ஒரு தலைவர் பெருந்தலைவர் யார்? (Post No.6639)

WRITTEN BY S NAGARAJAN


swami_48@yahoo.com


Date: 17 JULY 2019


British Summer Time uploaded in London –6-49 AM

Post No. 6639


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள்!

மாலைமலர் நாளேட்டில் ஜூலை 14,15,16 தேதியிட்ட இதழ்களில் வெளியாகியுள்ள கவிதை

ஒரு தலைவர் பெருந்தலைவர் யார்?

ச.நாகராஜன்

சுதந்திரம் கெட்டு வறுமையில் தாழ்ந்து

     துயரினில் இருந்தோர் நிலை நீக்கினான்

சுதந்திரம் பெற்று வீணரை விரட்டி

      தூய பாரதம் உருவாக்கினான்

மதந்தரு போதை மருள் எனச்சொல்லி

   மதிதரு வழியைக் காட்டினான்

இதந்தரு  சமமாம் தர்மம் நோக்கினான்

      இனியதோர் பாரதம் காட்டினான்

***

எழுத்தறிவில்லா சிறார்க்கு அறிவினை அள்ளிஅள்ளி ஊட்டினான்

 அச்செல்வமும் இலவசமே என முழங்கி அற்புத வரலாறு உருவாக்கினான்

கல்விச்சாலை வருவோர்க்கு  உணவூட்டும் திட்டம் உருவாக்கினான்

உன்னதம் படைப்பதில் எல்லை இலாச் சிற்பி எனச் செயல் காட்டினான்

இருண்டிருந்த தமிழ்நாட்டை மின் விளக்கால் ஒளியூட்டினான்

வறண்டிருந்த தமிழகத்தை அணைகட்டி வளமார் நாடாக்கினான்

மருண்டிருந்த மக்களின் அச்சம் நீக்கி வீரரை உருவாக்கினான்

அஹிம்சை வழி கடைப்பிடித்து அண்ணல் வழி நிலை நாட்டினான்

தமிழகத்தில் பிறந்த தங்கம்

தளராது உழைத்த சிங்கம்

எளிமையின் சிகரம் ஏறிய தென்னவன்

 சொல்லினில் சிக்கனம் காட்டிய தூயவன்

ஜாதி பேதம் இல்லை எனச் சொன்னவன்

  அனைத்து உள்ளங்களிலும் அமர்ந்த மன்னவன்

நல்லோர் மலிந்த விருதுநகர் ஊரவன்

நலந்தரு கர்மவீரர் காமராஜர் பேரவன்!

***

ஒரு தலைவர் பெருந்தலைவர் உலகில் சொல்லெனக் கேட்போர்க்கு

பெருந்தலைவர் காமராஜர் பேரன்றி வேறெதுதான் உண்டு சொல்வீர்!

****