MAHABHARATA WORD SEARCH AND SOLUTION (Post No.5576)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 22 October 2018

Time uploaded in London – 13-18

(British Summer Time)

Post No. 5576

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

MAHABHARATA WORD SEARCH AND SOLUTION (Post No.5576)

MORE THAN 20 MAHABHARATA CHARACTERS ARE IN THE SQUARE; IDENTIFY ALL THOSE PEOPLE; AND THE SOLUTION IS GIVEN BELOW FOR YOU TO VERIFY YOUR ANSWERS.

 

 

–subham–

மஹாபாரத பெயர்கள் தேடும் போட்டி (Post No.5575)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 22 October 2018

Time uploaded in London – 12-36

(British Summer Time)

Post No. 5575

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

இருபதுக்கும் மேலான மஹாபாரத பெயர்கள் இந்தக் கட்டத்தில் மறைந்துள்ளனர்; கண்டுபிடியுங்கள்; கீழேவி டையும் உளது; கண்டு மகிழ்க.

மஹாபாரத பெயர்கள் தேடும் போட்டி (Post No.5575)

 

 

 

ANSWERS

–subham–

வள்ளுவனை மிஞ்சிவிட்டான் பர்த்ருஹரி! (Post No.5574)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 22 October 2018

Time uploaded in London – 8-33 AM

(British Summer Time)

Post No. 5574

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

வள்ளுவனை மிஞ்சிவிட்டான் பர்த்ருஹரி! (Post No.5574)

உலகப் புகழ் பெற்றவன் தமிழ்ப் புலவன் வள்ளுவன். 2660 வரிகளில் 133 விஷயங்களை அலசி ஆராய்ந்து விட்டான்.  அவன் ‘பக்கா’ ஹிந்து என்பதால் தர்ம, அர்த்த, காம என்ற அதே வரிசையில் திருக்குறளை முப்பாலாக வகுத்தான். நாலாவது விஷயமான மோக்ஷம் என்பதை துறவறவியலில் வைத்துவிட்டான். அவன் இரண்டு அடிகளில் சொன்ன விஷயங்களை பர்த்ருஹரி ஒரே வரியில் சொல்கிறார்.

நீதி சதகத்தில் 100 ஸ்லோகங்கள் உண்டு . அவர் யாத்த சிருங்கார சதகம், வைராக்ய சதகத்தில் மேலும் 200 பாடல்கள் இருக்கின்றன. வள்ளுவன் 1330 அருங்குறள்களில் செப்பியதை பர்த்ருஹரி 300 பாடல்களில் செப்பிவிட்டான்.  இருந்தபோதிலும் குறளுக்குத் தனிச் சிறப்பு உண்டு.

பர்த்ருஹரியின் மூன்று பாடல்களைக் குறளுடன் ஒப்பிடுவோம்

பர்த்ருஹரியின் நீதி சதகத்தில் 21, 22, 23 பாடல்களைக் காண்போம்

பாடல் 21-ன் பொருள்

மன்னிக்கும் குணம் உள்ளவனுக்கு கவசம் எதற்கு?

கோபம் உள்ளவனுக்கு எதிரிகள் எதற்கு?

ஒருவனுக்கு அறிவு இருந்தால் தீயதை எரிக்க தீ எதற்கு?

உண்மை நண்பன் இருந்தால் மருந்து தேவையா?

தன்னைச் சுற்றிலும் கெட்டவர்கள் இருந்தால் பாம்புகள் எதற்கு?

நல்ல விவேகம் இருந்தால் பணம் எதற்கு?

நல்ல குணங்கள் இருந்தால் ஆபரணங்கள் எதற்கு?

கவிதையை ரசிக்கத் தெரிந்துவிட்டால் அவனுக்கு ராஜ்யம், அரசாட்சி எதற்கு?

மன்னிக்கும் குணம்–

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்துவிடல்- 314

உனக்கு துன்பம் விளைவித்தவர்க்கு நன்மைகள் பல செய்து அவர்கள் வெட்கப்படும்படி செய்க; அவர் செய்த கெடுதிகளையும் மறக்க.

தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்

என் குற்றமாகும் இறைக்கு- குறள் 436

தன்னுடைய குற்றத்தை ஆராய்ந்துவிட்டு, மற்றவர் குற்றத்தை

ஆராய்க; இதில் என்ன கஷ்டம்?

கோபம் பற்றி வள்ளுவன்

சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி இனம் என்னும்

ஏமப் புணையைச் சுடும்- 306

சேர்ந்தாரைக் கொல்லி= ஆஸ்ரயாசஹ

கோபப்பட்டவனை கோபம் என்னும் நெருப்பே அழித்துவிடும்; அவனுக்குத் துணையாக நின்றாரையும் அழித்துவிடும் (நெருப்பு போல)

உண்மை நண்பன்

ஒருவன் ஆடை திடீரென நழுவினாலோ, காற்றில் பறந்தாலோ, கிழிந்தாலோ ஒருவனின் கைகள் எவ்வளவு விரைவாக உடற் பகுதிகளை மறைக்க தன்னிச்சையாகச் செல்லுமோ அவ்வளவு விரைவாக, கஷ்டகாலத்தில் உதவுபவனே உண்மை நண்பன் என்பதை வள்ளுவன் காட்டுவது போல வேறு எவரும் காட்டியதில்லை.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு (குறள் 788)

கெட்டவர்களும் பாம்பும் பற்றி வள்ளுவன்,

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்பொடு உடனுறைந்தற்று- 890

ஒரே கருத்து இல்லாதவருடன் வாழ்தல், குடிசையில் பாம்புடன் வசிப்பது போலாகும்

எது செல்வம்?

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்-443

ஒருவன் அடையக்கூடிய செல்வங்களுள் தலையாய

செல்வம் அறிவில் சிறந்த பெரியார்கள் சூழ இருப்பதேயாகும்.

க்ஷாந்திஸ் சேத் கவசேன கிம் கிம் அரிபிஹி அஸ்தி சேத தேஹினாம்

ஞாதிஸ்சேத் அநலேன கிம் யதி சுஹ்ருத்திவ்யௌஷதம் கிம் பலம்

கிம் ஸர்ப்பையதி  துர்ஜனாஹா கிம் உதனைர்வித்யா அனவத்யா யதி

வ்ரீடா சேத் கிமு பூஷணைஹி ஸுகவிதா யத்யஸ்தி ராஜ்ய்ரேன கிம் 1-21

क्षान्तिश्चेत्कवचेन किं किम् अरिभिः क्रोधो‌உस्ति चेद्देहिनां
ज्ञातिश्चेदनलेन किं यदि सुहृद्दिव्यौषधं किं फलम् ।
किं सर्पैर्यदि दुर्जनाः किम् उ धनैर्विद्या‌உनवद्या यदि
व्रीडा चेत्किम् उ भूषणैः सुकविता यद्यस्ति राज्येन किम् ॥ 1.21 ॥

xxxx

 

பாடல் 22-ன் பொருள்

ஒருவன் உறவினர்களிடத்தில் மரியாதை காட்ட வேண்டும்;

வேலைக்காரர்களிடம் அன்பாக இருக்க வேண்டும்;

புனிதர்களின் உறவுக்கு ஏங்க வேண்டும்;

ஆட்சியாளரின் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்;

கற்றோரிடம் பணிவுடன் இருக்க வேண்டும்;

எதிரிகளிடத்தில் வீரத்தைக் காட்ட வேண்டும்;

முதியோரிடம் சகிப்புத் தன்மை இருக்க வேண்டும்;

மனைவியிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்;

மனிதர்களின் திறமை, விவேகம், தந்திரம் மூலம்தான்

நல்ல சமுதாயம் வேரூன்றி நிற்கிறது

எல்லோரிடமும் அன்பு காட்டுதல்—

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு- 80

அன்பு இருக்கும் உடல் உயிருள்ள உடல்; அது இல்லாவிட்டால் அது பிணம் ( தோல் போற்றிய எலும்புக்கூடு)

பெரியார் துணைக்கு ஏங்கு—

உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்-442

இருக்கும் துன்பத்தைப் போக்கி, இனி துன்பம் வராமல் காக்கும் அறிவிற் சிறந்த பெரியோரை பேணுக

 

தாக்ஷிண்யம் ஸ்வஜனே தயா பரிஜனே சாட்யம் ஸதா துர்ஜனே

ப்ரீதிஹி ஸாது ஜனே நயோ ந்ருப ஜனே வித்வத் ஜனே ச ஆர்ஜவம்

சௌர்யம் சத்ரு ஜனே க்ஷமா குரு ஜனே காந்தா ஜனே த்ருஷ்டதா

யேசைவம் புருஷாஹா கலாஸு குசலாஸ்தேஷ்வேவ லோகஸ்திதிஹி-1-22

दाक्षिण्यं स्वजने दया परिजने शाठ्यं सदा दुर्जने
प्रीतिः साधुजने नयो नृपजने विद्वज्जने चार्जवम् ।
शौर्यं शत्रुजने क्षमा गुरुजने कान्ताजने धृष्टता
ये चैवं पुरुषाः कलासु कुशलास्तेष्वेव लोकस्थितिः ॥ 1.22 ॥

xxxx

பாடல் 23-ன் பொருள்

புனிதர்களின், அறிவாளிகளின் தோழமையானது ஒருவனின் அறியாமையையும் அறிவின்மையையும் நீக்கும்;

மந்த புத்தியை  விலக்கும்; சுயமரியாதையை  அதிகரிக்கும்; பாபங்களைப் போக்கும்; மனத்தில் மகிழ்ச்சியை எழுப்பும்; உற்சாகத்தை உயர்த்தும்; சமுதாயத்தில் புகழை  ஈட்டித் தரும்; புனிதர்களின் கூட்டுறவால் கிடைக்காதது ஏதேனும் உண்டோ? செப்புக.

ஆதிசங்கரரும் பஜகோவிந்தம் என்னும் துதியில் நல்லோர் சஹவாசம் முக்தி நிலைக்கு இட்டும் செல்லும் என்கிறார்:–

சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்

நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி – பஜகோவிந்தம்.

திருவள்ளுவரும் சத்சங்கத்தின் பெருமையை, தொண்டர்தம் கூட்டை, ‘கேள்வி’ என்னும் அதிகாரத்தில் சொல்லுவார்:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும் (குறள் 416)

கொஞ்சமாவது நல்லது கேளுங்கள்; அது உங்களுக்குப் பயன்படுகிறபோது நல்ல பெருமையைக் கொண்டுவரும் – என்கிறார்.

இன்னொரு குறளில் சறுக்கி விழும் நிலத்தில் நடக்கும்போது பயன்படும் ஊன்றுகோல் போல (walking stick வாக்கிங் ஸ்டிக்), புராண இதிஹாசச் சொற்பொழிவுகள் பயன்படும் என்பார்:

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் – குறள் 415

ஜாட்யம் தியோ ஹரதி ஸிஞ்சதி வாசி ஸத்யம்

மானோன்னதிம் திஸதி பாபம் அபாகரோதி

சேதஹ ப்ரஸாதயதி திஷு தனோதி கீர்த்திம்

ஸத்ஸங்கதிஹி கதய கிம் ந கரோதி பும்ஸாம் 1-23

जाड्यं धियो हरति सिञ्चति वाचि सत्यं
मानोन्नतिं दिशति पापम् अपाकरोति ।
चेतः प्रसादयति दिक्षु तनोति कीर्तिं
सत्सङ्गतिः कथय किं न करोति पुंसाम् ॥ 1.23 ॥

FROM MY EARLIER POST……………………..

அவ்வையாரிடம், முருகப் பெருமான் ‘அம்மையே! இனியது எது?’ என்று கேட்டார்; அவ்வை சொன்னார்:

“இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது! இனிது! ஏகாந்தம் இனிது !
அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது ! அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது! அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!”

பொருள்: தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது இனிது. அதைவிட இனிது சத்சங்கம், அதாவது ஞானம் படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது கனவிலும் நனவிலும் அந்த பெரியோரை நினைப்பதே! அதாவது அவர்களைப் பின்பற்றுவதே!

இதையே வாக்குண்டாம் என்ற பாடலில் மேலும் தெளிவாகச் சொல்கிறார்:

“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று” —-(வாக்குண்டாம்)

இம்மையில் சுவர்க்கம்
நற்குணன் உடைய வேந்தை
நயந்து சேவித்தல் ஒன்று;
பொற்பு உடை மகளிரொடு
பொருந்தியே வாழ்தல் ஒன்று;
பற்பலரோடு நன்னூல்
பகர்ந்து வாசித்தல் ஒன்று;
சொற்பெறும் இவைகள் மூன்றும்
இம்மையில் சுவர்க்கம் தானே! —(விவேக சிந்தாமணி)

மூன்று வகை சொர்க்கலோக இன்பங்களில் ‘வாசகர் வட்டமும்’ ஒன்று. அந்த வாசகர்கள் நன்னூலை வாசித்து , விவாதித்து பகிர்ந்து கொள்வராம்; அதாவது சத் சங்கம்!

–subham–

மொஜார்ட்டின் நினைவாற்றல் திறன் (Post No.5573)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 22 October 2018

Time uploaded in London – 6-21 AM (British Summer Time)

Post No. 5573

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

மொஜார்ட்டின் நினைவாற்றல்

ச.நாகராஜன்

ரோமில் உள்ள போப்பின் தேவாலயத்தில் உள்ள சில இசைப் பாடல்கள் யாரும் அறிய முடியாதபடி பாதுகாக்கப்பட்டு வருபவை.  இசைக்குழுவில் இதை இசைப்பவர் யாரேனும் வெளியில் தர முற்பட்டால் அவர் தேவாலயத்திலிருந்து முற்றிலுமாக நீக்கப்படுவார். இந்த விசேஷ இசையின் நோட்ஸின் காப்பி மூன்றே மூன்று பேர்களிடம் மட்டும் தான் இருக்கிறது. லியோபோல்ட் அரசரிடம் ஒரு காப்பி, இன்னொரு காப்பி போர்ச்சுகல் அரசர், மூன்றாவது, மிகப் பெரும் இசைக் கலைஞரான பட்ரே மார்டினியிடம் ஒரு காப்பி – ஆக இப்படி மூன்று காப்பிகள் மட்டுமே வெளி உலகில் உள்ளன.

ஆனால் இன்னொரு காப்பி போப்பின் ஆணையின்றி வெளி உலகிற்கு வந்து விட்டது. ஆனால் அது இசைக்குழுவினர் எவரிடமிருந்தும் வெளி வரவில்லை. மொஜார்ட்டை இளமைப் பருவத்தில் ரோமுக்கு அவரது தந்தை அழைத்துச் சென்ற போது அவா செயிண்ட் பீட்டர் ஆலயத்தில் அந்த இசையைக் கேட்டார். இசை முடிந்தாலும் கூட அவரது தந்தை மொஜார்ட்டை அங்கிருந்து லேசில் கிளப்ப முடியவில்லை. அப்படி அவர் அந்த இசையில் ஆழ்ந்து லயித்து இருந்தார். அன்று இரவு அவரது தந்தை உறங்கிய பின்னர் மெதுவாக எழுந்த மொஜார்ட் இத்தாலிய நிலவொளியில் தான் கேட்ட இசைப்பாடலுக்கான முழு நோட்ஸையும் தன் நினைவிலிருந்து அப்படியே எழுதி விட்டார். போப்பின் ஆணை மொஜார்ட்டின் நினைவாற்றலுக்கு முன் செல்லுபடியாகவில்லை!

ஆதாரம் : டபிள்யூ. எஃப்.கேட்ஸ் எழுதிய Anecdotes of Great Musicians என்ற புத்தகம்

ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது :-

Mozart’s memory

Part of the service used in the Pope’s chapel at Rome
is sacredly guarded and kept with great care in the
archives of the chapel. Any singer found tampering
with this “Miserere” of Allegri, or giving a note of it to an
outsider, would be visited by excommunication. Only
three copies of this service have ever been sent out.
One was for the Emperor Leopold, another to the King
of Portugal, and the third to the celebrated musician,
Padre Martini.

But there was one copy that was made without the
Pope’s orders, and not by a member of the choir either.
When Mozart was taken to Rome in his youth, by his
father, he went to the service at St. Peter’s and heard
the service in all its impressiveness. Mozart, senior,
could hardly arouse the lad from his fascination with the
music, when the time came to leave the cathedral. That
night after they had retired and the father slept, the boy
stealthily arose and by the bright light of the Italian
moon, wrote out the whole of that sacredly guarded
“Miserere” The Pope’s locks, bars, and excommunications
gave no safety against a memory like Mozart’s.
From Anecdotes of Great Musicians by W. F. Gates

****

SWAMI HINDU CROSSWORD PUZZLE 6 WITH SOLUTION 6 (Post No.5572)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 21 October 2018

Time uploaded in London – 14-51

(British Summer Time)

Post No. 5572

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

PUZZLE 6 AND SOLUTION 6 ARE GIVEN HERE.

ACROSS

2.MEASUREMENT OF DISTANCE, 5 TO 8 MILES

3.PEOPLE

5.A BIG NUMBER

6.A LEATHER STRAP USED BY ARCHERS, A CLAPPER USED IN MUSIC, BEATS IN MUSIC, LEVEL

9.SON OF RAMA

  1. POSTURE, PART OF YOGA

15.VEHICLE

16.SON OF RAMA

17.LUTE IN THE HANDS OF GOD AND GODDESS

20.A FEMALE DEMON WHO OBSTRUCTED HANUMAN’S TRAVEL ACROSS THE SEA.

DOWN

1.LOTUS, ALSO A THOUSAND BILLION

2.WORD USED WITH FOUR AGES

2.NEW YEAR BEGINNING

3.WATER, MAGIC

4.NEW ALSO NUMBER NINE

7.KUBERA’S CAPITAL

8.A GIANT KILLED BY VALI,HINDU ARCHITECT, HINDU CIVILIZATION IN SOUTH AMERICA, ALSO DELUSION

10.SMALLEST UNIT, ALSO SECOND SON OF YAYATI

11.PARASURAMA’S OLDER BROTHER, ALSO EIGHT SONS OF KASHYAPA AND ADITI

12.MOTHER

13.BEGINNING

14.GREAT COOK

15.GOD OF DEATH

16.TIME, GOD OF DEATH, ALSO ARTS, GODDESS OF ARTS

18.UNTIMELY, ALWAYS GOES WITH DEATH

19.BOUNTIFUL GODDESS MENTIONED IN RIG VEDA.

XXXXX

 

SOLUTION

ACROSS

2.YOJANA

3.JANA

5.AYUTA

6.TALA

6.TAALA

6.TAALAM

9.LAVA

13.ASANA

15.YANA

16.KUSA

17.VINA

20.SURASA

 

DOWN

1.PADMA

2.YUGA

2.YUGADI

3.JALA

3.JAALA

4.NAVA

7.ALAKA

8.MAYAVI

8.MAYA

8.MAAYAA

8.MAYA

CIVILIZATION

10.ANU

11.VASU

11.VASUS

12.MA

13.ADI

14.NALA

15.YAMA

16.KAALA

16.KALAA

18..AKAALA

19.RAKA

—-SUBHAM—-

Swami Tamil Hindu Word search- சிவ பெருமானின் 14 நாமங்கள் (Post No.5571)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 21 October 2018

Time uploaded in London – 10-30 am

(British Summer Time)

Post No. 5571

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Swami Tamil Hindu Word search- சிவ பெருமானின் 14 நாமங்கள் (Post No.5571)

கீழேயுள்ள கட்டத்தில்

சிவ பெருமானின் 14 நாமங்கள் உள. கண்டுபிடித்து, 

உரக்க உச்சரித்து புண்ணியம் பெறுங்கள்.

ரு த் ன் ம் லி
கோ தா ண் ங்
ன் சா சி   ஜா கோ
சா ம் சி யோ  த்
ஹா தே ம் நீ த்
 த் ம்  ச
மா தி தி பா
TAMIL WORD SEARCH SHIVA NAMES SWAMI HINDU

Answer:-

ருத்ரன், சதாசிவம், நீலகண்ட, சத்யோஜாதம், லிங்கோத்பவ,

பவ, சிவ, ஈசன், ஈசானன்,அகோர, த்ரயம்பக, மஹாதேவ, சபாபதி,உமாபதி

–SUBHAM–

கிசு, கிசு ரஹஸியம் (Post No.5570)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 21 October 2018

Time uploaded in London – 8-33 am

(British Summer Time)

Post No. 5570

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ஒரு பிரமுகர் வீட்டில் எல்லோரும் உரத்த குரலில் பேசுவார்கள்; காது செவிடுபடும்படி அலறுவார்கள். அந்த வீட்டிலொரு  அமைதியான பெண்மணி வயதானவரும் வாழ்ந்தார். அவர்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர் ஒருவருக்கு பெருத்த வியப்பு.

அம்மையாரே! இவ்வளவு உரத்த குரலில் பேசும் இந்த வீட்டில் இவ்வளவு சன்னமான, இனிய குரலில் பேசுகிறீர்களே. உங்கள் பேச்சு எப்படி அவர்கள் காதில் விழும்? என்று கேட்டார்.

அம்மையார் சொன்னார்:

எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நான் வழக்கத்தைவிட மெல்லிய குரலில் காதோடு காது வைத்து ரஹஸியம் சொல்லுவது போல கிசு, கிசுப்பேன். உடனே எல்லோரும் அமைதியாகி விடுவார்கள். நான் என்ன சொல்லப் போகிறேன் என்று காதுகளைத் தீட்டிக் கொண்டு நிற்பார்கள். ஒரு சில வினாடிகளில் அவர்களுக்கு சொல்ல வந்த விஷயம் நன்றாகத் தெரிந்து விடும்.

இந்தத் துனுக்கை 100 ஆண்டுகளுக்கு முந்தைய பத்திரிக்கையில் படித்தவுடன், நமது உபந்யாசகர்கள் செய்யும் வித்தைகள் எனக்கு நினைவுக்கு வருகிறது. கிருபானந்த வாரியார், கீரன் போன்ற அருள் மிகு, புகழ் மிகு, திரு மிகு சொற்பொழிவாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக திடீரென்று அலறுவார்கள்.

கிருபானந்தவாரியார் சிரிப்பொலிக்கிடையே சொல்லுவார்:

தூங்கிட்டிருக்கிரவங்க, எல்லாம் எழுந்திருங்கள் என்று.

இன்னும் சிலர் யாரேனும் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தால், திடீரென்று ஒரு  சில வினாடிகள் சொற்பொழிவை நிறுத்திவிட்டு கூட்டத்தையே பார்ப்பர்; பேசிக் கொண்டிருந்தவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு சொற்பொழிவை கவனிப்பர்.

 

நாம் மதுரைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ராம சேஷன் என்ற விலங்கியல் பேராசிரியர், குரலை ஏற்றியும் இறக்கியும்தான் பாடம் நடத்துவார். நாங்கள் கடைசி வரிசை நாற்காலிகளில் உட்கார்ந்ந்து கொண்டு கிராஃப் (வரை படம்) போட்டு அன்று எத்தனை முறை ஏற்ற இறக்கம் என்று ஆராய்வோம்.

 

கணவன் மனைவி சமரச ரஹஸியம்

புதிதாகக் கல்யாணம் கட்டிய இருவர் குடும்பப் பிரச்சினைகளை விவாதித்துக் கொண்டிருந்தனர்.

ஒருவர் சொன்னார்:

“என் வீட்டில் நான்தான் சம்பாதிக்கிறேன் ஆகையால் நான்தான் குடும்பத் தலைவன்; இது என் மனைவிக்கு புரிய மாட்டேன் என்கிறதே”– என்று அங்கலாய்த்தார்.

அடுத்ததாக நின்ற புது மாப்பிள்ளை சொன்னார்; அலட்சியமாக, பெருமையுடன், வெற்றித் த்வனியில் சொன்னார்–

எங்கள் வீட்டில் எனக்கும், என் புது மனைவிக்கும் இடையே ஆரம்பத்திலேயே ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு விட்டோம். அதாவது பெரிய பிரச்சனைகள் என்றால் என் முடிவே இறுதியானது.சின்னப் பிரச்சனைகள் என்றால் அவள் முடிவே இறுதியானது.

முதலாமவருக்கு வியப்பு தாங்கவில்லை.

அப்படியா? இந்தத் திட்டம் நன்றாகச் செயல்படுகிறதா?

இரண்டாமவர் பதில் சொன்னார்:

பிரமாதமாக செயல்படுகிறது.பெரிய பிரச்சனை எதுவுமே இதுவரை வந்ததில்லை!

இதைப் படித்தவுடன் எனக்கு மதுரைப் பக்க ஜோக் நினைவுக்கு வருகிறது.

“என்ன வீட்டில் மீனாட்சி தர்பாரா? என்று கேட்பார்கள். அதாவது மதுரை மீனாட்சி அம்மன் போல பெண் ஆதிக்கம் அதிகமுள்ள வீடாக இருந்தால் கணவன் ‘பெட்டிப் பாம்பாக’ இருப்பார். அவ்வையார் சொன்ன பாட்டு நினைவுக்கு வரும்:–

சாக்ரடீசும் அவ்வையாரும்!

Article No.1985

Compiled by London swaminathan

Date 10th July 2015

Time uploaded in London: காலை 8-21

சாக்ரடீஸ் என்பவர் புகழ்பெற்ற கிரேக்க ஞானி; தத்துவ வித்தகர். அவருக்கு வாய்த்த மனைவியோ சரியான அடங்காபிடாரி; ராக்ஷஸி. அவ்வையார் புகழ்பெற்ற தமிழ் கவிஞர், அறிஞர், இறையன்பர். சங்க காலம் முதல் தற்காலம் வரை ஆறு அவ்வையார்கள் இருந்தனர்; சிலர் மூவர் என்பர். மொழியியல் அடிப்படையில் கட்டாயம் முவர் அல்லது அதற்கு மேலும் இருந்திருக்கலாம் என்பது எனது கணிப்பு. ஆனால் எந்த அவ்வையார் படியதாக இருந்தாலும் சரி அவை அத்தனையும் ஆனி முத்து; தமிழர்களின் சொத்து. ஆத்திச் சூடி பாடிய கடைசி அவ்வையாரா, அதியமானைக் கண்ட சங்க கால அவ்வையாரா என்று ஆராய வேண்டிய அவசியமில்லை.

அதிசயம் என்னவென்றால் அவ்வையாரும் சாக்ரடீசும் ஒரே கருத்தைச் சொல்லியுள்ளனர்.

ஒருமுறை சாக்ரடீஸ் தத்துவச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவரது மனைவியோ ஞான சூன்யம். மேல் மாடியில் இருந்து எட்டிப் பார்த்து, பேச்சை நிறுத்தச் சொல்லி இடி முழக்கம் செய்தார். சாக்ரடீஸோ நிறுத்தவில்லை. ஒரு வாளி தண்ணீரை மேலேயிருந்து கொட்டினார். யார் தலையில்? சாக்ரடீஸ் தலையில்! அவர் அசரவில்லை; அவர் சொன்னார்:

“அன்பர்களே! இவ்வளவு நேரம் இடிமுழங்கியது; இப்பொழுது மழை பெய்கிறது!”

சாக்ரடீஸின் மனைவியை பற்றி நன்கு அறிந்தவர் ஒருவர் சாக்ரடீஸிடம் சென்று திருமணம் செய்துகொள்வது பற்றி தங்கள் கருத்து என்னவோ? என்று கேட்டார்.

அவர் சொன்னார்:

எந்த முடிவு எடுத்தாலும் இறுதியில் வருத்தப்படுவாய்!

இன்னொரு முறை அவர் சொன்னார்:

“நல்ல மனைவி கிடைத்தால் நன்கு மகிழ்ச்சியாக வாழலாம்; கெட்ட மனைவி கிடைத்தாலோ தத்துவ வித்தகர் ஆகலாம்.”

அவ்வையாரும் இதையே சொல்கிறார்:

பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால்

எத்தாலும் கூடி வாழலாம்; — சற்றேனும் ஏறுமாறாக

இருப்பாளே யாமாகில்

கூறாமல் சந்யாசம் கொள்

பொருள்: கணவனுக்கேற்ற பதிவிரதையாக இருந்தால், எவ்வளவு கஷ்டம் வந்தலும் அவளை விட்டு விடாதே. அவள் பிடாரியாக இருந்தாலோ, அவளிடம் போகிறேன் என்று சொல்லக்கூட வேண்டாம். பேசாமல் போய் சந்யாசம் வாங்கிக் கொள்.

பழைய முறத்தால் அடி!

சாக்ரடீஸ் மனைவி போலவே ஒரு கொடுமைக்காரியை மனைவியாகப் பெற்ற ஒரு சாதுவின் வீட்டுக்கு அவ்வையார் போனார். பாவம், அவர்தான் அவ்வையாரை சாப்பிட அழைத்தார். அவ்வையை வாசல் திண்ணையில் அமரவைத்துவிட்டு உள்ளே சென்று மனைவியின் முகத்தை நன்கு துடைத்து, பொட்டு வைத்து அலங்கரித்து, தலையில் உள்ள ஈரும் பேனும் எடுத்துவிட்டு, தலைவாரிவிட்டு, மெதுவாக அவ்வையாருக்கு அமுது இடும்படி  கொஞ்சும் மொழியில் கெஞ்சினார். அவளோ எடுத்தால் அருகிலிருந்த பழைய முறத்தை! புடைத்தாள் நைய அவனை. பேயாட்டம் ஆடினாள்; வசை மொழிகளை வாரி இரைத்தாள். அவன் வெளியே ஓடிவந்தான்; அப்பொழுதும் அந்த நீலாம்பரி முறத்தைக் கையில் ஓங்கியவாறு ஓடி வந்தாள்: அவ்வையாருக்கு ஒரு புறம் சிரிப்பு; மறுபுறம் அனுதாபம். அவனுக்கோ ஒரே பதைபதைப்பு.

அவ்வையார் பாடினார்:

இருந்து முகம் திருத்தி, ஈரோடு பேன் வாங்கி

விருந்து வந்தது என்று விளம்ப – வருந்திமிக

ஆடினாள், பாடினாள்; ஆடிப் பழமுறத்தால்

சாடினாள் ஓடோடத்தான்.

அவ்வையாருக்கு பிரம்மா மீதே கோபம் வந்து விட்டது. இப்படி நல்ல சாதுவுக்கு இவ்வளவு மோசமான மனைவியா என்று. இது பெண்ணா? பேயா? வறண்ட மரம் போன்ற பெண்ணை இந்த மகனை முடிச்சுப்போடச் செய்தானே என்று நினைத்து பிரம்மா மட்டும் என் முன்னே வரட்டும் நான்கு தலைகளையும் திருகிவிடுகிறேன் என்றார்.

உடனே பாடினார்:

அற்றதலை போக அறாத தலை நான்கினையும்

பற்றித் திருகிப் பறியேனோ? – வற்றும்

மரம் அனையாட்கு இந்த மகனை வகுத்த

பிரமனையான் காணப்பெறின்.

அற்றதலை= ஏற்கனவே பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை சிவன் கிள்ளி எறிந்த கதை புராணத்தில் உள்ளது.

((தமிழன்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்: மற்றவர் கட்டுரைகளை எடுக்கையில் அவர்தம் பெயரையும், அவருடைய பிளாக்–கின் பெயரையும் அப்படியே வெளியிடுங்கள். என் கட்டுரைகளில், படங்கள் என்னுடையதல்ல. அதைப் பயன்படுத்துவோர் சட்டபூர்வ வழக்குகளைச் சந்திக்க நேரிடும்.))

swami_48@yahoo.com

–subham—சுபம்-

வைச்ச பொருள் – 5 (Post No.5569)

WRITTEN BY S NAGARAJAN

Date: 21 October 2018

Time uploaded in London – 7-17 AM (British Summer Time)

Post No. 5569

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

வைச்ச பொருள் – 5

ச.நாகராஜன்

    

            13

திருப்பாதிரிப்புலியூரில் பாடிய பாடலிலும் சிதம்பரத்தில் பாடிய பாடலிலும் அப்பர் பிரான் ‘வைச்ச பொருள்’ பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி இரு முறை அவர் குறித்த பொருளைப் பற்றி நமது சிந்தனை ஒரு தெளிவுக்கு வரும் போது அதை உறுதிப் படுத்த ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

‘தமிழ் ஞானசம்பந்தனின்’ நமச்சிவாயப் பதிகம் தான் அது.

காதல் ஆகி,கசிந்து, கண்ணீர் மல்கி,

ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயவே

வள்ளுவப் பிரான் கூறிய மெய்ப்பொருள் பற்றி அருமையாக திருஞானசம்பந்தர் விளக்கி விட்டார். வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நமச்சிவாய நாமம் தான் என்று.

அப்பர் பிரான் இதை உறுதிப் படுத்துகிறார்;

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது

சொல்லக விளக்கது ஜோதி யுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே   (நான்காம் திருமுறை)

நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்

நமச்சிவாயவே நானறி விச்சையும்

நமச்சிவாயவே நாநவின் றேத்துமே

நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே

ஆக மெய்ப்பொருள் ஆகிய நமச்சிவாய என்னும் நாமத்தைச் சொல்லி அதை டெபாஸிட் செய்து வைப்பதைத் தான் அப்பர் பிரான் சொல்லியுள்ளார் என்பது தெளிவாகிறது.

வைத்த பொருள் நமச்சிவாய நாமம் தான்! ‘அது நமக்கு ஆகும்’ என்று அச்சம் ஒழிந்தார் அப்பர்.

மெய்ப்பொருளைக் கண்டு அதைச் சொல்லி அதைச் சேர்த்து பத்திரமாக வையுங்கள்; அது உமக்குப் பின்னால் இகத்திற்கும், பரத்திற்கும், ‘ஆகும்’ என்ற அற்புதக் கருத்தை அவர் இரு முறை வலியுறுத்தியுள்ளார்.

வள்ளுவப் பிரான் வழியில் மெய்ப்பொருள் காண விழைகையில் இந்தப் பொருளை நாம் அடைகிறோம்.

 

14

வள்ளுவரின் இதர பொருள் சம்பந்தமான குறள்களையும் படித்தால் சகல பொருள்களும் விளங்கும்.

இது சம்பந்தமாக நன்கு ஆராய விரும்புவோருக்காக பொருள் வரும் குறள்களின் எண் இங்கு தரப்படுகிறது:

5,63,91,122,128,141,171,176,178,199,212,226,241,246,247,248,249,252,254,285,307,351,355,356,358,371,423,424,434,462,477,507,583,592,615,644,660,695,741,746,751,753,754,755,756,757,759,760,857,870,897,901,909,911,913,914,925,933,938,1001,1002, 1009,1046,1230

பொருள் என்று ஆரம்பிக்கும் குறள்கள் : 199,246,248,252,351,675,751,753,913,914,938,1002,1230

பொருள் என முடியும் குறள்கள்:
178,509,741,751,756,

பிறன் பொருள், தம் பொருள், நற்பொருள், செம்பொருள், மெய்ப்பொருள், கைப்பொருள்,எண்பொருள்,பொருள் பெண்டிர்,பொருளாயம்,தேறும் பொருள், நன்பொருள்,பொருளாட்சி,பொருளுடைமை, உறுபொருள், தெறுபொருள், ஆன்ற பொருள்,பெரும் பொருள், பொருள்மாலையாளர், அரும் பொருள், ஒண் பொருள், சிறு பொருள், வான் பொருள், வேண்டாப் பொருள் என இப்படி பொருள் என்ற சொல்லைப் பல வித கோணங்களில், பலவித பரிமாணங்களுடன்  கையாளும் வள்ளுவரின் திறன் வியக்கற்பாலது. அதற்கு இடம் தந்து பொருளுக்கு வலுவூட்டும் அற்புதத் தமிழ் மொழியின் அருந்திறனும் எண்ணி எண்ணி வியத்தற்குரியது.

இவற்றையெல்லாம் விரிவாகச் சொல்வதென்றால் அது ஒரு நூலாகவே அமையும்.

ஆகவே நேரம் கிடைத்த போதெல்லாம் திருக்குறளை ஓதி உணர்ந்து, நுணுகி ஆராய்ந்து செம்பொருளையும் மெய்ப்பொருளையும் காணுதல் வேண்டும்.

15

வள்ளுவரும் செம்பொருள், மெய்ப்பொருள் எனக் கூறி இறைவனின் உண்மைத் தன்மையை விளக்குகிறார். அதை அறிவதே உண்மை அறிவு என்கிறார்,

பிறப்பென்னும் பேதைமை நீஙகச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு    (குறள் 358)

பிறப்பு என்னும் பேதைமையை நீக்கிக் கொள்ள சிறப்பு என்னும் வீடு பேற்றை அளிக்க வல்ல செம்பொருளாம் பரம் பொருளைக் காண்பது அறிவு.

இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு   (குறள் 5)

கடவுளின் பெரும் புகழைச் சொல்லி வருவோர்க்கு பிறப்பு, இறப்பு ஆகிய இருவினையும் சேரா.

அந்த இறைவனின் நாமமாகிய நமசிவாய மந்திரத்தை ஓதி ஓதி அதை தன் வைப்பு நிதியாக ஆக்கிக் கொண்ட அப்பர் பிரான் நமக்கும் அந்த இரகசியத்தைச் சொல்லி அருள்கிறார்.

நமச்சிவாய என்று வைச்ச பொருள் நமக்கு என்றும் ஆம்!

நமச்சிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க!

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

– கட்டுரைத் தொடர் நிறைவடைகிறது.

***

POWER OF WHISPER! (Post No.5568)

 

Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 20 October 2018

Time uploaded in London – 17-59

(British Summer Time)

Post No. 5568

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Father Anecdotes

Part of Aaron Burr’s reputation for profligacy was due, no doubt, to that vanity representing women of which Davis himself speaks. He never refused to accept the parentage of a child

Why do you allow this woman to saddle you with her child when you know you were not the father of the child? said a friend to him a few months before his death.

Sir, he replied, when a lady does me the honour to name me the father of her child I trust that I shall always be too gallant to show myself ungrateful for the favour.

WHO IS AARON BURR?

Aaron Burr, in full Aaron Burr, Jr., (born February 6, 1756, NewarkNew Jersey [U.S.]—died September 14, 1836, Port Richmond, New York, U.S.), third vice president of the United States (1801–05), who killed his political rival, Alexander Hamilton, in a duel (1804) and whose turbulent political career ended with his arrest for treason in 1807.

Xxx

ENGLISH POET SHELLEY BECAME CAPTAIN JONES!

in 1814, Shelley, being then twenty two, and the father of two children by Harriet, visited the family at Field Place for the first time since expulsion from Oxford. A reconciliation would then have been easy, but instead Timothy made his son feel unwelcome. Indeed, so panicky was this patriotic M P of being detected harbouring a liberal and an atheist —-albeit his son— that he compelled Shelley to masquerade under the name of Captain Jones, and to wear on public highways, the uniform of a young officer then visiting the Shelleys.

WHO IS TIMOTHY?

Shelley’s father Timothy Shelley

Shelly’s mother- Elizabeth Pilfold

Shelley’s Wives: – Mary Shelley, Harriet Westbrook

Xxx

Home Life Anecdotes

When she was asked how she made her soft voice made heard above the notorious roars of her husband and eight sons, Rider Haggards delicate little mother replied,
“That is very simple. I whisper”.

In the Haggards family a whisper is so unusual that everyone listens to it with profound surprise.

Xxxx

20 years in kitchen!

The wife of an Iowa farmer, whose place was isolated in the vastness of the prairie, suddenly went out of her mind and was carted away in a straitjacket by an ambulance from the nearest state hospital. An attendant remained behind to get the data on the case from the puzzled and distressed husband, who lamented,
“Now what do you suppose could o’ went wrong with the old woman? why, man alive, she ain’t been out of the kitchen in 20 years?”

Xxxx

HOW TO COMPROMISE WITH YOUR WIFE!

Two young benedicts, married about a year, were discussing their various marital problems .
I am the head of the house, said one. I think I should be; after all I earn the money.

Well, said the other. My wife and I have a perfect agreement. I decide all the major matter s and she takes care of all the minor matters.
And how is that working out?
Somewhat ruefully the other replied
“Well, so far no major matters have come up”.

Meaning of Benedict:–

a newly married man, especially one who has been long a bachelor.

Xxxx SUBHAM XXX

SOLUTION TO CROSSWORD PUZZLE-5 (Post No.5567)

 

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 20 October 2018

Time uploaded in London – 14-33

(British Summer Time)

Post No. 5567

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

SWAMI HINDU CROSSWORD PUZZLE FIVE SOLUTION

U1 A2 K R U R A3
L N R N
U A U G
K V R4 U5 K6 M I
A K7 A T R
M8 A R9 U T I A
U L S10 A T I
R I R11 A V I
T12 A R K A
I

13

N D U M A T I
S W A MI HINDU PUZZLE FIVE

 

ACROSS

2.akrura–YADAVA AMBASSADOR BETWEEN KAMSA ANS KRISHNA

4.rukmi—BROTHER OF RUKMINI

  1. ka—ONE LETTER WORD FOR BRAHMA (IN SANSKRIT)

8.maruti–SON OF VAYU DEVA

10.sati–WIFE DYING WITH HUSBAND

11.ravi–SUN’SNAME

12.tarka, arka—STUDY OF LOGIC; SUN’S NAME  IS ALSO THERE.

13 indumati, indu– FAMOUS QUEEN IN KALIDASA’S KAVYA; ALSO MOON’SNAME IS THERE

DOWN

1.uluka—SON  OF SHAKUNI; ALSO OWL IN SANSKRIT

3.angira–A GREAT RISHI, MARRIED SHRADDHA

5.uttara, uttaraa—SON OR DAUGHTER OF KING OF VRATA (IF FEMALE ONE ‘A’ IS ADDED IN SANSKRIT)

6.kuru—-ANCESTOR OF A GREAT DYNASTY

  1. kaaliyan, kali, kaali—KRISHNA DANCED ON IT; ALSO ONE YUGA; ALSO GODDESS

8.murti—SIMPLE MEANING ‘GOD’; ATTACHED  WITH HINDU TRINITY

9.ravana–DEMON OF LANKA

–subham–