
Research Article written by London swaminathan
Date: 31 December 2015
Post No. 2444
Time uploaded in London :– 9-37 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
This article is uploaded in English as well.

ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும். ஆனால் குடித்துவிட்டுக் கும்மாளம் போடக்கூடாது. அதே நேரத்தில் தமிழ் புத்தாண்டையும் மறக்கலாகாது.
ஆங்கிலப் புத்தாண்டை ஏன் கொண்டாட வேண்டும்?
ஏனெனில்,அதைக் கொண்டாடும்வரை சம்ஸ்கிருதம் வாழும். இந்துமதம் வாழும். அது எப்படி?
கணபதி=ஜனவரி; ஜனவரி=கணபதி!!
நீங்கள் ஒரு பஜனைப் பாடலே பாடலாம்!
கணபதி=ஜனவரி; ஜனவரி=கணபதி! பாஹிமாம்!
ஜனவரி=கணபதி!! கணபதி=ஜனவரி!! ரக்ஷமாம்!!
ஏனெனில் ஜனவரி என்ற மாதப் பெயர் ‘ஜேனஸ்’ என்ற ரோமானிய கடவுள் பெயரிலிருந்து வந்தது என்பர். உண்மையில் ‘ஜேனஸ்’ என்பது ‘கணேஷ்’ என்பதன் திரிபு!

Janus/Ganesh in Vatican
ஆங்கிலத்தில் ‘ஜி’ என்ற எழுத்தும் ‘ஜே’என்ற எழுத்தும் இடம் மாறுவது சர்வ சாதாரண விஷயம்!
ஜேனஸ்=கணேஸ் யார்?
ஜேனஸ் என்ற ரோம் நகர தெய்வத்துக்கு இரண்டு முகங்கள்: ஒன்று கடந்த காலத்தைப் பார்க்கும்; மற்றொன்று எதிர்காலத்தைப் பார்க்கும். இதை வாசல்படிகளில், நுழைவாயில்களில் வைப்பர். நமது இந்துக் கோவில்களில் நுழைவாயிலில் கணபதி/கணேஷ் இருப்பதைப் பார்த்தே அவர்களும் இப்படி வைத்தனர்.
மேலும் இந்துக்கள் எல்லா காரியங்களையும் துவங்குவதற்கு முன் கணேஷை வணங்குவர். ஆகவே அவர்களும் ஜனவரியை ஆண்டுக்கு முதல் மாதமாக வைத்தனர். ஆகையால் இது ஆங்கிலப் புத்தாண்டு இல்லை. இந்துப் புத்தாண்டே!
ரோமானியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ஆம் தேதி கணேஷ் சதுர்த்தி கொண்டாடினர். இன்றைக்கு அல்ல. 2000 ஆண்டுகளுக்கு முன்பு!

Janus Temple coin issued by Roman Emperor Nero
ஜேனஸ் கோவில்கள் கி.மு.400 முதல் கி.பி.400 வரை 800 ஆண்டுகளுக்கு இத்தாலி முழுதும் இருந்தன. அவருடைய கோவில்கள் சதுர வடிவில் – 4 பருவங்களைக் குறிக்க—அமைக்கப்பட்டிருந்தன. இதையும் இந்துக்களைப் பார்த்தே செய்தனர். கணபதியின் தனிக் கோவில்கள் தமிழ்நாடு முழுதும் சதுர வடிவிலே இருக்கும்.
இத்தாலியில், டைபர் நதிக்கரையில் ஜனிகுலம் என்ற இடத்தில் கணபதி நகரமே அமைக்கப்பட்டது!
ஜேனஸ் கையில் ஒரு சாவியும் மற்றொரு கையில் ஒரு தண்டமும் இருக்கும். நாம் அங்குசம், பாசக் கயிற்றைக் கைகளில் காட்டினோம். அவர்கள் சிறிது மாற்றி வைத்தனர். ஜேனஸுக்கும், போருக்கும் தொடர்பு உண்டு. இந்து புராணக் கதைகளிலும் அவர்தான் பூதகணத் தலைவர்.

கணபதி கோவில்களை சாலை ஓரங்களிலும் ரோமானியர் கட்டினர். இன்றும் தமிழ் நாட்டின் சாலை ஓரங்களில் கணபதியைக் காணலாம். இதையெல்லாம் பார்க்கும்போது தமிழ் நாட்டிலிருந்துதான் ரோமுக்கு இவர் போனாரோ என்று என்ன வேண்டியிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள பிள்ளையார்பட்டி, திருப்பரங்குன்ற குகையிலுள்ள பிள்ளையார் சிற்பங்கள் ரோமானிய ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னால் எழுந்தவை.
மாதங்களில் சம்ஸ்கிருதம்!!!!!!!!!!
சப்த- ம்பர்= செப்டெம்பர்= சப்த =7
அஷ்ட- ஓபர்= அக்டோபர்= 8
நவ- ம்பர்= நவம்பர் = 9
தச- ம்பர் = டிசம்பர்= 10
முன்காலத்தில் மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதம். பின்னால் வந்தவர்கள் இதை மாற்றி வைத்தனர். அதற்கும் பின்னர், ஜூலியன் என்ற போப்பாண்டவர் இன்னும் சில காலண்டர் சீர்திருத்தங்களைச் செய்தார். மார்ச் மாதம் முத்லாவது மாதம் என்றால் சப்த, அஷ்ட, நவ, தச= 7,8,9,10 என்பது பொருந்தும். ஆகவே இதுவும் இந்து ஆண்டே. இன்றும் இந்தியவின் தேசிய வருடமான சக வருடம் (தெலுங்கு, கன்னட, மகாராஷ்டிர புத்தாண்டு) மார்ச் மாதத்தை ஒட்டியே துவங்கும். அதுதான் நமது உண்மையான புத்தாண்டு. ஆனால் தமிழ் புத்தாண்டு சூரிய இயக்கத்தின் (சோலார்) அடிப்படையிலும், மற்ற இந்திய புத்தாண்டுகள் சந்திர இயக்க (லூனார்) அடிப்படையிலும் அமைந்தன. ஆகவே இரண்டும் சரியே.
ஆக ஆங்கிலப் புத்தாண்டு ஆங்கிலப் புத்தாண்டல்ல. இந்துப் புத்தாண்டே!! அது வாழும் வரை சம்ஸ்கிருத எண்கள் நினைவில் நிற்கும்.
மேலும் இந்துமதம் எதையும் ஜீரணம் செய்துவிடும். ஆங்கிலப் புத்தாண்டன்று பலர், திருத்தணி, பழநி, திருப்பதிக்குப் பாதயாத்திரை செல்வது பெரிய இயக்கமாக வளர்ந்து வருகிறது. சகரர், ஹூணர், கிரேக்கர், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை ஜீரணம் செய்த நாடு பாரதம். அகாவே இந்து மதம் எதையும் ஜீரண செய்து தனதாக்கிக் கொண்டுவிடும். அஞ்சற்க.

உலகில் கிறிஸ்தவ, முஸ்லீம் படையெடுப்பாளர்கள் சென்ற அவ்வளவு நாடுகளும் அவர்கள் மயமாய்விட்டன. தென் அமெரிக்கா முழுவதையும் ஸ்பானியர்களும் போர்ச்சுகீசியர்களும், ரோமன் கத்தோலிக்க நாடுகளாக்கினர். ஆப்ரிக்க நாடுகளை முஸ்லீகளும் கிறிஸ்தவர்களும் தமதாக்கினர். அனல் இந்தியாவில் “ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி”க்கும் (பாரதியாரின் வரி) பின்னர், பத்து சதவீதமே மதம் மாற்றப்பட்டனர். அவர்களும் பெரும்பாலும் நம்பிக்கையிலும், கலாசாரத்திலும் இந்துக்களே!
-சுபம்–
(இது போன்ற 2400 ஆராய்ச்சிக் கட்டுரைகள், எனது பிளாக்குகளில் உள. படித்து மகிழ்க)

ijanus0001p1
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
You must be logged in to post a comment.