பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் கதை! (Post No.4261)

Written by London Swaminathan

 

 

Date: 1 October 2017

 

Time uploaded in London- 1-08 pm

 

Post No. 4261

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பவிஷ்ய புராணத்தில் யமன் பற்றிய ஒரு சுவையான கதை உளது; அதை நான் இப்போது உரைப்பேன்:

 

யம தர்ம ராஜன் பூமிக்கு வந்தார். அழகான ஒரு பிராமணப் பெண்ணைக் கண்டார்; காதல் கொண்டார்; அவள் பெயர் விஜயா.

 

ஓ பேரழகியே, உன் மீது காதல் கொண்டேன்; என்னைத் திருமணம் செய்து கொள்;  யம லோகம் போகலாம். இனிதே வாழலாம் என்றான்– யமதர்ம ராஜன்.

அடச் சீ, தள்ளி நில்; உன் மூஞ்சியும் முகரையும் பார்க்கச் சகிக்கவில்லை; வாஹனமோ உன்னை விடக் கருத்த எருமை- என்றாள் விஜயா.

யமதர்ம ராஜனோ விடவில்லை.

பெண்ணே! என் வீரப் பிரதாபங்களைக் கேள்; யுதிஷ்டிரன் எனப்படும் தர்மனுக்கு அடுத்தபடியாக, சொல்லப்போனால் அதற்கும் முன்னதாகவே , என் ஒருவனுக்குத்தான் தர்மராஜன் என்று பெயர்; அவரவர் செய்த பாப புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை அளிப்பது என் கடமை; ‘ஆளைக் கண்டு ஏமாறாதே ஊது காமாலை’ என்ற பழமொழியை அறியாயோ? பேதையே1 பெண் மானே1 இளங்கிளியே; கருங்குயிலே; என் குணத்தைப் பார் –என்றான் யமன்.

அவளும் குணத்தில் மயங்கினாள்; கல்யாணத்துக்கு இணங்கினாள்.

 

இருவரும் யமலோகத்துக்கு ‘ஹனிமூன்’ போனார்கள்; இல்லற வாழ்வு இனிதே விளங்கியது.

 

பெண்ணே; ஒரே ஒரு கண்டிஷன்/ நிபந்தனை; இந்த ராஜ்யத்தில் தெற்கு திசைப் பக்கம் போய்விடாதே; எல்லாம் உன் நன்மைக்குதான் சொல்லி வைத்தேன்– என்றான் யமதர்மன்.

 

சந்தேகப் பேர்வழிகள்!

பெண்புத்தி வேறு வகையில் செல்லும்; ஆண்கள் ஒரு கணக்குப் போட்டால் அவர்கள் வேறு ஒரு கணக்குப் போடுவர்; சந்தேகப் பேர்வழிகள்; வீட்டிற்குத் தாமதமாக வந்தால் வேறு ஒரு பெண் பின்னனியில் இருக்கிறாளோ? என்பர். தும்மல் போட்டால் இப்போது உம்மை யார் நினைத்தாள்? யார் அந்தப் பழைய காதலி? (காண்க திருக்குறள்) என்பர். உன்னை நான் இப்போது மறப்பேனா? என்று அவன் சொன்னால் ஏன் ‘எப்போதும்’ என்று சொல்லவில்லை என்று ஊடல் கொள்ளுவர் (காண்க காமத்துப்பால்-திருக்குறள்)

 

 

சம்சயாத்மா விநஸ்யதி= சந்தேகப் பேர்வழி அழிவான்– என்று கண்ணபிரான் பகவத் கீதையில் சொன்னதையும் உதறிவிட்டு தென் திசைக்குப் பயணமானாள் இளஞ் சிட்டு விஜயா- யமனின் புது மனைவி!

 

கோரமான காட்சி; ஐயோ அம்மா

என்று சத்தம்; அடி உதை, எத்து, குத்து, வெட்டு, தட்டு என்று யமகிங்கரர் முழக்கம். பாபாத்மாக்கள் தண்ணீர் தண்ணீர் என்று கதறல்; ஏண்டா வந்தோம் என்று ஆகிவிட்டது விஜயாவுக்கு; சரி திரும்பிப் போகலாம் என்று நினைத்த போது “மகளே! பார்த்த ஞாபகம் இல்லையா? நாந்தான் ம(க்)களைப் பெற்ற மகராசி!” என்று கூச்சல் போட்டாள் விஜயாவின் அம்மா!.

 

அன்றிரவு விஜயாவின் கதவைத் தட்டினான்; எமன்; ஒரு ‘பிராமிஸ்’ (Promise)  கொடுத்தால்தான் இன்றிரவு உமக்கு அனுமதி என்றாள் விஜயா.

அன்பே, ஆருயிரே! உனக்கு இல்லை என்று சொல்வேனா? என்றான் யமன். கதவும் திறந்தது.

 

மெதுவாக அவிழ்த்துவிட்டாள்! அம்மாவின் கதையை!

என் அம்மாவை சித்திரவதை நடை பெறும் தென் திசையிலிருந்து விடுவித்தால் என்னைத் தொடலாம்; படலாம் என்றாள்.

 

அடக் கடவுளே; தென் திசை செல்லக்கூடாது என்று சொன்னேனே! இந்து மதத்தில் ஒரு விதி உள்ளது அதுதான் வேதத்தில் முதல் மந்திரம்; சத்யம் வத= உண்மையே பேசு; உபநிஷத்தில் ஒரு மந்திரம் உள்ளது சத்யமேவ ஜயதே நான்ருதம்= ‘’வாய்மையே வெல்லும் – பொய் அல்ல’’ என்று.– அதுதானே இந்திய அரசின் , நீ வாழ்ந்த தமிழ்நாட்டின் அரசியல் சின்னம்; நானே கூட உண்மையை மீற முடியாது; உன் அம்மா செய்த பாவங்களுக்கு அவள் நரகத்தில் அனுபவிக்கிறாள். அதற்கு நான் என்ன செய்வேன்? கடவுளேகூட சாபமோ, வரமோ கொடுத்துவிட்டால் அதை அனுச ரித்தே ஆக வேண்டும்– நான் ‘தீர்க சுமங்கலி பவ:’ என்று சொல்லி சாவித்ரியிடம் சிக்கிய கதைதான் உலகப் பிரசித்தமே என்றான் யமன்

அவளோ கெஞ்சினாள்; மன்றாடினாள்; சரி இந்து மதத்தில் எல்லாப் பாவங்களுக்கும் விமோசனம் உண்டு; எல்லா சாபங்களுக்கும் ஒரு குறுக்கு வழியும் உண்டு. அதன்படி கொஞ்சம் தப்பிக்கலாம். உங்கள் அம்மாவின் பாவம் போவதற்குச் சமமான புண்ணிய கருமங்களை – யாக யக்ஞங்களை பூலோகத்தில் ஒருவர் செய்து கணக்குக் காட்ட வேண்டும்– எனது அக்கவுண்டண்டு (Accountant) சித்திர குப்தன் லாப-நஷ்டக் கணக்கில் மன்னன். அவன் ஓகே சொன்னால் உன் அம்மா    பிழைப்பாள் என்றான் யமன்

 

அவளும் பூலோகத்தில் உள்ள எல்லாப் பத்திரிக்கைகளிலும் விளம்பரம் செய்தாள்; மாற்று “கிட்னி” (Kidney) கேட்டு அல்ல; புண்ய கருமங்களைச் செய்ய ஒரு பெண் தேவை என்று. மிகவும் சிரமப்பட்டு ஒரு பெண் கிடைத்தாள்

யாக  யஞங்களை முறையே செய்து, சித்திரகுப்தன் கணக்குகளைச் சரி பார்த்து யம தர்மனுக்கு ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுக்கவே விஜயாவின் அம்மா விடுதலை ஆனாள்

விஜயாவுக்கும் சந்தோஷம்; இல்லறம் இனிதே நடந்தது!

 

கதையில் சுவை கூட்ட கொஞ்சம் சொற்களை மட்டும் கூட்டினேன்; ஆனால் கருத்துப் பிழை எதுவுமிலை.

 

இந்தக் கதை நமக்கு தெரிவிப்பது என்ன?

1.தென் திசை பற்றி  திருக்குறளும் சங்கத் தமிழ் (புறநானூறு) பாடல்களும் சொன்னது வேதத்தில் உள்ள இந்து மதக் கருத்தே; ஆகையால் தமிழ் பண்பாடு, வடக்கத்திய பண்பாடு என்று எதுவுமிலை.

 

2.ஆரியர்கள், ஐரோப்பாவில் இருந்து வந்தனர்- மத்திய ஆசியாவில் இருந்து,  ஸ்டெப்பி புல் வெளியிலிருந்து வந்தனர் என்று உளறிக்கொட்டி கிளறி மூடும் மாக்ஸ்முல்லர்கள், கால்டுவெல்களுக்கு செமை அடி கொடுக்கிறது இந்தக் கதை. ஏனெனில் தென் திசை யமன் திசை என்பது இந்து மதக் கருத்து- தமிழர் கருத்து- திருவள்ளுவர் கருத்து– இது உலகில் வேறு எங்கும் இல்லை. ஆக இந்துக்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் ஆயிரம் விஷயங்களில் இதுவும் ஒன்று.

 

3.இன்னும் ஒரு கருத்து; கடவுளே ஆனாலும் உண்மை என்னும் விதி முறையை- நியாயம், நீதி, நேர்மை என்ற விதி முறைகளைப் பின்பற்ற வேண்டும் சொந்தக்காரர்கள், வேண்டியவர்களுக்குச் சலுகை இல்லை; ஆனால் பாப விமோசனம் பெற வழிகள் உண்டு.

 

 

4.வில்லியம் ஜோன்ஸும் மாக்ஸ்முல்லரும் கால்டுவெல்லூம் காட்டிய ஓரிரு ஒற்றுமைகளைவிட நமக்கும் ஐரோப்பியர்களுக்கும் வேற்றுமைகளே அதிகம். நம்முடைய கலாசாரத்தில் கொஞ்சம் மிச்சம் மீதி அவர்களுக்கு நினைவிருக்கிறது ஏனெனில் உலகம் முழுதும் இந்து மத சம்பிரதாயங்கள் இருந்ததன் மிச்சம் சொச்சம்தான் இவை என்று காஞ்சிப் பெரியவர் (1894-1994) உரைகளில் மொழிந்துள்ளார்.

எகிப்து முதலிய கலாசாரங்களில் மேற்கு திசைதான் மரணதேவன் திசை!

 

5.யமனும் கூட நல்லவன்; நீதி நெறிப்படி– சட்டப் புத்தகப் படி- தண்டிப்பவனே. ஆனால் நசிகேதன், மார்கண்டேயன், சாவித்திரி போன்றவர்களிடம் ‘ஜகா’ வாங்கினார். காரணம்? ஒரு சொல் சொல்லிவிட்டால் அதை மாற்ற முடியாது; இறை அருள் இருந்தால்

பாரதி போல  “காலா என் காலருகே வாடா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்/ என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்” எனலாம்.

 

வாழ்க புராணக் கதைகள்! வளர்க

அவை உணர்த்தும் நீதி நெறிகள்!!

 

–SUBHAM—

 

TAGS:

யமன் கதை, பவிஷ்ய புராணம், விஜயா, பாவ புண்ணியம், நரகம்

 

Leave a comment

2 Comments

 1. யமன் என்ற சப்தத்தைக் கேட்டதுமே நமக்கு உதரல் எடுக்கிறது! மேற்கொண்டு எதுவும் சிந்திப்பதில்லை!
  சந்த்யாவந்தனத்தில் யமனுக்கு நமஸ்காரம் செய்ய மந்திரம் இருக்கிறது:
  யமாய தர்மராஜாய ம்ருத்யவே ஶாந்தகாயச
  வைவஸ்வதாய காலாய ஸர்வபூத க்ஷயாய ச
  ஔதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே
  வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:

  சில சம்பிரதாயங்களில், பிற தேவர்கள், ரிஷிகளுக்குப் போல யமனுக்கும் தர்ப்பணம் செய்யும் வழக்கம் இருக்கிறது. இங்கு வரும் நாமங்கள்:
  காலம், நீலம், ம்ருத்யும், அந்தகம், யமம், யமராஜம், தர்மம், தர்மராஜம், சித்ரம், சித்ரகுப்தம், வைவஸ்வதம். இந்த நாமங்களின் ஆழ்ந்த பொருளை ஊன்றிக் கற்றால், யமன் என்பதன் முழு சொரூபமும் விளங்கும்.
  அக்னி, வாயு, வருணன் போல யமனும் One Dimensional . அதாவது அவனுக்கு இடப்பட்ட தொழில் தவிர வேறு எதையும் அவனால் செய்யமுடியாது. ஆனால் அதையும் பகவான் தான் அந்த ரூபத்தில் செய்கிறார்! இதை பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார்; ” அடக்கியாள்பவர்களில் நான் யமனாக இருக்கிறேன்” ( ஸம்யதாம் அஹம் யம: ) 10.29
  இந்தக் கட்டுரையில் கண்ட மூன்று பேர்களும் யமனின் limitationஐ விளக்குகிறார்கள் !
  சாவித்ரி தன் கூரிய மதியினால் யமனை மடக்கினாள்! “தீர்க சுமங்கலியாக இரு” என வாழ்த்திய தர்மராஜன், பிறகு அதற்கு எதிராக எப்படி நடக்க முடியும்?
  நசிகேதஸ் விஷயத்தில் யமதூதர்கள் தவறு செய்தார்கள்; அவன் தகப்பனாரும் வாய்தவறி யஜ்ஞ சமயத்தில் ஏதோ சொல்லிவிட்டார். அவன் காலம் முடியாததால் யமன் அவனை எதிர்பார்க்கவில்லை,; அவன் மூன்று நாள் பட்டினி கிடக்க நேர்ந்தது! இதற்கு பிராயச்சித்தமாக அவன் மூன்று வரங்கள் பெற்றான்! உலக போகங்களில் மனதை செலுத்தாமல் (Preyas) , சிறந்த, மேன்மையான வாழ்க்கையின் ( Shreyas) ரகசியத்தைப் பெற்றான்! [ அர்ஜுனன் இதைத்தான் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் வேண்டினான்! கீதை 2.7] மரணத்தின் பின் உள்ள மர்மத்தை உடைத்தான்!
  இதை நமது காலத்தில் 17 வயது சிறுவனாக இருக்கும்போதே செய்துகாட்டினார் பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷி!
  மார்க்கண்டேயர் கதை அனைவரும் அறிந்ததே. இது யமபயத்தைப் போக்கும் ஒரு உபாயத்தைச் சொல்கிறது! பகவானைச் சரணடைந்தவர்களுக்கு ” எமராஜன் விட்ட கடையேடு என்செய்யும்?” என்பதைக்காட்டுகிறது. யமபயம் போக பகவானிடம் பக்தி அவசியம். இதையும் பகவான் ரமணர் ஒரு பாடலில் சொல்லியிருக்கிறார்:
  மரணபய மிக்குள அம்மக்கள் அரணாக
  மரணபவ மில்லா மகேசன் – சரணமே
  சார்வர் தஞ்சார்வொடு தாம் சாவுற்றார் சாவெண்ணம்
  சார்வரோ சாவாதவர்,
  [ ஆனால் நமது புராணங்களில் எத்தனை மார்க்கண்டேயர்கள் இருக்கிறார்கள் என்றும் ஸ்ரீ ரமணர் கேட்டார்! ]

  மேலை நாட்டு சம்பிரதாயத்தில், மரணத்தைப்பற்றிப் பேசுவதோ, சிந்திப்பதோ உசிதமாக, நாகரீகமாக கருதப்படுவதில்லை. இதைப்பற்றி “Denial of Death” என்ற புத்தகத்தில் Carl Becker விரிவாக எழுதியிருக்கிறார். நாமோ தினமும் மூன்று வேளை சந்த்யாவந்தனத்திலும் இதை நினைக்கிறோம்! வாழ்க்கையின் முடிவு மரணம் என்றால், வாழ்க்கையே அர்த்தமற்றதாகிவிடுகிறது! மரணமில்லாப் பெரு நிலையை போதிக்கும் நம் மதம், மரணபயத்தைப் போக்குகிறது.
  பிறவித் தொடர் அற சீரிய வாழ்க்கை அவசியம், இதற்கு யமனைப்பற்றி நினைப்பதும் ஒரு உபாயமாகிறது. யமவாதனை, மரணசமயத்தில் உயிர்கள் படும் அவஸ்தை ஆகியவற்றை அருணகிரி நாதர் பல பாடல்களில் சித்தரித்திருக்கிறார். இதைப்பார்த்தாவது யமனைப்பற்றிய நினைவு நல்லொழுக்கத்திற்கு வழிவகுக்கும்.

 2. While on the subject, we do have some Western poets reflecting on the matter, and in these passages they reveal a non-Western streak! We have James Shirley telling us in Indian fashion, that all have to bow before the mighty Yama:

  The glories of our birth and state
  Are shadows, not substantial things;
  There is no armour against fate:
  Death lays his icy hands on kings;
  Sceptre and crown
  Must tumble down,
  And in the dust be equal made
  With the poor crooked scythe and spade.

  The garlands wither on your brow,
  Then boast no more your mighty deeds;
  Upon death’s purple altar now,
  See where the victor victim bleeds:
  All heads must come
  To the cold tomb,
  Only the actions of the just
  Smell sweet and blossom in the dust.

  But do we turn to dust in the end? Longfellow reminds us:

  Tell me not, in mournful numbers,
  Life is but an empty dream!
  For the soul is dead that slumbers,
  And things are not what they seem.

  Life is real! Life is earnest!
  And the grave is not its goal;
  Dust thou art, to dust returnest,
  Was not spoken of the soul.

  If the eternity of the soul is realised, where is the fear? John Donne writes:

  Death, be not proud, though some have called thee
  Mighty and dreadful, for thou art not so;
  For those whom thou think’st thou dost overthrow
  Die not, poor Death, nor yet canst thou kill me.
  From rest and sleep, which but thy pictures be,
  Much pleasure; then from thee much more must flow,
  And soonest our best men with thee do go,
  Rest of their bones, and soul’s delivery.
  Thou art slave to fate, chance, kings, and desperate men,
  And dost with poison, war, and sickness dwell,
  And poppy or charms can make us sleep as well
  And better than thy stroke; why swell’st thou then?
  One short sleep past, we wake eternally
  And death shall be no more; Death, thou shalt die.

  And even Thomas Gray who wrote his elegy in a sombre mood, did admit that we all want to be remembered for our good and noble deeds, simple though they be. Thus, death is not really the end!

  For thee, who mindful of th’ unhonour’d Dead
  Dost in these lines their artless tale relate;
  If chance, by lonely contemplation led,
  Some kindred spirit shall inquire thy fate,
  Haply some hoary-headed swain may say,
  Oft have we seen him at the peep of dawn
  Brushing with hasty steps the dews away
  To meet the sun upon the upland lawn. (lines 93–100)

  We may say contemplation on the subject can be quite a civilizing influence, as it can impart a vital direction and impulse to life! We can then see why our scriptures relate so many tales on the subject!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: