ஒரு குட்டிக் கதை: “நுணலும் தன் வாயால் கெடும்”(Post No. 2455)

frogs

Date: 3 January 2016

 

Post No. 2455

 

Time uploaded in London :–  7-41 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

செல்லும், செல்லாததுக்குச் செட்டியார் இருக்கிறார்!

 

(விநோத விகட சிந்தாமணி என்ற பழைய நூலிலிருந்து; புத்தகம் தந்தவர்: ச.சீனிவாசன், சென்னை).

திருடனுக்குப் பயந்து ஒரு ரோட்டின் ஓரத்தில் மணியகாரன் ஒருவனும்,  செட்டியார் ஒருவனும் கத்தாழைப் புதருக்கு மறைவில் படுத்திருந்தார்கள். திருடர்கள் அவ்வழியே வேகமாகச் செல்லுகையில் படுத்திருந்த மணியக்காரன் காலில், திருடனின் காலிடறியது.

 

அப்போது இவர்கள் படுத்திருப்பதையறியாத திருடன், ‘இதென்ன பாதையில் கட்டை விழுந்து கிடக்கிறது? என்றான். அதற்கு மணியகாரன் சும்மாவிராமல், “உங்கள் வீட்டுக் கட்டை இப்படித்தான் ஐந்து பணத்தை முடித்துக்கொண்டு படுத்திருக்குமோ?’ என்றான். இதைக் கேட்ட திருடர்கள், அவனிடமிருந்த ஐந்து பணத்தை அபகரித்துக்கொண்டனர்.

 

இது செல்லுமோ, செல்லாதோ? என்று ஒரு திருடன் கேட்கப் பறிகொடுத்த மணியகாரன், “செல்லும், செல்லாததைப் பார்க்க இதோ செட்டியார் படுத்திருகிக்கிறாரே; அவரிடம் கேட்டால் போச்சு “ என்றான். உடனே திருடர்கள், அந்த செட்டியையும் பிடித்து அவனிடமிருந்த நூறு பவுன்களையும் அடித்துப் பறித்துக்கொண்டு இருவரையும் செம்மையாய்ப் புடைத்துவிட்டுச் சென்றார்கள்.

“நுணலும் தன் வாயால் கெடும்” – தமிழ்ப் பழமொழி (நுணல்= தவளை)

-சுபம்-

 

 

 

 

சென்னை மழையில் உலராத மன ஈரம் (Post No. 2454)

chennai rain 9

Date: 3 January 2016

 

Post No. 2454

 

Time uploaded in London :–  6-19 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ஹிந்து இந்தியா

 

 

ஹிந்து பரம்பரையின் நற்பண்புகள் எந்நாளும் தொடரும்!

 

.நாகராஜன்

 

சென்னை மழையில் உலராத மன ஈரம்

 

 Suruji-Chennai

சமீபத்திய சென்னை மழை ஒன்றை உலகிற்கு உணர்த்தி விட்டது. பெரு வெள்ளத்தால் ஈரமான பூமி கூட ஒரு நாள் உலர்ந்து விடும், ஆனால் ஹிந்து பரம்பரையில் ரத்தத்தில் ஊறி உள்ள அவனது ஈரத்தை யாராலும் அகற்ற முடியாது.

ஈர மனம் என்றுமே ஈர மனம் தான் என்பதை ஹிந்து இந்தியா நிரூபித்து விட்டது.

 

 

உ;பியிலிருந்து பண உதவி, கேரளத்திலிருந்து பல கார்களில் ஏராளமான உதவிப் பொருள்கள், கர்நாடகத்திலிருந்து அலை அலையாக கார்களில் வந்த தன்னார்வத் தொண்டர்கள் துன்பப்பட்டவர் யாராயிருந்தாலும் சரி அவர்களுக்குத் தேவையான பொருள்களைத் தருதல் என இப்படி மதம், ஜாதி, அந்தஸ்து, மாநிலம், மொழி என எதையும் பாராது உதவி செய்வது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர் அனைவரும்!

 

 

இன்றைய அரசியல்வாதிகளில் மோசமானோர் சிலர் இந்த நிலையிலும் ஒட்டை மனதில் நினைத்து இயற்கைச் சீற்றத்திலும் கூட அரசியல் ஆதாயம் பார்த்த நேரத்தில் மக்கள் தாங்கள் ஒரு பெரும் ராஜ பரம்பரையில் வந்தவர்கள் என்பதை நிரூபித்து விட்டனர்.

 

 

ஹிந்து மண்ணின் வாசனையை எந்த முகலாயப் படையெடுப்பு ஆக்கிரமிப்பினாலும். எந்த ஆங்கிலேய ஆட்சியினாலும் போக்க முடியவில்லை; முடியாது என்பதை இந்த ஈர நெஞ்சங்கள் நிரூபித்து விட்டன.

chennai rss

இது ஒன்றும் புதிதில்லை.

 

 

வரலாறு நெடுக லட்சக்கணக்கான சம்பவங்கள் ஒரே பாரதம் என்ற உணர்வை மக்கள் தொன்று தொட்டுக் கொண்டுள்ளனர் என்பதை நிரூபிக்கின்றன.அவர்களின் அறப்பண்புகள் இந்தியா முழுவதும் பரவி ஒரே மாதிரியாக இருப்பவை என்பதையும் நிரூபிக்கின்றன.

 

 

அனைத்தையும் தொகுத்தால் பல கலைக்களஞ்சியங்களாகி விடும்.

மாதிரிக்கு ஒரு சில சம்பவங்களின் தொகுப்பைக் கீழே காணலாம்.

 

chennai rss2

சுனாமியில் நிகழ்ந்த ஒரு சம்பவம்

 

சுனாமி சென்னையைத் தாக்கிய சமயம் அது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி நாகைப்பட்டினமே அல்லோலகல்லோலப் பட்டது.தொடுவை என்ற ஊரிலிருந்த ராஜலக்ஷ்மி- ஜயகுமார் தம்பதி தங்கள் அருமைக் குமாரனை சுனாமிக்கு பலி கொடுத்து விட்டனர்.தமிழ்நாடு அரசு இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ஒரு லட்சம் தந்தது. ஜயகுமாருக்கும் ஒரு லட்சம் கிடைத்தது.

 

 

ஆனால் 2005 மார்ச் மாதம் 5ஆம் தேதியன்று ஜயகுமாருக்கு ஒர் நற்செய்தி கிடைத்தது.அவரது நண்பர் ஒருவர் தான் அந்த நற்செய்தியை அவரிடம் கூறினார்.

 

 

ராட்சஸ அலையினால் தூக்கிச் செல்லப்பட்ட ஜயகுமாரின் புதல்வர் வேளாங்கண்ணியில் 50 மைல் தூரத்திற்கு அப்பால் உயிருடன் பிழைத்துக் கொண்டார்.

இதைத் தெரிந்து கொண்ட தம்பதியினர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

 

 

உடனடியாக அவர்கள் செய்த காரியம் என்ன தெரியுமா? அந்த ஏழை தம்பதியினர் நாகை மாவட்ட கலெக்டர் ஜே.ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர். தங்கள் மகன் உயிருடன் இருக்கும் செய்தி கிடைத்து விட்டதாகவும் ஆகவே அரசு தந்த ஒரு லட்ச ரூபாயைத் திருப்பித் தர வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

 

 

அனைவரின் மனமும் கசிந்தது. யாரும் அவர்களிடம் பணத்தைக் கேட்கவில்லை.

 

அந்தப் பணம் இன்னொருவருக்கு உதவட்டும் என்ற நோக்கில் அங்கு உடனே வந்த அவர்களைத் தூண்டியது எது?

அவர்கள் உடலில் ஓடுகின்ற ஹிந்து சக்தி!

khrushchev DDR STAMPS_zpsugatzps9

குருஷேவின் வியப்பு

 

ரஷியாவில் கொடி கட்டிப் பறந்த ரஷிய பிரதம மந்திரி நிகிதா குருஷேவ் 1954இல் டெல்லிக்கு வந்தார். தனது பேண்டுகள் இரண்டை துவைத்து அயர்ன் செய்ய சலவைக்காரரிடம் தந்தார். துணிகளைத் திருப்பித் தர வந்த சலவைக்காரர் அவர் பையில் நானூறு ரூபாய் இருந்ததாகக் கூறி அதைத் தந்தார். “உங்கள் நாட்டின் பாரம்பரியத்தை நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள்” என்று உணர்ச்சி ததும்பக் கூறினார் குருஷேவ்.

 

 

பொய் சொல்லாத ஹிந்து

 

சுமார் நூற்றிஅறுபது ஆண்டுகளுக்கு முன்னர் துக்கீயர்களைக் கொடுமைப்படுத்துவதற்கு பெயர் பெற்ற ஸ்லீமன் (SLEEMAN), “ “ஒரே ஒரு பொய் சொன்னால் போதும், வீடு, மானம், மரியாதை, அனைத்தும் காப்பாற்றப்படும் என்பது போன்ற ஆயிரக்கணக்கான சம்பவங்களை என் வாழ்வில் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு ஹிந்து எந்தக் காலத்திலும் எதை இழப்பதாயிருந்தாலும் பொய் சொல்லி நான் பார்த்ததில்லை” என்றான்.

 

chennai4

போர்த்துக்கீசியரின் வியப்பு

 

500 ஆண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கீய நாட்டைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டின் ஒரு ப்குதியைப் பிடித்த போது அவர்கள் பிடித்து வைத்த ஹிந்து போர் வீரர்களை பரோலில் ஆறு மாதம் அனுப்ப பிணைத்தொகை கட்டி விட்டுத் தான் போக வேண்டும் என்று ஆணையைப் பிறப்பித்தனர். ஆனால் அப்படி பிணைத்தொகையைக் கொடுக்க ஆளில்லாத போர்வீரர்கள் பணம் கொடுக்க தங்களுக்கு யாரும் இல்லை என்று கூறித் தாமாகவே போர்த்துக்கீசியரிடம் திரும்ப வந்ததை அவர்கள் வியப்புடன் நோக்கினர்.

ஒரு ஹிந்துவை யாராலும் பொய் சொல்ல வைக்க முடியாது; அதை விட மரணத்தை அவன் ஏற்பான் என்று எழுதி வைத்தனர்.

 

 

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் கிரேக்க வரலாற்றாசிரியன் மெகஸ்தனிஸ் ஒரு ஹிந்து எப்போதுமே, எந்த நிலையிலும் பொய் சொல்ல மாட்டான் என்று எழுதி வைத்தான். அது இன்று வரை தொடர்வதைப் பார்க்கும் போது நமக்கு பெருமிதம் பொங்குவது இயல்பே!

 

 

ஹிந்துவின் அறப்பண்புகள் பொய் சொல்லாமை, திருடாமை, நாணயத்துடன் இருத்தல், ஹிந்து காலம் மாறலாம்; மோசமான அரசியல்வாதிகள் மாறி மாறி வரலாம்.

 

ஆனால் ஒரு நாளும் அவனது அடிப்படை அறப்பண்புகள் மாறாது.

ஆஸேது ஹிமாசல் – சேது முதல் இமயம் வரை ஹிந்து இந்தியா ஒன்று தான்.

 

ஹிந்துவின் தர்மம் ஒன்றே தான்!

 

அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது தான் நமது தேசீய தர்மம். இது உலக தர்மமும் கூட.

 

சொல்லவொணாத் துன்பத்தைச் சென்னையில் தந்த இயற்கைச் சீற்றம் நமக்கு ஆறுதலாக விட்டுச் செல்லும் செய்தி நமது பண்டைய அறப்பண்புகள் நம்மை விட்டு நீங்கவில்லை என்பதே!

–Subham-

 

 

One Hundred Quotations on God!—Part 1 (Post No. 2453)

bhakti

Date: 2 January 2016

 

Post No. 2453

 

Time uploaded in London :–  15-10

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

If you have faith: God is “now here”!

If you don’t have faith God is “nowhere”!!

 

betel leaf mala

1.God is the help of those who need help.

2.God stays long but strikes at last.

3.The mill of God grinds late, but grinds to powder.

4.Even if the God is willing to help, the priest is not ready to allow him.

5.As all the alphabets have letter A for their first, so has the world the eternal god for its beginning.

 

6.No ills of life ever touch those that alone cling to the feet of god.

 

7.God is above all.

8.All must be as god will

9.That god will have see, shall not wink.

10.Where god will help, nothing does harm.

 

 

11.What god will, no frost can kill.

12.When god will, no wind but brings rain.

13.The tree that god plants, no wind hurts it.

14.All things are possible with god.

15.When it pleases not god, the saint can do little.

16.He sits above that deals acres.

bangaluru perumal

17.Do the likeliest, and god will do the best.

18.God complains not, but does what is fitting.

19.God is no botcher.

20.God knows well which the best pilgrims are.

 

 

21.They are well guided that god guides.

22.To whom god gives the task, he gives the wit.

23.If god does not give us what we want he gives us what we need.

 

24.That never ends ill which begins in god’s name.

25.God, and parents, and our master, can never be requited.

 

26.God is a good man.

27.He who serves god, serves a good master.

 

28.God tempers the wind to shorn lamb.

29.God makes the back for the burden.

30.God sends cold after clothes.

 

ardhanari, dwarapudi, AP

31.Since god has not bent the top of the palm-tree, he has given a long neck to the giraffe (Arabic Proverb)

32.God strikes not with both hands, for to the sea he made heavens, and to rivers fords.

33.Heaven takes care of children, sailors, and drunken men.

34.God strikes with his finger, and not with all his arm.

35.God comes at last when we think he is farthest off

36.God provides for him that trusts.

37.He that sows, trusts in god.

38.God never sends mouth but he sends meat (When a new child is born god will always provide sufficient food for it).

39.The constancy of the benefit of the year in their seasons argues a Deity.

40.God helps them that help themselves.

 

14727_779716662082741_4768742221132287102_n

41.God reaches us good things by our own hands.  42.We must not lie down and cry, “God help us.”

43.God is a good worker, but he loves to be helped.

44.God gives the grain, but we must make the furrow (Bohemian Proverb)

45.For a web begun god sends the thread

46.God gives, but he does not lock the gate of the fold (Bulgarian Proverb).

47.Get thy spindle and thy distaff ready and god will send thee flax.

48.Man’s extremity is god’s opportunity (God is best able to help when man most needs him)

49.God’s help is better than early rising.

50.God’s help is nearer than the fair even.

 

Please see 50 more quotations in second part…………………………

To be continued………………………………………….

 

–Subham–

நகைச் சுவைக் கதை! மனைவியாற் பட்டபாடு! (Post No. 2452) Date: 2 January 2016 Post No. 2452 Time uploaded in London :– 14-40 ( Thanks for the Pictures ) DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. முன்னர் வெளியிட்ட கதையின் தொடர்ச்சிக் கதை:– இவ்வாறு நான் துபாஷ் வேலையில் தகல்பாஜி அன்னாத்தைகளுடன் தமாஷாயிருக்கும்போது, எனது குரு என்னைப் பார்க்க வந்தார். முன்னரே எனக்கும், அவருக்கும் ஒரு சபதமுண்டல்லவா? ஆகையால் அவர் வந்தவுடன் மெதுவாய்க் கொல்லைப்புஅம் போய், என் மனைவி நாறவல்லியை நயந்து, அடிபணிந்து, “அம்மணீ! பரதேவதா! உனக்குப் புண்ணியமுண்டே; ப்ருஷார்த்தமுண்டே; இகமுண்டே, பரமுண்டே, எல்லாமுண்டே. இன்று என் குரு வந்திருக்கிறார். ஓம், பாக்யவதி, ஐம்பது வசவு உன்னை வைவேன். நீ பொறுத்துக்கொள்ள வேண்டும்” – என்று வேண்டினேன். உடனே ஜகஜண்டி மனமிரங்கி, ஒரு வசவு ஜாஸ்தியாப் போனாலும் வட்டியும் முதலுமாய் வசூல் பண்ணிவிடுவேனென்றாள். நானும் சாப்பிட்டு முடிவதற்குள் ஐம்பது வசவு ஆகாதென்று மனம் தேறி உள்ளே வந்து, என் குரு முன்னிலயில் நின்று, “ ஜலமேண்டி தூக்கவில்லை, லவண்டி, பருப்பேண்டி கடையவில்லை பத்ரகாளி, பெருக்காமலிருக்கிறாயே பெருச்சாளி, தலைமயிர் ஏன் அவிழ்ந்திருக்கிறது தடிமுண்டே” என்று பிரண்டையின் மேல் வண்டிக்காலுருண்டதுபோல், மனங்கொண்டது மாளிகையாய் வைதேன். அவளும் கணக்கெண்ணிக்கொண்டு வந்தாள். எனது குருவும் எனக்கு நல்ல பெண்டாட்டி வாய்த்திருக்கிறாளென்று உள்ளமகிழ்ந்தார். சமையல் ஆயிற்று. சாப்பாட்டிற்கு உகார்ந்தோம்.என் சம்சாரம், ரசம் ஒரு சட்டியிலெடுத்துவது வார்க்கவந்தாள்; வசது ஐம்பதும் தீர்ந்துவிட்டது எனக்குத் தெரியாது. குருவின் இலையில் ரசத்தை விடவும், ஒரு துளி சிதறி அவர்துடையில் விழ அவர் ‘உஸ்’ அப்பாடா, என்றார். உடனே நான் கோபித்து, “கொட்டினாளா பரத்தை” என்று திட்டினேன். அதற்கவள், என்னை முறைத்துப் பார்த்து ‘ஆமடாபிலே, வெள்ளான்பிலே’ என்று கூறி என் தலையில் சட்டியைப் போட்டுக் கரண்டிக்காம்பாலடித்து, “வெட்கங்கெட்ட வெங்கம், ஐம்பது வசவுக்கு மேல் பொறுக்கமாட்டெனென்று சொல்லவில்லையோடா; ஆலி பூதமே! பின்னழலாம். முன்னே ரசச் சட்டிக்காசை கீழே வை” – என்றாள். அப்போது நான் ரசமெல்லாம் மேலே ஒழுகிக் கழுத்தில் சட்டிவாய் மாட்டிக் கன்றிச் சிவந்து திகுதிகுவென்றெரிய,’இஞ்சி தின்ற குரங்கு போல்’ விழித்தேன்.எனது குருவோ பயந்து நடுங்கிக் கொண்டு, “வீணாயுடைத்தது வேணதுண்டு என் தலையில் இந்தப் பூணாரம்பூண்ட புதுமைதனைக் கண்டதில்லை” –என்று கூறிக்கொண்டு சிட்டாய்ப் பறந்துவிட்டார். –சுபம்–

Angry Wife in the Elevator(1)

Date: 2 January 2016

 

Post No. 2452

 

Time uploaded in London :–  14-40

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

முன்னர் வெளியிட்ட கதையின் தொடர்ச்சிக் கதை:–

இவ்வாறு நான் துபாஷ் வேலையில் தகல்பாஜி அன்னாத்தைகளுடன் தமாஷாயிருக்கும்போது, எனது குரு என்னைப் பார்க்க வந்தார். முன்னரே எனக்கும், அவருக்கும் ஒரு சபதமுண்டல்லவா? ஆகையால் அவர் வந்தவுடன் மெதுவாய்க் கொல்லைப்புஅம் போய், என் மனைவி நாறவல்லியை நயந்து, அடிபணிந்து, “அம்மணீ! பரதேவதா! உனக்குப் புண்ணியமுண்டே; ப்ருஷார்த்தமுண்டே; இகமுண்டே, பரமுண்டே, எல்லாமுண்டே. இன்று என் குரு வந்திருக்கிறார். ஓம், பாக்யவதி, ஐம்பது வசவு உன்னை வைவேன். நீ பொறுத்துக்கொள்ள வேண்டும்” – என்று வேண்டினேன். உடனே ஜகஜண்டி மனமிரங்கி, ஒரு வசவு ஜாஸ்தியாப் போனாலும் வட்டியும் முதலுமாய் வசூல் பண்ணிவிடுவேனென்றாள்.

 

நானும் சாப்பிட்டு முடிவதற்குள் ஐம்பது வசவு ஆகாதென்று மனம் தேறி உள்ளே வந்து, என் குரு முன்னிலயில் நின்று, “ ஜலமேண்டி தூக்கவில்லை, லவண்டி, பருப்பேண்டி கடையவில்லை பத்ரகாளி, பெருக்காமலிருக்கிறாயே பெருச்சாளி,  தலைமயிர் ஏன் அவிழ்ந்திருக்கிறது தடிமுண்டே” என்று பிரண்டையின் மேல் வண்டிக்காலுருண்டதுபோல், மனங்கொண்டது மாளிகையாய் வைதேன். அவளும் கணக்கெண்ணிக்கொண்டு வந்தாள். எனது குருவும் எனக்கு நல்ல பெண்டாட்டி வாய்த்திருக்கிறாளென்று உள்ளமகிழ்ந்தார். சமையல் ஆயிற்று.

 

சாப்பாட்டிற்கு உகார்ந்தோம்.என் சம்சாரம், ரசம் ஒரு சட்டியிலெடுத்துவது வார்க்கவந்தாள்; வசது ஐம்பதும் தீர்ந்துவிட்டது எனக்குத் தெரியாது. குருவின் இலையில் ரசத்தை விடவும், ஒரு துளி சிதறி அவர்துடையில் விழ அவர் ‘உஸ்’ அப்பாடா, என்றார். உடனே நான் கோபித்து, “கொட்டினாளா பரத்தை” என்று திட்டினேன். அதற்கவள், என்னை முறைத்துப் பார்த்து ‘ஆமடாபிலே, வெள்ளான்பிலே’ என்று கூறி என் தலையில் சட்டியைப் போட்டுக் கரண்டிக்காம்பாலடித்து, “வெட்கங்கெட்ட வெங்கம், ஐம்பது வசவுக்கு மேல் பொறுக்கமாட்டெனென்று சொல்லவில்லையோடா; ஆலி பூதமே! பின்னழலாம். முன்னே ரசச் சட்டிக்காசை கீழே வை” – என்றாள்.

Angry_Wife_Cha

அப்போது நான் ரசமெல்லாம் மேலே ஒழுகிக் கழுத்தில் சட்டிவாய் மாட்டிக் கன்றிச் சிவந்து திகுதிகுவென்றெரிய,’இஞ்சி தின்ற குரங்கு போல்’ விழித்தேன்.எனது குருவோ பயந்து நடுங்கிக் கொண்டு,

“வீணாயுடைத்தது வேணதுண்டு என் தலையில் இந்தப்

பூணாரம்பூண்ட புதுமைதனைக் கண்டதில்லை”

–என்று கூறிக்கொண்டு சிட்டாய்ப் பறந்துவிட்டார்.

–சுபம்–

மாணாக்கராற்றுப்படை: பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்

IMG_1490

 

Date: 2 January 2016

 

Post No. 2451

 

Time uploaded in London :–  7-58 (காலைப்பொழுது)

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

சங்க இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பொன்ற ஆற்றுபடை நூல்களை நாம் படித்திருக்கிறோம். அதே வழியில் மாணவர்களை ஆற்றுப்படுத்தும் ஒரு நூலை பின்னத்தூர் பிரம்மஸ்ரீ அ. நாராயணசாமி ஐயர், 1900 ஆம் ஆண்டில்  யாத்தார். இந்த அரிய நூல் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது. இதற்கு உரையும் எழுதுவதாக முகவுரையில் எழுதியிருக்கிறார். அது கிடைக்கும்போது அதையும் வெளியிடுவேன்.

 

இவர் 18 நூல்களுக்கு மேல் இயற்றியுள்ளார். நற்றிணை முதலிய சங்க இலக்கிய நூல்களுக்கு அருமையான உரைகளை வெளியிட்டிருக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் வளர்த்த பெரியார்களில் இவர்தம் பணி குறிப்பிடத்தக்கது.

IMG_8897

 

IMG_8898

 

IMG_8899

 

IMG_8900

 

IMG_8901

 

IMG_8903

 

IMG_8904

 

IMG_8905

 

IMG_8906IMG_1491IMG_1492IMG_1493IMG_1494IMG_1495

–சுபம்–

பாவச் செயல்களைப் பரப்பாதே! (Post No. 2450)

mahabharata_

Written by S NAGARAJAN

 

Date: 2 January 2016

 

Post No. 2450

 

Time uploaded in London :–  6-06 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

வில்லி பாரதம்

 

பாவச் செயல்களைப் பரப்பாதே!

ச.நாகராஜன்

 

 

இரகசியம் விண்டுரைக்கும் வில்லிப்புத்தூரார்

 

வில்லிபாரதத்தில் ஏராளமான இரகசியங்களை வில்லிப்புத்தூரார் போகின்ற போக்கில் சொல்லிக் கொண்டே போவார். உன்னிப்பாகப் படிப்பவர்கள் அதை சட்டென்று பிடித்துக் கொண்டு நம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.

இன்றைய நாளில் ஃபேஸ் புக்கில் வம்பு வளர்க்கும் நம்மவர்களில் பலர் அதில் அடுத்தவர்களின் பாவச் செயல்களைப் பகிர்ந்து கொள்வதையே தமது முதல் கடமையாகக் கொண்டுள்ளனர்.

 

 

ஃபேஸ் புக்கை நலம் பரப்பும் வலிமை வாய்ந்த ஆயுதமாகப் பயன்படுத்தாமல் வம்பில் ஈடுபட்டிருப்பதால் நமக்கு நினைவாற்றல் குறைகிறது என்றும், மனச் சோர்வு ஏற்படுகிறது என்றும் விஞ்ஞான ஆய்வுகள் தற்போது தெரிவிக்கின்றன. ஆக இந்த பாவம் பகிரும் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு பாரதம் தரும் செய்தி ஒன்று உண்டு!

 

 

ஐயோ பாடல்

 

பாரதத்தில் வரும் அவலமான காட்சி ஒன்றைப் பார்ப்போம். திரௌபதியின் துகில் உரியும் காட்சி அது.

விகர்ணன் திரௌபதியை அலங்கோலமாக இழுத்து வர சூழ்ந்திருக்கும் அரசர் எல்லாம் “ஊமர்கணம்” போல அமர்ந்திருக்கும் கொடுமையான காட்சி.

திரௌபதி சபையோரை நோக்கி இது நியாயமா, நீதியைச் சொல்லுங்கள் என்று கேட்கிறாள்.

சபையோர் மௌனமாக இருக்கின்றனர்.

 

 

கவிஞருக்குப் பொறுக்கவில்லை. பிறக்கிறது ஒரு “ஐயோ” பாடல்.

(நேயர்கள் எமது “ஐயோ பாட்ல்கள்” கட்டுரையைப் படித்ததை நினைவு கூரலாம். படிக்காதவர்கள் படிக்கலாம்)

 

 

மையோ டரிக்கண் மழை பொழிய வாடுங் கொடியின் மொழிக்காகார்

வெய்யோ னெண்ணந்தனக்கா கார் விறல் வேந்தர் வெரூஉக் கொண்டு

பொய்யோ வன்று மெய்யாகப் புனையோ வியம்போ லிருத்தாரை ஐயோ வந்தக் கொடுமையையா முரைக்கும் பொழுதைக் கதிபாவம்

 

(சூது போர்ச் சருக்கம் பாடல் 236)

 

 

இதன் பொருள்: – (வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியார் உரையின் படி)

கௌரவர் சபையில் உள்ள பராக்கிரமம் உள்ள வேலாயுதத்தை ஏந்திய அரசர்கள் துரியோதனனிடத்தில் கொண்ட அச்சத்துடன்,  மையையும் செவ்வரியையும் உடைய கண்களிலிருந்து மழை போல நீர் பெருக வாடும் பூங்கொடி போன்ற திரௌபதியினது கேள்விக்குச் சரியான பதில் கூறத் திறனற்றவர்களாக இருந்ததால் கொடியவனாகிய துரியோதனனின் எண்ணத்திற்கு உடன்பட்டுக் கூறாதவ்ர்களாயும் பொய்யே இல்லாமல் உண்மையாகவே அழகாக எழுதிய ஓவியம் போலவே இருந்தார்கள்.

 

mahabharat

ஐயோ!

அந்தக் கொடுமையைக் குறித்து யாம் எடுத்துச் சொன்னாலும் கூட அப்பொழுது நமக்குப் பெரும் பாவம் உண்டாகும்.

 

ஒரு பெரிய இரகசியத்தை கவிஞர் இங்குச் சுட்டிக் காட்டுகிறார்.

ஒருவன் பாவச் செயலை இன்னொருவன் எடுத்துரைத்தால் அவ்வாறு உரைப்போனையும் அந்தப் பாவத்தில் பாதிப் பங்கு சேரும் என்பது அறநூல் கொள்கை.

 

 

ஆகவே ஐயோ, கவிதைக்கென்று நடந்ததைச் சொன்னாலும்  கூட  எனக்கும் அல்லவா அந்தப் பாவத்தில் பாதி வந்து சேரும் (ஐயோ அந்தக் கொடுமையை யாம் உரைக்கும் பொழுதைக்கு  அதிபாவம்) என்று புலம்புகிறார் வில்லிப் புத்தூரார்.

ஆகவே தான், ‘அடுத்த வீட்டுப் பெண் ஒடிப் போய் விட்டாள் என்று வீடு வீடாகச் சென்று வம்பளப்பதற்கு முன்னர் உன் வீட்டுப் பையன் வீட்டில் இருக்கிறானா என்று  உறுதி செய்து கொள்’ என்று சொன்னார்கள் பெரியோர்.

பாவச் செயல்களைச் செய்யாதே; பங்கு கொள்ளாதே; அதைப் பரப்பாதே என்பது அறநூல் தரும் அறிவுரை.

பரப்புவது பற்றித் தெரியாதவர்களுக்கு வில்லி பாரதத்தில் இந்த இடம் மாபெரும் இரகசியத்தை அறிவிக்கிறது.

இந்த ஐயோ பாடல் அழகான பாடல்!

 

 

பாவத்தைத் தடு; புண்ணியம் சேரும்

 

பாவம் புண்ணியம் பற்றிய இன்னொரு இரகசியத்தை கீசகன் வதைச் சருக்கத்தில் வில்லிப்புத்தூரார் அற்புதமாக விண்டுரைக்கிறார்.

 

 

பண்ணிய வினைகளின் பயனலாது தாம்                 எண்ணிய கரும மற்றி யாவரெய்தினார்                            திண்ணிய கீசகன் செய்த தீங்கிவன்               புண்ணியமானதாற் புகல்வதென்கொலாம்

(கீசகன் வதைச் சருக்கம் பாடல் எண் 83)

 

 

கீசகன் திரௌபதியை அடையக் கருதுகிறான். அந்தத் தீச்செயலால் அவனது தீவினைப் பயன் அவனை அழிக்கிறது. அதுவே பீமனுக்கு புண்ணியப் பயனாக இருந்தது என்று ஒரு அழகிய இரகசிய உண்மையை இங்கு வில்லிப்புத்தூரார் உலகினருக்கு எடுத்துரைக்கிறார்.

 

பாடலின் பொருள் : அவரவர் செய்த புண்ணிய பாவ ரூபமான செய்கைகளின் பயனை அடைவதல்லாமல் தாம் நினைத்த செயலை வினைப்பயனுக்கு மாறாக அடைந்தவர் யார் தான் இருக்கிறார்கள்? வலிமை வாய்ந்த கீசகனின் தீச்செயல் பீமனுக்குப் புண்ணியப் பயனைத் தருவதாக ஆயிற்று.

இதைப் பற்றி யாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது (புகல்வது என் கொல்?)

 

 

ஒரு இரகசியத்தை வெளியிடும் போதெல்லாம் கவிஞர் வில்லிப்புத்தூரார் திரைமறைவிலிருந்து வெளிவந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.

 

எத்தனை அற்புதமான கவிஞர் அவர்!

பாவச் செயலைத் தடுப்பவன் ஒருவனுக்கு பாவியின் தீவினையே புண்ணியமாகிறது. கீசகப் பாவியை அழிக்க வந்த பீமனுக்கு அந்தப் பாவியின் பாவமே புண்ணியமாகிறது.

 

புண்ணிய பாவ மெக்கானிஸத்தில் இந்த ‘ட்ரான்ஸ்பர்” நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

 

 

ஆக பாவச் செயலைப் பரப்பக் கூடாது என்பது மட்டுமல்ல; பாவச் செயலைத் தடுத்தால் புண்யம் தானே சேரும் என்பதும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு இரகசியம் தானே!

 

*******

Four Interesting Speech Anecdotes! (Post No. 2449)

Written by London swaminathan

 

Date: 1 January 2016

 

Post No. 2449

 

Time uploaded in London :–  17-25

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Lower Animals!

Henry Ward Beecher was once in the midst of an address. A drunken spectator interrupted him by crowing like a rooster. Beecher was imperturbable; looking at his watch he said, “What! Morning already? I would never have believed it, but the instinct of the lower animals are infallible.”

Xxx

 

Still raining! You may speak!!

 

Dr MacNamara on one occasion, while speaking in a marquee at Bridlington, during a torrential rain, said to the audience, “I am afraid I have kept you too long”.

“Go on, sir, It is still raining,” a voice in the rear replied.

 

Xxx

 

Blowing Whale!

General Sam Carey, the great Ohio orator, was finishing up an exceptionally fiery oration: “You cannot keep me down”, he shouted, “Though I may be pressed below the waves I rise again; you will find that I come to the surface, gentlemen.”

An old whaler, who happened to be in the audience, said, and not too quietly, “Yes, you come to the surface to blow.”

 

Xxx

I said nothing important!

On one occasion, when George III came out of the House of Lords after opening the session of Parliament, he addressed Lord Eldon thus: “Lord Chancellor, did I deliver the speech well?”

“Very well indeed, sir”, was the enthusiastic answer.

“I am glad of that”, replied the king, “For there was nothing in it.”

 

–Subham–

‘அன்பென்று கொட்டு முரசே!’– புத்தாண்டு சிந்தனைகள்! (Post No. 2448)

IMG_3382

Written by London swaminathan

 

Date: 1 January 2016

 

Post No. 2448

 

Time uploaded in London :–  9-31 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பாரதி பாடல்களில் மந்திர சக்தி இருக்கிறது!

காரணம்?

சதாசர்வ காலமும் “மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டுமென்று” அவர் கலைமகளை வேண்டி நின்றார். பாரதி பாட்டில் எனக்குப் பிடித்த வரிகள் எது என்று ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவிக்கிறேன். எல்லா வரிகளிலும் பாஸ்ட்டிவ் எனர்ஜி= ‘ஆக்க சக்தி’ பொங்கிப் பரிமளிக்கிறது.

‘ஒளிபடைத்த கண்ணினாய் வா, வா’ என்ற வரியா? ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!’ என்ற வரியா? ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற வரியா? அல்லது ‘எல்லாரும் அமர நிலை எய்தும் நிலையை இந்தியா உலகிற்களிக்கும்’ என்ற வரியா? அல்லது ‘தனி ஒருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்துவிடுவோம்’ என்ற வரியா?, ‘இல்லையென்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்’ என்ற வரியா?, ‘கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்’ – என்ற வரியா – என்று என்னால் முடிவு செய்ய முடியவில்லை.

 

நூற்றுக் கணக்கான மந்திரங்களை நமக்களித்த பாரதி, மேலும் ஒரு அருமையான சொற்றொடரைத் தந்துள்ளார். “அன்புதன்னில் செழித்திடும் வையம்”!

 

இந்த உலகம் வளம் பெற மழை வேண்டாம், உரம் வேண்டாம். ஆனால் அன்பு என்று ஒன்று இருந்துவிட்டால் தானாக மாதம் மும்மாரி மழை பெய்யும். நல்லறம், நல்லாட்சி நிலவும் இடங்களில் பயிர் செய்யாமலேயே தானியம் தானாக விளையுமாம்! இதை வள்ளுவனும் காளிதாசனும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டனர். புல்வாயும் (மான்), புலிப்போத்தும் ஒரு துறையில் நீருண்ணுமாம். இதையும் கம்பனும் காளிதாசனும் சொல்லிவிட்டனர்.

 

அன்பு பற்றி பாரதி வேறு என்ன சொன்னார்?

 

முரசு கொட்டுங்கள்!

அன்பென்று கொட்டு முரசே! – மக்கள்

அத்தனை பேரும் நிகராம்.

இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு

யாவரும் ஒன்றென்று கொண்டால்.

 

ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில்

ஓங்கென்று கொட்டு முரசே!

நன்றென்று கொட்டு முரசே! – இந்த

நாநில மாந்தருக்கெல்லாம்.

 

IMG_3326

அன்பே சிவம்!

அன்பு சிவம் உலகத் துயர் யாவையும்

அன்பினிற் போகுமென்றே- இங்கு

முன்பு மொழிந்துலகாண்டதோர் புத்தன்

மொழி எங்கள் அன்னை மொழி

 

மஹாகளியின் புகழ்

அன்பு வடிவாகி நிற்பள் துன்பமெலாம் அவள் இழைப்பள்

ஆக்கம் நீக்கம் யாவும் அவள் செய்கை – இதை

ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை

 

பாப்பாவுக்கு அன்பு ‘அட்வைஸ்’!

அன்பு மிகுந்த தெய்வம் உண்டு – துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

 

உயிர்களிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்

உண்மையென்று தனறிதல் வேணும்

 

புலியிடம் அன்பு! (ஞானிகளுக்கு அட்வைஸ்)

தின்னவரும் புலி தன்னையும் அன்பொடு

சிந்தையிற் போற்றிடுவாய் – நன்னெஞ்சே

அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்

அவளைக் கும்பிடுவாய் – நன்னெஞ்சே

 

 

சிவசக்தி

அன்புறு சோதியென்பார் – சிலர்

ஆரிருட் காளியென்று உனைப் புகழ்வார்;

 

 

விநாயகர் நான்மணி மாலை

பூமண்டலத்தில் அன்பும் பொறையும்

விளங்குக: துன்பமும், மிடிமையும், நோவும்,

சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்

இன்புற்று வாழ்க!

 

வாழ்க திலகன் நாமம்

அன்பெனும் தேன் ஊறித் ததும்பும்

புதுமலர் அவன் பேர்

 

ஜாதீய கீதம் (பாரத அன்னை பற்றி)

அறிவு நீ, தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை

மருமம் நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ;

தோளிடைவன்பு நீ, நெஞ்சகத்து அன்பு நீ

SURAT CHATURTHI

முரசு

சாதிக் கொடுமைகள் வேண்டாம் – அன்பு

தன்னில் செழித்திடும் வையம்;

ஆதரவுற்றிங்கு வாழ்வோம்- தொழில்

ஆயிரம் மாண்புறச் செய்வோம்

 

அன்பு குறித்து பாரதி பாடியது இத்தனைதான் என்று எண்ணிவிடாதீர்.  அவன் பாடல்களில் அன்பு என்ற சொல் இல்லாத இடங்களிலும் அன்பு ஊற்றெடுத்துப் பாய்வதைக் காணலாம்.

 

-சுபம்-

 

அக்னி பரீட்சையில் மீண்டு வந்த அற்புத மனிதர்கள்!(Post No. 2447)

singapore thimithi with amman face

Picture:–Singapore Mariamman Festival Fire walking

 

Written by S NAGARAJAN

 

Date: 1 January 2016

 

Post No. 2447

 

Time uploaded in London :–  7-17 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பாக்யா ஜனவரி 2016 முதல் தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

 

அக்னி பரீட்சையில் மீண்டு வந்த அற்புத மனிதர்கள்!

.நாகராஜன்

 

 Agni-pariksha-of-sita

Sita Devi’s Fire Walking

“1871ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று அமெரிக்க நகரான சிகாகோவில் ஏற்பட்ட தீ, 24 மணி நேரம் தொடர்ந்து எரிய, நகரில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இல்லங்களை இழந்தனர். 300 பேர்கள் இந்த மாபெரும் தீ விபத்தில் கொல்லப்பட்டனர்” – பஞ்ச பூதங்களில் ஒன்றான தீயின் கோர தாண்டவம் பற்றி அமெரிக்க வரலாறு

 

 

சீதா பிராட்டியை ராமன் அக்னியில் பிரவேசிக்கச் செய்ததையும் அக்னி ப்ரவேசம் செய்த சீதை கற்புக்கரசி என அக்னியால் புகழப்பட்டதையும் ராமாயணம் விளக்குகிறது.

 

தமிழகத்தில் ஆங்காங்கு மாரியம்மன் கோவில் திருவிழாக்களில்  பல நூறு ஆண்டுகளாக தீ மிதி வைபவம் நடைபெறுவதை நமது சரித்திரம் கூறுகிறது. இதில் கலந்து கொள்வோர் நெருப்புத் துண்டுகள் உள்ள பாதை வழியே பக்தியுடன் செல்வதையும் அவர்கள் கால் உள்ளிட்ட அங்கங்கள் எந்த வித பாதிப்புமின்றி இருப்பதையும் பார்த்து வியக்க முடிகிறது. இதை பூ மிதி திருவிழா என்றும் கூறுவது வழக்கம். அம்மன் தீயைப் பக்தர்களுக்குப் பூவாக மாற்றுவதாக ஐதீகம்.

 

இப்படி “ஃபயர் ஃப்ரூப்” ஆக இருப்பது சாத்தியம் தானா? பல காலமாக அறிவியல் உலகம் இதை ஆராய்ச்சி செய்து வருகிறது.

ஹிந்து இதிஹாஸங்கள் மட்டுமல்ல, உலகின் இதர மதங்களும் பல மகான்கள் தீ மீது நடந்ததைக் குறிப்பிடுகின்றன.

 

செயிண்ட் ஃப்ரான்ஸிஸ் ஆஃப் பாலா (1508ஆம் ஆண்டு) பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டைத் தன் கைகளில் ஏந்தியவாறே தன்னை வியந்து பார்த்துக் கொண்டிருந்த மக்களிடம்,” தூய மனமுடன் இறைவனை வழிபடுவோரின் கட்டளைக்கு அனைத்து உயிரினமும் கீழ்ப்படியும்” என்றார்.

 

சியனா நகரைச் சேர்ந்த செயிண்ட் காதரீன் கொழுந்து விட்டெரியும் இரும்பு உலையில் கரித் துண்டுகளின் மீது முகம் படிந்திருக்க நெடு நேரம் இருந்தார். அந்தப் புனிதப் பெண்மணி நெருப்பில் இருப்பதைப் பார்த்து திகைத்தவர்கள் அவரை அப்புறப்படுத்திய போது அவருக்கு ஒரு தீக்காயமும் ஏற்பட்டிருக்கவில்லை!

 

இந்தியாவில் குற்றமிழைக்காதவன் என்று தன்னை நிரூபிக்க விரும்புவோர் கொதிக்கும் எண்ணெயில் கையை விடுவது, தீ மீது நடப்பது, பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டை கைகளில் ஏந்துவது என இப்படிப் பலவற்றில் ஒன்றைச் செய்து தீயின் பாதிப்பு இன்றி மீண்டு தம்மை நிரபராதி என்று நிரூபிப்பது வழக்கம். இதே போல இடைக்காலத்தில் மேலை நாடுகளிலும் இந்தப் பழக்கங்கள் கையாளப்பட்டு வந்திருக்கின்றன.

charity-fire.jpgeast cheshire

Charity Fire Walking in East Cheshire Hospice (UK)

 

1929ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் மரிஸ்பர்க் என்ற இடத்தில் தீ மிதி விழா ஒன்று நடைபெற்றது. 15 மீட்டர் (அதாவது சுமார் 49 அடி) நீளமுள்ள குழியில் 12 டன் விறகு போடப்பட்டு அக்னி ஜொலிக்க 8 ஹிந்துக்களும் 4 ஆங்கிலேயரும் அந்த தீக்குழியில் வெற்றிகரமாக நடந்தனர். ஒரே ஒரு ஆங்கிலேயர் மட்டும் இரண்டு அடி மட்டுமே குழியைத் தாண்டுவதற்கு இருக்கும் நிலையில் அப்படியே கீழே விழுந்தார். உடனடியாக சமாளித்து எழுந்து நடந்தவரின் கால்களில் தீப் புண்கள் ஏற்படவே அவரை மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு குழுமிய பத்திரிகையாளர்களிடம் அவர், “கூட்டத்தின் ஆரவாரம் மிகவும் அதிகமாகவே என்னால் உயர் சக்தியின் மீது மனதை ஒருமுனைப்படுத்த முடியவில்லை. அது தான் நான் விழுந்ததற்குக் காரணம்”, என்று கூறினார்.

 

 

உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற மீடியமான டி.டி, ஹோம் -டேனியல் டங்ளஸ் ஹோம் – (Daniel Dunglas Home) செய்து காட்டாத அபூர்வமான அதீத உளவியல் ஆற்றல் நிகழ்வுகளே இல்லை எனலாம். அவரது பல நிகழ்ச்சிகளில் அவர், தான் “ஃபயர் ஃப்ரூபாக” இருப்பதை மட்டும் நிரூபிக்கவில்லை,  அடுத்தவரையும் அப்படி தீ பாதிக்காத தன்மையைக் கொண்டவராக அவர் ஆக்கினார், அது தான் ஆச்சரியம்!

“டையாலக்ட்ரிகல் சொஸைடி” (Diaelectrical Society) என்ற அமைப்பின் சார்பில் ஐவர் குழு ஒன்று அவரை நேரடியாக சோதனை செய்தது. ஹோம் பலரது கைகளிலும் தலைகளிலும் எரியும் கரித்துண்டுகளை வைத்தார். ஆனால் அவர்களோ தீயின் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருந்தனர்!

 

Daniel-Dunglas-Home-levitation

Daniel Dunglas

1869ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 17ஆம் தேதி நடந்த ஒரு அதீத உளவியல் அமர்வு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. ஒரு பெண்மணியின் வெண்மையான மஸ்லின் ஆடையில் ஹோம் பழுத்து எரியும் ஒரு கரித் துண்டத்தை வைத்தார். ஆடை எரியவே இல்லை. பின்னர் அங்கிருந்த மலர்களின் மீது எரியும் கரித்துண்டை வைக்க அங்கு பொசுங்கிய நாற்றம் வந்ததே தவிர மலர்களுக்கு ஒரு சேதமும் ஏற்படவில்லை. அதே அமர்வில் அங்கிருந்த ஹனிவுட் என்ற பெண்மணி மற்றும் லார்ட் லிண்ட்ஸே ஆகியோரது கையில் நன்கு சூடேறிய கண்ணாடி விளக்கைக் கையில் தர அதை அவர்கள் எந்த வித பாதிப்புமின்றி ஏந்தி நின்றனர். அப்போது தன் வாயில் ஒரு தீக்குச்சியை வைத்துக் கொண்டு அதை கண்ணாடியின் மீது ஹோம் உரச அந்தச் சூட்டினால் உடனே தீக்குச்சி பற்றி எரிய ஆரம்பித்தது.

இதே போல அருகில் யார் இருந்தாலும் அவர்கள் கையில் பழுக்கக் காய்ச்சிய நெருப்புத் துண்டுகளை கொடுப்பது அவரது வழக்கமானது.

 

 

இதனால் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பார்வையாளர்கள் திகைத்து நின்றனர்.

உலகின் அபூர்வ மனிதரான டேனியல் டங்ளஸ் ஹோம் (பிறப்பு 20-3-1833 இறப்பு 21-6-1886) பற்றிப் பல புத்தகங்கள் எழுதுமளவு சுவையான நிகழ்வுகளை அவர் வாழ்வு கொண்டிருந்தது.

 

SirChristopher

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சர் கிறிஸ்டோபர் ரென் என்பவர் (1632-1723) பிரிட்டனின் பிரசித்தி பெற்ற கணிதமேதை, வானவியல் நிபுணர் மற்றும் சிறந்த கட்டிடக் கலை நிபுணர். விண்ட்சார் டவுன் ஹால் கட்டிட்டத்தின் உட்புறத்தை மிகவும் ஆர்வமுடன் அவர் வடிவமைத்துக் கொண்டிருந்தார். அதன் மேற்கூரையை அழகிய தூண்கள் வலுவாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன. அதைப் பார்வையிட வந்த கட்டிட ஆய்வாளர்கள் போதுமான தூண்கள் இல்லை என்றும் ஆகவே கட்டிடத்தில் வலு போதுமானதாக இல்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர். ஆனால் ரென்னுக்கோ தன் திறமையின் மீது அபார நம்பிக்கை. என்றாலும் கட்டிட ஆய்வாளர்கள் திருப்தி தெரிவிக்கவில்லையே! அவர் உடனே நான்கு தூண்களை அழகுற அமைத்தார். கட்டிட ஆய்வாளர்கள் திருப்தி தெரிவித்தனர். ஆனால் உண்மையில் அந்தத் தூண்கள் மேற்கூரையைத் தொடவே இல்லை. அழகுக்காக தொடாமல் அமைக்கப்பட்டிருந்தன. ரென் சிரித்தார். இன்றும் அந்தத் தூண்கள் அந்தக் கட்டிடத்தில் உள்ளன!

 

England, P-381a 50 Pounds, Inv1766(b)(1000)

இதே போல அமெரிக்காவின் கட்டிடக் கலை நிபுணர் ஃப்ராங்க் லாயிட் ரைட் என்பவர் (1869-1956) விஞ்ஞான முறையில் கட்டிடங்களைக் கட்டி வந்தார். அவரை பிரபல தொழிலதிபரான ஹிப்பர்ட் ஜான்ஸன் தனக்கு ஒரு வீட்டைக் கட்டித் தருமாறு கேட்டுக் கொண்டார். ஒரு நாள் அந்த வீட்டில் ஜான்ஸன் தனக்கு மிகவும் வேண்டியவர்களைக் கூப்பிட்டு ஒரு விருந்து கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பெரிய மழை பெய்ய ஆரம்பித்தது. மேற்கூரை வழியாகத் தண்ணீர் ஒழுக ஆரம்பித்தது. சரியாக ஜான்ஸன் அமரிந்திருந்த இடத்தின் மேலிருந்து சொட்டு சொட்டாகத் தண்ணீர் விழ, அவரது வழுக்கைத் தலை மீது நீர் சொட்ட ஆரம்பித்தது. விருந்தினர்கள் இதைப் பார்த்துக் கொண்டிருக்க கோபமடைந்த ஜான்ஸன் அரிஜோனாவில் இருந்த கட்டிட  ரைட்டைப் போனில் அழைத்தார். “என்ன கட்டிடம் கட்டினீர்கள். மழையில் மேற்புறம் ஒழுக, என் தலை மீதே நீர் ஒழுகுகிறது” என்று அவர் கோபமாகக் கத்தினார்.

 

 

மறுமுனையிலிருந்து அமைதியான குரலில் வந்த பதிலை விருந்தினர்கள் அனைவரும் கேட்டனர்:” அது சரி, உங்கள் நாற்காலியை நீங்கள் ஏன் சற்று நகர்த்திப் போட்டுக் கொள்ளக் கூடாது!”

*******

A Novel Fortune-Teller (Acche Din aane waale hain)! (Post No. 2446)

IMG_1652 (2)

நல்ல காலம் வருகுது ( அச்சே தின் ஆனே வாலே ஹைன்) — பாரதியார்

Poem by Tamil Poet Subrahmanya Bharati (1882-1921)

 

Compiled by London swaminathan

 

Date: 1 January 2016

 

Post No. 2446

 

Time uploaded in London :–  00-16 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

  1. Kudukudu Kudukudu Kudukudu Kudukudu;

Auspicious days are ahead; Auspicious days are ahead;

Castes combine; conflicts cease

Speak up, speak up, Sakti, Durga!

Predict, predict propitious days for Vedapura.

 

  1. Destitution disappears; affluence is attained

Learning spreads apace; sin ceases to be;

If the learned take to trickery and commit crimes,

They will be ruined, alas, utterly ruined

 

  1. Commerce expands in Vedapura

Industry grows; workers prosper;

Sciences flourish, secrets come to light.

Power-plants multiply; know-how develops;

Fertile ideas arise in abundance.

 

 

4.Kudukudu Kudukudu Kudukudu Kudukudu;

Speak up, speak up, Malayala Bhavati:

Antari, Veeri, Chandika, Sulini;

Kudukudu Kudukudu;

 

  1. Kudukudu Kudukudu Kudukudu Kudukudu;

Masters are becoming brave;

Paunch sharinks; diligence spreads;

All forms of wealth grow apace;

Fear dies; sin perishes;

Scinces grow; caste declines;

Eyes open; justice is perceived;

Old madness vanishes all of a sudden;

Heroism is attained; so is honour;

Speak up, Sakti, Malayala Bhagavati

Virtue flourishes, virtue thrive.

 

-translated from Tamil into English by Prof. S Ramakrishnan (SRK)

Note: The original is from Kothaik kotthu (1939)

Bharati died on 11th September 1921 at the age of 39.

1960-Subramanya_Bharati

நல்ல காலம் வருகுது ( அச்சே தின் ஆனே வாலே ஹைன்) — பாரதியார்

 

புதிய கோணங்கி

குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;

சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;

சொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளீ!

வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு.

தரித்திரம்போகுது; செல்வம் வருகுது;

படிப்பு வளருது; பாவம் தொலையுது;

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்

போவான், போவான் ஐயோவென்று போவான்!

 

வேதபுரத்திலே வியபாரம் பெருகுது;

தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்

சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது’

யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது

மந்திரமெல்லாம் வளருது, வளருது;

 

குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

சொல்லடி, சொல்லடி, மலையாள பகவதீ!

அந்தரி, வீரி, சண்டிகை, சூலி

குடு குடு குடு குடு

 

குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது;

தொப்பை சுருங்குது, சுறுசுறுப்பு விளையுது;

எட்டு லட்சுமியும் ஏறி வளருது;

சாத்திரம் வளருது, சாதி குறையுது;

நேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது;

பழைய பைத்தியம் படீலென்று தெளியுது;

வீரம் வளருது, மேன்மை கிடைக்குது;

சொல்லடி சக்தி, மலையாள பகவதி;

தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.

–பாரதியார்

–SuBham–