என்னதான் உனக்குத் தெரியும்? சொல்லித் தொலை!!(Post No.2934)

reindeer 1

written by London swaminathan

Date: 1 July 2016

Post No. 2934

Time uploaded in London :– 18-30

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஒரு கணவன் – மனைவி ஜோடி, ஐரோப்பாவிலுள்ள பின்லான்துக்குப் போய்விட்டு, அமெரிக்காவுக்குத் திரும்பி வந்தனர். பின்லாந்தில்,  ஒரு அழகான பின்னிஷ் பெண்ணைப் பார்த்தனர். அவளுக்கு, செக்கச் செவேல் என்று ஆப்பிள் பழம் போல கவர்ச்சியான கன்னம். அவள், வேலை தேடி அமெரிக்காவுக்க் வரப்போவதாகச் சொன்னாள். உடனே அந்த தம்பதி நாமே வேலைக்கு வைத்துக் கொள்ளலாமே என்று கருதி, அப்போதே பேட்டியைத் துவக்கினர்.

 

உனக்கு சமைக்கத் தெரியுமா?

எனக்கு சமைக்கத் தெரியாது. என் வீட்டில் அம்மாவே சமைத்து விடுவாள்.

 

போகட்டும்; வீட்டு வேலைகள் செய்யத் தெரியுமா?

எனக்கு எப்படி அது தெரியும்? என் அக்காவே எல்லா வீட்டு வேலைகளையும் செய்து விடுவாள்

 

பரவாயில்லை; எங்கள் வீட்டுக்கு வா. குழந்தைகளைப் பார்த்துக்கொள்.

 

அம்மாடியோவ், எனக்கு அதெல்லாம் தெரியாது. என் தங்கைதான் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டாள்.

 

துணிகளைத் தைக்கத் தெரியுமா?

அய்யய்யோ, அதை எல்லாம் அத்த்தைதான் செய்வாள்; எனக்கு எப்படி தெரியும்?

 

பின்னர் என்னதான் உனக்குத் தெரியும்? சொல்லித்தொலை,  என்று கணவனும் மனைவியும் உரத்த குரலில் கத்தினார்கள்.

 

அந்தப் பெண், இந்தக் கேள்விக்காகவே காத்திருந்தது போல முகம் எல்லாம் மலர்ந்தது. ஆர்வத்தோடு பதில் சொன்னாள்:

 

எனக்கு, ரெயின்டீர் மான்களில் இருந்து பால் கறக்கத்தெரியும் என்றாள்!!

 

(யாதவர் வீட்டுப் பெண்கள், பசும்பால் கறப்பது போல, பின்லாந்து நாட்டில் பெண்கள், ரெயிண்டீர் மான்களில் இருந்து பால் கறப்பது வழக்கம்)

Mongolia girl riding reindeer

–SUBHAM-

காதல் பைத்தியமும் பக்திப் பைத்தியமும் (Post No. 2933 )

sambandar appar meet

Article written by London swaminathan

 

Date: 1 July 2016

Post No. 2933

Time uploaded in London :– 14-26

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

காதல் வயப்பட்ட ஆணோ பெண்ணோ என்ன செய்வார்கள் என்று வடமொழியில் ஒரு அழகான ஸ்லோகம் இருக்கிறது. இதை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இன்பம் பயக்கும்.

 

IMG_4415

அஷ்டாங்க மைத்துனம்

 

ஸ்மரணம் கீர்த்தனம் கேலி: ப்ரேக்ஷணம் குஹ்யபாஷணம்

சங்கல்போ(அ)த்யவசாயஸ்ச க்ரியாநிஷ்பத்திரேவ ச

 

-விருத்த வசிஷ்டர்

 

பொருள்:-

ஒரு பெண்ணை நினைத்த்ல், அவளைப் பற்றிப் பிதற்றல், , அவளுடன் விளையடல், அவளைப் பார்த்தல் (அடிக்கடி), அவளுடன் கிசுகிசு ரஹசியம் பேசல் (மொபைல்போன், பேஸ்புக், ஈ மெயில் மூலம்), அவளுடன் அனுபவிக்க வேண்டியது பற்றி எண்ணுதல்/கனவு காணுதல், அவைகளை அடைய திட்டமிடல்/முயற்சி செய்தல், இதன் காரணமாக செய்ய வேண்டிய கடமைகளை மறந்துபோதல் என்று அஷ்டாங்க மைதுனம் (எண்வகைப் புணர்ச்சி) பற்றி முதுவசிட்டன் சொல்லுகிறான்.

 

இந்தக் கருத்துகளை அப்பர் பெருமான் தனது தேவாரப் பாடலில் அப்படியே வடித்துள்ளார்:

 

அப்பர் தேவாரம்

 

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;

அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தே ஆசாரத்தை

தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்

தலைப் பட்டாள் நங்கை தலைவன் றாளே

—–தேவாரம், ஆறாம் திருமுறை, பாடல் 258

 

சங்க இலக்கியத்தில் அகப்பாட்டுகளைப் படித்தோருக்கு காதலன், காதலியின் நிலை விளங்கும். அப்பர் கூறிய பக்திப் பித்தை, பைத்தியத்தை அங்கும் காணலாம்.

appar2

கடவுளை காதலனாக, தாயாக, தந்தையாக, நண்பனாக, எஜமானனாக,வேலைக்கரனாக பார்த்து உரிமை கொண்டாடும் அற்புதமான அணுகுமுறை இந்துமதத்தில் மட்டுமே உண்டு. இதை அடியார்களின் பாடலில் காணலாம். இமயம் முதல் குமரி வரை பல மொழிகளில் இக்கருத்துகள் உள. நமது காலத்தில் பாரதியார், இதே போல கண்ணபிரானைப் பாடிப் பரவியுள்ளார்.

 

பக்தனின் ஒன்பது நிலைகளை நாரத பக்தி சூத்திரம், பாகவதம் ஆகியவற்றிலும் காணலாம்.

 

பாகவத புராணத்தில் வரும் ஸ்லோகம் இதோ:

 

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம்

அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம் (பாகவதம் 7-5-23)

 

அதாவது கடவுளின் நாமத்தைக் 1.கேட்டல், பக்திப் பரவசத்துடன் 2.பாடுதல், கடவுளின் பெயரை சதாசர்வ காலமும் 3.நினைத்தல், அவனுடைய பாதாரவிந்தங்களில் 4.பணிவிடை செய்தல், பூவாலும் இலையாலும் பொன்னாலும் மணியாலும் அவனை 5.அர்ச்சித்தல், அவனை சிரம் மேற் கைகூப்பி 6.வணங்குதல், அவனுக்கு 7.அடிமைபோல பணியாற்றல், அவனை உயிருக்குயிரான 8.நண்பனாகக் கருதல், இருதயபூர்வமாக 9.தன்னையே அர்ப்பணித்தல் ஆகிய ஒன்பது செயல்களைப் பக்தனிடம் காணலாம். இவைகளை ஆண்டவனுக்கு மட்டுமின்றி இறையடியார்க்கும் செய்வர்.

 

ஆக, பக்திப் பைத்தியமும் காதல் பைத்தியமும் ஒன்றே! இவ்வளவையும் எழுதிய  நம்முடைய முன்னோர்கள் இன்னொரு விஷயத்தையும் தெளிவாக எழுதிவைத்து விட்டனர்.

 

பக்திப் பைத்தியம், பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும். அது நித்தியானந்தம், பிரம்மானந்தம் தரும். பக்திக்கடலில் நீந்தி, முக்தி நிலையை அடைந்து விடுவர்.

 

ஆனால் காதல் பைத்தியமோ, சிற்றின்பமே; மேலும் அது சம்சார சாகரத்தில் — அதாவது பிறவிப் பெருங்கடலில்  – நம்மை மூழ்கடித்து, தத்தளிக்கச் செய்துவிடும். இது திகட்டக்கூடியது. முன்னது தெவிட்டாத சுவயுடைத்து என்பது ஆன்றோர்களின் அனுபவ மொழி!

 

–சுபம்–

SEXUAL LOVE and BHAKTI/devotion are same!

IMG_4415

Article written by London swaminathan

 

Date: 1 July 2016

Post No. 2932

Time uploaded in London :– 9-58 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

A girl or a boy who has fallen in love is in the same state of a devotee who has fallen in love with God. Hinduism allows to look at or treat god as a mother, father, servant, lover, friend, boss etc. Bharatiyar, the greatest of modern Tamil poets, has sung about Lord Krishna as a mother, friend, servant etc.

 

Eight ways of Enjoying a girl:-

A beautiful Sanskrit couplet/sloka explains the condition of a lover:-

Ashtaanga Maithunam

Smaranam kiirtanam kelihi prekshanam guhyabhaasanam

Sankalpo adhyavasaayas ca kriyaanishpattireva ca

Meaning:

Thinking of her, talking about her, playing with her, seeing her often, talking with her (ear to ear), thinking of the ways of enjoying her, taking steps towards this goal, sacrificing all the duties just for her are known as Ashtanga Maithunam—

–Vrdda vasishtar said.

 

appar2

Seventh century Tamil saint Appar alias Tirunavukkarasu also said the same thing about Bhakti/ devotion in his Thevaram verse. It is like a girl falling madly in love with a youth. Then she sees him everywhere and in everything. We have lot of such references in the Sangam Tamil literature as well.

 

“To begin with, she heard of His name;

She heard of His way of life;

Then she heard of His Town (Aroor);

Yet she became mad after Him;

She quit her mother and father that very day;

She forsook the mores of the worldly;

She became oblivious of herself; she became nameless;

The woman was oned with the feet of her Lover.”

–Appar/Tirunavukkarasar Thevaram, The Sixth Book, verse 258

 

Narada Bhakti Sutram and other Sanskrit texts also explain it beautifully: —

Sravanam: Hearing about God

Kirtanam: Reciting God’s name

Sramanam: Remembering him in everything he sees or hears

Padasevanam: Service of him as manifested in all beings

Arachanam: Worshipping him in images and holy places

Vandanam: Showing proper respect to all holy images, holy persons, symbols

Dasyam: Feeling as his servant

Sakhyam: Treating God as his intimate friend

Atma nivedanam: Surrendering oneself to Him.

sambandar appar meet

Therefore, Bhakti i.e devotion to God and Mad love after a girl or a boy are the same. The big difference is love towards God gives you permanent pleasure and no bad after effects; but love towards a girl or a boy gives you temporary pleasure with after effects or serious consequences!!!

–Subham–

 

ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம் (Post No.2932)

saw horse

ஆப்ரஹாம் லிங்கன்  ஏமாந்த குதிரை வியாபாரம் (Post No.2932)

 

Article written by London swaminathan

 

Date: 1  July 2016

Post No. 2932

Time uploaded in London :– 6-21 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

skinny horse

ஒரு நாள் ஆப்ரஹாம் லிங்கனும் பலரும் பேசிக்கொண்டிருக்கையில் குதிரை வியாபாரம் பற்றி பேச்சு திசை திரும்பியது

 

அங்கே ஒரு நீதிபதியும் இருந்தார். உரையாடலில் நகைச்சுவையும், சவால்களும் இடம்பெற்றன. லிங்கன், ஒரு நீதிபதியுடன் வாக்குவாதத்தில் இறங்கினார்.

 

லிங்கன் சொன்னார்:-

நீதிபதி அவர்களே! நான் சொல்லுவதைக் கேளுங்கள். நானும் நீங்களும் குதிரை வியாபாரம் செய்வோம். ஆனால் ஒரு நிபந்தனையை நீங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும். குதிரை பேரம் நடக்கும் ஹோட்டலுக்கு வரும் வரை, என்  குதிரையை நீங்கள் பார்க்கக்கூடாது.

உங்கள் குதிரையை நான் பார்க்கமாட்டேன். ஒருவர் குதிரையை மற்றொருவர் வாங்கிக்கொள்ளவேண்டும். யாராவது இந்த பேரத்திலிருந்து பின்வாங்கினால், 25 டாலர் கொடுக்க வேண்டும்.

 

இதைக் கேட்ட நீதிபதி, “பேஷ்!பேஷ்! எனக்கும் சம்மதமே” என்றார்.

 

இருவரும் “குதிரை வேட்டைக்குப்” போனார்கள். பந்தய நாளும் வந்தது. லிங்கந்- நீதிபதி மோதல் பற்றி ஊர் முழுதும் செய்தி பரவியதால் ஒரு பெரும் கூட்டம் அங்கே திரண்டுவிட்டது.

 

முதலில் நீதிபதி தனது குதிரையைக் கொண்டுவந்தார் கூட்டத்தில் பயங்கரமான சிரிப்பொலி. ஏனெனில் குதிரை தெனாலி ராமன் குதிரையைவிட மோசம். எலும்பும் தோலுமாக இருந்தது. பார்க்கவே அருவருப்பு. அதுமட்டுமல்ல, கண் தெரியாத குருடு. நடக்கவும் சக்தி இல்லை. அந்த சிரிப்பொலி அடங்குவதற்குள் ஆப்ரஹாம் லிங்கன் குதிரையில் வேகமாக உள்ளே நுழைந்தார். அவருடைய தோள் மீது சா ஹார்ஸ் – எனப்படும் கருவி இருந்தது. தச்சர்கள் மரங்களை அறுக்க இந்த மரச் சட்டத்தைப் பயன்படுத்துவர். அதன் பெயர் ஆங்கிலத்தில் தச்சர் குதிரை என்பதாகும்; அதாவது உண்மையான குதிரை அல்ல, ஆனால் ஒரு கருவி. இதைப் பார்த்டவுடன் கூட்டத்தில் ஆரவாரக் கூச்சல் விண்ணைப் பிளந்தது.

 

இருவரும் குதிரைகளை மாற்றுப் போட்டுக்கொண்டனர்.

 

லிங்கன் சொன்னார்: ” என் வாழ்நாளில் குதிரை வியாபாரத்தில் மிக மோசமான குதிரையை வாங்குவது இதுதான் முதல் தடவை.”

icewagon43

குதிரையாக  மாறிய மனிதன்!

 

‘மோ’ என்பவரும் ‘அபி’ என்பவரும் இணைபிரியாத் தோழர்கள்; வாழ்நாள் முழுதும் ஒன்றாகவே இருப்பர். ஒருநாள் ரோட்டில் நடந்துகொண்டே, பேசிக்கொண்டிருக்கையில், “நமக்கோ வயதாகிவிட்டது. யாராவது ஒருவர் இறந்தால் என்ன செய்வது?” என்று கேட்டுக் கொண்டனர்.

 

“சரி, யார் முதலில் இறக்கிறார்களோ அவர், மற்றவரை எப்படியாவது தொடர்பு கொள்ளவேண்டும்” — என்று ஒப்பந்தம் செய்தனர். ஓராண்டு கழிந்தது. அபி இறந்துவிட்டார். ‘மோ’வுக்கு தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தம் கூட மறந்து போனது.

 

ஒருநாள் ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருந்தார்.”மோ, மோ” என்று தனது பெயரைச் சொல்லி யாரோ அழைத்தனர். மோ சுற்றிச் சுற்றிப் பார்த்தார். யாரும் காணவில்லை. ஒஹோ, நமக்கு ஏதோ களைப்பு; அதனால் யாரோ கூப்பிட்டதாக பிரமை ஏற்பட்டது என்று நினைத்துக் கொண்டே நடந்து போனார்.

 

மீண்டும் “மோ, மோ” என்று அவரைப் பெயர் சொல்லி யாரோ அழைத்தனர். பக்கத்தில் ஒரு ஐஸ்க்ரீம் வண்டியை குதிரை இழுத்துவந்தது. இது என்னடா மனிதர்களே இல்லை. குதிரை பேசுமா என்று உற்று நோக்கினார்.

ice-man-Calyo

உடனே குதிரை சொன்னது:–

“மோ, நாந்தான் அபி; உன் நண்பன். இப்போது குதிரையாகப் பிறந்துவிட்டேன்”.

 

மோ:– அடக் கடவுளே! நம்பவே முடியவில்லை, அபி. நீ எப்படி இருக்கிறய்; இந்த குதிரைப் பிறப்பில் வாழ்க்கை நிம்மதியாக , மகிழ்ச்சியாக இருக்கிறதா?

 

அபி: — அதை ஏன் கேட்கிறாய்? ஒரே துயரம்தான். கனமான ஐஸ் வண்டியை இழுக்கிறேன். இந்தப் பாவிப்பயல் — ஐஸ்வண்டி சொந்தக்காரன் — என்னை காலை முதல் மாலை வரை ஓய்வே தராமல் வேலை வாங்குகிறான். தண்ணீரோ உணவோ சரியாகத் தருவதில்லை.

 

 

மோ:– அப்படியா? இது என்ன கொடுமை? நான் அவனிடம் பேசி உனக்கு எல்லாச் சலுகைகளையும் வாங்கித் தருகிறேன்.

 

அபி:– ஐயய்யோ! வேண்டவே வேண்டாம். நன் உன் கூட பேசியது தெரிந்தால், அதையும் வைத்து காசுபெறப் பார்ப்பான் இந்தப் பாவிப்பயல். அது மட்டுமல்ல. என்னை “ஐஸ், ஐஸ் வாங்கலியோ, ஐஸ்” என்று கத்தவும் செய்துவிடுவான்.

 

மோ: கடவுள்தான் உன்னைக் காப்பாற்றவேண்டும்; நான் போய்விட்டு வருகிறேன்.

 

(அந்தக் காலத்தில் அமெரிக்காவில் ஐஸ் வியாபாரம் குதிரை வண்டி மூலமே நடைபெற்றது).

 

–SUBAHAM–