Written by London Swaminathan
Date: 18 November 2016
Time uploaded in London: 9-38 am
Post No.3367
Pictures are taken from various sources; they are representational only; thanks.
contact; swami_48@yahoo.com
அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவதற்கு முன் ஆப்ரஹாம் லிங்கன் வக்கீல் தொழில் செய்துவந்தார். ஒரு நாள் வயதான, எலும்பும் தோலுமான தனது நோஞ்சான் குதிரை மீது லூயிஸ்டன் கோர்ட்டுக்குப் பயணமானார்.
அந்தக் குதிரை தெனாலிராமன் குதிரை போன்றது. முன்னே இரண்டு பேர் இழுக்க, பின்னே இரண்டு பேர் தள்ள, பத்து தப்பிடி நகரும். அவ்வளவுதான்.
அவர் குதிரை ஒரு வயக்காட்டு வழியே போன போது நடந்த சம்பாஷணை:-
ஏய் அபி (Abraham Lincoln) ! என்ன லூயிஸ்டன் கோர்ட்டுக்குப் போறியா?
ஆமாம், டாமி மாமா (Uncle Tommy). நீங்க சவுக்கியமா இருக்கீங்களா?
ம்ம்ம்ம்ம்……. இருக்கேன்……..
என்ன அங்கிள் டாமி? ஏதாவது பிரச்சனையா? இழுத்து…… இழுத்து …….. பேசுறீங்களே
இல்ல, நானும் லூயிஸ்டன் கோர்ட்டுக்கு வந்து உன்ன பாக்கறேன்.
என்ன மாமா. கோர்ட்டு, கீர்ட்டுன்னு பேசறீங்க !என்ன பிரச்சன?
ஒன்னுமில்ல. எல்லாம் நம்ம பக்கத்து நிலம் ஜிம்மிதான் — கொஞ்சம் அத்து மீறி போயிட்டிருக்கான்.
அவன கோர்ட்டுல ஒரு கை பாக்கனும்.
மாமா, இருங்க, பொறுங்க. நீங்களும் ஜிம்மியும் எத்தன வருஷம் பக்கத்துல பக்கத்துல வசிக்கிறீங்க.
என்ன ஒரு 25 வருஷம் இருக்கும்னு நினக்கிறேன்
என்ன மாமா இது? 25 வருஷமா சேர்ந்து வசித்துவிட்டு இப்ப கோர்ட் பத்திப் பேசறீங்க.
மாமா என் குதிரையை பாருங்க. இதுவும் 10, 15 வருஷமா இருக்கு. எப்படி நடக்குதுன்னு நீங்களே பாருங்க. முன்ன எல்லாம் ஒழுங்காத்தான் போச்சு. இப்ப அது மேல நான் கோபப்படுறேனா. இல்லையே.
அவ்வளவுதான்! அதோட “அட்ஜஸ்ட்” பண்ணி போறேன்.
நோஞ்சான், நொண்டி என்று தூக்கிப்போட முடியுமா?
அப்ப நீ சொல்ற. நானும், உன்னைப் போல பொறுமையாய் அட்ஜஸ்ட பண்ணிட்டு போனும்; வழக்கு வாய்தான்னு வம்பு வேண்டாங்கற.
பின்ன? அங்கிள் டாமி, பழைய குதிரை போல நண்பரையும் பாருங்க.
சரீப்பா, அபி, நீ சொல்றதும் சரியாத்தான் படறது.
இதைக் கேட்டவுடன் ஆப்ரஹாம் லிங்கனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
கோர்ட்டுக்கு வரும் முன்னரே ஒரு வழக்கைத் தீர்த்துவிட்ட பெருமிதம் அவர் முகத்தில் பளிச்சிட்டது.
அவரது நோஞ்சான் குதிரை முன்னைவிட சிறிது வேகமாக லூயிஸ்டன் நீதிமன்றத்தை நோக்கி நடைபோட்டது!
நாய் “வாலால்” கடிக்கட்டுமே!
அமெரிக்காவில் லாங் ஐலண்ட் (LONG ISLAND) ராணுவ முகாம் அருகில் ஒரு பெரிய எஸ்டேட் இருந்தது. அங்கே பாதுகாப்புக்காக நல்ல உயர்தர, விலை மதிப்புள்ள நாய்களை பாதுகாப்புக்காக வைத்திருந்தனர். ஒரு நாள், ஒரு நாய் ராணுவ முகாம் பாதுகாவலரைக் (Army Camp Sentry) கடித்துவிட்டது. அவர் கோபத்தால் துப்பாக்கி சனியனால் (துப்பாக்கி முனையில் சொருகப்பட்ட கத்தி Bayonet) நாயைக் கொன்றுவிட்டார்.
நாயின் சொந்தக்காரர் வழக்கு போட்டார். வழக்கு விசாரணை நாளும் வந்தது. நாயின் சொந்தக்காரர் , அந்தக் காவலரை தன்னுடைய நாய் அப்படி ஒன்றும் கடித்துக் குதறிவிடவில்லை என்று நிரூபித்தார்.
உடனே நீதிபதி கேட்டார்:
ஏம்பா. உன்னை நாய் ஒன்றும் அப்படிப் பெரிதாக கடிக்கவில்லையே! துப்பாக்கி முனை கத்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அதன் பின்புறப்பகுதியால் (Rifle Butt) அடித்து விரட்டி இருக்கக் கூடாதா?
உடனே அந்தக் காவலர் பளிச்சென்று பதில் தந்தார்”
அது சரி கனம் நீதிபதி அவர்களே! அந்த நாயும் முன்பக்கத்தால் கடிக்காமல் அதன் பின்புற வாலால் என்னைக் கடிக்கக்கூடாதா?
நீதிபதி இந்தப் பதிலைக் கேட்டு திகைத்துப் போனார்!
–Subham–