
Written by S NAGARAJAN
Date: 24 December 2015
Post No. 2419
Time uploaded in London :– காலை 5-19
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
உலகப் போக்கு
First part of this article was published yesterday.
முஸ்லீம்களே, உணர்வீர்களா, உலகப் போக்கை!- 2
ச.நாகராஜன்
சென்ற கட்டுரையில் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு எதிராக ஸ்விட்சர்லாந்து எடுத்த தீவிர நடவடிக்கையின் முதல் படியைப் பார்த்தோம். உலக நாடுகள் கடைசி கடைசியாக ஒன்று சேர்ந்து முஸ்லீம்களின் தீவிரவாதப் போக்கைத் தடுத்தே நிறுத்துவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு விட்டன. அப்பாவிகளை கொன்று குவிக்கும் அராஜகத்தை யார் தான் விரும்புவர்?
நவம்பர் மாதம் ஜனவரி மாதம் அல்ல என்பதை பிரான்ஸ் இப்போது உணர்த்தி விட்டது – முஸ்லீம்களுக்கு!
ஜனவரி 2015-இல் சார்லி ஹெப்டோ (Charlie Hebdo) பத்திரிகை அலுவலகம் உள்ளிட்ட இதர இடங்களில் முஸ்லீம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 அப்பாவிகள் உயிரை இழந்தனர். ஆனால் அப்போது பிரெஞ்சு ஊடகங்களும் மக்களும் வெகுவாக இதைக் கண்டிக்கவில்லை. வெகுஜன எழுச்சி ஏற்படவில்லை. ஆனால் இப்போது பாரிஸில் நடந்த அக்கிரமத்தால் 129 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை (13-11-15) அன்று நடந்த தாக்குதல் உலக மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டுள்ளது.
இந்த முஸ்லீம்களிம் தீவிரப் போக்குக்கு ஒரு முடிவு கட்ட வேண்டிய கடைசித் தருணம் வந்து விட்டதாக பிரான்ஸ் முடிவு செய்தது. மிகவும் கவலையுடன் கூடிய செழுமையான கோபத்துடன் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி பிரான்ஸ்வா ஒலாந்தே (Francois Hollande) பாராளுமன்றம் அவசரநிலை பிரகடனத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஒரு படி மேலே போய் முஸ்லீம்களின் தீவிரவாதத்தைக் கடுமையாக ஒழித்துக் கட்ட அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வெளிப்படையாக வார்த்தை ஜாலங்களால் தன் உணர்வை அவர் வெளிப்படுத்தவினல்லை தான்! என்றாலும் அவர் மனம் உணர்த்த விரும்பிய செய்தி தெளிவானது.

Picture: Posted by Ramesh Kumar on face book; Sathya Sai Educational institutes, Bhadravathi .
மத சார்பற்ற செகுலர் ஃபிரான்ஸ் ஒரு சிக்கலான உறவைத் தான் முஸ்லீம்களுடன் இது வரை கொண்டிருந்தது. ஆனால் இப்போது அந்த சிக்கலைத் தாண்டி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டது. இதற்கு முஸ்லீம்களை எதிர்க்கத் தான் வேண்டுமென்றால் அதற்கும் தயார் என்பது தான் பிரான்ஸின் இன்றைய நிலை.
பிரான்ஸ் அரசின் உயர் அதிகாரிகள் தேசத்திற்கே ஒரு பெரும் எதிரி கிளம்பி விட்டான் என்றே உணர்கின்றனர். ஆகவே முஸ்லீம்களின் மசூதிகளுக்கு ஒரு புதிய பாதுகாப்பு தேவை என்கின்றனர். அவசரநிலை நீட்டிக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களின் எண்ணம். பத்தாயிரத்திற்கும் அதிகமான தீவிரவாதிகளின் பட்டியலை ஏற்கனவே தயார் செய்துள்ள பிரான்ஸ் அவர்களது நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணிப்பதோடு அவர்களைக் கட்டுப்படுத்தவும் முடிவை எடுக்கவுள்ளது.
இவர்களை தேசீய எதிரிகள் என அறிவிக்கும் பிரான்ஸ் அதிகாரிகள், தீவிரவாதிகளான இமாம்களை தேசத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் என்ற முடிவுக்கும் வந்து விட்டனர். பிரான்ஸ் பிரதம மந்திரி மானுவல் வால்ஸ் (Manuel Valls) 14-11-15 சனிக்கிழமையன்று “expel all these radicalized imams” – இந்த புரட்சிகரமான இமாம்களை வெளியே தள்ளுங்கள் – என்றே பிரகடனம் செய்தார்.
உலக முஸ்லீம்கள் ஒன்றை உணர வேண்டும். அரபு நாடுகளை விட பாகிஸ்தானை விட முஸ்லீம்களுக்கு சர்வ சுதந்திரமும் பாதுகாப்பும் அரசியல் ரீதியிலான சமத்துவத்தையும் உலகில் தரும் ஒரே நாடு இந்தியா தான்.
சகிப்புத்தன்மையின் எல்லையையும் மீறி முஸ்லீம்களை இந்தியா ஆதரிக்கிறது – பம்பாயைத் தகர்க்கும் நாசவேலையில் முஸ்லீம் தீவிரவாதிகள் ஈடுபட்ட பின்னரும் கூட.
இந்தியப் பாராளுமன்றத்தைத் தாக்கிய போதும் கூட. ஆனால் உலகப் போக்கைக் கவனிக்கும் போது எல்லையற்ற சகிப்புத்தன்மைக்கு ஒரு உதாரண உருவமாக இருக்கும் ஹிந்து இனம் உலகப் போக்கிற்கேற்ப நடக்க வேண்டிய அவசியம் இனி ஏற்படும்! முஸ்லீம்கள் உலகப் போக்கை உன்னிப்பாக உணர வேண்டும். குறிப்பாக முஸ்லீம் இளைஞர்களும் பெண்மணிகளும் விழித்தெழ வேண்டும்.

நவம்பர் மாதம் ஜனவரி அல்ல என்பதை பிரான்ஸ் உணர்த்தி விட்டது. நவம்பரில் பாதை திசை மாறி விட்டது. இனி முஸ்லீம் தீவிரவாதம் ஒழிக்கப்படும் – ஒட்டுமொத்தமாக.
ஆக இந்த நிலையில் முஸ்லீம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களிடையே ஊடுருவி இருக்கும் தீவிரவாதிகளான இமாம்கள், தீவிரவாதிகளின் பட்டியலைத் தாமே தயாரித்து அந்தந்த அரசுகளிடம் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும்.
இது உலகத்தை மட்டும் காப்பாற்றாது, அவர்களையும் காப்பாற்றும்.
முஸ்லீம்கள் ஒரு இனமாக, மதத்தினராக வாழ இதுவே சிறந்த வழி! உலகப் போக்கை உணர்வார்களா, முஸ்லீம்கள்?!
*********
You must be logged in to post a comment.