காஷ்மீர், நமது காஷ்மீர், நடப்பது என்ன? நல்லவை தான் நடக்கிறது! (9867 Post)

கர்னல் ஷெராக் (Col Sherag) தெரிவிக்கிறார்:-

01)   1.5 லக்ஷம் ஹிந்து-சீக்கிய குடும்பங்கள் ஜம்மு-காஷ்மீரில் குடியிருப்போராக ஆகி விட்டனர்.

02)     உமர் அப்துல்லா, மெஹ்பூபாவிகு வழங்கப்பட்ட சலுகைகள்/வசதிகள் நீக்கப்பட்டு விட்டன.

03)     ஜம்மு காஷ்மீர் நேஷனல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மீதும் காஷ்மீர் கட்டுப்பாடுகள் விதிப்பது நீக்கப்பட்டது.

04)     ஹிந்து புனிதத்தலங்களின் மீதான காஷ்மீரின் கட்டுப்பாடு நீங்கியது.

05)     1990இல் ஹிந்துக்கள் காஷ்மீரில் விட்டு விட்ட சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளோரின் மீது, தானாகவே நடவடிக்கை எடுக்க அதற்குரிய அதிகாரமையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06)     ஜம்முகாஷ்மீரில் உள்ள அனைத்து கோல்ஃப் மற்றும் இதர கிளப்புகளின் மீதான கட்டுப்பாடை காஷ்மீர் இழந்தது.

07)     பல்கலைக் கழக விஷயங்களில் காஷ்மீர் முதல் அமைச்சரின் பங்கு இனி இருக்கவே இருக்காது.

08)     தேச விரோதிகளுக்கு ஜம்முகாஷ்மீரில் 42 வருடங்களுக்கு முன்னர் தரப்பட்டிருந்த சட்டரீதியான பாதுகாப்பு நீக்கப்பட்டது.பப்ளிக் சேஃப்டி ஆக்ட், 1978இன் படி நடவடிக்கைக்கு உள்ளாகியிருப்போர் ஜம்மு காஷ்மீருக்கு வெளியிலும் கூட எந்தச் சிறையிலும் இனி அடைக்கப்படலாம்.

09)     ஜம்முவிலிருது அரசு அலுவலகம் இனி காஷ்மீருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஜம்முவிலிருந்தே செயல்படலாம். (ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த அலுவலகம் -பைல்கள் உட்பட- காஷ்மீருக்கு மாறுவது வழக்கம்)

10)     பரூக், உமர், ஆஜாத், மெஹ்பூபா உள்ளிட்ட பழைய முதல் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள், வசதிகள் நீக்கப்பட்டன. இதில் குடியிருப்பு, வாகனங்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.

11)     அனைத்து பல்கலைக்கழகங்களும் இனி நியூ டெல்லியின் கட்டுப்பாட்டுக்கு வந்து விட்டன. இங்குள்ள பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் காஷ்மீரை மையமாகக் கொண்டிருப்பது இனி இல்லை. மாற்றப்படலாம்.

12)     தர்மாத் ட்ரஸ்டின் கட்டுப்பாட்டிலோ அல்லது அந்தத் தலத்திற்கான தல வாரியத்தின் கட்டுப்பாட்டிலோ இதுவரை ஹிந்து புனிதத் தலங்கள் இருந்தன.இனி இந்த வாரியங்கள் நியூ டெல்லியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும்.

13)     ஜம்மு காஷ்மீர் வக்ஃப் போர்ட் கூட நியூ டெல்லியினால் எடுக்கப்பட்டு விட்டது. அதன் முழு சொத்துக்கள் இதுவரை காஷ்மீர் முஸ்லீம்களின் நன்கொடைகளால் உருவாக்கப்பட்டிருந்தன. இனி நியூ டெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் இவை வரும்.

14)      பண்டிட்களிடமிருந்து வாங்கப்பட்ட சொத்துக்களைக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களை வெளியேற்ற உள்ளூர் நிர்வாகத்திற்கு நியூ டெல்லி அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதற்கான விற்பனைப் பத்திரங்கள் செல்லாது என அறிவிக்கப்படலாம்.

15)     கோல்ஃப் மைதானங்கள் மட்டுமல்ல, அனைத்து காட்டு நிலங்களும் கூட நியூ டெல்லியின் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது. டூரிஸ்ட் டெவலப்மெண்ட் அதிகாரிகளும் இனி டெல்லியின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பர். இந்தியாவிலிருந்தே இனி நிலங்களை லீசுக்கு விடலாம். வசதிகளை யாருக்கும் தரலாம்.

16)     முன்பிருந்ததைப் போல் அல்லாமல் ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி வாரண்ட் ப்ரெஸிடென்ஸில் (Warrant of Precedence) 15ஆம் நிலைக்கு இறக்கப்பட்டிருக்கிறார்.

17)     ஜம்மு காஷ்மீர் முதன்மந்திரியினால் பல்கலைக்கழக போர்ட் மற்றும் வக்ஃப் போர்டுக்கு செய்யப்பட்ட நாமினேஷன்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டன.

18)      அனைத்து காஷ்மீர் ஐஏஎஸ் அதிகாரிகளும் குறைந்த முக்கியத்துவம் கொண்டுள்ள நிலைகளில் வைக்கப்பட்டதோடு, உள்ளூர் வாசிகள் அல்லாத அதிகாரிகள் நிர்வாகத்தை இயக்க ஜம்முவிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

19)     ஆயிரக்கணக்கான லேண்ட் பேங்குகள் (Land Banks of thousands of Kanals) இந்த மாநிலம் சாராத மற்றவருக்கு ‘Investment and Industry’ என்ற பெயரில் தரப்படும்.

நமது MHA (Ministry of Home Affairs) அதிக விளம்பரப்படுத்தாமல் ஆர்ப்பாட்டமின்றி, ஓசையின்றி இவை அனைத்தையும் அமுல் படுத்தியுள்ளது.

       சாதனை தான்!

***

INDEX

ஜம்மு காஷ்மீர் சட்டங்களில் மாற்றம்.

19 மாற்றங்களின் பட்டியல்

ஜம்மு காஷ்மீர் பாரதத்தின் முழுமையான பகுதியான ஆகி விட்டதற்கான சான்றுகள்!

Source and Thanks to Truth Vol 89 No 12 Dated 2-7-2021 – https://m.facebook

Tags- ஜம்மு ,காஷ்மீர், மாற்றம்

இயேசு இறந்தது காஷ்மீரிலா? -1

jesus 1

இயேசு மரணம் பற்றிய ஆய்வு

இயேசு இறந்தது காஷ்மீரிலா?! -1

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by S NAGARAJAN

Date: 24 September 2015

Post No: 2184

Time uploaded in London :– 8-07 am

(Thanks  for the pictures) 

 

.நாகராஜன்

jesus 2

பியர்ஸ் ஜெர்விஸ்: இயேசு இந்தியா வந்தார்

இயேசுவின் மறைவு குறித்துக் காலம் காலமாக ஏராளமான புத்தகங்கள் வெளியாகி வந்துள்ளன. வெளியாகி வருகின்றன.

இந்தப் புத்தகஙள் அனைத்துமே  ஏராளமான ஆதாரங்கள் பலவற்றைத் தருவதால் தான் இந்த விஷயம் குறித்து அனைவரும் ஆவலுடன் இன்று வரை படிக்கின்றனர்.

‘Naked They Pray’ என்ற புத்தகத்தை Pearce Gervis என்பவர் எழுதியுள்ளார். கங்கை நதிப் பகுதியில், கங்கையில் சுற்றி வர நீர் ஓட நடுவில் தீவு போன்ற ஒரு பகுதியில் ஏராளமான சாதுக்களைத் தான் கண்டதாகவும் அவர்களில் பலர் ஆயிரம் வருஷங்களுக்கு மேல் வாழ்ந்து வருவதாகவம், தான் சந்தித்த ஒருவர் பல நூறுஆண்டுகள் வயதானவர் என்று அவர் குறிப்பிடுகிறார்.

அவர் இயேசுவைப் பற்றித் தனது புத்தகத்தில் 72ஆம் பக்கத்தில் குறிப்பிடுவது  இது:-

“I know that there was a belief, now among many peoples, that Jesus Christ, between the age of twelve and twenty-nine was in India, his years there being recorded in Hindu and Buddhist Shastras as well as in certain Yoga manuscripts; that he went to Puri, to South India, and Banares to study the Vedas and Laws of Manu, to the Himalayas where it is said that he studied in the solitary places the different paths of liberation, the art of contemplation and meditated there until found the perfect realization of this oneness with GOD.”

இயேசு கிறிஸ்து இந்தியா வந்ததை இது போன்ற பல நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆன்மீக பொக்கிஷங்களை இங்கிருந்து அவர் அள்ளிச் சென்றதும் தெளிவாகிறது.

பியர்ஸ் ஜெர்விஸ் மட்டுமல்ல, இன்னும் பல ஆராய்ச்சியாளர்கள் இயேசுவின் இந்திய வருகை பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்!

jesus 3

 நிகோலய் நோடோவிச்சின் ஆய்வு

நிகோலய் நோடோவிச் (Nicolai Notovich)  என்ற ரஷியர் இந்திய இயல் பற்றி ஆராய்ந்த ஒரு ஆராய்ச்சியாளர். தன் ஆய்வுகளுக்காகப் பல முறை அவர் இந்தியா வந்துள்ளார். 1887ஆம் ஆண்டு அவர் இந்தியா வந்த போது ஜோஜி-லா (Zoji la pass) கணவாயில் புத்த மடாலயம் ஒன்றில் விருந்தாளியாகத் தங்கினார். அங்கிருந்த புத்த குரு ‘ஈசா’ வைப் பற்றிய பல விவரங்களைத் தந்தார். பைபிள் சொல்வதும் இந்து மதம் உபதேசிக்கும் கருத்துக்களும் ஒன்றாக இருப்பதைக் கண்ட அவர் ஈசா என்பது இயேசு என்பதை ஊகித்து மேற்கொண்டு ஆராயலானார்.

16 ஆண்டுகள் மேரியுடன் இயேசு கிறிஸ்து, துருக்கி, பாரசீகம், மேற்கு ஐரோப்பா, (ஒருவேளை இங்கிலாந்திலும் கூட), பயணப்பட்டு காஷ்மீருக்கு அருகில் உள்ள ஒரு இடத்தை வந்தடைந்தார்.அங்கு மேரி மரணமடைந்தார். காஷ்மீரிலேயே வாழ்ந்த இயேசு மக்களுக்கு நல்வழி போதித்தார்; அங்கேயே மரணமடைந்தார்.

சிலுவையில் அறைந்த பிறகு உயிர் பிழைத்த இயேசு நிஸிபிஸ் அரசாங்க அழைப்பை ஏற்று நிஸிபிஸுக்கு வந்ததாக பாரசீக அறிஞரான எஃப் முகம்மது (F.Mohammed) தனது நூலான ஜமி-உத்-டுவாரிக் (Jami-ut-tuwarik) என்ற நூலில் தெரிவிக்கிறார். இந்த இடம் துருக்கியில் நுசேபின் (Nusaybin(( என்று அழைக்கப்படுகிறது. இதே கருத்தை இமாம் அபு ஜஃபார் முகம்மத் என்பவர் தனது டஃப்ஸி- இபின் – இ – ஜமீர் –அட் – டுப்ரி (Tafsi-Ibn_i-Jamir-at-tubri) என்ற நூலில் வலியுறுத்துகிறார்.

இந்தக் கருத்துக்கள் சரிதானா என்பதைப் பலரும் ஆராயப் புறப்பட்டனர்.

jesus 4

ஜெர்மானியர் கெர்ஸ்டனின் நூல்

ஹோல்ஜெர் கெர்ஸ்டென் (Holger Kersten) என்பவர் ஒரு ஜெர்மானியர். இவர் ஜெர்மானிய மொழியில் ‘Jesus Lived in India’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இதில் முகம்மது மற்றும் அபு ஜஃபார் முகம்மத் ஆகிய இருவரின் கருத்துக்களும் சரியே என்று அவர் கூறுகிறார். துருக்கியிலும் பாரசீகத்திலும் கூறப்படும் ‘யுஸ் ஆஸப்‘ தான் இயேசு என்று கெர்ஸ்டன் தன் ஆய்வில் கண்டுபிடித்தார்.

மேலும், இயேசு காஷ்மீருக்கு வந்து பல காலம் வாழ்ந்து அங்கேயே மரணமடைந்தார் என்றும் கெர்ஸ்டன் கூறுகிறார்.

இப்படிப் பல ஆய்வாளர்கள் இயேசு காஷ்மீரில் இறந்தார் என்று கூறும் போது இயேசு இறந்த இடம் பற்றிய குறிப்பு ஏதாவது உள்ளதா என்ற சுவாரசியமான கேள்வி எழும்புகிறது.

இயேசு கிறிஸ்துவின் கல்லறையையே கண்டு பிடித்து விட்டோம் என்றார் இன்னொரு ஆய்வாளர்.

இன்றும் அந்தக் கல்லறை இருக்கிறது. அது பற்றி இன்னொரு கட்டுரையில் காண்போம்.

*******************