
Compiled by London swaminathan
Date: 25 February 2016
Post No. 2573
Time uploaded in London :–காலை 8-04 மணி
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Please go to swamiindology.blogspot.com
OR
tamilandvedas.com
அமெரிக்காவில் ஒரு நகரில் நடந்த நிகழ்ச்சி இது. ஒரு பள்ளிக்கூட ஆசிரியை, சிக்னலில் சிவப்பு விளக்கு இருந்தபோதிலும், காரை ஓட்டிச் சென்றார். போலீசார் பிடித்து கோர்ட்டுக்குக் கொண்டுபோனார்கள்.
நீதிபதிக்கு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த இளம் ஆசிரியை, மிகவும் உரிமையுடன், “ கனம் நீதிபதி அவர்களே! நான் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. உடனே பள்ளிக்குச் சென்று மாணவிகளுக்குப் பாடம் நடத்த வேண்டும். ஆகையால் எனது வழக்கை உடனே பைசல் செய்யவேண்டும் என்றாள்.
பள்ளிக்குட ஆசிரியை என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்திலேயே நீதிபதியின் கண்கள் பளிச்சிட்டன. வாயோ ஒரு ஏளனப் புன்னகைஅயைச் சிந்தியது!
“என்ன சொன்னாய்? நீ ஒரு ஆசிரியையா? இவ்வளவு காலமாக யாராவது ஒர் வாத்தியார் அகப்படமாட்டாரா என்று காத்திருந்தேன். அதோ அந்த மூலையில் ஒரு மேஜை இருக்கிறதே; அதில் போய் உட்கார்.
“நான் (சிக்னல்) சிவப்பு விளக்கை மீறிச் சென்றேன்; அது தவறுதான்” – என்று 500 முறை (இம்பொசிஸன்) எழுதிக்கொண்டு வா. அப்புறம் தீர்ப்பு சொல்கிறேன் என்றார்.
இதற்குப் பெயர், ஆங்கிலத்தில் , ஸ்வீட் ரிவெஞ்ச்!
Xxx
ஒரு புதிய வக்கீல்; கோர்ட்டுக்கு வந்தார். நீதிபதி முன்னிலையில் நின்றார். கட்சிக்காரர், குற்றவாளிக் கூண்டில் நின்றார். வழக்கறிஞருக்கு வாழ்க்கையிலிதுதான் முதல் வழக்கு. உடல் நடுங்கியது. நாவில் பேச்சே வரவில்லை; திக்கித் திணறி,
“ கனம் நீதிபதி அவர்களே! எனது வாடிக்கையாளரின் துரதிருஷ்டம்…….
“ கனம் நீதிபதி அவர்களே! எனது வாடிக்கையாளரின் துரதிருஷ்டம்…….
“ கனம் நீதிபதி அவர்களே! எனது வாடிக்கையாளரின் துரதிருஷ்டம்…….
—என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்.
நீதிபதி சொன்னார்:
“ தொடர்ந்து பேசுங்கள். இதுவரை நீங்கள் சொன்னதை கோர்ட் அப்படியே நம்புகிறது!”
என்றார்.(கோர்ட்டில் பலத்த சிரிப்பு)
வாடிக்கையாளரின் துரதிருஷ்டம் — அனுபவமில்லாத, புதிய வக்கீலிடம் கேஸ் சிக்கிக்கொண்டது.
xxxx
ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்
You must be logged in to post a comment.