சங்க இலக்கியத்தில் வறட்சி! (Post No.3955)

Research Article Written by London Swaminathan

 

Date: 30 May 2017

 

Time uploaded in London- 9-58 am

 

Post No. 3955

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

வறட்சி பற்றி பாரத நாட்டு இலக்கியங்கள் எழுதி இருக்கும் விஷயங்கள் பல வரலாற்று உண்மைகளை எடுத்துரைக்கின்றன. மிகவும் அதிசயமான விஷயங்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.

 

சிந்துசமவெளி நாகரீகம் எப்படி அழிந்தது என்ற செய்தியும் வறட்சி பற்றிய மஹாபாரதக் குறிப்பால் தெரியவருகிறது.

மஹாபாரத காலத்திலேயே சரஸ்வதி நதி வற்றிய செய்தி மஹாபாரதத்திலேயே பல இடங்களில் வருவதால் வேதங்கள் கி.மு 3102-க்கு முந்தையவை என்பது உறுதியாகிறது. வேதங்கள் ஜீவ நதியாக இருந்த சரஸ்வதி நதியை விதந்து ஓதுகின்றன. பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள், தொல் பொருட் துறை அடிப்படையில், மஹாபாரத காலம் கி.மு .1500 என்று எழு தி  இருப்பதை ஏற்றுக் கொண்டாலும்  வேதங்கள் 3500 ஆண்டுகளுக்கு முன் என்பது உறுதி ஆகிறது. வேதங்களைத் தொகுத்து அளித்ததாலும் , மஹாபாரதத்தை தொகுத்து வழங்கியதாலும் தான் நாம் ‘கறுப்புத் தீவுக்காரனை’ (க்ருஷ்ண த்வைபாயன) ‘வியாசன்’ (கட்டுரையாளன், எழுத்தாளன்) என்று போற்றுகிறோம்.

 

(( நான் பள்ளியில் படித்த போது யானை பற்றி ஒரு வியாசம் எழுது என்றுதான் கேள்வித்தாளில் இருக்கும்! இப்பொழுது யானை பற்றி ஒரு கட்டுரை எழுது  என்று வருகிறது.))

 

பத்து பிரிவுகளைக் கொண்ட பிராமணர்கள் எப்படி நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்றனர் என்றும் தெரிகிறது

முதலில் தமிழில் உள்ள விஷயத்தைப் பார்ப்போம்.

நற்றிணையில் (230) ஆலங்குடி வங்கனார் பாடுகிறார்:

முயப்பிடிச் செவியின் அன்ன பாசடைக்

…………

முனிவில் பரத்தையை என் துறந்து அருளாய்

நனிபுலம்பு அலைத்த வேலை நீங்கப்

புதுவறங்கூர்ந்த செறுவில் தண்ணென

மலிபுனல் பரத்தந் தாஅங்கு

இனிதே தெய்ய நின் காணுங் காலே –230

 

பொருள்

பரத்தையிடம் (ப்ர ஸ்த்ரீ) சென்ற தலைவா! அவளிடமே இரு; இங்கு வாராதே; உன்னைப் பார்த்த போதே வறண்ட நிலத்தில் பாய்ந்த புது மழை வெள்ளம் போல என் உள்ளம் குளிர்ந்து இருக்கிறது (அது போதும்)

 

இவ்வாறு வறண்ட நிலத்தில் பெய்த மழை (நீர், வெள்ளம்) என்ற உவமை சம்ஸ்கிருதத்தில் பல இடங்களில் வருகிறது. புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் ரகுவம்ச காவியத்தில் இந்த உவமையைக் கையாளுகிறான்:

ராவணன் என்னும் வறட்சியை திருமால் என்னும் மழை போக்கியது- இதுதான் காளிதாசன் சொல்ல வந்த செய்தி (ரகுவம்ச காவியம் 10-48)

 

தேவர்கள் பயிர்கள்; ராவணனுடைய கொடுமை பயிர்களுக்கு உண்டான வறட்சி; திருமால்-மேகம்; அவர் உதிர்த்த வாக்கு அமிர்தம். பயிர்கள் வறட்சியால் வாடின; மழை பொழிந்தது; நீரால் அவ்வாட்டம் மறைந்தது.

 

மஹாபாரதத்தில் இரண்டு கதைகள்

அங்க தேச மன்னனான லோமபாதன், சில பிராமணர்களுக்கு தீங்கு செய்யவே அவர்கள், அந்த நாட்டில் நீண்ட காலம் வறட்சி ஏற்படட்டும் என்று சபித்தனர். “நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை”– என்ற சான்றோர் வாக்கை அறிந்த லோமபாதன், மிகச் சிறந்த ரிஷ்ய ஸ்ருங்கர் என்ற முனிவரை தம் நாட்டுக்கு அழைக்க எண்ணினான். அவரை அழகான பெண்களை அனுப்பி தந்திரமாக அழைத்து வந்தான். நாட்டில் வறட்சி நீங்கியது. தன்னுடைய வளர்ப்பு மகள் சாந்தாவை அவருக்கு திருமணமும் முடித்தான் (மஹா. 3-110)

இதில் அங்க தேச வறட்சி பற்றி நாம் அறிகிறோம்.

 

சாரஸ்வத பிராமணர்கள் என்போர் இப்போது கொங்கண தேசத்தில் அதிகம் உள்ளனர். ஆனால் இவர்கள் ஒருகாலத்தில் சரஸ்வதி நதி தீரத்தில் வசித்தவர்களாவர். அங்கு தொடர்ந்து 12 ஆண்டுக் காலம் வறட்சி நிலவவே இவர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து பல திசைகளுக்கு ஏகினர்.

 

பிரமணர்களை பத்து பிரிவாகப் பிரிப்பர்: பஞ்ச கவுடா (வடக்கத்திய 5 பிரிவு); பஞ்ச திராவிடா =தெற்கத்திய 5 பிரிவு பிராமணர்கள். சாரஸ்வத பிராமணர்கள், கௌடா பிரிவைச் சேர்ந்தோர் ஆவர்.

 

இரண்டாவது கதை

ததீசி மகரிஷியின் மகன் பெயர் சரச்வத. அவருடைய அம்மா பெயர் சரஸ்வதி. 12 ஆண்டுகளுக்கு வறட்சி நிலவியதால் எல்லா ரிஷிகளும் சரஸ்வதி நதி தீரத்திலிருந்து வெளியேறினர். இதனால் அவர்களுக்கு வேதங்கள் மறந்துவிட்டன. “பசி வந்திடப் பத்தும் போம்” என்பது சரிதானே! அவர்கள் எல்லோரும் உணவைத் தேடி அலைந்தனர். சரஸ்வத மட்டும் வேதங்களைப் போற்றிப் பாதுகாத்து அவர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தினார் (மஹா.9-51)

இதில் பல உண்மைகள் பொதிந்துள்ளன:

  1. நீண்ட 12 ஆண்டுக்கால வறட்சி

2.இதனால் சிந்து சமவெளி காலியனது. சரஸ்வதி நதி வற்றியது. சாரஸ்வத முனிவரின்   தாய் போன்றது அந்த நதி என்ற பொருளிலேயே அவரது தாயார் சரஸ்வதி என்று கூறியதாக நான் நினைக்கிறேன்.

3.சிந்து சமவெளி நாகரீகம் அழிந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

4.சாரஸ்வத பிராமணர்கள், தாங்கள், சரஸ்வதி நதி தீரத்தில் இருந்து வந்ததாகச் சொல்வதற்கும் இந்த மஹாபாரத கதை உதவுகிறது.

 

சம்ஸ்கிருதத்தில் வற்கடம் என்றால் வறட்சி; தமிழ்ச் சொல்லுக்கும் அந்த சொல்லுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் காணலாம்.

 

வியாழன் கிரகமும், வெள்ளி கிரகமும்

 

குரு என்னும் வியாழன் கிரகம் சூரியனைச் சுற்றிவர 12 ஆண்டுகள் பிடிக்கும். ஆகையால் 12 ஆண்டுக்கு ஒரு முறை வறட்சி  ஏற்படும் என்று சம்ஸ்கிருத நூல்கள் செப்பும் ஆனால் தமிழர்களைப் பொறுத்த மட்டில் வெள்ளி கிரகத்துக்கும் மழைக்கும்தான் தொடர்பு அதிகம் மூன்று சங்கப் பாடல்களில் இக்குறிப்பு வருகிறது:-

 

வெள்ளி கிரகம் தென் திசை ஏகியதால் வறட்சி வந்ததாக புற நானூறு 388, பதிற்றுப் பத்து 24; 69 பாடல்களில் வருகின்றது.

 

வெள்ளி தென் திசை சென்றாலும் சோழர் ஆட்சியில் வளம் கொழிக்கும்; வறட்சி வாலாட்டாது என்று மேலும் மூன்று புற நானூற்றுப் புலவர்கள் பாடுவர் ( புற.35, 386, 397)

 

ஆக வியாழன் , வெள்ளி கிரஹம் பற்றி அவ்வளவு கவலை! உலகில் வேறு எந்த நாட்டு விஞ்ஞானியும் கூறாத இக்கருத்துகளை பாரதீயர்கள் மட்டுமே புகன்றனர். வருங்காலத்தில் அவர்களும் கண்டு பிடிக்கும்போது நாம் முன்னரே

சொல்லிவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளலாம்.

தேவாரத்தில் வறட்சி

 

தேவாரத்தில் இரண்டு அற்புதங்கள் வறட்சியுடன் தொடர்புடையவை. வறட்சியால் சோழ நாட்டு மக்கள் கஷ்டப் படவே அப்பரும் சம்பந்தரும் சிவபெருமனை வேண்ட அவர் வாசி தீர தங்கக் காசு நல்கினார். அதை வைத்து வயிற்றுக்குச் சோறிட்டனர் இரு பெரும் சைவப் பெரியார்கள். இது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அவர்களுக்கு 200 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த சுந்தரருக்கு வறட்சி காலத்தில் சிவன் நெற்குவியலை மலை போலக் குவித்துக் கொடு  தார்.

 

சுந்தரருக்குப் படியளக்கும் கிழார், வறட்சி காரணமாக நெல அனுப்பவில்லை. சுந்தரருக்கும் வருத்தம்; நிலக்கிழாருக்கும் வருத்தம்.

இரவில் நிலக் கிழாரின் கனவில் வந்த சிவபெருமான் , நெற்குவியல் வரும் என்று சொல்லிப் போந்தர். மறு நாள் கிராமம் முழுத்ம் நெல். உடனே ஆரூரருக்கு செய்தி அனுப்பினார். ஆரூரர்– சுந்தரர் – – வந்து பார்த்து, இதை எப்படி திருவாரூருக்கு எடுத்துச் செல்வேன் என்று வழி தெரியாமல் வருந்தினார். சிவன், அவரது கனவில் தோன்றி சிவ கணங்கள் அப்பணியைச் செய்யும் என்று பகர்ந்தார். அவர் சொன்ன மாதிரியே மறு நாள் திரு ஆரூரில் வீடு தோறும் நெல் மலை!

ஆக அற்புதம் ஒரு புறம் இருக்க அதற்குக் காரணமான வறட்சி நமக்கு ஒரு செய்தியாகும்.

திருவிளையாடல் புராணத்தில் வறட்சி

 

மதுரையில் எழுந்தருளிய சிவ பெருமானின் 64 திருவிளையாடல்களைச் சொல்லுவது பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணமாகும்

அதில் உக்கிரகுமார பாண்டியன் காலத்தில் தமிழ்நாட்டில் 12 ஆண்டுக்கால வறட்சி  ஏற்பட்டது. உடனே முடியுடைய மூவேந்தரும் அகஸ்தியர் வழிகாட்டுதலில் இந்திரனைப் பார்த்து தீர்வு கண்டனர்.

 

ஆக வறட்சி பற்றி மஹாபாரதம் முதல் திருவிளையாடல் புராணம் வரை 4000 ஆண்டுகளுக்கான குறிப்புகள் உள்ளன. பிருஹத் சம்ஹிதா முதலிய நூல்களில் உள்ள விஷயங்களை ஆராய்ந்தால் உலகிற்கே நாம் வறட்சி  பற்றி கற்பிக்கலாம்.

–subham–

Leave a comment

Leave a comment