MANTRA TO REMOVE EYE DISEASES! (Post No.6549)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 15 June 2019


British Summer Time uploaded in London – 7-25 am

Post No. 6549

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

—subham—

TAMIL CROSS WORD 14619 (Post No.6548)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 14 June 2019


British Summer Time uploaded in London – 20-55

Post No. 6548

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

குறுக்கே

1.6 எழுத்துக்கள்- இந்துக்களின் புனித நூல்; 700 ஸ்லோகம் உடையது

5. (3) – இருள்

6. (3)- சங்கரன் கோவில் தேவி

8. (3) – மலை உச்சி, பொதியம், இமயம்

9. (7) – தாய்க்கு வணக்கம்

11. (5) – திருவண்ணாமலை, கோவர்த்தன மலையில் பக்தர்கள் செய்வது

12. / (5) வலமிருந்து இடம் செல்க – சங்க காலத்திலும் பின்னரும் இதே பெயரில் புலவர். அவர் பெயரில் இலக்கண நூலும் உளது

கீழே

1.– (5)- இரண்டு பேருடன் தூக்கில் தொங்கவிடப்பட்ட சுதந்திர வீரர்

2. (8)- பொன்னியின் செல்வன் நாவலில் முக்கிய கதாபாத்திரம். எழுத்தில் துவங்கும் பெயர்.

3. (7) – ஜெயதேவர் எழுதிய அஷ்டபதி நூல்

4. (5) – ஆயுதம், அம்பு

7. / – (4) கீழிருந்து மேல் செல்க-  என்னுடையது என்னும் கர்வம்

10.—(3) – தண்டவாளத்தில் ஓடும்

Mighty Indian and Persian Armies! (Post No.6547)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 14 June 2019
British Summer Time uploaded in London –  18–3
7

Post No. 6547

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

Here is the army of Persian King Suvarchas (Sanskrit name of Xerxes). He represented the whole country where as Mauryas, Pandyas aand othe dynasties ruled India at the same time. So we might have had bigger army (all put together):-

–subham–

ஆளுக்கு ஒரு மயிர் புடுங்கினால் அடியேன் தலை மொட்டை! (Post No.6546)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 14 June 2019


British Summer Time uploaded in London –  7- 24 am

Post No. 6546

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 3 (Post No.6545)

Painting by Stephen Wiltshire

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 14 June 2019


British Summer Time uploaded in London –  6- 35 am

Post No. 6545

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽பாக்யா 1-6-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளி வந்துள்ள ஒன்பதாம் ஆண்டு ஒன்பதாம் கட்டுரை – அத்தியாயம் 425

உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 3

ச.நாகராஜன்

உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 3

ச.நாகராஜன்

அபூர்வ ஓவியர் – ஸ்டீபன் வில்ட்ஷைர் (Stphen Wiltshire)

ஒரே ஒரு முறை பார்த்தால் போதும் எந்த இயற்கை காட்சியாக இருந்தாலும் சரி, நகர்ப்புறத் தோற்றமானாலும் சரி, கட்டிடமானாலும் சரி அப்படியே துல்லியமாக வரைந்து விடும் ஆற்றல் கொண்ட அபூர்வ கலைஞர் ஸ்டீபன் வில்ட்ஷைர். லண்டனில் 1974, ஏப்ரல் 24ஆம் தேதி பிறந்த ஸ்டீபன் குழந்தையாக இருந்த போது ஊமை போல இருந்தார். ஆனால் எதையும் பார்த்தவுடன் வரையும் தன் அபூர்வ ஆற்றலை மூன்று வயதிலேயே வெளிப்படுத்தி விட்டார்.ஐந்தாம் வயதில் அவரை லண்டனில் உள்ள க்வீன்ஸ்மில் பள்ளிக்கு அனுப்பினர். அங்கு அவரது அபூர்வ ஓவியத் திறமை கண்டறியப்பட்டது. பள்ளியில் அவரிடம் அவரது ஓவியம் பற்றி அனைவரையும் கேட்க வைக்கவே இறுதியில் பேப்பர் என்ற வார்த்தையை முதன் முதலாகப் பேசினார். ஒன்பது வயதில் பேச ஆரம்பித்தார். உலகெங்கும் அவர் பெயர் பிரபலமானது. அமெரிக்க கார்களைப் பற்றிய என்சைக்ளோபீடியா என அவர் புகழப் படுகிறார். உலகெங்கும் அவரது ஓவியங்களைப் பார்க்காதவர்கள் இல்லை; பாராட்டாதவர்கள் இல்லை!

இசை மேதை – டெரிக் பரவிசினி (Derek Paravicini)

ஹ்யூமன் ஆர்கெஸ்ட்ரா என புகழப்படுபவர் டெரிக் பரவிசினி.

ஒரே ஒரு முறை ஒரு இசையைக் கேட்டால் போதும் அதை அப்படியே இசைப்பார் அவர். 1979, ஜூலை 26ஆம் தேதி பிறந்த பரவிசினி லண்டனில் வசித்து வருகிறார். பார்வையில்லாத இவர் பிரபல எழுத்தாளரான சாமர்செட் மாமின் கொள்ளுப் பேரன். இவரது அதிசயத் திறமை இளம் வயதிலேயே வெளிப்பட்டது. ஒன்பதாம் வயதில் லண்டனில் பொது அரங்கம் ஒன்றில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தினார். 2010, ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று ஹிஸ்டரி சேனலில் உலகப் புகழ் பெற்ற ஸ்டான் லீயின் சூப்பர் ஹ்யூமன்ஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பல சோதனைகளையும் எதிர்கொண்டு தன் திறமையைக் காண்பித்து அனைவரையும் அயரச் செய்தார். பி.பி.சியும் இவரது நிகழ்ச்சியை ஒலிபரப்பியது. இவரது அபாரத் திறமை இன்றும் தொடர்கிறது.

வேகமாகப் படிக்கும் பெண்மணி – ஆன்னி டோன்ஸ் (Anne Tones)

உலகின் அதி வேகமாகப் படிக்கும் பெண்மணி என்ற புகழைப் பெற்றவர் ஆன்னி டோன்ஸ்! பிரபல நாவல் தொடரான ஹாரி பாட்டர் தொடரில் ஏழாவது நாவல் 608 பக்கம் உடையது. அதை அவர் 47 நிமிடம் ஒரு வினாடியில் படித்து முடித்தார். இப்படியும் படிக்க முடியுமா என்ற வியப்பை உலகெங்கும் ஏற்பத்துபவர் இந்த அதிசயப் பெண்மணி.

 மாரத்தான் மன்னர் – டீன் கர்னாஸஸ் (Dean Karnazes)

லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் உள்ள இங்கிள்வுட் என்ற இடத்தில் 1962, ஆகஸ்ட் 23ஆம் தேதி பிறந்த டீன் கர்னாஸஸ் உலகின் அதிவேக ஓட்டக்காரர். இவரை ‘அல்ட்ரா மாரதான் மேன்’ என்று அழைக்கின்றனர். 50 மாரத்தான்களை 50 நாட்களில் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் இவர் 2006இல் ஓடிக் காட்டவே உலகினர் பிரமித்துப் போனார்கள். இவரது திறமை எப்படிப்பட்டது தெரியுமா? 2005இல் 350 மைல்களை 80 மணி நேரம் 44 நிமிடங்களில் தூங்காமல் ஓடிக் காட்டினார்.

மூச்சைப் பிடிக்கும் ஆற்றல் கொண்டவர் – ஸ்டிக் செவெரின்ஸென் (Stig Severinsen)

டென்மார்க்கைச் சேர்ந்த ஸ்டிக் செவெரின்ஸென் 1973, மார்ச், 8ஆம் தேதி பிறந்தவர். கின்னஸ் வோர்ல்ட் ரிகார்டில் நான்கு முறை மூச்சைப் பிடித்து நீந்தும் ஆற்றல் உடையவராக அறிவிக்கப்பட்டவர். 22 நிமிடங்கள் மூச்சைப் பிடித்து இவர் தனது ஆற்றலைக் காட்டிய போது உலகமே வியந்தது.நல்ல ஆரோக்கியமான ஒருவர் இரு நிமிடங்களுக்கு மேல் மூச்சைப் பிடித்து நிறுத்த முடியாது. ஸ்டான் லீயின் சூப்பர்ஹ்யூமன் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட போது இவரைச் சோதித்துப் பார்த்தனர். அப்போது அவரது இந்த அபூர்வ ஆற்றலுக்குக் காரணம் அவரது இரத்தச் சிவப்பு அணுக்களை அவர் தனது மண்ணீரலில் சேமித்து வைத்திருப்பது தான் என்பதைக் கண்டறிந்தனர். இதே போல டால்பினும் செய்வது குறிப்பிடத் தகுந்த ஒரு விஷயம்!

பல் மொழி வல்லுநர் – ஹரால்ட் வில்லியம்ஸ் (Harold Williams) 

 இவர் (தோற்றம் 6-4-1876 மறைவு 18-11-1928) நியூஜிலாந்தைச் சேர்ந்தவர். ஒரு மொழியை நன்கு கற்பதிலேயே அனைவரும் படும் கஷ்டம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இவரோ 58 மொழிகளை நன்கு அறிந்திருந்தார்.  சிறந்த பத்திரிகையாளர்; தி டைம்ஸ் பத்திரிகையின் அயல்நாட்டு ஆசிரியராகவும் பணியாற்றினார். சீன மொழி, ஜப்பானிய மொழி, எகிப்திய மொழி உள்ளிட்ட பல மொழிகளில் இவர் கொண்டிருந்த அறிவு திகைப்படையச் செய்யும் ஒன்று.

ரப்பர் பாய் – டேனியல் ப்ரௌனிங் ஸ்மித் (Daniel Browning Smith)

தன் உடலை ரப்பர் பந்து போல வளைத்து நெளித்து உலகின் மிகவும் நெகிழ்வான நபர் தான் என்பதை நிரூபிப்பவர் டேனியல் ப்ரௌனிங் ஸ்மித்! இவரது செல்லப் பெயர் ரப்பர் பாய்! 1979 மே மாதம் 8ஆம் தேதி பிறந்த இவர், தனது உடலை  முன்னும் பின்னுமாக வளைப்பார். கை கால்களை 180 டிகிரி சுழற்றிக் காட்டுவார். கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட் இவரை வாழ்ந்து கொண்டிருக்கும் உலக மக்களில் உலகின் அதி நெகிழ்வான மனிதன் (most flexible man alive) என்று அறிவித்திருக்கிறது; ஏழு கின்னஸ் ரிகார்டுகளை வழங்கி இருக்கிறது.இவர் ஒரு நடிகர். காமெடியன்.விளையாட்டு வீரர். தொலைக்காட்சியில் பேட்டி எடுப்பவர். ஸ்டண்ட்மேன்.

இன்னும் சிலரை அடுத்துப் பார்ப்போம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

உலகம் கண்ட விசித்திரமான விஞ்ஞானிகளில் ஒருவர் ஜோஸா டெல்காடோ. (Josa Delgado). யேல் பல்கலைக் கழகத்தில் பேராசிரியாரக்ப் பணியாற்றினாலும் கூட அவர் ஆர்வம் கொண்டிருந்தது மனம் பற்றிய ஆராய்ச்சியில் தான். ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் டெல்காடோ உயர் விலங்குகளின் மூளையில் எலக்ட்ரோடுகளைச் செருகிப் பதித்தார். தன் கையில் ஒரு ரிமோட் கண்ட் ரோலை வைத்துக் கொண்டு அந்த விலங்குகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தான் சொன்னபடி அவற்றை ஆட்டுவித்தார். கஷ்டமான இயக்கங்களை அவை செய்யுமாறு கட்டளையிட்டார். ஒரு காளையின் மூளையில் எலக்ட்ரோடைப் பதித்து அதை ஒரு ரிங்கில் தன்னுடன் சண்டை போடுமாறு செய்து அது தன்னை முட்ட வரும் போது டிரான்ஸ்மிட்டரை உபயோகித்து அது தன்னை முட்ட வருவதை நிறுத்தினார்.

25 மனிதர்களிடமும் இப்படி எலக்ட்ரோடுகளைப் பதித்தார். எப்படியேனும் அவர்களின் மனங்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆட்டிப் படைக்க வேண்டும் என்று நினைத்தார். வலுச்சண்டைக்குப் போவதில் தான் அவரது  ரிமோட் கண்ட்ரோல் வேலை செய்தது. ஒரு முறை அவர் இப்படிச் சொன்னார் : “நாம் மின்னணு ஆற்றலால் மூளையைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் படைகளும் போர் தளபதிகளும் மூளையில் செய்யப்படும் மின்சக்தி தூண்டுதலால் கட்டுப்படுத்தப்படுவர்.”

மனக் கட்டுப்பாடு ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவரது நோக்கம் நிறைவேறுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

***

Stephen Wiltshire

SWAMI’S CROSS WORD 13619 (Post No.6544)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 13 June 2019


British Summer Time uploaded in London –  20-53

Post No. 6544

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

ACROSS

1. –  6 LETTERES- NATURE SPIRITS GUARDING TREASURES, TREES, LAKES

5.. –(3)  SICKNESS, UNRIPE, UNMEASURED IN SANSKRIT

6. – (4) GARLAND

9. –(5)  ONE’S OWN

10. – (4) END

DOWN

1. – (6) RIVER THAT IS BLACK AND JOINS WHITE GANGES

2. – (7) INDIAN GOOSEBERRY

3. – (5) TENTH AVATAR OF VISHNU

7. – (5)  EARNED, WON; BOY’S NAME

4. –(5)  HUMOUR, COMEDY

8. – (6) BORROWER, CLEARING NUT PLANT, RADISH.

–subham–

laughter

மேலும் ஒரு இளம் லண்டன் எழுத்தாளர் அறிமுகம். (Post No.6543)

 Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 13 June 2019


British Summer Time uploaded in London –  18-0
1

Post No. 6543

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

Anojan Balakrishnan speaking

லண்டனில் எழுத்தாளர் ஜெயமோகனின் ரசிகர்கள், வாசகர்கள் துவக்கிய ‘லண்டன் தமிழ் இலக்கியக் குழுமம் சார்பில், பல இளம் எழுத்தாளர்களின் கதைப் புத்தகங்களின் விமர்சனம் ஜூன் 1ம் தேதி நடந்தது. (இது பற்றி ஏற்கனவே 3 கட்டுரைகள் வெளியாகின; இது நாலாவது கட்டுரை) இலங்கையைச் சேர்ந்த அனோஜன் பாலகிருஷ்ணனின் கதைகளை குழுமம் சார்பில் தனராஜ் மணி விமர்சித்தார்.

அனோஜனின் இரண்டு கதைப் புத்தகக்ங்கள்; எழு வசந்தம், பச்சை நரம்பு

இதோ தனராஜ் மணி  உரையின் சாராம்சம்:–

Dhanaraj reviewing Anojan’s book

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நான் அறிமுகப்படுத்தப்போகும் அனோஜனின் பச்சை நரம்பு அவரின் இரண்டாவது சிறுகதை தொகுதி. பத்து கதைகள் கொண்ட இந்த தொகுப்பைகிழக்கு பதிப்பகம் பதிப்பித்திருக்கிறது. 

இவ்வுரையில் இப்புத்தகத்தை பற்றிய என் வாசிப்பின் ரசனை சார்ந்த அவதானிப்புகளை முன் வைக்கப் போகிறேன். அது உங்களுக்கு இப்புத்தகத்தைவாசிக்கும் ஆர்வத்தை தூண்டினால் மகிழ்வேன். அப்படியில்லையெனில் என் உரையின் குறையே அன்றி புத்தகத்தின் குறையல்ல. 

இத்தொகுதியின் முதல் கதையை வாசிக்கும் போது , எழுத்தாளர் ஜெயமோகனின் ரப்பர் நாவலை நான் முதன் முதலாய் வாசிக்கும் போது ஏற்பட்ட ஒருதுணுக்குறல், ஒரு ஆச்சரியம் இதிலும் இருந்தது. இரு கதைகளிலும் கதை மாந்தர் பேசும் மொழி தமிழ் தான் ஆனால் நான் அறிந்த, என் சூழலில் புழங்கும்தமிழ் அல்ல. தமிழர் வாழ்வை பேசும் கதைதான் ஆனால் நான் அது வரை அறிந்த தமிழர் வாழ்வல்ல.வாசிக்க தொடங்கும் போது போரும் அமைதியும்நாவலில் வரும் ரஷ்யாவின் கடும் பனி எவ்வளவு அன்னியமோ ரப்பர் நாவல் பேசும் ரப்பர் தோட்டங்களும் எனக்கு அவ்வளவு அன்னியமாகவே இருந்தது. ஆனால் வாசித்து முடிக்கும் போது டால்ஸ்டாயின் ப்யிரியை எவ்வளவு அணுக்கமாக உணர்ந்தேனோ அதை விட அணுக்கமாக ப்ரான்ஸிஸிடம் உணர்ந்தேன். 

Anojan Balakrishnan is sitting at the right extreme (Blue jacket); 

ப்யரியின் உள்ளிருக்கும் ரஷ்யன் ஒரு சிறு அன்னிய உணர்வை இன்றும் தருகிறான் ஆனால் ரப்பரில் வரும் ப்ரான்ஸிஸ் நானே தான். அவனை என்னால்முழுவதுமாய் புரிந்து கொள்ள முடியும் . 

அனோஜனின் கதைகள் இதே உணர்வை எனக்களித்தன. வாசிக்க ஆரம்பித்த போது சில ஈழ தமிழ் சொற்கள் எனக்கு புரியவில்லை, காலை சிற்றுண்டிக்குபன்னும் சம்பலும் சாப்பிடும் கலாச்சார அதிர்ச்சிகள் வேறு கதைகளில் நிரம்பி இருந்தது.

ஆனால் வாசித்து முடிக்கும் போது அனோஜனின் கதை நிகழும் களத்தையும் கதை மாந்தரையும் சேலத்தில் நான் வளர்ந்த சூழலுக்கு மிக அணுக்கமாகஉணர்ந்தேன். 

நம்மூர் திருமணங்களில் அடர்த்தியாக செம்பொடி அப்பி அடர் சிவப்பில் நின்று புன்னகைத்து கொண்டிருக்கும் தமிழ் மணப் பெண்களை பார்த்திருப்பீர்கள். 

அழகு கலை நிபுணர்கள் அவர்களுக்கு அழகென்று தோன்றிய ஒரு வடிவை அப்பெண்ணின் முகத்தில் வரைந்தெடுத்திருப்பார்கள். 

சிலருக்கு வியர்வையோடு அவ்வடிவும் வழிந்து ஊற்றிக்கொண்டிருக்கும், பீதியை வெளிகாட்டாமல் மையமாய் புன்னகைத்துவிட்டு மேடையில் இருந்துஇறங்குவதற்கு உங்களுக்கு பெரும் பயிற்சி வேண்டும். 

சில நாட்கள் கழித்து அதே பெண்ணை அவள் வீட்டில் மிகச் சாதாரணமான உடையில் புன்னகையன்றி வேறொரு ஒப்பனையும் இல்லாமல் பார்க்கும் போதுகண்டு கொள்வீர்கள் ,திருமண மேடையில் பேய் போல் தெரிந்தவள் ஓர் தமிழ் நிலத்து மாநிற பேரழகி என.  அது போல, சில மொழி மற்றும் சூழல் மேற்பூச்சுகளை கடந்துவிட்டால், அனோஜனின் கதை உலகம் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களுக்கு மிக அணுக்கமான நாம் தொடர்புபடுத்திக்கொள்ள கூடிய கதைமாந்தரையும் கதை களத்தையும் கொண்டிருக்கிறது. 

இந்த பத்து கதைகளில் பெரும்பான்மையான  கதைகள் காமத்தை மையப்படுத்தி எழுதப் பட்டுள்ளது, குறிப்பாக உடலிலும் மனதிலும் முகிழ்க்க தொடங்கும்பதின்வயதின் காமம். 

காமம்,  காலம் காலமாக தமிழில் பேசப்பட்டு , பாடப்பட்டு வந்திருக்கிறது. 

ஈராயிரம் வருடங்களுக்கு முன் மிளைப் பெருங்கந்தன் எனும் கவிஞன் காமத்தைப் பற்றி ஒரு பாடலை இயற்றியிருக்கிறார், அது 

காமங் காம மென்ப காமம்

அணங்கும் பிணியு மன்றே நினைப்பின்

முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்

மூதா தைவந் தாங்கு

விருந்தே காமம் பெருந்தோ ளோயே.

அதன் அர்த்தம் காமம் என்பது பேயோ நோயோ இல்ல,

வயதான பசுமாடு பசும் புல்லை சாப்பிட முடியாமல் நாவால் நக்கிப் பார்த்து இன்புறுவது போன்றதுனு சொல்றாரு.

இதை அவர் இரு மொந்தை இன்கடுங்கள் அருந்திவிட்டு  ஒரு பதின் வயது இளைஞனை பக்கத்தில் உட்கார வைத்து சொல்லி இருப்பாரென நான் நினைத்துக்கொள்கிறேன். அவ்வயதில் அவர்களால் முடிந்தது நினைத்துப் பார்ப்பதுதான்.  ஹார்மோன்கள் பொங்கி பிரவாகம் எடுக்கும் வயதில் அதற்கு வடிகால்அளிக்கும் கலாச்சார சூழல் நமக்கு கிடையாது. காமத்தை மனதில் மட்டும் நிகழ்த்தி கொள்வதே பெரும் பாலானாவருக்கு வாய்ப்பது. 

அனோஜனின் கதைகளில் இருந்து ஈழத்திலும் பதின்வயதினருக்கு அதே சூழல்தான் என்பது தெரிகிறது. 

என் மனதிற்கினிய கவிஞரான இசை பதின்வயது இளைஞனை தன் கவிதை ஒன்றில் விவரிக்கையில்

அக்காக்கள்  குளிக்கையில்  படலைப் பிரிப்பான்

என்று சொல்கிறார். 

இத்தொகுப்பின் தலைப்பு கதையான பச்சை நரம்பில் வரும் இளைஞன் செல்வமக்கா பரிமாறும் போது அவள் ஜாக்கெட் மறைக்காத பாகங்களில் கண்ணைஊன்றி வைத்திருக்கிறான்.

பிறழ்வான மீறல்கள் மூலமாகத்தான் தங்கள் பதின்வயது காமத்துக்கு வடிகால் தேட முடியும் என்ற நிலையில் இன்றும் தமிழ் கலாச்சாரம்இருக்கிறது.இத்தொகுப்பில் உள்ள பச்சை நரம்பு ,  இச்சை போன்ற  கதைகள் அதை பதிவு செய்கிறது, இதில் ஆண் பெண் பேதமில்லை. 

அனோஜன் மட்டுமல்ல தற்கால தமிழ்புனைவெழுத்தில் இது மீள மீளபேசப்படுகிறது.இலக்கியம் ஒரு சமூகத்தின்கண்ணாடி.  தி.ஜா காலத்து கதைக்கரு இன்றும் எழுதபடுவது நம் சமூகம் இவ்விஷயத்தில் 19 நூற்றாண்டிலேயே தேங்கி நிற்பதை காட்டுகிறது.

இத்தொகுப்பில் உள்ள கதைகளில் என்னை மிகவும்கவர்ந்தவை இரு கதைகள். ஒன்று ஒரு தந்தையைபற்றியது, மற்றொன்று அன்னையை பற்றியது. இரண்டும் இரு வேறு உள நிலைகளை பேசுவது . 

கிடாய் ,  காமத்தால் தன் வாழ் நாள் முழுக்க அலைகழிக்கப்படும் ஒரு தந்தையின் கதை. ராசையா ஒருவிவசாய கூலி, தன் மனைவியும், மகளும் வசிக்கும்குடிசைக்கு அருகிலேயே தான் வேலை பார்க்கும்இடத்தில் அறிமுகமான பெண்ணை குடியமர்த்திஅவளோடு காமம் கொண்டாடுகிறான். மனைவிதுக்கம் தாளாமல் தீக்குளித்து உயிரழக்கிறாள். தன்காமக்கிழத்தியை இப்பொழுது வீட்டிற்கே அழைத்துவந்து வைத்து கொள்கிறார் ராசையா. சிறு மகளும்அச்சிறு குடிசையை அவர்களோடு பகிர்ந்துகொள்கிறாள், அவருடைய களியாட்டங்களைமெளனமாக பார்த்தபடி.  காலம் ஓடுகிறது, மகள்வளர்ந்து டீச்சர் ஆகிறாள், ராசையா மகள் தயவில்வாழ வேண்டிய சூழல். இப்பொழுது மகளின் முறை. அவர் கண்ணெதிரே அவளிடம் ட்யூஷன் படிக்க வரும்பதின்வயது இளைஞனுடன் காமத்தில் திளைக்கிறாள். அறை கதவை கூட பூட்டி கொள்வதில்லை, அவளுக்குஇவர் ஒரு பொருட்டே அல்ல. ஒரு நாள் அவர் மகள்அவளுடைய காமத்துணைவனுடன் கூடியிருக்கும்நேரத்தில் அறைக்குள் நுழைகிறார். அவ்விளைஞனைதாக்கிவிட்டு சொந்த மகளை வன்புணர்கிறார். அதன்பின் அவ்விளைஞனையும் தூக்கி தன்னோடு கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து உயிர் இழக்கிறார். 

ஊரார் கிணற்றை இறைத்து உடலை மீட்கிறார்கள். கதையின் கடைசி வரியில்,  ஒரு உடல்தான்உள்ளிருந்தது என முடிக்கிறார் எழுத்தாளர. அந்த ஒருவரி பல  வாசிப்பு சாத்தியங்களை வாசகன் முன் விரித்து வைக்கிறது.

அது வரை கதையில் நிகழ்ந்தவை எது உண்மையில்நிகழ்ந்தது எது அவர் மனப்பிறழ்வால் கற்பனைசெய்து கொண்டது என்பதை நம் ஊகத்திற்கு விட்டுவிட்டார். இந்த ஒரு கதை என் மனதில் பல கதைகளாகவிரிந்தது. எனக்கு அபாரமான வாசிப்பனுபவத்தைகொடுத்த கதை இது. 

மற்றொரு கதை மனநிழல். ஒரு இளைஞனைமையப்படுத்திய கதைதான் எனினும் இதைஎழுத்தாளர் காட்டியிருக்கும் தாயின்சித்தரிப்புக்காகவே எனக்கு நிரம்ப பிடித்தது. சிங்களராணுவ வேட்டையாடலில் கதை நாயகனின்நெருங்கிய நண்பன் இறந்து போகிறான். ரகசியபோலிஸ் கண்காணிக்கும் என்பதற்காக அந்தநண்பனின் தாய் அவனை அவன் சாவிற்கு போகவேண்டாம் என அறிவுறுத்துகிறாள். கதை பின்நாயகனின் போவதா வேண்டாமா எனும் மனஊசலாட்டங்களுக்குள் செல்கிறது. எனக்கு இந்தகதையில் முக்கியமாக பட்டது கதையில்சித்தரிக்கப்பட்டுள்ள தாய்,  நானும் நீங்களும்நன்கறிந்த தாய், அவள் மகனை மிஞ்சிய எதுவும்அவளுக்கு உலகில் இல்லை, நாடு, போர், லட்சியங்கள்எதுவும் அவள் மகனின் வாழ்வை விட  அவளுக்குபொருட்டல்ல. 

இது யதார்த்தம். இந்த யதார்த்தம் தமிழ் நாட்டில்இருந்து எழுதுபவர்களுக்கு ஒரு பெரிய விஷயமல்ல. ஆனால் போரின் அத்தனை குரூரங்களுக்கு மத்தியில்வாழ்ந்தவர்களுக்கு இது அவ்வளவு சுலபம் அல்லஎனவே நான் நினைக்கிறேன்.  புனைவிலாவது ஒருலட்சிய தாயை காட்டி விடும் ஆவல்தான் மோலோங்கிநிற்கும். 

ஒரு சராசரி தமிழ் தாய் எப்படி நடந்து கொள்வாளோஅப்படித்தான் இவள் நடந்து கொள்கிறாள். இப்புத்தகம்முழுக்கவே நம்மால் இந்த சம நிலையை காணமுடிகிறது. சிங்களன் என்பதாலேயே ஒருகதாப்பாத்திரம் வில்லனாக்க படவில்லை. மனிதர்கள்அவரவர் குறை நிறைகளோடுசித்தரிக்கப்பட்டுள்ளனர். உண்மையின் ஒளியில்இருந்தே ஒரு நல்ல இலக்கியம் எழ முடியும், அவ்வொளியை இத்தொகுப்பு முழுதும் நீங்கள்காணலாம்.

இந்த தொகுப்பின் மிக முக்கியமானபங்களிப்பென்பது யுத்தம் தாண்டிய ஒரு சராசரி ஈழதமிழர் வாழ்வை இயல்பாக , உண்மையாக பதிவுசெய்திருப்பதுதான். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது நான் படித்து கொண்டிருந்த பள்ளிஇலங்கையில் இருந்து வந்திருந்த அகதிகளைதற்காலிகமாக தங்க வைப்பதற்காக ஒரு மாதம்மூடப்பட்டது. ஈழம் என்ற சொல்லோடு முதல் அறிமுகம்எனக்கு அப்பொழுதுதான். அன்றிலிருந்து இன்றுவரை போரும், ஈழ தமிழரின் அவதியும், புலிகள் பற்றியசெய்திகளுமாகத்தான்  எனக்கு ஈழம் பரிச்சயம். துண்டு துண்டாக ,  செய்தி பரிமாறும் ஊடகங்களின் , மனிதர்களின் விறுப்பு வெறுப்பு சார்ந்த ஒரு வண்ணம்பூசப்பட்ட  சித்திரம்தான் என் மனதில் இருந்தது. இத்தொகுப்பு அதை மாற்றி உள்ளது. ஈழ வாழ்வின்ஒரு உண்மையான சித்திரத்தை இக்கதைகளைகொண்டு என்னால் உருவாக்கி கொள்ள முடிகிறது. 

ஈழத்தின் கொடுங்கோடைகளை மட்டுமே கேட்டு , படித்து வந்திருக்கும் என்னை போன்றவர்களுக்கு  ஈழத்தில் இன்று எழும் வசந்தத்தின் பதிவாகஇத்தொகுப்பை நான் பார்க்கிறேன். 

என் இனிய இளவல் அனோஜனுக்கு என் வாழ்த்துகள். பூக்கும் , தளிர்க்கும் பொங்கி பெருகும் ஈழ வாழ்வைஅவர் எழுத்தில் மீண்டும் மீண்டும் பதிவு செய்யவேண்டும்  என விரும்புகிறேன். 

பச்சை நரம்பு இங்கு விற்பனைக்கு கிடைக்கும், வாங்கிவாசியுங்கள், வாசித்து விட்டு உங்கள் கருத்தைஅனோஜனிடம் பகிருங்கள். 

நன்றி. வணக்கம். “

–subahm–

 Dhanaraj speaking

நரகத்தின் ஓவியத்தில் பெரிய கிறிஸ்தவ தலைவர்! (Post No.6542)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 13 June 2019


British Summer Time uploaded in London –  16-
42

Post No. 6542

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

Supernatural Powers in Purana! (Post No.6541)

Compiled by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 13 June 2019


British Summer Time uploaded in London –  11–07 am

Post No. 6541

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 13619 (Post No.6540)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 13 June 2019


British Summer Time uploaded in London –  10-40 am

Post No. 6540

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

குறுக்கே

1. — (6 எழுத்துக்கள்)  — வட இந்தியாவையும், தென் இந்தியாவையும் பிரிக்கும் தொடர்

4. –(3) — மங்களம் – ஸத்யம்…………….. சுந்தரம்

6.—(3) – காங்கிரஸ்காரர்கள் அணிந்தது

8.– (5) — சேவல்; முருகனின் கொடியில் உண்டு

கீழே

1.– (5 எழுத்துக்கள்) — காசி நகரிலிருந்து அருள் புரியும் தேவி

2. (5) — திரை கடலோடி —- தேடு

3.– (4)  — யோக சாத்திரப்படி, உடலில் உள்ள 6 ஆதாரங்களில் கீழே இருப்பது

5. (3)  — தானிய வகை, சாமை வகை, கேழ் …..

6. (3) — வரம்பு, கரை, இரவு

7. தெறித்து விழும் தண்ணீர்த் துளிகள்/ கீழிருந்து மேலே செல்க.

–subham–