
Post No.7779
Date uploaded in London – 3 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒரு ரகசிய விஷயம் சொல்கிறேன்.திருமதி இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ‘வேலியே பயிரை மேய்ந்தது போல’ அவருடைய சீக்கிய காவலர்களே அவரைச் சுட்டுக்கொன்றனர். அன்றிரவு அடுத்த சில நாட்களும் காங்கிரஸ் தலைவர்கள் புடை சூழ ரவுடிகள் சென்று 3000 சீக்கியக் குழந்தைகள், பெண்கள், வயதானோரைக் கொன்று குவித்தனர். அப்போது இந்தச் செய்தி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஸ்ரீ சந்திர சேகர இந்திர ஸரஸ்வதி (1894-1994) காதிலும் விழுந்தது . காஞ்சிக் கோவில்களில் 3000 மோட்ச தீபங்கள் ஏற்றி வைக்குமாறு பக்தர்களுக்கு ஆணையிட்டார். இறந்தவர்கள் இந்துக்கள் அல்ல. ஆயினும் அவர்களின் ஆவி இறைவனடி சேர அருள் மழை பொழிந்தார். இறந்தவர்களின் ஆவியைத் திருப்திப் படுத்துவது தம் கடமை என்று கருதி பிராமணர்கள் ஆண்டு தோறும் செய்யும் 96 தர்ப்பணங்களில் நண்பர்களுக்கும் நாதி/ ஞாதி (சொந்த பந்தம்) இல்லாதோர்களுக்கும் கடைசியாக எள்ளும் தண்ணீரும் இறைப்பர் . இதனால்தான் பிராமணர்களுக்கு எல்லோரும் அள்ளிக் கொடுத்தார்கள்.

இப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டு கோளுக்கும் இறந்த ஆவிகளுக்கும் சம்பந்தம் உண்டு.
சீனாவில் ஒரு நகரில் மட்டுமே 48,000 மக்கள் குரோனா வைரஸ் தாக்குதலில் இறந்தது இபபோதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்தும் பல்லாயிரக் கணக்காக மக்கள் இறந்து வரும் செய்திகள் வந்து குவிகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் ஒரு (Mathematical model/ graph) கணித கிராப் வரைந்து பீக் (Peak Period) பிரியட் எது, எவ்வளவு பேர் சாவார்கள் என்று யுனிவர்சிட்டிகளில் உள்ள சாக்குருவிகளும் ஆந்தைகளும் ஓலமிடுகின்றன. அந்த எம தூதர்கள் சொன்னது ஓரளவு உண்மையாகி வருகிறது. ஆனால் உலகிலேயே ஏழாவது பெரிய நாடான, உலகிலேயே இரண்டாவது பெரிய ஜனத்தொகையுள்ள நாடான இந்தியாவில், இதுவரை அதிசயம் நிகழ்ந்து வருகிறது. எப்படி? tamilandvedas.com, swamiindology.blogspot.com
நரேந்திர மோடிக்கு யாரோ மந்திர தந்திரம் தெரிந்தவர்கள் சில சடங்குகளைச் செய்யச் சொல்லி இருக்கிறார்கள். அதனால் தான் அவர் நம்மைக் கைதட்டும்படி சொன்னார். பேய்களை ஓட்டவும் பாம்பை விரட்டவும் கைதட்டுவது வழக்கம். மணி அடித்தாலும் தீய சக்திகள் ஊரை விட்டு வெளிப்புறத்துக்குப் போய்விடும். இதனால்தான் பிரம் மாண்டமான ஆலய மணிகளை ஒரு நாளைக்கு மூன்று முதல் ஆறுமுறை வரை அடிக்க ஏற்பா டு செய்தார்கள் இந்துக்கள். இதையும் இறந்தவர்கள் வீட்டில் விளக்கு ஏற் றுவதையும் கிறிஸ்தவர்கள் கூ ட நம்மிடமிருந்து கற்று இன்று வரை பின்பற்றி வருகிறார்கள்.

மோடி அவர்கள் இந்தியாவில் துவக்கி வைத்த கைதட்டலை பிரிட்டன் முதலிய நாடுகளும் பின்பற்றத் துவங்கிவிட்டன.
நேற்று வியாழக் கிழமை நாங்கள் இரண்டாவது வாரம் கை தட்டி டாக்டர்கள், நர்ஸுகள், பாரா மெடிக்குகளுக்கு நன்றி தெரிவித்தோம். இனி வாரம்தோறும் இப்படிச் செய்வோம். அப்படிச் செய்கையில் பி பி சி முதலான டெலிவிஷன்கள் ஒளி, ஒலி பரப்பை நிறுத்திவிட்டன.
இப்போது நாட்டு மக்களுக்கு நரேந்திர மோடி வெளியிட்ட ஒரு வீடியோ செய்தியில் ஞாயிற்றுக் கிழமை இரவு (5-4-2020) ஒன்பது மணிக்கு வீடுகளில் விளக்குகள் அல்லது மெழுகு திரிகளை ஏற்றச் சொல்லி இருக்கிறார் . இதில் இரண்டு பலன்கள் உண்டு .
முதல் பலன் தீய சக்திகள் , பூமியை வலம் வரும் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ முஸ்லீம் ஆவிகள் கடைத்தேறும். ஈரான் , ஸ்பெயின் , இத்தாலி, அமெரிக்காவில் ஏராளமானோர் இறந்து வருகின்றனர். இத்தகைய ஆவிகள் வழி தெரியாமல் திணறும் என்றும் அது திருப்பித் திருப்பி சுற்றிவரும் இடங்களில் விளக்கு ஏற்றி வைத்தால் அது 12 நாட்களுக்குப் பின்னர் சென்றுவிடும் என்றும் இந்து மத நூல்கள் விளம்பும் . மோடி விளக்கேற்றச் சொல்வதன் தாத்பர்யம் இதுதான். விளக்கு இல்லாதவர்கள் மொபைல் போன் வெளிச்சம் டார்ச் வெளிச்சம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். tamilandvedas.com, swamiindology.blogspot.com

மோடி பல சமய மக்கள் வாழும் ஒரு நாட்டின் தலைவர். ஆகையால் சமயம், சடங்கு என்று சொல்லாமல் இப்படி ‘நன்றி தெரிவிக்கும் கடனாக’ இதைச் செய்யச் சொல்கிறார். உண்மையில் அவருக்கு மந்திர தந்திரம் தெரிந்த ஒரு மஹான் ஆலோசனை வழங்குகிறார் என்றே நான் நம்புகிறேன்.
ராமாயண அணில் ஆக மாறுவோம்
இரண்டாவது பலன் என்ன?
நாட்டு மக்கள் எல்லோரையும் ஒரே செயலைச் செய்யவைத்தால் ஒற்றுமை ஓங்கும். முயற்சிகள் பலம் பெறும் . இதனால்தான் மஹாத்மா காந்தி போன்றோர் ‘ரகுபதிராகவ’ராஜாராம் பஜனை பாடினர். நேதாஜி ஜெய் ஹிந்த் என்றார் . பங்கிம் சந்திர சாட்டர்ஜீ , வந்தே மாதர கீதத்தையும் கோஷத்தையும் அறிமுகப் கப்படுத்தினார். லட்சக் கணக்கான ஆர் எஸ் எஸ்.காரர்கள் நாள் தோறும் பாரத் மாதா கி ஜெய் என்று ஷாகாக்களில் கோஷம் இடுகின்றனர்
ராமாயணத்தில் ஒரு அணில்கூட சேது அணை கட்டும் வேலை யில் உதவ சிறு கற்களை எடுத்துக் போ ட்டு உதவியதாகப் படிக்கிறோம். அது போல பேய், பிசாசு, ஆவி முதலியவைகளில் நம்பிக்கை இல்லாதோர் கூட நல்ல காரியத்தில் இறங்கியோருக்கு நம் ஆதரவை நன்றியைத் தெரிவிக்க ஞாயிற்றுக் கிழமை இரவில் விளக்கு ஏற்றுவோம். “எல்லோரும் இன்புற்றிருப்பதேயன்றி யாம் ஒன்றும் அறியோம் பராபரமே” என்று பாடுவோம். “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று சொல்லி
ஆடுவோம். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பதை உணர்த்துவோம். கொரானா வைரஸையும் அதை ஆதரிப்போரையும் ஓட ஓட விரட்டுவோம்.

லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து !
tags – மோடி ,மந்திரவாதி, தீர்க்க தரிசி, ராமாயண அணில்
சுபம்