உதவிக் குறிப்புகள்! – 1 (Post No.7365)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 21 December 2019

Time in London – 8-20 am

Post No. 7365

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ச.நாகராஜன்

கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக நான் படித்து வந்த பல நல்ல புத்தகங்களில் முக்கிய பகுதிகளை ஒரு நோட்புக்கில் தனியே எழுதி வைத்துக் கொள்வது என் பழக்கம்.

நூல்கள் ஒரு புறம் என்னுடன் இன்றும் இருக்கின்றன; என்றாலும் இந்தக் குறிப்புகளைப் படித்தால் நூலை முழுவதும் மீண்டும் படித்தது போல இருக்கும்; அத்துடன் இந்த நோட்டுப்புத்தகங்கள் என் கைவசம் இருப்பதால்.

தேவையான  சமையத்தில் தேவையான பகுதிகளைப் படிப்பதும் சுலபமாக இருந்தது – அன்பர்களுக்கு இதை வழங்குகிறேன்.

குறிப்பு எண் 1:

From the book : How I raised myself from Failure to Success

By Frank Bettger

P 267

Here is my list and the order in which I used them:

  1. Enthusiasm
  2. Order : Self Organisation
  3. Think in terms of other’s interests
  4. Questions
  5. Key Issues
  6. Silence : Listen
  7. Sincerity : deserve confidence
  8. Knowledge of my business
  9. Appreciation and praise
  10. Smile : Happiness
  11. Remember Names and Faces
  12. Service and Prospecting
  13. Closing the sale : Action

எனது குறிப்பு : ஃப்ராங்க் பெட்கர் உலகின் சாதனை படைத்த நம்பர் ஒன் சேல்ஸ்மேன் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த 13 அடிப்படை பட்டியலை வைத்துக் கொண்டு பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் செய்தது போல அவர் வாரம் ஒன்றைத் தினமும் கவனக்குவிப்பு செய்து அதை வளர்த்துக் கொண்டு பயன் பெற்றார் ஃப்ராங்க் பெட்கர்.

வருடத்திற்கு 52 வாரங்களில் நான்கு முறை இந்தப் பட்டியலைக் கடைப்பிடித்தால் நல்ல பலன்களைப் பெறலாம் என்பது அவரது அனுபவம்.

குறிப்பு எண் 2 :

From the book : How I raised myself from Failure to Success

By Frank Bettger

P 269

Franklin’s Thirteen Subjects

(Just as he wrote them down and the order in which he used them:

  1. Temperance : Eat not to dullness. Drink not to elevation.
  2. Silence : Speak not but what may benefit others or yourself; avoid trifling conversation.
  3. Order : Let all your things have their places; let each part of your business have its time.
  4. Resolution : Resolve to perform what you ought, perform without fail what you resolve.
  5. Frugality : Make no expense but to do good to others or yourself ; i.e., waste nothing.
  6. Industry : Lose no time; be always employed in something useful: cut off all unnecessary actions.
  7. Sincerety : Use no hurtful deceit; think innocently and justly, and, if you speak, speak accordingly.
  8. Justice : Wrong none by doing injuries or omitting the benefits that are your duty.
  9. Moderation : Avoid extremes; forbear resenting injuries so much as you think they deserve.
  10. Cleanliness : Tolerate no uncleanliness in body, clothes or habitation.
  11. Tranquility : Be not disturbed at trifles; or at accidents common or unavoidable.
  12. Chastify : Rarely use venery but for health or offspring; never to dullness, weakness or the injury of your own or another’s peace or reputation.
  13. Humility : Imitate Jesus and Socrates.

எனது குறிப்பு : ஃப்ராங்க் பெட்கருக்கு உத்வேகம் ஊட்டியவர் பெஞ்சமின் ஃப்ராங்ளின். அவர் கடைப்பிடித்த மேலே கூறிய 13 குணாதிசயங்களை பெட்கர் தனக்குத் தேவையானது போலச் சற்று மாற்றிக் கொண்டார்.

***

QUEENS OF ORISSA AND KASHMIR (Post No.7364)

WRITTEN BY LONDON SWAMINATHAN

POST NO.7364

DATE – 20-12-2019

TIME UPLOADED IN LONDON – 18-39

கை எழுத்தும் தலை எழுத்தும் (Post No.7363)

கை எழுத்தும் தலை எழுத்தும் (Post No.7363)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 20 December 2019

Time in London – 17-39

Post No. 7363

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ஒருவருடைய கையெழு த்து அவருடைய

குணாதிசயங்களைக் காட்டும் என்று கருதி

அவருடைய  எதிர்காலத்தை நிர்ணயிப்பது, அதாவது வேலை தருவது,

பதவி உயர்வு தருவது அல்லது தர மறுப்பது இவை எல்லாம் அறிவியல் ரீதியிலானது அல்ல என்று பல விஞ்ஞான சஞ்சிகைகள் எழுதியுள்ளன .ஆகையால் கையெழுத்து இயல் (Graphology)  பற்றி  உறுதியாக ஒன்றும் சொல்வதற்கில்லை. இத்துடன் 1992ல் நான் தினமணியில் எழுதிய கட்டுரையை இணைத்துள்ளேன் .

தலைப்பு- தலை எழுத்தை நிர்ணயிக்கும் கையெழுத்து

பூர்ணவர்மனின் 4 சுவையான கல்வெட்டுகள் (Post No.7362)

பூர்ணவர்மனின் 4 சுவையான கல்வெட்டுகள் (Post No.7362)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 20 December 2019

Time in London – 7-37AM

Post No. 7362

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

இந்தோனேஷியாவின் ஜாவா தீவிலுள்ள பூர்ணவர்மனின் 4 கல்வெட்டுகள்

சுவையான தகவல்களைத் தருகின்றன. அவை   1500  ஆண்டுகளுக்கு முந்தையவை .

போர்னியோ தீவில் அடர்ந்த காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மூலவர்மன் கல்வெட்டு போல, இவையும் கோ  தானம் பற்றிப் பேசுகின்றன.பூர்ணவர்மன் 1000 பசுக்களை பிராமணர்களுக்குத் தானம் கொடுத்ததை  ஒரு கல்வெட்டு கூறுகிறது. இந்த தகவலை சீன யாத்ரிகர் பாஹியானும் உறுதி செய்கிறார். அவர் இந்தியாவிலிருந்து சீனாவுக்குத் திரும்பி  செல்லும் முன் ஜாவாவில் ஐந்து மாதங்களுக்குத் தங்கியிருந்தார் அவர் கி.பி.415ல் ஜாவாவில் உள்ள நிலவரத்தைப் பின் வருமாறு எழுதுகிறார் .

“இங்கு தவறான பல மதங்களும் இந்து மதமும் இருக்கின்றன. ஆனால் புத்த மதம் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதுவும் இல்லை . ஆயினும் இதற்கு 100 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்த ‘புத்த குருமார்களின் சரித்திரம்’ என்ற  சீன புஸ்தகம் கி.பி 519ல் இந்திய அரசனான குணவர்மன் என்ற அரசன் புத்த மதத்தைத் தழுவி இலங்கை சீனா ஜாவா வரை சென்று வந்ததாகக் கூறுகிறது. அவன் ஜாவாவில் ராஜாவின் தாயாரை புத்தமதத்துக்கு மாற்றியதாகவும் அவள் மகனையும் மதம் மாற்றியதாகவும் சீனப் புஸ்தகம் சொல்கிறது. அந்த நேரத்தில் ஜாவாவை எதிரிகள் தாக்கியதாகவும் எதிரிகளைக் கொல்லுவது புத்த தர்மத்துக்கு விரோதமானதா என்று குணவர்மனைக் கேட்டபோது அவர் கொள்ளையர்களை ஒழிப்பது தர்மமே என்று சொன்னவுடன் ஜாவா மன்னன் எதிரிகளை அழி த்ததாகவும் சீன புஸ்தகம் சொல்கிறது. பின்னர் ஜாவா தீவில் புத்தமதம் படிப்படியாக வளர்ந்தது.

               ஜாவாவில்  சம்ஸ்கிருதம்

ஜாவாவில் முஸ்லீம் மதம் பரவும் வரை இருந்த மொழியை பழைய ஜாவானிய மொழி என்று அழைப்பர்.

இது சம்ஸ்கிருதமும் சுதேசி மொழியும் கலந்த கலப்பட மொழி.இந்த  மொழியில் உள்ள கவிதைகள் சம்ஸ்கிருத யாப்பிலக்கணத்தைப் பின்பற்றுகின்றன . மேலும் சம்ஸ்கிருதக் கவிதைகளையும் மேற்கோள் காட்டுகின்றன . அதிலுள்ள மிகப்பழைய நூல் அமரமாலா . இது உலகின் முதல் நிகண்டு நூலான அமரகோசத்தின் ஜாவானிய மொழிபெயர்ப்பு ஆகும் . இதே காலத்தில் எழுந்ததுதான்  ஜாவானிய

ராமாயணம்.கிட்டத்தட்ட வால்மீகி ராமாயணத்தைத் தழுவிய நூல். ஆனால் இராவணன் கொல்லப்பட்ட  பின்னர் ராமனும் சீதையும் ஒன்று சேர்ந்ததுடன் கதை முடிகிறது. அடுத்தபடியாக மகாபாரத உரைநடை நூல் கிடைத்துள்ளது . இது சுருக்கமான மகாபாரதம்.

                               இவை அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவை. இதற்குப் பின்னர் அர்ஜுனன் விவாஹ, கிருஷ்ணாயண, சுமனசாந்தக ஆகிய நுல்களைக் காணலாம். கடைசி நூல், ஒரு மாலை(garland) காரணமாக இந்துமதி இறந்த விஷயத்தைத் தழுவியது. இது காளிதாசன் காவியத்தில் உள்ள கதை

மிகவும் குறிப்பிடத்தக்க நூல் ‘பாரத யுத்த’ என்பதாகும். இது கிரேக்க காவியங்களுக்கு இணையானது என்பது அறிஞர்களின் துணிபு . இதற்குப் பின்னர் பஞ்ச தந்திரம், ஹிதோபதேசம், நீதி சாஸ்திரம் என எல்லா சம்ஸ்கிருத நூல்களும் ஜாவானிய மொழியில் ஆக்கப்பட்டுள்ளன.

ஒரு பெரிய வித்தியாசத்தைக் குறிப்பிடுவது அவசியமாகும். கம்போடியா, வியட்னாம் ஆகிய இரண்டு நாடுகளில் நேரடியாக சம்ஸ்கிருத இலக்கியமும், கல்வெட்டுகளும் தோன்றின. ஆனால் சுதேசி மொழி இலக்கியம் கிடையாது. ஜாவாவில் சம்ஸ்கிருதத்தை வீட சுதேசி மொழி இலக்கியமே அதிகம்.

இது ஒரு புறமிருக்க இமயம் முதல் இந்தோனேஷியாவின் கடைக்கோடி வரை உலகிற்கு இந்துமதம் அளித்த மிகப்பெரிய கொடை  பிராமி எழுத்தாகும். தெகிழக்காசிய நாடுகள் அனைத்தும், இந்திய மொழிகள் அனைத்தும், பிராமியை பிடித்துக்கொண்டன. 2000 ஆண்டுகளில் அவை தேவைக்கேற்ப மாற்றப்பட்டன. இந்துமத அறிஞர்கள் கொடுத்த இந்தக் கொடையினால் அவர்கள் வெகு வேகமாக நாகரீகம் அடைந்தனர்.

Tags — பூர்ணவர்மன் , ஜாவானிய மொழி, பிராமி எழுத்து, சம்ஸ்கிருதம்

—-subham—

Yupa Inscription

64 யோகினீகள் (Post No.7361)

yogini temple in Mitaoli, M.P..

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 20 December 2019

Time in London – 6-59 AM

Post No. 7361

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ச.நாகராஜன்

லலிதா சஹஸ்ரநாமம் லலிதாம்பிகையைப் பற்றிக் கூறுகையில் 64 கலைகளாக இருப்பவள் எனக் கூறுகிறது.

சதுஷ் ஷஷ்டி கலாமயீ

அறுபத்துநாலு கலைகளின் ஸ்வரூபமாக இருப்பவள்

236வது நாமம் இது.

64 கலைகளுக்குக் 64 யோகினிகள் உண்டு.

இந்த 64 கலைகள் எவைஎவை என்பதைப் பற்றி ஏராளமான தகவல்கள் உள்ளன. (அதை தனிக் கட்டுரையில் பார்ப்போம்)

இதற்கு அடுத்த நாமம் இது:

மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ கண ஸேவிதா

மஹா சதுஷ் ஷஷ்டி கோடி யோகினீ கணங்களால் ஸேவிக்கப்பட்டவள்.

லலிதாம்பிகையின் ஸ்ரீ சக்ரத்தில் முதலாவது ஆவரணமாகிய த்ரைலோக்ய மோஹன சக்ரத்தில் ப்ராம்ஹீ முதலான எட்டு மாத்ருகா சக்திகள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய அம்சமாக அக்ஷோப்யா முதலிய எட்டு யோகினீகள் உண்டு. ஆக இவர்கள் அறுபத்திநாலு சக்திகள் இருக்கிறார்கள். திரும்பவும் இந்த அறுபத்திநாலு சக்திகள் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய அம்சமாக கோடி யோகினீகள்  இருக்கிறார்கள். ஆக அறுபத்துநாலு கோடி யோகினீகள் என்றாகிறது. இப்படிப்பட்ட கணக்குடையவும் மஹத்தாயும் இருக்கும் யோகினீகளால் ஸேவிக்கப்பட்டவள் என்று இந்த நாமத்திற்கு அர்த்தம்.

தந்த்ர ராஜம் என்ற நூலில் இன்னும் ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது. அதன்படி த்ரைலோக்ய மோஹனசக்ரத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டது போலவே இதர எட்டு சக்ரங்களிலும் இருப்பதாகவும் ஆக யோகினீகளின் கணக்கு ஒன்பது தடவை அறுபத்துநாலு கோடி – அதாவது ஐந்நூற்றி எழுபத்தாறு கோடி – என்று ஆகிறது. இதைத் தான் மஹத் என்ற பதம் குறிப்பிடுகிறது.

லலிதா சக்ர நவகே ப்ரத்யேகம் சக்த்ய: ப்ரியே |

சதுஷ் ஷஷ்டி மிதா: கோட்ய: |

என்று குறிப்பிடப்படுகிறது.

 64 கோடி யோகினீகளில் முக்கியமானவர்கள் 64 யோகினிகள் என்பதை அறிகிறோம்.

யோகினிகளுக்குப் பாரத நாடெங்கும் கோவில்கள் உண்டு என்றாலும் சிறப்பாக அமைந்துள்ள கோவில்கள் ஒரிஸா மாநிலத்தில் உள்ள இரண்டு கோவில்களும் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு கோவில்களும் ஆகும். (இவை பற்றித் தனிக் கட்டுரைகளில் பார்ப்போம்)

64 யோகினிகள் யார் யார் என்பதை அறிய ஆர்வமுள்ள சக்தி பக்தர்கள் ஏராளம். அவர்களுக்காக இந்தப் பட்டியல் இங்கு அளிக்கப்படுகிறது.

  1. பஹுரூபா (Bahurupa)
  2. தாரா (Tara)
  3. நர்மதா (Narmada)
  4. யமுனா (Yamuna)
  5. சாந்தி (Shanti)
  6. வருணி (Varuni)
  7. க்ஷேமாங்கரி (Kshemankari
  8. ஐந்திரி (Aindri)
  9. வாராஹி (Varahi)
  10. ரண்வீரா (Ranveera)
  11. வானர-முகி (Vanara-Mukhi)
  12. வைஷ்ணவி (Vaishnavi)
  13.  காலராத்ரி (Kalaratri)
  14. வைத்யரூபா (Vaidyaroopa)
  15. சர்ச்சிகா (Charchika)
  16. பேதலி (Betali)
  17. சின்னமஸ்திகா (Vhinnamastika)
  18. வ்ரிஷபாஹனா (Vrishabahana)
  19. ஜ்வாலா காமினி (Jwala Kamini)

  20.கடவரா (Ghatavara)

  • கரகாலி (Karakali)

22.ஸரஸ்வதி (Saraswati)

   23. பிரூபா (Birupa)

24.காவேரி      (Kauveri)

25. பஹாலுகா (Bhaluka)

26. நரசிம்ஹி (Narasimhi)

27. பீரஜா (Biraja)

28. விகடனா (Vikatanna)

29.மஹாலக்ஷ்மி (Mahalakshmi)

30.கௌமாரி (Kaumari)

31.மஹாமாயா (Maha Maya)

32.ரதி (Rati)

33.கர்கரி (Karkari)

34. ஸர்பஸ்யா (Sarpashya)

35. யக்ஷிணி (Yakshini)

36. விநாயகி (Vinayaki)

37. விந்த்யா பாலினி (Vindya Balini)

38. வீர குமாரி (Veera Kumari)

39. மஹேஸ்வரி (Maheshwari)

40. அம்பிகா (Ambika)

41.காமியானி (Kamiyani)

42.கடபாரி (Gharabari)

43. ஸ்துதி (Stutee)

44. காளி (Kali)

45. உமா (Uma)

46. நாராயணி (Narayani)

47. சமுத்ரா (Samudraa)

48.ப்ராஹ்மணி (Brahmani)

49.ஜ்வாலா முகி (Jwala Mukhi)

50. ஆக்னேயி (Agneyei)

51. அதிதி (Aditi)

52. சந்த்ரகாந்தி (Chadrakanti)

53.வாயுபேகா (Vayubega)

54.சாமுண்டா (Chamunda)

55.முரதி (Murati)

56. கங்கா (Ganga)

57.தூமவதி (Dhumavati)

58. காந்தாரி (Gandhari)

59. சர்வ மங்களா (Sarva Mangala)

60. அஜிதா (Ajita)

61. சூர்ய புத்ரி (Surya Putri)

62.வாயு வீணா (Vayu Veena)

63. அகோரா (Aghora)

64. பத்ரகாளி  (Bhadrakali)

இன்னும் யோகினீகளைப் பற்றிய ஏராளமான சுவையான கருத்துக்களை புராணங்கள், தந்திர சாஸ்திரங்கள் தருகின்றன.

அவற்றைப் பின்னர் பார்ப்போம்!

***

கொலைகார இங்கிலாந்து மஹாராஜா (Post No.7359)

Written by London Swaminathan

Date – 19-12-19

Time uploaded in London -20-59

Contact swami_48@yahoo.com

Post No.7359

பிரிட்டனில் மிகவும் நகைப்புக்கும் வியப்புக்கும் உரிய

மன்னன் எட்டாவது ஹென்றி ஆவார். ஆறு பெண்களை

கல்யாணம் செய்து அவர்களில் இரண்டு பேரை தூக்  கில்

தொங்கவிட்டவர். இது எல்லாம் 500 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது.

மஹாராணிகள் தூக்கில்  தொங்குவதை பார்த்த அரவாரித்த

கூ ட்டம் பெரும் கூட்டம் என்று வரலாற்று ஆராய்சசியாளர்

எழுதிவைத்துள்ளனர் .

நான் 1992ல் தினமணியில் எழுதிய கட்டுரையை

இத்துடன் இணைத்துள்ளேன்.

—subham–

TAMIL TEMPLE BUILDER KUNDAVAI (POST NO.7360)

WRITTEN BY LONDON SWAMINATHAN

DATE 19-12-19

TIME IN LONDON -8-20 AM

Vennikuyatti   x         Tue, 19 Dec, 2019    Vennikuyatti
VENNIKUYATHI was a potter woman of Venni, fifteen miles to the east of Thanjavur. She was an eye witness to the bloody battle that took place near her village. She admires the valour of Karikal Chola, the victor, but does not fail to express her sympathy for the vanquished Chera king who expiated his defeat by committing suicide :

She sings,
“O descendant of that warrior who, sailing on the wide ocean, compelled the winds to fill the sails of his ship!
O Karikal Valava, Lord of the mighty elephants , by this victory you have displayed the greatness of your valour. Is not your enemy even nobler than you- he who, after obtaining great celebrity in the world, feels now the shame of a wound in his back and fasts unto death on the plains of Venni, watered by the freshes of Kaveri ?”

TAMIL WOMEN WHO BUILT TEMPLES

RANGAPATAAKAA
Ranga pataka was a great Pallava Queen. Pallavas did a revolutionary change in constructing temples. For the first time they constructed cave temples by excavatinng rocks. The. They took it to another level by constructing tall temple towers with rocks. Then the cholas and Pandya followed this style. Kaiasa natha temple in Kanchipuram was one of the stone marvels of the seventh century. Rangapataakaa, Queen of Pallava king Rajasimha, took a notable share in this task according to a Sanskrit inscription in the temple.


SEMBIAN MAHAADEVI
The Chola Kings constructed the temples for Lord Shiva along the banks of river Kaveri. Gandaraditya, who ruled in the first half of the tenth century, was a saintly ruler, and his devotional hymns collected in the Tiruvisaippa are included in the Shaiva canonical literature. His Queen SEMBIAN Mahadevi was a Malwa princess. Widowed early in life, she scorned all sensual pleasures, developed a devotional frame of mind and spent her wealth in renovating or building temples in different places.
Countless are the bronze images representing different aspects of Lord Shiva that she consecrated in the temples. She made a gift of lands to the temples, as also jewels of every description and of enormous value and hundreds of gold, silver, copper vessels other endowment s relate to feeding of Brahmins employed to chant the Vedas in the temples, and to the maintenance of musicians and other artists.
Mahadevi had grown old when Rajaraja came to the throne. She then enjoyed a privileged position as the emperors venerable grand aunt. Rajaraja honoured her memory by building a public hall at Tirumukkudal named after her.

KUNDAVAI

Another great temple builder among Chola queens was Kuntavai, the elder sister of Rajaraja. Her father Sundara CholaParanaka was a very just and upright king. Her mother Vanavan Mahadevi was a Malayaman princess who did Sati at her husbands death. Kundavai married Vandyadeva, Chief of the country near rahmadesam. At Rajaraja puram now called Dadapuram she built temples for Vishnu, Shiva and jaina
She made costly presents to all the temples.
In Tirumalai, a Jain centre in South Arcot district, she also consecrated a shrine to one of the Tirthankaras. She founded a free hospital at Thanjavur and set apart extensive lands for its maintenance

Kundavai spent the last years of her life with her nephew Rajendran chola in the palace at Palaiyarai wheere she died in 1019 CE. She was the inspiration behind Rajaraja and Rajendra chola who built magnificent temples in Thanjavur and Gangako nda chola puram


–subham—    
  

உலக மக்களின் வாழ்க்கையையே மாற்றப் போகும் ஹோலோ லென்ஸ்!|Post.7358

WRITTEN BY S NAGARAJAN

DATE- 19-12-19

TIME IN LONDON -8-06 AM

POST NO.7358

16-12-2019 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு இருபத்தி இரண்டாம் கட்டுரை அத்தியாயம் 438

உலக மக்களின் வாழ்க்கையையே மாற்றப் போகும் ஹோலோ லென்ஸ்!|

ச.நாகராஜன்

வாழ்க்கையை ஒரு புதிய பரிமாணத்தில் இயங்க வைத்தது. அடுத்து மொபைல் போனில் உலகமே அடங்கி விட்டது. தொலைதூரத்தில் இருப்போரிடம் கண நேரத்தில் வீடியோ மூலமாக நேரில் பார்த்துப் பேசுவது, பல நூறு ‘ஆப்ஸ்’ வாயிலாக ஏராளமான செய்திகளையும் படங்களையும் பரிமாறிக் கொள்வது என்பதெல்லாம் சாத்தியமானது.

ஜிபிஎஸ் மூலமாக எந்த இடத்திற்கும் யாருடைய உதவியும் இன்றி செல்வது எளிதானது.

இப்படிப்பட்ட சாதனங்களின் வரிசையில் அடுத்த மாற்றத்தை உலகில் ஏற்படுத்தப் போவது ஹோலோ லென்ஸ்!

மைக்ரோ சாஃப்ட் தரும் விந்தைகளில் இதுவும் ஒன்று!

இதைக் கண்டுபிடித்திருப்பவர் அலெக்ஸ் கிப்மேன் (Alex Kipman) என்னும் விஞ்ஞானி!

இது என்ன செய்யும்?  உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்வோம்.

கார் எஞ்சின் ஒன்று பழுதாகி விட்டது. உங்களுக்கு எஞ்ஜினைப் பற்றி ஒன்றுமே தெரியாது. என்ன செய்வது? கவலை வேண்டாம். ஹோலோ லென்ஸ் 2  உங்களின் உதவிக்கு வரும். இதை ஹெல்மெட் போல தலையில் மாட்டிக் கொள்ள வேண்டியது தான். அதில் மோட்டார்சைக்கிள் ஹெல்மெட்டில் உள்ளது போல ஒரு முகத்திரை இருக்கும். அதில் பல படங்கள் காட்சிக்கு வரும்.

நீல நிற அம்புக்குறி ஒன்று டூல்ஸ் இருக்கும் மேஜையைக் காண்பித்து ஒரு கருவியை சுட்டிக் காட்டும். அது காட்டும் டார்க் ரெஞ்சை எடுத்தவுடன் இன்னொரு அம்புக் குறி எந்த சைஸ் போல்டை எடுக்க வேண்டும் என்று போல்ட் நட்டுகள் இருக்கும் பெட்டியைக் காட்டும். அடுத்து இன்னொரு அம்புக் குறி எஞ்ஜினில் அடுத்தாற்போல என்ன செய்யவேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டும். அவ்வளவு தான், ஹோலோ லென்ஸ் சொன்னபடியே செய்தால் ரிப்பேர் முடிந்து விடும்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு. அதை அப்படியே காட்டிக் கொண்டே வரும். மாஜிக் உலகம் – மாயாஜால உலகத்தில் இருப்பது போலத் தான் இனி மக்கள் வாழ்வர்.

சமையலறைக்கு ஒரு ஹோலோ லென்ஸ், பாடம் படிக்க ஒரு ஹோலோ லென்ஸ், இப்படி நமது கற்பனையைத் தட்டி விட்டால் உலகில் தீர்க்க முடியாத பிரச்சினையே இருக்காது என்ற அளவுக்குப் போய் விடுவோம்.

மக்களின் வாழ்க்கை முறை முற்றிலுமாக மாறப் போகிறது. தொழில் முறைகள், தொழில் வித்தைகள் அனைவருக்கும் பொது!

இதைக் கண்டுபிடித்துள்ள அலெக்ஸ் கிப்மேன் மைக்ரோ சாஃப்டில் வேலை பார்க்கும் ஒரு எஞ்ஜினியர். “ இது போன்ற சாதனங்கள் தாம் உலகை இனி ஆளப் போகின்றன” என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் அவர்.

அறிவியல் புனைகதைக் காட்சிகள் எனப்படும் ஸயி-ஃபி (ஸயிண்டிபிக் ஃபிக்‌ஷன் விஷன்) இனி அனைவருக்கும் பொதுவாக ஆகி விடும். கதை படிப்பது போலத் தான் தோன்றுகிறது. என்றாலும் இது வாழ்க்கை முறையின் நிஜமாக ஆகி விட்டது!

கிப்மேன் பிரேஜிலில் வளர்ந்தவர். 2001ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்டில் வேலைக்குச் சேர்ந்தவர் கம்ப்யூட்டர் மேஜிக்கில் மன்னனாக ஆகி விட்டார் இன்று!

ஹோலோ லென்ஸ் 1 என்ற மாடலை அமைத்த அவர்  2016இல் அதை சந்தையில் அறிமுகப் படுத்தினார்.

முதலில் அனைவரும் விளையாடக் கூடிய ஒரு விளையாட்டை அவர் அறிமுகப்படுத்தினார். 3- D கேமரா பொருத்தப்பட்ட ஒரு சாதனத்தை கம்ப்யூட்டருடன் பொருத்த வேண்டியது தான். அமோகமாக விளையாடலாம். இந்த சாதனம் விற்பனையில் 350 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தொட்டு விட்டது. இதனால் உற்சாகம் கொண்ட அவர் புதுப்புது சாதனங்களை அறிமுகப்படுத்த விரும்பி, இப்போது ஹோலோ லென்ஸ் – 2 மாடலை சந்தையில் விற்பனைக்கு உலவ விட்டிருக்கிறார்.

“இனி நமது உலகில் முடியாதது என்பதே இல்லை” என்று கூறிச் சிரிக்கும் கிப்மேன், “சர்ஜன்கள் ஆபரேஷனுக்கு இதை உபயோகிப்பதையும் பைலட்டுகள் விமானத்தை ஓட்ட இதை மாட்டிக் கொள்வதையும் நான் பார்க்கிறேன்” என்கிறார்.

இதை மாட்டிக் கொள்ளும் போது சற்று கனமாக இருக்கிறது என்று பயனாளிகள் சொல்வதைக் கேட்ட அவர் அதை இன்னும் இலேசாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கடைசியில் இனி கம்ப்யூட்டர், போன் உள்ளிட்ட அனைத்து சாதனங்களும் கூடிய விரைவில் அவுட்!

இனி ஆளுக்கு ஒரு லென்ஸை முகத்தில் மாட்டிக் கொள்ள வேண்டியது தான்!

நாமே ஹோலோ லென்ஸ் உலகம் இனிமேல் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்!

கிப்மேனின் குழுவினர் ஒரு வினாடிக்கு 12000 முறை அதிர்வு கொண்ட (அடேயப்பா, வினாடிக்கு 12000 அதிர்வுகளா!!!) சிறு கண்ணாடிகளைக் கண்டு பிடித்துள்ளனர். துல்லியமாக அனைத்தையும் தரும் இவை “மைக்ரான் ப்ரஸிஷன்” கொண்டவை. அதி அற்புதமான துல்லியத்துடன் இயங்குபவை எனலாம். இந்த ஹோலோ லென்ஸ் அனைவருக்கும் வாழ்நாள் துணைவன் ஆக இருக்கிறது!

நல்ல கண்பார்வைக்காக ஒரு கண்ணாடியை அணிந்து கொண்டு சுலபமாக இயங்குவது போல நாள் முழுவதும் இதை அணியும் வண்ணம் இதை மேற்கொண்டு இலகுவாக ஆக்க வேண்டியது ஒன்று தான் பாக்கி என்கிறார் கிப்மேன்!

புதிய லென்ஸ் உலகத்தை லென்ஸ் அணிந்து கொண்டு வரவேற்போம்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

உலகம் கண்ட மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (தோற்றம்14-3-1879 மறைவு 18-4-1955) தனது வாழ்நாள் காலத்தில் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், சகாக்களுக்கும், முன்பின் தெரியாத குழந்தையிலிருது பெரியவர்கள் வரைக்கும் ஏராளமான பேருக்கு அருமையான கடிதங்களை எழுதியுள்ளார். இவையெல்லாம் காலமெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள். உலகின் மிகப் பெரும் அறிஞரின் மூளை எப்படியெல்லாம் உலகினருக்குத் தன் ஆற்றலை வழங்கியுள்ளது என்பதற்கான அதிகாரபூர்வமான ஆவணங்கள் இவை தாம். இந்தக் கடிதங்களில் உணர்ச்சி, இரக்கம், அறிவுரை, காதல் அனைத்தும் இழையோடி இருக்கின்றன. தனது மகனுக்கு எதை வேண்டுமானாலும் எப்படிக் கற்பது என்பது பற்றி ஒரு கடிதத்தில் அறிவுறுத்தி இருக்கிறார். விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்பிய ஒரு இளம் பெண் ஆனால் பெண்ணாக இருப்பதால் தயக்கமாக இருக்கிறது என்று ஐன்ஸ்டீனுக்கு எழுத அவர் அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தார் தனது பதிலின் மூலமாக. ஃப்ராய்டுக்கு கடிதம் மூலமாக வன்முறை, அமைதி, மனித இயற்கை பற்றிய தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார்.

ஆனால் அவரது மிக அருமையான கடிதங்களில் ஒன்று அவர் தன்னுடன் சிநேகம் கொண்டிருந்த பெல்ஜியம் ராணி எலிஸபத்திற்கு எழுதிய கடிதம் தான்! அவரது மனிதத் தன்மையை பிரகாசமாகக் காட்டும் கடிதம் அது. எலிஸபத் ராணி தன் கணவர் ஆல்பர்ட்டின் மரணத்தால் மிகவும் சோகமுற்றிருந்தார். அதைத் தொடர்ந்து அவரது அருமை மருமகளும் மரணமடைந்தார். ராணியால் இந்தப் பேரிடியைத் தாங்கவே முடியவில்லை. 1934ஆம் ஆண்டு அவர் ராணிக்கு எழுதிய கடிதத்தில் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் ஆறுதல் கூறி அவரைத் தேற்றினார். இந்தக் கடிதம் உலக வரலாற்றில் ஒரு பொக்கிஷமாகக் கருதப்படுகிறது.

கடவுள், இயற்கை, போர், படைப்பாற்றல், காதல், அறிவியல் முன்னேற்றம். அணு ஆயுதம் உள்ளிட்ட எந்த விஷயமானாலும் ஐன்ஸ்டீன் தெளிவுபடத் தன் கருத்துக்களை எழுதியுள்ளார்.

விஞ்ஞானியின் மனப்பான்மைக்காகவும், மனித நேய மிக்க ஒரு மாமனிதரின் எண்ணங்களுக்காகவும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கடிதங்களை அனைவரும் படிக்க வேண்டியது இன்றியமையாததாக ஆது.

****

.

16 வகை தானம் (Post No.7957)

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 18 December 2019

Time in London – 10-59 am

Post No. 7357

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

TAGS – மூல வர்மன் , கல்வெட்டு, 16 வகை தானம், தானங்கள்

–SUBHAM–

ரத்தினபுரி இலங்கை! (Post No.7356)

Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 18 December 2019
Time in London – 9-45 am
Post No. 7356
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

கோகுலம் கதிர் டிசம்பர் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
ரத்தினபுரி இலங்கை!

ச.நாகராஜன்

ஸ்வர்ண மயமான இலங்கை என இராமரால் வர்ணிக்கப்படும் இலங்கை உண்மையிலேயே இன்றும் தங்கம் போல ஜொலிக்கும் ஒரு நாடாகவே திகழ்கிறது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய ஒன்று.
இராமாயணம் மூலமாக சேதுப் பாலம் அமைக்கப்பட்டு இந்தியாவும் இலங்கையும் சேதுவால் இணைக்கப்பட்டதை அறிய முடிகிறது.

சேது பாலம் அமைக்கப்பட்டதை நாஸாவின் விண்கலம் உறுதிப் படுத்தியதைத் தொடர்ந்து அந்தப் படம் உலகளாவிய விதத்தில் பிரபலமாகியுள்ளது.
இது இராமாயண நிகழ்ச்சிகளை உறுதிப் படுத்துவதாக அமைந்துள்ளது.

1505ஆம் ஆண்டு இங்கு வந்த போர்ச்சுக்கீசியர் இதை ‘செல்லாவோ’ என அழைக்க அது மருவி சிலோன் ஆனது. 1948இல் சுதந்திரம் பெற்ற நாடு, 1972இல் அதிகாரபூர்வமாக ஸ்ரீ லங்கா என்ற பெயரைக் கொண்டது.

இலங்கையின் இன்னொரு பெயர் செரிந்திப். இதிலிருந்து தான் serendipity என்ற ஆங்கில வார்த்தை உருவானது. திடீரென்று தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படும் நவீன கண்டுபிடிப்புகளைக் குறிக்கும் வார்த்தை தான் செரிண்டிபிடி.

தமிழுக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு பிரிக்க முடியாத ஒன்று.

பாண்டிய மன்னர்களும் இலங்கை மன்னர்களும் பெண் ‘கொடுத்தும் கொண்டும்’ உறவை ஏற்படுத்திக் கொண்டதை வரலாறுகள் குறிப்பிடுகின்றன.
‘தொன்மாவிலங்கை’ என சிறுபாணாற்றுப்படையும் ‘தொல் இலங்கை’ என சிலப்பதிகாரமும் குறிப்பதால் இலங்கை சங்க காலத்திற்கும் முற்பட்ட நாடு என்பதைத் தெளிவாக அறியலாம்.

ஈழத்துப் பூதன் தேவனார் என்ற புலவரின் ஏழு பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் உள்ளன. ஈழம் என்பது இலங்கையைக் குறிக்கும் பழம் பெயர் என்பதை இதனால் அறியலாம்.

சிறிய இந்த தேசத்தை இந்து மஹா சமுத்திரத்தின் முத்து என்று சொல்கின்றனர். இந்தியாவின் வரைபடத்தின் கீழ் சிறிதாகக் கண்ணீர்த் துளி போலத் தோன்றும் இதை ‘இந்தியாவின் கண்ணீர்த் துளி’ என்றும் அழைக்கின்றனர்.

ஒளி என்ற பொருளைத்தரும் இலங்கு என்ற வார்த்தையிலிருந்து இலங்கை என்ற பெயர் வந்ததாகக் கூறுவர்.

25332 சதுர மைல் பரப்பையே கொண்டுள்ள இலங்கையில் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.

இலங்கையில் உள்ள சுற்றுலா இடங்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை. கடற்கரைகளும், வனப் பிரதேசங்களும், தேயிலைத் தோட்டம் அடர்ந்த மலைப் பகுதிகளும், பல மியூசியங்களும் உலக மக்களை வா வா என அறைகூவி அழைக்கின்றன.

கொழும்பை எடுத்துக் கொண்டால் அதன் அழகிய கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்குப் போகாமல் இருக்க முடியாது.

மலைப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மனதைக் கவர்பவை; டீயின் சுவையோ அமிர்தத்திற்கு நிகரானது. இங்குள்ள ஏலக்காயின் மணமும் சுவையும் வர்ணனைக்கு அப்பாற்பட்டவை. எகிப்தியர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு பல்லாண்டுகளுக்கு முன்பேயே இந்த ஏலக்காயின் மகிமையை உணர்ந்து இங்கிருந்து அதைக் கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.
உலகின் முதல் பெண் பிரதமரைக் கொண்ட நாடு இலங்கை. 1960 இல் சிரிமாவோ பண்டாரநாயகா இலங்கையின் பிரதம மந்திரி ஆகி இந்தப் பெருமையைப் பெற்றார்.

கேட்பதற்கு இனிய இசையைக் கொண்ட கீதம், இலங்கையின் தேசீய கீதம். அதன் கொடியோ உலகின் மிக மிகப் பழமையான கொடி. கிறிஸ்துவிற்கு முன் 162ஆம் ஆண்டில் பிறந்த சிங்கக் கொடி இன்றளவும் போற்றப்பட்டு அதன் தேசியக் கொடியாக இலங்குகிறது.

எல்லையில்லா மகிமையை இலங்கைக்குச் சேர்க்கும் புத்தரின் பல் இருக்கும் புத்த ஆலயம் கண்டியில் உள்ளது. புத்த ஆலயங்களுக்குள் செல்வோர் ஊதுபத்தி ஏற்றித் தொழுவதால் ஆலயங்கள் அனைத்துமே நறுமணத்தால் சூழப்பட்டிருக்கும்.
அனுராதபுரத்தில் காணும் மஹாபோதி மரம் உலகில் மனிதனால் நடப்பட்ட பழமையான மரம் என வரலாறு கூறுகிறது.

இலங்கையின் தெற்கே உள்ள ஆடம்ஸ் பீக் அனைத்து மதங்களும் போற்றும் ஒரு இடம். ஆதம் சுவர்க்கத்திற்குப் போகும் முன் தன் காலடியை இங்கு பதித்திருக்கிறார் எனக் கிறிஸ்தவர்கள் சொல்ல, இது புத்தரின் ஶ்ரீ பாதம் என்று புத்தர்கள் சொல்ல, சிவனின் திருப்பாதம் என ஹிந்துக்கள் சொல்கின்றனர்.
இலங்கையில் சிவன், திருமால், விநாயகர், முருகன் கோவில்கள் எனப் பல கோவில்கள் உள்ளன.
திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேச்சரம் சிவன் கோவில் பழமையான ஒன்று. திருஞானசம்பந்தர் தன் ஞானக்கண்ணால் இறைவனைத் தரிசித்து ஒரு பதிகம் பாடியருளியுள்ளார். அதுமட்டுமன்றி 51 சக்தி பீடங்களில் இது ஒன்றாகவும் கருதப்படுகிறது. தேவியின் இடுப்பு விழுந்த பகுதி இந்தத் தலம் எனக் கூறப்படுகிறது.

கேது வழிபட்ட தலமான கேதீஸ்வரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ளது. இத்தலத்தின் மீது ஞானசம்பந்தரும், சுந்தரரும் பதிகம் பாடியுள்ளனர்.

கதிர்காமம் இலங்கையின் பிரசித்தி பெற்ற முருகனின் பாதயாத்திரைத் தலம். இங்குள்ள கருவறையினுள் யாரும் புக முடியாது. திரையிட்டு மூடப்பட்டிருக்கும். அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை வேண்டிப் பாடிய பாடல்கள் தேனினும் இனிக்கும் சுவை கொண்டவை.

‘உடுக்கத் துகில் வேணும் நீள்பசி
அவிக்கக் கனபானம் வேணும் நல்
ஒளிக்குப் புனலாடை வேணும்மெய் யுறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணும் உள்
இருக்கச் சிறுநாரி வேணுமொர்
படுக்கத் தனிவீடு வேணும் இவ் வகையாவும்
கிடைத்துக் க்ருஹவாசி ஆகிய
மயக்கக் கடல் ஆடி நீடிய
கிளைக்குப் பரிபாலனாய் உயிர் அவமேபோம்
க்ருபை சித்தமு ஞான போதமு
மழைத்துத் தரவேணும்’

என்று இப்படி அருணகிரிநாதரின் திருப்புகழை மனமுருகப் பாடாதார் யாரும் இல்லை.
‘திருமகள் உலாவும் இருபுய முராரி’ என்ற திருப்புகழ்ப் பாடலும் தவறாது முருக பக்தர்களால் பாடப்படும் பிரசித்தமான பாடலாகும்.

இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் விஷயம் அங்கு 92 சதவிகித மக்கள் கல்வியறிவு படைத்தவர்கள்.
கலை உணர்வு மிக்கவரும் அரிய நூல்களை எழுதிவருமான ஆனந்த குமாரசாமி, நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் புதினங்களைப் படைத்த பிரபல எழுத்தாளர் ஆர்தர் கிளார்க், சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய ஆறுமுக நாவலர் உள்ளிட்ட ஏராளமானோர் இலங்கைக்குப் புகழ் சேர்ப்பவர்கள்.

யானை உள்ளிட்ட 123 அரிய விலங்கினங்களும், 227 வகையான பறவை இனங்களும், 178 வகையான பாம்பு போன்ற ஊர்ந்து செல்லும் உயிரினங்களும் 122 வகையான நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்களும் இங்கு உள்ளன.

இலங்கையின் தேசீய விளையாட்டு வாலிபால் எனலாம்.

ரத்தினங்களின் தலைநகரம் இலங்கை என்று கூறப்படுகிறது. மாணிக்கம், நீலம் உள்ளிட்ட ரத்தினக் கற்கள் அபரிமிதமாக இங்கு கிடைக்கின்றன. ரத்தினபுரி தான் இலங்கை!

அபூர்வ நாடாகிய இலங்கை இராமாயண காலத்திற்கு முற்பட்ட சரித்திரத்தைக் கொண்ட பழம்பெரு நாடாகும். இதை எப்படிச் சுருக்கமாக வர்ணிப்பது?
OLD AND GOLD!