தெய்வம் பலப்பல சொல்லி பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்! (Post No.5634)

WRITTEN BY S NAGARAJAN

Date: 7 November 2018

Time uploaded in London – 5-42 AM (GMT)

Post No. 5634

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ச.நாகராஜன்

1

ஒரு குளம்.பல் வேறு படித்துறைகள். அதில் ஒன்றில் இறங்கியவர் குளத்தில் இருக்கும் நீரைப் பார்த்து தண்ணீர் என்கிறார். இன்னொரு படித்துறையில் இறங்கியவர் ஜலம் என்கிறார். இன்னொருவர் water என்கிறார். இன்னொருவரோ பானி என்கிறார்.

அனைவரும் குறிப்பிடுவது ஒரே நீரையே. அவரவர் உணர்ந்த படி சொல்கிறார்.

அதே போலவே இறைவன் ஒருவனே. அவரவர் உணர்ந்தபடி அவனைப் போற்றி வணங்குகின்றனர்.

ஹிந்து மதம் கூறுவது இதுவே. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் எளிமையாக இப்படி உதாரணத்துடன் கூறி விளக்கினார்.

2

ஆகாஸாத் பதிதம் தோயம்

யதா கச்சதி ஸாகரம்

சர்வ தேவ நமஸ்கார:

கேசவம் ப்ரதி கச்சதி

ஆகாயத்திலிருந்து விழுகின்ற மழைத் துளிகள் எப்படி சமுத்திரத்தைச் சென்று அடைகிறதோ அது போலவே எல்லா கடவுள்களுக்கும் செய்யும் இறைவணக்கம் கேசவனைச் சென்று அடைகிறது.

இப்படி ஹிந்து மத வேதம் கூறுகிறது.

இதையே தான் ஸ்வாமி விவேகானந்தர் பார்லிமெண்ட் ஆஃப் ரெலிஜன்ஸில் – சர்வ மத மாநாட்டில் – சிகாகோவில் முழங்கினார். ஹிந்து மதப் பெருமையை நிலை நாட்டினார்.

 

அவரது உரையில் முக்கியமான இந்தப் பகுதி இது:

I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings:

As the different streams having there sources in different places all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to thee.

3

ஏகம் ஸத். விப்ரா: பஹுதா வதந்தி |

உண்மை ஒன்றே. அறிஞர்கள் அதைப் பலவாறாகச் சொல்கின்றனர்.

இது தான் வேதம் கூறும் உண்மை.

மஹாகவி பாரதியார் இதை இப்படிக் கூறுகிறார்:

நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று

நான்மறை கூறிடுமே-ஆங்கோர்

நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்

நான்மறை கண்டிலதே.

4

தீயினைக் கும்பிடும் பார்ப்பார், – நித்தம்

திக்கை வணங்கும் துருக்கர்,

கோவிற் சிலுவையின் முன்னே – நின்று

கும்பிடும் யேசு மதத்தார்.

யாரும் பணிந்திடும் தெய்வம் – பொருள்

யாவினும் நின்றிடும் தெய்வம்,

பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; – இதில்

பற்பல சண்டைகள் வேண்டாம்

என்றும்,

பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!

புத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம்,

சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,

சநாதனமாம் ஹிந்து மதம்,இஸ்லாம்,யூதம்,

நாமமுயர் சீனத்துத் ‘தாவு”மர்க்கம்,

நல்ல ”கண் பூசி”மதம் முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;

யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே.

என்றும் மகாகவி பாரதியார் மிகத் தெளிவாக பல மதங்கள் உரைக்கும் தெய்வம் ஒன்றே என்று உண்மையை விளக்குகிறார்.

5

தாயுமானவ ஸ்வாமிகள் என் தெய்வம் உன் தெய்வம் என்று கூறி சண்டையிடுவோரை நோக்கி உங்கள் விவரத்திணத்திற்கும் அப்பாற்பட்ட ‘பொருள்’ ஒன்றே என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார் இப்படி:

அங்குஇங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய்

ஆனந்த பூர்த்தியாகி,

அருளொடு நிறைந்தது எது? தன்அருள் வெளிக்குள்ளே

அகிலாண்ட கோடியெல்லாம்

தங்கும்படிக்கு இச்சைவைத்து, உயிர்க்குயிராய்

தழைத்தது எது? மனவாக்கினில்

தட்டாமல் நின்றது எது? சமயகோடிகள் எலாம்

தம்தெய்வம் எம்தெய்வம் என்று

எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கு இடவும் நின்றதுஎது?

எங்கணும் பெருவழக்காய்,

யாதினும் வல்ல ஒரு சித்து ஆகி, இன்பமாய்

என்றைக்கும் உள்ளது எது? மேல்

கங்குல்பகல் அறநின்ற எல்லைஉளது எது? அது

கருத்திற்கு இசைந்தது அதுவே;

கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும்

கருதி அஞ்சலி செய்குவாம்

சமயகோடிகள் மன வாக்கினில் எட்டாமல் நின்ற ஒன்றை என் தெய்வம் உன் தெய்வம் என்று எதிர் வழக்கு செய்ய, அதற்கும் அப்பாற்பட்டதாய் உள்ள ஒரு வஸ்துவை வணங்கி அஞ்சலி செய்வோம் என்பது அவர் வாக்கு.

6

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் திருமூலர்.

7

ஒரே பரம்பொருளை விளக்கிக் கூறும் பாரதியாரின் பாடல்கள் பல:

உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி

ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,

கொள்ளற் கரிய பிரமமென் றேமறை

கூவுதல் கேளீரோ?

ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்

உணர்வெனும் வேதமெலாம்-என்றும்

ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன்

உணர்வெனக் கொள்வாயே.

”பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்

பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:

சாமி நீ;சாமி நீ;கடவுள் நீயே;

தத்வமஸி;தத்வமஸி;நீயே அஃதாம்;

பூமியிலே நீகடவு ளில்லை யென்று

புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;

சாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச்

சதாகாலம் ‘சிவோஹ’மென்று சாதிப் பாயே!”

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்

சுருதிகள் கேளீரோ?

சுத்த அறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்;

சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;

உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி

ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்

அறிவே தெய்வம்; அன்பே தெய்வம்; உண்மையே தெய்வம்!

8

முத்தாய்ப்பாக பாரதியார் தெளிவாக பல்வேறு மதங்களைச் சொல்லி பகைத் தீயை மூட்டுபவரைச் சுட்டிக் காட்டுகிறார் இப்படி:

தெய்வம் பலப்பல சொல்லி-பகைத்

தீயை வளர்ப்பவர் மூடர்

பாருக்குள்ளே தெய்வம் ஒன்று

இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து

வெறுங் கதைகள் சேர்த்துப்-பல

கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை

காட்டவும் வல்லீரோ

9

இதில் முக்கிய விஷயம் அனைத்து மதங்களையும்,தேவர்களையும் அவரவர் வழி வழி நின்ற தன்மையை உரைப்பது ஹிந்து  மதம் ஒன்று  மட்டுமே.

மதம் மாற்றுவது கிடையாது;

மற்ற தெய்வங்களைப் பழிப்பது கிடையாது!

இந்த ஒன்றின் அடிப்படையிலேயே இது எதிர்காலத்தில் அனைவருக்குமான வாழ்க்கை முறையாக ஆகும். ஆர்னால்ட் டாய்ன்பி உலக சரித்திரத்தைப் பல தொகுதிகளாக எழுதியவர். அவர் ஹிந்துத்வத்தைப் பார்த்து வியந்து எதிர்கால வழி இது ஒன்றே தான் என்று வியந்து கூறுகிறார்.

புத்தம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

நலம் தரும் சொல்லை கண்டு கொண்டேன் – நாராயணா என்னும் நாமம்!

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்

நமச்சிவாயவே நான் அறி வித்தை!

மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா என்னும் நாமம்

விண்ணும் மண்ணும் தனி ஆளும்

வீரை சக்தி நினதருளே!

****

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி- கடவுள் (Post No.5633)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 6 November 2018

GMT Time uploaded in London – 8-55 am

Post No. 5633

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

கீழேயுள்ள கட்டத்தில் குறைந்தது 27 சொற்கள் உள. கண்டுபிடித்து தமிழறிவினைப் பெருக்குங்கள்.

தீபாவளி வாழ்த்துக்கள்!!

குறுக்கே

1.பயம், ஸர்ப்ரைஸ்

4.திருடன்

7.கோபுரம் கட்ட பயன்படும்

9.முத்தம் பெறும் இடம்

10.பிரம்மா,விஷ்ணு, சிவன்

11.குடித்தால் போதை

12.நாய் மீது எறியலாம்

13.வருக, வருக

14.மாட்டுக்குத் தீவனம்

18.அழகு

19.பொழுதுபோக்கு, தமாஷ்

20.சிவனுடன் இணந்தது

21.பவுடர் போடலாம், க்ரீம் போடலாம்

கீழே

2.வயதான நிலை

3.நெல் விளையும் இடம்

4.இறைவன்

5.காலையில் சோறு போடலாம்

6.பனை மரத்து நன்கொடை

8.இனிப்பு தருவது

  1. திறக்கப்படுவது

15.- தேவலோக அழகி

14.- வதந்தி

16.- கண்ணே, மணியே, வா, வா

17.ஜனங்கள்

18.பல்லாங்குழி ஆடலாம்

19.ஆளைப் பாரு, மூஞ்சியைப் பாரு

21. மயிலின் மகிமை

 

 

விடை

1.திகில்- பயம், ஸர்ப்ரைஸ்

4.கயவன் – திருடன்

7.கருங்கல்- கோபுரம் கட்ட பயன்படும்

9.கன்னம் – முத்தம் பெறும் இடம்

10.குரு- பிரம்மா,விஷ்ணு, சிவன்

11.கள்- குடித்தால் போதை

12.கல்- நாய் மீது எறியலாம்

13.நல்வரவு- வருக, வருக

14.புல்-மாட்டுக்குத் தீவனம்

18.சோபை- அழகு

19.கேளிக்கை- பொழுதுபோக்கு, தமாஷ்

20.லிங்கம்- சிவனுடன் இணந்தது

21.தோல்- பவுடர் போடலாம், க்ரீம் போடலாம்

கீழே

2.கிழவன் – வயதான நிலை

3.வயல்- நெல் விளையும் இடம்

4.கடவுள்- இறைவன்

5.காகம்- காலையில் சோறு போடலாம்

6.நுங்கு- பனை மரத்து நன்கொடை

8.கரும்பு- இனிப்பு தருவது

  1. திறக்கப்படுவது

15.ரம்பை- தேவலோக அழகி

14.புரளி- வதந்தி

16.செல்லம்- கண்ணே, மணியே, வா, வா

17.மக்கள்- ஜனங்கள்

18.சோழி- பல்லாங்குழி ஆடலாம்

19.கேலி- ஆளைப் பாரு, மூஞ்சியைப் பாரு

21.தோகை- மயிலின் மகிமை

–SUBHAM–

வேலைக்காரியை கட்டி அணைத்த அகராதி ‘பிடித்த’ வெப்ஸ்டர்! (Post No.5632)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 6 November 2018

GMT Time uploaded in London – 7-22 am

Post No. 5632

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

வேலைக்காரியை கட்டி அணைத்த  அகராதி ‘பிடித்த’ வெப்ஸ்டர்! (Post No.5632)

வெப்ஸ்டர் அகராதியை அறியாதோர் அறியாதோரே (அறிவற்றவர்களே) ஏனென்றால் இன்று அமெரிக்கர்கள் பின்பற்றும்  எளிமையாக்கப்பட்ட ஆங்கில ஸ்பெல்லிங்- குகளை அறிமுகப்படுத்தியவர் அவரே. எழுத்து சீர்திருத்தத்தின் சிற்பி.

அவர் அகராதி ‘படித்தவர்’, அகராதி ‘பிடித்தவர்’, அகராதி ‘செய்தவர்’ என்பது இரு சுவையான சம்பவங்கள்  மூலம் வெளிப்படும்.

அமெரிக்காவின் எழுத்தாளர், அகராதி உருவாக்கியவர், அமெரிக்க அறிவுத் தந்தை, பத்திரிக்கை ஆசிரியர், பெடரெலிஸ்ட் கட்சியின் பிரமுகர் என்று பெயர் எடுத்த நோவா வெப்ஸ்டர் (NOAH WEBSTER) 1758ல் பிறந்தார்; 1843ல் இறந்தார். யேல் பல்கலைக் கழகத்தில் கற்றவர்.

தமிழில் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசுவோரை அகராதி பிடித்த ஆள் என்று பறைவர். உண்மையில் அவர்கள் செப்ப விழைவது- அகராதி ‘படித்த’ ஆள் என்பதே. அந்தக் காலத்தில் ஸம்ஸ்க்ருதம் கற்றவர்கள், தநது புலமையினை வெளிக்காட்ட நிறைய பொன்மொழிகளை– சுபாஷிதங்களை- உதிர்ப்பர். விதண்டா வாதம், குதர்க்க வாதம், வாக்குவாதம் முதலியவற்றில் ஈடுபட்டு சொற்களுக்கு புது வியாக்கியானம் தருவர். இதன் அடிப்படையில் பிறந்ததே அகராதி ‘பிடித்த’ பயல்.

நோவா வெப்ஸ்டர் ஒரு முறை சமையல் அறையில்  வேலைக்  காரியை கட்டி அணைத்து முத்தம் தந்தபோது அவரது மனைவி திடீரென்று உள்ளே வந்துவிட்டார்.

ஆங்கில பாணியில், “மிஸ்டர் வெப்ஸ்டர், உமது செயலைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன்” என்றார்

மற்ற யாராவது இப்படி செய்திருந்தால் கை, கால் நடுங்கி, உளறிக்கொட்டி, கிளறி மூடி இருப்பர்.

ஆனால் (அகராதி பிடித்த) வெப்ஸ்டர் சொன்னார்:

“அடி, என் செல்லக்கிளியே!

“நீ திடுக்கிடவில்லை! நீ ஆச்சர்யப்பட்டுப் (amazed) போனாய்!

நாங்கள் இருவர்தான் திடுக்கிட்டுப் (surprised) போனோம்”.

படித்தவர்கள் தவறு செய்தபோதும் நயமிக்கச் சொற்களைப் பிரயோகித்து தம் அறிவை பிரகாஸம் போட்டுக் காட்டுவர்.

XXXX

 

இன்னொரு முறை எழுத்து அறிவு இல்லாத ஒரு ஜீவனுக்கு கடிதம் எழுத வெப்ஸ்டர் உதவினார். அவன் கொச்சை ஆங்கிலத்தில் சொல்லச் சொல்ல, இவர் அதை சரியான மொழியில் எழுதிக்கொண்டு இருந்தார்.

இறுதியாக கடிதத்தை முடிக்கும் தருவாயில், வெப்ஸ்டர் கேட்டார்,

“ஐயா, வேறு ஏதேனும் சொல்ல விழைகிறீர்களா?” என்று.

அந்த ‘ஜந்து’ சொன்னது,

ஆமாம், மறக்காமல் இந்த வரியையும் சேர்த்து விடுங்கள்.

“இப்படி கொச்சையாக எழுதியதை மறந்துவிட்டு, கடித்தின் அர்த்ததி மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்!” (என்று எழுதிவிடுங்கள்)

அவனுக்காக அருமையான ஆங்கிலத்தில் கடிதம் எழுதிக் கொண்டிருந்த வெப்ஸ்டருக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

‘நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு’, ‘குலத்து அளவே யாகுமாம் கல்வி’ என்று ஆன்றோர்கள் செப்பியது பொய்யாமோ?

Tags-வெப்ஸ்டர், வேலைக்காரி

–சுபம்–

WEBSTER WAS ‘SURPRISED’ WHEN HE HUGGED A CHAMBERMAID! (Post No.5631)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 6 November 2018

GMT Time uploaded in London – 6-12 am

Post No. 5631

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

NOAH WEBSTER

AMERICAN LEXICOGRAPHER

ENGLISH SPELLING REFORMER

FATHER OF AMERICAN SCHOLARSHIP

WRITER

BORN ON- 16 OCTOBER 1758

DIED ON – 28 MAY 1843

He published the famous Webster Dictionary in 1806. He was the one who changed the spelling of English words to make it simpler and more meaningful (Eg.Colour= color). Americans follow only his spelling for English words ignoring Oxford dictionary etc.

XXX

SURPRISED OR AMAZED?
It is related of Noah Webster that his wife, coming suddenly into the pantry one day, caught him in the act of embracing the chamber maid.
“Mr Webster, she said, I am surprised”.
The great lexicographer gazed upon her in mild reproof.

“No, my pet”, he replied,
“You are amazed. It is we who are surprised”.

Xxx

POOR SCHOLARSHIP!

Noah Webster once undertook to write out a letter for an illiterate servant. Before concluding, he asked,
“Is there anything else you would like to add?”
His serving man replied,

“Well, you might just ask him to excuse the poor scholarship and want of sense the letter shows.”
XXX SUBHAM XXX

நெஞ்சில் கண்ணன் வருவான்! (Post No.5630)

WRITTEN BY S NAGARAJAN

Date: 6 November 2018

Time uploaded in London – 4-56 AM (GMT)

Post No. 5630

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

நெஞ்சில் கண்ணன் வருவான்!

ச.நாகராஜன்

1

அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

இனிய தீபாவளியை குடும்பத்துடன், உறவினர்களுடன், நண்பர்களுடன் கொண்டாடுவோமாக!

அமெரிக்காவிலும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும் இப்பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுவதே உலக அங்கீகாரம் பெற்ற பண்டிகையாக இது இருப்பதைக் காட்டுகிறது.

ஹிந்து மதத்தின் முக்கிய கொள்கையான அறம் வெல்லும்; மறம் மடியும் என்பதைச் சொல்லும் பண்டிகை இது.

நரகாசுரனை மாய்த்து அறம் காத்த கண்ணனை நினைவு கூரும் பண்டிகை இது.

அறம் செழிக்கட்டும்; மறம் அழியட்டும்!

இந்த நேரத்தில் இவாஞ்சலிஸ்ட் தொலைக்காட்சி சேனல்கள் தீபாவளி கொண்டாடப்பட வேண்டுமா என்பன போன்ற தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தியதையும் நாம் நினைவில் வைத்துக் கொண்டு இவர்களை இனம் காண வேண்டும்.

இது போல கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட வேண்டியது அவசியம் தானா, மொஹரம், பக்ரீத் தேவையா என்று ஒரு நிகழ்ச்சியை நடத்த இவர்களுக்கு துணிச்சல் இருக்கிறதா?

சிந்திப்போம்!

2

நெஞ்சில் கண்ணன் வருவான்!

நெஞ்சம் நிறைந்திட சஞ்சலங் குறைந்திட

    நெஞ்சில் கண்ணன் வருவான் – களி

    மிஞ்சக் கொஞ்சிக் குழைவான்

வண்ணம் கண்டிட வார்த்தை மறந்திட

    எண்ணமும் எங்கோ ஓடும் – கனி

    கண்ணனைப் பின்னும் நாடும்

கன்னம் குழைந்திட வன்மை இசைந்திட

     மோகனக் குழலை இசைப்பான் – பல   

     வாவன ராக மழை தான்!

குறிப்பு :29-10-1967 இல் இயற்றிய பாடல்!

****

கற்றோரைக் கற்றோரே காமுறுவர் (Post No.5629)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 5 November 2018

GMT Time uploaded in London – 18-11

Post No. 5629

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

டான்டே (DANTE) என்பவர் உலகப்புகழ் பெற்ற கவிஞர் வரிசையில் இருப்பவர். இதாலிய மொழியில் தி டிவைன்  காமெடி (THE DIVINE COMEDY) என்ற காதல் காவியத்தை யாத்தவர். சிறு வயதிலேயே ரோமானிய கவிஞரான வர்ஜில் (VIRGIL) மூலம் ஊற்றுணர்ச்சி பெற்றவர்.

பிறந்த வருடம் 1265

இறந்த ஆண்டு 1321

இறந்தபோது வயது 56

இதாலியில் உள்ள ப்ளாரன்ஸ்  (FLORENCE) நகரில் பிறந்தார். அவருக்கு 12 வயதானபோதே அவருடைய மணப்பெண் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இவரோ வேறு ஒரு பெண் மீது காதல் கொண்டார். அந்தப் பெண்ணுக்கு பீட்ரைஸ் என்று நாமகரணம் செய்தார். அந்தப் பெண்ணுடன் கூடி வாழும் பாக்கியமே இல்லாவிடினும் டிவைன் காமெடி என்னும் கவிதை உதயமாக அந்தப் பெண் காரணமானாள்.

இதாலியில் நகரங்கள் இடையே போர்கள் மூளுவது வாடிக்கை. அதில் டான்டே அலிகியரியும் பங்கேற்றார். இவருடைய மானஸீக காதலி, வேறு ஒருவரை மணந்து 24 வயதிலேயே சொர்க்கத்துக்குச் சென்றாள். அவளது நினைவால் பிறந்த ‘கவிதைத் தாஜ்மஹல்’— டிவைன் காமெடி.

ப்ளாரென்ஸ் நகர், இவர் எதிரிகள் வசமானவுடன் இவர் அந்த நகரை விட்டு நீங்கினார். இதற்குப் பிறகே கவிதை உலகில் நுழைந்தார். அவர் அரசியல் அகதியாகி நகர் நகராக அலைந்தார்.

டிவைன் காமெடியில் இவர் நரகம், இடைப்பட்ட பரிகார உலகம், சொர்கம் என்ற மூன்று இடங்களுக்குப் பயணம் செய்து இறுதியில் சொர்க்கத்தில் மானசீகக் காதலி பீட்ரைஸுடன் இணைகிறார்.

மத்தியகால  ஐரோப்பிய நம்பிக்கைகளைக் காட்டும் காலக் கண்ணாடி இந்த காதல் காவியம். எண்ணற்ற கவிஞர்களையும், கலைஞர்களையும் 800 ஆண்டுகளாக ஊக்குவித்து வரும் ஊற்று இது.

XXX

கற்றோரே கற்றோரைக் காமுறுவர்!

டான்டே ஒரு முறை இதாலியின் வெரோனா நகர அரசரைச் சந்தித்தார். அவர் பெயர் டெல்லா ஸ்கேலா (SIGNOR DELLA SCALA). அவர் சொன்னார்:-

ஐயா, திருவாளர் டான்டே அவர்களே! உம்மைக் கண்டால் என் அரசவை ஆட்கள் எல்லோரும் காறித் துப்புகிறார்களே. இவ்வளவு கல்வி கற்றும் உமக்கு ஏன் இந்த நிலை?

டான்டே சொன்னார்:-

மன்னர் அவர்களே! உமக்குத் தெரியாதா? நம்மைப் போல யார் இருக்கிறார்களோ அவர்களைத் தானே நமக்குப் பிடிக்கும். இது உலக இயல்பு என்பதை அறியீரோ?

(கற்றோரே கற்றோர் காமுறுவர் (முட்டாள்களுக்கு முட்டாள்களைத்தான் பிடிக்கும்).

XXX

 

அவ்வையார் அந்தக் காலத்திலேயே சொன்னார்:

நல்தாமரைக் கயத்தில்நல் அன்னம் சேர்ந்தால் போல்

கற்றாரை கற்றாரே காமுறுவர்; – கற்பு இல்லா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்; முதுகாட்டில்

காக்கை உகக்கும் பிணம்– மூதுரை, அவ்வையார்

தாமரைக் குளம் அழகானது; அங்கேதான் அன்னங்கள் போகின்றன. அது போல கற்று அறிந்த அறிஞர்களுடன்தான்  கற்றோர் சேருவர். மூர்க்கர் என்போர் அறிவற்றவர்கள். அவர்கள் முட்டாள்களையே நாடுவர். சுடுகாட்டில் காக்கைகள் இருப்பது போல.

டான்டே சொல்லுவதற்கு முன் அவ்வையார் செப்பிவிட்டார்.

–SUBHAM–

21 வள்ளல்களைத் தெரியுமா? (Post No.5628)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 5 November 2018

GMT Time uploaded in London – 15-24

Post No. 5628

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

 

21 வள்ளல்களைத் தெரியுமா? (Post No.5628)

இந்துக்கள்  புகழ்பெற்ற வள்ளல்களை  மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். 21 பெயர்களையும் கட்டத்தில் அடைத்துள்ளேன்.

தலை எழு வள்ளல்கள் 7 பேரையும்

இடையெழு வள்ளல்கள் 7 பேரையும்

கடை எழு வள்ளல்கள் 7 பேரையும்

ஆகிய 21 பேரையும் கண்டுபிடியுங்கள்.

விடை கீழே கொடுத்துள்ளேன்.

21 பேரையும் காண முடியாவிடில்  விடையைக் காண்க. கீழே உளது

 

விடை:–

முதல் ஏழு வள்ளல்கள்

குமுணன், சகரன், சகாரன், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி

இடைக்கால ஏழு வள்ளல்கள்

அக்ரூரன், அந்திமான், அரிச்சந்திரன், கன்னன் (கர்ணன்),சிசுபாலன், சந்திமான், தந்திவக்கிரன்

கடை எழு வள்ளல்கள்

காரி, பாரி, ஓரி, எழினி, நள்ளி, பேகன், மலையன்

கடை எழு வள்ளல்கள் பற்றிய விவரமே முழுதும் கிடைக்கிறது. ஏனையோரில் நளன், கர்ணன், அரிச்சந்திரன் போன்றோர் பற்றி மட்டுமே நாம் அறிவோம். அதுவும் நாம் அறிந்த இதிஹாச, புராண புருஷர்தானா அல்லது அதே பேரில் உள்ள வேறு வள்ளல்களா என்பதையும் அறியோம்.

சங்க கால வள்ளல்கள் எழுவரும் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததை நாம் அறிவோம்; ஆதலால் மற்ற 14 பேரும் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தோரே!

—சுபம்—

FOOLS LIKE FOOLS; SCHOLARS LIKE SCHOLARS (Post 5627)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 5 November 2018

GMT Time uploaded in London – 6-43 am

Post No. 5627

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

‘Similia Similibus Curantur’ ( ‘like cures like’-Homeopathy Principle)

When Dante was at the court of Signor Della Scala , then sovereign of Verona, that prince said to him one day.
“I wonder Signor Dante ,that a man so learned as you should be hated by all my court, and this fool should be so beloved.”

Highly piqued Dante replied,
“Your Excellency would wonder less if you considered that we like those best who most resemble ourselves.”

xxx

Dante profile

Italian Poet

Born June 1265
Died September 1321
Age at death 56

Publications

1292-94 The New Life
1309-1321 The Divine Comedy

Dante is one of the most important writers in the history of the world literature. He is Italy’s most celebrated poet, and his master piece The Divine Comedy is the greatest Italian poem

Dante Alighieri was born in the Italian city of Florence. At the age of 12 he was promised to his future wife, although he had already fallen in love with another girl whom he called Beatrice. Although they would never be together, Dante s love for Beatrice was to inspire his greatest poetry.

As a young man Dante fought in the wars that there were always going on between rival cities and became involved in the struggle for political power in Florence . Beatrice married another man, and then, when she was just 24, she died. Dante was heartbroken. He withdrew into intense study and began composing poems dedicated to her memory. In 1295 Dante s political enemies won power in Florence, and he had to leave the city for ever.

Now a political exile Dante wandered from city to city. He began to write The Divine Comedy, a long story poem that describes an imaginary journey made by Dante through the three worlds of the afterlife— Hell, purgatory and heaven. His guide for most of the journey is the ancient roman poet Virgil, but in the heaven he is reunited with the long dead Beatrice.

As well as providing a fascinating insight into the beliefs of people living in medieval Europe. The Divine Comedy has inspired generations of writers and other artists with its beautiful language and moving love story.

Xxx. Subham. Xxxx

இறைவன் பற்றிய இரகசியங்கள்! (Post No.5626)

WRITTEN BY S NAGARAJAN

Date: 5 November 2018

Time uploaded in London – 6-17 AM (GMT)

Post No. 5626

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

இறைவன் பற்றிய இரகசியங்கள்!

ச.நாகராஜன்

1

இறைவனை எப்படிக் கண்டறிவது? அவன் எங்கு உள்ளான், எப்படி உள்ளான் என்பதை மகான்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உரைத்து வைத்திருப்பதைத் தொகுத்துப் படித்தால் பல உண்மைகள் தெளிவாகப் புலப்படும். சிலவற்றை இங்கே தொகுத்துப் பார்க்கலாம்.

2

திருமூலர் கடவுளை நடமாடும் கோயில் நம்பனில் காண்கிறார்.

கோயிலில் உறைந்திருக்கும் பகவானுக்கு ஒன்று நைவேத்யமாகத் தந்தாய் எனில் அது நிச்சயமாக பசியினால் வாடி வதங்கும் ஏழைக்குச் சென்று சேராது; சில சமயம் சேரலாம். அல்லது நைவேத்யம் செய்தவரே வீட்டிற்குக் கொண்டு செல்லக் கூடும். ஆனால் நடமாடும் கோயிலாக இருக்கும் நம்பர்க்கு ஒன்று கொடுத்தால் அதில் இரட்டைப் பலன். அவனுக்கும் அது சேரும், அத்துடன் அது தானாகவே இறைவனையும் சேரும் என்கிறார் அவர். அற்புதமான இந்தக் கருத்து பெரிய உண்மையைப் புலப்படுத்துகிறது. இல்லாதவனுக்கு ஒன்று ஈயில், அதுவும் உண்ணுவதற்கு ஒன்று கொடுத்தால் அதில் மகிழ்வான் இறைவன், அது அவனைச் சேரும் என்பது தான் அது. வள்ளலார் அனைவருக்கும் அன்ன தானம் செய்யச் சொன்னதன் முழு ரகசியமும் இப்போது புரியும்.

 

திருமூலரின் திருமந்திரப் பாடலைப் பார்ப்போம்:

படமாடும் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் கோயில் பகவர்க்கு ஆது ஆமே!

3

அவன் அணோர் அணீயான், மஹதோ மஹீயான் என்று அறைகின்றது வேதம்.

அணுவிற்கும் அணுவானவன். பிரம்மாண்டத்திற்கும் பெரிதான மஹத்துக்கும் மஹத்தானவன்! பெரிதுக்கும் பெரிது. சிறிதுக்கும் சிறிது!

அணுவில் அசைவாய் என்றார் (அடாமிக் தியரி தெரிந்த) அருணகிரிநாதர்.

அணுவாய் இருப்பவனும் அவனே; அணுவிற்குள் அசைவாய் இருந்து உலகத்தை இயக்குபவனும் அவனே!

என்ன அற்புதமான கருத்து!

4

திருமந்திரப் பாடல் இன்னொன்று இறைவனின் இயல்பை விளக்குகிறது.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே    (திருமந்திரம் பாடல் 270)

இறைவன் எண்குணத்தான் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அன்பே சிவம் என்கிறார் திருமூலர்.

குணம் பற்றியதான இந்த விளக்கமும் அற்புதமான விளக்கம் தான்.

அன்பே சிவம்; தூய அன்பின் திருவுரு கடவுள்!

GOD IS LOVE!

பக்திக்கு இலக்கணமாய் விளங்கும் நாரதர் இறைவனை, ‘அவன் உன்னுள்ளே பரம ப்ரேம ரூபமாய் இருக்கிறான்’ என்கிறார்.

ஸா த்வஸ்மின் பரம ப்ரேம ரூபா (நாரத பக்தி சூத்ரம் – 2)

Sa tvasmin Parama-prema-rupa (Narda Bhakthi Sutra -2)

5

GOD IS NO WHERE  என்றான் ஒரு நாத்திகன்.

அதைக் கேட்ட ஞானி சிரித்தார். நீ சொன்ன சொல்லிலேயே உள்ளானே; இதோ பார் W NOவுடன் சேர்த்துப் படி

GOD IS NOW HERE என்று ஆகி விட்டதே! என்றார் அவர்.

6

இரணியன் நாத்திகர்க்குத் தலைவன்.

அவன் உன் கடவுள் இந்தத் தூணில் இருக்கிறானா? என்று தன் மகனை நோக்கிக் கேட்ட போது, பிரகலாதன், “அவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்கிறான்.

கம்பர் சித்தரிக்கும் காட்சியோ அற்புதக் காட்சி.

கம்பரின் பாடல் இது:

சாணிலும் உளன்,ஓர் தன்மை அணுவினைச் சத கூறு இட்ட

கோணினும் உளன், மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற

தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன், இத்தன்மை

காணுதி விரைவின் என்றான்; நன்று எனக் கனகன் நக்கான்!

அடேய்! எங்கிருக்கிறான் உன் இறைவன்?

அவன் சாணிலும் இருப்பான்; அணுவை நூறு துகள்களாகச் செய்த போது வருமே அந்தக் கோணிலும் இருப்பான்; நீ எங்கே இருக்கிறான் என்று கேட்டாயே, அந்தச் சொல்லிலும் இருப்பான்.

அருமையான இந்தச் சொற்களில் வாக்கில் இருப்பவன் அவனே; வாக்கைத் தருவபவனும் அவனே; அனைத்திலும் பரந்திருந்து உறையும் சர்வ வியாபியும் அவனே என்பதைப் புலப்படுத்துகிறான் கவிச் சக்கரவர்த்தி கம்பன்!

7

சரி, அவனை எப்படி அறிவது? வழி சொல்கிறார் அப்பர்:

அவன்,

விறகில் தீயினன், பாலில் படு நெய் போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்

முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே

இரகசியத்தைப் பிட்டுப் பிட்டு வைத்து விடுகிறார் அப்பர். நாவுக்கு அரசர் ஆயிற்றே! அவர் சொற்களில் உண்மை நர்த்தனமாடுகிறது!

விறகில் தீ இருப்பது போல, பாலில் உள்ளே நெய் மறைந்திருப்பது போல மாமணி ஜோதி மறைந்திருக்கிறான்.

உறவு கோலை நடு

உணர்வுக் கயிறை எடு

முறுக வாங்கிக் கடை

மேலே வந்து உன் முன்னே மிதப்பான்.

8

‘உள்ளத்தில் உள்ளான் என்கின்றனர் சமயக் குரவர்கள். ஆனால் கள்ளர்க்குப் புலப்படான்; மெய்யன்பர்க்குப் புலப்படுவான் என்கின்றனர் அவர்கள்! இறைவன் ஒரு இரகசியம்! அவனை முழுதுமாக அறிய முடியாது.

அநிர்வசனீயம் – பேச்சுக்கு அப்பாற்பட்டவன்.

Egoless, Everlasting, Eternal, Omnipotent, Omniscient என்று இப்படி வர்ணித்துக் கொண்டே போகலாம்!

9

ஆதி பகவன்

வாலறிவன்

மலர்மிசை ஏகினான்

வேண்டுதல் வேண்டாமை இலான்

எண்குணத்தான்

பொறிவாயில் ஐந்தவித்தான்

அறவாழி அந்தணன்

என்று இறைவனை ‘தனக்கு உவமை இல்லாதான் என்று கூறும் வள்ளுவர்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது என்று சுருக்கமாகக் கூறி விடுகிறார்.

ஓர் நாமம் ஓருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்!

***

FIND THE SEERS OF INDIA (Post No.5625)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 4 November 2018

GMT Time uploaded in London – 18-43

Post No. 5625

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

THE FOLLOWING CROSSWORD IS ABOUT THE SAPTA RISHIS (SEVEN SAGES) AND OTHERFAMOUS RISHIS OF ANCIENT INDIA.

FIND 7+10 RISHIS/ SEERS. SOLUTION IS GIVEN AT THE BOTTOM OF THIS PAGE.

JUST TO HELP YOU I HAVE GIVEN THE FIRST LETTER OF THE NAMES OF  SAGES.

LEVEL 1– LOOK AT THE TIPS AND FIND OUT

LEVEL 2- LOOK AT THE CROSSWORD ITSELF AND FIND OUT.

Just some tips:

1.A (Shortest of the sages)

2.A (one of the Sapta Rsis)

3.A (First in the 7 sages)

4.B (who gave a feast to Rama)

5.B(one of the Sapta Rsis)

6.D (Blind sage OF RIG VEDA)

7.D (Angry sage,a terror to everyone)

8.G(Ahalya’s husband)

9.K (one of the Sapta Rsis)

10.K (one of the Sapta Rsis)

11.R ( Mr Hairy Feet)

12.S (Seven Sages in Sanskrit)

13.V (AUTHOR OF RAMAYANA)

14.V (WHO COMPILED THE FOUR VEDAS)

15.V ( Owner of Kamadenu also OF RIG VEDA)

16.V ( Who took Rama and Lakshmana to Mithila, also OF RIG VEDA)

17.V (OF RIG VEDA)

 

 

ANSWER

1.AGASTYA (Shortest of the sages)

2.ANGIRASA (one of the Sapta Rsis)

3.ATRI (First in the 7 sages)

4.BHARADWAJA (who gave a feast to Rama)

5.BRGU (one of the Sapta Rsis)

6.DIRGATAMAS (Blind sage OF RIG VEDA)

7.DURVASA (Angry sage,terror)

8.GAUTAMA (Ahalya’s husband)

9.KAS(H)YAPA (one of the Sapta Rsis)

10.KUTSA (one of the Sapta Rsis)

11.ROMAPADA ( Mr Hairy Feet)

12.SAPTA RSI (Seven Sages in Sanskrit)

13.VALMIKI (AUTHOR OF RAMAYANA)

14.VYASA (WHO COMPILED THE FOUR VEDAS)

15.VASISTHA ( Owner of Kamadenu also OF RIG VEDA)

16.VISVAMITRA ( Who took Rama to Mithila, also OF RIG VEDA)

17.VAMADEVA (OF RIG VEDA)

–SUBHAM–