கண்ணாடி புராணம்! ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல’ (Post No.3412)

Research Article Written by London swaminathan

 

Date: 3 December 2016

 

Time uploaded in London: 8-25 am

 

Post No.3412

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

English version of this article is also posted.

கண்ணாடி என்பது நம் நாட்டிலும் உலகில் ஏனைய பழைய நாகரீகங்களிலும் நீண்ட நெடுங்காலமாக புழக்கத்தில் உள்ளது.  இது இந்தியாவில்தான் தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில் மஹாபாரதத்திலுள்ள பகவத் கீதை முதல் ஆண்டாள் பாடிய திருப்பாவை வரை (தட்டொளி) கண்ணாடியைக் காண்கிறோம். தமிழில் மிகப் பழைய நூல் என்று கருதப்படும் தொல்காப்பியம் முதல் கேரளத்தில் பெருந்தலைவர் நாராயண குரு கண்ணாடிக் கோவில் வைத்தது வரை இது நமது வாழ்வில் இரண்டறக் கலந்திருப்பதையும் காணலாம்.

திருவிழாக் காலங்களில் கன்யாப் பெண்களை வீட்டுக்கு அழைத்து கண்ணாடி, குங்குமச் சிமிழ், சீப்பு கொடுக்கும் வழக்கமும் உளது. தீபாவளி, விஷுக் கனி காணுதலின் போது கண்ணாடியில் முகம் பார்க்கும்/ விழிக்கும் வழக்கமும் உளது.

 

கண்ணாடி உடைவது அபசகுனம் முதலிய பல சகுன சாத்திர தகவலும் உள.

 

மெக்சிகோவில் அஸ்டெக் நாகரீகத்தில் ஒருவர் பெயர் ‘புகைக் கண்ணாடி’. ஜப்பானில் ஆட்சியாளர் மாறும்போது கண்ணடி கொடுப்பர். கண்ணாடி தேவதை அமர்தரேசுவும் இருக்கிறது. எட்ருஸ்கன் நாகரீகக் கண்ணடிகளின் பின்னால் அற்புதமான வரைபடங்கள் உள்ளன.

 

முதலில் வான்புகழ் வள்ளுவன் தேனினும் இனிய தமிழில் செப்பியதைக் காண்போம்

 

 

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம் (குறள் 706)

 

பொருள்:-

தன்னை அடுத்த பொருளைக் கண்ணாடி காட்டும்; அதுபோல ஒருவனுடைய உள்ளத்தில் எழும் உணர்வுகளை அவன் முகமே காட்டிவிடும்.

 

 

திருவள்ளுவமாலையில்

 

தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட

பனயளவு காட்டும்படித்தால் – மனையளகு

வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்

வெள்ளைக் குறட்பா விரி

-திருவள்ளுவ மாலை, கபிலர்

பொருள்:-

மனையில் வளர்க்கப்படுகின்ற பறவைக் குஞ்சுகள், உலக்கைப் பாட்டால் கண் உறங்குகின்ற வளம் பொருந்திய நாட்டை உடைய மன்னவனே! திரு வள்ளுவனின் குறட்பா அளவில் சிறிது; ஆனால் அது காட்டும் பொருள் மிகப்பெரிது. எப்படியென்றால், புல் நுனியில் படிந்துள்ள பனித்துளி, ஒரு தினையரிசிக்கும் சிறியது; ஆயினும் பக்கத்திலுள்ள பனைமரத்தை அதன் உள்ளே (கண்ணாடி போல) பார்க்கலாம் அல்லவா? -திருவள்ளுவ மாலை, கபிலர்

 

xxx

ஒல்காப் புகழ் தொல்காப்பியன் பகர்வதையும் பார்ப்போம்

 

சூத்திரம்தானே ஆடி நிழலின் அறியத் தோன்றி

நாடுதல் இன்றி பொருள் நனி விளங்க

யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே

தொல்காப்பியம், பொருளதிகாரம் (1425)

 

பொருள்:-

சூத்திரம் என்பது, கண்ணாடிக்குள்  அதன் பிரதிபலிப்பில் ஒரு பெரிய மலையே தோன்றுவது போல, ஆராய்தல் இல்லாமலேயே, கூறப்பெற்றுள்ள பொருள் தெளிவாக விளங்குமாறு அமையும்.  யாப்பினுள் ஏதாவது ஒன்று வடிவமைத்து அமைப்பதாகும்.

 

xxx

 

5000 ஆண்டுப் பழமையான பகவத் கீதை கூறுவதைக் கேளுங்கள்

பகவத் கீதையில் (3-38)

தூமேனாவ்ரியதே வஹ்னிர் யதா தர்சோ மலேன ச

யதோல்பேனாவ்ருதோ கர்ப்பஸ் ததா தேனேதமாவ்ருதம்

 

பொருள்:–

எப்படித் தீயானது புகையால் மறைக்கப்படுகிறதோ, கண்ணாடி அழுக்கால் மறைக்கப்படுகிறதோ, எப்படி கருவானது கருப்பையால் மறைக்கப்படுகிறதோ, அப்படியே காமத்தால், இந்த ஞானம் மறைக்கப்படுகிறது. (3-38)

 

விவேக சூடாமணியில்

ஆதிசங்கரர் தனது விவேக சூடாமணியில் கூறுகிறார்:

யத்ரைச ஜகதா பாஸோ தர்ப்பணாந்தபுரம் யதா

தத் ப்ரஹ்ம்மமிதி ஞாத்வா க்ருத க்ருத்யோபவிஷ்யசி

பொருள்:-

ஒரு கண்ணாடியில் ஒரு நகரத்தின் பிரதிபலிப்பைக் காண்பது போல நீயே பிரம்மம்; இதை உணர்ந்துவிட்டால் பூரணத்துவம் பெறுவாய். பிரபஞ்சமே உன்னிடத்தில் பிரதிபலிக்கிறது.(ஆதி சங்கரர்)

 

 

Etruscan Mirror

காளிதாசனில்

 

ராஜரிஷி வம்சஸ்ய ரவி ப்ரசூதேருபஸ்தித: பஸ்யத கீத்ருசோயம்

மத்த சதாசார சுசே: கலங்க: பயோதவாதாத் இவ தர்பணஸ்ய

 

பொருள்:-

மக்களின் ஆர்வங்களையும் உணர்ச்சியையும் மன்னன் பிரதிபலிக்கிறான். ஆதலின் அரசன் அழுக்கற்ற கண்ணாடியாகத் திகழ வேண்டும் (ரகுவம்சம் 14-37

 

ரவிப்ரஸூதே= சூர்யனிடமிருந்து உண்டானதும்

சதாசார சுசே:= நன்னடத்தையால பரிசுத்தமாக இருப்பதுமான

ராஹர்ஷிவம்சஸ்ய= ராஜ ரிஷியான இக்ஷ்வாகுவின் வம்சத்திற்கு

மத்த:= என்னிடமிருந்து

தர்பணஸ்ய = கண்ணாடிக்கு

பயோதவாதாத் இவ = மேகத்திலிருந்து வந்த காற்றினாலே (மாசு ஏற்படுவது) போல

கீத்ருச: = எப்படிப்பட்ட

அயம் கலங்க: = இம் மாசு

உபஸ்தித: = ஏற்பட்டது

பஸ்யத= பாருங்கள்

 

எப்போதும் தூயதாய் விளங்கும் என் குலத்துக்கு என்னால் அவப்பெயர் வந்துவிட்டதே (மேகம், காற்றினால் வரும் அசுத்தம் எப்படி எளிதில் கண்ணாடியிலிருந்து நீங்குமோ அது போல இதுவும் எளிதில் போய்விடும் என்பது உட்பொருள்; அதாவது நிரந்தர களங்கம் இல்லை)

Greek Mirror

காளிதாசன் சாகுந்தலம் நாடகத்திலும் ரகு வம்சத்தில் பிற இடங்களிலும் கண்ணாடி உவமையைக் கூறுவதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வீடு தோறும் கண்ணாடி இருந்ததும், அதில் நம் குலப் பெண்கள் முகம் பார்த்து அலங்கரித்ததும் நம் மனக் கண் முன் வரும்.

இது போன்ற கண்ணாடி உவமைகள் பிற்கால இலக்கியங்களிலும் இருக்கின்றன. அவைகளைப் பின்னர் காண்போம்.

Mirror Temples! Hindu Wonders!! (Posted on 3 October 2013)

 

 

-Subham-

 

 

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 19 (Post No.3411)

Picture of Buddha’s foot print

Written by S NAGARAJAN

 

Date: 3 December 2016

 

Time uploaded in London: 6-28 am

 

Post No.3411

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 19

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 78.

மரகத புத்தர் வசந்த காலத்தில் பயணத்துக்கு ஆயத்தப்படுத்தப்பட்டார். எட்டு கூலியாட்கள் மரகத புத்தரை சுமந்து செல்ல அமர்த்தப்பட்டனர். காக்ஃபுட் மவுண்டனைச் சேர்ந்தவுடன் அவர்களுக்குத் தருவதற்காக ஒரு பெரிய தொகை நிர்ணயிக்கப்பட்டு அது அவர்களிடம் சொல்லப்பட்டது.

மோசமான குண்டும் குழியும் நிறைந்த மலைப்பாதை வழியே பல வாரங்கள் அவர்கள் பயணப்பட வேண்டும்.

 

 

மவுண்ட் யேரனுக்கு மரகத புத்தர் நெருங்கிய போது கூலியாட்கள் தங்கள் பயணத்தை திடீரென்று நிறுத்தினர்.

மரகத புத்தரினுள்ளே ஏராளமான பணமும் இரத்தினக் கற்களும் ஒளித்து வைத்திருக்கப்பட்டிருப்பதாக சந்தேகப்பட்ட அவர்கள் புத்தர் மிகவும் கனக்கிறார் என்று கூறி இன்னும் ஒரு பெரிய தொகையை கூடுதலாகக் கேட்டனர்.

 

 

இது முதலில் ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையை விட  பல மடங்கு அதிகம் என்பதால் ஸு யுன் அவர்களை சாந்தப்படுத்த முயன்றார்.ஆனால் அவர்களோ கூச்சல் போட்டனர். அவர்களை பேசிச் சமாளிக்க முடியாது என்று தோன்றிற்று ஸு யுன்னுக்கு.

அவர் அவர்களை அருகே அழைத்தார்.

அங்கே சாலையின் ஓரத்தில் இருந்த மிக பிரம்மாண்டமான ஒரு பாறாங்கல்லைச் சுட்டிக் காண்பித்தார்.

 

Old picture of Sanchi Stupa

 

“சொல்லுங்கள்,இதோ இந்தப் பாறை கனமா அல்லது மரகத புத்தரின் சிலை கனமா” – ஸு யுன் அவர்களிடம் கேட்டார்.

“சந்தேகமில்லாமல் அந்தப் பாறை தான் கனமானது. இரண்டு அல்லது மூன்று ம்டங்கு அந்தப் பாறை அதிக கனமுடையது” –அவர்கள் சொன்னார்கள்.

 

உடனே ஸு யுன் அந்தப் பாறை அருகே சென்று அதை அலாக்காக அப்படியே பூமியிலிருந்து ஒரு அடி மேலே தூக்கினார்.

 

அதைப் பார்த்த் கூலியாட்கள் பிரமித்து நின்றனர்.

ஒரு பேச்சும் பேசாமல் மரகத புத்தரைத் தூக்கிக் கொண்டு காக்ஃபுட் மவுண்டனை அடைந்தனர்.

ஸு யுன் பேசியதற்கு மேலாகவே அவர்களுக்கு அதிகத் தொகையைக் கொடுத்தார்.

 

 

ஸு யுன்னுக்குத் தெரியும், அவ்வளவு பெரிய பாறையைத் தூக்கக் கூடிய வலிமை அவருக்கு இல்லை என்பது.

தெய்வீக அருளே அதைத் தூக்க வைத்தது, அவ்வளவு தான்!

நாட்கள் நகர்ந்தன.

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 79.

கவர்னர் டாங் ஜி-யாவ் ஸு யுன்னுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.அதில் அவரை தலைநகருக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

ராணுவத்தினர் மரியாதையுடன் அவரை அழைத்துச் செல்வதை மறுத்த ஸு யுன், தானே தனது சீடர் ஸு யுவானுடன் நடந்தே வருவதாக கூறி விட்டார்.

 

வழியில் சூசியாங் என்ற இடத்தில் சில கொள்ளைக்காரர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர்.

அவருக்கு அடி மேல் அடி விழுந்தது.

“என்னை அடிக்காதீர்கள். உங்கள் தலைவனிடம் என்னை அழைத்து செல்லுங்கள்” என்றார் ஸு யுன்.

அவர்களது தலைவன் பெயர் வூ ஸு ஸியான். தனது ச்கா ஒருவருடன் அவன் இருந்தான்.

 

 

ஸு யுன்னைப் பார்த்த வூ உரத்த குரலில் “யார் நீங்கள்” என்று கத்தினான்.

“காக் ஃபுட் மவுண்டனில் உள்ள மடாலயத்தில் இருப்பவன் நான்”, என்றார் ஸு யுன்.

“உங்கள் பெயர் என்ன?”

“என் பெயர் ஸு யுன்”

“ஏன் நீங்கள் தலை நகர் நோக்கிச் செல்கிறீர்கள்?”

“புத்த தரமத்தில் உள்ள சடங்குகளைச் செய்வதற்காக.”

“எதற்காக?”

 

Picture of Buddha

“அனைத்து மக்களும் நலமுற வாழ வேண்டும் என்பதற்காக”

“கவர்னர் டாங் ஒரு  கொள்ளைக்காரன். அவன் ஒரு மோசமான பேர்வழி. அவனுக்கு உதவ நீங்கள் செல்வதால் நீங்களும் ஒரு மோசமான ஆள் தான்!”

“ஒரு மனிதனை மோசமான பேர்வழி என்று அவ்வளவு சுலபமாகச் சொல்லி விட முடியாது”

“ஏன்?”

 

 

:”ஒரு மனிதனைப் பற்றிய நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் அவன் நல்லவனே. அவனது தீய குணங்களை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் அவன் தீயவனே!”

“இதற்கு என்ன அர்த்தம்?”

 

 

“நீங்களும் டாங்கும் இணைந்து மக்கள் நலனுக்காகப் பணி ஆற்றினீர்கள் என்றால் உங்கள் ஆணைப்படி நடக்கும் படை வீரர்களும் அப்படியே பணியாற்றினால் நீங்கள் அனைவருமே நல்லவர்கள் ஆகி விட முடியாதா? மாறாக நீங்களும் டாங்கும் ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டு சண்டையிட்டு மக்களைத் துன்புறுத்தினால் நீங்கள் அனைவருமே மோசமான பேர்வழிகள் என்று ஆகி விடாதா? ஒன்றுமறியாத அப்பாவி மக்கள் ஒன்று உங்களைப் பின்பற்ற வேண்டும். அல்லது டாங்கைப் பின்பற்ற வேண்டும். அப்போது அனைவருமே கொள்ளைக்காரர்கள் தானே! அடடா, எல்லோரும் பரிதாபத்திற்குரியவர்கள் தானே!”

இதைக் கேட்டவுடன் வூவும் அவனது சகாவும் கடகடவென்று சிரித்தனர்.

 

 

“நீங்கள் சொல்வது சரிதான்! அதற்கு நான் என்ன செய்யமுடியும்?”

 

“எனது ஆலோசனை என்னெவெனில் நீங்கள் சண்டை இடுவதை நிறுத்த வேண்டும். சமாதானமாகப் போக வேண்டும்”

“அதாவது நான் சரண் அடைய வேண்டும், அப்படித்தானே?”

“இல்லை, அப்படியில்லை. உங்களைப் போல இருக்கும் ஒத்த மனத்தினருடன் இணைந்து நீங்கள் சமாதானத்திற்காக பணியாற்ற வேண்டும். நமது நாட்டிற்காகவும் மக்களின் நலனுக்காகவும் உங்கள் கர்வத்தைச் சற்று விட்டு விடுங்கள் என்கிறேன்”

வூ கேட்டார் –“ சரி அதை எப்படி நான் ஆரம்பிப்பது?”

“டாங்குடன்!”

 

 

என்ன என்று பிரமித்தார் வூ. டாங்குடன் நான் பேசுவதா?

“அவர் எனது வீரர்கள் ஏராளமானோரைக் கொன்று  குவித்தவர். ஆக இது பழி வாங்கும் நேரமே தவிர சரணாகதி அடைவதற்கான காலம் இல்லை”

 

வூ அழுத்தம் திருத்தமாகக் கூறி நிறுத்தினார். அங்கு அமைதி நிலவியது.

-தொடரும்

 

Rapist on run gave up after being fed! Food + Kindness melt even Criminals! (Post No.3410)

   

Written by London swaminathan

 

Date: 2 December 2016

 

Time uploaded in London: 14-06

 

Post No.3410

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

Rapist Admi Headley, 34, absconded from HMP Leyhill on November 13 

  • He later collapsed outside home of students Tom Phillips and Aidan Byrne 
  • The convict opened up to the two friends as they gave him a hot meal
  • Students later convinced him to turn himself in and took him to the station

 

 

Escaped rapist on the run from prison saw the error of his ways after he was taken in by students who gave him a chocolate muffin and a chicken kiev and listened to Jay Z with him.

 

A rapist who escaped from prison turned himself in after he was taken in by two university students.

 

Admi Headley, 34, collapsed outside the home of University of Bristol students Tom Phillips, 22, and Aidan Byrne, 21, on November 16, three days after he absconded from HMP Leyhill in Wootton-under-Edge, Gloucestershire (United Kingdom).

 

The students invited Headley into their flat and fed him soup, a chicken kiev and a chocolate muffin. They also put on rap music after Headley said he was a fan.

 

Over three hours, Headley opened up about his time in prison and the students were eventually able to convince him to hand himself into police.

They even accompanied Headley to the local station, where he hugged them before being taken into custody.

 

Mr Phillips, a physics and philosophy student, told student newspaper Epigram: ‘Any crime of that nature is horrific, however all we could see was the person in front of us.

 

‘The person that I saw was someone who I felt needed food and water, and that is what we gave him.’

 

 

The convict also told the friends he had not spoken to his ex-girlfriend or 12-year-old son in nine years.

 

 

He gave Headley his mobile phone and listened as he spoke to his son. Headley reportedly said: ‘Do you know who this is? It’s your father. I’m sorry that I haven’t been there for you, but when I come home I will do anything for you.’

 

A tearful Headley told the students how he had converted to Islam in prison and carried a set of prayer beads with him at all times.

 

They said that he also carried a contacts book with the name of every friend he had made in jail, and the address and phone number of the friend’s mum.

 

At one point Headley told the students that they could call the police but, keen to keep the situation calm and under control, they said they wouldn’t.

 

Instead they cooked for him, listened to music and chatted for hours.

Mr Phillips said: ‘I didn’t consider kicking him out but it was in the back of my mind that at some point he would have to leave.

 

‘I was desperately hoping that he would just go somehow, but he himself said, ‘I will be off in a minute’ – and he did eventually.’

 

He added: ‘He made the decision himself, although he asked us, ‘Do you think I should probably hand myself in?’ and we said yes.

‘I said, “The sooner you’re in, the sooner you’re out. The longer you leave it, the worse it will be”.

 

Avon and Somerset Constabulary confirmed that Headley attended a Bristol police station on the night of November 16 and handed himself in.

Mr Phillips added: ‘If he ever gets hold of this article, we want to thank him.

‘Now that I’ve reflected, I would like to thank him because he trusted us and he was honest with us and he gave in a very short time a huge amount to us.

 

‘He gave his life story. That is no small thing.’

 

My Comments:–

 

Hindus always do Annadhana (Serving food to all) in the temples and in the community on festive days. Some people used to criticise this good gesture as supporting lazy people. but the people who it believe that even if one good soul takes the food, that will help the entire town or community here in this story we see that even a rapist is moved after the kind food served by the students.

 

in Tamil these is a verse saying that when one is hungry one loses ten virtues. that also confirms when one is not hungry he can think logically.

 

moreover kindness always cure several problems. Tamil poet Tiruvalluvar says in his book Tirukkural

 

affection cannot be controlled by shutters;

uncontrollable tears will rolldown spontaneously

when one sees the sufferings and sorrows of the loved ones (Kural 71)

 

–Subham–

 

 

அன்னதான மகிமை: கைதியின் கண்ணீர் (Post No.3409)

Written by London swaminathan

 

Date: 2 December 2016

 

Time uploaded in London: 10-39 am

 

Post No.3409

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

தமிழில் ஒரு பாடல் உண்டு; பசி வந்திடப் பத்தும் பறந்து போம். அதாவது

மானம்,  குலம்,  கல்வி, வலிமை,  அறிவு,  தானம்,  தவம், உயர்வு, தாளாண்மை/முயற்சி, காமம் எல்லாம் பசி வந்தவனிடத்தில் இருக்காது.

 

இதையே மாற்றிப் போட்டால், பசி இல்லாவிடில் இந்த பத்து குணங்களும் இருக்கும். அதனால்தான் இந்துக்கள் அன்னதானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

 

லட்சம் பேர் சாப்பிட்டால், அதில் ஒருவர் நல்லவர் இருந்தாலும், அதன் காரணமாக நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் நன்மை விளையும் என்று காஞ்சி பரமாசார்யார் சொற்பொழிவில் கூறியுள்ளார். ஆனால் அன்னதானத்தின் மூலம் சிறைக் கைதியும் மனம்மாறிய செய்தி நேற்று பிரிட்டிஷ் (1-12-2016) பத்திரிக்கைகளில் வெளியாகியது.

 

 

கற்பழிப்புக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்–  அத்மி ஹெட்லி (வயது 34). அவர் சிறையிலிருந்து தப்பித்து ஓடினார்…. ஓடினார்…. மூன்று நாள் ஓடினார். பசி வயிற்றை வாட்டியது. மயக்கம் வந்து ‘தொப்’ என்று கீழே விழுந்தார்.

எங்கே தெரியுமா?

டாம் பிலிப்ஸ் (வயது 22), ஐடன் பைர்ன் (வயது 21) ஆகிய இருவர் வசித்த வீட்டின் வாசலில் விழுந்தார். அவர்கள் கதவைத் திறந்தவுடன் மயக்கம் தெளிந்து கொஞ்சம் தண்ணீர் கேட்டார் ஹெட்லி .

தண்ணீர் குடித்தவுடன் ஒரு வெடிகுண்டுச் செய்தியைப் போட்டார். பிள்ளைகளே , நீங்கள் என்னிடம் அன்பு காட்டினீர்கள். நான் உண்மையைச் சொல்லி விடுகிறேன். நான் லேஹில் சிறையிலிருந்து ஓடி வந்த கைதி. என் பெயர் அத்மி ஹெட்லி. சிறைவாசத்தின்போது நான் முஸ்லீமாக மதம் மாறிவிட்டேன். நீங்கள் போலீஸைக் கூப்பிட்டு என்னை ஒப்படைக்கலாம்.

 

ஆனால் மணவர்களோ உடனே அப்படி போலிஸைக் கூப்பிடவில்லை. “கொஞ்சம் பொறுங்கள்– சாப்பிட்டுவிட்டுப் போக லாம்” என்று சொல்லி, சுவையான, சூடான் உணவைச் சமைத்தனர். கோழிக்கறி, சூப், பாஸ்தா எல்லாம் சூடாகப் பறிமறினர் அன்புள்ளம் படைத்த மாணவர்கள்.

 

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் (ப்பாள்)?

கைதியின் கண்களில் இருந்து கண்ணீர் குபுகுபுவெனப் பாய்ந்தது.

மேலும் தனது சொந்தக் கதையைப் பகிர்ந்துகொண்டார்:

“எனக்கு 12 வயது மகன் உண்டு. அவனை 9 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை”.

 

உடனே இரண்டு மாணவர்களில் ஒருவரான பிலிப்ஸ் (பிரிஸ்டல் பல்கலைக் கழக தத்துவ இயல் மாணவர்), “அதனால் என்ன? கவலைப் படாதீர்கள். இதோ என் மொபைல் போன். உங்கள் மகனைக் கூபீட்டுப் பேசுங்கள்” என்று போனைக் கையில் கொடுத்தார்.

 

ஆனால் நாங்கள் ஏன் 9 ஆண்டுகளாக நீங்கள் பேசவில்லை? என்ன நேர்ந்தது என்று அந்தக் கைதியிடம் கேட்கவே இல்லை.- என்று மாணவர்கள் சொன்னார்கள் பத்திரிக்கை நிருபர்களிடம்!

 

கற்பழிப்புக் குற்றம் என்பது பயங்கரமான குற்றம்தான். ஆயினும் எங்கள் கண் முன் உணவும், தண்ணீரும் வேண்டும் என்று ஏங்கும் ஒரு மனிதனைத்தான் காண முடிந்தது;  குற்றவாளியைக் காணவில்லை. என்றும் மாணவர்கள் சொன்னார்கள்.

 

சாப்பிட்டு முடிந்த பின்னர் அந்தக் கைதி மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்: “நான் போலீஸில் போய்ச் சரணடைய வேண்டுமா? அல்லது ஓடிவிடட்டுமா?”

 

மாணவர்கள் சொன்னார்கள்: “எவ்வளவு சீக்கிரம் நீங்கள் சரண் அடைகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் நீங்கள் விடுதலையாகி வெளியே வந்து விடுவீர்கள்”.

கைதியும் இதற்குச் சம்மதித்தவுடன் இருவரும் போலீஸ் ஸ்டேஷன் வரை, கைதியுடன் நடந்து சென்று அவரை ஒப்படைத்தனர். அவர் இரண்டு மாணவர்கலையும் அன்புடன் கட்டித் தழுவி விட்டு போலீஸிடம் சரண் அடைந்தார்.

 

தத்துவ இயல் மாணவர் பிலிப்ஸ் சொன்னார்: நாங்களும் அந்தக் கைதிக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம். ஒரு கற்பழிப்புக் காரனின் உண்மைக் கதையைக் கேட்க முடிந்தது. முன்னததாக ஏவன் –சாமர்செட் நகர் போலீஸார் வெளியிட்ட அறிவிப்பில், “கைதி ஹெட்லி பயங்கரமானவன் – யாரும் அருகில் நெருங்க வேண்டாம்; எங்களுக்குத் தகவல் மட்டும் தாருங்கள்” என்று ஹெட்லியின் படத்துடன் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

 

அன்பிற்கும் அன்ன தானத்துக்கும் சக்தி உண்டு!

 

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும் (குறள் 71)

 

பொருள்:-

அன்பை, பிறர் அறியாமல்  மறைத்து வைக்கும் கதவோ தாழ்ப்பாளோ உண்டா? கண்களிலிருந்து பெருகும் கண்ணீரே அந்த அன்பினைப் பலரும் அறியும்படி பறை சாற்றிவிடும்.

 

–சுபம்–

ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி! (Post No3408)

Picture of Jimo

 

Written by S NAGARAJAN

 

Date: 2 December 2016

 

Time uploaded in London: 6-12 am

 

Post No.3408

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி!

 

“நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு மனத்திற்கு மரணம் என்பது அடுத்த ஒரு பெரிய சாகஸ செயல்!” – ஜே. கே. ரோலிங்

 

 

ஒரு மனிதனின் கடைசி விநாடிகளில் என்ன தான் நடக்கிறது? அறிய ஒவ்வொருவருக்கும் ஆசை தான்

இதைப் பற்றி மட்டும் ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஏராளம் பேர் உண்டு.

 

 

முதலில் இதயத் துடிப்பு நிற்கிறது. மூளை ஆக்ஸிஜனுக்காக ஏங்குகிறது. அப்போது என்ன நடக்கிறது. இறக்கும் தருணங்களில் 20 சதவிகிதம் பேருக்கு “உண்மையைக் காட்டிலும் உண்மையான” காட்சியாக உடலை விட்டு உயிர் நீங்குவதும் பிரகாசமான ஒளியைக் காண்பதும் ஏற்படுகிறது என்கிறது அறிவியல்!

 

 

இது மூளை தரும் காட்சி தானா, அல்லது உடலுக்குப் பின்னால் உள்ள இன்னொரு உலகின் விளிம்பைக் காண்பதன் ஆரம்பமா?

 

மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான ஜிமோ போர்ஜிகின் (Jimo Borjigin) என்ற பெண்மணி இதை ஆராய ஆரம்பித்தார்.

 

முதலில் எலிகள் உள்ளிட்ட மிருகங்களின் மீது சோதனைகளை அவர் நடத்தினார். அவரது லாபரட்டரியில் சில மிருகங்கள் திடீரென இறந்தன. இறக்கும் போது அவற்றின் மூளை சம்பந்தமான சில கெமிக்கல்களின் மின் இயக்கம அதிகமானது.  இதனால் தான் நினைவகத்தில் இருந்த சில அனுபவங்கள் இறக்கும் தருவாயில் உள்ள மனிதர்களுக்குத் தோன்ற அது இறக்கும் போது காணும் காட்சிகளாகச் சித்தரிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதை உறுதி செய்ய ஒன்பது எலிகளின் மூளைகளில் எலக்ட்ரோடைச் செருகி ஒரு மணி நேரம் மயக்க மருந்தைச் செலுத்தினர். இது சோதனையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அறநெறிகளில் ஒன்று. பின்னர் பொடாசியம் க்ளோரைடை ஒவ்வொரு எலியின் இதயத்திலும் செலுத்தினர்.

அடுத்த 30 விநாடிகளில் எலியின் கடைசி இதயத்துடிப்பு ஏற்பட, மூளை இயக்கமின்றி நிற்கும் போது கடைசியாக மின் சிக்னலகளை வெளியிட அதை ஆய்வாளர்கள் துல்லியமாக ரிகார்ட் செய்தனர்.

 

 

இதை ஆராய்ந்த குழுவினர், தகவல்களை முறைப்படுத்துவது,  விழிப்புணர்வுடன் இருப்பதை விட எட்டு மடங்கு அதிகமாக ஆகிறது என்பதைக் கண்டனர். அது உணர்வின் அதிக உச்ச நிலை என்று அவர்கள் தெரிவித்து, அது தான் இறக்கும் போது பல காட்சிகளைக் காண்பது போன்ற தோற்றத்தை மனிதர்களுக்கு அளிக்கிறது என்ற முடிவுக்கு வந்தனர்.

ஆனால் ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானியான் சாம் பார்னியா மிருகங்கள் கடைசி நிமிடங்களில் என்ன நினைக்கிறது என்பது யாருக்குத் தெரியும்? இது கடைசி நிமிடங்களில் இரத்த ஓட்டத்தின் நிலை என்ன என்பதையும் மூளையின் கெமிக்கல் வெளிப்பாடுகள் எப்படி உள்ளன எனபதையும் அறிய மட்டுமே உதவும் என்கிறார்.

 

 

    சாம் பார்னியா தனது சக விஞ்ஞானிகளுடன் இணைந்து ஒரு பெரிய ஆய்வை நான்கு ஆண்டுக் காலம் செய்தார்.  மாரடைப்பு ஏற்பட்ட 2060 நோயாளிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களில் உயிர் பிழைத்த 330 பேர்களில் நாற்பது சதவிகிதத்தினர் தாங்கள் இறந்ததாக மருத்துவ ரீதியாக அறிவிக்கப்பட்ட இறுதி விநாடியில் பெரிய விழிப்புணர்ச்சியைப் பெற்றதாக அறிவித்தனர்.

இவர்களின் ஐந்து பேரில் ஒருவர் எல்லையற்ற அமைதி கிடைத்ததாகத் தெரிவித்தனர். மூன்றில் ஒருவர் காலமே இல்லாத  ஒரு உணர்வை அடைந்ததாக அறிவித்தனர்.

இவர்களில் 46 சதவிகிதம் பேர், நினவுகளில் பல மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்ததாகக் கூறினர். இரண்டே இரண்டு சதவிகிதம் பேர்கள் மட்டும்  “திரும்பி வந்ததை” பார்த்தும் உணர்ந்தும் அனுபவித்ததாகக் கூறினர்.

 

 

பல லட்சம் பேர் இப்படி இறுதி விநாடி அனுபவத்தைப் பெற்று வருகின்றனர். இதை இன்னும் ஆராய்ந்தால் பல உண்மைகள் புலப்படும் என்று ஆய்வுக் குழு தெரிவித்தது.

57 வயதான “இறந்த” ஒரு ராணுவ வீரரின் அனுபவம் சுவையானது. மருத்துவ ரீதியில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் “இறந்த” அறையில் நடந்ததை எல்லாம் அவர் பிட்டுப் பிட்டு வைத்தார். இதயம் நின்ற பின்னர் மூளை 20 முதல் 30 விநாடிகளில் செயல் இழக்கும். ஆனால் அவரோ இரண்டு ப்ளீப் ஒலிகளைக் கேட்டதாகச் சொன்னார். இது மருத்துவ ரீதியாக அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் மூன்று நிமிடங்கள் இடைவெளியில்  ஒரு மெஷினிலிருந்து வெளிப்படும் ஒலியாகும்!

 

 

இது நம்ப முடியாத அதிசயம் என்பதைக் கூறிய பார்னியா, இத்னால் ஒருவர் இறந்து விட்ட பின்னர் கூட நாற்பது நிமிடங்கள் வரை மூளை சேதம் அடைவதில்லை என்ற முடிவுக்கு வரலாம் என்று கூறினார். மற்ற விஞ்ஞானிகள் அவரை ஆதரித்து குறைந்த பட்சம் 20 நிமிடம் மூளை சேதமின்றி அப்படியே இருக்கிறது என்கின்றனர்.

 

 

    அதாவது இற்ந்த பின்னர் கூட ஒருவரின் பிரக்ஞை அல்லது உணர்வு சில நிமிடங்களாவது நீடிக்கிறது என்பதையே தங்கள் ஆய்வின் முடிவு கூறுகிறது என்கிறார் அவர்.

      இன்னொரு சுவையான தகவல் உயிரின் எடையைப் பற்றியதாகும்!

 

 

      உயிரின் எடை 21 கிராம் என்று சொல்லப்படுவதன் மூல காரணம் 1907இல் நடந்த ஒரு ஆராய்ச்சியினால் தான்!

மசாசூசெட்ஸில் டங்கன் மக்டௌகால் (Duncan MacDougall)

என்ற ஒரு டாக்டர் இறக்கும் தருவாயில் இருந்த ஆறு நோயாளிகளை (இரகசியமாக மருத்துவ அற நெறிகளையும்  மீறி) மிக துல்லியமாக அளவுகளைத் தெரிவிக்கும் ஸ்பிரிங்குகள் உள்ள படுக்கைகளில் படுக்க வைத்தார். அவர்கள் இறந்தவுடன் மிகச் சரியாக 21 கிராம் எடையில் குறைந்து விட்டது தெரிய வருவதாகத் தெரிவித்தார். ஆகவே உயிரின் எடை 21 கிராம் தான் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

இந்தத் தகவல் உலகில் மிகவும் பிரபலமாகி விட்டது. ஆனால் இதை  மறுத்த இன்னொரு விஞ்ஞானியான டாக்டர் அகஸ்டஸ் பி. க்ளார்க் என்பவர் ‘அப்படியானால் நாய்கள் இறந்த பின்னர் இப்படி எடை குறையவில்லையே, அப்படியானால் நாய்களுக்கு “உயிரே” கிடையாதா!’ என்று பதில் கேள்வி கேட்டார்.

 

 

       ஆனால் ஆன்மா பற்றிய அனைத்து மதங்களின் தத்துவமும் ஒன்று தான். ஆன்மாவுக்கு எடை, காலம், வெளி எதுவும் கிடையாது என்பது தான். பிளேட்டோ காலத்திலிருந்து சொல்லி வரப்படும் உண்மை. ஆன்மா எதையும் கடந்தது என்பதை யார் தான் மறுக்க முடியும்?

 

 

    ஆன்மா அல்லது உயிரின் எடை பற்றிய இன்னொரு ஆராய்ச்சி 1907க்குப் பின்னர் செய்யப்படவே இல்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஆன்மாவிற்கே ஒரு ஆராய்ச்சியா? ஹ, ஹ, ஹா என்கின்றனர் மெய்ஞானிகள்.

அதை கண்டு பிடிக்காமலா இருப்போம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

சபாஷ், சரியான போட்டி! காலத்தின் கையில் தான் விடை இருக்கிறது!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. …

 

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆலிவர் ஹெவிசைட் (Oliver Heaviside : பிறப்பு 18-5-1850 மறைவு 3-2-1925) பிரபல விஞ்ஞானி. கணித மேதையும் கூட. மின் சர்க்யூட்களைப் பற்றி அபாரமான ஆராய்ச்சிகளைச் செய்தவர் அவர்.

 

அவரது வாழ்க்கை சற்று விசித்திரமானது. பள்ளிப் படிப்பு என்பது ஆரம்ப காலத்தில் மட்டும் அவருக்கு ஒரு சிறிதே இருந்தது. ஆனால் இயற்பியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் சுயமாகக் கற்றார். உலகப் பிரசித்தி பெற்ற விஞ்ஞானியானார்.

அவருக்கு காது சற்று மந்தம். ஆகவே தன்னைச் சந்திக்க வருவோரை மிகவும் குறைத்துக் கொண்டார். ஏறக்குறைய தனிமையில் வாழும் ஒரு சந்யாசியைப் போல வாழ்ந்தார்.

ஒரு நாள் தற்செயலாக  ஒரு வாயு எரிய அதில் அவரது முகம் பட்டு முற்றிலுமாக வெந்து போனது.

 

கோரமான முகத்தைக் காட்ட விரும்பாது ஒரு தலைப்பாவை முகம் முழுவதும் மூடும் படியாகக் கட்டிக் கொண்டு வாழலானார். முகமூடியோ கழுத்துடன் ஒரு கயிற்றினால் இறுகக் கட்டப்பட்டிருக்கும். அவரது கண்கள் மட்டும் பெரிய முகமூடி வழியே மின்னும்!

 

 

உலகம் அவரைப் பாராட்டியபோதும் போதுமான பணமின்றி ஏழையாகவே அவர் வாழ்ந்தார். நண்பர்களோ யாரும் பார்க்க வரவில்லை அல்லது அவர் வரவிடவில்லை!

70 வயது ஆன பிறகு நிலைமை இன்னும் மோசமானது. கரண்ட் பில் கட்டக் கூட பணமில்லை. அவரோ அசரவில்லை. மின்சார இணைப்பு இல்லாமலேயே 15 மாதங்கள் இருட்டில் வாழ்ந்து வந்தார்.   அவரது குறிப்புப் புத்தகங்களும் ஆராய்ச்சி பற்றிய அனைத்து நோட்டுகளும் இன்றும் இன்ஸ்டிடியூஷன் ஆஃப்     எஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் காக்கப்பட்டு வருகிறது.

 

விசித்திரமான விஞ்ஞானியாகத் திகழ்ந்தவர் ஆலிவர் ஹெவிசைட்

*********

 

குகைகள் பற்றி கம்பன் தரும் சுவையான தகவல் (Post No.3407)

Written by London swaminathan

 

Date: 1st December 2016

 

Time uploaded in London: 19-40

 

Post No.3407

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

மேல் நாடுகளில் குகைகள் பற்றி ஆராய்வோருக்காக (Speleology) சங்கங்கள் உள்ளன. உலகில் எங்கு குகைகள் இருந்தாலும் அங்கு சென்று நவீன கருவிகளை வைத்து முதலில் ஆராய்ந்துவிட்டு பின்னர் கயிறு கட்டி உள்ளே இறங்குவர். பின்னர் அது பற்றிய சுவையான தகவல்கள் வெளியாகும். நமது இந்தியாவில் ஏராளமான குகைகள் உள்ளன. மேகாலயாவில் உள்ள குகைகளைப் பற்றி கூட ஒரு ஆங்கிலக் கட்டுரை வந்தது.

 

வால்மீகி ராமாயணத்தில் கதையின் முக்கியத் திருப்பமே குகை மூலமகத்தான் வந்தது. கிஷ்கிந்தையில் குகைக்குள் போன வாலி வரவில்லை என்றவுடன், பயந்து போனதம்பி சுக்ரீவன் அதன் வாயிலை மூடவே வந்தது வம்பு! பின்னர் நடந்த கதை எல்லாம் நாம் அனைவரும் அறிந்ததே.

 

இமயமலையில் நைமிசாரண்யம் என்னும் இயற்கை அழகு மிக்க பூமி அருவிகளும், அடவிகளும் (காடு), குகைகளும் வனவிலங்குகளும் நிறைந்த இடம். அங்குதான் முனிவர்கள் தங்கி புராணக் கதைகளைக் கேட்டனர்; எழுதினர்; யாக யக்ஞங்களைச் செய்தனர்.

இதே போல கிஷ்கிந்தையிலும் குகைகள் இருந்தது வாலியின் கதை மூலம் தெரிகிறது. கிஷ்கிந்தை குகைகள் பற்றிக் கம்பன் கூறும்  பாடலைக் காண்போம்:

 

சரம்பயில்நெடுந்துளி நிரந்த புயல் சார

உரம் பெயர்வு இல் வன் கரி கரந்துற ஒடுங்கா

வரம் பகல் நறும் பிரசம் வைகல் பல வைகும்

முரம்பினில் நிரம்பல முழைஞ்சியடை நுழைந்த

கார்காலப் படலம், கிட்கிந்தா காண்டம்

 

பொருள்:-

வானில் பரவிக்கிடந்த மேகங்களில் இருந்து மழை கொட்டியது அம்புகள் சரமாரியாக வந்ததுபோல இருந்தது. அப்போது தேன்கூடுகளில் இருந்து தேன் வழிந்தது. அப்பொழுது அந்த யானைகள்  மழையைப் பொறுக்க முடியாதபடி குகைக்குள் ஒவ்வொன்றாக நுழைந்தன.

 

இப்பொழுது நாம் இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்ப்போம்; யானைகள் நுழையும் அளவுக்கு பெரிய வாயில்கள்!! அவ்வளவு யானைகளுக்கும் இடம் தரும் அளவுக்கு அகன்ற ஆழமான குகைகள்! இப்படி இருந்ததாம் கிஷ்கிந்தைப் பகுதி.

 

(முழை=குகை, பிரசம்=தேன்கூடு)

 

முழை என்ற சொல் சங்க இலக்கியத்தில் பரிபாடல், அகநானூறு, புறநானூறு பாடல்களில் வருகிறது. பேகன் ஆண்ட மலைப் பகுதியில் பெரிய குகைகள் இருந்தனவாம். அகநானூறு பாடல் ஒன்றில் இரவுநேரத்தில் தன்னைக் காண வரவேண்டாம்; ஏனெனில் மலைக்குகைகளில் புலிகள் இருக்கின்றன என்று காதலனுக்கு காதலி கூறுகிறாள்.

 

குகை என்ற சம்ஸ்கிருதச் சொல் சங்கப் பாடல்களில் கிடையாது. முழை என்ற சொல்லே நீண்டகாலத்துக்குப் பயன்படுத்தப்பட்டது.

காளிதாசன் பாடலில் குகைகள்

உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன், குமாரசம்பவம் என்னும் காவியத்தில் முதல் 18 பாடல்களில் இமய மலையை அற்புதமாக வருணிக்கிறான். அதில் இரண்டு பாடல்களில் குகைகளைப் பற்றியும் சொல்கிறான். கிம்புருஷப் பெண்கள், இமயமலைக் குகைகளில் இருப்பதாகவும் மேகங்கள் குகைகளின் வாயிலில் தவழ்ந்து செல்லுகையில் அவை திரை போல இருந்து அவர்களுக்கு உதவின என்றும் பாடுகிறான்.

 

சங்க இலக்கியப் பாடல்களில் குகை (முழை)

அகம்-168, பரி-8, 19, புற. 147, 157, 158.

 

காளிதாசன் குமார சம்பவம் – 1-12, 1-14

 

–SUBHAM–

 

Amusing and Eccentric (Zanies) Anecdotes (Post No.3406)

Compiled by London swaminathan

 

Date: 1st December 2016

 

Time uploaded in London: 8-34 AM

 

Post No.3406

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

Riding on the subway during fairly a crowded hour a man was started to see sitting opposite him in the car a man reading his newspaper and paying no attention whatever to a pair of pigeons which were seated one on each of his shoulders. Many stations further on, when the crowd was thinned out somewhat, he could repress his curiosity no longer. Stepping across the aisle he accosted the man, saying

“I beg your pardon, but would you mind telling me what those pigeon s are doing on your shoulders?”

The man looked up from his newspaper and said,

“I don’t know. They got on at 14th street.”

 

Xxxx

 

Bottle Breaker

A man stepped briskly up to a swanky cocktail bar at the Waldorf in  New York and snapped at the barkeeper, Martini

He got the drink and the bartender was astounded to see him toss the contents over his left shoulder and then proceed to nibble off the rim of the glass. Having finished this crispy morsel he slapped down the remains and said,

Another

Another was served and the performance was repeated.

Say, said the bartender, leaning over the bar,

Are you crazy?

No,said the man snappily, it’s simply that  I like only the rim of the glass.

But, said the bartender, the stem is the best part!

 

Xxx

 

Lincoln’s Dream

Lincoln once dreamed he was in some great assembly, and the people drew back to let him pass, whereupon he heard some one day,

He is a common looking fellow

In his dream Lincoln turned to the man and said,

Friend, the Lord prefer s common looking people; that is the reason why he made so many of them.

Xxx

 

Caesar’s wife must be above suspicion!

A simple youth coming to Rome from the country was observed to resemble Augustus so much that it was the subject of general conversations. The emperor ordered him to appear at court, and inquired of him if his mother had ever been in Rome.

No, answered the innocent youth, but my father has.

 

–Subham–

 

 

மன்னனின் பிரச்சினையும் ஆனந்தரின் தீர்வும்! (Post No.3405)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 1st December 2016

 

Time uploaded in London: 5-50 AM

 

Post No.3405

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

புத்தரின் சீடர் ஆனந்தர் வாழ்வில்!

 

மன்னனின் பிரச்சினையும் ஆனந்தரின் தீர்வும்!

ச.நாகராஜன்

 

புத்தரின் சீடரான ஆனந்தர் மிக அபாரமான அறிவும் சிறந்த பண்புநலன்களும் உடையவர்.

எந்த சிக்கலான பிரச்சினைக்கும் யாருக்கும் துன்பம் இல்லாதவாறு தீர்வைக் காண்பவர்.

இதை விளக்கும் ஒரு சம்பவம் உண்டு.

ஒரு முறை மன்னன் பசநாடி மிகுந்த கோபத்துடனும் துக்கத்துடனும் இருந்தான். காரணம், அந்தப்புரத்தில் இருந்த போது அவன் மகுடத்தில் இருந்த ஒரு இரத்தினக் கல்லைக் காணோம் என்பது தான்.

அந்தப் புரத்தில் இருந்த அனைவரையும் நன்கு சோதிக்குமாறு மந்திரியிடம் அவன் உத்தரவு பிறப்பித்தான்.

ஆனால் பயன் ஏதுமில்லை.

 

 

அந்தப்புரப் பெண்மணிகளும் அங்கு வேலை பார்த்தோரும் மிகுந்த துன்பத்துக்கு ஆளானார்கள்

கவலையுடன் அவர்கள் அனைவரும் ஆன்ந்தரை நாடினார்கள்..

என்ன விஷயம் என்று கேட்டார் ஆனந்தர்.

அவர்கள் நடந்ததை விளக்கினர். ஆனந்தர் நேராக  மன்னனிடம் வந்தார்.

மன்னா! கவலைப்பட வேண்டாம். இந்தப் பிரச்சினையை எளிதில் தீர்த்து விடலாம் என்றார்.

மன்னன், “பூஜ்யரே, அது எப்படி சாத்தியம். அனைவரையும் நன்கு சோதித்து விட்டோமே. இனி என்ன வழி?” என்று கேட்டான்.

:”மன்னா! அங்குள்ள ஒவ்வொருவரிடமும் சிறிது வைக்கோலையும் களிமண் உருண்டையும் கொடுத்து அவர்கள் விரும்பிய இடத்தில் அவற்றை வைக்கச் சொல்” என்றார் ஆனந்தர்.

 

அதன்படியே உத்தரவு பிற்ப்பிக்கப்பட்டது. அனைத்து களிமண் உருண்டைகளும் சேகரிக்கப்பட்டன. ஆனந்தர் அவற்றைக் கவனமாகச் சோதித்தார். திருடியது யாராக இருந்தாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி களிமண் உருண்டைக்குள் இரத்தினக் கல்லை வைத்து விடுவார் என்று அவர் எண்ணினார். ஆனால் அந்த உருண்டைகள் எதிலும்இரத்தினக்கல் இல்லை.

ஆனந்தர் யோசித்தார். தன் திட்டத்தைச் சற்று மாற்றினார்.

“மன்னா! ஒரு அறைக்குள் பெரிய குடம் நிறையத் தண்ணீரை வை. அந்த அறைக்கு முன்னால் திரை ஒன்று தொங்கட்டும். அனைவரையும் அங்கு சென்று குடத்தின் நீரால் கையை அலம்பச் சொல்” என்றார்.

அனைவரும் அறைக்குள் சென்று திரைக்குப் பின்னால் இருந்த குடத்து நீரால் கையை அலம்பி விட்டு வந்தனர்.

பின்னர் ஆனந்தர் மன்னனுடன் அந்த அறைக்குள் நுழைந்தார்.

குடத்திலிருந்த நீரைக் கொட்டினார். குட்த்தின் உள்ளே இரத்தினக்கல் இருந்தது.

மன்னன் மிகவும் மனம் மகிழ்ந்தார்ன். அவரது கூர்மையான அறிவையும் பிரச்சினையை யாருக்கும் பாதகமில்லாமல் அணுகி உடனே அதைத் தீர்த்ததையும் வெகுவாகப் போற்றினான்.

அவரைப் பணிந்து ஆசியை வேண்டினான்.

ஆனந்தர் தன் வாழ்நாள் முழுவதும் புத்தரின் போதனைகளின் படி வாழ்ந்து காண்பித்தார்.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, உடனடியாக யாவருக்கும் இசைந்த முறையில் தீர்வைக் காண்பார்.

புத்தருக்கு  உகந்த சீடர் அவரே என்பதைக் காட்டும் ஏராளமான சம்பவங்கள் அவர் வாழ்வில் நடந்தன. அனைத்துமே அருமையானவை!

*******