WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,490
Date uploaded in London – – 26 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை டிசம்பர் 26-ஆ ம் தேதி 2021 ஆம் ஆண்டு
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
Xxxxx
காசிக்கு செல்லுங்கள்‘: பிரதமர் மோடி
எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை பற்றி கவலைப்படாமல், புனித நகரமாகிய உத்தர பிரதேசத்தின் காசியை சுற்றுலா தலமாக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார் பிரதமர் மோடி. பார்லிமென்ட் கூட்டத்தொடரின் போது, மாநிலம் வாரியாக பாரதீய ஜனதா கட்சி எம்.பி.,க்களை சந்தித்தார் மோடி.
நீங்கள் அனைவரும் காசிக்கு சென்று விஸ்வநாதரின் அருளைப் பெற்று வாருங்கள்; தொகுதி மக்களிடம் காசியைப் பற்றி சொல்வதுடன், அவர்களையும் காசிக்கு போகச் சொல்லுங்கள்’ என அவர்களிடம் கூறினார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முருகனிடமும் காசிக்கு செல்லும்படி கூறினார் மோடி. மேலும் காசி பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை அனைத்து உறுப்பினர்களுக்கும் கொடுத்து வருகிறார மோடி.
ந்த புத்தகங்கள் ஹிந்தியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி வாரணாசியின் எம்.பி., யாக தேர்வு செய்யப்பட்ட பின், இந்த புதிய நகரத்தை எப்படி சீரமைத்துள்ளார் என இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் இந்த புத்தகங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டு, விரைவில் வழங்கப்பட உள்ளன.
Xxxx
திருமலை இலவச டோக்கன் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம்.
திருப்பதி–திருமலை தேவஸ்தான இணையதளத்தில் சர்வதரிசன இலவச முன்பதிவு டோக்கன்கள் நேற்று வெளியிடப்படாததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
நேற்று காலை சர்வதரிசன இலவச தரிசன டோக்கன்கள் வெளியிடப்படும் என செய்தி வெளியானது. ஆனால், தேவஸ்தான இணையதளத்தில் டிக்கெட்டுகளின் முன்பதிவு வெளியிடப்படவில்லை. இதனால் பக்தர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். விரைவு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாதவர்கள், சர்வதரிசன டோக்கன்கள் முன்பதிவிற்காக காத்திருந்து ஏமாற்ற அடைந்தனர். ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், சர்வ தரிசன டோக்கன் வெளியீடு குறித்து அதிகாரிகள் பேச்சு நடத்தி வருவதாக கூறப்பட்டது.இந்நிலையில் ஜனவரி மாதத்துக்கான சர்வ தரிசன டோக்கன்கள் நாளை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
xxx
சபரிமலை கோயிலில் இன்று மண்டல பூஜை நிறைவு: ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து இன்று சிறப்பு பிரார்த்தனை
சபரிமலை,- -சபரிமலையில் இன்று மதியம் மண்டல பூஜை நடைபெறுகிறது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிச.,30 மாலை மீண்டும் நடை திறக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை இன்று நிறைவடைவதை ஒட்டி நேற்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மண்டல பூஜையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மண்டல பூஜைக்காக தங்க அங்கி கடந்த 22ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் ஊர்வலமாக சபரிமலைக்கு புறப்பட்டது.
மண்டல பூஜை நிறைவடைவதை ஒட்டி சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனிடையே எரிமேலியில் நடைபெற்ற பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் ஐயப்ப பக்தர்கள் மேளதாளம் முழங்க ஆடி, பாடி வழிபட்டனர்.
மகரவிளக்கை ஒட்டி ஐய்யப்பன் கோயில் நடை மீண்டும் வருகிற 30ம் தேதி திறக்கப்படவுள்ளது. 31ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து மகர ஜோதி பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனம் ஜனவரி மாதம் 14ம் தேதி நடைபெறவுள்ளது
Xxx
கர்நாடகா: கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா நிறைவேற்றம்!
பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்து வரும் கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாகவும், இதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அம்மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
அதன் படி, கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மசோதா கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
முக்கிய அம்சங்கள்
மதமாற்ற தடை சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
* மதம் மாற விரும்புபவர்கள் 2 மாதங்களுக்கு முன்பே அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
* மதம் மாறினால், அவர்களின் அடிப்படை சாதியின் மூலம் கிடைக்கும் இட ஒதுக்கீட்டின் பலன்கள் உள்பட அனைத்து சலுகைகளையும் இழப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் சேரும் மதத்தில் கிடைக்கும் சலுகைகளை பெற முடியும்.
* இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
* சிறுவர்கள், பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களை மதம் மாற்ற முயற்சி செய்தால் அத்தகையவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கூட்டு மதமாற்றத்துக்கு…
* மேலும் தவறு செய்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அம்சமும் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
*அதே போல் கூட்டு மதமாற்றம் செய்தாலும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
மேற்கண்டவை அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்தராமையா முதலமைச்சராக இருந்த காலத்தில் அவர்தான் இதை முதலில் கொண்டு வந்தார் என்று பாரதீய ஜனதா கட்சியினர் சுட்டிக்காட்டியவுடன் அவர்களுடைய எதிர்ப்பு முனை மழுங்கிப்போனது ; அவர்களால் அதற்கு மேல் வாய் திறக்கமுடியவில்லை ஜனதா தள மும் , காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகத் தாக்கியது
தற்போது நிறைவேற்றப்பட்ட கட்டாய மதமாற்ற மசோதா அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலையடுத்து மசோதா சட்டமாக அமலுக்கு வர உள்ளது.
XXXX
XXXX
கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்ற நடவடிக்கை; தமிழக அரசு அதிரடி
மாநிலம் முழுவதும் கோயில் நில அபகரித்தவர்கள் மற்றும் சொத்து பட்டியலை தயாரித்து நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதன்படி பல ஏக்கள் நிலங்கள் அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது . இந்நிலையில் கோயில் சொத்து மற்றும் கட்டடங்களில் வாடகை தராமல் பலரும் எத்தனித்து வந்தனர். இந்த விவரம் அரசுக்கு தெரிய வந்தது. இதன்படி இது போன்று வாடகை தராமல் இருப்பவர்கள் மற்றும் ஒப்பந்த காலம் முடிந்து வெளியேறாமல் இருப்போர் மீதும் கடும் குற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரச உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநிலம் முழுவதும் கோயில் நில அபகரித்தவர்கள் மற்றும் சொத்து பட்டியலை தயாரித்து நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதன்படி பல ஏக்கள் நிலங்கள் அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது . இந்நிலையில் கோயில் சொத்து மற்றும் கட்டடங்களில் வாடகை தராமல் பலரும் எத்தனித்து வந்தனர். இந்த விவரம் அரசுக்கு தெரிய வந்தது. இதன்படி இது போன்று வாடகை தராமல் இருப்பவர்கள் மற்றும் ஒப்பந்த காலம் முடிந்து வெளியேறாமல் இருப்போர் மீதும் கடும் குற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரச உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான விசாரணைக்கு கோயில் நிர்வாகிகள் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். குற்றம் அறிந்தவர்கள் யாரும் இந்த புகாரை அளிக்க முன் வரலாம். இதனால் பலர் ஆடிப்போயுள்ளனர்.
Xxx
திருப்பதி பாலாஜி வெங்கடாசலபதியை
ராஜபக்சே தரிசித்தார்.
திருப்பதி,–திருமலை பாலாஜி வெங்கடாசலபதியை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தரிசித்தார். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இரண்டு நாட்கள் பயணமாக தன் குடும்பத்துடன் திருப்பதிக்கு வந்தார்.
இரவு திருமலையில் தங்கிய அவர், காலை தன் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார். தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்கு அழைத்து சென்றனர்.
தரிசனம் முடித்து திரும்பிய, அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் பண்டிதர்களால் வேத ஆசீர்வாதம் செய்வித்து சேஷ வஸ்திரம் அணிவித்து லட்டு, வடை, தீர்த்த பிரசாதம், ஏழுமலையான் திரு வுருவப்படம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
Xxx
தமிழகத்தில் அறநிலையத் துறை என்ன செய்கிறது? மத்திய தொல்லியல்துறை அமைச்சர் மீனாட்சி லேகி காட்டம்!
- தமிழகத்தில் 35 ஆயிரம் கோயில்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை.
- தமிழகத்தில் அறநிலையத் துறை என்ன செய்கிறது?
- மத்திய வெளியுறவு கலாச்சாரம் மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மீனாட்சி லேகி சரமாரி கேள்வி
- மத்திய வெளியுறவு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல்துறையின் அமைச்சர் மீனாட்சி லேகி காஞ்சிபுரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், ஆலய வளாகத்தில் உள்ள சிற்பங்களின் கலை நுணுக்கங்களையும் பார்வையிட்டார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 35 ஆயிரம் கோயில்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது. உதாரணமாக கன்னியாகுமரி கோயிலையும் சொல்லலாம். கன்னியாகுமரி பகவதி அம்மன் அணிந்திருந்த மூக்குத்தியிலிருந்து வரும் ஒளியானது கடலில் கப்பல்கள் செல்ல இடையூறாக இருக்கிறது என 18 வது நூற்றாண்டில் பிரிட்டிஷார் அக்கோயிலின் கிழக்கு வாசலை மூடியிருக்கிறார்கள்.
தற்போது எவ்வளவோ தொழில்நுட்பம் வந்து விட்ட பிறகும் கோயிலின் கிழக்கு வாசல் கதவு இன்று வரை மூடியே இருக்கிறது. கோயில் கிழக்குவாசல் கதவை திறக்க வேண்டும்
கன்னியாகுமரி ஊராட்சி நிர்வாகத்துக்கு மத்திய அரசின் சுற்றுலாத்துறை மூலம் நகரை அழகுபடுத்துவதற்கென நிதி அனுப்பப்பட்டிருந்தது. அந்நிதியைப் பயன்படுத்தி கன்னியாகுமரியில் போதுமான வசதிகள் செய்யப்படாமல் டைல்ஸ் மட்டுமே பதித்திருக்கிறார்கள்.
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் 5 ஆயிரம் கோயில்கள் இருந்தாலும் அதை முறையாக கண்காணித்து தேவையான வசதிகளை செய்து கொடுக்கிறோம். மேலும் என்னென்ன தேவைப்படும் என்பதை அறியவே காஞ்சிபுரம் வருகை தந்துள்ளேன்.
காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களின் வரலாறுகளும், கலைச்சிற்பங்களும் வியக்கத்தக்கவையாகவே இருக்கின்றன.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில் ஆகியனவற்றுக்கு இதுவரை அறங்காவலர்கள் கூட நியமிக்கப்படவில்லை.
இக்கோயில்களுக்கு ஏதேனும் உதவிகளோ அல்லது வசதிகளோ தேவைப்பட்டாலும் கடிதம் மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் மீனாட்சி லேகி தெரிவித்தார்.
!காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் மத்திய அமைச்சர் சுவாமி தரிசனம் செய்தார்.- அனைவருக்கும் ஞான மயம் குழுவினர் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிகின்றனர் .
- மீண்டும் புத்தாண்டில் சந்திப்போம்
XXXXXXXXXX
- இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND
- நன்றி, வணக்கம்
- Tags- Tamilhindunews, 26122021