தமிழ், சம்ஸ்கிருத ஆங்கில இலக்கண அகராதி -1 (Post.8708)

Tolkappiar

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8708

Date uploaded in London – –19 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இலக்கணம் கற்போரும் பிற மொழி இலக்கணத்தை தமிழ் மொழியுடன் ஒப்பிடும் கட்டுரைகளைப்  படிப்போரும்  பல இலக்கண சொற்களைக் காண்பார்கள். அவற்றைத்  தமிழ்- ஆங்கிலம் – சம்ஸ்க்ருதத்தில் – என்ன சொற்களால் அழைக்கிறார்கள் என்பதை அறிந்தால் இன்னும் எளிதாக, விரைவாக விளங்கிக் கொள்ள முடியும். அதற்காக பல  நூல்களில் இருந்து சொற்களைத் தொகுத்து ஒரு அகராதியை வெளியிட முயற்சி செய்கிறேன். இது முழுமை பெற சில காலம் ஆகும்.

தமிழ் மொழிக்கும் சம்ஸ்கிருத மொழிக்கும் பொதுவான எழுத்துக்கள் இல்லாத சில ஒலிகள் , சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இந்த சம்ஸ்கிருதச் சொற்களை அப்படியே உச்சரிப்பதா அல்லது தமிழ் முறைப்படி மாற்றி  உச்சரிப்பதா என்பதற்கு இரண்டு விதிகள் உள்ளன. அதைத் தற்சமம் , தற்பவம் என்று சொல்லுவார்கள் .

தற்சமம்

இருமொழியிலும் காணப்படும் பொது எழுத்துக்கள் ஒரு சம்ஸ்கிருதத் சொல்லில் இருந்தால் அதை அப்படியே எழுதுவதோ ஒலிப்பதோ தற்சமம்.

உதாரணம்/எடுத்துக் காட்டு

கமலம், காரணம்

தற்பவம்

சம்ஸ்கிருதத்தில் மட்டுமே உள்ள சிறப்பு எழுத்துக்களைக் கொண்ட சொற்களை எழுதுகையில் அதைத் தமிழ் ஒலிக்கேற்ப மாற்றுவது  தற்பவம் .

உதாரணம்/ எடுத்துக் காட்டு

பங்கஜம் – பங்கயம்

வருஷம் – வருடம்

ஸபா – சபை, அவை

*****

விருத்தி

உதாரணம் – தொல்காப்பிய விருத்தி உரை , நன்நூல் விருத்தி, யாப்பருங்கல விருத்தி, பெளட்கர விருத்தி

உரையின் பொது இலக்கணங்களோடு , சூத்திர பொருளை விளக்கலளவில்  நில்லாது, அங்கு இன்றியமையாத கருத்துக்கள் யாவும் விளங்கத் தன்னுரையானும் ஆசிரிய வசனங்களானும் ஐயமற உண்மைப்பொருளை விரித்து உரைப்பது .

உரையின் பொது இலக்கணங்கள் 14

அவை – படம், கருத்து, சொல்வகை , சொற்பொருள், தொகுத்துரை , உதாரணம், வினா, விடை, விசேடம், விரிவு, அதிகாரம், துணிவு, பயன், ஆசிரிய வசனம்  என்ற பதினான்குமான்.

சூத்திரத்துட் பொருளன்றியும்  ஆண்டைக்கு

இன்றியமையாவையும் விளங்கத்

தன்னுரையானும் பிறநூலானும்

ஐயமகல ஐங்காண்டிகை யுறுப்பொடு

மெய்யினை எஞ்சாது  இசைப்பது விருத்தி.

இதனை அகலவுரை என்பர் இளம்பூரணர்  .

From Dandapani Desikar’s Introduction to Tolkappia Sutra Vrddhi

*****

சூத்திரம்

சூத்திரம் என்பது கண்ணாடியில் விளங்கும் நிழல்போல , ஆசிரியன் கருதிய பொருள் தெள்ளிதின் விளங்கச் சில சொற்களால் திட்பமும் நுட்பமும் பொருந்த யாக்கப்பெற்ற நூல்யாப்பு என்க .

அவற்றுட் சூத்திரந் தானே

ஆடி நிழலின் அறியத் தோன்றி

நாடுதலின்றி ப் பொருள் நனி விளங்க

யாப்பினுள் தோன்ற யாத்தமைப்பதுவே

–தொல்காப்பியம்- பொருளதிகாரம் 482

சூத்திரம் 656-ல் மேலும் விளக்கமாகச்  சொல்கிறார் .

இளம்பூரணர் சொல்வதையும் காண்போம்

நுட்பம் ஒட்பம் திட்பம் சொல்லில்

சுருக்கங்கருத்து பகுதியொடு தொகை இ

வருத்தமில் பொருட்பயன் நிகழ்ச்சி சூத்திரம்

இளம்பூரணரும் இதை மேலும் விளக்குகிறார் . அவர் உரையில் காண்க.

From Dandapani Desikar’s Introduction to Tolkappia Sutra Vrddhi

ஆடி நிழலின் அறியத்  தோன்றி — என்ற தொல்காப்பிய வரிக்கு ஒரு அறிஞர் நல்ல விளக்கம் கூறியுள்ளார்.

கண்ணாடியில் ஒருவர் தன முகத்தைப் பார்க்கையில் அவர் முகம் மட்டுமின்றி அவர் பின்னாலுள்ள பொருள்களும் தென்படும். யாராவது அவரைக் கொல்ல  வந்தாலோ , (கிஸ்/ Kiss)  முத்தம் தர வந்தாலோ அதையும் காட்டும். அதாவது வருங்கலத்தைக் காட்டும். சுற்றுமுள்ள பொருட்களைக் கொண்டு அதன் சூழ்நிலை, நிகழ் காலம், கடந்த காலத்தையும் உய்த்துணரலாம். ஆக கண்ணாடியின் பயன்கள்  பல. இது போல சுருங்க உரைத்தாலும் சூத்திரம் விளக்கும் பொருட்கள் பல..

பாணினியின் சம்ஸ்கிருத சூத்திரங்களையும் அதன்மேல் எழுந்த காத்யாயனரின் வார்த்திகத்தையும் அதற்குப் பின்னார் எழுந்த பதஞ்சலி முனிவரின் மஹா பாஷ்யத்தையும் படிப்போருக்கு இது நன்கு விளங்கும்

****

அணிகள் – FIGURES OF SPEECH

ALLEGORY, FABLE, PARABLE -மற்றொறு பொருள் தோற்றும் கதை , ஒட்டுவமை

ALLITERATION – முற்றுமோனை

ALLUSIONS – மேற்கோள்கள்

ANTI CLIMAX, BATHOS, ANTI THESIS – முரண்தொடை

APHORISMS – பழமொழி/  சூத்திரம்

APOSTROPHE – விளி

ASYNDETON- உம்மைத் தொகை

CIRCUMLOCUTION, OR PHERIPHRASIS  – சுற்றுச் சுழற்சி , மீமிசை

CLIMAX- வீறு கோளணி , ஏற்றவணி

EPIGRAM- சுருங்கச் சொல்லல்

EUPHEMISM –  இடக்கரடக்கல், மரியாதை வாசகம்

HYPERBOLE, EXAGGERATION – உயர்வு நவிற்சி அணி

EXCLAMATION – வியப்புச் சொல்

HISTORIC PRESENT — கால வழுவமைதி

HYSTERON PROTERON – மொழி மாற்றுப் பொருள்கோள்

INTERROGATION -வினா

IRONY OR SARCASM -வஞ்சப் புகழ்ச்சி

LITOTES — பிற குறிப்பு, , எதிர்மறை இலக்கணை

METAPHOR – உருவகம் , உருவக அலங்காரம்

METAPHOR-CONTINUED-  முற்றுருவகம்

METONYMY – ஆகுபெயர் — பண்பு

ONOMATOPEIA — ஒலிக்குறிப்பு

PATHETIC FALLACY — இயற்கைப் பொருளுக்கு மக்கட்பண்பபை ஏற்றிச் சொல்லுதல்

PROVERB –பழமொழி

PUN — இரட்டுற மொழிதல் , சிலேடை

SIMILE –உவமை

SUGGESTION – குறிப்பு

SYNEEDOCHE —  ஆகுபெயர் — சினை – பிரித்து மொழிதல், முதலாகுபெயர் இலக்கணை ,

இனவாகுப் பெயர் இலக்கணை

-from Lifco Dictionary

tags – தமிழ், சம்ஸ்கிருத ஆங்கில,  இலக்கண அகராதி -1 

to be continued………………………………….

ஐயர் பற்றி 7 பழமொழிகள் கண்டுபியுங்கள் (Post No.8707)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8708

Date uploaded in London – –19 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.ஐயர் முனகல் அத்தனையும் வேதம்

2.ஐயர் வரும்வரை அமாவாசை  காத்திருக்குமா ?

3.ஐயர் இடம் கொடுத்தாலும் அடியார்கள் இடம் கொடார்

4.ஐயர் என்பவர் துய்யர் ஆவார் ((துய்யர் = தூயவர்))

5.ஐயர் ஒன்றே கால் சேர், அவர் அணியும் லிங்கம் அரை சேர்

6.ஐயர் கொண்டுவருகிற பிச்சைக்கு அறுபத்தாறு பை

7.ஐயர் குடுவை போல அவர் மனைவி கூடை போல

துய்யர் = தூயவர்

tags- ஐயர், பழமொழிகள்

சங்கே முழங்கு!!!! (Post No.8706)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8706

Date uploaded in London – –19 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 சங்கே முழங்கு!!!!

                                                Kattukutty

இப்பூவுலகில் நாம் பிறந்தவுடன் நம் வாயில் நுழையும் முதல்

அன்னியப் பொருள் சங்குதான்( தாயின் முலையைத் தவிர )

நாம் இறந்த பிறகும் நம்மை எரிக்கும் வரை சங்கு தான்!!!

இந்த சங்கைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

சங்கு (ஆங்கிலத்தில் ) SHANK-CONCH

தாவர இயற் பெயர்- ஜங்கஸ் பைரம் ZHUNGUS PYRUM

(Latin name GENUS STROMBUS)

தோன்றிய இடம்— பாற் கடல்

நமது ஐதீகம் கடலிலிருந்து தோன்றிய அனைத்தும் புனிதமானவை.

(முத்து, பவழம், பல் விதமான கிளிஞ்சல்கள் , சிப்பிகள்)

நிறம்-

வெண்மையாக இருந்தால் – லட்சுமி சங்கு

பழுப்பு நிறமாக இருந்தால் – விஷ்ணு சங்கு.

சங்கில் வசிக்கும் தெய்வங்கள்

சங்கின் நடுவில். குபேரன்

சங்கின் சுழி முனையில் சூரிய, சந்திரர்கள்

குழிப் பகுதியில் வருண பகவான்

குறுகிய முனையில் பிரஜாபதி

அகன்ற முன் பகுதி. கங்கை, யமுனை, சரஸ்வதி

சங்கு நல்லவையா என்று எப்படி சோதிப்பது???

காதில் வைத்துக்கொண்டால் “ஓங்காரத்வனி” கேட்கும்.

கடவுளர் வசிக்கும் இடங்கள்

ருத்ராக்ஷ்த்தில் சிவ பெருமன்

சாளக்ரமத்தில். விஷ்ணு

ஸ்படிக லிங்கத்தில். சிவன் , பார்வதி, மும்மூர்த்திகள்

வலம்புரி சங்கில். மகா லட்சுமியும் , குபேரனும்

பசுவின் பின் பகுதியில். 33 கோடி. தேவர்களும் மும் மூர்த்திகளும்

அவர்கள் மனைவியரும்.

சங்கின் பிளவுப் பகுதியினை நம் வலது கையினால் பிடிக்க முடியுமானால்

அது “ வலம்புரி சங்கு”

இடது பக்கம் பிளவு இருந்து இடது கையினால் பிடிக்க முடியுமானால்

அது இடம் புரி சங்கு.

ஆயிரம் இடம்புரி சங்குகள் சூழ்ந்து இருக்குமாம் ஒரு “வலம்புரி”

ஆயிரம் வலம்புரி சங்குகள் சூழ்ந்து இருக்குமாம் ஒரு “சலஞ்சலம்”

ஆயிரம் சலஞ்சலம் சங்குகள் சூழ்ந்து இருக்குமாம் ஒரு “பாஞ்ச ஜன்யம்”

அபூர்வமான இந்த சங்கு கிருஷ்ணர் கையிவிருந்தது.

சங்கின் உணவு

சங்கு ஒரு புலால் உண்ணி!!!! கூட்டம் கூட்டமாக வாழும். பாறை ஓரத்தில்,

திடமற்ற மணற் பகுதியில் வாழும்

சங்கினால் என்னென்ன பயன்கள்????

சங்கு “ஜீவ சக்தி “ பெற அதில் நீர் விட்டு பச்சைக் கற்பூரத்தையும்

ஏலக்காய் பொடியையும்சேர்த்து கரைத்து அபிஷேகத்திற்க

உபயோகிக்கலாம்.

சங்கிலிருந்து அபிஷேகத்திற்கு நீர் விடும்போது

“ஓம் பாஞ்ஜ ஜன்யாய தீமஹி பவன ராஜாய தீமஹி

தன்னோ ஷங்கப் ப்ரசோதயாத்”

என்று சொல்லி அபிஷேகிக்க வேண்டும்.செல்வம் கொழிக்கும்.

பால் ஊற்றி அபிஷேகம் செய்தால் இடம், நிலம் சொத்துகள் சேரும்.

தேன் விட்டு அபிஷேகம் செய்தால் தெய்வ அருள் கிட்டும்.

பன்னீர் விட்டு அபிஷேகம் செய்தால். வழக்குகளில் வெற்றி ஏற்படும்.

பூஜை அறையில் வெள்ளித்தட்டில் அரிசியை பரப்பி அதில் வலம்புரி சங்கு

வைத்து சந்தன குங்குமம் இட்டு பூ சார்த்தி

வணங்கினால் உணவிற்கு பஞ்சமே இருக்காது!!!!

வலம்புரி சங்கை பூஜையில் வைத்தால் பில்லி சூனியம் அகலும்.

வலம்புரி சங்கில் பால் விட்டு செவ்வாய் தோறும் அபிஷேகம்

செய்தால் செவ்வாய் தோஷம் விலகும்

அதிக கடன் உள்ளவரகள் பவுர்ணமி தோறும் வலம்புரி சங்கிற்கு

குங்கும அர்ச்சனை செய்தால் கடன் கண்டிப்பாக நீங்கும்.

16 சங்கு கோலம் நடுவில் தீபம் ஏற்றி வணங்கினாலும்

கடன் போகும்.

வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் வலம்புரி சங்கில் துளசி, நீர்

விட்டு வீடு முழுக்க தெளித்தால் வாஸ்து தோஷம் நீங்கும்.

எங்கே சங்கு ஊதப்படுகிறது ??? ஏன்??

கோவில்களில் ஒவ்வொரு பூஜா காலத்திலும் கண்டிப்பாக

சங்கு ஊதப்படும்

வீட்டு பூஜையிலும், திருமணத்திலும், சாவிலும் சங்கு ஊதப்படுகிறது.

ஏன் தெரியுமா??? விஞ்ஞான பூர்வமாக மெயப்பிக்கப் பட்ட

உண்மை.சங்கினுடைய சப்தத்தினால் எல்லா கிருமிகளும்

அழிந்து விடுகின்றனவாம்!!!சங்கு சப்தத்தில் துர்தேவதைகள்

தீய ஆவிகள் ஓடி விடுகின்றனவாம்.

சில சங்கு விஷயங்கள்

திருமாலின் கையில் உள்ள சங்கிற்குப் பெயர் பாஞ்ச ஜன்யம்

அர்சுனன் – தேவ தத்தம்

தர்மன் – அனந்த விஜயம்

பீமன் – பவுண்ட்ரம்

நகுலன் – சுகோஷம்

சகாதேவன் – மணி புஷ்பகம்

மருத்துவத்தில் சங்கு

சங்கு ஒரு சிறந்த மருந்தாகவும் உபயோகப்படுகிறது.

உதாரணமாக “சங்கு பஸ்பம் “ சிறு குழந்தைகளுக்கு

டான்ஸிலுக்கு சிறந்த மருந்தாகும்.மேலும்மஞ்சட் காமாலை

வயிற்று வலி போன்ற நோய்களுக்கும் பயன்படுகிறது.

சங்கு , கிளிஞ்சல், சிப்பி இவைகளிலிருந்து சுத்தமான

கால்சியம் கிடைக்கிறது. மாத்திரைகளாக செய்து

விற்பனையும் செய்யப்படுகிறது

வெளிநாட்டினர் எல்லா விதமான சங்குகளையும் வாங்கி

அலங்காரப்பொருளாக அலமாரியில் வைத்திருக்கிறாரகள்

பாடல்களில் சங்கு

மத்தளம் கொட்ட வரி சங்கம் முழங்க ………ஆண்டாள்

சங்கம் முழங்கும் திரு மதுரை நகர்…………..TMS பாடல்

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்…………….ஒளவையார்

மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும்

நாற்றமும் சொல்லாழி வெண்சங்கே!!!………ஆண்டாள்

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே………பாரதி

செங்கண் அங்க…சங்கு அணங்கிய

சலஞ்சலம் அலம்ப தவள கங்கணங்……….கம்பன்

20th june 2016 லண்டன் திரு சுவாமி நாதன் எழுதிய tamilandvedas ஐப் பார்க்க-

“கம்ப ராமாயணத்தில் ஒரு அதிசய சங்கு”

நன்றி வணக்கம்.

tags- சங்கு ,வலம்புரி சங்கு, சங்கே முழங்கு

                                                        ****

லட்சம் புதிர்கள் – 12 (201 முதல் 250 முடிய) Post No.8705

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8705

Date uploaded in London – – 19 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

லட்சம் புதிர்கள் – 11 கட்டுரை எண் 8162 வெளியான தேதி 13-6-2020

லட்சம் புதிர்கள் – 12 (201 முதல் 250 முடிய)

ச.நாகராஜன்

சைவம்

கேள்விகள் :

201) சைவ சமயக் குரவர்கள் எத்தனை பேர்?

202) அவர்கள் யாவர்?

203) தமிழாகரன் என்பவர் யார்?

204) சிவபிரானின் வில்லின் பெயர் என்ன?

205) நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?

206) சிவபிரானின் திருவிளையாடல்கள் எத்தனை?

207) சைவத் திருமுறைகள் எத்தனை?

208) சைவ சாத்திரங்கள் எத்தனை?

209) மும்மலங்கள் யாவை?

210) பெரிய புராணத்தை இயற்றியவர் யார்?

211) ஜோதிர் லிங்கத் தலங்கள் எத்தனை?

212) அவை யாவை?

213) சிவ பார்வதி திருமணம் நடந்த இடம் எது?

214) திருமணம் நடந்த நாள் எது?

215) புள்ளிருக்கு வேளூரின் இன்றைய பெயர் என்ன?

216) சிவ பிரான் அர்ஜுனனுக்குக் கொடுத்த அஸ்திரத்தின் பெயர் என்ன?

217) அறுபத்துமூன்று நாயன்மார்களில் பெண்கள் எத்தனை பேர்?

218) அவர்கள் யாவர்?

219) கோயில் என்று சொன்னாலே அது எந்தத் தலத்தைக் குறிக்கும்?

220) திருஞானசம்பந்தர் இறைவனைப் போற்றி அடி எடுத்த பாடலின் ஆரம்பம் என்ன?

221) ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்று அருளியவர் யார்?

222) எந்தத் தலத்தில் இந்தப் பதிகம் பாடப்பட்டது?

223) திருமூலர் அருளிய நூலின் பெயர் என்ன?

224) அதில் எத்தனை பாடல்கள் உள்ளன? எத்தனை ஆண்டுகளில் இதைப் பாடினார்?

225) திருமூலர் தனது நூலை எப்படித் தொடங்கினார்?

226) ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்று உரைத்தவர் யார்?

227) கற்றுணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும், நற்றுணை ஆவது நமச்சிவாயவே என்று கூறியவர் யார்?

228) இந்தப் பதிகத்தின் பெயர் என்ன?

229) சிவபிரானின் திருவடிவங்கள் எத்தனை?

230) ஜனகர் அரசவையில் இராமபிரான் உடைத்த வில் யார் கொடுத்தது?

231) அந்த வில்லின் பெயர் என்ன?

232) சிவபிரானின் தாண்டவ பேதங்கள் எத்தனை?

233) ஆனந்த தாண்டவ ஸ்தலம் எது?

234) பட்டினத்தாரின் ஜீவ சமாதி எங்குள்ளது?

235) அற்புதத் திருவந்தாதி அருளிச் செய்தவர் யார்?

236) சிவபுராணம் அருளிச் செய்தவர் யார்? எந்த இடத்தில்?

237) பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பன்னிரு ஆசிரியர்கள் யாவர்?

238) சிவபிரான் இராவணனுக்குக் கொடுத்த வாளின் பெயர் என்ன?

239) வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய முனிவர் வழிபட்ட தலம் எது?

240) மதுரை ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் இறைவன், இறைவி பெயர் என்ன?

241) சைவத்திருமுறைகளைத் தொகுத்தவர் யார்?

242)கங்கை கொண்ட சோழனான் இராஜேந்திரன் அமைத்த கோவிலின்பெயர் என்ன, எங்குள்ளது?

243) யாருக்கு ஒரு நாளும் அபாயம் இல்லை?

244) இதைக் கூறியவர் யார்?

245) திரு ஐந்தெழுத்து எது?

246) ருத்ராக்ஷம் – இதன் அர்த்தம் என்ன?

247) ருத்ராக்ஷம் தோன்றியது எப்படி?

248) சிவ சஹஸ்ர நாமம் எந்த நூலில் வருகிறது?

249)  சிவம் என்பதற்குப் பொருள் என்ன?

250) சிவனின் வாஹனம் எது?

விடைகள் :

201) நால்வர் 202) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் 203) திருஞானசம்பந்தர் 204) பினாகம் 205) 63 206) 64 207) 12 208) 14) 209) ஆணவம், கன்மம், மாயை 210) சேக்கிழார் 211) 12

212) சோமநாத், மல்லிகார்ஜுனம், மஹா காலேஷ்வர், கேதார் நாத், ஓங்காரேஸ்வரர், பீமா ஷங்கர், காசி விஸ்வநாதர், த்ரியம்பகேஸ்வர், வைத்யநாத், நாகேஸ்வரர், ராமேஸ்வரம், குஷ்மேஷ்வர் 213) கைலாயம் 214) பங்குனி உத்திரம் 215) வைத்தீஸ்வரன் கோவில் 216) பாசுபதாஸ்திரம் 217) மூவர் 218) காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார், இசை ஞானியார் 219) சிதம்பரம் 220) ‘தோடுடைய செவியன்’ என்று! 221) திருஞானசம்பந்தர் 222) திருக்கழுமலம் 223) திருமந்திரம் 224) 3000, ஆண்டுக்கு ஒன்று 225) ‘ஒன்றவன் தானே’ என்று. 226) திருமூலர் – திருமந்திரம் பாடல் எண் 2104 227) திருநாவுக்கரசர் 228) நமச்சிவாயத் திருப்பதிகம் 229) 64 230) சிவபிரான்

231) திரியம்பகம் 232) 108 233) சிதம்பரம் 234) திருவொற்றியூர் தலத்தில் 235) காரைக்கால் அம்மையார் 236) மாணிக்கவாசகர், திருப்பபெருந்துறையில் 237) 1.திருவாலவுடையார் 2.காரைக்காலம்மையார் 3. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4. சேரமான் பெருமாள் நாயனார் 5. நக்கீர தேவர் 6. கல்லாட தேவர் 7. கபில தேவர் 8. பரண தேவர் 9. இளம்பெருமானடிகள் 10. அதிராவடிகள் 11. பட்டினத்துப் பிள்ளையார் 12. நம்பியாண்டார் நம்பி 238) சந்திரஹாஸம் 239) சிதம்பரம் 240) இறைவன் : சுந்தரேஸ்வரர் இறைவி :மீனாக்ஷி 241) நம்பியாண்டார் நம்பி 242) கங்கைகொண்ட சோழீசுரர், கங்கை கொண்ட சோழ புரம் 243) சிவாய நம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை. 244)ஔவையார் 245) நமசிவாய 246) ருத்திரனின் கண் என்று அர்த்தம் 247) சிவபிரானது மூன்று கண்களிலிருந்து சிந்திய மணியே ருத்ராக்ஷம் 248) மஹாபாரதத்தில் அனுசாஸனபர்வத்தில் வருகிறது. லிங்க புராணத்திலும் காணலாம். 249) மங்களகரமானவன், முழுமையானவன், தூய்மையானவன் என இப்படிப் பல அர்த்தங்கள் உண்டு. 250) ரிஷபம்.

tags- லட்சம் புதிர்கள் – 12

–subham–

கோவில் கோபுரம் எதற்காக ?(Post. 8704)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8704

Date uploaded in London – –18 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

some pictures are sent by lalgudi veda; thanks.

கோவில் கோபுரம்  எதற்காக ?

தமிழ் நாட்டில் மட்டும் சிறிதும் பெரிதுமாக 40,000 கோவில்கள் இருக்கின்றன. இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோவில்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டைப்போல ஆந்திரம் கர்நாடகம், கேரளம், ஒரிஸ்ஸா வரை உயர்ந்த கோபுரங்கள் இருக்கின்றன. வடக்கே செல்லச் செல்ல கோபுர உயரம் குறைந்து கொண்டே வரும். இதற்கு முக்கிய காரணம் முஸ்லிம்களின் படை எடுப்பாகும். அவர்கள் வேண்டுமென்றே இடித்தது பாதி; மீதிப்பாதி  இந்துக்களுக்கு நேரமின்மை; வெளி நாட்டானை விரட்டுவதிலேயே முழு  நேரமும் போய்விட்டது. தென்னகத்தில் இந்து மத விரோதிகளின் தாக்குதல் குறைவு. மாலிக்காபூர் என்ற வெறியன் படையெடுப்பைத் தவிர மற்ற பெரிய தாக்குதல் இல்லை. அவன் போகாத இடத்திலுள்ள பெரிய கோவில்கள் பிழைத்தன. அவன் அழித்த பல கோவில்களையும் தெலுங்கு தேச மன்னர்கள் புனரமைத்து புகழ்க்கொடி நாட்டிச் சென்றனர்.

உயர்ந்த கோபுரங்களுக்குப் பின்னால் உயர்ந்த தத்துவங்கள் உள்ளன.இதை ஆகம நூல்கள் விளக்குகின்றன. சில விளக்கங்களை இன்று காண்போம் .

கோபுரம்- ஸ்தூலலிங்கம்,

கொடிமரம் – நேர்மை,

பலிபீடம்-பாசம்,

நந்திதேவர்-பசு,

விநாயகர் – பிரணவம்,

திரைச் சீலை – மாயை,

சிவலிங்கம் – பதி,

பிரகாரங்கள் ஐந்து- பஞ்ச கோசங்கள்,

படிகள் – ஐந்தெழுத்து,

நடராஜர் – பஞ்ச்கருத்ய ஸ்வரூபி,

தக்ஷிணா மூர்த்தி- ஆனந்த ரூபி,

சோமாஸ்கந்தர் – சத், சித், ஆனந்தம்,

பார்வதி தேவி – சக்தி .

இது சிவன் கோவில் அமைப்பை நன்கு  விளக்கும்.

இதைத் திருமூலரும் பாடி இருப்பதால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தத்துவம் இருந்தது தெரிகிறது .

ஆய  பதிதா  னருட் சிவலிங்கமா

மாய பசுவுமடலே றென நிற்கு

மாய  பலிபீட மாகுநற் பாசமா

மாய வரநிலை யாய்ந்துகொள்வார் கட்கே

–திருமூலரின் திருமந்திரப் பாடல்

சுவாமியும் அம்மனும் கர்ப்பக் கிருகத்தில் இருப்பர். இதற்கு மேல் விமானம் என்னும் அமைப்பு இருக்கும். நல்ல வருவாயுள்ள கோவில்களில் இந்த விமானம் தங்கக் கலசத்தால் மூடப்பட்டிருக்கும்.

இந்த விமானத்தை சிவாகமங்கள் பினருமாறு விளக்குகின்றன :-

உபபீடம் – பாதம்

அதிஷ்டானம் – முழந்தாள்

கும்பம் – நாபி

பஞ்சரம் – வயிறு

பாதவர்க்கம் – கை

பிரஸ்தரம்- தோள் மூட்டு

கண்டம் – கழுத்து

சிகரம் – முகம்

உஷ்ணிசவகை – சிகை

மஹாநாஸி  மூக்கு

க்ஷுத்ர  நாஸி – கண்

—-விஸ்வ கர்மீய  வாஸ்து சாஸ்திரம்

****

ஸ்தபதி வை.கணபதி , மதுரை மீனாட்சி கோவில் கும்பாபிஷேக மலரில்  எழுதிய கட்டுரையில் சொல்கிறார் –

1.நமது கோவில் அமைப்பை பிரபஞ்சத்தின் மாதிரி உருவம் ‘UNIVERSE IN MINIATURE’  என்பர்.

2.பஞ்ச பிரகாரங்களை பஞ்ச பூதங்கள் என்பர்.; அதற்குள் நுண்ணிய உருவில் இறைவன் இருக்கிறான் .

.

3.கருவறை என்று சொல்லப்படும் விமானத்தைப் பெண் வடிவம் என்றும் அதற்குள் உள்ள மூர்த்தியை  உதரத்தில் உள்ள கர்ப்பம் என்றும் விசுவகர்மீயம்  என்ற நூல் வருணிக்கிறது  .இதனால்தான் இதை கருவறை/ கர்ப்பக் கிருகம் என்று அழைக்கிறோம்.

4. இதை கோழி முட்டை வடிவிலும் — குக்குடாண்ட — வடிவிலும் அமைக்கலாம்; காஞ்சி புரத்திலுள்ள ‘ஜ்வர ஹரேஸ்வரம்’ இப்படி அமைக்கப்பட்டது. இது ஏகாம்பரேஸ்வர் கோவிலின் தெற்கு வீதியில் இருக்கிறது.

5.சிற்ப நூல்களில் கருவறை விமானத்தை ஸ்தூல லிங்கமென்றும் கருவறைக்குள் இருக்கும் நிஷ்கள வடிவத்தை சூக்ஷ்ம லிங்கம் என்றும் கூறப்படுகிறது.

6.மானுட உடல் உறுப்புகளை அங்கம், மஹாங்கம், உபாங்கம், பிரத்யங்கம் என்று நான்காகப் பிரித்துக் கூறுவது போல விமானத்தில்

அதிஷ்டானம்   என்பது மஹாங்கம்- BASEMENT

ஸ்தம்பம் அல்லது சுவர்ப்பகுதி – அங்கம் – SUPER STRUCTURE

பிரஸ்தரம் – உபாங்கம் – ENTABLATURE

சிகரம் – பிரத்யங்கம் – DOME OR ROOF ஆகும்.

7.இதையே படுத்திருக்கும் நிலையில் – சயன கோலத்தில் — பார்த்தால் ,

கர்ப்பக்கிரம – சிரஸ் / தலை

அந்தராளம் – முகம்

சுகநாசி – கழுத்து

அர்த்த மண்டபம் – புஜம்/தோள்கள்

மகாமண்டபம் – வயிறு

பிரகாரம் – கால்கள்

கோபுரம் – பாதம்

இவ்வாறு பல நூல்கள் பல விளக்கங்களைக் கூறுவதற்கு காரணம் இந்தப்  பிரபஞ்சமும் , மனித உருவமும் இறைவனின் வடிவங்களே என்பதை உணர்த்துவதற்கே .

பாமர மனிதனிடம் பெரிய தத்துவங்களை சொற்பொழிவாற்றினால் விளங்காது . ஆனால் கோவிலைச் சுற்றுகையில் விளக்கினால் மனதில் பதியும். கற்றோருக்கும் கூட இக்கருத்துக்களை மனதில் பதிக்கும் MODELS / REPLICAS மாதிரிகள் இவை.

பள்ளிக்கூட, கல்லூரி சோதனைச் சாலைகளில் பல மாதிரி வடிவங்களை வைத்து இரசாயன, பெளதிக , உடற்கூறு தத்துவங்களை விளக்குவார்கள். அது போல பெரிய தத்துவங்களை விளக்கும் வடிவங்களே கோவிலின் அமைப்புகள்.

உதவிய நூல்கள் —

நால்வர் நெறி , லண்டன், 2002

கவசக் கொத்து , காரைக்குடி, 1981

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பணி மலர், 1963

*****

முந்தைய கோவில் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

கோவில் வகைகள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › கோவ…

  1.  
  2.  

1 Apr 2015 – ஆயினும் மதுரை மீனாட்சி கோவில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், தஞ்சைப் பெரிய கோயில், திருவண்ணாமலைக் கோவில் கோபுரங்கள் …


தஞ்சாவூர் பெரிய கோவில் …

tamilandvedas.com › 2015/06/09

  1.  
  2.  

T

9 Jun 2015 – வானளாவிய கோபுரம்; 216 அடி உயரம்; எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம்/விமானம் இருக்கும்.


உள்ளம் பெருங் கோயில் … – Tamil and Vedas

tamilandvedas.com › 2017/04/06

6 Apr 2017 – மனமே இறைவன் இருக்கும் கருவறை/கோயில்கோபுர வாசல் நம்முடைய வாய். இதற்குள் குடி கொண்டிருக்கும் கடவுள் நமக்கு அருட் …


இடிதாங்கி | Tamil and Vedas

tamilandvedas.com › tag › இடித…

  1.  

30 Mar 2017 – கோபுரக் கலசம் விழுந்தாலும், கோபுரம் இடிந்து விழுதாலும் … நானே மதுரை மீனாட்சி கோவிலின் தெற்கு கோபுரத்தின் …


திரயம்பகேஸ்வரம் … – Tamil and Vedas

tamilandvedas.com › tag › திரய…

  1.  

10 Dec 2015 – அங்கிருந்து திரயம்பகேஸ்வர் கோவில் சென்றோம். இது 12 … திரயம்பகேஸ்வர் கோவில் கோபுரம் தன் பழமையைக் காட்டுகிறது.

கர்நாடக அதிசயங்கள்-1 | Tamil and Vedas

tamilandvedas.com › tag › கர்ந…

  1.  

27 Aug 2017 – மீனாட்சி கோவிலில் 14 கோபுரங்கள் 14 ஏக்கர் கோவில் பரப்பில் 30000 சுதைகளைக் காணலாம்; ஹலபீடிலோ அரை மணி நாரப் பார்வையில் …


புத்தர் கோவில் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › புத்…

6 Feb 2016 – ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்! (Post No.2514). IMG_3108 … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact. swami_48@yahoo.com).

—subham—

ஆண்டி பற்றி 7 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி (Post.8703)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8703

Date uploaded in London – –18 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆண்டி பற்றி 7 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.ஆண்டி அடுத்த ஊரையே புகழ்வான்

2.ஆண்டி  குண்டியைத் தட்டினால் பறப்பது சாம்பல்

3.ஆண்டி க்குப் பிச்சையா , அவன் குடுவைக்குப் பிச்சையா

4.ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்

5.ஆண்டியு ம் ஆண்டியு ம் கட்டிக்கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக்கொள்ளும்

6.ஆண்டி  சொன்னால் தாதனுக்குப் புத்தி எங்கே போயிற்று

7.ஆண்டிகள் மட ம் கட்டுவது போல

 tags–ஆண்டி ,பற்றி, பழமொழிகள்

–subham–

மர மண்டையும் மரத்தின் மகிமையும் (Post. 8702)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8702

Date uploaded in London – –18 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கோபமாக வந்தார் வைத்தி.

மர மண்டை , மர மண்டை என்ன சொன்னாலும் புரிய மாட்டேன்கிறது?????

நான் கேட்டேன் “உங்களுக்கு மரத்தைப் பற்றி ஏதாவது

தெரியுமா??? “

அதான்யா வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் கவர்ன்மென்ட்

சொல்லுது. நான் மரத்துக்கு பதிலாக பையனை வளர்க்கிறேன்

ஒரு பிரயோஜனமும் இல்லை…..

உங்கள் பையனை வேண்டுமானால் திட்டுங்கள் பிரயோஜனம்

ஒன்றும்இல்லை என்று…..மரத்தை எதுவும் சொல்லாதீர்கள்……

அப்படி என்னத்தையா கண்டீர் மரத்தைப்பற்றி????

அப்படி கேளுங்க சொல்கிறேன்

ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள் உயிரோடு இருந்தால் அதனால்

மனித சமுதாயத்திற்கு என்னன்ன கிடைக்கும் தெரியுமா????

விஞ்ஞான பூர்வமாக ஒருவர D M தாஸ் எனபவர் ஆராய்ச்சி

செய்து கண்டு பிடித்திருக்கிறார் தெரியுமா????

மனித இனமே கண்டு வியந்திருக்கிறது ஆராய்ச்சி முடிவுகளைக்

கண்டு???

ஒரு ஏக்கரில் உள்ள மரங்களினால் உண்டாகும் பயன்கள்

பிராண வாயு உற்பத்தியின் மதிப்பு. 2 . 5 லட்சம்

காற்றினை சுத்தமாக்க 5 . 0 லட்சம்

பூமியின் மீது உள்ள மண் சத்து குறையாமல்

பாதுகாக்க. 2 . 5 லட்சம்

காற்றில் இருக்கும் ஈரப் பதம் குறையாமல்

பாது காக்க 3 .0 லட்சம்

பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கூடு கட்ட

நிழல் தர. 2 . 5லட்சம்

உணவு சத்து,(பழம், காய், முதலான வற்றால்). 0 . 2 லட்சம்

பூக்கள் மற்றும் விறகு சுள்ளி மூலமாக. 0 . 2 லட்சம்

மொ மதிப்பு 15. 90லட்சம் ஒரு வருஷத்திற்கு ஒரு ஏக்கர் நிலத்தில் கிடைக்கும் லாபம் சுமார் 16 லட்சம்!!!

மேலும் 10 ஏரகண்டிஷன்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து ஓடினால்

எவ்வளவு குளிர்ச்சி ஏற்படுமோ அவளவையும் ஒரே ஒரு மரம் தருகிறது.

18 பேருக்கு ஒரு ஆண்டிற்கு தேவையான பிராண வாயுவை ஓரு

ஏக்கரில் விளைந்த மரங்கள் தந்து விடுகின்றன…….

ஆல், அரசு, வேம்பு , பூவரசு,கல்யாண முருங்கை போன்ற மரங்களின்

கிளைகளை வெட்டு நட்டாலும் பயன் தரும்!!!!

ஒரு ஆல மரம் ஆயிரம் பேர் விடும் மூச்சுக் காற்றையும் ஒரு வேம்பும்

ஒரு அரசும் நூறு பேர் விடும் மூச்சுக காற்றையும் சுத்தப் படுத்தும்

என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!!!

மேலும் அரச மரம் “செராடோனின்” SERATONIN  என்னும்சக்தியை வெளிப்படுத்தி

ஞாபகசக்தியை வழங்குவதோடு அல்லாமல் குழந்தைப பேற்றை நல்கும் மரமாகவும் திகழ்கிறது!!!!

உணவுக்கத்தேவையன தென்னை, மா, பலா,வாழை, முருங்கை,

பப்பாளி இலவ மரம், கறிவேப்பிலை, நெல்லி, அரி நெல்லி,நாரத்தை,

எலுமிச்சை,புளி எனப்பல வகை மரங்களை வளரத்தாலே தமிழகம்

தலை நிமிர்நது நிற்கும்

இளநீர், தேங்காய் கொப்பரை, தே எண்ணெய் நார், கயிறு, சிரட்டைகள்,மாங்காய், மாம்பழம் ,மாம்பழக்கூழ்,நுங்கு பதனீர்

போன்றவைகளும் ஊறு காய்க்கு தேவையான நெல்லிக்காய், மாங்காய், மாவடு, கடாரங்காய், எலுமிச்சை முதலியவற்றை

ஏற்றுமதி செய்தாலேபோதும்அன்னிய செலாணி கிடைப்பதோடு ஏராளமான நபர்களுக்கும் வேலை வாய்ப்பும் கிடைக்கும் .

தேக்கு, வேம்பு, கடம்பு, பலா, போன்ற மரங்கள் வீடு கட்டவும் உப

யோகப்படும்.

மேலும் மருந்து பொருளுக்கு தேவையான மரங்களான மருதாணி

எட்டி, வேம்பு , அஸ்வ கந்தா , மிளகு ,மூலம் நிறைய அன்னிய செலாவணியும் கிடைக்கும் .

மரத்தை மறந்தது மனித இனம்,தண்ணீரின்மையால அழுகிறது.

வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம் நாட்டிற்கு வளம் சேர்ப்போம்.

நன்றி, வணக்கம்

tags—மரம், வளர்ப்போம், மர மண்டை, மகிமை

DO WE NEED RELIGION?- 3 (Post .8701)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8701

Date uploaded in London – – – –18 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

DO WE NEED RELIGION?

RELIGION AS BASIS OF IDENTITY – 3

R. Nanjappa

Religion and National identity

In a way, we can see that the modern states are also coming round to such a view. In the wake of the phenomenon of Muslim immigrants / refugees going to the West, (and not to other Muslim countries) and the problems it poses, there is suddenly a realisation about the national identity of the local people. After the Second World War, these democracies adopted a liberal secular (non-religious) multicultural image. But the Muslim immigrants do not subscribe to this ideal and do not accept its implications. They enjoy the benefits of a liberal secular Western democracy, (which imposes financial and civic burden on the native societies)  but do not accept the secular civil laws. This is a problem because immigrants of today become ‘citizens’ tomorrow! This has forced some introspection on the Europeans.

 Some time ago, former British PM David Cameron reminded his countrymen that after all they were all Christians and it was those values which had shaped their character.

State multiculturalism has failed, says David Cameron- BBC, 5 Feb,2011


The Spectator, 24, December, 2015


Commentator Isabel Hardman noted:

David Cameron says Christian values make Britain successful

Now he seems to think it more important to talk about British identity not just in terms of culture but in terms of faith, which might seem rather intriguing given the general decline in church attendance. But he clearly thinks it’s a point worth making, even if stating that Britain is a Christian country inevitably attracts grumbles, even at Christmas.

Identity- determined by opponents!

It is a rather curious situation. Left to themselves, none bothers about an identity. But when the native people face external threats or are overwhelmed by immigrants who refuse to share their values, however secular they may be painted, the question of one’s own identity crops up. G.K. Chesterton once wrote that our identity is defined by our opponents or critics.As Aleks Krotoski pointed out in The Guardian 15 May 2011:

Historian Peter Furtado argues that the 17th century inspired the evolution of a national identity because Britain had to negotiate who she was within the global scene 


 When immigrants [mainlyMuslims] do not accept secular ideals, how can the British identify themselves- except as saying that they are Christians, ( i.e non-Muslims) after all! [ Even if they are not church-going ones !]

Who are the Americans?

This realisation came to the British rather late.  Writing in 2004, Samuel Huntington had said about the Americans that a mere political ideology would not serve as national identity.

He said in his book “Who Are We ?”:

“adherence to the American Creed is by itself not enough to sustain an American identity. An example of a state that attempted to use ideology alone was the Soviet Union, which attempted to impose communism on different cultures and nationalities, and eventually collapsed. A similar fate could lie in store for the United States unless Americans “participate in American life, learn America’s language [English], history, and customs, absorb America’s Anglo-Protestant culture, and identify primarily with America rather than with their country of birth”.

 In particular, Huntington suggests that Americans turn to Protestantism, and recognize that what distinguishes America from other countries is that it is an extremely religious Western country, founded on the principles of the Enlightenment and Protestant Reformation. [Wikipedia ]

So, after all the looney talk we have heard on secularism, multiculturalism, etc, all these years, we now realise how valuable it is , how indispensable, for  a people to have a national identity based on religion!

Will Hindus learn any lessons from this ?

After all, Muslims and Christians in India have their identities firmly and formally established as Religious Minorities. So, where do Hindus stand? This has to be explored separately

                               ***                         Concluded

tags-  need, religion- 3

காயத்ரி மந்திர மஹிமை – 24 அக்ஷரங்களின் மஹிமை! (Post 8700)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8700

Date uploaded in London – – 18 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

காயத்ரி மந்திர மஹிமை – 24 அக்ஷரங்களின் மஹிமை!

ச.நாகராஜன்

முக்கிய குறிப்பு!

facebook.com/gnanamayam நிகழ்ச்சியில் 14-9-2020 அன்று ஆற்றிய உரையில் நேரத்தைக் கருதி சில கருத்துக்கள் விடப்பட்டிருந்தன. அவற்றை இங்கு காணலாம்.

குற்றாலத்தில் ஒரு சம்பவம்!

காயத்ரி மந்திரம் தன்னைச் சரணடைந்து ஓதுபவர்களைக் காப்பாற்றும் என்பதை விளக்க இன்னும் ஒரு சம்பவம்.

இது சமீப காலத்தில் நிகழ்ந்த ஒன்று. இதை 2-8-1998 தேதியிட்ட தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் பெரிதாக வெளியிட்டன.

குற்றாலத்திற்குச் சுற்றுலா சென்ற 24 வயது இளைஞர் கல்யாண்குமார், மலை மேலுள்ள தேனருவிக்கு நண்பர்களுடன் சென்றார். குறுகிய பாதை ஒன்றைக் கடக்க அவர்கள் முயன்ற போது திடீரென்று அவரைக் காணோம். நண்பர்கள் அலறினர். கீழே விழுந்து வெள்ளமெனை விழும் அருவிப் பெருக்கில் அவர் அடித்துச் செல்லப்பட்டார் என்று அனைவரும் முடிவு செய்தனர். தேடுதல் வேட்டை ஒன்று தொடங்கியது. மூன்று நாட்கள் கழிந்தன. பயன் ஒன்றும் இல்லை. உடலும் கிடைக்கவில்லை. நெல்லை மாவட்ட வனத்துறை அதிகாரி மனோஜ் குமார் சர்க்காரியா முனைப்புடன் தேடுதலில் இறங்கினார். முத்துக் குளிப்பவர்களை அழைத்துத் தேடச் சொன்னார். அதில் ஒருவர் இருண்ட குகை ஒன்றில் இருட்டில் ஒரு உருவத்தைக் காண்கிறேன் என்றார். உடனே அந்தப் பக்கம் தண்ணீர் செல்வதை பாறைகளை வைத்து அணை கட்டித் தடுத்து நிறுத்தினார் அவர்.

குகையின் நடுவில் ஒரு ஓட்டை போடப்பட்டது. யார் அங்கே இருப்பது என்ற கேள்விக்கு அந்த இளைஞர் பதில் தரவே ஓட்டை பெரிதாகப் போடப்பட்டு பிஸ்கட், குடி நீர் வழங்கப்பட்டது. பின்னர் பல மீட்பு வீரர்கள் பெரிய துவாரம் ஒன்றைப் போட்டு உள்ளிறங்கி அவரை மீட்டனர்.

“எப்படி மூன்று நாட்கள் கழித்தாய்?” என்று கேட்ட போது இடைவிடாது காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருந்தேன். காயத்ரி தேவி என்னைக் காப்பாற்றி விட்டாள்” என்றார் அவர்.

அக்ஷரங்களின் பயன்!

ஒவ்வொரு அக்ஷரமும் ஒவ்வொரு பயனைத் தரும்.

தத் என்பது பிரம்ம ஞானத்தையும்

‘ஸ’ என்பது சக்தியை நல்வழியில் பயன்படுத்தலையும்,

‘வி’ என்பது நல்ல வழியில் செல்வத்தைப் பயன்படுத்தலையும்,

‘து’ என்பது தைரியத்தையும்,

‘வ’ என்பது பெண்மையின் சிறப்பையும்,

’ரே’ என்பது வீட்டிற்கு வரப் போகும் இல்லத்தரசியையும் அவள் குடும்பத்திற்கு கொண்டு வரும் நலனையும்,

‘ண்யம்’ என்பது இயற்கையை வழிபடுதலையும்,

‘பர்’ என்பது நிலையான மனத்தின் கட்டுப்பாட்டையும்,

‘கோ’என்பது ஒத்துழைப்பு மற்றும் பொறுமையையும்,

தே என்பது எல்லாப் புலன்களும் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதையும்,

‘வ’ என்பது தூய்மையான வாழ்க்கையையும்,

‘ஸ்ய’ என்பது மனிதன் இறைவனுடன் ஒன்றுபடுவதையும்,

‘தீ’ என்பது எல்லாத் துறைகளிலும் எல்லாவித வெற்றி பெறுதலையும்,

‘ம’ என்பது இறைவனது நீதி மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டையும்

‘ஹி’ என்பது நுண்ணறிவையும்,

‘தி’ என்பது வாழ்க்கை மற்றும் மரணத்தையும்,

‘யோ’ என்பது தர்ம நெறிப்படியான வாழ்க்கையைப் பின்பற்றுவதையும்,

‘யோ’ என்பது வாழ்க்கை சேமிப்பையும்

‘நஹ’ என்பது எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பையும்,

’ப்ர’ என்பது நடக்கப்போவதை அறிவது மற்றும் நல்ல காரியங்களுக்கு உதவி செய்வதையும்,

‘சோ’ என்பது அறநெறி நூல்களைப் படிப்பதையும் மகான்களின் தொடர்பு ஏற்படுதலையும்

‘த’ என்பது ஆன்மாவை அறிதல் மற்றும் ஆத்மானந்தத்தையும்

‘யா’ என்பது சத் மக்கட்பேற்றையும்

‘த்’ என்பது வாழ்க்கையில் உள்ள ஒழுக்கக்கட்டுப்பாட்டையும் ஒத்துழைப்பையும் குறிக்கிறது.

காயத்ரி மந்திர தேவதைகள்!

ஆக்னேயம், பிரஜாபத்தியம், ஸௌம்யம், ஸமானம், சாவித்திரம், ஆதித்யம், பார்ஹஸ்பத்யம், மைத்ராவருணம், பகதெய்வதம், ஆர்யமைஸ்வரம், கணேசம், துவாஷ்ட் ரம், பௌஷ்ணம், ஐந்திராக்னம், வாயவ்யம், வாமதேவ்யம், மைத்ராவருணி, வைஸ்வதேவம், மாத்ருகம், வைஷ்ணவம், வததெய்வம்ஸும், ருத்ரதெய்வதம்,  கௌபேரம், ஆஸ்வினம் ஆகியவை காயத்ரி மந்திரத்திற்குள்ள 24 தேவதைகள்.

மஹா பாபங்களைப் போக்கடிப்பதாகவும், பரம சிரேஷ்டமாகவும் உள்ள இந்த இருபத்துநான்கும் தெய்வங்களாகச் சொல்லப்படுகின்றன.

இவைகளைக் கேட்ட மாத்திரத்தில் சாங்கமாகக் காயத்ரியை ஜபம் செய்தால் எந்தப் பயனுண்டாகுமோ அந்தப் பயன் உண்டாகும்.

மேலே கூறிய  24 காயத்ரி மந்திர தேவதைகள் தேவி பாகவதத்தில் பன்னிரெண்டாம் ஸ்கந்தத்தில்  முதல் அத்தியாயத்தில் தரப்படும் அபூர்வமான விவரங்களாகும்.

**

tags– காயத்ரி,  24 அக்ஷர மஹிமை, 

INDEX 25 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post No.8699)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8699

Date uploaded in London – –17 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

INDEX 25 FOR LONDON SWAMINATHAN’S  ENGLISH & TAMIL ARTICLES 

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 8500 PLUS POSTS.

DECEMBER 2014

1534.THE WONDER THAT IS TAMIL – PART  3; 31 DECEMBER 2014

1533. நமது உடலுக்கு ஒன்பது வாசல்! நவத்வார புரி!31/12

1532. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1531. CITY OF NINE GATES, 30/12

1530.அதர்வ வேத மூலிகை மர்மம்! ஜங்கிடா மூலிகை! 30/12

1529. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1528. Jangida Mystery in Atharva Veda! 29/12

1527.S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1526.Kalidasa’s Women and Tamil Women 28/12

1525. மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள் 27/12

1524. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1523.31 Indian Quotations on Mind!27/12

1522. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1521. தமிழ், சம்ஸ்கிருத இலக்கியத்தில் மோதிரங்கள்! 27/1

1520.Four Gold Rings in Ramayana and Kalidasa’s Works

1519: வடமொழி, தமிழ் மொழி பற்றி இலக்கண வித்தகர்கள் கூற்று

1518. தமிழுக்கு எத்தனை பெயர்கள்?- பகுதி 2,, 27/12

1517. 16 Virtues of Great Kings; 25-12

1516. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1515. பஞ்சபூதங்களைக் கண்டுபிடித்தது யார்?  25/12

1514 Who discovered Five Elements/Pancha Bhuta? 24/12

1513. தொல்காப்பிய அதிசயங்கள்- Part 2, 24/12

1512. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1511. Tamil’s ban on Ca, Nja, Ra, La!, 23/12

1510. . S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1509. ‘’ச’’ – எழுத்துக்கு தொல்காப்பியன் தடை விதித்த மர்மம் என்ன?,23/12

1508. Tamil Talent beyond Belief!, THE WONDER THAT IS TAMIL-PART 1, 22/12

1507. அதிசயத் தமிழ், அற்புதத் தமிழ், விந்தைத் தமிழ், 22/12

1506. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1505. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1504. Amazing Tamil-Sanskrit Similarities! Helps to decipher Indus Script! 21/12

1503. அற்புத ஒற்றுமைகள்! தமிழும் சம்ஸ்ருதமும் ஒன்றே!! 21/12

1502. Tamil and Sanskrit: Rewrite Linguistics Theory, 20/12

1501. Vedas and the Scientist, 20/12

1500. தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்!, 20-12

1499. Sanskrit and Tamil have Common Ancestry!, 19/12

1498. சம்ஸ்கிருத மொழி அதிசயங்கள்!, 19/12

1497. The Richness of Vedic Language! 18/12

1496. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1495. புல், ஊசி, கண்ணாடி, முள் உவமைகள், 18/12

1494. Humour in Sanskrit Literature, 17-12

1493. . S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1492. Interesting similes in Mahabharata, 16/12

1491. வால்மீகி ராமாயணத்தில் 3462 உவமைகள்! 16/12

1490. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1489. Similes in Sanskrit Literature, 15/12

1488. Amaru Satakam : Sanskrit Love Poems, 15/12

1487. மிதிலையில் ராமன் கண்ட பரத நாட்டியம்!! 15/12

1486. Strange Names for Unknown Poets of Rig Veda and Tamil Literature!,14/12

1485. Saivism in Cambodia, 14/12

1484. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1483. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1482. சங்க காலத்தில் வரதட்சணை!, 13/12

1481. ஐரோப்பாவில் ஓம் சின்னம்! 4000 ஆண்டுக்கு முந்தையது!, 13/12

1480. OM symbol in Europe (2000 BCE)!, 12/12

1479. சங்க காலத்தில் கோவில்கள் இருந்ததா?,12/12

அகநானூறு அதிசயங்கள்– பகுதி 3

1478. Why did Shah Jahans son translate Upanishads?, 11/12

1477. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1476. பிரிட்டனில் பாண்டியர் சின்னம்; கீதையில் ஏசு!!, 11/12

1475. 100 யானைகளை மலையிலிருந்து உருட்டிவிட்ட ஹூண மன்னன்!,11/12 ,

ராஜதரங்கிணி அதிசயங்கள் – பகுதி-2

1474. தமிழில் பழ மறையைப் பாடுவோம்: பாரதியார்,11/12

1473. Jesus name in Bhagavad Gita! Tamil Fish symbol in Britain!!,10/12

1472. . S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1471. List of 121 Upanishads, 9/12

1470. ராஜதரங்கிணி அதிசயங்கள் – பகுதி 1,9-12

1469. அகநானூறு அதிசயங்கள்– பகுதி 2, 9/12

1468. Kashmiri King who attacked Tamil Nadu and Sri Lanka, 8/12,

Rajatarangini Wonders – Part 2

1467. . S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1466.அகநானூறு அதிசயங்கள்– பகுதி 1, 8/12

1465.Nehru on Rajatarangini, 7/12

1464.. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1463. Origin of Drama in Ancient India and Egypt, 6/12

1462. கலியுகம் பற்றிய விஞ்ஞான விந்தை: உலகம் அழியுமா?,6/12

1461. Hindu Dwarfs in Egypt?, 5/12

1460. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1459. வியாசருக்கு இரண்டு நோபல் பரிசுகள் தருக!,5/12

1458. Science behind Hindu’s Four Ages (Chatur Yugas): Magnetogeddon may destroy the World!, 4/12

1457. சிரியா நாட்டில் இந்துக் கோவில்!, 4/12

1456. Hindu Eye Goddess Temple in Syria?,3/12

1455. Vyasa deserves Nobel Peace Prize and Literature Prize!,3/12,

1454. பத்து கட்டளைகள்! பகவத் கீதையிலிருந்து!!, 3/12

1453. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1452. Ten Commandments from the Bhagavad Gita,2/12

1451. கொங்கர் உள்ளி, ஹோலி, சுமேரிய புருள்ளி விழாக்கள் ஒன்றா?2/12

1450. Holi, Ulli, Purulli: 3 Interesting Festivals in India and Sumer, 1 DECEMBER, 2014

1449. குறுந்தொகை அதிசயங்கள், 1 DECEMBER, 2014

2014 POSTS FINITO

XXXX

 index 25, London Swaminathan, articles, posts, year 2014 December