WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,001
Date uploaded in London – 21 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great
சாதனைக்குப் பாராட்டு!
பத்தாயிரம் கட்டுரைகள் பதிப்பித்த மாபெரும் சாதனை!
ச.நாகராஜன்
1
www.tamilandvedas.com மற்றும் swamiindology.blogspot.com இல் பத்தாயிரம் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன
.
இது ஒரு இமாலய சாதனை. இந்தக் கட்டுரைகள் அனைத்தும் பெரும்பாலும் நன்கு ஆய்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளாக அமைந்திருப்பது இவற்றின் சிறப்பை இன்னும் கூட்டுகிறது. தெய்வீகம், தேசம் என்ற தண்டவாளத்தில் இந்தக் கட்டுரைகள் பயணிப்பதால் இவை எந்தக் காலத்துக்கும் பொருத்தமானதாக இலங்குவதில் வியப்பில்லை.
தமிழின் மேன்மை, பாரத தேசத்தின் மேன்மை ஆகிய இவற்றுடன் அறிவியல் உள்ளிட்ட இன்ன பிற விஷயங்களையும் பார்க்கும் போது இந்தத் தளம் ஒரு காலத்தின் கண்ணாடியாக மிளிர்வதில் வியப்பில்லை.
2
இந்த தளத்தை அனைவரும் இலவசமாக அணுக முடிவது இதன் இன்னொரு சிறப்பு.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதில் வரும் கட்டுரைகளைத் தங்கள் பெயரில் போட்டுக் கொண்டு அவற்றைச் “சுற்ற விடும்” சுறுசுறுப்பாளர்களைக் கண்டு வேதனைப் படத் தான் முடியும். அவர்கள் மனச்சாட்சி அவர்களை மாற்றினாலொழிய வேறு என்ன செய்ய முடியும்? ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்று சும்மாவா சொன்னார் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!
3
பத்தாயிரம் கட்டுரைகளையும் வகைப் படுத்தி தொகைப்படுத்தி அந்தந்தப் பொருளுக்குரிய வகையில் வெளியிட முயன்றால் சுமார் 300 நூல்களை வெளியிட முடியும். கட்டுரைப் பொக்கிஷமாக இது அமையும்.
இந்தக் கட்டுரைகளில் வெளியிடப்படும் படங்கள் தனித்தன்மை கொண்டவை. கட்டுரைகளோடு தொடர்பு உள்ளவைகளாக உள்ள படங்களைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு கடினமான காரியம். அத்துடன் TAG எனப்படும் தேடுதல் குறிப்பையும் இதில் காணலாம்.
எந்தக் கட்டுரை வேண்டுமானாலும் படிக்கக் கூடிய விதத்தில் பக்கத்திலேயே பழைய கட்டுரைகளை அணுகும் வசதியும் தளத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 6500 முதல் 12000 பேர் வரை இந்தக் கட்டுரைகளைப் படித்து மகிழ்வது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அதாவது மாதத்திற்கு 195000 முதல் 360000 பேர் இந்தக் கட்டுரைகளைப் படிக்கின்றனர்!
ஒரு சமயம் ஒரே ஒரு கட்டுரையைப் படித்தவர்களின் எண்ணிக்கை 42000 என்ற எல்லையைத் தொட்டது நிறைவைத் தருகிறது.
4
இந்தக் கட்டுரைகளை ஏராளமானோர் அவ்வப்பொழுது பாராட்டி வருவதும் தங்கள் மகிழ்ச்சியை விமரிசனப் பகுதியில் பதிவு செய்வதும் பாராட்டுக்குரிய ஒன்றாகும். இவற்றைப் படித்துத் தொடர்பு கொண்ட அறிஞர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இதில் பங்கு கொண்டவன் என்ற முறையில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
5
இப்படிப்பட்ட www.tamilandvedas.com மற்றும் swamiindologyblogspot.com நடத்தி வரும் லண்டன் சுவாமிநாதனை வாழ்த்த வார்த்தைகளே போதுமானதாக இல்லை. என்னுடன் அனைவரும் வாழ்த்துவீர்கள் என்பதிலும் ஐயமில்லை.
வாழ்க திரு லண்டன் சுவாமிநாதன்!
மேலும் பல வளர்ச்சிகளைக் கண்டு மிளிர்க www.tamilandvedas.com & swamiindologyblogspot.com!!
இதை ஆதரிக்கும் அன்பர்களின் தொகை மேலும் மேலும் உயரட்டும், அன்னை மீனாட்சி அருள் பாலிக்கட்டும்!!!
***
tags- tamilandvedas, 10000 posts, swamiindology.blogspot