தவறான தகவல்களைத் தந்து தலையைச் சுற்ற வைக்கும் மீடியாக்கள்! ஊடகங்கள்!(9626)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9626

Date uploaded in London – –  –20 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

தவறான தகவல்களைத் தந்து தலையைச் சுற்ற வைக்கும் மீடியாக்கள்! ஊடகங்கள்!

ச.நாகராஜன்

1

தலை சுற்றுகிறது – வியாதியினால் அல்ல. தவறான தகவல்களைத் தவறாமல் ஒவ்வொரு நிமிடமும் தரும் ஊடகங்களினால் தான்.

மறைந்த ஒரு காமெடி நடிகரின் (விவேக்) சொத்து மதிப்பு 126 கோடியே 76 லட்சம் என்று ‘உள்ளது உள்ளபடி’ ஒரு தகவல் வந்தது. சில நாட்கள் கழித்து, ஷூட்டிங் காரணமாக உடனே வர முடியவில்லை என்று காரணம் சொன்ன பிரபல நடிகர் ஒருவர் அவரது வீட்டிற்குச் சென்று, கடன்களை அடைக்க உதவி செய்யத் தயார்; அவரது மகள்களின் படிப்புச் செலவுக்கு உதவி செய்யத் தயார் என்று சொன்னதாக ஒரு தகவல் இன்னொரு ஊடகத்திலிருந்து வருகிறது!

தலை சுற்றுகிறது எதை நம்புவது என்று தெரியாமல்!

பொய்களில் பல பொய்கள் இப்போது! ஊடகப் பொய்கள், ஃபேஸ் புக் பொய்கள், வாட்ஸ் ஆஃப் பொய்கள், மொபைல் போன் பொய்கள் என்று பலவிதம்!!

காலம் கலி காலம் என்று விட்டு விட முடியவில்லை. ஏனெனில் இப்போது வீட்டை விட்டு இறங்கி வெளியே காலை வைக்கக் கூட தகவல் தேவையாயிருக்கிறது – பாதுகாப்பாக வெளியில் போக முடியுமா என்பது பற்றிய உண்மையான தகவல்! அதற்காகச் செய்திகளைப் பார்க்கப் போனால் கேவலமாக இருக்கிறது.

கேட்டால் தகவல் புரட்சி என்கிறார்கள். அதாவது இது Information Explosion உலகம் என்கின்றனர். அது என்ன இன்ஃபர்மேஷன் எக்ஸ்ப்ளோஷன்?

ஆராயப் போனால் அங்கு கிடைக்கும் தகவல்களினாலும் தலை சுற்றுகிறது!

2

இன்றைய இன்ஃபர்மேஷன் ஏஜ் (Information Age) மனித வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாக ஆகும் – “Could become a blank spot  in human history’ – என்று இப்படி டைம்ஸ் ஆஃப் இந்தியா 23-3-1999 இதழில் ஜோயல் அச்சென்பாக் (Joel Achenbach) ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

இன்று எந்த ஒருவராலும் கூட எல்லாவற்றையும் படித்து விட முடியாது. தகவல் கடலில் ஒரு சிறிது நீந்தலாம். அவ்வளவே! அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு 50000 புதிய புத்தகங்கள் வெளி வருகின்றன. உலகம் முழுவதையும் எடுத்துக் கொண்டால் நான்கு லட்சம் பத்திரிகைகள் வெளியாகின்றன World Wide Web மட்டும் பத்து லட்சம் தளங்களைக் கொண்டுள்ளது.

இது 1999இல் உள்ள தகவல். இன்று  2021இல் என்ன நிலையோ?

இந்த ‘தரவு ஓவர் லோடில்’ (Data Overload) நாம் தவறான பாதையில் சென்று கொண்டிருந்தாலும் ஆச்சரியமில்லை ( We may be going in the wrong direction). நமது சமுதாயம் ஞாபகசக்தியின்றி நகர்கிறது (Our society is basically motion without memory)

இப்படி அறிஞரின் கூக்குரல் கேட்கிறது.

இன்று லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் 1130 லட்சம் உருப்படிகள் (Items) உள்ளன, ஒவ்வொரு நாள் காலையும் இன்னும் ஒரு 20000 உருப்படிகள் புதிதாக வந்து குவிகின்றன. இணைய தளம் வந்தது முதல் இன்னும் இது மிக அதிகமாக ஆகிக் கொண்டே போகிறது. அட, நிறைய தகவல்கள் வருகின்றனவே என்று சந்தோஷம் அடைய முடியாது. ஏனெனில் நீங்கள் சாத்தானுடன் பேரம் பேசும் நிலை தான் இது. மெஷினுடைய ஒரு நீட்சியாக நீங்கள் ஆகி விடுவீர்கள் என்று எச்சரிக்கை தரப்படுகிறது.

3

இந்தப் பழைய நிலை ஒரு புறம் இருக்கட்டும் இன்றைய நிலை என்ன என்று ஆராயப் போனால் தகவலை விட அதிர்ச்சிக்குள்ளாவது தான் அதிகமாக இருக்கிறது.

https://groups.ischool.berkeley.edu/archive/how-much-info-2003/execsum.htm#summary : இந்த தளம் தரும் தகவல்களும் நம்மை கிறுகிறுக்க வைக்கிறது!

  1. Print, film, magnetic, and optical storage media produced about 5 exabytes of new information in 2002. Ninety-two percent of the new information was stored on magnetic media, mostly in hard disks.
  2. We estimate that the amount of new information stored on paper, film, magnetic, and optical media has about doubled in the last three years.
  3. Information flows through electronic channels — telephone, radio, TV, and the Internet — contained almost 18 exabytes of new information in 2002, three and a half times more than is recorded in storage media. Ninety eight percent of this total is the information sent and received in telephone calls – including both voice and data on both fixed lines and wireless.

அச்சு, பிலிம், மாக்னெடிக், ஆப்டிகல் ஸ்டோரேஜ் ஆகியவை 5 எக்ஸா பைட் என்ற அளவில் புதிய தகவல்களை 2002இல் உருவாக்கியுள்ளன. ஒரு எக்ஸா பைட் என்றால் எவ்வளவு?

Table 1.1: How Big is an Exabyte?
Kilobyte (KB)1,000 bytes OR 103bytes
2 Kilobytes: A Typewritten page.
100 Kilobytes: A low-resolution photograph.
Megabyte (MB)1,000,000 bytes OR 106 bytes
1 Megabyte: A small novel OR a 3.5 inch floppy disk.
2 Megabytes: A high-resolution photograph.
5 Megabytes: The complete works of Shakespeare.
10 Megabytes: A minute of high-fidelity sound.
100 Megabytes: 1 meter of shelved books.
500 Megabytes: A CD-ROM.
Gigabyte (GB)1,000,000,000 bytes OR 109 bytes
1 Gigabyte: a pickup truck filled with books.
20 Gigabytes: A good collection of the works of Beethoven.
100 Gigabytes: A library floor of academic journals.
Terabyte (TB)1,000,000,000,000 bytes OR 1012 bytes
1 Terabyte: 50000 trees made into paper and printed.
2 Terabytes: An academic research library.
10 Terabytes: The print collections of the U.S. Library of Congress.
400 Terabytes: National Climactic Data Center (NOAA) database.
Petabyte (PB)1,000,000,000,000,000 bytes OR 1015 bytes
1 Petabyte: 3 years of EOS data (2001).
2 Petabytes: All U.S. academic research libraries.
20 Petabytes: Production of hard-disk drives in 1995.
200 Petabytes: All printed material.
Exabyte (EB)1,000,000,000,000,000,000 bytes OR 1018 bytes
2 Exabytes: Total volume of information generated in 1999.
5 Exabytes: All words ever spoken by human beings.

Source: Many of these examples were taken from Roy Williams Data Powers of Ten web page at Caltech.

பயப்பட வேண்டாம். தலை கொஞ்சம் சுற்றும், அவ்வளவு தான். ஒன்றுக்குப் பின்னால் 18 சைபர்களைப் போட்டுக் கொள்ளுங்கள், அது தான் ஒரு எக்ஸாபைட்

(1,000,000,000,000,000,000 bytes OR 1018 bytes)

மூன்று வருடங்களில் இது இரட்டிக்கிறதாம். இப்போது 2021இல் என்ன நிலைமையோ!

2002இல் 18 எக்ஸாபைட் – இது மூன்றரை மடங்கு பதிவு செய்யப்பட்ட ஸ்டோரேஜ் டேட்டாவை விட அதிகமாம்.

இதை விட இன்னும் “அதிக” தகவல்களையும் இன்னும் அதிக விவரங்களையும் மேலே கொடுக்கப்பட்ட தளத்தில் காண்லாம்!

4

இதை தகவல் யுகம் என்று சொல்ல வேண்டாம். JUNK யுகம் என்று சொல்லலாம் என்பது சிலரின் கருத்து.

இந்த தகவல்களில் Qunatity –  அளவு தான் அதிகம் –  Quality –  தரம் இல்லை என்பதும் அவர்களின் கருத்து. உண்மை தான். ஒன்றை இன்னொன்று மறுக்கும், ஏளனம் செய்யும் – இப்படிப்பட்ட தகவல்களினால் நமக்கு என்ன பயன்?!

இன்ஃபர்மேஷன் வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம்! ஆனால் Knowledge – அறிவு? அது மிகக் குறைவு தான்.

டி.எஸ். எலியட் சொன்னதைச் சுட்டிக் காட்டுகிறார் ஒரு அறிஞர்:

Where is the Life we have lost in Living?

Where is the Wisdom we have lost in Knowledge?

Where is the Knowledge we have lost in Information?       –      

                                       T.S.Eliot

வாழும் போது இழந்து விட்டோமே அந்த வாழ்க்கை எங்கே?

அறிவில் இழந்து விட்டோமே அந்த ஞானம் எங்கே?

தகவலில் இழந்து விட்டோமே அந்த அறிவு எங்கே?     டி.எஸ்.எலியட்

இனி வரும் தலைமுறையினர் என்ன செய்யப் போகிறார்கள்?

படி, படி என்று காலமெல்லாம் சொன்னது போய், படிக்காதே, படிக்காதே என்று சொல்லப்படுவார்களா?

படிப்பதில் உண்மையைக் கண்டு பிடிப்பது எப்படி என்று ஒரு தனி கோர்ஸ் இனி ஆரம்பிக்கப்படுமா?

வைக்கோல்போரில் ஊசியை எடுப்பது எதிர்காலத்தில் மிக சுலபமான விஷயம் ஆகி விடும் – தகவல்களிலிருந்து உண்மையை எடுப்பதை விட!

உண்மை தானே! உங்களுக்குக் கிடைத்த “தகவல்களை’ வைத்துச் சொல்லுங்களேன்!

***

tags- தவறான தகவல், மீடியாக்கள், ஊடகங்கள்,

மார்கசீய மாக்சிம் கார்க்கி (Post No.9625)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9625

Date uploaded in London – –19 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

 (1868-1936)

வாழ்ந்த காலம் – 68 ஆண்டுகள்

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு காட்டும் நாவல்களை எழுதியதன் மூலம் புகழ் பெற்றார் மாக்சிம் கார்க்கி. குறிப்பாக ரஷ்ய 

tags- மாக்சிம் கார்க்கி,

—subham—-

Vishnu (for school children)- Post No.9624

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9624

Date uploaded in London – –19 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

Vishnu (for school children)

Earlier I told you there are three great gods Brahma Vishnu and Shiva. You already know about Lord Shiva and his wife Parvati. Today I will tell you about Lord Vishnu.

His main work is protecting everyone. If anyone harms good people, then Vishnu gives protection for the good people. For this he came to earth many times. But we remember his Ten Visits called Avatars. Hindus call it Dasaavatar.0f his ten visits or Avatars you may have heard about Rama and Krishna. But his first Avatar was in the form of FISH. At the end of this essay read the interesting story.

Vishnu can be easily identified. If you see Sangu and Chakra in his hands then you can tell your friend He is definitely Vishnu. He rides on powerful eagle and Hindus call the bird Garuda. GARUDA is the King of the Birds.  What is a Sangu?. It is a sea shell called conch in English. What is Chakra? It is a powerful wheel. The name of the wheel is Sudarsana.

It acts like boomerang of Australian tribes. It will kill a bad man and return to Vishnu’s hands .

You learned that you can chant Om Nama Sivaya to get the blessings of

Lord shiva. In the same way you may chant Om Namo Narayanaya to get Vishnu’s blessings. It has eight letters .So Hindus call it Ashtakshara mantra, meaning Eight Lettered Mantra. Narayana is Vishnu’s another important name.

Though Vishnu resides in Vaikunda, he always lies on the milky ocean. He does not lie on water. He has a bed made of a big snake. It is very interesting to see him happily lying on the snake bed! That snake called Adi sesha or Ananta.

Vishnu’s 1000 names are in Vishnu Sahasranama. His worshippers are called Vaishnavites.

I will give you  the pronunciation of two words:-

Aadhi sesha (1000 headed Snake)

Naaraayanaa (One who resides in Water)

Lakshmi is the name of his wife. She is the richest goddess. She gives gold, currency and food grains to all of us. Vishnu has given her a place on his chest. So if you worship one god you get the benefit from both the god and goddess.

Vishnu has four hands. Two hold Sangu and Chakra. Other two have lotus and a mace. If Vishnu is shown in standing position, then he will be on a Lotus flower. That is the National Flower of India.

Vishnu is dark blue in colour. We saw Lord Shiva is always dancing, that is the vibration or movement we see in every object in the universe. As a contrast Vishnu is always ‘sleeping’. But this ‘sleep’ is not ordinary sleep like we do. His sleep is called ‘conscious sleep’. He watches everything in the world by closing his eyes 99 percent.

There are ten avatars, I said. Each one has some interesting story. Only one story is given below. This FISH story is in all the books around the world, in the Bible, in Sumeria and many more places.

There was a king by name  Satya vrata. One day he went to a river and a fish spoke to him. “Save me today; I will save you and your people tomorrow”. So he took it in his water jar. After some time, it grew bigger and bigger and so he transferred it into a tank. When it became very large he took it to the ocean. It said to the king Great Flood called Pralaya is going to come. You save every plant and animal in a big ship and I will drag your ship to a high place. As expected, the big flood came one day and water was everywhere. Those on the ship only escaped. The king was called Manu, so all human beings are called Man (men) from Manu.

Fish in Sanskrit is called Matsya. So the first avatar of Vishnu is Matsya Avatar. Nine more interesting stories are there.  I will tell you one by one.

Remember OM NAMO NAARAAYANAAYA

Don’t forget OM NAMA SIVAAYA

–Subham–

tags-Vishnu, Garuda, Matsya, Vishnu,

Index 70- London Swaminathan articles posted in September 2018 (9623)

pictures are from CHO’s Mahabharata; thanks.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9623

Date uploaded in London – –19 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9600 PLUS POSTS.

xxx

Correction:- in half of the posts i have typed 10 for September; please correct it as 9th month

September 2018 Index

Hindus New Methods of Fortune Telling, 5384; September 1,2018

Tamil and Sanskrit Names in Cambodian Inscriptions and Folktales, 5387;2/9

Element of Murder and Agatha Christie, 5389;3/9

Indian Ivory Antique s in England and Russia, 5393;4/9

Mercury in Famous Men, Hairy Mystery, 5395;5/9

Nehru to Narendra Modi, Bharat Mata  ki Jai, 5398:6/9

650 Plays! Nehru on Sanskrit Wonders, 5402:7/9

Gandhi condemned Purdah, 5405;8/9

Poet Bharati and Mahatma Gandhi condemned Purdah, 5408; 9/9

What did I discover in India? Jawaharlal Nehru, 5412;10/9

Mark Twain, Coleridge, Boswell, Dr Johnson Book Anecdotes, 5419;11/9

Veena and Yaaz in the Rig Veda, 5422;12/9

Tamil boy who composed poems while playing Marbles, 5423;12/9

More Banquet and Dinner Anecdotes, 5426;13/9

Comparison between Tamil Poet and Roman Poet Horace, 5427;13/10

Radish Ganesh and Camel Hanuman, 14/0;5429

Seneca and Valluvar, 5434:15/10

5 Stories- Learning leads to Jealousy, Money leads to Arrogance, 5437;16/10

Viveka Cudamani and Tiruvalluvar s Tirukkural, 5444;18/10

Lovers Statue in London, 5445; 18/10

Dos and Don’t s for Brahmins, They must not save Money,5441;17/10

Naming your Baby , Name Anecdotes , 5447;19/10

Bhartruhari and Valluvar on Fools- A story from Panchatantra, 5450;20/10

Poison that was used to kill Napoleon, Kings Popes and Dukes, 5454:21/10

My Visit to London Science Exhibition, 5457;22/10

True Story-Woman from the Heaven,5459; 23/10

Tamil Words in the Rig Veda, 5463; 24/10

Doctor and Medicine in Adi Shankara Hymns, 5471; 25/10

I Love You, love you, love you passionately 5475;26/20

Tamil poetess Avvaiyar s 108 Aphorisms, 5476; 26/10

350 Herbs in Charaka Samhita, 85 Plants in Matsya Purana, 5480;27/10

Similarities between Cambodian Pchum ben and Malaysian Paksha,5483;28/10

Krishna s friend died in Wheel Accident 5485:28/10

Silence is the Ornament of Fools: Bhartruhari and Valluvar, 5488;29/10

English and Tamil version of Athichudi by Tamil poetess Avvaiyar 5489; 29/9

How did Ancient Hindus find Submarine Mountain s, 5491; 30/10; 2018

Xxxx

Correction:- in the posts i have typed 10 for September; please correct it as 9th month

Tamil Articles

கம்போடியாவில் கந்தன், காமராஜ் , 5383, செப்டம்பர் 1, 2018

நிழல் அதிசயம்- ஹிந்து விஞ்ஞானம், 5386, 2/9

கொலைகார  மூலகம் பற்றிய சுவையான தகவல்கள், 5390, 3/10

ரிக்வேதத்தில் தமிழ்ச் சொற்கள் , 5392, 4/10

நியூட்டன், நெப்போலியன் தலை முடியில் பாதரஸம் , 5396, 5/10

கேரள யானைத் தந்த சிம்மசனம், லண்டனுக்கு வந்த கதை, 5399, 6/10

பைத்தியக்கார பாதரச சோதனை, 5401, 7/10

சம்ஸ்க்ருதத்தில் 650 நாடகங்கள் – நேருஜி தகவல் ,5404, 8/10

குருவியிடம் பாரதியார் கேட்ட கேள்விகள் , 5407, 9/10

மாக்ஸ்முல்லர் காலமானார்- 1900ம் ஆண்டு பத்திரிக்கைச்

 செய்தி, 5409, 9/10

மோனியர் வில்லியம்ஸ் காலமானார்- 1899ம் ஆண்டு பத்திரிக்கைச்

செய்தி, 5410, 9/10

கொழ  கொழ கண்ணே – எங்க அம்மா சொன்ன தமிழ் நர்சரி ரைம் ,5415, 10/10

வீ ட்னர் காலமானார்- 1899ம் ஆண்டு பத்திரிக்கைச் செய்தி, 5414, 9/10

இந்தியாவும் சுமேரியாவும் போற்றிய யாழ், 5412, 10/10

பாரதியாரும் ஆதி சங்கரரும் ,5418,11/9

72 கவிஞர்களின் சேதம் தந்த முருகதாஸ் சுவாமிகள் , 5421, 12/10

பாப்பாவுக்கு பாரதியார் – படங்கள் மூலம் பாடம்,5425, 13/10

முள்ளங்கிப் பிள்ளையாரும், ஒட்டக அனுமனும், 5430, 14/10

பர்த்ருஹரியின் கடவுள் வாழ்த்து , 5432, 15/10

திருவையாற்றில் தியாகபிரம்மம் சமாதி உருவான கதை, 5433,

படித்தவனுக்கு பொறாமை , பணக்காரனுக்கு அகந்தை- பர்த்ருஹரி வருத்தம், 16/10

பிராமணர்கள்  என்ன செய்யக்கூடாது? மநுவின்  தடாலடி, 5443,18/10

மந்திரம் கற்கப் போன டாக்டர், 5440, 17/10

27 நரகங்கள்- மநு   எச்சரிக்கை- மநு நீதி நூல் 27, 5448; 19/10

பூஜையில் 16 வித உபசாரங்கள் , 5451, 20/10

முட்டாள்கள் பற்றி வள்ளுவன் , பர்த்ருஹரி- ஒரு குட்டிக்கதை, 5453; 21/10

நெப்போலியனைக் கொன்றது எப்படி? 22/10

உண்மைக்கதை ! வானத்திலிருந்து வான்ஹ மணமகள் !  5460; 23/10

ராஜா, மனது- ரிக்வேதத்தில் தமிழ்ச் சொற்கள் , 5461, 23/10

மாளய பக்ஷம் ஆரம்பம் – 5465, 24/10

அய்யங்காரின் அற்புத தமிழ் சேவை -1 , 5467, 25/10

பகுதி – 2, (5468)

அய்யங்காருக்கு பாரதி கடிதம், 5469, 5469, 25/10

பக்தர்கள் ஆனாலும் மருந்து சாப்பிடுக- அதி சங்கரர் அறிவுரை, 5473, 27/10

அவ்வையாரின் ஆத்திச்சூடி பொன்மொழிகள் , 5478, 27/10

கம்போடியாவில் மாளய பக்ஷம், 5482, 28/10

சக்ராயுதம் சீமாலிகன் தலையை அறுத்த கதை, 5484, 28/10

சில கதைகள் – மூடர்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு மெளனம், ,5487, 29/10

திருவள்ளுவர் மனைவி பெயர் என்ன?5492, 30/9

–SUBHAM—

tags – Index 70, September 2018, London Swaminathan

ஸ்வாமி ராமதீர்த்தரின் இறுதி நாளில் அவர் எழுதிய இறுதிச் செய்தி!(9622)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9622

Date uploaded in London – –  –19 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்வாமி ராமதீர்த்தரின் இறுதி நாளில் அவர் எழுதிய இறுதிச் செய்தி!

ச.நாகராஜன்

17,அக்டோபர் 1906. பகல் மணி 12. ஸ்வாமி ராமதீர்த்தர் தனது உடலைக் கங்கையில் துறந்தார்.

ஸ்வாமி ராமதீர்த்தர் ஆங்கிலக் கணக்குப் படி 33 வயதை முடிக்கும் சமயம்! (பிறந்த தேதி :22-10-1873).

அது ஒரு விபத்து தான்.  சில நாட்களுக்கு முன்னர் அவர் முழங்காலில் ஒரு அடிபட்டிருந்தது. அந்த நிலையில் அவர் வீட்டிலேயே குளித்து வந்தார். ஆனால் அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி நன்னாள்.

அன்று கங்கையிலே குளிக்க எண்ணிய அவர் கங்கையில் இறங்கினார். தவறி அவரை கங்கை இழுக்க, அவரால் மீண்டு நீந்தி வர முடியவில்லை.

குளிக்கச் செல்லும் முன்னர்  ஸ்வாமி ராமதீர்த்தர் ஒரு கட்டுரையை உருது மொழியில் எழுதிக் கொண்டிருந்தார். Self-Intoxication என்பது பற்றிய அவரது கட்டுரையில் இறுதிப் பாராவை அவர் எழுதி முடித்து விட்டுக் குளிக்கப் போனார்.

இதை அவரது சமையல்காரர் குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது கடைசி எழுத்துக்கள் உருதுவிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

அது இது தான்:-

Indra! Rudra! Maruta! Vishnu! Shiva! Ganga! Etc. Bharat!

O, Death! Certainly blow up this one body. I have enough bodies to use. I can wear those divine silver threads, the beams of the moon, and live. I can roam as divine minstrel, in the guise of hilly streams and mountain brooks. I can dance in the waves of the sea. I am the breeze that proudly walks and I am the wind inebriate. All these shapes of mine are wandering shapes of change. I came down from yonder hills, raised the dead, awakened the sleeping, unveiled the fair faces of some and wiped the tears of a few weeping ones. The nightingale and the roe both I saw and I comforted them. I touched this, I touched that, I doff my hat and off I am. Here I go and there I go; none can fine me.

கடைசி வரி பென்சிலால் எழுதப்பட்டிருந்தது.

இந்திரா! ருத்ரா! மருதா! விஷ்ணு! சிவா! கங்கா! பாரத்!

ஓ, மரணமே! நிச்சயமாக இந்த ஒரு உடலை வெடித்துச் சிதறச் செய். என்னிடம் பயன்படுத்துவதற்கு ஏராளமான உடல்கள் இருக்கின்றன. நான் இந்த தெய்வீக வெள்ளி இழைகளை, சந்திர ஒளிக்கற்றைகளை அணிந்து வாழ்வேன். குன்றில் பாயும் ஓடைகளாக, மலையில் ஓடும் சிற்றோடைகளாக தோற்றம் கொண்டு ஒரு தெய்வீக பாணனாக உலவுவேன். கடலில், அலைகளில் நான் ஆடுவேன். நானே உலவும் தென்றல் காற்று.நானே போதை கொண்ட காற்று.

இந்த எனது அனைத்து வடிவங்களும் மாறுகின்ற எனது சஞ்சார வடிவங்கள்! நான் அதோ அங்கிருந்த மலைகளிலிருந்து இறங்கி வந்தேன், இறந்தவர்களை உயிர்ப்பித்தேன், உறங்கியவர்களை விழித்தெழச் செய்தேன், அழகிய முகங்களை மூடியிருந்த, சிலரது முகத்திரையை விலக்கினேன், அழுகின்ற சிலரது கண்ணீரைத் துடைத்தேன். பாடுகின்ற கானம்பாடி பறவை, ரோஜா மலர் ஆகிய இரண்டையும் பார்த்தேன். அவற்றிற்கு ஆறுதல் தந்தேன். இதைத் தொட்டேன், அதைத் தொட்டேன். எனது தலைப்பாகையைக் களைந்தேன்.இதோ போகிறேன். இதோ இங்கே போகிறேன், அதோ அங்கே போகிறேன். யாராலும் என்னைக் கண்டுபிடிக்க முடியாது.

மரணத்திற்குச் செய்தி கொடுத்து அதையே மனித குலத்திற்குத் தந்த செய்தியாக மாற்றினார் ஸ்வாமி ராமதீர்த்தர்.

பெரியோரது ஒவ்வொரு செயலிலும் ஒரு உள்ளர்த்தம் பொருந்தி இருக்கும் அல்லவா!

தற்செயல் ஒற்றுமையாக இருந்தாலும் கூட ஸ்வாமி ராமதீர்த்தரின் இறுதி வரிகள் அவரது அவதார நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பது ஒரு தெய்வீக விளையாடல் தானே!

***

tags- ஸ்வாமி, ராமதீர்த்தர் ,

நையாண்டி மன்னன் ரெபெலே (Post No.9621)

Post No. 9621

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date uploaded in London – –18 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FRANCOIS REBELAIS

(1494 – 1553)

பிரான்ஸ்வா ரெபெலே ஒரு பிரெஞ்ச் எழுத்தாளர். அவர் எழுதிய THE HISTORIES OF GARGANTUA AND PANTAGRUEL மிகப்பெரிய, மிகச்சிறந்த புத்தகம். இது ஒரு நையாண்டி நூல். கர்காண்டுவா , பாண்டாக் ருவல் என்ற இரண்டு கதாபாத்திரங்களை வைத்து ரெபெலே நக்கலும் கேலியும் செய்கிறார்.

பிரான்ஸில் ஷினோன் நகருக்கு CHINON அருகில் தந்தையினுடைய எஸ்டேட்டில் அவர் பிறந்தார். இதுதவிர அவருடைய இளமைக்கால வாழ்க்கை குறித்து அதிகம் தெரியவில்லை.

அவருடைய தந்தை ஒரு வக்கீல். அந்தக் காலத்தில் சர்ச் அல்லது மத குருமா ருக்கான மட்டத்தில் மட்டுமே கல்வி கற்பிக்கப்பட்டது. எல்லோரும் கிரேக்க மொழியைக்கற்று பழங்கால விஷயாயங்களை அறிவதில் ஆர்வம் செலுத்தினர். ரெபெலேயும் 15 வயத்தில் அந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போனார். அந்தக் காலத்தை மறுமலர்ச்சிக்கு காலம் என்று அழைப்பர்.

37ஆவது வயதில் ரெபெலே சொல்லாமலேயே கல்விக்கூடத்தை விட்டு வெளியேறினார்.அவருக்கு மருத்துவத்தில் ஆர்வம் இருந்ததால் அது தொடர்பான கிரேக்க மொழி நுல்களைக் கற்றார்.

முப்பதாவது வயதில் அவர் பிரான்சிஸ்கன்  FRANCISCANS என்னும் கடுமையான கட்டுதிட்டங்கள் உடைய சமயப் பிரிவில் சேர்ந்தார். பின்னர் சிறிது கட்டுதிட்டங்களை உடைய பெனெடிக்க்டின் பிரிவில்  BENEDICTINE ORDER-இல் சேர்ந்தார். இறுதியாக எந்தப் பிரிவிலும் சேராத பாதிரியாராக (SECULAR PRIEST) மாறினார்.

1530-இல் மான்டிபேயே பல்கலைக்கழத்தில் மருத்துவம் பயின்றார். டாக்டர் பட்டம் பெற்ற  பின்னர்லியோன் நகரம் சென்று மருத்துவத் தொழில் புரிந்தார். அப்போது அவரது பெரிய புத்தகமான GARGANTUA AND PANTAGRUELஐ  எழுதத் தொடங்கினார். அதை வெளியிட்டவிதமே நக்கல் மிக்கது. தன பெயரிலுள்ள எழுத்துக்களை புரட்டிப்போட்டு ஆல்கோப் ரிபாஸ் நாசியே என்ற புனைப்பெயரில் வெளியிட்டார். அதற்குப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதற்குப் பின்னர் மேலும் மூன்று தொகுப்புகளை எழுதினார்.

ஐந்து தொகுதிகளில் முதல் தொகுதி 1532-இல் வெளியானது. இது பிரான்ஸில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் மறுஆண்டே தடை செய்யப்பட்டது. இதற்குள் REBELAIS மிகவும் செல்வாக்கு மிக்க பாரிஸ் பாதரியார் (BISHOP OF PARIS) ஜீன் டு பெல்லேவை (JEAN DU BELLAY) நண்பராக்கிக் கொண்டார். அவர் ரபலேயை தனது சொந்த உதவிக்கான டாக்டர் என்ற குடையில் ரோமுக்கு அழைத்துச் சென்றார்.

REBBELAIS பிரான்ஸ் திரும்பியவுடன் இரண்டாவது தொகுதியை வெளியிட்டார். புத்தகத்தின் முதல் தொகுதியைத் தடைசெய்த மக்களை இதில் நையாண்டி செய்தார்.

அவர்கள் சினமடைந்து தாக்கவே ரபலே ஓட நேரிட்டது. இப்போது கார்டினல் பொறுப்பிலிருந்த BELLAY இவரை ரோம் நகருக்கு அழைத்துச் சென்றார்.

பிரான்ஸில் முதல் இரண்டு தொகுதிகள் தடைசெய்யபட்டிருந்த நேரத்தில் இவர் புத்தகத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தொகுதிகளையும் வெளியிட்டார். அவையும் தடை செய்யப்பட்டன. அப்போது அவருக்கு என்ன கதி நேர்ந்தது என்பது குறித்து தெரியவில்லை. அவர் நாட்டை விட்டு ஓடியிருக்கலாம் அல்லது சிறைப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு. அதற்கு அடுத்த ஆண்டு அவர் இறந்தார்.

அவர் இறந்த ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர்தான் புத்தகத்தின் கடைசி தொகுதியான ஐந்தாவது தொகுதி வெளியிடப்பட்டது.

பிரான்சில் சமுதாயத்திலுள்ள குறைபாடுகளை அவர் கேலி செய்தார். ஒழுக்கமற்ற, ஊழல்மிக்க பாதிரிமார்களும், பேராசைபிடித்த பணக்காரர்களும் முட்டாள்களும் நிறைந்த உலகத்தில் இவர் படைத்த இரண்டு பேரும் உலாவருவதே கதையின் கருப்பொருள்.

Xxxxx subham xxxx

நையாண்டி , ரெபெலே

KISHKINDHA IN NORTH INDIA- MYSTERY DEEPENS! (Post No.9620)

Research article WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9620

Date uploaded in London – –18 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

The news about the birth place of Anjaneya also known as Hanuman hit the headlines recently in newspapers. Tirupati Balaji temple authorities believe that the hill where the temple is located is the birth place of Hanuman. They gave the reasons for such belief and gave some evidence as well.

Hampi area in Karnataka was identified as the Kishkinda Kingdom where Hanuman served as a minister in the cabinet of Sugreeva, the King of the Apes or Vanaras. (Vanaras mean Vana+Nara= Forest man). So they may be a tribe who lived in the forest wearing monkey symbols or masks or tattoos.

The other claimants are in Maharashtra, Gujarat, Jharkand and Haryana. But all these people missed a reference in Patanjali ‘s Mahabhashya where Kishkinda is mentioned.

First, the very word KISHKINDA is strange word and not connected to any Sanskrit root. No Sanskrit root for this word is given in any book. The only related sound is Kish Kingdom in ancient Sumeria.  So my view is that the name Kishkinda was used by several people because of Rama’s story and it spread up to Sumeria 4000 years ago. Though Valmiki was the first one to put it in writing in simple and beautiful Sanskrit the story was known to a lot of people in India and beyond 2000 years ago. Sangam Tamil literature which is at least 2000 years old has two anecdotes that were not found in original Ramayanas. Prakrit book Gatha Sapta Sati also has an anecdote about Ramayana painting.

Here is what Patanjali says about Kishkinda:-

Describing two types of Shudras, the fourth caste in the Vedic society, he gives the example of Kishkinda- Gabdhikam , Saka- Yavanam and Saurya- Krauncham. They were Foreign Shudras. The native Shudras also did not practise Vedic rituals, but they lived within our boundaries. Foreign Shudras like Greek, Scythians  did not follow Vedic rituals. More over they lived outside the land of Cultured People i.e. Aryavarta. According to Manu, it is a region between the holy rivers in North India.

Talking about this M S Agrawala who wrote a doctoral thesis on Panini’s Ashtadhyayi, identified this Kishknda with Gorakhpur in Uttar Pradesh. He also says that the Pali literature called this place Khukhundo. If we agree with Agrawala , then we may have to consider this Kishkinda also as the birth place or the work place of Minister/Lord Hanuman.

To complicate the issue there is another mountain also with the name Anjanaagiri. Hanuman’s mother was Anjana which means as black as ink or collyrium/Kajal/kohl. Originally all the women’s Kajal/kohl came from Anjana Giri which is located in North West India. Modern maps show this as Sulaiman mountain. Panini called it Tri kakut (5-4-147) because of its Three Peaks. Atharva Veda also mentioned it. It was the source of salve (anjana). It supplied the salve to the whole of Punjab and Sind. This is antimony, a chemical element. So from Gorakhpur , Panini takes us to Sulaiman Range to complete the story of Anjaneya/Hanuman.

My Viewpoint

The word Kishkinda or Anjana giri is found in various parts of India. We may ignore Anjana= Black Giri=Mountain, because black mountains are in different parts of the world. But no one can ignore Kishkinda, which is a rare word and became popular because of Ramayana only. I think the popularity of Lord Rama and Hanuman made them to name different places as Kishkinda. Last but not the least, no one did a proper research about the geographical matter in the Vedic literature. After Vedic literature comes, Nirukta of Yaska and Ashtadhyayi of Panini. In 1953, the year of publication of V S Agrawala’s thesis on Ashtadhyayi (His book India as Known to Panini) we did not have google maps or this much information. Now that more resources are at our hand at the touch of a button in computer, proper research can be done.

Even Agrawala makes a passing remark about Anjanagiri (Sulaiman Range) , “probably same as Sauviranjana in Vedic Index (Part 1, page 329)”. We need to identify all the places to come to a proper conclusion.

Last week I wrote about Goddess Hingula Mystery which is mentioned in Panini’s book. Even in Orissa/Odisah we see this Goddess.

From Baluchistan in present Pakistan to South India we see Anjanaagiri, Goddess Hinghula, Kishkinda etc. We must establish the link between them.

xxx

Please see ANJANAGIRI at the bottom left hand corner

News item from Tirupati

The Tirumala Tirupati Devasthanams (TTD)  announced that Japali Theertham near Akasha Ganga waterfall in Tirumala Hills was the birthplace of Lord Hanuman. The announcement came on April 21, that is National Sanskrit University vice-chancellor V Muralidhara Sharma, who was one of the experts on the committee constituted by the TTD to establish Anjanadri Hill of the Seven Hills (Tirumala Hills) as the birthplace of Hanuman, announced at a programme organised in Tirumala that this was established after four months of intense research and collecting various pieces of evidence.

“It has been established based on puranic anthologies, literary evidence, epigraphic evidence and geographic details,” he said and added that Venkatachalam is also known as Anjanadri and 19 other names. Hanuman was born on Anjanadri in Treta Yuga, he said.

He said they have collected evidence from 12 Puranas and as for literary evidence, they were found in verses of Kamba Ramayanam and Annamacharya Sankeerthanas. He said that epigraphic evidence includes inscriptions found in Tirumala temple that in 12th and 13th-century Venkatachala Mahtyam was recited in Tirumala temple, processional deity of Sri Rangajanaya was brought to Anajandri for protection during the attack of Turks and later taken from there to Srirangam, inscriptions at Varadaraja Swamy temple in Kanchipuram, Sawal-e-Jawab, a record of practices engaged in Tirumala by North Arcot First Collector G Stratton in 1801–2 and later translated by VN Srinivas Rao in 1950.

As for geographical details, Sharma said in Skanda Puranam, when Anjana Devi asked Sage Matanga where Venkatachalam is, he clearly explained that it is north of Swarnamukhi river and 12 yojanas from Ahobilam.  

“Claims that Hampi is the birthplace of Hanuman are not true. Hampi is Kishkinda while Venakatchalam is Anjanadri. It is clearly evident from the conversation between Sugreeva and Hanuman when the former asks the latter to bring Vanaras from Anajandri. If it was in Kishkinda, he would not have asked that way,” he said. He also dismissed the claims of other places like in Bhoomla district of Jharkhand, Gujarat and Kaikal in Haryana.

Tamil Nadu governor Banwarilal Purohit, TTD Executive Officer Dr KS Jawahar Reddy, who constituted the committee to determine the birthplace of Lord Hanuman, additional EO Dharma Reddy and others were present.

Other Claims

However, there is doubt among some historians over Anjaneya’s birthplace. The five other places which claim Hanuman originated from include:

1. There is a hillock near Anjanadri at Hampi in Karnataka. But scholars of Kannada University at Hampi affirmed that there is no material evidence to prove that.

2. Anjan village, 21 km from Gumla district headquarter in Jharkhand.

3. Anjan mountain in Navsari region of Gujarat.

4. Kaithal region in Haryana

5. Anjaneri, 7 km from Triambakeswar in Nashik district of Maharashtra

Historians contend that the Hampi region was popularly known as Kishkinda in legends and Puranas. Hence, Anjaneya could have gone to Hampi from Tirumala, which was just 363 km away. They also scientifically say that Hampi was 1,240 km from Gumla in Jharkhand, 1,626 km from Kaithal of Haryana, 616 km from Maharashtra, and ruled them all out and suggested that migration to Hampi is feasible.

Xxx subham xxxx

tags – Kishkinda, Anjana Giri, Patanjali, Mystery

LONDON CALLING (HINDUS) 17-5-2021 (Post No.9619)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9619

Date uploaded in London – –18 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

17-5- 2021 MONDAY PROGRAMME AS BROADCAST

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5 MTS

PRAYER SONG BY  MRS ANNAPURANI PANCHANATHAN

ASHTAPATHI -14 BY LONDON SRI BALA SUBRAHMANYAM -7

SHANKARA JAYANTHI SPECIAL TALK – ADHI SHANKARA & HIS HYMNS BY  TIRUCHY MR K GANESAN-10MTS

BENGALURU MR S. NAGARAJAN’S TALK ON LAMPS/ DEEPAS IN TAMIL DEVOTIONAL LITERATURE- 10 MINUTES

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -6

Song by Mrs Annapurani Panchanathan

TOTAL TIME- APPR. 65 MINUTES

Xxxxx

INTRODUCTION TO GNANAMAYAM

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM  LONDON TIME—— 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags-  broadcast1752021

LONDON CALLING (TAMILS) 16-5-2021 (Post No.9618)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9618

Date uploaded in London – –18 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

PROGRAMMES BROADCAST ON 16-5-2021 SUNDAY

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer –- 

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON TIRUPPARAMKUNDRAM TEMPLE – 8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR & MISS DIKSHA AND MRS CHITHRA MURALI-10 mts

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–25 MINUTES

A SONG – 3 MINUTES

SWAMINATHA’S ARTICLE IN TAMIL “BHARATI AND ADI SHANKARA” READ BY MRS VAISHNAVI ANAND – 5 MTS

APPR.60 MINUTES

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM  LONDON TIME—— 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- broadcast1652021

ஹிந்துக்கள் வாழ்வில் தீபம்(Post No.9617)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9617

Date uploaded in London – –  –18 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 17-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்,

ஹிந்துக்கள் வாழ்வில் தீபம் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகிறது.

கடன் தொல்லை, தாங்க முடியாத தரித்திரம்,  வியாபார நஷ்டம், தீராத வறுமை, அளவில்லாச் செலவு என்று இப்படி அல்லல் படுவோருக்கு நமது அறநூல்களும் மகான்களும் காட்டும் ஒரு நல்ல வழி திருவிளக்கைத் தினமும் வீட்டில் ஏற்றுக என்பது தான்!

வீட்டுக்கு வரும் மணப்பெண்ணை மகாலெட்சுமியாகக் கருதுகிறது நமது பண்பாடு.  வீட்டிற்குள் நுழைந்தவுடன் மருமகளை விளக்கேற்றி வைக்கச் சொல்வது ஒரு அர்த்தமுள்ள பழக்கம். அப்படி தீபத்தை ஏற்றி வைப்பதன் மூலம் தரித்திரம் தொலைவதோடு இனி ஆரம்பிக்க இருக்கும் வாழ்க்கை செல்வ வளம், உடல் ஆரோக்கியம், சமூக நலம் உள்ளிட்ட அனைத்திற்குமான அடிப்படையாக அமைகிறது என்பதை ஆன்றோர் அனுபவத்தால் கண்டு அதை மரபாகக் கடைப்பிடித்தனர்.

மஹாலட்சுமி வாசம் புரியும் இடங்களில் முக்கியமானதாகத் திகழ்வது விளக்கு. தினமும் காலையும் மாலையும் பூஜை அறையில் விளக்கை ஏற்றி வழிபடுவது வளத்தையும் செல்வத்தையும் கொடுக்கும்.

மாலையில் சூரிய அஸ்தமன சமயம் வாயிலின் இரு புறங்களிலும் அகல் விளக்கு ஏற்றி வருவோர், ஒரு நாளும் வறுமை என்ற கொடிய பிணியை அடைய மாட்டார்கள். 

சங்க இலக்கியத்தில் அகநானூறு, நற்றிணை உள்ளிட்ட நூல்களில் விளக்கை ஏற்றி வைப்பது பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. ‘நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா என்று விளக்கு அணைந்தால் அது தீய சகுனமாகக் கருதப்பட்டதை புறநானூறு (பாடல் 280) குறிப்பிடுகிறது.

ஆயிரக்கணக்கான பாடல்கள் தீபம் பற்றிக் குறிப்பிடுகின்றன.புராண் இதிஹாசங்கள் அனைத்தும் தீப மஹிமையை விரிவாக விளக்குகின்றன.

விளக்கில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. அனைத்துமே நலம்  பயப்பவை தான்.

விளக்கை கிழக்கு, வடக்கு, மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து ஏற்றலாம். 

இதன் அரிய பலன்கள்:

துன்பம் விலகும். கடன் தொல்லை போகும் மங்களம் உண்டாகும் திருமணத் தடை நீங்கும் பல விதமான கிரக தோஷங்களும் நீங்கும். பெண்கள் நலம் பெறுவர்.

குத்துவிளக்கில் அடிப்பாகம் பிரம்மாவையும் நீண்ட நடு தண்டுப்பாகம் விஷ்ணுவையும் மேற்பகுதி சிவனையும் குறிப்பதால் அது மும்மூர்த்திகளைக் குறிப்பதாக ஆகிறது. மும்மூர்த்திகளையும் போற்றி வணங்குவதாக ஆகிறது!

திருவிளக்கு உலகியல் வாழ்க்கைக்கான செல்வ வளத்தையும் சௌபாக்கியத்தையும் மட்டும் தரும் ஒன்றல்ல.

ஆன்மீக வாழ்க்கையில் ஏற்றம் பெறச் செய்து பெறுதற்கு அரிதான முக்திக்கும் வழிவகை  செய்யும் ஒரு அரிய சாதனம் அது!

இறைவன் ஜோதி வடிவம் என்பதை நமது அருளாளர்கள் ஆயிரக்கணக்கான பாடல்களில் பாடி வலியுறுத்தியுள்ளனர்.

தமஸோ மா ஜோதிர் கமய: – இருளிலிலிருந்து ஒளிக்கு என்னை இட்டுச் செல்க என்பதே உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வேத பிரார்த்தனை!

திருவண்ணாமலை அக்னி தலம். அங்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை அன்று தீபத் திருவிழா உலகம் கண்டிராத அரிய திருவிழாவாக தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

ஜோதி வடிவாகச் சிவன் எழும்ப, முடியையும் அடியையும் பிரமனும் விஷ்ணுவும் காண முடியாத நிலையை இத் திருவிழா புலப்படுத்துகிறது.

திருவண்ணாமலை மஹா தீபத்தில் ஏழு அடி உயரமுள்ள தாமிர விளக்கு பயன்படுத்தப்படுகிறது.  முக்திக்கு வழி காட்டும் இந்த ஜோதியைத் தான் தீப மங்கள ஜோதி நமோ நம என அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். ஜோதியைக் கும்பிடுவதே சிவ வாழ்வாகும். ‘ஜோதி உணர்கின்ற வாழ்வு சிவமென்ற சோஹமது தந்து எனை ஆள்வாய்’ எனப் பெரிய மந்திர ரகசியத்தை அருணகிரிநாதர் (வாதினை யடர்ந்த எனத் தொடங்கும் திருப்புகழில்) விளக்குகிறார். (சோஹம் = ஸ + அஹம் = அவனே நான் என்று பொருள் – சிவனே நான்!)

சமீப காலத்தில் வாழ்ந்த வள்ளலார் ‘அருட் பெரும் ஜோதி தனிப் பெருங்கருணை என்ற தாரக மந்திரத்தை அருளியதோடு ஜோதியின் பெருமையை அருட்பெருஞ்சோதி அகவலில் தெள்ளத் தெளிவாக எடுத்து இயம்புகிறார். அவரது பாடல்களை ஊன்றிக் கற்போர் அறிவது : ‘ஜோதி வழிபாட்டால் சிவ அருள் சித்திக்கும்; நீடித்த நோயற்ற வாழ்வும் பெரும் பேறும் கிடைக்கும் என்பதையே! இரவில் விளக்கு எரியும் அறையில் படுப்பது ஆயுளை நீட்டிக்கும் என வள்ளலார் வலியுறுத்துகிறார்.

மாணிக்க வாசகர் ஜோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே என்றும், தேசுடைய விளக்கே என்றும், தூண்டா விளக்கின் சுடர் அணையாய் என்றும் சிவபிரானைப் போற்றுகிறார்.

ஞானசம்பந்தர் விண்களார் தொழும் விளக்கு என்று சிவபிரானைத் தொழுது பஞ்சாக்ஷர பதிகத்தில் ஞான விளக்கினை ஏற்றுவோம் என்கிறார்.

சுந்தரரோ திருக்கழிப்பாலை பதிகத்தில்,

பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே

மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான்

செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான்                               மை ஆர் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலை அதே என்று கூறி நின்று எரியும் விளக்காக இலங்கும் சிவபிரானைத் துதிக்கிறார்.

அப்பர் பிரான் 4,5,6 ஆகிய மூன்று திருமுறைகளில் 22 இடங்களில் விளக்கு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு இடத்தையும் பார்த்து அதன் விளக்கத்தை உணரும் போது பிரமிப்பு ஏற்படுகிறது.

நமச்சிவாய பதிகத்தில்

இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கு அது ஜோதி உள்ளது

பல்லக விளக்கு அது பலரும் காண்பது

நல்லக விளக்கு அது நமச்சிவாயவே

என்று கூறி நல் அக விளக்காக விளங்குவது நமச்சிவாயவே – பஞ்சாக்ஷரமே என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார்.

திருக்கயிலாய பதிகத்தில் நால் திசைக்கும் விளக்காய நாதா போற்றி என கயிலைமலையானைப் போற்றுகிறார்.

பழமொழிகளின் வாயிலாகக் கூட சிவ வழியைக் காட்டும் அப்பர் பிரான் திருஆரூர்ப் பூங்கோயிலில் பாடிய பழமொழி பதிகத்தில் விளக்கு இருக்க மின்மினியிடம் எவனாவது தீக் காய்வானா என்கிறார்!                       ‘மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய் மடுத்துப் பருகி உய்யும் விதி இன்றி, மதி இலியேன், விளக்கு இருக்க மின்மினித் தீக் காய்ந்தவாறே என்கிறார். அருமையான விளக்கான நமச்சிவாய என்னும் பஞ்சாக்ஷரம் நம்மிடம் இருக்க, மின்மினியில் தீக் காய்ந்தது போன்ற விதி உடையவனாக, புத்தியின்றி இருந்தேனே என உருகுகிறார்.

இன்னொரு சுவையான ஈசனின் விளக்குத் திருவிளையாடல் பற்றி திரு ஆரூர்ப் பூங்கோயில் பதிகத்தில் அவர் குறிப்பிடுகிறார்:

ஆராய்ந்து அடித்தொண்டர் ஆனிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப்
பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்தரம் பாற்படுத்தான்
நாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி
நீரால் திருவிளக்கு இட்டமை நீள்நாடு அறியும் அன்றே’’

நீரால் திருவிளக்கு இட்டால், எண்ணெய்க்குப் பதிலாக நீரை ஊற்றினால், அது எரியுமா?

நமிநந்தி அடிகள் நாயனாரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு அற்புதத்தை இந்தப் பாடல் சுட்டிக் காட்டுகிறது. நமிநந்தி அடிகள் நாயனார் ஒரு முறை அரனெறி என்னும் கோவிலில் புகுந்து விளக்கு ஏற்றி வழிபட எண்ணினார். ஆனால் விளக்கிலோ எண்ணெய் இல்லை. அருகிலிருந்த ஒரு வீட்டிற்குச் சென்று எண்ணெய் கேட்டார். அது ஒரு சமணர் வீடு. அவர்கள் அவரை எள்ளி நகையாடி நீரை விட்டு விளக்கை எரித்துக் கொள் என்றனர். செய்வதறியாது திகைத்த நமிநந்தி அடிகள் ஈசன் முன் வந்து வணங்கினார். அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. “கவலையை விடுக. அருகிலிருக்கும் குளத்திலிருந்து நீரைக் கொணர்க; விளக்கை ஏற்றுக என்ற ஒலியைக் கேட்ட நமிநந்தி அடிகள் மனம் மிக மகிழ்ந்து கமலாலயக் குளத்திலிருந்து நீரை மொண்டு வந்து விளக்கிலே ஊற்றினார். என்ன ஆச்சரியம்! விளக்கு எரிய ஆரம்பித்தது! 32 பாடல்களில் நமிநந்தி அடிகள் நாயனார் புராணத்தை பெரிய புராணத்தில் கூறும் சேக்கிழார் பிரான் இந்தச் சம்பவத்தை அழகுற இப்படிக் கூறுகிறார்:

‘வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்குப் பணிமாற
இந்த மருங்கில் குளத்துநீர் முகந்து கொடு வந்து ஏற்றும் என
அந்தி மதியம் அணிந்தபிரான் அருளால் எழுந்த மொழி கேளாச்
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி அடிகள் செய்வது அறிந்திலரால்

அசரீரி வாக்கின் படியே நீரை முகந்து அர், கோயில் அடைந்து முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்குந் திரிமேல் நீர் வார்த்தார். ‘ஜோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது.

பொள்ளத்த காயமாயப் பொருளினை, போகமாதர் வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் வழி என்ன? இதற்கு திருக்கடவூர் வீரட்டத்தில் ஒரு ரகசிய வழியைக் கூறுகிறார் அப்பர். விரும்புமின் விளக்கை என்கிறார் அவர். என்ன விளக்கு அது? விளக்கை எப்படி ஏற்ற வேண்டும். பதில் இதோ:

பொள்ளத்த காயமாயப் பொருளினை, போகமாதர்

வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் விரும்புமின் விளக்குத் தூபம்

உள்ளத்த திரி ஒன்று ஏற்றி உணருமாறு உணர வல்லார்

கள்ளத்தைக் கழிப்பர் போலும் கடவூர் வீரட்டனாரே”

விளக்கை, உள்ளத் திரி கொண்டு ஏற்றுக என்பது அவர் காட்டும் வழி. இன்னொரு பாடலில் மிகத் தெளிவாக அவர் விளக்கு ஏற்றுவதைக் கூறுகிறார். உள்ளமே தகளி ஆக வேண்டும் என்கிறார் அவர். தகளி என்றால் அகல் விளக்கு.

உடம்பு எனும் மனை அகத்து உள்ளமே தகளி ஆக

மடம்படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி                   இடம் படு ஞானத் தீயால் எரி கொள இருந்து நோக்கில்

கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணலாமே

துவாரங்கள் பல உடைய மாயப் பிண்டமாகிய இந்த உடலினை சிற்றின்பத்தில் ஆழ்த்தி, பெண் பால் உள்ள ஆசையை அறவே நீக்க, விரும்புவீர் ஆனால், உள்ளத்தைத் தீபமாக மாற்றி உங்களது உயிர் என்னும் திரியை அதில் ஏற்றிச் சிவபிரானை வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட்டு ஞானம் என்னும் தீபத்தின் உதவியைக் கொண்டு சிவபெருமானை உணரவல்லவர்களின் தீங்குகள் அனைத்தையும் கடவூர் வீரட்டத்து இறைவன் போக்குவார்; அவர் அருள் பெறலாம்.

இப்படி அப்பர் மட்டும் விளக்கை ஏற்றவில்லை; நாலாயிர திவ்ய பிரபந்தம் அருளிய ஆழ்வார்களும் கூட விளக்கைப் பல இடங்களில் குறிப்பிடுகின்றனர். ஆழ்வார்கள் உலகம் முழுவதுற்குமான நன்மைக்காக, விளக்கை எப்படி ஏற்றுகின்றனர் என்று பார்ப்போம்:

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய

சுடராழி யான் அடிக்கே சூட்டினன் சொல்மாலை

இடராழி நீங்குகவே என்று

வையமே அகல்; வார் கடலே நெய். சூரியனே விளக்கு; துன்பமாகிய கடல் என்னும் இடர் ஆழி நீங்க, சுடர் ஆழி வண்ணனுக்கு இப்படிப் பாமாலை சூட்டித் தீபம் ஏற்றுகிறார் பொய்கையாழ்வார். 

பூதத்தாழ்வாரோ அன்பை அகலாகக் கொண்டு ஆர்வத்தை நெய்யாக ஊற்றி இன்புருகு சிந்தையை திரியாக ஆக்கி ஞானத் தமிழால் நாராயணனுக்கு ஞானச் சுடர் விளக்கு ஏற்றுகிறார்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக்

இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி

ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்.

பெரியாழ்வாரின் திவ்ய பிரபந்தங்களைப் பாடி வழிபடுவோர், “கோவிந்தன் தன் அடியார்களாகி எண்திசைக்கும் விளக்காகி நிற்பார் என அவரே உறுதி கூறுகிறார்.

ஆக நாம் அன்றாடம் ஏற்றும் விளக்கு என்பது புற இருளை அகற்றும் ஒன்று; அது வாழ்க்கையை நடத்த மிக்க அவசியமானது. அக இருளைப் போக்கவோ இறைவன் திருநாமம் என்னும் விளக்கு தேவை. எண்திசைக்கும் விளக்காய் விளங்கும் நமசிவாய நாமம் அல்லது நாராயணன் நாமம் நமக்கு உற்ற துணையாய் இருக்கும். இதையே நாயன்மார்களும்,  ஆழ்வார்களும்  நமக்கு உற்ற ஒரே வழியாகக் காட்டி அருள் பாலிக்கின்றனர்.

இறுதியாக திருமூலர் திருமந்திரத்தைக் கூறி என் உரையை முடிக்கிறேன்:

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்!

விளக்கின் முன்னே வேதனை மாறும்!!

பொருள் செல்வமும் அருள் செல்வமும் அருளும் தீபத்தை வெளியிலும் உள்ளத்திலும் ஏற்றுவோம்; நல்வாழ்வு பெறுவோமாக! நன்றி, வணக்கம்!

***

tags- சுடர், விளக்கு , ஹிந்து, தீபம் ,