மாவே சியமந்தக மணியை கொடுத்துவிட்டதையும் அது இப்பொழுது அமெரிக்காவில் மியூசியத்தில் முடங்கிக் கிடப்பதையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏற்கனவே எழுதிவிட்டேன்:
அம்மனுக்கு முத்து அங்கி
தென் இந்தியக் கோவில்களில் முத்து மாலை, முத்து அங்கி போட்டு சுவாமியையும் அம்மனையும் அலங்கரிப்பது விஷேசமான ஒன்று. இதைக் காண பெண்கள் அணி திரண்டு படை படையாகச் செல்வர். எங்கள் ஊர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முத்து அங்கி, ஸ்ரீரங்கம் பெருமாள் முத்து அங்கி சேவை, திருப்பதி பாலாஜி கோவில் முத்து ஆபரணங்கள் மிகவும் பிரபலமானவை. இது வராகமிகிரர் காலத்துக்கும் முன்னரே இருந்திருப்பது அவர்தம் ஸ்லோகங்களில் இருந்து வெள்ளிடை மலை போல விளங்குகிறது.
அவர் 17 வகை முத்து மாலைகளை வருணிக்கிறார். இதை கோவிலில் உள்ள நகைகளும் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய கற் சிற்பங்களில் உள்ள நகைகளும் மெய்ப்பிக்கின்றன; யக்ஷி, யக்ஷர் சிலைகளில் உள்ள நகைகள் ப்ரமிப்பூட்டுகின்றன. அஜந்தா, சிகிரியா (இலங்கை) ஓவியங்களும் இந்த நகைகளைக் காட்டும்.
17 வகை முத்து மாலைகளில் சில:
1008 வடம் (நாலு முழ நீளம்) = இந்து சந்தா (கடவுளுக்கானவை)
504 வடம் (இரண்டு முழ நீளம்) = விஜய சந்தா
108 வடம் (இரண்டு முழ நீளம்) = ஹாரம் (மாலை)
81 வடம் = தேவ சந்தா
64 வடம் = அர்த்த ஹார
54 வடம் = ரஸ்மி கலாப
32 வடம் = குச்ச
20 வடம் = அர்த்த குச்ச
16 வடம் = மாணவக
12 வடம் = அர்த்த மாணவக
எட்டு வடம் = மந்தர
ஐந்து வடம் = ஹார பலக
27 முத்துக்கள் கொண்ட மாலை (ஒரு முழ நீளம்) = நட்சத்திர மாலா
இவ்வாறு முத்துக்களின் பெருமைகளை 36 பாடல்களில் பாடிப் பரவியுள்ளார்.
***
எடைகள் பற்றிய வாய்ப்பாடு
ரத்தினக் கல் வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு சின்னச் சின்ன எடைக் கற்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
1500 ஆண்டுகளுக்கு நாம் பயன் படுத்திய எடைகள், பணம், காசு முதலியன பற்றியும் அந்தக் காலத்தில் ரத்தினக் கற்களின் விலை பற்றியும் வராக மிகிரர் விரிவாக எடுத்துரைக்கிறார். இதோ வாய்ப்பாடு:
4 மாசக எடை (16 குந்துமணி) முத்து= 53,000 கார்ஷா பணம்
ஒரு மாசக எடை முத்து = 135 கார்ஷா பணம்
இப்பொழுது அவர் சொல்லும் ரத்தினக் கற்களின் விலை பொருள் உடைத்து அல்ல. ஆயினும் அவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் மதிப்பை அறிய முடியும். இடம், நேரம் ஆகியவற்றின் அருமை கருதி, இங்கே எல்லாவற்றையும் தர இயலவில்லை.
—-subham —
Tags- லலிதா, சஹஸ்ரநாமத்தில், நவரத்தினங்கள், Part 2 ,முத்து
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சங்க இலக்கிய புலவர் எண்ணிக்கை சுமார் 450 ஆகும். சிலர் அதை 540 ஆகக் காட்டி மகிழ்வர் ; காரணம் அவர்களுடைய பெயர்களுக்கு முன்னாலோ பின்னாலோ ஊர்ப்பெயர் அல்லது ஜாதிப் பெயர் அல்லது தொழில்பெயர் சேர்ந்துவிட்டால் அவரைத் தனியான புலவர் என்று முத்திரை குத்திவிடுவார்கள் ; அப்படிச் செய்வதில் யாருக்கும் லாபமோ நஷ்டமோ இல்லை .
விந்தை என்னவென்றால் நாகர்கள் என்ற பெயரில் சுமார் இருபது புலவர்கள் உள்ளனர்! கண்ணன் என்ற பெயரில் முப்பதுக்கும் மேலானோர் உள்ளனர்!! புலவர் பெயர் இல்லாத பாடல்களும் நிறைய உள்ளன. புலவர் பெயர் தெரியாத இடத்தில் அவர் அடிக்கடி பயன்படுத்தும் உவமை எடுத்திருக்காட்டு, சொல்லாக்கம் ஆகியவ ற்றைப் பயன்படுத்தி சங்கப் பாடல்களைத் தொகுத்தோரே நாமகரணம் செய்துவிட்டனர் இப்படி ரிக் வேதத்தைத் தொகுத்த வியாசரும் செய்ததால் அவரைப் பின்பற்றி தமிழிலும் செய்துவிட்டனர் .
எல்லோருக்கும் சிவப்புக் கண்கள் இருப்பதில்லை; ஆனால் செங்கண்ணன் என்ற பெயரில் பல புலவர்கள் உள்ளனர் இது சிவந்த கண்ணுடைய ருத்ர சிவன் பெயராக இருக்கலாம் அல்லது விஷ்ணுவின் நான்கு தோற்றங்களில் ஒன்றான சங்கர்ஷணன் ஆக இருக்கலாம். புலவர் பெயர்களில் ஆராய்ச்சி செய்வதற்கு நிறைய இடம் இருக்கிறது நாகர்கள் பெயர் குப்தர் கல்வெட்டிலும் இருக்கிறது கணபதி நாகன் என்பவர் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டில் வரும் முக்கியப்புள்ளி ஆகும்.
அடுத்ததாக கண்ணன் பெயர்களைக் கொண்ட சங்கப்புலவர்களைக் காண்போம் ; பெரும்பாலோரின் கண் தோன்றும் விதத்தை வைத்துப் பெயர்களை வைத்தார்களோ அல்லது அவர்கள் குடும்பத்தில் தாத்தா, கொள்ளுத்தாத்தா பெயர்களை வைத்தார்களோ தெரியவில்லை. வேறு சில இடங்களில் விஷ்ணுவின் பெயர் அல்லது கிருஷணன் பெயர் என்பது தெளிவாகவே உள்ளது ராமாயண, மஹாபாரத, பாகவதக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் சங்க இலக்கியத்தில் இருப்பதும் தாமோதரன், கேசவன் முதலிய பெயர்களில் புலவர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது .
சுமார் 34 பெயர்களில் கண்ணன் வருகிறது கிருஷ்ணனை வடக்கில் கன்னையா என்பார்கள்; அதிலிருந்து கண்ணன் வந்திருக்க வேண்டும். பல புலவர் பெயர்களில் உடல் உறுப்பான கண் என்பதையே காகணமுடிகிறது . இதோ ஒரு பட்டியல்
Good Eye= SuLochana in Sanskrit; கிடங்கில் குலபதி நக்கண்ணனார்; சுலோச்சனார் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயரும் புலவர் பட்டியலில் உள்ளது அதன் தமிழாக்கம் நல் கண்ணன் Good Eye= SuLochana in Sanskrit;; சுலோச்சனார் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயரும் புலவர் பட்டியலில். உள்ளது அதன் தமிழாக்கம் நல் கண்ணன் ;
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை! from tamilandvedas.com
கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை! from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .