

Post No. 8186
Date uploaded in London – 16 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரஷியாவில் வோல்கா (Volga) நதிக்கரையில் ஸ்தரயா மைனா (Staraya Maina) என்ற கிராமத்தில் 1300 ஆண்டு பழமையான விஷ்ணு சிலை கண்டு பிடிக்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். இது 2007-ம் ஆண்டு வெளியான செய்தி. ஆனால் ரஷியாவுக்குள் இரண்டு கங்கை நதிகள் ஓடுவதும், சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரீக செங்கல் வீடுகள் , கோட்டைகள் இருப்பதும் பலருக்கும் தெரியாது. இவை 1987ம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டாலும் 2005-ம் ஆண்டில் ரஷிய அதிபர் புடின் (President Putin) போய்ப் பார்த்தவுடன்தான் பெரிய அளவில் பிரஸ்தாபிக்கப்படுகிறது .
இது பற்றிய இரண்டு வியப்பான செய்திகள் –
1.இரண்டு நதிகளிலின் பெயர்களில் கங்கை நதியின் பெயர் அப்படியே இன்றும் உள்ளது .
2.சிந்து சமவெளி-சரசுவதி நதி தீர நாகரீகம்போல செங்கல் வீடுகள், கிணறுகள், சாக்கடை/வடிகால் வசதிகள் இருப்பது.
இரண்டும் சமகாலத்தவை!
யாருமே நுழையாத அதிபயங்கரக் காடுகளும் பிக்மி என்னும் குள்ளர்களும் வாழும் ஆப்பிரிக்க கண்டக் காடுகளை முதல் முதலில் வெள்ளையர்கள்தான் கண்டுபிடித்தனர் என்று பூகோள புஸ்தகத்தில் நாம் படித்து இருக்கிறோம் . ஆனால் அங்கு ஓடும் நதிக்கும் நாட்டுக்கும் பெயரும் கங்கைதான் ; அவர்கள் மொழியில் காங்கோ (Congo= Ganga) என்பர். (இலங்கையர்களும் மலையாளிகளும் ‘ஆ’ என்பதை ‘ஓ’ என்றே உச்சரிப்பர்; போம்பே (Bombay) நோர்வே (Norway) என்றே கதைப்பர் ;அது போல கங்கா ‘காங்கோ’ Congo in Africa ஆயிற்று)
இலங்கை மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் கங்கை என்ற பெயரில் நதிகள் அழைக்கப்படுவதையும் முன்னரே இதே பிளாக்கில் (மீ காங் Me kong = மா கங்கா)எழுதிவிட்டேன். இதோ புதிய செய்திகள்.

ரஷியாவில் ஆர்கைம் (Arkaim) என்ற ஊரில் வட்டத்துக்குள் வட்டமாக எதோ புதைந்து கிடப்பதை ஆகாயத்தில் இருந்து எடுத்த படங்கள் காட்டின. பூமிக்குள் இப்படி மர்மமான வட்டங்கள் இருக்கிறதே என்று 1987-ம் ஆண்டில் அகழ்வாராய்ச்சியைத் துவக்கினர் . பூமிக்குள் ஒரு அதிசயம் ; 4000 ஆண்டு பழமையான உலோக கால (Middle Bronze Age) கட்டிடங்களைக் கண்டுபிடித்தனர். அங்கே மொஹஞ்சசத்தாரோ, ஹரப்பா நகரங்களில் உள்ளது போல ‘பக்கா’ செங்கல் கட்டிடங்கள். அதே போல வட்ட வடிவ கிணறுகள். உலகம் வியக்கும் வடிகால் வசதிகள் . இதற்கு முன்னர் இது சிந்து சமவெளியில் மட்டும் இருப்பதாக நாம் படித்து வந்தோம். இப்போது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் ரஷியாவின் நடுப்பகுதியில் — சைபீரியக் காட்டுக்குள் இப்படி ஒரு நகரம். இதை சம்ஸ்கிருதத்தில் மண்டில அமைப்பு என்பர். நாம் இந்தோ னேஷியாவில் போரோபுதூரில் கட்டிய ஸ்தூபியும் மஹா மேரு, மண்டிலம் என்றெல்லாம் சொல்லும் வட்ட அமைப்பும் அங்குள்ளது.

2005ம் ஆண்டில் ரஷிய அதிபர் புடின் போய் இதைப் பார்த்தவுடன் பல புதிய செய்திகள் வெளிக் கிளம்பின. கஜகஸ்தான் நாட்டு எல்லைக்கப்பால், சைபீரிய காட்டுக்குள் இப்படி (Circle within circle- Concentric Circle) வட்டத்துக்குள் வட்டமாக கட்டிடம் காட்டியது வெளி உலக வாசிகள் நம் பூமிக்கு வருவதற்காக அமைக்கப்பட்டது என்று ஒரு புரளியைக் கிளப்பினார்கள்.
இன்னும் சிலர் சைபீரிய பகுதியில் ஆரியர்கள் வசித்ததற்கு இது ஒரு ப்ரூப் (Proof) என்றனர். அதை ஒத்துக்கொண்டால் சிந்து சமவெளி நாகரிகமும் ஆரியர் நாகரிகம் ஆகிவிடுமே என்று திராவிடங்கள் இந்த செய்தியை மறைத்து மூடின. இதனால் சிந்து சமவெளியையும் இதையும் ஒப்பிட்டு யாரும் பேசாமல் மூடி மறைத்தனர்.

அதிசயத்திலும் அதிசயம்
அங்கு ஓடும் இரண்டு நதிகள் அப்படியே கங்கை என்னும் சம்ஸ்கிருதப் பெயர்களை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன; சங்கத் தமிழ் நூல்களில் எட்டு முறை கங்கை நதியைக் குறிப்பிடுகிறார்கள் (ஆனால் சிந்து நதியோ, சிந்து நாடு என்ற சொல்லோ கிடையாது; பூவின் பெயர் சிந்துவாரம்; இலக்கணத்தில் சிந்து– என்ற இரண்டு சொற்களே உண்டு )
நதியின் பெயர் –
Bolshaya Karaganka and Utyaganka
ஒரு நதியின் பெயர் போல்ஷாய கார ‘கங்கா’
மற்றொரு நதியின் பெயர் ‘உதய கங்கா’
இமய மலையில் கூட தெளளி கங்கா, ஆகாய கங்கா (ஆகாச கங்கா, திருமலை-திருப்பதி)என்ற பெயர்களில் பல கங்கை நதிகள் உண்டு.
போல்ஷாயா என்றால் ‘பலமான’ என்று பொருள். ‘உதய’ என்பது கிழக்கு. சூர்ய உதய என்ற பொருளில் வரும்.
உண்மையில் இந்த இரண்டு நதிகள்தான் தொல்பொருட் துறையினரை அங்கே இழுத்து வந்தன. இரண்டு கங்கை நதிகளும் சங்கமம் ஆகும் இடத்தில் ஒரு அணை கட்ட அரசாங்கம் முடிவு செய்தது. உடனே அந்த மர்ம வட்டம் அமிழ்ந்து போகும் என்ற கவலையும் ஆட்சேபமும் எழுந்தன. அப்போது கென்னடி ஜரானோவிச் என்னும் தொல்பொருள் அறிஞர் தலைமையில் அந்த இடத்தை ஆராய்ந்தவுடன் பல அதிசயச் செய்திகள் தெரியவந்தன. 1987 முதல் பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
உள்ளூர் மக்கள் இந்த கங்கை நீரைக் குடித்தால் நோய்கள் தீரும் என்கிறார்கள். பக்கத்திலுள்ள ‘சர்மங்கா’ (Sharmanka) மலையில் ஒரு மண்டிலம் இருக்கிறது. அதில் புகுந்து எதை வேண்டினாலும் அது நடக்கும் என்பர்.
ஆர்கைம் (Arkaim) நகர் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த நகருக்குள்ள 4 வாசல்களும் சரியாக , கன கச்சிதமாக 4 திசைகளை நோக்கி இருக்கின்றன. 20 அடி உயரமும் 15 அடி அகலமும் உடைய சுவர் பாதுகாக்கிறது
‘ஆர்கனைஸர்’ Organiser Weekly முதலிய பல பல பத்திரிகைகளில் வந்த செய்திகளின் சுருக்கம் பின் வருமாறு:-
ஆர்கைம் (Arkaim) எங்கே உள்ளது ?
ரஷ்யாவில் கஜகஸ்தான் எல்லையில் இருக்கிறது . அதற்குப் பக்கத்தில் செல்யாபின்ஸ்க் நகரம் உள்ளது; யூரல் (Ural) மலையின் தெற்கில் இருக்கிறது.
இதன் அருமை பெருமை தெரிந்தவுடன் இரண்டு கங்கை நதிகள் சங்கமம் ஆகும் இடத்தில் கட்டப்படவிருந்த அணை கைவிடப்பட்டது .
இந்த இடம் வான சாஸ்திர சாலையாகவும் (Astronomical Observatory) கோயிலாகவும் திகழ்ந்தது. இங்கிலாந்திலுள்ள ஸ்டோன்ஹெஞ்ச் (Stone Henge) என்னும் பிரம்மாண்ட கல்வட்டத்துடன் இதை ஒப்பிடுகின்றனர்.
வட்டடத்துக்குள் வட்டமாக வீடுகள் வட்ட வடிவில் (Concentric Circles) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மழை கொட்டினால் அந்த நீரை வடிக்கும் வடிகால்கள் உள . மரத்தாலான தரைப்பகுதி காணப்படுகிறது; ஒவ்வொரு வீட்டிலும் அடுப்பு, கிணறு , சாமான்களை சேகரித்து வைக்கும் பகுதி, (Storage Section) சமையல் அறைக்குள் காற்று வரும் பள்ளங்கள் (Trenches) முதலியன இவர்களின் திட்டமிடலுக்கும் சான்று பகர்கினறன.
இவ்வளவும் 4000 ஆண்டுக்கு முன்னர் செய்யப்பட்டிருக்கிறது; இதை பாபிலோனிய, சிந்து சமவெளியுடன் ஒப்பிடலாம் .
இதற்குள் இங்கு காந்த மண்டல வேறுபாடுகள் (Magnetic anomalies) இருப்பதை காரணம் காட்டி இதை பறக்கும் தட்டு (UFOs) வந்து இறங்கிய இடம் என்பர் பறக்கும் தட்டு சங்கத்தினர்.
இது கோட்டை போல பாதுகாக்கப்பட்டுள்ளது; இது மத்திய உலோக கால நாகரீகம் (Middle Bronze Age) . காலம் கி.மு.1800 முதல் 2000 வரை ; வட்ட வரிசை வீடுகளில் 2500 பேர் வரை வசிக்கலாம் ; கட்டிடம் கட்ட மண்ணையும் பிற தாவர பொருட்களையும் கலந்து உருவாக்கிய கலவையைப் (Adobe Bricks) பயன்படுத்தியள்ளனர் . வீட்டிலிருந்து வெளியே வந்தால் 27X 25 சதுர மீட்டர் சதுக்கம் இருக்கிறது. அங்கு விழா, கூட்டம் நடத்தி இருப்பார்கள் .
இந்த மக்களை பக்கத்திலுள்ள பல கலாசாரங்களுடன் தொடர்புபடுத்தி பல கட்டுரைகள் வந்தன. அவர்கள் இந்தோ- ஈரானிய கலாசாரத்துடன் தொடர்புடையோர் என்றும் எழுதி இருக்கின்றனர். இவர்கள் இறந்தோரை புதைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆயினும் இவர்கள் பேசிய மொழி என்பன எல்லாம் யூகங்கள் அடிப்படையில் அமைந்தனவே.


அதிசய மண்டை ஓடு !
ஒரு பெண்ணின் முழு எலும்புக்கூடு இங்கே கிடைத்தது. அதன் ‘தலை’ வழக்கத்துக்கு மாறாக மிக நீண்டு காணப்படுகிறது; குழந்தையாக இருக்கும்போதே தலையில் கயிறு கட்டி இப்படி நீளச் செய்வது ஒரு குறிப்பிட்ட இனத்தின் (Tribe) வழக்கம் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். குதிரை எலும்புக்கூடுகளும் இந்த பிராந்தியத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ஆயினும் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் வெவ்வேறு காலத்தைச் சேர்ந்தவை .
இது போன்ற 20 வட்ட வீடு அமைப்புகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சிலர் இங்குள்ள வட்ட வடிவ அமைப்புகள் பிரபஞ்சத்தின் மாடல்/மாதிரி (Model) என்றும் முன்கால பாரசீக புராணத்தில், இந்து மத ரிக் வேதத்தில், கூறப்பட்டுள்ளது போன்றவை என்றும் சொல்வர்.
மேலும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய விஷயங்கள் இவை.
–subham–




Congo and Ganga rivers | Tamil and Vedas
tamilandvedas.com › tag › congo-and-ganga-rivers
1.
2.
17 Mar 2014 – Posts about Congo and Ganga rivers written by Tamil and Vedas. … In the middle of the thickest forest on the earth is the river Congo of Africa.
Ganga | Tamil and Vedas
tamilandvedas.com › tag › ganga
1.
Posts about Ganga written by Tamil and Vedas. … in River Mekong (Ma Ganga) in South East Asia, Maveli Ganga in Sri Lanka, Congo in Central Africa etc.
Ganges | Tamil and Vedas
tamilandvedas.com › tag › ganges
1.
Posts about Ganges written by Tamil and Vedas. … in River Mekong (Ma Ganga) in South East Asia, Maveli Ganga in Sri Lanka, Congo in Central Africa etc.
River Ganges in Sumerian Culture (Post No.3731) | Tamil and …
tamilandvedas.com › 2017/03/17 › river-ganges-in-su…
1.
17 Mar 2017 – We see Ganga in River Mekong (Ma Ganga) in South East Asia, Maveli Ganga in Sri Lanka, Congo in Central Africa etc. Sumerians also …
Kailash | Tamil and Vedas
tamilandvedas.com › tag › kailash
1.
17 Mar 2017 – We see Ganga in River Mekong (Ma Ganga) in South East Asia, Maveli Ganga in Sri Lanka, Congo in Central Africa etc. Sumerians also …
You’ve visited this page 2 times. Last visit: 22/03/20
–
Tags — ரஷியா, கங்கை நதி; சிந்துவெளி நாகரீகம், ஆர்கைம் (Arkaim)
































































