All posts tagged போகுமிடம் வெகு தூரம்

Written by S Nagarajan
Date: 23 November 2018
GMT Time uploaded in London –6-13 am
Post No. 5690
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
ஆங்கில இலக்கியம்
போகுமிடம் வெகு தூரம்! போக வேண்டும் நெடு நேரம்!!
ச.நாகராஜன்
போகுமிடம் வெகு தூரம்!
போக வேண்டும் நெடு நேரம்!!
எத்தனை அற்புதமான வரிகள், பாருங்கள்!
Miles to go before I sleep என்ற அற்புதமான சொற்றொடரை ‘Stopping by Woods on a Snowy Evening’ என்ற கவிதையில் தந்தவர் அமெரிக்க கவிஞரான ராபர்ட் ஃப்ராஸ்ட். (Robert Frost)
ராபர்ட் ஃப்ராஸ்ட் (பிறப்பு 26-3-1874 மறைவு 29-1-1963) அமெரிக்காவில் சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் பிறந்தார். அவரது தந்தை ஒரு ஆசிரியர்;- பின்னர் அவர் ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும் ஆனார்.
இயற்கையிலேயே கவிதை இயற்றும் ஆற்றல் அவருக்கு இருந்தது. அமெரிக்க நாட்டுப்புற மொழியில் வல்லுநராக அவர் திகழ்ந்தார்.

Miles to go before I Sleep என்ற வரி வரும் Stopping by Woods on a Snowy Evening என்ற கவிதை 1921ஆம் ஆண்டு வாக்கில் இயற்றப்பட்டது.
குதிரையில் பயணிக்கும் பயணி ஒருவர் கூறுவது இது.
இதை விமரிசிக்கும் இலக்கிய விமரிசகர்கள் இது மரணத்திற்கு முன் தெரிவிக்கும் ஆசை போல என்கின்றனர். Sleep என்ற சொல் இங்கு மரணத்தைக் குறிக்கிறது என்பது அவர்களின் எண்ணம்.
ஆனால் பலரோ இது வாழ்க்கையின் லட்சியத்தை நிர்ணயித்து அதை அடையத் துடிக்கும் வாழ்க்கைப் பயணியின் அற்புதமான கூற்று என்கின்றனர்.
ஜவஹர்லால் நேரு முதல் உலகின் அறிஞர்களும் சாமான்யரும் இலக்கிய ஆர்வலர்களும் விரும்பிப் படித்து மேற்கோள் காட்டும் கவிதை இது:
Stopping by Woods on a Snowy Evening
ROBERT FROST
Whose woods these are I think I know.
His house is in the village though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.
My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.
He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound’s the sweep
Of easy wind and downy flake.
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep
எனது லட்சியம் நிறைவேற போகவேண்டும் நெடு நேரம்; ஏனெனில் அதை அடைய நான் செல்ல வேண்டிய தூரம் வெகு தூரம். செல்ல வேண்டிய பாதையோ அடர்ந்த காரிருள் நிறைந்த காட்டு வழி.
உலகத்தினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட கவிதா வரிகள்!

ஜான் கென்னடி தனது பதவியேற்பு விழாவின்போது கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்டை அழைத்து கவிதை பாட வைத்தார். 1961ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் நாள் நடந்த அந்த விழாவின் போது அவருக்கு வயது 86. அந்த விழாவிற்கென ஃப்ராஸ்ட் Dedication என்ற கவிதையை பிரத்யேகமாக எழுதினார். விழா நடந்த அன்று சூரிய ஒளியில் அதைப் படிக்க மிகவும் கஷ்டப்பட்டார். கடைசியில் மனப்பாடமாக இருந்த The Gift Outright என்ற கவிதையை நினைவிலிருந்து பாடி விட்டார்.
போஸ்டனில் 1963 ஜனவரி 29ஆம் நாள் அவர் மறைந்தார். அவரது கல்லறையில் எழுதப்பட்ட வாசகம் : “ I had a lover’s quarrel with the world.”
அவரது கவிதையில் இன்னொரு அழகிய கவிதை – The Road Not Taken.
The Road Not Taken
ROBERT FROST
Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;
Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;
Though as for that the passing there
Had worn them really about the same,
And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I kept the first for another day!
Yet knowing how way leads on to way,
I doubted if I should ever come back.
I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I—
I took the one less traveled by,
And that has made all the difference.
இந்த அழகிய கவிதையில் வரும் வார்த்தைகளை வைத்து அநேகமாக ஒவ்வொரு ஆங்கிலப் பத்திரிகையிலும் The Road less Traveled என்ற தலைப்பில் நிச்சயமாக ஒரு கட்டுரை வந்திருக்கும்.
இரு நண்பர்கள் ஒரு சாலை வழியே செல்கின்றனர். பாதை இரண்டாகப் பிரிகிறது. ஒன்று கரடுமுரடானது. யாரும் அதிகமாகச் செல்லாதது. இன்னொன்று வழவழ என்று இருக்கிறது. கல், முள் இல்லை. அனைவரும் அதிகமாகப் பயன்படுத்தும் பாதை.
நண்பர் நல்ல பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்.
ஆனால் ஃப்ராஸ்ட் எதைத் தேர்ந்தெடுக்கிறார்?
‘ குறைந்த பேர்கள் தேர்ந்தெடுத்த அந்தப் பாதையை நான் தேர்ந்தெடுத்தேன்; அதுவே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது’ என்கிறார்.
அருமையான இந்தக் கவிதை உலகில் ஏராளமான பேர்களின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரடுமுரடான வழியாக இருப்பினும் லட்சியத்தை நோக்கி அது செல்லும் எனில் அதையே தேர்ந்தெடுப்போம் என்பதே லட்சியவாதிகளின் எண்ணம்.பட்டப்படிப்பு முடிக்கும் பட்டதாரிகள் புதிய வழியில் செல்வோம் என உறுதிமொழி எடுக்க
இந்தக் கவிதை தான் தூண்டியது.
ஆனால் உண்மையில் ஃப்ராஸ்ட் இதை ஒரு ஜோக் கவிதையாகத் தான் எண்ணி எழுதினார். தனது நண்பரைக் கேலி செய்ய அவர் எழுதிய கவிதை தான் இது. அவர் நண்பர் எட்வர்ட் தாமஸ் அடிக்கடி நடைப்பயிற்சியை மேற்கொண்டு அவருடன் நடந்து செல்வது வழக்கம். தாமஸுக்கு எப்போதுமே எந்த வழியைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு தயக்கம் இருக்கும். ஒரு வழியை அவர் தேர்ந்தெடுத்த பின்னர், அட, அடுத்த வழியில் போகாமல் விட்டு விட்டோமே என அங்கலாய்ப்பது வழக்கம். அதற்காக எழுதிய இந்தக் கவிதையை அனைவரும் லட்சியக் கவிதையாகப் பார்த்ததைக் கண்டு ஃப்ராஸ்டுக்கு வியப்பு மேலிட்டது. இது மன உறுதிக்கான ஒரு உருவகக் கவிதை என அனைவரும் சொல்ல, தாமஸிடம் ஃப்ராஸ்ட், “ சும்மா விளையாட்டுக்காக அதை எழுதினேன் என்றாலும் கூட அதை அனைவரும் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு விட்டனர்”, என்று கூறினார்.
படிப்பவர்களுக்கு உத்வேகம் ஊட்டும் கவிதை அல்லவா இது!
எனக்கும் தான்:-
“போகுமிடம் வெகு தூரம்
போக வேண்டும் நெடு நேரம்
போகும்வழி முள்பாதை
போகாதோர் பலர்பாதை
நோகுமிடம் உடலெல்லாம்
நோகாது என் உறுதி
ஆகும் ஆசை முடியட்டும்
அற்புதமாய் அமையட்டும்”
Posted by Tamil and Vedas on November 24, 2018
https://tamilandvedas.com/2018/11/24/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95/