Research Article written by London swaminathan
Date: 15 December 2016
Time uploaded in London:- 10-25 am
Post No.3451
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
ரிக்வேதத்தின் ஏழாவது மண்டலத்தில் வசிஷ்டர் பாடிய தவளைப் பாட்டு மிகவும் பிரபலமானது. இதை கிரேக்க நாட்டின் கவிஞன் அரிஸ்டோபனிஸின் தவளைப் பாட்டுடன ஒப்பிடுவர் இருமொழி வித்தகர்.
தமிழில் கம்பன் சொன்ன தவளைப் பாட்டுடன் இதை ஒப்பிட்டு ஆராய்வோம்.
ரிக் வேத தவளைப் பாட்டு
ரிக்வேதத்தின் ஏழாம் மண்டலத்தில் வசிஷ்டரும் அவரது சந்ததியினரும் பாடிய துதிப்பாடல்கள் உள்ளன. இது வேதத்தின் மிகப்பழைய பகுதிகளில் ஒன்று. ஆச்சர்யமான விஷயம் என்ன வென்றால் வசிட்டனுக்கு குறைந்தது 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் கிரேக்க நாட்டின் நகைச்சுவை எழுத்தாளன் அரிஸ்டோபனீஸ் இதே தவளை உவமையைப் பயன்படுத்தி அரசியல் கிண்டல் செய்துள்ளான். இது கி.மு 405-ல் நடந்தது. அதற்கு 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் கம்பன் இதைப் பயன்படுத்தியுள்ளான. பாரதி பாடல்களிலும் இந்தப் பாடலின் தாக்கம் தெரிகிறது.
இதோ வசிட்ட மகரிஷியின் தவளைப் பாட்டின் சுருக்கம்:
1.ஓராண்டுக்கால மவுன விரதம் அனுஷ்டித்த பிராமணர்கள் எழுந்துவிட்டனர். தவளைகளை மழைக்கடவுள் (பர்ஜன்யன்) எழுப்பிவிட்டான்.
2.குளத்தின் தரையில், உலர்ந்த தோலுடன் கிடந்த தவளைகளின் மீது எப்போது வானத்திலிருந்து வெள்ளம் இறங்கிவந்ததோ! தவளைகள் இசைக்கும் ஒட்டுமொத்த இசை தாய்ப் பசுவும் கன்றுகளும் சேர்ந்து குரல் கொடுப்பது போல இருக்கிறது.
3.தாகத்தில் தண்ணீருக்காக தவித்த காலத்தில் அவற்றின் மீது மழை பொழிந்து தள்ளிவிட்டது. ஒரு தந்தை மகனுடன் கொஞ்சிக் குலவுவது போல, ஒவ்வொரு தவளையும் மற்றொன்றை வாழ்த்தியும் பேசியும் மகிழ்கின்றன.
4.தண்ணீர் ஓ ட் டத்தில் நீந்தி, விளையாடுகையில், ஒன்றை மற்றது அன்புடன் வரவேற்கிறது. தண்ணீரில் நனைந்த தவளை தாவிக்குதிக்கையில், பச்சைத் தவளையும் புள்ளித் தோல் தவளையும் ஒருங்கே பாடுகின்றன. .
5.ஒரு தவளை மற்றொரு தவளையின் மொழியை திருப்பிச் சொல்லுவது, ஆசிரியர் சொல்லித் தரும் பாடத்தை பையன் திருப்பிச் சொல்லுவது போல இருக்கிறது.
நீரில் இப்படி வாய்ச்சாலத்துடன் பேசுகையில் உன்னுடைய ஒவ்வொரு உறுப்பும் பெருக்கிறது.
- ஒரு தவளை மாடு போல “அ ம்மா” என்கிறது மற்றது ஆடு போல “மே மே” என்கிறது. ஒரு தவளை பச்சை நிறம்; இன்னொன்று புள்ளியுடன் காணப்படும்.
அவை எல்லாவற்றுக்கும் பெயரோ ஒன்றேதான்; ஆயினும் அவற்றின் குரலோ வெவ்வேறு குரலை ஏற்றி இறக்கிப் பேசுகின்றன.
7.இது அதிராத்ர யாகத்தில் சோம யாகத்தில் நிரைந்த குடங்களைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு பேசும் பிராம ணர்களைப் போல இருக்கிறது.
ஆகையால், எல்லா தவளைகளும் இந்த நாளைக் கொண்டாட குளத்தைச் சுற்றி நிற்கின்றன- முதல் நாள் மழை இது.
8.ஓராண்டுக் காலம் முழுதும் சோமரசத்துடன் பிராமணர்கள் செய்யும் யக்ஞம்,—-இதோ உயர்ந்த குரலில் இசைக்கின்றனர்.
இந்த அத்வர்யுக்கள், கொதிக்கும் கெட்டில் போல வியர்த்துக் கொட்டுகின்றனர். எல்லோரும் ஒளியாமல் வந்து நிற்கின்றனர்.
9.கடவுள் நிர்ணயித்த 12 மாத ஒழுங்கு நியதியை கடை பிடிகின்றார்கள். மனிதர்கள் எப்போதும் பருவ காலத்தைப் புறக்கணிப்பதில்லை.
மழைக்காலம் வந்துவிட்டால் கொதிக்கும் கெட்டில்களுக்கு விடுதலை கிடைக்கும்.
10.பசுக்குரல், ஆட்டுக்குரல் ஆகியன பணத்தை வாரி வழங்குகின்றன. பச்சைத் தவளையும் புள்ளித் தவளையும் நமக்கு பொக்கிஷத்தை உறுதி செய்யும்..
தவளைகள் நமக்கு நூற்றுக் கணக்கான பசுக்களைத் தருகின்றன.. நம்முடைய வாழ் நாளை ஆயிரம் சோமரசம் பிழியும் வரை அதிகரிக்கின்றன.
பாடல் முழுதும் பிராமணர்களும் தவளையும் ஒப்பிடப்படுகின்றனர்.
கம்ப ராமாயணத்தில்
தவளைப் பாட்டில் வரும் (ஆசிரியர்- மாணவர்) உவமையைக் கம்பனும் பயன்படுத்துவதை கீழே காணலாம்:–
கல்வியின் திகழ் கணக்காயர் கம்பலைப்
பல்விதச் சிறார் எனப் பகர்வ பல் அரி,
செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா
நல் அறிவாளரின், அவிந்த, நா எலாம்
–கார்காலப் படலம், கிட்கிந்தா காண்டம்
பொருள்:-
பள்ளி ஆசிரியரிடம் கல்வி கற்கும் சிறுவர்கள் ஆரவாரத்துடன் சப்தமிட்டுக்கொண்டே கல்வி கற்பார்கள். இதுபோல மழைக் காலத்தில் தவளைகள் எல்லாம் சப்தம் போட்டன. ஆனால் சரத்காலம் வந்தவுடன் அவை எல்லாம் மிகுதியாகக் கத்தாமல் அடங்கிப் போயின. இது எப்படி இருந்தது என்றால் அறிஞர்கள் எங்கு சொல் எடுபடுமோ அந்த இடத்தில் மட்டுமே பேசுவர்.
ரிக் வேதப் பாடலில் வேறு பல விஷயங்களும் நமக்குத் தெரிகின்றன. ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் என்று நாம் உலகிற்குக் கற்பித்தோம்; 100, 1000 ஆகிய டெஸிமல் (தசம) ஸ்தானத்தை நாம் உலகிற்குக் கற்பித்தோம். மழையையும் இயற்கையயும் ரசித்துப் பாடுவதை உலகிற்குக் கற்பித்தோம். தவளை உவமையைக் கற்பித்தோம். ஓராண்டுக் காலத்துக்கு பிராமணர்கள் நீண்ட யாகம் செய்ததை அறிகிறோம். அவ்வளவு காலத்துக்கு அவர்கள் மவுன விரதம் கடைப்பிடித்ததை அறிகிறோம்.
பாரதி பாடுகிறான்:
பாரதி பாடலில் முப்பது கோடி முகமுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்ற வரிகளையும் பல நிர்றப் பூனைகள் பற்றிய பாடலையும் இந்த ரிக் வேத தவலைப் பாட்டு நினைவுபடுத்தும்:-
வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்.
சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி.
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ
வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!
–suBham–
S Govindaswamy
/ December 16, 2016I am giving below an extract from Sri.V.Govindan’s blog site Thyagaraja Vaibhavam. This is from the song svara rAga sudhA.
QUOTE
paramAnandamu-anE kamalamupai
baka bhEkamu celagi-Emi O manasA (sva)
O My Mind (manasA)! Of what avail (Emi) a crane (baka) (and/or) a frog (bhEkamu) flourishing (celagi) (celagiyEmi) on the Lotus (kamalamupai) called (anE) Supreme (parama) Bliss (Anandamu) (paramAnandamanE) (of nAda)?
UNQUOTE
Is Thyagaraja comparing people chanting without devotion to cranes and frogs?
Govindaswamy