
Post No. 8127
Date uploaded in London – – – 8 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
கயிறு சார்த்திப் பார்த்தல் மற்றும் Bibliomancy Oracle! -1
ச.நாகராஜன்
குழப்பத்திலிருந்து மீண்டு முடிவெடுக்க வழிகள்!
பழைய காலம் தொட்டு இருந்து வரும் ஒரு பழக்கம் ஒரு விஷயம் நடக்குமா நடக்காதா அல்லது ஒரு விஷயத்தில் இப்படிப் போவதா அப்படிப் போவதா என்பது பற்றிய குழப்பமான மனநிலை இருக்கும் போது பூ போட்டுப் பார்த்தல் அல்லது கயிறு சார்த்திப் பார்த்தல் அல்லது திருவுளச் சீட்டுப் போட்டுப் பார்த்தல் என்ற ஒரு நடைமுறை இருந்தது. இன்றும் பல குடும்பங்களில் இது தொடர்கிறது.
அதாவது இதில் தெய்வம் தரும் வழி அல்லது முடிவு என்ன என்பதைப் பார்ப்பதற்காக ஒரு தெய்வீக நூலில் – தேவாரம் அல்லது திருவிளையாடல் புராணம் போன்ற நூலில் யதேச்சையாக ஒரு இடத்தில் கயிறைச் சார்த்தி அந்தப் பக்கத்தைத் திறந்து அங்கு என்ன செய்தி வந்திருக்கிறது என்பதைப் பார்த்து இறைவனின் திருவுள்ளத்தை அறிவது வழக்கம்.
அதே போல பூக்களை சுவாமி சந்நிதியில் குருக்கள் அல்லது பூசாரி அல்லது ஒரு சிறு குழந்தையை விட்டு எடுக்கச் சொல்லி நினைத்த பூ எடுக்கப்படுகிறதா என்பது பார்ப்பதும் ஒரு வழக்கம். இரு துண்டுச் சீட்டுகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கச் செய்வதும் ஒரு நடைமுறை – பூவிற்குப் பதில் திருவுளச் சீட்டு.
சிலர் நாணயத்தைச் சுண்டி விட்டு தலையா அல்லது பூவா என்று பார்த்து தங்கள் நிலையை முடிவு செய்வர்.
கயிறு சார்த்திப் பார்த்தல்!
இது பற்றிய சுவையான சம்பவங்கள் நமது நாட்டில் ஏராளம் உள்ளன.
உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம்:-
உ.வே.சாமிநாதையரின் என் சரிதை நூலில் 23ஆம் அத்தியாயத்தின் இறுதிப் பகுதி இது:-
ஒருநாள் காலையில் திருவிளையாடற் புராணத்தைப் படிக்கலாமென்று எடுத்தேன். அப்போது மிகவும் நைந்து, அயர்ந்துபோன என் உள்ளத்தில் ஓர் எண்ணம் தோற்றியது. “இந்தப் புஸ்தகத்தில் கயிறுசார்த்திப் பார்ப்போம்” என்று நினைந்து அவ்வாறே செய்யலானேன். இராமாயணம், திருவிளையாடல் முதலிய நூல்களில் வேறு ஒருவரைக்கொண்டு கயிறுசார்த்திப் பிரித்து அப்பக்கத்தின் அடியிலுள்ள பாடலைப் பார்த்து அச்செய்யுட் பொருளின் போக்கைக்கொண்டு அது நல்ல பொருளுடையதாயின் தம் கருத்து நிறைவேறுமென்றும், அன்றாயின் நிறைவேறாதென்றும் கொள்ளுதல் ஒரு சம்பிரதாயம்.
நான் ஒரு சிறுவனைக்கொண்டு கயிறுசார்த்தச் செய்து, புஸ்தகத்தைப் பிரித்தேன். சென்ற துர்மதி வருடம் பங்குனி மாதம் பதிப்பிக்கப்பெற்ற அப்பழம்புஸ்தகத்தில் 160-ஆம் பக்கம் கிடைத்தது. ‘வேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படல’மாக இருந்தது அப்பகுதி. சில முனிவர்கள் வேதத்தின் பொருள் தெரியாது மயங்கி மதுரைக்கு வந்து அங்கே எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தியைப் பணிந்து தவம்புரிய, அவர் எழுந்தருளி வந்து வேதப்பொருளை விளக்கி அருளினாரென்பது அப்படல வரலாறு. நான் பிரித்துப் பார்த்த பக்கத்தில், தக்ஷிணாமூர்த்தி ஓர் அழகிய திருவுருவமெடுத்து வருவதை வருணிக்கும் பாடல்கள் இருந்தன. அந்தப் பக்கத்தின் அடியில் 23 என்னும் எண்ணுடைய செய்யுளை நான் பார்த்தேன். “என் உள்ளக் கருத்து நிறைவேறுமா, நிறைவேறாதோ” என்ற பயத்தோடு நான் மெல்லப் புஸ்தகத்தைப் பிரித்தேன். பிரிக்கும் போதே என் மனம் திக்குத்திக்கென்று அடித்துக்கொண்டது. நல்ல பாடலாக வரவேண்டுமே!’ என்ற கவலையோடு அப்பக்கத்தைப் பார்த்தேன்.
“சீதமணி மூரல்திரு வாய்சிறி தரும்ப
மாதவர்கள் காணவெளி வந்துவெளி நின்றான்
நாதமுடி வாயளவி னான்மறையி னந்தப்
போதவடி வாகிநிறை பூரணபு ராணன்”
என்ற பாட்டைக் கண்டேனோ இல்லையோ எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. என் கண்களில் நீர் துளித்தது. மிகவும் நல்ல நிமித்தம் உண்டாகிவிட்டது. ஒரு குருவை வேண்டி நின்ற எனக்கு, தக்ஷிணாமூர்த்தியாகிய குருமூர்த்தி வெளிப்பட்டதைத் தெரிவிக்கும் செய்யுள் கிடைத்ததென்றால், என்பால் பொங்கிவந்த உணர்ச்சிக்கு வரம்பு ஏது? “கடவுள் எப்படியும் கைவிடார்” என்ற நம்பிக்கை உதயமாயிற்று. “மதுரை மீனாட்சிசுந்தரக் கடவுள் முனிவர்களுக்கு அருள் செய்தார். எனக்கும் அந்தப் பெருமான் திருநாமத்தையுடைய தமிழாசிரியர் கிடைப்பார்” என்ற உறுதி உண்டாயிற்று.
என் தந்தையார் பூஜையிலுள்ள மூர்த்தியும் ஸ்ரீ மீனாட்சிசுந்தரக் கடவுளே என்ற நினைவும் வந்து இன்புறுத்தியது. உவகையும் புதிய ஊக்கமும் பெற்றேன். இந்நிகழ்ச்சியை என் தந்தையாரிடம் கூறினேன். அவரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்.
கயிறு சார்த்திப் பார்த்ததில் மீனாட்சி சுந்தரக் கடவுள் பெயருடைய ஒருவர் ஆசிரியராகக் கிடைப்பார் என்று உ.வே.சாமிநாதையருக்குச் செய்தி வந்தது.
அதன்படியே நடந்தது.
மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையா ஆசானாகக் கொள்ளும் பெரும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது.
குருவை ஒருநாளும் அவர் மறந்தாரில்லை.
அவரது சரித்திரத்தையே அழியாத இலக்கியமாக அவர் இயற்றி விட்டார்.
இதே போல மேலை நாட்டிலும் ஏன் உலகெங்குமே கிறிஸ்தவர்கள் சிலரிடமும் ஒரு பழக்கமுண்டு. அவர்கள் தெய்வீக நூலாகக் கருதும் பைபிளில் கயிறு சார்த்திப் பார்ப்பது அவர்களின் வழி.
இது Bibliomancy Oracle என்று கூறப்படுகிறது.
இதைப் பற்றி அடுத்துப் பார்ப்போம்.
Old Articles from our blog
ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி …
tamilandvedas.com › 2020/04/22
22 Apr 2020 – … ஒரு திருடன் என்று அர்த்தம்; சம்ஸ்க்ருதத்தில் ‘கயிறு நீளம்’ என்றால் ஆள் படு சோம்பேறி என்று அர்த்தம். … tamilandvedas.com › tag › கோழ…
மணல் ஜோதிடம் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › மணல…
7 Oct 2017 – திருக்கோவையார். More ASTROLOGY Articles in my blog. ஜோதிடம்| Tamil and Vedas. tamilandvedas.com/tag/ஜோதிடம். Posts about ஜோதிடம் written … ஒரு கயிறு அல்லது …
Astrology | Tamil and Vedas | Page 9
tamilandvedas.com › astrology-2 › p…
7 Oct 2017 – tamilandvedas.com/tag/ஜோதிடம். Posts about ஜோதிடம் written … ஒரு கயிறு அல்லது நூலை … go to tamilandvedas.com OR … வேதத்தில்ஜோதிடம் | Tamil and Vedas.
Tamil Astrology: Rope Trick for Predictions! | Tamil and Vedas
tamilandvedas.com › 2013/02/27 › t…
27 Feb 2013 – Tamil Astrology: Rope Trick for Predictions! Tamils have novel ways of predicting your future. They listen to lizards and predict what is going to …
ROLE OF PADDY PLANTS IN TAMIL ASTROLOGY (Post No …
tamilandvedas.com › 2018/04/05 › role-of-paddy-plant…
5 Apr 2018 – tamilandvedas.com/tag/நாடி… Posts about நாடி ஜோதிடம் written byTamil and Vedas. Tamil Astrology: Rope Trick for …
Tamil astrology | Tamil and Vedas
tamilandvedas.com › tag › tamil-astrology
Posts about Tamil astrology written by Tamil and Vedas. … Some time ago I wrote about Tamil’s Rope Trick astrology. Like orthodox Hindus find some answer by …
Astrology: Tamil’s Strange Prediction … – Swami’s Indology Blog
swamiindology.blogspot.com › 2017/10 › astrology-ta…
7 Oct 2017 – Some time ago I wrote about Tamil’s Rope Trick astrology. Like orthodox Hindus find some … https://tamilandvedas.com/tag/bird-predictions/. 1.
tag- கயிறு சார்த்திப் பார்த்தல்
