
Research Article Written by london swaminathan
Date: 7 February 2016
Post No. 2517
Time uploaded in London :– 7-57 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact

சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய நிலப்பரப்பிலிருந்து தமிழர்கள், இந்தோநேஷியா வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் குடியேறினர். அப்போதெல்லாம் கடலுக்கும் நிலத்துக்கும் இடையிலுள்ள தூரம் குறைவு. ஒரு தீவிலிருந்து எளிதாகப் படகில், கட்டுமரத்தில் தாவித் தாவிச் சென்று விடலாம். அதற்கும் லடசக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கண்டங்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டேயிருந்தன.
1932 ஆம் ஆண்டில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சென்னை மைலாப்பூரில் நிகழ்த்திய சமயச் சொற்பொழிவுகளில் உலகமெங்கும் ஒரே மதம் – சநாதன தர்மம் – நிலவிய காலம் பற்றிப் பேசியிருக்கிறார். அதன் மிச்ச சொச்சங்களையே இன்று உலகம் முழுதும் காணமுடிகிறது. உலகில் ஒரு ஆளின் பெயரால் அல்லது இனத்தின் பெயரால் இல்லாத மதம் இந்து மதம் ஒன்றே! பாரசீகர்களும் கிரேக்கர்களும் ‘ச’ என்பதைச் சொல்ல முடியது. ஆகையால் ‘சி’ந்து நதிக்கரையின் அப்பால் இருப்பவர்கள் ‘ஹி’ந்துக்கள் என்று சொன்னார்கள். அந்தப் பெயரே இன்று சநாதன தர்மத்துக்கு நிலைத்துவிட்டது. சநாதன தர்மம் என்றால் ‘ஆதியந்தமற்ற அற வழி’ என்று பொருள். இதே போல ஒரு இனத்தின் பெயரால் இல்லாத மொழி சம்ஸ்கிருதம் ஒன்றே. இதுவும் ஆதியந்தமற்ற மொழியின் பிற்கால (செம்மைப்படுத்தப்பட்ட) வடிவம்!
என்ன சொன்னார் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள்?
ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் விபூதி போலப் பூசிக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள். அதற்கு சிவா டான்ஸ்/ நடனம் என்று பெயர் என்று தான் படித்த புத்தகத்தின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அவர் சொன்ன இந்த விசயம் என் மனதில் பதிந்தவுடன் என்றாவது நேரில்சென்று ஆராய வேண்டுமென்று எண்ணியிருந்தேன். அருமையான வாய்ப்பு கிடைத்தது.
எனது சம்பந்தி, நாங்கள் அனைவரும் குடும்ப சகிதம் சிட்னி நகருக்கு வருவதை அறிந்து பெருந்தொகை செலவிட்டு இந்திய- ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் வாங்கியிருந்தார். எனக்கும் கிரிக்கெட்டிற்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. கவாஸ்கர் எத்தனை ‘கோல்’ போட்டார்? என்று கேட்பவன் நான். ஆகையால் அவரிடம், மரியாதையுடன் அந்த டிக்கெட்டை வேறு ஒருவருக்குக் கொடுக்கும்படி பணிவுடன் வேண்டிக்கொண்டுவிட்டு நான் ஆஸ்திரேலிய மியூசியத்துக்கு விரைந்தேன். எனது மனைவியும் மக்களும் மட்டும் கிரிக்கெட் பார்க்கச் சென்றனர். நான் ஆஸ்திரேலிய மியூசியத்துக்குப் போய் என் வயது 68 என்று சொன்னவுடன் எனக்கு முதியோருக்கான தள்ளுபடி விலை டிக்கெட் கொடுத்தனர். மியூசியம் மேப்/வரைபடத்டை வாங்கிக்கொண்டு பழங்குடி மக்கள் பிரிவு எது என்று நோட்டமிட்டேன். அதுதான் முதல் பிரிவு! ஏக சந்தோஷம்!
ஐ போன், ஐ பேட், இரண்டு காமிராக்கள் சகிதம் உள்ளே பிரவேசித்தேன். பேரானந்தம்?
ஒவ்வொரு எழுத்தாகப் படிதத்தில் சட்டென மனதில் பதிந்தவிஷயம்!
அவர்கள் நிலம், நீர் தீ, காற்று, மலை, கடல், மனித இனம், மரணம் ஆகியன பற்றிக் கொண்டுள்ள விஷயங்களைப் படிக்கையில் வேத உபநிஷத மந்திரங்களைப் படிப்பதுபோல ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. இன்று ஒரு சில விஷயங்களை மட்டும் காண்போம்.

ஆஸ்திரேலியாவின் நட்ட நடுவில், அதி பயங்கர பாலைவனப் பொட்டல் காட்டில் ஒரு பெரிய மலை நிற்கிறது. இதற்கு அய்யர் மலை என்று பெயர். சர் ஹென்றி அய்யர் என்ற ஆஸ்திரேலிய அதிகாரியின் பெயரைச் சூட்டி இருக்கின்றனர். அவருக்கு அய்யர் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது எப்படி என்பதை வேறு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதுகிறேன்.
அய்யர் ராக்ஸ்= கைலாஷ் மலை
அய்யர் ராக்ஸ் என்பதன் உண்மைப் பெயர் உள்ளூரு. இதைப் புனித மலையாக வணங்குகின்றனர் அங்கே வாழும் பழங்குடி மக்கள். அதிபயங்கர பொட்டல் காட்டில் தன்னந்தனி ராஜாவாக விளங்கும் இந்த மலையைப் பார்த்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது இமய மலையில் தன்னந்தனியனாக நீட்டிக் கொண்டிருக்கும் கைலாஷ் மலைதான். உலகில் பூஜியாமா (ஜப்பான்) எரிமலையாகட்டும், மவுண்ட் மேரு (கென்யா) ஆகட்டும். எது, எது சிவலிங்கம் போல தனியாக நிற்கிறதோ அவை எல்லாம் புனிதப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. ஆகவே ஆஸ்திரேலியாவில் தன்னதனியாக நிற்கும் இந்த உள்ளுரு என்பதை அவர்கள் வழிபடுவது பொருத்தமே. இதையும் காஞ்சி சுவாமிகள் சொன்ன விபூதி பெயிண்ட், சிவா டான்ஸ் என்பதையும் பொருத்திப் பார்க்கையில் மேலும் நெருக்கம் புலப்பட்டது.
நான் தினசரி சந்தியா வந்தனம் செய்யும் பிராமணன் ஆனதால், “உத்தமே சிகரே தேவி” என்ற காயத்ரீ தேவி வணக்கமும் மனதில் பளிச்சிட்டது. பிராமணர்கள் தினமும் மூன்று முறை காயத்ரீ தேவியை மலை உச்சியிலிருந்து அழைத்து, இதயத்தில் நிறுத்தி (ஆவாஹனம் செய்து) வழிபாடு செய்துவிட்டு “தாயே எனது வழிபாடு இப்போதைக்கு முடிந்துவிட்டது. போய் வருவாயாக” என்பர். ஆக, “ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கும்” காயத்ரீ (சூரிய தேவன்/தேவி) மலை உச்சியில் வைக்கப் படுவதால் மலை வழிபாடு வேதத்தில் உள்ள வழிபாடாகும்.
இது எல்லாம் ஒரு புறமிருக்க அந்தப் பழங்குடி மக்களின் பெயரைப் படித்த போது உடலில் மின்னலை பாய்ந்தது. செந்தமிழ் சொல்லைக் கேட்டவுடன் ‘இன்பத் தேன் வந்து பாய்ந்தது” அந்தப் பழங்குடி மக்களின் பெயர் ‘அணங்கு’ என்பதாகும். இந்த தூய தமிழ் சொல், சங்கத் தமிழ் இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் விதந்து ஓதப்படுகிறது. காடு, மலை, ஆறு கடல், மரம் கொடி, புனித இடங்கள், தோப்பு, துறவு ஆகிய இடங்களில் வாழும் புனித தேவதையை தமிழர்கள் அணங்கு என்பர். அதே பெயரை தங்களுக்கு வைத்துக் கொண்டு புனித உள்ளுரு மலையை அவர்கள் வழிபடுவது சாலப்பொருத்தமே. மேலும் ‘உள்ளூர்’ என்பதில்கூட தமிழ் வாசனை அடிக்கிறது!
நான் தினமணி பத்திரிக்கையில் சீனியர் சப் எடிட்டராக இருந்த போது பிரபல நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆஸ்திரேலியா சென்று வந்தது பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் அவர் தனக்காக ஆஸ்திரேலிய கலைத்துறை ஏற்பாடு செய்த பழங்குடி மக்களின் நடனத்தைப் பார்த்தபோது குறைந்தது 25 தமிழ்ச் சொற்களையாவது எண்ண முடிந்தது என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. என்ன பொருத்தம்! இந்தப் பொருத்தம்!

மூத்தோர் சொல் அமிர்தம்
பழங்குடி மக்களின் நம்பிக்ககள் பற்றி ஒரு போர்டு எழுதி வைத்திருந்தனர். அதைப் படித்துத் திகைத்து நின்றேன். அவர்கள் மிகவும் மதிப்பது மூத்தோர்கள் என்றும் அவர்களுடைய ஞானமும், அறிவும் பெரிதும் மதிக்கப்படும் என்றும் அவர்களுக்கு பழங்குடி இனங்களிடையே தனி மதிப்பும் மரியாதையும் உள்ளது என்றும் எழுதி இருந்தனர். இது இந்துக்களின் நம்பிக்கை. உலகில் வேறு எந்த மத நூலிலும் இல்லாத விஷயம் “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்பதாகும் அது மட்டு மல்ல தினமும் இந்துக்கள் செய்யும் பஞ்ச யக்ஞத்தில் ஒன்று “தென்புலத்தார்” கடன். இதைத் திருவள்ளுவரும் பல குறள்களில் பாடியிருக்கிறார். முன்னோர்களுக்குக் கடன் செலுத்துவதை, இந்துக்கள் போல வேறு எவரும் செய்வதில்லை.
ரிக் வேதம் என்பது உலகின் மிகப் பழைய நூல். அதற்கு அருகில் கூட வேறு எந்த மத நூலும் வர முடியாது. அவ்வளவு பழமையான நூல். அதில் ஆடிப் பாடி, ஆனந்தக்கூத்தாடும் ரிஷி முனிவர்கள் அவர்களுடைய முந்தையோர் பற்றிப் பாடுகின்றனர். “பூர்வேப்யோ ரிஷி:” என்று மந்திரம் ஓதுகின்றனர். அவ்வளவு பழமையானது சநாதன மதம். ஆக முந்தையோரைப் போற்றிப் புகழ்வது வேத வழக்கு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இதைவிட அருமையான விஷயம் அந்த மியூசியம் போர்டில் இருக்கிறது . ஆஸ்திரேலியப் பழங்குடிகள் எல்லா முதிய ஆண்களையும் மாமா (அங்கிள்) என்றும், முதிய பெண்களை மாமி (ஆண்ட்டி) என்றும் மரியாதையுடன் அழைப்பர் என்று எழுதப்பட்டது. இன்று வரை இந்துக் குடும்பங்களில், குறிப்பாகத் தமிழ்க் குடும்பங்களில் இது பின்பற்றப்படுகிறது.
பழங்குடி மக்கள், அவரவர்கள் இனத்தை (கோத்திரம்) மதித்தனர். ஒருவருக்குப் புனிதமான விலங்கை மற்றவர் வேட்டையாட மாட்டார்கள். நம்முடைய கோத்திரப் பெயர்களும் இனப் பெயர்களும் பிராணிகளின் அடிப்படையில் எழுந்தவையே. உலகிலேயே முதல் முதல் கொடிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்திய இனம் இந்து இனம் என்பதை கொடிகள், சின்னங்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன். காஸ்யப (ஆமை), கௌசிக (ஆந்தை), ஜாம்பவான் (கரடி அடையாளம் உடைய இனம்), ஜடாயு, சம்பாதி (கழுகு அடையாளம் பொறித்த இனம்) அனுமான் (குரங்கு முத்திரை பொறித்த இனம்) என்பதையெல்லாம் காணுகையில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தங்களை ஏன் பிராணிகளின் பெயரில் அழைத்துக் கொண்டனர் என்பம்து வெள்ளிடை மலையென விளங்கியது.
ஆராய்ச்சிக் கட்டுரை தொடரும்………….
–சுபம்–
Raghavan Narayanasamy
/ February 7, 2016Excellent expecting more
On Sunday, February 7, 2016, Tamil and Vedas
wrote:
> Tamil and Vedas posted: ” Research Article Written by london swaminathan
> Date: 7 February 2016 Post No. 2517 Time uploaded in London :– 7-57 AM
> ( Thanks for the Pictures ) DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
> DON’T USE THE PICTURES; THEY A”
>
அ
/ September 1, 2016அது அய்யர் மலையோ, அவர் பெயர் ஹென்றி ஐயரோ அல்ல, அது Ayer, Ayer Rocks. எல்லாவற்றையுமே இந்து மதத்தோடு ஒற்றிப் பார்த்ததால் அப்படி தோன்றியிருக்கலாம். வியப்பேதுமில்லை )
Tamil and Vedas
/ September 1, 2016You have not all my articles on Australia in my blog. I have already written it.
புனித அய்யர் மலையைப் பற்றிய கதைகள்! (Post No. 2533)
Written by london swaminathan
Post No. 2533
Date: 12th February 2016
Time uploaded in London காலை 10-32
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
swami_48@yahoo.com)
இமயமலையில் பெரும் பனிநிறைந்த பொட்டை வெளியில் கயிலாயம் தனியாய் நிற்கிறது. அதை நாம் சிவனின் வடிவமாக, உறைவிடமாக வணங்குகிறோம். அதுபோல செந்நிறக் கல வகையாலான ஒற்றைக் கல் இது. சூரிய ஒளியில் கயிலாயம் தகதவென மின்னுவது போல இதுவும் செந்நிறப் பிழம்பாகக் காட்சிதருகிறது. வெய்யிலுக்கு ஏற்ப இதன் நிறமும் மாறுகிறது. இதன் உயரம் 1115 அடி; சுற்றளவு ஆறு மைல். தென் ஆஸ்திரேலியப் பிரதமராக இருந்த ஹென்றி அய்யர்ஸ் என்பவரின் பெயரை வெள்ளைக்காரகள் இம்மலைக்குச் சூட்டி ஆக்ரமித்தார்கள். ஆயினும் பழங்குடி மக்களின் உரிமை வலுக்கவே 1985 ஆம் ஆண்டில் இம்மலையை, ஆஸ்திரேலிய அரசு, பழங்குடி மக்களிடம் ஒப்படைத்து, பின்னர் 99 ஆண்டு குத்தகைக்கு எடுத்துள்ளது. இன்று இது பெரிய சுற்றுலாத் தலம். ஆயினும் எளிதில் போக முடியாது. பக்கத்திலுள்ள அலீஸ் ஸ்பிரிங்ஸ் என்னும் ஊரே 450 மைல் தொலைவில் இருக்கிறது. விமானத்தில்தான் செல்ல முடியும்.
There are references in my other articles as well. More information is in my BBC Tamil Service Broadcast between 1987 -1989; published in book form in Tamil: Vinavungal Vidai Tharuvom published in 1992.
அ
/ September 3, 2016ஆம் ஐயா, நான் மறுக்கவில்லை. ஆனால், அது Ayers – அயர், ஐய்யர் என்று அழுத்தி உச்சரித்தால் நம்மூரில் உடனே அதற்கு ஒரு முத்திரை குத்திவிடுவார்கள். புது கதைகளும் தோன்றிவிடும். ரெடியை ரெட்டி என்று சொல்லும்போது 😉