ஹிந்து விரோதிகள் ஜாக்கிரதை! (Post No.8561)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8561

Date uploaded in London – – –24 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்து விரோதிகள் ஜாக்கிரதை!

ச.நாகராஜன்

அப்பாவி ஒருவன் கிடைத்தால் போகிறவன் வருகிறவன் எல்லாம்

அவன் தலையில் ஒரு ‘போடு போட்டு விட்டுப்’ போவார்கள்!

ஹிந்து  மதமும் அதைப் பின்பற்றும் ஹிந்துக்களும் அஹிம்ஸாவாதிகள்.

அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், இது தான் வெறி பிடித்த கிறிஸ்தவ பாதிரிமார்களும், தீவிர வாதிகளும், கம்யூனிஸ்டுகளும், தேச, ஹிந்து துரோகிகளும் துணிந்து எடுத்த முடிவு.

இவர்கள் எந்த ரூபத்தில் எப்படி வருவார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது.

நகரத்தின் நடுவில் பிரமாதமாக கண்காட்சி நடத்துவார்கள். அதில் நடுவில் ஒரு ஸ்டாலில் ஹிந்து தெய்வங்களை இழிவு படுத்துவார்கள்.

சரஸ்வதி தேவி நிர்வாணமாக இருப்பாள். சிவன் சூலாயுதத்தால் யாரையோ குத்துவான்.

திடீரென்று ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகும். அதில் ஹிந்துக்கள் முட்டாள்கள் என்று ‘அபூர்வ முடிவு’ தெரிவிக்கப்படும்.

திடீர் திடீரென்று அபூர்வமான ஆய்வு முடிவுகள் சோஷியல் மீடியாக்களின் வாயிலாக ‘அறிஞர்கள்’ மூலமாக ‘தெரிவிக்கப்படும்’!

அதில்  கிருஷ்ணன் ஒரு உதவாக்கரை, ராமர் ஒரு பத்தாம்பசலி என்றெல்லாம் ‘ஆதாரபூர்வமாக’ அறிவிக்கப்படும்!

இதற்கு கணினியில் உள்ள டிசைன் உத்திகள் அனைத்தும் உதவிக்கு வரும்.

இன் டிஸைன், போட்டோ ஷாப், கோரல் ட்ரா – இத்யாதிகள் அனைத்தும் பயன்படுத்தப்படும்!

அசந்து போவோம்.

அடடா, கிருஷ்ணன் பிறந்த தேதி விநாடி சுத்தமாக துல்லியமாக சொல்லப்படும்.

ராமர் அயோத்தியை விட்டு வெளியேறிய நேரம், திரும்பி உள்ளே வந்த நேரம் எல்லாம் அந்த சார்ட்டில் அத்துபடியாகத் தெரிந்த இவர்களால் சித்தரிக்கப்படும்.

பிரமிப்போம்.

அந்த சார்ட், அட்டவணை ஊடே விஷக் கிருமிகளை – விஷக் கருத்துக்களை இவர்கள் ‘தூவி’ விட்டிருப்பார்கள்.

நல்ல ஆய்வு மனப்பான்மை கொண்ட சிறந்த ஹிந்துக்கள் கூட ஏமாந்து போவார்கள்.

அந்த சோஷியல் மீடியா செய்திகளைப் பரப்புவார்கள்.

சமீபத்தில் எனக்கு கிருஷ்ணரைப் பற்றிய 44 செய்திகள் இப்படித்தான் அபூர்வமான ஒரு ‘அயோக்கிய புத்திசாலியால்’ பரப்பப்பட்டு வந்து சேர்ந்தது.

அதில் கிருஷ்ணரைப் புகழ்வது போலவும் அவரது அத்யந்த பக்தர் தொகுத்தது போலவும் அலங்காரங்கள் இருந்தன! கீழே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்று  செய்தித் தொகுப்பு முடிந்தது!

அடடா, என்ன கிருஷ்ண பக்தி!

இவர் சொல்வது அனைத்தும் உண்மையாகத் தான் இருக்கும் என்று எண்ணி அதை நம் குழந்தைகளுக்கும் சொல்லித் தந்து விடுவோம்.

நச்சுக் கருத்துக்கள் விஷம் போல ஹிந்து சமுதாயத்திற்குள் ஊடுருவி விடும்.

இது ஒரு புது டெக்னிக்!

சமீபத்தில் வந்த 44 ‘அபூர்வமான ஆய்வுக் கருத்துக்களில்’ 41 வது கருத்து இது:-

41) He never did any miracles. His life was not a successful one. There was not a single moment when he was at peace throughout his life. At every turn, he had challenges and even more bigger challenges. 

41) அவன் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. அவனது வாழ்வு வெற்றிகரமான ஒன்று அல்ல. அவனது வாழ்வில் ஒரு கணம் கூட அவன் நிம்மதியாக இல்லை. ஒவ்வொரு கணமும் அவனுக்கு ஏராளமான சவால்கள் இருந்தன, இன்னும் அதிகமதிகம் பெரிய சவால்கள் இருந்தன.

கிருஷ்ணர் வெற்றிகரமான புருஷர் இல்லையா?!

கிருஷ்ணர் அவதார புருஷர்!

அவரது கீதையை உலகமே போற்றி வியக்கிறது.

வாரன் ஹேஸ்டிங்ஸ் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஒருவேளை ஓர் நாள் அழியக் கூடும்! ஆனால் கீதை ஒரு நாளும் அழியாது என்றார்.

தோரோ கீதை படிக்காமல் இருந்ததே இல்லை.

ஐன்ஸ்டீன் அலமாரியில் கீதை  இருந்தது.

நேதாஜி விபத்துக்குள்ளான விமானத்தில் ஏறும் போது கூட கீதையை எடுத்து வைத்துக் கொண்டார்.

விவேகானந்தர் கீதையைத் தான் தன்னுடன் அமெரிக்கா கொண்டு சென்றார்.

ஸ்வாமி ராமதீர்த்தர் கையில் காசில்லாமல், அமெரிக்காவில் அறிமுகம் செய்யக் கூட ஒருவரும் இல்லாத நிலையில் கப்பலில் செல்லும் போது அவர் கையில் இருந்த ஒரே துணை கீதை தான்!

ஸ்வாமி துரியானந்தர் – ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடர் – கீதையை தினமும் முழுதும் படிக்காமல் உணவு அருந்த மாட்டார்.

மஹாத்மா காந்திஜி தனக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் அதற்குத் தீர்வு காண கீதையை நாடி அதிலிருந்து தீர்வு கண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

வினோபா பாவே கீதையை உயிர்நாடியாகப் போற்றினார்.

தேசபக்தர் சத்தியமூர்த்தி தினமும் கீதையைப் படிப்பார்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கு ஒரு முடிவே இருக்காது.

எங்கு கிருஷ்ணன் இருக்கிறாரோ அங்கே ஜயம்! வெற்றி!

யதோ கிருஷ்ண ததோ ஜய:

ஆனால் ‘ஆராய்ச்சி தடியனின்’ ஆய்வு முடிவின் படி – His life was not a successful one! அடடா, என்ன முடிவு!

நச்சுக் கருத்தை நைஸாக உள்ளே நுழைக்கிறான் பாருங்கள்.

அது மட்டுமல்ல இந்த தடியனின் ஆய்வுக் கருத்துக்களில் திரு சுவாமிநாதன் கண்டு பிடிக்கும் பிழைகள் ஏராளம்!

உதாரணத்திற்குச் சில :

lot of factual errors.

LOT OF CONTRADICTIONS

KRISHNA’S  NAVAL ATTACK,, KRISHNA’S CAPITAL SHIFTING 800 MILES AWAY FROM MATHURA,

JAYADRATHA’S DEATH ON SOLAR ECLIPSE DAY ARE FROM MY THREE ARTICLES.

BUT SOLAR ECLIPSE DATE IS WRONG. IF EKADASI FALLS ON 8TH DECEMBER THERE CAN’T BE AN ECLIPSE ON 21ST DECEMBER.

SOLAR ECLIPSE CAN HAPPEN ONLY ON AMAVASYA DAY. IT CANT BE 21 DEC.

HE KILLED ONLY FOUR PEOPLE IS ALSO ABSURD. EVEN CHILDREN’S BOOKS AND BHAJAN SONGS HAVE ALL THE ASURA NAMES.

MATTER ABOUT HIS SCHOOLING AGE, DATE OF TSUNAMI ATTACK ON DWARAKA  AND SO MANY OTHERS HAVE NO BASIS.

HE HAS CLOTHED ALL WRONG INFORMATION IN A FACT LOOKING FAKE CAPSULE.

எல்லா தப்புத் தகவல்களையும் தந்த ‘தடியன்’ இறுதியாக கிருஷ்ணரை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லி ‘நல்ல பெயரை’ – சரியான ஆய்வாளராகத் தன்னை – காப்பாற்றிக் கொள்கிறான்.

இப்படிப்பட்ட ‘கருத்துக் கருவூலங்கள்’ வந்தால் யாருக்கும் அனுப்பக் கூடாது; சோஷியல் மீடியாக்களில் பகிரக் கூடாது.

மாறாக அனுப்பியவருக்கு உடனடியாக கண்டனத்தை அனுப்பி அதைப் பதிவு செய்ய வேண்டும்.

ஏராளமான சார்ட்டுகள், விசேஷ படங்கள் – இவை எல்லாம் ஃபேக்! (Fake)

இந்த ஹிந்து விரோதிகளின் நவீன டெக்னிகல் தாக்குதலையும் நாம் எதிர்கொள்வோம்; அவர்களை ஓட ஓட விரட்டுவோம் – உண்மைச் செய்திகளைப் பரப்பி!

ஹிந்துக்களே ஒன்று சேருங்கள்.

விவேகானந்தர் நமக்கு அருளிய தாரக மந்திரம் : எழுமின்! விழிமின்!!

(Arise! Awake!!)

tags- ஹிந்து விரோதிகள் ,ஜாக்கிரதை,கிருஷ்ணன்

***