அடடா தப்பாப் போச்சே……! Part-2 (Post.8999)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 8999

Date uploaded in London – – 5 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அடடா தப்பாப் போச்சே……! part-2

                                                 Kattukutty

மெகாசீரியல் இயக்குனரோட பொண்ணை கல்யாணம் செய்து

கிட்டது தப்பாப் போச்சே???

ஏன்???

கடைசிவரைக்கும் என் பொண்ணை சிரிக்காம பாத்துக்கோங்க

என்று சொல்றாரே???

xxx

தலைவரை பொங்கல் விழாவிற்கு கூப்பிட்டது தப்பா போச்சு

ஏன்???

பானையைப் பார்த்ததும் சாராயம் காய்ச்ச ஆரம்பிச்சுட்டாரு….

xxxx

அந்த கோடீஸ்வரன் வீட்டுக்கு திருடப்போனது தப்பாப் போச்சு

ஏன்???

செல்லாத 1000/500 ரூபாய் நோட்டுகள அடுக்கி வச்சிருக்காரு???

xxxx

கபாலிய ஆட்டோவில ஏத்தினது தப்பாப் போச்சு

எப்படி???

மீட்டருக்கு மேல ஏதாவது கேட்போம்ன்னு பாத்தா மீட்டரையும்

காணோம் கபாலியையும் காணோம்???

xxxx

அரசியல்வாதியை திருமண விழாவிற்கு கூப்பிட்டது தப்பா போச்சு

ஏன்???

இருபதாம் நம்பர் டோக்கன் கொடுத்து மொய் பணத்தை அப்புறம்

வந்து வாங்கிக்கன்னு சொல்லிட்டாரு……….

xxxx.

பிளம்பரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சே???

எப்படி???

தினமும் குழாய் புட்டு பண்ணித்தரச் சொல்லி தொல்லை பண்றார்??

xxxx

கஞ்சி தொட்டியைத். திறக்க மகளிரணித் தலைவியை கூப்பிட்டது

தப்பாப் போச்சு

ஏன்???

கஞ்சி போடறதுக்கு 4 காட்டன் புடவையை எடுத்திட்டு வந்துட்டாங்க ……..

xxxx

அந்த பாகவதர் கச்சேரிக்கு போனது தப்பாப்போச்சு….

ஏன்???

அந்தக் கச்சேரி ஆரம்பக்கும் போது “கச்சேரி கேட்க வந்தவர்களுக்கு

ஒரு அறிவிப்பு – தயவு செய்து முழு கச்சேரியையும் முடியும் வரை கேளுங்கள்

வெளியே செல்ல முயற்சிக்க வேண்டாம்.வெளியே

மின் வேலி அமைத்துள்ளோம்”………..

xxxx

அந்த குழந்தைப் பட டைரக்டரை கல்யாணம் பண்ணிக்கிட்டது

தப்பாப் போச்சு

எப்படி???

முதலிரவு அறையில் பொண்ணு பால் கொடுத்ததும் பிஸ்கோத்து

ஆன்டின்னு கேட்கறார்???

xxxxx

கொத்தனாரை கட்டிக்கிட்டது தப்பாப்போச்சு

ஏய் என்ன சொல்லற???

சமையல் வேலை செய்யச்சொன்னா சித்தாளு இல்லாம வேலை

செய்ய முடியாதுங்கராரே????

xxxxx

போலீஸா இருந்த பொண்ண நர்ஸ் வேலைக்கு சேர்த்தது

தப்பாப் போச்சு….

ஏன் டாக்டர்???

நோயாளியை “டிஸ் சார்ஜ்” செய்யச்சொன்னா “லத்தி சார்ஜ்”

பண்ணி அனுப்பிச்சிட்டா………

xxxxx

பஸ் கண்டக்டரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு

எப்படி???

சாமான்கள் எடுக்கக்கூட ஏணிப்படிலே நிக்காதேன்னு கூச்சல்

போடறார்………

xxxxx

ஜெயில்ல ஏதாவது வசதி வேணுமான்னு நீதிபதி கைதி கிட்ட கேட்டது தப்பா போச்சு….

ஏன்?? என்ன ஆச்சு???

அவன் பார் வசதி வேணும்ன்னு கேட்டான்!!!

xxxx

குடிகாரரை கட்டிக்கிட்டது தப்பாப் போச்சு

ஏன்??

தினம் தினம் விதம் விதமாய் ஊறுகாய் செய்யச்சொல்லி உயிரை

வாங்குறார்……….

xxxx

நேர்மையான அதிகாரிகளை விலைக்கு வாங்க முடியாதுன்னு

தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சு…..

ஏன்???

அப்ப இரண்டு நாளைக்கு வாடகைக்காவது வாங்குங்கங்கிறார்….

xxxxx….

ஆட்டோ டிரைவரை திருமணம் செஞ்சிகிட்டது தப்பாப் போச்சு

ஏன்???

வீட்ல கூட “ஆட்டோ”ன்னு கூப்பிட்டாத்தான் திரும்பி பார்க்கிறார்!!!

xxxx

தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து தப்பாப் போச்சு???

ஏன்???

தன் கார் நம்பரை 108 ன்னு மாத்துங்கரார்……..

தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சு

எப்படி???

அவர் மனைவிக்கு “நர்ஸ்” பட்டம் கோடுக்கணுமாம்!!,!

xxxx

ஒர்க்ஸ் ஷாப்லே வேல பாத்தவரை கல்யாணம் பண்ணிக்கிட்து

தப்பா போச்சு…..

ஏன்???

குளிக்க போறபோது கூட “வாட்டர் சர்வீஸ்” பண்ணிட்டு வந்துடறேன்

என்கிறார்……..

xxxx

ஜோஸியரோட பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா

போச்சு……..எப்படி???

வாஸ்து பிரகாரம் நான் திண்ணையில் தான் படுக்கணுமாம்????..

xxxx

அரசியல்வாதியை பெண் பார்க்க அழைத்தது தப்பா போச்சு….

எப்படி???

பொண்ணு புடிச்சிருக்கான்னு கேட்டதுக்கு பொதுக்குழு

கூடி முடிவு செய்யம்ன்னுட்டார்!!!

xxxx

ஜோக் எழுத்தாளர காதலிச்சது தப்பா போச்சு…..

ஏன்???

லவ் லெட்டர நாலு வரிக்கு மேல எழுத மாட்டேன்கிறார்

xxxxx

கவர்மென்ட் ஆபீஸுல வேல பாக்கறவர கல்யாணம் பண்ணிகிட்டது

தப்பா போச்சு….

ஏன்???

கவர்ல ரூபாய வைச்சு கைல கொடுத்தாதான் வேலையையே பார்க்க

ஆரம்பிக்கிறாரு……..

xxxx

விதண்டாவாதம் செய்யிற ஆளுக்கு ஜோசியம் சொன்னது

தப்பாப் போச்சு

எப்படி???

உங்களுக்கு ஏழரை நாட்டு சனி பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு

அது என்னன்ன நாடுன்னு கேட்கிறாரு???

xxxxx

டீச்சர பொண்ணு பார்க்க போனபோது பாடச் சொன்னது

தப்பா போச்சு…..

எப்படி???

பா பா பிளாக் ஷீப்ன்னு ரைம்ஸ் பாட ஆரம்பிச்சுட்டா!!!!

      tags- அடடா தப்பாப் போச்சே-2, கல்யாண, பொண்ணு, ஜோக்ஸ்,

                   *** SUBHAM ****

ஸ்ரீ அரவிந்த ரகசியம்! (Post No.8998)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8998

Date uploaded in London – – 5 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

டிசம்பர் 5 அரவிந்தர் சமாதி தினம்

ஸ்ரீ அரவிந்த ரகசியம்!

ச.நாகராஜன்

1

மிக பிரமாண்டமான தெய்வீக அறிவும் அருளும் ஸ்ரீ அரவிந்தர் உருவில் பூமியில் அவதரித்தது.

அவரது அருளுரைகள், சம்பாஷணைகள் ஆகிய அனைத்தும் நமக்கு உள்ளது உள்ளபடி கிடைத்துள்ளன.

அரவிந்த இலக்கியம் மிகப் பரந்தது. அதை ஆழ்ந்து உன்னிப்பாகக் கற்றால் அனைத்து நலன்களும் கிடைக்கும்.

அரவிந்தருடன் அன்றாட வாழ்வில் நெருக்கமான சிஷ்யர்களாக பலர் இருந்துள்ளனர்.

நிரோத்பரன், சம்பக்லால்,  நளினி காந்த குப்தா (நளினி தா என்று அனைவராலும் அறியப்படுபவர்), போன்றோர் தங்களின் அனுபவங்களை எழுதி வைத்துள்ளனர்.

அரவிந்தர் அவதரித்த நாள் : 15, ஆகஸ்டு, 1872

அரவிந்தர் சமாதி தினம் : 5, டிசம்பர் 1950

அரவிந்தர் புதுச்சேரியை அடைந்த நாள் 4, ஏப்ரல், 1910

படிக்கத் தெவிட்டாத அரவிந்த இலக்கியத்தைப் படிப்பவர்கள் பாக்கியசாலிகளே!

சில துளிகளை இங்கே காண்போம் : உத்வேகம் பெற்று முழுவதையும் படிக்க முனைவதற்காக!

2

ஸ்ரீ அரவிந்தர் :

It is a fact that I was hearing constantly the voice of Vivekananda speaking to me a fortnight in the jail in my solitary meditation and felt his presence.

சிறைச்சாலையில் எனது தனிப்பட்ட தியானத்தின் போது விவேகானந்தரின் குரலை இரு வாரங்கள் தொடர்ந்து நான் கேட்டுக் கொண்டிருந்தது உண்மை தான். அவர் என் முன் இருப்பதையும் உணர்ந்தேன்.

3

ஸ்ரீ அரவிந்தர் :

Put yourself with all your heart and all you strength into God’s hands. Make no conditions, ask for nothing, not even for siddhi in the yoga, for nothing at all except that in you and through you His will may be directly performed.

உன்னை முழுமையாக உன் இதயத்துடனும் முழு வலிமையுடனும் கடவுளின் கையில் ஒப்படை. ஒரு நிபந்தனையையும் விதிக்காதே. எதையும் கேட்காதே – யோக சித்தியைக் கூடத் தான்! ஏனெனில் உன் மூலமாகவும் உன்னிலும் அவனது விருப்பம் நேரடியாகவே நடைபெறும்.

4

10, டிசம்பர், 1938

மாலை ஏழு  மணி.

டாக்டர் மணிலால் : நீங்கள் ஏன் பாண்டிச்சேரியை உங்கள் சாதனைக்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்தீர்கள்?

ஸ்ரீ அரவிந்தர் : ஏனெனில் ஒரு கட்டளையினால், ஒரு ஆதேஷினால். இங்கு வருமாறு ஒரு குரலினால் கட்டளையிடப்பட்டேன்.

16/17 டிசம்பர் 1938

நிரோத்பரன் : அன்றொருநாள் நாம் கவிதையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது நீங்கள் வேதத்திலிருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்டினீர்கள். வேதம் மற்றும் உபநிடத மந்திரங்கள் எப்படி இயற்றப்பட்டன என்பதை அறிய நான் விரும்புகிறேன். உண்மையாகவே அவை ரிஷிகளால் கேட்கப்பட்டது போலத் தோன்றுகிறது. உள்முகமாக கேட்கப்பட்டவையா அவை?

ஸ்ரீ அரவிந்தர் : ஆம், அவை உள்ளிருந்து கேட்கப்பட்டவையே. சில சமயம் ஒரு வரியோ அல்லது ஒரு பகுதியோ அல்லது ஒரு முழுக் கவிதையோ ஒருவரால் கேட்கப்படுகிறது. சில சமயம் அவை தானாகவே வருகின்றன. மிகச் சிறந்த கவிதை அப்படித்தான் எப்போதுமே எழுதப்படுகிறது.

20, டிசம்பர் 1938

டாக்டர் சவூர் (DR Savoor) :சில யோகிகள் உடலில் ஏற்படும் வலியையும் கஷ்டத்தையும் போக்க, அதிலிருந்து விடுபட, சமாதி நிலைக்குச் செல்கிறார்கள். ஆனால் மற்றும் சிலரோ அப்படிச் செய்யாமல் வலியைப் பொறுத்துக் கொள்கிறார்கள்.

நிரோத்பரன் : ராமகிருஷ்ண(பரமஹம்ஸர்) அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்.

ஸ்ரீ அரவிந்தர் : ஆம், யோகிகள் சமாதி நிலையை எய்தி சம்ஸ்காரத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வரலாம்.  ஆனால் வலியிலிருந்து நிவாரணம் பெற ஒருவர் சமாதிக்குச் செல்வதால் என்ன பயன் என்று எனக்குத் தெரியவில்லை. மாறாக, ஒருவர் வியாதியைப் பொறுத்துக் கொள்ள நினைத்தால் அது அதை ஒருவிதமாக ஏற்றுக் கொள்வதாக எனக்குத் தோன்றுகிறது.

ஒரு முறை மிகத் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட போது ராமக்ருஷ்ணர் கேசவ சேனரிடம் தனது உடல் ஆன்மீக முன்னேற்றத்தின் அழுத்தத்தினால் உடைந்து போகிறது என்றார். ஆனால் ஆன்மீக முன்னேற்றமானது எல்லா சமயத்திலுமே வியாதியில் கொண்டு விடும் என்பதில்லை.

நிரோத்பரன் : ராமகிருஷ்ணர் நினைத்திருந்தால் அவர் வியாதியைத் தடுத்திருக்கலாம், இல்லையா?

ஸ்ரீ அரவிந்தர்: ஆம், ஆனால் அவர் தனது இச்சையை உபயோகிப்பதிலோ  அல்லது வியாதி குணமாக தெய்வீக சக்தியிடம் பிரார்த்தனை செய்வதிலோ நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

நிரோத்பரன்: அவர் தனது சீடர்களின் பாவத்தினால் (sins) தான் கான்ஸர் நோயை அடைந்தார் என்று கூறப்படுகிறதே.

ஸ்ரீ அரவிந்தர் : அதை அவரே சொல்லி இருக்கிறார் என்றால் அது உண்மையாகத் தான் இருக்க வேண்டும். சீடர்களின் விஷயங்களை குரு தான் ஏற்க வேண்டும்.

(சம்பாஷணை நீண்டு தொடர்கிறது)

7

இது போல நூற்றுக்கணக்கான விஷயங்களைப் பற்றி அரவிந்தரிடம் அணுக்கத் தொண்டர்கள் பேசி தெளிவு பெற்றிருக்கின்றனர்.

அனைத்தையும் நிதானமாகப் படித்தால் ஆன்மீக முன்னேற்றத்தை அடைவதோடு உலகில் நாம் வாழும் வாழ்க்கையைப் பற்றிய பல ரகசியங்களையும் அறியலாம்; சில புரியாத புதிர்களுக்கு விடைகளையும் காணலாம்.

அரவிந்தரைக் கற்போமாக; ஆன்ம உயர்வு பெறுவோமாக!

***

ஆதாரம் : அரவிந்த இலக்கியத்தில் பல நூல்கள்

1.Reminiscences and Anecdote of Sri Aurobindo my M.P.Pandit

2.Prayer and Mantra Published by Sri Aurobindo Society, Pondicherry -2

3. The Incarnate World – Talks with Sri Aurobindo – Nirodbaran

tags– அரவிந்த ரகசியம், அரவிந்தர்

‘ராஜ புருஷன்’ ஆநய ; ராஜாவா ? வேலை ஆளா ? (Post No.8997)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8997

Date uploaded in London – –4 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

“டுக்ருஞ் கரனே” என்ற பாணினி சூத்திரத்தை ஆதிசங்கரர் பஜகோவிந்தம் துதியில் முதல் பாடலில் பாடியதை செப்டம்பர் 21 பதிவில் குறிப்பிட்டேன்.(பாணினி சூத்ரம் 1-3-5 விளக்கம்- தாது பாடம் 8-16)

கல்லார்க்கும் கற்றவர்க்கும் என்ன வேறுபாடு என்பதை மற்றொரு  சூத்திரத்தில் விளக்குகிறார்.

சூத்திரம் 1-2-56-ல் எதை கற்பிக்க வேண்டும், எது கற்பிக்காமலேயே எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்பதை விளக்குகிறார்.இதற்கு பாஷ்யக்காரர் (உரை  ஆசிரியர்) விளக்கம் தருகிறார்.,

“ராஜ புருஷன் ஆனய” என்றால் ராஜ புருஷனை அழைத்து வா என்று பொருள். படித்தவனாக இருந்தால் இது ராஜாவினிடம் வேலை பார்க்கும் ஆள் என்பது விளங்கும். அவன் ராஜாவிடம் வேலை பார்க்கும் ஆளை அழைத்து வருவான்.இலக்கணமே அறியாதவனாக இருந்தால் ராஜாவை அழைத்து வா என்று நினைத்து பிரமித்து நிற்பான் . ராஜாவை எப்படி நான் அழைத்து வருவது என்று திகைத்து நிற்பான்.

இதிலிருந்து சொற்களின் பொருள் அதன் வழக்கிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது என்ற உண்மை  புலனாகிறது .

இதற்கு அடுத்த சூத்திரத்தில் பாணினி இன்னும் ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்கிறார்.

காலம் பற்றிய விஷயத்துக்கு விதியமைப்பதும் தேவை இல்லை (1-2-57) என்று செப்புகிறார். இலக்கணமே கற்காதவர்கள் கூட இன்று இதைச் செய்யவேண்டும், நேற்று அதைச் செய்தேன் என்று இலக்கணப்படி பேசுகிறார்கள் . அதனால் இதற்காகத் தனி விதி அமைக்கத் தேவையில்லை என்கிறார். பாணினி மேலே குறிப்பிட்டவற்றை வரையறுக்கவில்லை என்பது குறிப்பிட்டது தக்கது.

tags– ராஜ புருஷன், ஆநய ,

–subham–

TAMIL WORDS IN ENGLISH – PART 41 (Post No.8996)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8996

Date uploaded in London – –4 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

LET US LOOK AT WORDS BEGINNING WITH ‘W’’

READ MY ARTICLE THE MYSTERY OF J AND Y IN ENGLISH. SAMUEL JOHNSON, THE FATHER OF ENGLISH DICTIONARY HAD ONLY 24 LETTERS IN HIS DICTIOANRY. NO J AND NO V ! FOR HIM V AND W ARE SIMILAR. IT IS TRUE. V AND W LETTERS IN ENGLLISH HAVE SIMILAR SOUNDS. SO FOR LINGUISTS V AND W ARE SAME. THE REASON I AM SAYING HERE IS THAT I ALSO TREAT W AS V. THAT MEANS V=P/B, V= M ARE APPLICABLE HERE ; IN OTHER WORDS W=P/B, W=M

சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் சாமுவேல் ஜான்சன் வெளியிட்ட முதல் ஆங்கில அகராதியில்  J , V, ஜே , வி ஆகிய எழுத்துக்கள் இல்லை. 24 எழுத்துக்களே இருந்தன  வி- யு ம் டபிள்யூவும் V=W ஒரே உச்சரிப்பு உடையவை. ஆகவே நாமும் வி-க்கு பயன்படுத்திய அதே விதிகளைப் பின்பற்றுவோம்; V=P/B வ=ப; வ=ம V=M  என்பன டபிள்யுக்கும் பொருந்தும் . மேலும் டபிள்யூ -வில் துவங்கும் QUESTION கேள்வி சொற்கள் தமிழில் யெ / எ என்று ஒரே மாதிரியாக மாறுவதைக் காணுங்கள்  டபிள்யூ = எ / யெ

XXXX

W.1.WORLD- ULAGA IN TAMIL; LOKA IN SANSKRIT.உலக/ லோக

W.2.WITHER – UTHIR, VITHARNTHU உதிர், விதிர் ந்து

W.3.WIND/VERB – VALAINTHU வளைந்து

W.4.WIND/NOUN – VAATA, VAAYU IN SKT; WALI IN TAM.; D/T=Lவாத, வாயு, வளி

W.5.WAR – POR, PARANI ; W=P போர் /பரணி

W.6.WONDER – VINOTHA, VINTHAI IN SKT.விந்தை, விநோத

W.7.WARP, WEFT, WEAVE- PAAVU, EUDU NUUL; W=Pபாவு நூல், ஊடு  நூல் ; நெய்

W.8.WHORE – VESI IN SKT.வேசி 

W.9.WARD – VAARISU, VADU/SON IN SKTவாரிசு, வடு/மகன்

W.10.WEALTH – ARTHA, VITTAM IN SKT.; VALAM, VALAMAI IN TAM.PORUL அர்த்த, வித்தம் = வளம் , வளமை .

பொருள், அர்த்தம் ஆகிய இ ரண்டுக்கும் தமிழ், சஸ்கிருதம் ஆகிய மொழிகளில்  ஒரே பொருள்தான்

AMAZINGLY TAMIL AND SKT. HAVE TWO SIMILAR MEAINGS

ARTHA= WEALTH, MEANING

PORUL= WEALTH, MEANING

W= YE, E IN TAMIL

W.11. WHO – YAAR யார்

W.12. WHY – YEN ஏன்

W.13. WHAT – YENNA என்ன

W.14. WHERE – YENGE எங்கே

W.15. WITH – WUDAN உடன்

W.16. WHEN – YEPPOTHU எப்போது

W.17. WATER – UDAKA, VODKA AND VOLGA IN RUSSIAN உதக, வோட்கா வோல்கா /ரஷியன்

V.18. WOMAN – UMA உமா

W.19.WIFE = BAARYAA IN SKT; W=B; BEEVI IS MIRROR IMAGE OF WIFE; பார்யா

W.20. WELL(GOOD) – NALLA நல்ல

W.21.WILD- VILANGU- விலங்கு போல

W.22. WHITE – S/WETHA IN SKT; VEN, WENMAI, VELLAI IN TAM. வெண் வெள்

W.23.WEAVE – VEY, VETTI/VESHTI ; ALSO SEE WARP AND WEFT AND VASTRA/VESTவேய் /நெய் பாவு

W.24. WHILE AWAY – ULLAASAMAAKA உல்லாசமாய்

W.25. WHINE – VIMMU விம்மு

W.26. WAIL – AZU/ AU அழு

W.27. WIDOW – VIDHAVA விதவை

W.28.WADE, INVADE- EDU, PADAI EDU எடு , படை எடு

W.29. WILL – UYIL; WILLANGA; உயில்; வில்லங்கம்

W.30. WEIRD – WIZARD, VISARU/CRAZY; விசர் ; விசறு

LOOK AT W IN TAMIL; IT I UNIFORMLY PRONOUNCED ‘YE’

WHEN I TAUGHT TAMIL AT THE UNIVERSITY OF LONDON FOR 20 YEARS FOREING STUDENTS TELL ME , SIR, SOMETIMES YOU SAY ENNA/WHAT AND SOMETIMES YENNA/WHAT. I TELL THEM BOTH ARE SAME. IN SPOKEN LANGUAGE WE MOSTLY USE YENNA INSTEAD OF ENNA.

என்ன = ‘யெ’ ன்ன

பிருஹஸ்பதி என்றால் அறிவில் சிறந்தவன் என்று பொருள்; காலப்போக்கில் “அவன் சரியான பிருஹஸ்பதி” என்று கிண்டல் தொனியில் பேசி பொருளை மாற்றிவிட்டனர். அது போல “விசறு” என்பதும்.

பறையர்கள் இறைவனின் புதல்வர்கள் என்று சொல்லி காந்திஜி “ஹரிஜன்” என்று பெயர் சூட்டினார். ஆனால் ஹரிஜன என்பதும் உயர்ந்த பொருளை இழந்து விட்டது. இப்பொழுது ‘தலித்’ வந்திருக்கிறது!

W.31. WRITE – Y/EZUTHU/ Y/EUTHU; R=L எழுது

W.32. WORK – UZAI/ ULAIPPU; R=L உழை

W.33. WAY, WAYE, VIA – VAZI/ VALI  வழி = வயி

IN LONDON, OPPOSITE MY HOUSE IT SAYS GRENWELL WAYE. IN OLD ENGLISH IT IS ONLY WAYE/WAY.

IN TAMIL NADU EVEN TOd AY VILLAGERS OR ILLITERATES SAY WAYE INSTEAD OF WAZI/PURE TAMIL

W.34.WINE, VINE – VANJI/ KODI வஞ்சி/கொடி

W.35. WALES- VELIYAAR; FOR ENGLAND PEOPLE THEY ARE FOREIGNERS/VELI AL= OUT SIDERS; வெளியார் ; வெளி ஆள் ; இங்கிலீஷ்காரன் இல்லை

W.36. WISH – VIRUMPU; VISHU KANI; ON THE NEW YEAR DAY TAMILS AND MALAYALEES WAKE UP AT FRUITS, MIRROR, GOLD AND TURMERIC AND WISH WHAT THEY WANT IN THE NEW YEAR; WISH= VISHU; MAY BE COGNATE WITH VISION/PERSPECTIVE விரும்பு ; விஷுக்கனி  காண்  விரும்பு

V.37.WILL/ TO DO = VIRUPPAM, WIRUMBU/WISH

WHERE THERE IS A WILL, THERE IS A WAY- PROVERB

W.38. WORRY – ULAI/CHCHAL; R=L; உளை-ச்சல் ; உறு ; வருத்தம்

URU=TROUBLE, URUNAR= TROUBLE MAKER; UZALUTHAL= SUFFERING

WORRY= VARUTHTHAM, VARUNTHUTHAL

W.39.WAGON/ VEHICLE – VANDI IN TAM. WAHANA IN SKT. வாஹன , வண்டி

W.40. WILLIAM – SEE VILLIERS IN V LIST; ENCYCLOPEDIAS GIVE RIDICULOUS DERIVATION OF DESIRE+HELMET.

I STICK TO MY ‘VILLIERS’ EXPLANATION; WIL – VIL/BOW; VILLIERS AND WILLIAM ARE SIMILAR TO BHILS OF CENTRAL INDIA; THE  HEROIC TRIBALS WITH BOW—BHIL= VIL; B=V.

BHILS ARE THE MOST SKILFUL ARCHERS IN INDIA.

வில்லியனுர் , வில்லிப்புத்தூர் விளக்கம் முன்னரே தந்துள்ளேன் ; வில்= பில் BHILS= VIL ஜாதி வீரர்கள்.

tags – TAMIL WORDS-41

TO BE CONTINUED……………………………………………………….

ஸ்வர்ணமயமான லங்கை என்னைக் கவரவில்லை- ராமர் (Post No.8995)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8995

Date uploaded in London – – 4 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஸ்வர்ணமயமான லங்கை என்னைக் கவரவில்லை, லக்ஷ்மணா!

ச.நாகராஜன்

நம்மைக் கவரும் சில சுபாஷித ஸ்லோகங்கள் இதோ:-

ந ராஜ்யம் ந ராஜாசீத் ந தண்டயோ ந ச தாண்டிக: |

தர்மேணைவ ப்ரஜாஸ்ஸர்வா ரக்ஷந்தி ரஸ பரஸ்பரம் ||

ஒரு அரசோ, ஒரு அரசனோ ஒரு குற்றமிழைத்தவனோ அல்லது ஒரு நீதிபதியோ குற்றமிழைத்த ஒருவனுக்கு தண்டனை தருவதில்லை. மக்கள் அனைவரும் தர்மத்தாலேயே ரக்ஷிக்கப்படுகின்றனர். (தர்மமே தண்டனையையும் பரிசையும் வழங்குகிறது என்று பொருள்)

*

சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ப்ரூயாந்நப்ரூயாத் சத்யமப்ரியம் |

ப்ரியம் ச நாந்ருதம் ப்ரூயாதேஷ: தர்ம: சனாதன: ||

சத்யத்தையே பேசு. மற்றவர்களுக்கு பிரியமானதையே பேசு. மற்றவர்களுக்குப் பிடிக்காத உண்மையையும் பேசாதே. அதே போல இனிமையாக இருந்தாலும் அஸத்யத்தைப் பேசாதே.

*

அபி ஸ்வர்ணமயி லங்கா ந மே ரோசதி லக்ஷ்மண |

ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரியஸி ||

ராம, ராவண யுத்தம் முடிந்த பிறகு லக்ஷ்மணனை நோக்கி ராமர் கூறுவது இது:-

ஓ, லக்ஷ்மணா! இந்த ஸ்வர்ணமயமான லங்கை என்னைக் கவரவில்லை.

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நல் தவ வானிலும் நனி சிறந்தன.

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவ வானிலும் நனி சிறந்தனவே என்ற பாரதியார் கவிதை இந்த ஸ்லோகத்தின் இரண்டாவது அடியின்  தமிழ் மொழி பெயர்ப்பாகும்.

*

மரணாந்தானி வைராணி நிவ்ருத்தம் ந: ப்ரயோஜனம் |

கீயதாமஸ்ய சம்ஸ்காரோ மமாபேஷ்ய யதா தவ ||

ராவணன் வதம் செய்யப்பட்ட பின்னர் ராமர் விபீஷணரிடம் சொல்வது : “ நமது பணி முடிந்து விட்டது. ராவணனுடனான எனது பகை அவனது மரணத்துடன் முடிந்து விட்டது. இப்போது ராவணன் உன்னுடையவனைப் போலவே என்னுடையவனாகவும் ஆகிறான். ஆகவே அவனது சம்ஸ்காரத்தை (தகனத்தை) உரிய முறையில் செய்!

*

காவ்ய சாஸ்த்ர விநோதேன காலோ கச்சதி தீமதாம் |

வ்யஸனேன ச மூர்காணாம் நித்ரயா கலஹேந வா ||

புத்திசாலிகள் காவ்யம், சாஸ்திரம், தத்துவம் ஆகியவற்றில் காலத்தைக் கழிக்கின்றனர். மாறாக, முட்டாள்கள் தூக்கத்திலும் கலகம் செய்வதிலும் காலத்தைக் கழிக்கின்றனர்.

*

தைலாத் ரக்ஷேண ஜலாத் ரக்ஷேத் ஷிதில பந்தனாத் |

மூர்க ஹஸ்தே ந தாதவ்யம் ஏவம் வததி புஸ்தகம் ||

ஒரு புத்தகமானது அதை வைத்திருப்பவனிடம் இப்படி இறைஞ்சுகிறது : என்னை (புத்தகத்தை) கறை படுத்தும் எண்ணெயிலிருந்து காப்பாற்று! நீரிலிருந்து என்னை காப்பாற்று. சரியாகத் தைக்காமல் உதிரியாக இருந்து சிதிலமடையாமல் என்னைக் காப்பாற்று. இதை எல்லாம் செய்த பின்னர் என்னை ஒரு முட்டாளிடம் கொடுத்து விடாதே!

*

ச்ரோத்ரம் ச்ருதேனைவ ந குண்டலேன தானேன பாணிர்ன து கங்கணேன |

விபாதி காய: கருணாபராணாம் பரோபகாரைர்ந து சந்தனேன ||

 ஒரு நல்லவனின் காதுகள் நல்ல அறநெறிகளைக் கேட்பதால் அழகு பெறுகிறது; காதில் அணியும்  குண்டலங்களினால் அல்ல! கங்கணம் கையில் அணிவதை விட தானத்தால் கை சிறக்கிறது! அதே போல மற்றவர்களுக்கு சேவை செய்வதானது உடலில் சந்தனம் பூசுவதை விட சிறந்த அழகைத் தருகிறது!

*

உதாரஸ்ய த்ருணம் வித்தம் சூரஸ்ய மரணம் த்ருணம் |

விருத்தஸ்ய த்ருணம் பார்யா நிஸ்ப்ருஹஸ்ய த்ருணம் ஜகத் ||

உதார குணமுள்ள ஒருவனுக்கு  செல்வம் ஒரு (த்ருணம்) புல் போலத் தான்!

வீரனுக்கு மரணம் என்பது புல்லாகும்!

வயதாகி புலன் ஆசையைத் துறந்தவனுக்கு அவன் மனைவியும் புல் போலத் தான்!

பற்றற்றவனுக்கோ உலகமே புல் போலத் தான்!

tags – ஸ்வர்ணமய,  லங்கை, பெற்ற தாயும்,  பொன்னாடு,

*****

TAMIL WORDS IN ENGLISH – PART 40 (Post No.8994)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8994

Date uploaded in London – –3 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கிலத்தில் ஆயிரம் தமிழ் சொற்கள் – 40

ஐரோப்பிய மொழிகள் அனைத்தும் சம்ஸ்க்ருத தொடர்புடையவை என்பது உலக மொழியியல் அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட உண்மை. ஆனால் அத்தனை தமிழ் சொற்களும் எதாவது ஒரு ஐரோப்பிய மொழியில் இருப்பதை காட்டும் முகத்தான் இத்தாலியன், பிரெஞ்சு , டச்சு , ஜெர்மன் , ஸ்பானிய மொழிகளில் இருந்து எடுத்துக் காட்டுகளைத் தந்துள்ளேன். இவ்வளவு சொன்னபோதிலும் யாக, யக்ஞம், குரு முதலிய  ஆயிரக் கணக்கான சொற்கள் ஐரோப்பிய மொழிகளில் இல்லை. ஆகையால் இந்துக்கள் அங்கிருந்து வரவில்லை; இங்கிருந்து சென்று கலாசாரத்தைப் பரப்பினர். ஆகையால்தான் பல முக்கிய சொற்கள் அவர்களிடம் இல்லை என்பது என் வாதம்; என் துணிபு.

நான் ஒரே ‘மொழி மாற்றக்’ கொள்கையை காட்டி வருகிறேன்- உ..ம். ர என்பது ல ஆகும் R=L ; ப என்பது வ ஆகும் P=V .

இடத்திற்கேற்ப எதையும் மாற்றவில்லை. இந்தக் கொள்கைகளை கற்றுக் கொண்டால் என் உதவியில்லாமல் நீங்களே அத்தனை லத்தின், கிரேக்க சொற்களும் நம் இந்தியாவில் இருந்து சென்றவை என்பதை உணருவீர்கள்

XXXX

LET ME CONTINUE WITH LETTER ‘V’……………………………..

V.61. VODKA- RUSSIAN ALCOHOLIC DRINK; UADKA IS WATER IN SANSKRIT; TAMILS SAY HE HAD DRUNK WATER TO MEAN THAT ONE IS DRUNK. உதக/சம்ஸ்க்ருதம்= தண்ணீர். ரஷ்யாவிலும் கள் , சாராயம் என்பதை “தண்ணி அடிச்சான்” = வோட்கா அடிச்சான் என்றே சொல்லுவர்

RUSSIANS ALSO USED ‘UDAKA’/WATER FOR VODKA; TAMILS ALSO USE THANNI/WATER FOR ALCOHOLIC DRINKS.

V.62 VOLGA – LONGEST RIVER IN EUROPE RUNNING THROUGH RUSSIA; IT ALSO MEANS UDAKA/WATER

வோல்கா என்பது ஐரோப்பாவிலேயே மிகவும் நீளமான நதி; ரஷ்யாவில் ஓடுகிறது. உதக= தண்ணீர் என்பதன் மருவு இது. ரஷ்யர்கள் இதை ‘போன்ரா’ என்பர் ; இதன் பொருள் (MIST, MOIST, WETNESS) பனி ; இந்த நதியின் பெயரில் சம்ஸ்க்ருத, தமிழ் சொல் இரண்டையும் காணலாம். ‘கங்கா மாதா’ என்பது போல ரஷ்ய இலக்கியம் முழுதும் இதை ‘வோல்கா மாதா’ என்ற பொருளிலேயே அழைப்பர். ‘மாதா’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லும் அப்படியே ‘மாது ஷ்கா’ என்று உள்ளது

XXXX

V.63.VOEUX/FRENCH – VAAZTHU/GREETING IN TAMIL; ALSO WISH, VISHU, VIZA/FESTIVAL வாழ்த்து , விருப்பம், வாழ்க

V.64.VARICOSE VEINS – VARI VARI YAANA ; VEINS ARE VISIBLE LIKE LINES வரி வரியாக புடைத்து நிற்கும் ரத்த நாளம்

V.65.VRIJHEID /FLEMISH – VIDUTHALAI; V =P/F விடுதலை ; ப் ரீ ட = விடுத ல ; ப=வ ;FREEDOM- VDUTHALAI

V.66.VICE – VISHA/MA விஷ/ம

V.67. VAT – VATTAI ; LARGE TANK OR TUB; IN TAMIL SAME SHAPE BUT SMALL VESSEL.; வட்டை, வட்ட வடிவிலான

V.68. VIOLIN/VIOLA – ++ YAAZ பை ??? யாழ்

V.69. VETERINARY – VETTI/CUTTING , VER ARU IN TAM.வெட்டி, வெட்டு

V.70. VOGUE -VAZAKKU ; G=Y வழக்கு

V.71.VERGE- VARAPPU வரப்பு

V.72.VALUE – VILAI IN TAM; MULYA IN SKT; V=M மூல்ய /சம்ஸ்க்ருதம்= விலை ;ம=வ

V.73.VERDE- GREEN/ HARITA IN SKT. ஹரித ஹரிணி =பசுமை

ஹரின்= க்ரீன் /ஆங்கிலம்; வ=ப /சும்

V.74- VOW- UVACHA உவாச /சம்ஸ்க்ருதம் வாய் திற

V.75.VERDIENST/DUTCH= VARUVAAY/REVENUE வருவாய் /வ/ரெவ்யூ /ஆங்கிலம

V.76. VEIL – OYIL AATTAM ஒயில் ஆட்டம்

V.77.VENEER- VANAPPU UUTTUM வனப்பு ஊட்டும்

V.78.VALENS- STRONG ALSO MANY= PALA IN TAM. வல =பல; இரண்டு பொருள்- பலமான, பலவிதமான

V=P; PALA/MANY வ=ப

XXX

V.79.VALIUM – VALI NEEKKI/ PAIN KILLER;  VALI IS PAIN IN TAM.வலி நீக்கி வாலியம் =வலி

V.80. VILLIERS IS A PLACE NAME IN SWITZERLAND; DUKES ALSO HAD THAT PLACE NAME; IN TAMIL NADU WE HAVE VILLIANUR, VILLIPPUTHUR;  வில்லியர் என்பது சுவிட்சர்லாந்தில் இடப் பெயர் ; அதை ஒட்டி அந்த ஊர் பிரபுக்களுக்கும் உரித்தாகும்; தமிழ்நாட்டில் வில்லியனுர், வில்லிப்புத்தூர் , வில்லிப்புத்தூரார் என்றெல்லாம் இருப்பது ஆராய்ச் சிக்குரியது

XXX

V.81.VETERAN- SEE EARLIER MEANING- PERSON OF OLD AGE; ANOTHER MEANING VIDURAN= CLEVER, VITHTHAKAN, VIDURA IN MAHABHARAT; VID= VIDYA=VEDA= WISDOM மஹாபாரத விதுரன் – வித்/யா =கல்வி, அறிவு, விவேகம் மிக்க; முந்தைய விளக்கம் – விது =முது /மை

V.82.VAGABOND- A PERSON MOVINF FROM PLACE TO PLACE ; PANDAARAM; ANDI PANDARAM= MOVING FROM PLACE TO PLACE FOR FOOD. வேக/ பண்டாரம்  உணவுக்காக இடம் விட்டு இடம் செல்வோம்; அன்னக்காவடி.

V.83.VEREINIGEN /DUTCH – UNITE=INAI; ORUNGKINAI ஒருங்கிணை; இணை

V.84.VERREISEN/DUTCH – GET OUT; VELIYERU; VELIYE PO வெளியேறு ; வெளியே போ

V.85.VERSARE/ITALIAN – VARSHA=POUR DOWN ; SONE KI VARSHA- GOLDEN RAIN IN HINDI வர்ஷ =பொழிவு ; மழை

சோனே கீ வர்ஷ’ = தங்க மழை ; சோன் =ஸ்வர்ண

V.86.VETTURA/ITALIAN, WAGHEN/DUTCH- VANTI, VAHANA வெட்/ ன் ட = வண்டி ; டச்சு மொழியில் வேகன்= வாஹன் WAGON /சம்ஸ்க்ருதம்

‘V’ FINITO; NEXT LET US LOOK AT ‘W’

TO BE CONTINUED……………………….

மன்னாதி மன்னர் (மொக்க) ஜோக்ஸ் – 2 (Post.8993)

 மன்னாதி மன்னர் (மொக்க) ஜோக்ஸ்  -   2 (Post.8993)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8993

Date uploaded in London – – 3 DECEMBER 2020

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

மன்னாதி மன்னர் (மொக்க) ஜோக்ஸ் – 2

                                                   Kattukutty

அமைச்சரே, புலவர் ஏன் “பிராவுடன்” வந்திருக்கிறார்???
பாடி காண்பிங்கங்கறதை தப்பா புரிஞ்சுக்கிட்டார்போல இருக்கு…..

xx
எதற்கு மன்னர்பாட வரும் புலவர்களிடம் ஆதார் அட்டையை வாங்கி
பரிசோதிக்கிறார்???
எதிரி நாட்டு புலவர்களும் கும்பலோடு கும்பலாக பாடி பரிசைப்
பெற்று சென்று விடுகிறார்களாம்!!

xxx

நகர் வலம் போகும்போது ஆதார் அட்டையை எதற்கு எடுத்து
போகிறீர்கள் மன்னா???
நான் இந்த நாட்டு மன்னன் என்று சொன்னால் யாரும் நம்ப
மாட்டேன் என்கிறார்கள்……
xxx

மகாராணி கேட்ட ஒரே கேள்வியில் எதிரி நாட்டு மன்னன் ஒரே
ஓட்டமாக ஓடிவிட்டான்….
அரசி அப்படி என்ன கேட்டார் மன்னா???
தாலி பிச்சை தான் !!!,
xxx

போர்களத்தில் எதிரி மன்னன் என் கழுத்தைப் பிடித்தான்…..
நீங்கள் உடனே வாளைப பிடித்தீரகளா??
இல்லை அவன் காலைப் பிடித்தேன்!!!

xxx

போர்களத்துக்கு போய்வந்த பின் மன்னர் இரண்டு நாளைக்கு
அந்தப்புரம் போக மாட்டார்……
ஏன்???
கால் வலியோடு தலை வலியும் சேர்ந்தா தாங்க முடியாதாம்!!!
xxx

புலவர் போதைலே பாடினதை மன்னர் கண்டுபிடிச்சுட்டார்!!!
அப்புறம் என்ன செய்தார்???
ஆயிரம் ஊறுகாய் பாக்கெட்டுகளை பரிசாகக் கொடுத்தார்!!!!

xxx
மன்னர் போதேல இருக்கற போது குழந்தைக்கு பேர் வைக்கச்
சொன்னது தப்பாப் போச்சு……
என்ன பேர் வைத்தார்???
“கள்ளம்மா”ன்னு பேர் வைச்சுட்டார்
xxxx

கொடுத்து கொடுத்து எதிரி மன்னரின கைகள் சிவந்தது விட்டதென்று
எதைப் பார்த்து தெரிந்து கொண்டீர்கள்? அமைச்சரே?.?
தங்களின் முதுகைப் பார்த்துத்தான் மன்னா…….
xxxx

அந்த புலவர் பாடுவதில் ஒரு வரி கூட புரியவில்லை அமைச்சரே??
அவர் ஜி.எஸ். டி வரியைப் பற்றி பாடுகிறார் மன்னா!!!
xxx

மன்னரின் சொந்த “சேனல்” எனபதற்காக இப்படியா?.?.
ஏன் என்ன ஆச்சு???
நம் படை வீரரர்கள புறமுதுகிட்டு ஓடி வருவதை மாரத்தான்
ஓட்டம் என்று திரித்து சொல்றாங்க!!!!
xxx

பணிப்பெண்களை அழைத்துக்கொண்டு மன்னர் போருக்குப் போராரே…….எதுக்கு????
எதிரி மன்னர் சபலப் பேர்வழியாம்!!!!

இரும்பைக் குடுத்து இரும்புச் சத்து வாங்கிட்டு வா என்கிறாரே மன்னர்????
அதாவது பேரீச்சம்பழத்தை சொல்றார்!!!!
xxx

போர்களத்தில மையப்பகுதியில் வெல்லத்தை தூவுறாங்களே எதுக்கு???
நம் மன்னருக்காகத்தான்…….”கவ்வுற” மண்
டேஸ்டா இருக்க மாட்டேங்குதாம்!!!!

எதிரி மன்னர் புறாவுக்கு பதில் கிளியை அனுப்பி இருக்கிறானே?? எதற்கு???
ஓலைக்கு பதிலாக செய்தியை கூறிச் சென்று விடுமாம்!!!
xxxx

அரண்மணை வைத்தியரை வேண்டாம் என்று சொல்லி ஒரு கிழவியை
வேலைக்கு வைத்திருக்கிறாரே மன்னர் ஏன்???
அவருக்கு “பாட்டி வைத்தியம்” தான் பிடித்திருக்கிறதாம்!!!
xxxx

இளவரசனுக்கு வந்த அண்டை நாட்டு பெண்ணை நம் மன்னர்
ஏன் வேண்டாம் என்று சொல்லி விட்டார்???
வரதட்சணையாக 100 பதுங்கு குழிகளைக் கேட்டாராம்……….
xxx

மன்னா தகவல் அறியும் உரிமை சட்டத்துல உங்களப் பத்தின
தகவல கேக்குறாங்க ………
எதைப்பற்றி????
மன்னர் இதுவரை எத்தனை போர்களத்திலிருந்து ஓடி
வந்திருக்கிறார் என்று???.?

xxxx

மன்னா …… எதிரிக்கு போரில் பாடம் புகட்டினீர்களா???
ஆமாம் அதெற்கென்ன இப்போ???
போன் செய்து அந்தப் பாடத்தில் “டவுட்” கேட்கிறான் மன்னா…….

மன்னர் ஏன் கோபமாக இருக்கிறார்???
போர்க்களத்தில. அவர் ஓடி வந்ததை விளையாட்டுச் செய்தியில்
காட்டினார்களாம்………

xxxx

மன்னா உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி…..
என்ன ஒற்றனே???
எதிரி நாட்டு போர் முரசு பழுதாகி விட்டது!!!!

மன்னர் நெகிழ்ந்து போனாராமா???
ஏன்???
தூதுப் பறா அரண்மணைக்கு போகாமல் நேராக பதுங்கு
குழிக்கே வந்து விட்டதாம்!!.,

xxx

புலவர்கள் அதிர்ச்சி அடையும்படி மன்னர் அப்படி என்ன பரிசு
தந்தாராம்???
இருபது பொற்காசுகளுக்கு டோக்கன் கொடுத்திருக்காராம்……

அரசர் நாய் வளர்க்கிறாராம்……
ஏன்???
புலவர்கள் வெகு தூரத்தில் வரும் போதே மோப்பம் பிடித்து
உஷார் படுத்தத்தான்!!!
xxxx

மாறு வேடப் போட்டியை ஏன் மன்னர் தடைசெய்கிறார்???
அவர் மாதிரியே வேஷம் போட்டு யாரோ அந்தப்புரத்திற்குள்
நுழைஞ்சிட்டாங்களாம்……..

போருக்கு போகும் மன்னர் மீசையில் ஏன் மெழுகு தடவிக்
கொள்கிறார்????
மீசையில் மண் ஒட்டக்கூடாதாம்…….
xxx

முடி வெட்ட போகலாமா அமைச்சரே???
வேண்டாம் மன்னா, தலையையே வெட்ட எதிரி காத்துகொண்டு
இருக்கான்!!!

எதிரி மன்னன் என்ன எழுதியிருக்கிறான்???
உங்களை திட்ட வார்த்தையே இல்லையாம், ஆகையால் வெறம்
ஓலையை அனுப்பி இருக்கான்???

அரசர் உள்ளே நுழையம் போது “கப்” அடிக்குதே???
பதுங்கு குழின்னு நினைச்சு செப்டிக் டேங்குக்கு உள்ளே
இறங்கிட்டார்!!!

tags-   மன்னாதி,  மன்னர் ஜோக்ஸ்  –   2 , 

                                                       ***    

நடந்தவை தான் நம்புங்கள் – 2 (Post No.8992)

WRITTEN BY S NAGARAJAN                 

Post No. 8992

Date uploaded in London – – 3 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

நடந்தவை தான் நம்புங்கள் – 2

ச.நாகராஜன்

வகுப்பு நடந்து கொண்டிருந்தது. ஒரு மாணவன், “ I don’t know nothing about it…” என்றான்.

உடனே பேராசிரியர் அவனைப் பார்த்து, “நீ சொன்னதன் அர்த்தம் உனக்குத் தெரியுமா? எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று சொன்னதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய், சரி தானே!” என்றார்.

ஆமாம் என்றான் மாணவன். “ஆனால் உனது வாக்கியத்தில் இரண்டு எதிர்மறைப் பதங்கள் உள்ளன. don’t know என்றும் nothing என்றும் இரண்டு எதிர்மறைப் பதங்கள் உண்மையில் எனக்கு அதைப் பற்றித் தெரியும் என்ற அர்த்தத்தைத் தான் தரும்!” என்று சொன்ன ஆசிரியர் தொடர்ந்தார்.

“ஆங்கில மொழியில் இப்படி இரு எதிர்மறைப் பதங்களை ஒருவர் ஒரு வாக்கியத்தில் உபயோகப்படுத்தினால் அது பாஸிடிவான அர்த்தத்தையே தரும். ஆனால் எல்லா மொழிகளும் இந்த இலக்கண விதியைக் கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக ரஷிய மொழியை எடுத்துக் கொண்டால், இரண்டு நெகடிவ் (double negative) வார்த்தைகள் நெகடிவ் அர்த்தத்தைத் தான் தரும். ஆனால் உலகின் எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் சரி, இரண்டு பாஸிடிவ் (double positive) வார்த்தைகள் ஒரு நெகடிவ் அர்த்தத்தைத் தருவதே இல்லை.”

பேராசிரியர் இதைச் சொல்லி நிறுத்தியவுடன் கடைசி பெஞ்சிலிருந்து மெலிதாக ஒரு குரல் ஒலித்தது.

“ஆமாம்! சரிதான்!”

இந்த சம்பவம் நிஜமாக நடந்த ஒன்றின் அடிப்படையில் உருவான ஜோக் தான்! இது நியூயார்க் டைம்ஸ் இதழில் இடம் பெற்றது. ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் நியூயார்க்கில் மாடர்ன் லாங்வேஜ் அசோஷியேஷனில் (Modern Language Association) ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. பேசுபவர் இப்படி டபிள் பாஸிடிவ் வார்த்தைகள் ஒரு நெகடிவ் அர்த்தத்தை எந்த மொழியிலும் தருவதில்லை என்று சொல்லி நிறுத்தியவுடன்  அங்கு வந்திருந்த பிரபல தத்துவ பேராசிரியரான சிட்னி மார்கென்ப்ரெஸ்ஸர், (Professor Sidney Morganbessar ), “Yeah! Yeah!!” என்றார்.

அனைவரும் ரசித்துச் சிரித்தனர்.

2

அது ஒரு மலைப் பிரதேசம். அடர்ந்த காட்டுப் பகுதியும் கூட. அதன் உச்சியின் ஒரு பகுதியில் வயதான ஒரு தம்பதியர் சிறிய வீட்டைக் கட்டிக் கொண்டு அமைதியாக வாழ்ந்து வந்தனர்.

ஒரு நாள் மூதாட்டி வீட்டின் ஜன்னல் வழியாகப் பார்த்த போது ஒரு இளைஞன் மண்வெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு அந்த மலைக் காட்டுப் பக்கம் போய்க்கொண்டிருந்தான். அவன் தோளில் ஒரு பை வேறு தொங்கியது.

எதற்கு இப்படி  ஒரு இளைஞன் இந்தப் பக்கம் போகிறான் என்று எண்ணினாள் மூதாட்டி.

அடுத்த நாள் அதே நேரம்! அதே இளைஞன். அதே மண்வெட்டி. தோளில் அதே பை! சற்று வியந்தாள் மூதாட்டி.

மூன்றாம் நாள் குறிப்பிட்ட நேரத்தில் ஜன்னல் அருகே வந்து உட்கார்ந்தாள் மூதாட்டி. அதே நேரம், அதே இளைஞன் …

அவளுக்குச் சற்று சந்தேகம் வந்தது. தன் வயதான கணவரிடம் நடப்பதைச் சொன்னாள்.

“இதற்கெல்லாம் கவலைப்படாதே! ஏதாவது ஒரு விவசாயி குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம், அல்லது விளையாட்டில் எதையாவது ஒளித்து வைக்க வந்திருக்கலாம், அல்லது மலையேறும் பயிற்சிக்காக இருக்கலாம்” என்று கூறினார் வயதான மனிதர்.

ஆனால் இதே போல இன்னும் இரண்டு வாரங்கள் அந்த் இளைஞனின் வருகை தொடர்ந்தது.

வயதான தம்பதியர் உஷாராயினர்! என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவல் உந்தியது.

ஒரு நாள் அந்த இளைஞன் வழக்கம் போலத் தன் போக்கில் காட்டில் மரங்களுக்கு இடையே மறையும் போது அவன் அறியாமல் அவன் பின்னால் சென்றனர் வயதான கிழவரும், மூதாட்டியும்.

அங்கே இளைஞன் ஒரு பதுங்கு குழியை (TRENCH) வெட்டிக் கொண்டிருந்தான். மிக நீளமான குழி அது. ஒரு பக்கம் கரடு முரடாக நன்றாக இல்லாமல் இருந்தது.

ஆனால் போகப் போக மிக அருமையாக சமமாக, வழுவழுப்பாக அது வெட்டப்பட்டு அமைந்திருந்தது.

வயதான தம்பதியரைப் பார்த்த அந்த இளைஞன் மிக மரியாதையாக வணக்கம் சொன்னான்.

கிழவர் கேட்டார்: “தினமும் இங்கு வருகிறாய்! என்ன செய்கிறாய்? இது என்ன குழி?”

இளைஞன் சொன்னான்: “இது எனக்குக் கிடைக்கப் போகும் வேலைக்காக நான் வெட்டும் குழி. பதுங்கு குழி வெட்டுவதற்கான வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்தேன். அந்த படிவத்தில், அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே நேரடிக்குப் பேட்டிக்கு வரலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே தான் அனுபவம் பெற இப்படி தினமும் வந்து குழி வெட்டிப் பழகுகிறேன். எப்படி இருக்கிறது இந்த்க் குழி?”

தம்பதியர் வியந்தனர். அவன் தினமும் கொண்டு வரும் பையைப் பார்த்தனர்.

அவர்கள் பார்வையைக் கவனித்த அந்த இளைஞன், “ ஓ, இந்தப் பையா? இதற்குள் தான் மத்தியான சாப்பாடுள்ள டிபன் பாக்ஸும் தண்ணீர் பாட்டிலும் உள்ளன” என்றான்.

தம்பதியர் அவனை வாழ்த்தினர். வேலை கிடைத்தவுடன் அந்த இளைஞன் மறக்காமல் அவர்களைச் சந்தித்து தான் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைச் சொன்னான். அவர்கள் சந்தோஷப்பட்டனர்.

உண்மையில் நடந்த நிகழ்ச்சி இது!

tags — நடந்தவை-2 , நம்புங்கள்-2, 

***

அஸ்ஸாமிலிருந்து ஒரு அதிசயச் செய்தி (Post No.8991)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8991

Date uploaded in London – –2 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்தியாவில் அதிசயச் செய்திகளுக்குக்  குறைவே இல்லை . நாள் தோறும் பேஸ் புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாக்ராம் , யூ ட்யூப் மற்றும் பத்திரிக்கைகளைத் திறந்து பார்த்தால்  பல அதிசயச் செய்திகள் கிடைக்கின்றன. அந்தந்த ஊரிலுள்ள மக்கள் அதைத் தினசரி பார்ப்பதால் அது அதிசயமானது என்பதைக் கூட  உணரத் தவறி   விடுகிறார்கள் . திருவனந்தபுரம் கோவிலில் கண்டு பிடிக்கப்பட்ட நகைகள் -காசுகள் அதை உலகிலேயே  மிக பணக்கார வழிபாட்டுத் தலம் என்பதைக் காட்டுகிறது.

அண்மையில் பெரம்பலூர் அருகில் கண்டு பிடிக்கப்பட்ட (Fossil Eggs) முட்டைகள் ஒவ்வொன்றும் — படிம அச்சுக்கள் — வெளிநா ட்டில்  லட்சக் கணக்கான டாலர்களுக்கு விலைபோகும். சென்னை மியூசியத்தில் உள்ள ஒவ்வொரு ஐம்பொன்  சிலையும் பல கோடி ரூபாய் மதிப்புடையவை . நம்முடைய பெரிய கோவில் ஒவ்வொன்றையும் திருப்பிக் கட்டுவதானால் லட்சம் கோடி ரூபாய் கணக்கில் பணம் தேவைப்படும் .

பல கோவில்களில் இருந்து, சூரிய ஒளி உள்ளே புகும் நாட்கள் பற்றிய அதிசயச் செய்திகள் வருகின்றன. இன்னும் பல கோவில்களில் தூண்கள் அந்தரத்தில் தொங்குகின்றன. அதற்கு அடியில் மெல்லிய காகிதத்தை நுழைத்துக் காட்டுகின்றனர். இன்னும் சில கோவில்களில் சிலையின் காது, மூக்கு வழியாக நூல் முதலியவற்றைச் செலுத்தி அதிசயம் செய்கின்றனர். கோவிலில் கடவுளிடம் உள்ள நகைகளின் மதிப்போ சொல்லி மாளாது. இவ்வளவும் நம்மூர் திராவிடங்களும் வெள்ளைகார்களும் கொள்ளையடித்த பின்னர் மிஞ்சியவை. மாலிக்காபூரும்  கஜினி முகமதுவும் தைமூரும் அந்த வகையறாக்களும்  கொள்ளையடித்தது , அழித்தது  போக இவ்வளவு நம்மிடம் இருப்பதே மஹா அதிசயம்..

இயற்கை அதிசயங்கள் பற்றிய ‘பட்டியலை’ வெளியிடவே ஒரு புஸ்தகம் தேவை. திருப்பதி மலை மீதுள்ள இயற்கைப் பாறை வளைவு முதல் திருவாக்கரை படிம அச்சு மரங்கள் வரை ஆயிரம் ஆயிரம் உள .மத்திய பிரதேசத்தின் அடர்ந்த காட்டுக்குள் 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வரைந்த ஓவியம் பீம்பெட்காவில் (Bhimbetka Rock Paintings) இருக்கிறது 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் மத்திய பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் இந்தியர்கள் வசித்திருந்தால் , அதே காலத்தில் கரையோரப் பகுதிகளில் உள்ள பெரிய நகரங்களில் நாகரிகம் வாய்ந்த மனிதர்கள் இருந்திருப்பார்களே!

இதற்கெல்லாம் சான்று பகரும் வகையில் லத்தின், கிரேக்க மொழியில் உள்ள அத்தனை  வேர்ச் சொற்களும் சம்ஸ்க்ருதம் அல்லது அதன் தம்பியான தமிழ் மொழியில் உள்ளன. கி.மு 1400 தேதியிட்ட களிமண் கல்வெட்டில் உள்ள சம்ஸ்க்ருத சொல்தான் இன்று புழக்கத்திலுள்ள மொழிகளில் மிகவும் பழைய கல்வெட்டு (Clay Tablet,Bogazkoy, Turkey) . சம்ஸ்கிருதம் வாழும் மொழி என்பதைக் காட்டும் முகத்தான் சென்ற வாரம் நியூசிலாந்து எம்.பி. டாக்டர் கௌரவ சர்மா சம்ஸ்க்ருத மொழியில் உறுதி மொழி எடுத்துள்ளார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

அஸ்ஸாமில் கிடைத்த அதிசய தாவரம் பற்றிச் சொல்கிறேன். காடுகளுக்குள் ஒளி விடும் (Bio Luminescent)  மரங்கள் இருப்பதாக காளிதாசன் தனது காவியங்களில் பகர்ந்தார். இப்படி இருப்பதை உயிரியல் விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்வதில்லை. ஏனெனில் கீழ் மட்ட நுண் உயிர்கள், புழுக்கள், மீன்கள் , தவளைகள், பறக்கும் மின்மினிப் பூச்சிகள் மட்டுமே ஒளிவிடும். பெரிய உயிர் இனங்கள் இப்படிச் செய்ய இயலா என்பது அவர்கள் துணிபு. இதற்கும் நான் இன்னொரு கட்டுரையில் விளக்கம் தந்தேன்.  நியுஸிலாந்துக்  குகைகளில், நாம் பொருட்காட்சிகளில் போடும் வண்ண விளக்குகள் போல ஒளி ‘விட்டுவிட்டு’ (on and off) வரும் அதிசயம் நிகழ்வதாகவும் இதற்கு அங்கு வாழும் கோடிக்கணக்கான மின் மினிப் பூச்சிகளே காரணம் என்றும் டேவிட் அட்டன்பரோ பிபிஸி  டெலிவிஷனில் காட்டியதையும் எழுதி ஒரு வேளை காளிதாசன் வாழ்ந்த 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி இந்தியக் காடுகளில் இருந்திருக்கலாம் என்றும் எழுதினேன்.

இப்போது அஸ்ஸாம் காடுகளில் ஒளி விடும் காளான் வகைகள் (Fungus, Mushrooms) அழுகிய மூங்கில் மரங்கள் இடையே வளரும் செய்தி பத்திரிகைகளில் வந்துள்ளது. மீண்டும் காளிதாசன் சொன்ன ‘ஜோதிர் லதா’வுக்கு விளக்கம் கிடைக்கிறது.  மழைக்காலம் முடிந்தவுடன் குப்பை கூளங்களில்,  மர  இடுக்குகளில் காளான்கள்  முளைப்பதை எல்லோரும் காணலாம். ஆனால் இவற்றில் இரவில் ஒளி உமிழும்  (Luminescent Mushrooms) காளான்கள்  முதல் தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சீன விஞ் ஞான அகாடமியைச் சேர்ந்த சாமந்த கருணாரத்ன , மற்றும்  அஸ்ஸாம் ஆராய்ச்சியாளர்கள் மார்டிமர், தேவபிரம்ம தத்தா முதலியோர்  இதுபற்றிய செய்தியை வெளியிட்டுள்ளனர். நமக்கு இது புதிய செய்தியானாலும் அங்கு வசிப்போர் இதை நீண்ட காலமாக அறிவர். இதை மின்சார காளான்கள்  (எலக்ட்ரிக் மஷ்ரூம்ஸ்)  என்று அழைக்கின்றனர். இது வளரும் அழுகிய மூங்கில்களைக் கைகளில் ஏந்தி இரவு நேரத்தில் டார்ச் லைட் போலவும் பயன்படுத்துகின்றனர். தென் அமெரிக்க பழங்குடி மக்களும் இப்படி ஒளி உமிழும் பொ ன் வண்டுகளை டார்ச் லைட் போலப்  பயன்படுத்துவர்.

12 வகையான காளான்கள் ஒளி கசிந்தாலும் இந்தியாவில் இப்படி புதுவகை காளான் “கண்டுபிடிக்கப்பட்டது ” இதுவே முதல் தடவை. இதன் தாவர இயல் பெயர்  – பில்லோ ஸ்டாக்கைட்ஸ்.

The team recovered samples of the mushrooms, dried them, and then performed a genetic analysis to understand where it fits on the tree of life. Both morphological features and its genetic heritage support its position as a new species in the genus Roridomyces. Currently, 12 other species are known in this genus, and five of them are also bioluminescent. The team named the species phyllostachydis after the genus of the host bamboo tree (Phyllostachys) from which it was collected.

Image credits Samantha Karunarathna of Chinese Academy of Sciences, Mortimer, Tibpromma, Dutta, et al., (2020), Phytotaxa.

Tags-  ஒளிவிடும், உமிழும், காளான்கள் , அஸ்ஸாம், அதிசயச் செய்தி

TAMIL WORDS IN ENGLISH – PART 39 (Post No.8990)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8990

Date uploaded in London – –2 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எந்த கிரேக்க, எந்த லத்தின் மொழிச் சொல்லையும் கொடுங்கள்; அவை சம்ஸ்கிருதம் அல்லது தமிழில் இருப்பதைக் காட்டுகிறேன் ; ஆகையால் திராவிட மொழி என்ற பிரிவினை தவறு; சம்ஸ்கிருதம் எப்படி வட இந்திய மொழிகளாகக் கிளை விட்டனவோ அதே போல பூர்வ இந்திய மொழியின் ஒரு பிரிவான தமிழும் கிளை விட்டதில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உருவாயின. ஏனைய திராவிட மொழிகளுக்கு எழுத்துமில, இலக்கியமும் இல ; அவை உப்புக்குச் சப்பை ஊருக்கு மாங்கொட்டை.!

xxx

ulka: = Volcano = Ulkam in Tamil (fire balls from sky)

ஆங்கிலத்தில் ஆயிரம் தமிழ் சொற்கள் – 39

V-  CONTINUED

V.35.VETO POWER – VETTU, RATHTHU  வெட்டு அதிகாரம்

V.36.VIA – VAZI வழி

V.37.VIRILE – VEERYAM (SEMEN, VINDHU), VEERA வீரிய (விந்து ) ஆண்

V.38. VIRAGO – SEE VIRGO IN PART 38; ADDITIONAL DERIVATIONS:-ஏற்கனவே கொடுத்த விளக்கத்தை யும் காண்க ; புதிய விளக்கம்- வீராங்கனை  ,வீரி ;VEERANGANAI, VEERI

V.39. VIV, VIVERE – LIVE= JIV/ JEEVAN  IN SKT, VAAZ IN TAMIL வீ வ் = ஜீவ ; வாழ்

VIVENDI MODUS = VAAZKKAI MURAI வாழ்க்கை முறை

V.40.VOX, VOCAL, VOCABULARY, VOCARE/LATIN, VOICE, VOCAT.LATINவாய் மொழி, சொல்

THIS IS A VERY IMPORTANT ROOT= TO CALL, TO SPEAK

IT BECOMES VAAY/MOUTH IN TAMIL; VAAY MOZI, VAYCH SOL ET

VAK IN SKT. வாக்

VIVA VOCE  = VAAY MOLI THERVU

வாக், வாய்ச் சொல் ஆகிய அடிப்படையுடைய ஆங்கிலச் சொற்கள் ஏராளம்.

V.41- VOL, VELLE, VOLENS/LATIN – VIRUPPAM, WISH விருப்பம் ;எல் = ஆர் L=R ;

V.42.VOLUNTEER – VIRUMPI VARUTHALவிரும்பி வருதல்

V.43.VOLCA, VOLCANO – ULKA, ULKAM/METEORS/FRE BALLS FROM SKY THROWN OUT BY VOLCANOES உல்கம்

V.44. VENGEANCE – VANJI, VANJAKAM, VENJINAN , VENJINA URAI வெஞ்சினம், வஞ்சினம்

V.45. VINDICATE – VINDURAI விண்டுரைத்தான்

V.46.VANISH – VINASYATI/DESTROYED IN SKT; V=B; BANISH- MAKE HIM DISAPPEAR FROM THE PLACE OF ORIGIN

விநஸ்யதி ; banish நாடுகடத்த வ= ப

V.47.VENISON – DEER FLESH; V=M – MAAN MAAMISAM; V =P- PINAI வ=மா ; மான் மாமிசம் வ=ப ; பிணை- பெண் மான்

V.48 VOTE – VOLAI, Otu  வோலை , ஓடு

V.49.VAIN – VEEN வீண்

V.50.VIVID – VIVITHA IN SKT; VIVARAMANA IN TAM. VILAKKAMAANA விதித்த, விவரமான,

V.51.VIOLENT – VAN SEYAL வன் செயல்,

V.52.VULG, VULGAR, VULGUS, VULGARE/LATIN – ULAKA VAZAKKU  தொல்காப்பியத்தின் உலக வழக்கு, ‘செய்யுள் வழக்கு = பாணினியின் சந்தஸ், ‘பாஷை  வழக்கு; இலக்கிய மொழி , பேச்சு மொழி

SEEYUL VAZAKKU, ULAKA VAZAKKU—TOLKAAPPIAM

CHANDAS, BASHA IN PANINI

BOTH ARE SAME WHICH MEANS LITERAL AND COLLOQUIAL

V.53.VERY – PERIYA ; V=P வ=ப; பெரிய

VIRULENT – VIRU VIRUPPAANA; SEE ALSO VIRILE ABOVE விறுவிறுப்பான, முன்னர் எழுதிய வீரியம் பற்றியும் காண்க

V.54.VOYAGE – PAYANAM; V=P; PRYAANA IN SKT. வ=ப; பயணம்

V.55. VULNERABLE – VELLAK KUUDIYAவெல்லக் கூடிய

INVULNERABLE – VELLA MUDIYAATHA வெல்ல முடியாத

V.56.VILLAIN – VIL ENTHIYA ETHIRI/ PAKAIVAN வில் உடைய பகைவன்

Bhil is a Tamil word; b= v; Vil in Tamil is Bow. Bhils are bow men.

VIL = BHILS- TRIBES WITH ARROWS; V=B; வில்லர்கள் = பில்லர் என்னும் பழங் குடி

V.57.VILIFY – IZIVU SEY/INSULT/BELITTLE/DENIGRATE இழிவு செய்

V.58.VOID – VETRITAM, ALSO VETO; MAKE IT NULL AND VOID இல்லை; வெற்றிடம்

NULL= ILLAI; VOID= SO, VETRIDAM= செல்லாதாக்கு

V.59.VANITY – VANITHA, VANAPPU வனப்பு மிக்க

V.60.VIGIL –  VIZITHTHIRU, விழித்திரு

VIGILANT- VIZIIPPAY IRU, BE AWARE/PHYSICALLY/MENTALLYஉடல் விழிப்பு, உள்ள விழிப்பு

TO BE CONTINUED…………………………………..

tags – tamil words- 39